Saturday, December 12, 2009

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.







இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழகை நடத்தி சொற்பொழிவுயாற்றினார்கள்.

Thursday, October 01, 2009

அதிராம்பட்டிணத்தில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

அதிராம்பட்டிணத்தில் இந்த வருடம் (2009) ரமலான் ஃபித்ராவாக  ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 530 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.


Monday, September 28, 2009

அதிராம்பட்டிணத்தி்ல் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

அதிராம்பட்டிணத்தில் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் மௌலவி தாஹா அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






தவ்ஹீத் போர்வை போர்த்திக் கொண்டு, வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது, மத்ஹபுகளுக்கு வக்காலத்து வாங்கும் ஆலிமை (?) தலையில் வைத்து ஆடுவது, ஒரு பிறை என்று தம்பட்டம் அடித்து கொண்டு அதற்கு மாற்றமாக நடக்கும் பெருநாள் தொழுகையில் உரையாற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வரும் ”ஒற்றுமை கோஷதாரிகளின்” அவதூறுகளை நம்பாமல் மக்கள் தவ்ஹீத் ஜமாத் நடத்தும் தொழுகையில் அதிகமாக கலந்து வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, July 01, 2009

அதிராம்பட்டிணத்தில் பல பகுதிகளில் நடைபெற்ற தர்ஹா எதிர்ப்பு பிரச்சாரம்

அதிராம்பட்டிணத்தில் தர்ஹா வழிபாட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாத்தின் அதிராம்பட்டிணம் கிளை பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறது. இதன் விளைவாக அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த செயல் நாளுக்கு நாள் பலகீனம் அடைந்து வருகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! 





இந்த ஆண்டு கந்தூரி விழா தொடங்குவதற்கு முன்பு இந்த கந்தூரி விழாவை குறித்து மக்களிடம் எவ்வாறு பிரச்சாரம் செய்வது என்பதை ஆலோசிக்க அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் கிளை தலைவர் ராஜிக் முஹம்மது தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் டிஜிட்டல் பேணர் போன்றவற்றின் முலம் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளையின் துணைத் தலைவர் Y. அன்வர் அலி, தஞ்சை மாவட்ட தாயி மௌலவி யாசிர் இம்தாதி, புதுக்கோட்டை மாவட்ட தாயி மௌலவி முஜாஹித், திருவாருர் மாவட்ட தாயி அல்தாஃப் ஹீசைன் ஆகியோர் ஒவ்வோரு நாளும் அதிராம்பட்டிணத்தின் பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் செய்தனர். இதில் மக்கள் ஆர்வத்தடன் கலந்து கொண்டனர்.

மேலும், அதிரையில் பல பகுதிகளில் ”வேண்டாம் தர்ஹா வழிபாடு” என்ற தலைப்பில் தர்ஹா வழிபாட்டை கண்டிக்கும் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட டிஜிட்டல் பேணர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Sunday, June 28, 2009

அதிரை TNTJ வின் மருத்துவ உதவி


அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 3100 வசூல் செய்து அவரிடம் கொடுக்கப்பட்டது. இதை மௌலவி யாசிர் அரஃபத் இம்தாதி அவர்கள் அந்த சகோதரிடம் வழங்கினார்கள்.


Friday, June 26, 2009

அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம்


அதிராம்பட்டினத்தில் உள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 10 நாட்கள் மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மேலான்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மெளலவி யாசிர் இம்தாதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பெண்களுக்கு பெண் ஆலிமா பயிற்சியளித்தார். இதில் எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.






இதை தொடர்ந்து கடந்த 06.06.2009 அன்று மாலை 4 மணிக்கு மஸ்ஜிதே தவ்ஹீத் பள்ளியில் கோடை கால பயிற்சி முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு அளிப்பு விழாவும், இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அப்துன் நாசர் அவர்கள் கலந்து கொண்டு கோடை கால பயிற்சி முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். மேலும், ”இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மௌலவி அப்துன் நாசர் அவர்கள் பதில் அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இதற்கான செலவுகளை துபாயில் உள்ள அதிராம்பட்டினம் ததஜ சகோதரர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.