Showing posts with label மம கட்சி. Show all posts
Showing posts with label மம கட்சி. Show all posts

Wednesday, April 09, 2014

மம கட்சியை ஏன் தோற்கடிக்க வேண்டும்?

மம கட்சியை ஏன் தோற்கடிக்க வேண்டும்?



Monday, February 03, 2014

தமுமுக இட ஒதுக்கீடு வாங்கி தந்தாகலாமே! - அதிரை கழக கண்மணிகளுக்கு அறைகூவல்!

தமுமுக இட ஒதுக்கீடு வாங்கி தந்தாகலாமே! - அதிரை கழக கண்மணிகளுக்கு அறைகூவல்!

தமுமுக தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தது என்று தடுமாறும் தமுமுகவின் கழக கண்மனிகள் சிலர் ஒரு இணையதளத்தில் உளறுவதாக அறிகிறோம்.

அந்த தமுமுக கண்மனிகளை நமது இணையதளத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தை பற்றி பேசவும், தமுமுகவின் துரோகங்களை பற்றி பேசவும் இங்கே அழைக்கிறோம்.

நமது இணையதளத்தில் கருத்துகளின் மூலம் உங்களின் வாதங்களை எடுத்து வைக்க தயாரா? கண்மனிகளே!

தமுமுக இடஒதுக்கீடு விஷயத்தில் எவ்வளவு துரோகம் செய்துள்ளது என்பதை அறிய கீழ்காணும் வீடியோவை பாருங்கள்.



என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!! சமுதாய மானம் காக்கும் தமுமுக MLA(?) ஜவாஹிருல்லாஹ்








Wednesday, January 22, 2014

ம.ம.கட்சி திமுகவுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?

ம.ம.கட்சி திமுகவுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?

முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, திருமணப்பதிவுச் சட்டம் ஆகிய இரண்டு காரணங்களைத்தான் அதன் தலைவர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காகவே கூட்டணி சேர்வார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தாலும், அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்களுக்காகவும் சமுதாய நன்மைக்காகவும்தான் இந்த கூட்டணி என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கானது அல்ல.

அதிமுகவில் நாற்பதிலும் தனித்து போட்டி என்று தெளிவுபடக் கூறி விட்டதால் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தாலும் நமக்கு சீட்டு கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். இதையே அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம். அல்லது பொருந்தக் கூடிய வேறு எதையாவது சொல்லி இருக்கலாம். கடுகளவும் நம்ப முடியாத ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் திமுக ஆட்சியில் 3.5 இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மமக கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. திமுகவுடன் இருந்த கூட்டணியைப் பயன்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக பல அடக்குமுறைகளையும் ஏவி விட்டது.

திமுக ஆட்சி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஏவிவிட்ட அக்கிரமங்கள் அனைத்தையும் மறந்து விட்டு மறுநாளே திமுக தலைவரை தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி அறிவிப்புக் கடிதம் கொடுத்தோம். மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று எழுதிக் கொடுத்தோம். அதன்படி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுக கூட்டணியை ஆதரித்தோம்.

திமுக ஆட்சி இட ஒதுக்கீடு அளித்ததற்காக தமுமுகவும் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தியது.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின்போது இவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை. இட ஒதுக்கீட்டுக்காக ஒரு அணியை ஆதரிப்பதுதான் இவர்களின் கொள்கையாக இருந்தால் 3.5 இட ஒதுக்கீடு கிடைத்ததற்காக அந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து இருக்க வேண்டும். கிடைத்த இட ஒதுக்கீட்டுக்கு நன்றி செலுத்தாமல் என்ன செய்தார்கள்.?

அதிமுகவில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இவர்கள் இதற்கு செய்த வாதப்படி அதிமுக இட ஒதுக்கீட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வாதிட்டு பிரச்சாரம் செய்து வந்ததை மறந்து விட்டு அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நோட்டு எவ்வளவு சீட்டு எவ்வளவு என்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் இட ஒதுக்கீடெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல என்று அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் ஒரு எம்பி சீட் கொடுக்கும் அளவுக்கு பலமானவர்கள் அல்ல என்று அதிமுகவுக்கு தெரிந்ததால் அதிமுகவும் சீட் கொடுக்க மறுத்து விட்டது.

இதன் பின்னர் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்கள். பல முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகள் ஆதரவோடு போட்டியிட்டு அவர்கள் வாங்கிய ஓட்டுக்கள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டார்கள். அதுவும் நாற்பது தொகுதிகளில் முஸ்லிம்கள் பலமாக உள்ள நான்கு தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிட்டும் பல அமைப்புகள் ஆதரித்தும் சுயேட்சை வேட்பாளர் வாங்கும் ஓட்டைத்தான் வாங்கினார்கள்.

அப்போது அது பிரச்சனை இல்லை. கருணாநிதி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு செய்த அடக்குமுறைகளையும், தமுமுக ஆளும் கூட்டணியில் இருப்பதையும் மறந்துவிட்டு திமுகவை நாம் ஆதரித்தோம் என்பதையும் இடஒதுக்கிடு கொடுத்து அந்த ஈரம் காய்வதற்குள் இட ஒதுக்கீடு கொடுத்த கட்சிக்கு எதிராக போட்டியிட்டதையும் நினைத்துப் பார்க்கும் மக்கள் மமக சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்வார்களா?

அடுத்து திருமணப் பதிவுச் சட்டத்தையும் காரணமாகக் கூறியுள்ளனர். திருமணப்பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களைப் பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் அதை அதிமுக அரசு சரி செய்யவில்லை என்ற காரணமும் பொய்யான காரணமே.

திமுக ஆட்சியில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் இது குறித்து பல முஸ்லிம் அமைப்புகள் முறையிட்டன. தமுமுகவும் அதில் அடங்கி இருந்தது. பல முறை சந்தித்து முறையிட்டும் திமுக ஆட்சி அதை சரி செய்யவில்லை. அதுபோல் அதிமுகவும் செய்யவில்லை.

இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து பல ஆண்டுகள் இவர்கள் கோரிக்கை வைத்தும் சந்திப்புகள் நடத்தியும் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்தக் காரணத்துக்காக திமுகவுக்கு போய்விட்டோம் என்று சொல்வதை மக்கள் எப்படி நம்புவார்கள் என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

எந்தப் பக்கம் சீட்டு கிடைக்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து கொள்ளும் உன்னதமான கொள்கைக்காகவே அணி மாற்றம் என்பதில் சந்தேகமில்லை.

Sunday, December 01, 2013

சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற தமுமுக, மமக - சாக்கடையில் நீச்சல் அடிக்கும் காட்சி!

சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற தமுமுக, மமக - சாக்கடையில் நீச்சல் அடிக்கும் காட்சி!

தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர். அரசியல் சாக்கடையாச்சே என்று சொன்ன போது, அரசியல் சாக்கடையாக இருந்தால் என்ன? அதை நாங்கள் சுத்தம் செய்வோம் என்றார்கள். அரசியலுக்கு சென்றதிலிருந்து இவர்கள் அகற்றிய அசுத்தங்களை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம்

அதில் தொடர்ச்சியாக, மம கட்சியின் எம்எல்ஏ அஸ்லம் பாஷா, பூஜை புணஸ்காரத்துடன் தொடங்கப்படும் நிகழ்ச்சியை ஒரு பெண்ணோடு ஒட்டி நின்னு தொடக்கி வைக்கிறார். இவர்களை தவ்ஹீத்வாதிகள் என்று நம்பும் ஏமாளிகள் இவர்களை புரிந்து கொள்ளுங்கள். தமுமுக தவ்ஹீத் இயக்கம் என்று ஏமாற்றும் கள்ள தவ்ஹீத்வாதிகள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

Wednesday, June 26, 2013

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?


அரசியல்வாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்குச் சொல்லும் காரணம் ஒருகாலத்திலும் உண்மையானதாக இருக்காது.

எங்களின் ஆதாயத்துக்கு எது சரிப்பட்டு வருமோ, அந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அவர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.

இவர்கள் சொல்லும் போலியான மற்ற காரணங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றாலும் இந்த நடவடிக்கை சமுதாயத்துக்காக அல்லது நாட்டு மக்களுக்காக அல்லது தமிழுக்காக என்று எதையாவது வெட்கமில்லாமல் சொல்வது அரசியல்வாதிகளின் வாடிக்கையாக இருக்கிறது.

மமகட்சி என்பதும் ஒரு அரசியல் கட்சியாக இருப்பதால், பல வகைகளில் கடைசித் தரத்தில் உள்ள கட்சி என்பதால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்கிறார்கள்.

இடஒதுக்கீட்டிற்காக ஆதரிப்பது என்றால் கருணாநிதி தமிழக முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ இருக்கிறாரா? அந்த அடிப்படையில் அவர் வாக்குறுதி கொடுத்தால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்பதில்  கொஞ்சமாவது அர்த்தமிருக்கும். மத்திய அரசில் இப்போது அங்கம் வகிக்காத கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக என்ன செய்வார் என்பதற்காக ஆதரித்தார்கள்?

மத்திய அரசை வற்புறுத்துவதற்காக ஆதரித்தார்கள் என்றால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போது கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக கடிதம் எழுதினாரே, அப்போது திமுகவை ஆதரிக்கவில்லையே ஏன்?
இரண்டாண்டுகளுக்கும் மேலாக அதிமுகவினரைவிட அதிகமாக ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்துவிட்டு ஒரே நாளில் அந்தர்பல்டி அடிக்கும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்தினான் என்று தான் நமக்குத் தெரிகிறது.

34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றால்தான் ஒருவர் ராஜ்யசபா உறுப்பினர் ஆக முடியும். காலியான 6 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற முடியாது. அதிமுகவிடம் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு ராஜ்யசபா  எம்பிக்கு 34 வாக்குகள் வீதம் நான்கு பேரை அதிமுக வெற்றி பெறச் செய்வதற்கு 136 உறுப்பினர்கள் போதும். ஆனால் மேலதிகமாக 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஐந்து பேரை தேர்வு செய்ய அதிமுக விரும்பினால், 170 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும். ஆனால் அதிமுகவிடம் 150 உறுப்பினர்கள் உள்ளதால் மேலும் 20 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். பிறகட்சிகளின் ஆதரவைப் பெற்று ஐந்தாவது உறுப்பினரையும் தேர்வு செய்வது அதிமுகவுக்குச் சிரமமானதல்ல.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் மமகட்சி, புதிய தமிழகம், சரத்குமார், தமிழரசன், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட யாருடைய ஆதரவும் அதிமுகவுக்குத் தேவைப்படாது. நான்கு பேரை தேர்வு செய்வதற்குத் தேவையான உறுப்பினர்களைவிட மேலதிகமாக 14 உறுப்பினர்கள் இக்கட்சியிடம் உள்ளனர்.

நான்கு பேர் போக மீதமுள்ள வாக்குகளை தங்களுக்குத் தரவேண்டும்  என்ற  கோரிக்கைகளை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிமுகவிடம் வைத்தனர். டெல்லி சென்ற ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தினர்.

அதிமுக ஐந்து பேரை நிறுத்தினால், பற்றாக்குறையான வாக்குகளுக்காக நம்மை அணுகுவார்கள். தகுந்த முறையில் பேரம் பேசலாம், கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டுக் கொடுத்தால் அதிமுகவுக்கு நம் தயவு தேவைப்படாது என்று மம கட்சியினர் கதி கலங்கி நின்றார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்த பின்னரும் ஜெயலலிதா ஐந்து வேட்பாளர்களை நிறுத்தினார். மமகட்சி வட்டாரம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது.

அதிமுக அணுகியது, திமுக அணுகியது என்றவாறு செய்திகளைக் கொடுத்தார்கள். 

ஜெயலலிதாவிடமிருந்து விரைவில் அழைப்பு வரும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். இரண்டு  நாட்கள்கூட இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஜெயலலிதா நிறுத்திய ஐவரில் ஒருவரை வாபஸ் பெற்று நால்வர் மட்டுமே அதிமுக வேட்பாளர் என்று முடிவை மாற்றினார். தனது எஞ்சிய வாக்குகளை கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கப்போவதாகவும் அறிவித்தார்.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் தனது ஓட்டுக்கள் மூலமாகவே வென்றுவிடுவாரே? அதைவிட அதிகமாகவும் அவரிடம்  ஓட்டுக்கள் உள்ளதே? இனிமேல் நம்மைச் சீண்ட மாட்டார்களே? 
கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜெயலலிதாவின் ஆதரவு கிடைத்தால், கம்யூனிஸ்டுகளிடம் என்ன பேரம் பேச முடியும் என்று குழம்பிப் போனார்கள்.

தனது குடும்பத்தினருக்காக மட்டுமே கட்சி நடத்தும் கருணாநிதிக்கு மட்டுமே இவர்களின் ஆதரவு தேவையாக இருந்தது. மகளை வெற்றி பெறச் செய்வதற்காக அவர் எது வேண்டுமானாலும் செய்வார். எந்த வாக்குறுதியையும் கொடுப்பார். (பின்னர் அல்வாவும் கொடுப்பார்)

ஒரு பொருள் பலருக்கும் தேவைப்படும் போதுதான் எதையும்  நல்ல விலைக்கு விற்க முடியும். ஒரேயொரு நுகர்வோருக்கு மட்டுமே விற்பது என்றால் பெரிய அளவில் பேரம் பேச இயலாது. ஏதோ வந்த வரைக்கும் லாபம் என்ற நிலைக்கு அவர்களின் ஓட்டு மதிப்பை அல்லாஹ் குறைத்து விட்டான்.
ஜெயலலிதா ஐந்து பேரை நிறுத்துவதாக அறிவித்து, ஐந்து பேரை வெற்றி பெற வைக்க முடியும் என்ற நிலையிலும் ஜெயலலிதா அதைச் செய்யவில்லை.

பிறர் தயவால் ஜெயலலிதா ஜெயித்தார் என்ற விமர்சனம்தான் ஜெயலலிதாவை அதிகம் கோபப்படுத்தும் என்பது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

காங்கிரஸோடு கூட்டணி வைத்து அவர் ஜெயித்தபின், எங்களால்தான் அதிமுக ஜெயித்தது என்று காங்கிரஸ் சொன்னபோது சோனியாவை அவரது பூர்வீகப் பெயரைச் சொல்லி கிழிகிழி என்று ஜெயலலிதா கிழித்தார்.

தேமுதிகவுடன் கூட்டணி வைத்து ஜெயித்த ஜெயலலிதாவுக்கும், தேமுதிகவுக்கும் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாமல் இருந்தது. தேமுதிக மூலம்தான் அவர் ஜெயித்தார் என்ற பிரச்சாரம் காரணமாகத்தான் அக்கட்சியை பிரதான எதிரியாக ஆக்கினார்.

பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை என்னால்தான் நீ ஜெயித்தாய் என்று இருவரும் சொல்லிக் கொள்ள முடியும். வாக்களித்தவர்கள் யாருக்காக வாக்களித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. இவரது வாக்கு அவருக்கும் அவரது வாக்கு இவருக்கும் பயன் பட்டிருக்கலாம்.

ஆனால் ராஜ்யசபா தேர்தல் என்பது சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவதாகும். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற கம்யூனிஸ்டுகள் உதவினாலும், தங்களது தயவில்தான் அதிமுக வென்றது எனக்கூறினால் அதை மறுக்க இயலாது. எங்கள் ஆதரவில்தான் அதிமுக வென்றது என மமகட்சியும் கூறலாம். மமகட்சியின் இருவர் வாக்களித்து இப்படிக் கூறினால் ஜெயலலிதாவால் அதை மறுக்க இயலாது.

பிறர் தயவில் வெற்றி பெற்றுள்ளதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாத  ஜெயலலிதா ஒரு ராஜ்யசபா எம்.பி.க்காக அல்லரை சில்லரைகளிடம் ஏன் கெஞ்ச வேண்டும் என்ற ரீதியில்தான் முடிவு எடுப்பார்.
மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடுவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்.பி.சீட் கேட்டார்கள் என்றால் இது ரொம்ப ஓவர் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

ஒருவன் 100 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கச் செல்லும்போது இரண்டு ரூபாய் குறைகிறது. அருகில் இருந்த ஒருவர் நான் அதைத் தருகிறேன் என்று கூறி இரண்டு ரூபாயைத் தருகிறார். இதனால் அந்தப் பொருளை அவரால் வாங்க முடிகிறது. மறுநாள் அதைச் சொல்லிக்காட்டி இந்தப் பொருள் வாங்க உனக்கு நான்தான் உதவினேன். எனவே என்னிடம் 2 ரூபாய் உள்ளது. நீ 98 ரூபாய் போட்டு இதை எனக்கு வாங்கித் தரலாமே என்று கேட்க  முடியுமா?

ராஜ்யசபாவிற்கு, இரண்டு ஓட்டைப் போட்டுவிட்டு ஒரு எம்.பி. (34 எம்.எல்.ஏ.க்கள் மதிப்புடையது) கேட்டால் இது சரிப்பட்டு வராது. இப்படிப் பேரம் பேசும் நிலை சில்லரைக் கட்சிகளுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக  ஜெயலலிதா இம்முடிவை எடுத்தார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு தனது 15 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுக்களைப் போட்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டுச் சேர நேர்ந்தால் அவர்களின்  பேரம் பேசும் பலத்தை வெகுவாகக் குறைத்துவிட்டார்.

கருணாநிதிக்கு இது மகளின் பிரச்சினை என்பதால், மமகட்சிக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கலாம். இரண்டு ஓட்டிற்காக இரண்டு எம்.பி.க்கள் சீட்டு தருவதாகவும் சொல்லியிருக்கலாம். என்ன பேசப்பட்டது என்பது பேசியவர்களுக்குத்தான் தெரியும்.

இவர்கள் என்ன வாங்கியிருந்தாலும், ஜெயலலிதாவின் அதிரடி முடிவால் பெரிய அளவில் பேரம் பேசும் வாய்ப்பை அல்லாஹ் பறித்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

Sunday, September 09, 2012

பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற தமுமுக - மம கட்சியினர்! தடுத்து நிறுத்திய காவல்துறை!!


சமுதாய மக்களின் பணத்தில் வாங்கிய ஆம்புலன்ஸ், சமுதாய சொத்தை ஆக்கிரமிக்க அழகாக பயன்படுகிறது.
தேர்தலில் நிற்க மாட்டோம் என்று மக்களிடம் சத்தியம் செய்த தமுமுகவினர், தவ்ஹீத் எங்களுக்கு தடை என்று அரசியலுக்கு போய், சாக்கடையை தூய்மைப்படுத்த போகிறோம் என்று சாக்கடையாகவே மாறிப்போன தமுமுகவினர், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அராஜகம் என்று தங்களின் தூய்மை முகத்தை காட்டி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டிணம் செக்கடிபள்ளிக்கு சொந்தமான செக்கடிமேட்டில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, காவல்துறையால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாயத்து தேர்தலில் சங்கம் நிறுத்திய வேட்பாளர்களை எங்கள் வேட்பாளர் என்று படம்காட்டி கேவலப்பட்டது. இவர்கள் நிறுத்திய வேட்பாளர்கள் பத்து ஓட்டுகள்கூட  வாங்காமல், இவர்களின் உண்மை பலத்தை காட்டியது என கேவலங்கள் பல வந்தாலும், மீண்டும் கேவலப்பட வேண்டும் என்ற ஆசையில் இப்போது வசமாக சிக்கியருக்கிறார்கள்.

இவர்கள் தமிழகம் முழுவதும் இப்போது செய்யும் ஒரே மகத்தான (?) சேவை.  ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்து படம் காட்டுவது தான். கருணாநிதியிடம் இரண்டு ஆம்புலன்சை  வாங்கிவிட்டு, பின்னர் இவர்களுக்கு சீட்டு கொடுக்காத போது அவரை துரோகி என்றார்கள் (ஆம்புலன்ஸ் வாங்கும் போது அவர் தியாகி). அதிரையிலும் இவர்கள் படம் காட்ட ஒரு ஆம்புலன்சை வாங்கி வைத்துள்ளார்கள்.


இந்த ஆம்புலன்சை  நிறுத்தி வைக்க வேண்டும் எங்களுக்கு செக்கடிமேட்டில் இடம் வேண்டும் என்று இவர்கள் செக்கடிப்பள்ளி நிர்வாகத்தை அணுகியுள்ளார்கள். இதற்கு பள்ளி நிர்வாகிகள், அரசியல் கட்சியாக உள்ள உங்களுக்கு இடம் தந்தால், ஒவ்வோரு இயக்கத்தவர்களும் இடம் கேட்பார்கள் என்று இவர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டார்கள். இவர்கள் ஆம்புலன்சை  நிறுத்த ஷிஃபா மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்ற இடங்கள் இருக்கும் போது, இப்படி தெருவுக்குள் தங்களின் ஆம்புலன்சை நிறுத்தி படம் காட்ட வேண்டும், ஆம்புலன்சுக்கு இடம் என்று சொல்லி வாங்கி, பின்னர் அதை கட்சி அலுவலகமாக பயன்படுத்த வேண்டும் என்ற இவர்களின் உண்மை நோக்கத்தை செக்கடிப்பள்ளி நிர்வாகிகள் கட்சிதமாக புரிந்துகொண்டார்கள்.



பள்ளி நிர்வாகிகள் அனுமதி மறுத்தவுடன், இவர்கள் கட்சியின் உண்மை அராஜகத்தை காட்டும் முகமாக, பள்ளி நிர்வாகிகளின் நல்ல முடிவை ஏற்காமல், நேற்று இவர்கள் செக்கடிமேட்டில் இவர்களின் ஆம்புலன்சை நிறுத்த இரும்பு கெட்டகை போட ஆரம்பித்தனர். தகவல் கிடைத்தவுடன் செக்கடிப்பள்ளி நிர்வாகிகள் காவல்துறையை அணுகிணார்கள். காவல்துறை வந்து இவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தடை போட்டு, இவர்களை விரட்டி அடித்தது. அல்ஹம்துலில்லாஹ்.
ஏனப்பா பள்ளிவாசல் சொத்தை அபகரிக்கிறீர்கள் என்று இவர்களிடம் கேட்டபோது, அது புறம்போக்கு நிலம், அதான் ஆட்டையை போட பார்க்கிறோம் என்றார்களாம் இந்த லஞ்சம் வாங்காத (?) ஆக்கிரமிப்பாளர்கள்.
என்றைக்கு இவர்கள் அரசியலை சுத்தம் செய்ய புறப்பட்டார்களோ!, அன்று முதல் ஆக்கிரமிப்பும் அராஜகமும் இவர்களின் அன்றாட வேலையாக ஆகிவிட்டது. சமீபத்தில் உணர்வு அலுவலகத்தை, தவ்ஹீத் ஜமாஅத்தினர் தர்பியா நிகழச்சிக்காக சென்று இருந்த போது, பூட்டியிருந்த உணர்வு அலுவலகத்தை உடைத்து, உள்ளே புகுந்து மோடியின் சகோதரன் ஜால்ரா மன்னர் எம்எல்ஏ அலுவலகம் என்று எழுதி தங்களின் ஆக்கிரமிப்பு செயலை செய்தார்கள். பின்னர், காவல்துறை வந்து அரை மணி நேரத்தில் உணர்வு அலுவலகத்தின் சாவி எங்களுக்கு வரவில்லையென்றால், டங்குவார் கிழிந்துவிடும் என்றவுடன், இந்த வீர பரம்பறை கூட்டம் சாவியை ஒப்படைத்துவிட்டு ஓட்டம் எடுத்தது.

வக்ப் வாரியத்தில் ஆட்டை போட்டது போதாது என்று, இப்போது அதிராம்பட்டிணத்தில் பட்ட பகலில் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டு மூக்குடைப்பட்டுள்ளனர்.  பிஜேபியுடன் சேர்ந்து கோயில் மீட்பு போராட்டம் நடத்திய இவர்களிடம் முஸ்லிம் விரோத செயலை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?


இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும், ஹாமீத் பக்ரியை தூக்கி விசிய நேரத்தில்,தவ்ஹீத் ஜமாத்துடன்  ஒன்றிணைந்து இருந்த தமுமுகவை விட்டு ஓட்டம் எடுத்துவிட்டு, இப்போது இந்த தமுமுக வில்  சரணாகதி  அடைந்துயிருக்கும் அக்குமார்க் (?) தவ்ஹீத்வாதிகளும் சிந்திக்க வேண்டும்.

Wednesday, July 11, 2012

என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!! சமுதாய மானம் காக்கும் MLA (?)


என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!!  சமுதாய மானம் காக்கும் MLA (?)