Wednesday, March 11, 2015

சுன்னத் ஜமாஅத்தினரை தூண்டிவிடும் அ த த குழு


தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் இது போன்ற போர்டுகள் வைத்து ஜனாஸா தொழுகையில், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கும் பிரச்சனைகள் வந்ததுண்டு, கலவரம் நடந்ததுண்டு. ஆனால் அதிரையில் அல்லாஹ்வின் உதவியால் இதுவரை அப்படி ஒரு பிரச்சனை வந்ததில்லை. ஆரம்ப காலத்தில் தொழுகை, தொப்பி, விரலசைத்தல், மத்ஹப் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், ஜனாஸா பிரச்சனை, எங்கள் மையவாடியில் அடக்கக்கூடாது என்பன போன்ற ஈனத்தனமான பிரச்சனைகள் அதிரையில் வந்ததில்லை. அல்ஹம்துலில்லாஹ்! இனி வரவும் செய்யாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. 


ஆனால் சமீபத்தில் அதிரையில் நடந்த ஒரு நபிவழி தொழுகையின் மூலம் கலவரத்தை உண்டு பண்ணி, அதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும், அதிரை பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் இடையில் ஒரு பிரச்சனையை உண்டு பண்ண பேராவல் கொண்டு, அனைத்து ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்ளும் முஸ்லிம்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டம் பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திடம், 'உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சிறு பிரச்சனைகள் இருக்கிறது, அதை பேசி தீர்த்துக்கொள்வோம். இவர்களின் ஜனாஸாவை நமது மையவாடியில் அடக்கம் செய்ய விடக்கூடாது' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அடடா.. என்னே அற்புத கோரிக்கை..!!!

அனைத்து ஹதீஸ்களையும் பின்பற்றும் முஸ்லிம்களே..! உங்களிடம் சில கேள்விகள்: 

- நீங்கள் பிரச்சனை பண்ண விரும்பிய ஜனாஸா தொழுகை நபிவழி தொழுகையா இல்லையா ?

- வீட்டில் பெண்களுடன் சேர்ந்து ஜனாஸா தொழுகை வைப்பது நபிவழியா இல்லையா?

- ரசூலுல்லாஹ் இப்படி தொழ வைத்து இருக்கிறார்களா இல்லையா?

'இல்லை; இது நபிவழி இல்லை, ரசூலுல்லாஹ் அப்படி தொழ வைத்ததே இல்லை, தவ்ஹீத் ஜமாத்தினர்தான் முதன் முதலில் அதிரையில் வீட்டில் பெண்கள் தொழுகையுடன் சேர்த்து ஜனாஸா தொழுகை தொழ வைத்துள்ளனர், அதனால்தான் நாங்கள் எதிர்க்கிறோம்' என்று சொல்லுங்கள். உங்கள் நேர்மையை பாராட்டுகிறோம். அல்லது,

'ஆமாம்; ரசூலுல்லாஹ் அப்படி தொழ வைத்துள்ளார்கள், அது நபிவழிதான், நாங்கள்தான் ஆத்திரத்தில் கண்ணை மறைக்க ஏதோ உளறி விட்டோம், நாங்கள் செய்தது தவறுதான்' என்று சொன்னாலும்கூட உங்கள் நேர்மையை பாராட்டலாம். 

அதை விடுத்து, ஜனாஸாவில் பிரச்சனையே பண்ணாத நமது அதிரை பள்ளி நிர்வாகிகளுக்கு பிரச்சனையை கிளப்பிவிட்டு, தூபமிட்டு கலவரம் உண்டு பண்ணி நீங்கள் சாதிக்கப்போவது என்னவென்று யோசியுங்கள்! 

ஆரம்பத்தில் தவ்ஹீத் சிந்தனையே இல்லாத நமது ஊரில் பல அனாச்சாரங்கள் நடந்தபோது தவ்ஹீத் சிந்தனை உள்ளே நுழைந்தது. அதிரையில் தவ்ஹீத் சிந்தனை வீறுகொண்டு எழுந்தது, அல்ஹம்துலில்லாஹ்! 

நாள் ஆக ஆக தவ்ஹீத் என்ற வார்த்தையின் வட்டங்கள் குறுகலாயிற்று. பல குழுக்களாக பிரிந்து சென்றீர்! இன்று நீங்கள் ஒரு தனிப்பள்ளி கண்டுள்ளீர்கள்! தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய நாங்கள் ஒரு தனி பள்ளி கண்டு இருக்கிறோம். 

நமது பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினர் நமக்குள் நடக்கும் இந்த பிரிவினையை கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்; கண்டு கொள்ளவுமில்லை. 

இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஜனாஸாவை மையவாடியில் அடக்கம் செய்யவிடக் கூடாது என்று கோரிக்கை வைத்து இருக்கும் உங்களை என்னவென்று சொல்வது ??

கம்ப்யூட்டருக்கு பின்னால் உட்கார்ந்து முகம் மறைத்துக் கொண்டு பிஜெயானிகள், பிஜே அடிமைகள் இவர்கள் ஜனாஸாவை பள்ளிக்குள் விடக்கூடாது என்று கொக்கரிக்கும் கொள்கை குன்றுகளாக மாறிவிட்ட உங்களிடம் ஒரே வேண்டுதல்! 

கம்ப்யூட்டரின் மானிட்டர் திரையைவிட்டு உங்கள் கண் திரைக் கொண்டு உங்களுக்கு முன்னால் நிற்பவர்கள் யார் என்று பாருங்கள்! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவன் உங்கள் முன்னால் நிற்பான்.. உங்கள் உடன் பிறப்புக்கள், உங்கள் பெற்றோர், உங்கள் குழந்தைகள் என‌..! 

இவர்களுக்கு எதிராகத்தான் நீங்கள் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினரிடத்தில் கோரிக்கை வைத்து இருக்கிறீர்கள். கலவரமே நடக்காத அதிரையில் கலவரம் நடக்க தூண்டுகிறீர்கள்! என்ன ஒரு வெட்கக்கேடான செயல் இது..!!

உங்களுக்கு எதிராக இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினராக நிற்கும் அனைவருக்கும் குடும்பம் உண்டு. கொள்கையால் இன்று பிரிந்து எதிர் அணியில் நிற்கலாம். நாளை ஜனாஸா தொழுகையில் பிரச்சனை உண்டு பண்ணி ஜனாஸாவை கூறுபோட்டு வெற்றி களிப்பில் கொண்டாட நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் ஒன்றை மறந்து விட்டீர்களே சகோதர்களே! அது என்ன.. ஜனாஸா என்றால் எவன் வீட்டிலோதான் விழும், நமது வீட்டில் விழாது நாம் எல்லாம் சாகா வரம் எடுத்து வந்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறீர்களா..?!

மரணத்தை நினைவு கூறுங்கள்.!!

ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் உண்டு! 
ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் உண்டு!

(7:34) وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ 

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். (7:34)

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.