Friday, August 31, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 31.08.12 (வீடியோ)


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 31.08.12
சகோ. கோவை அப்துர்ரஹீம்
தலைப்பு :
பெற்றோரை பேனுதல்

பெண்கள் முகத்தை மூட வேண்டுமா ?

பெண்கள் முகத்தை மூட வேண்டுமா ?





ஒரு ஆய்வாளர் தன்னுடைய வாதங்களையும் எடுத்து வைப்பதோடு எதிர் கருத்தில் உள்ளவர்கள் ஆதாரமாகக் கருதும் விஷயங்களுக்கும் பதில் அளிப்பது அவருடைய கடமை. ஆனால் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதற்கு நாம் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் எதற்கும் இவர்கள் பதிலளிக்கவில்லை

இவர்களுடைய வாதங்களுக்கு சரியான விளக்கத்தை அறிந்து கொள்வதற்கு முன்னால் பெண்கள் முகத்தை மறைப்பது தொடர்பாக நமது நிலைபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். 

பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயமில்லை:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தைத் திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது. 

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1612)

கண்ணங்கள் கருத்த பெண்மனி என்று ஜாபிர்(ரலி) அவர்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம். 

பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில் நபித்தோழியர்கள் முகத்தைத் திறந்திருக்கமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் இதைக் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதாலே இதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. 

('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (6228)

அழகான பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் எனக் கூறுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம். நபியவர்களிடம் வந்த பெண்ணை ஃபள்ல் (ரலி) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. 

இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தைத் திருப்பி விடுகிறார்களே தவிர முகத்தை மூடிக்கொள்ளுமாறு அப்பெண்ணுக்கு நபியவர்கள் உத்தரவு போடவில்லை. எனவே பெண்கள் முகத்தை மூட வேண்டியதில்லை என்பதை இந்தச் செய்தி தெள்ளத் தெளிவாக கூறுகின்றது.

3991حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ يَحْيَى عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ذُكِرَ لَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ وَكَانَ بَدْرِيًّا مَرِضَ فِي يَوْمِ جُمُعَةٍ فَرَكِبَ إِلَيْهِ بَعْدَ أَنْ تَعَالَى النَّهَارُ وَاقْتَرَبَتْ الْجُمُعَةُ وَتَرَكَ الْجُمُعَةَ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَنْ مَا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ بِنْتَ الْحَارِثِ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ وَهُوَ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ تَجَمَّلْتِ لِلْخُطَّابِ تُرَجِّينَ النِّكَاحَ فَإِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ قَالَتْ سُبَيْعَةُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي رواه البخاري

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அர்கம் அஸ்ஸுஹ்ரீ அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ ரலி அவர்கüடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார். 'விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்' (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, ''திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, 'நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்' என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.

புகாரி (3991)

இந்தச் செய்தியில் சுபைஆ (ரலி) அவர்கள் அலங்காரம் செய்திருந்தார் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அலங்காரம் செய்திருந்தார்கள் என்பதை அஹ்மதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. 

26166 26167 ஆகிய எண்களில் அஹ்மதில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள் கண்ணுக்கு சுர்மா இட்டிருந்ததாகவும் கையில் மருதாணி பூசியிருந்ததாகவும் இதை அந்நியரான அபுஸ்ஸனாபில் பார்த்துவிட்டு நபியவர்களிடம் கூறியதாவும் சொல்லப்பட்டுள்ளது. சுபைஆ (ரலி) அவர்கள் செய்ததை நபியவர்கள் கண்டிக்கவில்லை. 

எனவே பெண் தனது முகத்தையும் தனது முன் கையையும் வெளிப்படுத்திக் கொள்ள இந்தச் செய்தி தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது. 

முகத்தை மறைப்பதில் தவறில்லை:

பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயம் இல்லை என்றே நாம் கூறுகின்றோம். அதே நேரத்தில் ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தனது முகத்தை மறைத்துக் கொண்டால் அது மார்க்க அடிப்படையில் தவறல்ல. 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சில பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. 

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1838)

முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இஹ்ராம் அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்குத் தடை இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 

பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்பதும் இந்த ஹதீஸிலிருந்து விளங்குகிறது. ஏனென்றால் பெண்களின் முகம் மறைக்கப்பட வேண்டிய பகுதியாக இருந்தால் ஹஜ்ஜின் போது அதை வெளிப்படுத்த வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட மாட்டார்கள். 

பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை என்றாலும் முகத்தை மறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

பெண்கள் தாம் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும். 

தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

மார்க்கத்தில் முகத்தை மறைக்காமல் இருப்பதற்கு அனுமதி உள்ளது போல் முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. அனுமதிக்கப்பட்ட காரியங்களின் மூலம் கேடுகள் ஏற்படுமானால் அந்தக் கேடுகளின் காரணமாக அதைத் தவிர்ப்பதும் மார்க்கத்தின் ஒரு அம்சமாகும். அதிகக் கொழுப்புள்ள உணவுகள் அனுமதிக்கப்பட்டவை என்றாலும் உடலுக்கு அது நல்லதல்ல என்றால் அதை நாம் தவிர்ப்பதே நல்லதாகும். பெண்கள் முகத்தை மறைப்பதால் ஏற்படும் கேடுகள் நமக்கு பளிச் சென்று தெரிகின்றன. 

முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்
கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப் பயன்ப்டுத்திக் கொள்வது.

ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது.

இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும் போது எதைல் கேடு இல்லையோ அதைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிக அதிகமாகும்.

முகத்தை மறைத்து ஆக வேண்டும் என்று மார்க்கத்தில் கட்டளை இருந்தால் அப்போது விளைவுகளை நாம் கவனிக்கக் கூடாது. இரண்டும் அனுமதிக்கப்பட்ட காரிய்ங்களில் மட்டும் எதில் கேடுகள் உள்ளதோ அதைத் தவிர்க்கத் தான் வேண்டும். இந்த அடிப்படையில் தான் பெண்கள் முகம் மறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்

தவறான வாதங்களுக்கு சரியான விளக்கம்:

சகோதரர் தனது கருத்துக்கு அறிஞர்களின் கூற்றுக்களையும் ஆதாரமாகச் சுட்டிக் காட்டுகிறார். இவருடைய கருத்துக்கு மாற்றமாக பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை எனவும் அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். அறிஞர்களின் கூற்றுக்கள் மார்க்க ஆதாரமாக முடியாது என்பதால் இதில் நாம் மூழ்க வேண்டியதில்லை. 

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டின் அடிப்படையில் மட்டும் அவர் எழுப்பிய வாதங்களுக்கு சரியான விளக்கத்தைப் பார்ப்போம். 

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا(59)33

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

கண்களைத் தவிர்த்து முகம் உட்பட உடலின் அனைத்து பாகங்களையும் மறைக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகச் சகோதரர் வாதிடுகிறார். 

இவ்வசனத்தில் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. பொதுவாக முக்காடுகளைத் தொங்க விட வேண்டும் என்ற கட்டளை மட்டுமே இவ்வசனத்தில் இடப்படுகின்றது. 

திருக்குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ்கள் அமைந்துள்ளன. இவ்வசனத்தில் கூறப்படும் முக்காடுகளால் மறைக்கப்பட வேண்டிய பகுதியில் முகமும் முன் கையும் அடங்காது என்றும் முகமும் முன்கையும் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட பகுதி என்றும் மேலே நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. 

இதற்கு மாற்றமாக பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதே இவ்வசனத்தின் பொருள் எனக் கூறினால் பெண்கள் முகத்தை வெளிப்படுத்தலாம் எனக் கூறும் ஹதீஸ்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது திருக்குர்ஆன் வசனத்துக்கு மாற்றமான ஒரு காரியத்தை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள் என்ற தவறான கருத்து உருவாகும். எனவே அந்த ஹதீஸ்களுக்கும் இந்த வசனத்துக்கும் முரணில்லாத வகையில் நாம் முன்பு கூறியவாறு விளங்குவதே சரி.

பெண்கள் தங்களுடைய கண்களை மட்டும் வெளிப்படுத்தலாம் என சகோதரர் மேற்கண்ட வசனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். பெண்கள் கண்களை மட்டும் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்று விதிவிலக்கு கொடுப்பதற்கு இவரது சுயவிருப்பத்தைத் தவிர இவ்வசனத்தில் வேறு எந்த ஆதாரமும் இல்லை. 

எனவே இவ்வசனத்தில் நமது மனோ இச்சை அடிப்படையில் விதிவிலக்கு அளிப்பதை விட ஹதீஸ்கள் அடிப்படையில் பெண்கள் முகத்தையும் முன்கையையும் வெளிப்படுத்தலாம் என விதிவிலக்கு அளிப்பதே சரியானது. 

மேற்கண்ட வசனத்தில் முக்காடுகள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் ஜலாபீப் என்ற பன்மைச் சொல் இடம் பெற்றுள்ளது. ஜில்பாப் என்பது இதன் ஒருமையாகும். 

இவ்வசனம் இறங்கியவுடன் நபித்தோழியர்கள் தங்களுடைய முகங்களை துணியால் மறைத்துக் கொண்டதாக ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வசனத்துக்கு விளக்கம் கூறினார்கள் என சகோதரர் கூறினார். ஆனால் இவர் கூறியது போல் புகாரியில் எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை. 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பின்வரும் செய்தி மட்டுமே புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

4759 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَتْ تَقُولُ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ أَخَذْنَ أُزْرَهُنَّ فَشَقَّقْنَهَا مِنْ قِبَلِ الْحَوَاشِي فَاخْتَمَرْنَ بِهَا رواه البخاري

ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

''(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கüடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்'' எனும் (24:31ஆவது) வசனம் இறங்கிய போது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

புகாரி (4759)

33 : 59 வது வசனத்துக்கு விளக்கமாக ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியைக் கூறியதாக சகோதரர் கூறினார். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த வசனத்துக்கு இவ்வாறு விளக்கம் கூறவில்லை. மாறாக 24 : 31 ஆவது வசனத்துக்கே மேற்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்கள். 

அவர்கள் அறிவித்துள்ள இந்தச் செய்தியில் முகத்தை மறைப்பது பற்றி எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. எனவே சகோதரர் இதைத் தவறுதலாக கூறியிருப்பார் என்றே நாம் நல்லெண்ணம் வைக்கின்றோம். 

பலவீனமான செய்திகள்:

33 : 59 ஆவது வசனம் பெண்கள் தங்கள் முகங்களை மறைக்க வேண்டும் எனக் கூறுவதாக இப்னு அப்பாஸ் கூறினார்கள் என சகோதரர் கூறியிருந்தார். 

இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் தப்ரீ அவர்கள் எழுதிய ஜாமிஉல் பயான் எனும் நூ­ல் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

جامع البيان في تفسير القرآن للطبري سورة الأحزاب

القول في تأويل قوله تعالى : يا أيها النبي قل لأزواجك حديث : ‏26266‏

ذكر من قال ذلك : حدثني علي ، قال : ثنا أبو صالح ، قال : ثني معاوية ، عن علي ، عن ابن عباس ، قوله : يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ' أمر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن في حاجة أن يغطين وجوههن من فوق رءوسهن بالجلابيب ، ويبدين عينا واحدة '

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

இறைநம்பிக்கையாளர்களின் பெண்கள் ஒரு தேவைக்காக தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியே செல்லும் போது அவர்கள் தங்கள் முகங்களை முக்காடுகளால் தலையின் மேற்புறத்திலிருந்து மூடிக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் (இவ்வசனத்தில்) அப்பெண்களுக்கு உத்தரவிடுகிறான். 

நூல் : ஜாமிஉல் பயான்

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ ஸா­ஹ் என்பவர் இடம் பெறுகின்றார். அறிஞர்களின் கூற்றுப்படி இவர் பலவீனமானவர் ஆவார். 

இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். இவரிடம் பலவீனம் இருப்பதாக இமாம் தஹபீ தெரிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் இல்லை என இமாம் நஸாயீ தெரிவித்துள்ளார். 

இவ்வசனத்தின் விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அலீ பின் அபீ தல்ஹா என்பவர் அறிவிக்கின்றார். அலீ பின் அபீ தல்ஹா திருக்குர்ஆனின் விளக்கம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகச்செவியுறவில்லை என துஹைம் என்ற அறிஞர் கூறியுள்ளார். 

மேற்கண்ட செய்தி திருக்குர்ஆனின் விளக்கம் தொடர்பானதாகும். இதை இவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக செவியுறவில்லை. இவருக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார்கள். எனவே இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதாலும் அறிவிப்பாளர் அபூ ஸா­ஹ் பலவீனமானவர் என்பதாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தி சரி என்று ஏற்றுக் கொண்டாலும் இதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இவ்வசனத்துக்கு இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் கொடுக்கவில்லை. மாறாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே விளக்கம் கொடுத்துள்ளார்கள். நபித்தோழர்கள் கூறும் விளக்கங்களை நாம் ஏற்க வேண்டும் என மார்க்கம் நமக்குக் கூறவில்லை. இந்த விளக்கம் பல நபிமொழிகளுக்கு மாற்றமாக இருப்பதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அடுத்து சகோதரர் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார். 

1562حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ رواه أبو داود

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(பெண்களாகிய) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த போது ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களை கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அருகில் வரும் போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களை கடந்து சென்றுவிட்டால் முக்காட்டை அகற்றிக் கொள்வோம்.

அபூதாவுத் (1562)

இந்த செய்தியில் யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள், இமாம் யஹ்யா பின் முயீன், இமாம் அபூ சுர்ஆ, இமாம் அபூ ஹாதிம், இமாம் இப்னு அதீ ஆகியோர் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான செய்தி. 

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டால் கூட இதை வைத்து பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்று கூற முடியாது. ஏனென்றால் இந்தச் செய்தியில் ஆண்கள் பெண்களைக் கடந்து செல்லும் போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. நபித்தோழியர்களே சுயமாகவே இவ்வாறு செய்கின்றனர். 

எனவே அதிகபட்சமாக இந்தச் செய்தியை வைத்து பெண்கள் முகத்தை மூடுவது தவறல்ல என்று வாதிடமுடியுமே தவிர முகத்தை அவசியம் மூட வேண்டும் என்று வாதிட முடியாது. எனவே இது நமக்கு எதிரான ஆதாரமல்ல. 

ஆதாரத்திற்கு தகுதியற்றவை:

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கப் பிரச்சனைகளுக்கு ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படும். இதை விடுத்து நபித்தோழர்களின் கூற்றுக்களையோ அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களையோ ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

ஆனால் சகோதரர் பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதற்கு நபித்தோழர்களின் கூற்றுக்களையும் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார். 

جامع البيان في تفسير القرآن للطبري سورة الأحزاب

القول في تأويل قوله تعالى : يا أيها النبي قل لأزواجك حديث : ‏26268‏48197 

حدثني يعقوب ، قال : ثنا هشيم ، قال : أخبرنا هشام ، عن ابن سيرين ، قال : سألت عبيدة ، عن قوله : قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن قال : ' فقال بثوبه ، فغطى رأسه ووجهه ، وأبرز ثوبه عن إحدى عينيه ' وقال آخرون : بل أمرن أن يشددن جلابيبهن على جباههن *

இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! என்ற வசனம் குறித்து நான் உபைதா பின் அம்ர் (ரஹ்) அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள் தனது ஆடையைக் கொண்டு தனது இரு கண்களில் ஒன்றை மட்டும் வெளிப்படுத்தி தன் தலையையும் முகத்தையும் மூடிக்காட்டி(இவ்வாறு பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்று கூறினார்கள். 

நூல் : ஜாமிஉல் பயான் 

முகத்தில் ஒரு கண்ணை மட்டும் திறந்து மற்ற அனைத்தையும் மூட வேண்டும் எனக் கூறிய அம்ர் என்பவர் நபித்தோழர் அல்ல. தாபியீன் ஆவார். இவ்வசனத்துக்கு இவர் கூறிய விளக்கம் பெண்கள் முகத்தைத் திறக்கலாம் என்று கூறும் ஹதீஸ்களுடன் முரண்படுகின்றது. இவ்விளக்கத்தை இவர் சுயமாகத் தெரிவிக்கின்றார். எனவே இதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. 

அடுத்து சகோதரர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளார். 

634 و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ أَنَّهَا قَالَتْ كُنَّا نُخَمِّرُ وُجُوهَنَا وَنَحْنُ مُحْرِمَاتٌ وَنَحْنُ مَعَ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رواه مالك

ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் அஸ்மாஉ பின்த் அபீ பக்ர் சித்தீக் (ரலி) அவர்களுடன் இருந்த போது நாங்கள் எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம். 

நூல் : மா­க் (634)

நபித்தோழர்களின் கூற்றுக்களே ஆதாரமாக முடியாது என்கிற போது அவர்களின் அங்கீகாரங்களை ஆதாரமாக எடுக்கவே முடியாது. அஸ்மாஉ (ரலி) அவர்கள் முந்நிலையில் பெண்கள் முகத்தை மூடியுள்ளதால் இதிலிருந்து எப்படி மார்க்க சட்டத்தை எடுக்க முடியும்?

மேலும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு எதிராக உள்ளது. இஹ்ராம் அணிந்த பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை முன்பே பார்த்தோம். 

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றால் கூட இஹ்ராம் அணிந்த நிலையில் பெண்கள் முகத்தை மூடிக் கொள்ள அனுமதி உண்டு என்று தான் விளங்க முடியும். பெண்கள் எல்லா நேரத்திலும் முகத்தைக் கட்டாயம் மூட வேண்டும் என்ற கருத்தை இச்செய்தி தரவில்லை. 

எனவே பெண்கள் முகத்தை மூடுவது வாஜிப் (கட்டாயம்) என்ற கருத்துக்கு இது ஆதாரமாக முடியாது. 

அடுத்து சகோதரர் பின்வரும் செய்தியை பெண்கள் அவசியம் முகத்தை மூட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக காட்டுகிறார். 

صحيح ابن خزيمة كتاب المناسك


حدثنا حمد بن العلاء بن كريب ، حدثنا زكريا بن عدي ، عن إبراهيم بن حميد ، حدثنا هشام بن عروة ، عن فاطمة بنت المنذر ، عن أسماء قالت : كنا نغطي وجوهنا من الرجال ، وكنا نمتشط قبل ذلك *

அஸ்மாஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

நாங்கள் ஆண்களிடமிருந்து எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம். இதற்கு முன்பே தலைவாரிக் கொள்வோம். 

நூல் : ஸஹீஹு இப்னி குஸைமா 

இந்தச் செய்தியும் நாம் முன்பு கூறிய செய்தியைப் போன்றே அமைந்துள்ளது. 

பெண்கள் முகத்தை மறைக்கலாம் என்று தான் இந்த செய்தி கூறுகின்றது. அவசியம் மறைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்பது சகோதரரின் வாதமாகும். 

பெண்கள் முகத்தை மறைப்பது கூடாது என்று நாம் கூறவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. மறைக்காமல் வெளிப்படுத்தினால் குற்றமில்லை என்றே கூறுகிறோம். எனவே இது நமது கருத்துக்கு எதிரான செய்தியல்ல. மாறாக பெண்கள் முகத்தை மறைக்க அனுமதியுண்டு என நாம் கூறும் கருத்துக்கு ஆதாரமாக உள்ளது. 

கிமார் என்றால் என்ன?

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். 

அல்குர்ஆன் (24 : 31)

முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் குர்ஆனில் கும்ரு என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. கிமார் என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் முகம் உட்பட தலையை மறைக்கும் ஆடை என சகோதரர் வாதிடுகிறார். இவ்வாறு இப்னு ஹஜர் இவ்வார்த்தைக்கு விளக்கம் கொடுத்ததாகவும் சுட்டிக் காட்டுகிறார். 

இவ்வசனத்தில் முக்காடுகளை மார்பின் மீடு போட்டுக் கொள்ள வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. முகத்தின் மீது போட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தாலே முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை என்பதால் இதை முகத்தை மறைக்க ஆதாரமாகக் காட்ட முடியாது. 

கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என்ற கருத்து தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள். இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது. 

அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் கிமார் என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்குச் சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கிமார் என்பதற்கு தனது நூலான ஃபத்ஹுல் பாரியில் அது ஆண்கள் அணியும் தலைப்பாகையைப் போன்றது எனக் கூறுகிறார். அதாவது ஆண்கள் தங்களது தலையை மறைக்க தலைப்பாகையைப் பயன்படுத்துவது போல் பெண்கள் தங்களது தலையை மறைக்க கிமாரைப் பயன்படுத்துவார்கள் என்று கூறுகிறார். தலைப்பாகை என்பது முகத்தை மறைக்கும் ஆடையல்ல. எனவே கிமார் என்பது முகத்திரை அல்ல. தலைத்துணி தான் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. 

ஹதீஸ்களில் கிமார் என்பது தலைத்துணி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

546حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ قَتَادَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه أبو داود

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

மாதவிடாய் (ஏற்படும் பருமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். 

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூதாவுத் (5460

பெண்கள் தொழும் போது முக்காடுடன் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. முக்காடு என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஹதீஸில் கிமார் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. கிமார் என்றால் அது முகத்தை மூடும் ஆடை என தவறான பொருளை இங்கே பொறுத்தினால் பெண்கள் தொழுகையின் போது முகத்தை மூடுவது கட்டாயம் என்ற தவறான முடிவு ஏற்படும். 

2865حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ زَحْرٍ أَنَّ أَبَا سَعِيدٍ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَالِكٍ أَخْبَرَهُ أَنَّ عُقْبَةَ بْنَ عَامِرٍ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أُخْتٍ لَهُ نَذَرَتْ أَنْ تَحُجَّ حَافِيَةً غَيْرَ مُخْتَمِرَةٍ فَقَالَ مُرُوهَا فَلْتَخْتَمِرْ وَلْتَرْكَبْ وَلْتَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ روه أبو داود

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

எனது சகோதரி காலணி அணியாமலும் கிமார் (தலைத் துணி) அணியாமலும் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துள்ளார் என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் (கூறி இது பற்றி) வினவினேன். அதற்கு அவர்கள் உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். அவர் தலைத் துணி அணிந்து கொள்ளட்டும். வாகனத்தில் ஏறி வரட்டும். அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். 

அபூதாவுத் (2865)

ஹஜ் செய்யும் பெண்கள் முகத்தை மூடக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை முன்பே பார்த்து விட்டோம். மேற்கண்ட ஹதீஸில் கிமார் அணிய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சகோதரிக்கு உத்தரவிட்டுள்ளார்கள். 

கிமார் என்பது முகத்தை மறைக்கும் ஆடையாக இருந்தால் முகத்தை மறைக்கக் கூடாத இடமான ஹஜ்ஜில் கிமாரை அணியுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள். 

கிமார் என்பது தலையை மட்டும் மறைக்கும் துணி என்பதாலே இதை ஹஜ்ஜின் போது அணியுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

எனவே பெண்கள் முகத்தைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத் தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. பெண்கள் முகத்தை மறைப்பதற்கும் மறைக்காமல் இருப்பதற்கும் அனுமதியுள்ளது. 

தற்காலத்தில் முகத்தை மறைப்பதால் தீமைகள் அதிகம் ஏற்படுகின்றது. எனவே இத்தீமைகளை தடுக்கும் விதமாக முகத்தை மறைப்பதைக் காட்டிலும் மறைக்காமல் இருப்பது சிறந்தது.

Thursday, August 30, 2012

தவ்ஹீத் ஜமாஅத்தை ஏன் அனைவரும் எதிர்க்கிறார்கள்? (வீடியோ)

தவ்ஹீத் ஜமாஅத்தை ஏன் அனைவரும் எதிர்க்கிறார்கள்?


Saturday, August 25, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 24.08.12 (வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 24.08.12

Friday, August 24, 2012

ஓரிறைக் கொள்கையும் ஒற்றுமை கோஷமும் (வீடியோ)!

ஓரிறைக் கொள்கையும் ஒற்றுமை கோஷமும் (வீடியோ)

ஒற்றுமையா? மார்க்கமா? 

ஒற்றுமைகாக தவ்ஹீதை விட்டு கொடுக்க வேண்டுமா?

தவ்ஹீத் ஜமாஅத் வருவதற்கு முன் அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்களா?

ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லி இத்தனை இயக்கங்கள் ஏன்?

ஷாஃபி மற்றும் ஹனஃபி மத்ஹபினர்களுக்கு இடையியே நடந்த சண்டைகள் என்ன?

ஒற்றுமை என்று சொல்லி நான்கு மத்ஹபுகள்? நாற்பது தரீக்காக்கள் ஏன்?

தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமையை உடைத்தா?

மார்க்கத்தில் விட்டுகொடுக்கும் போலி ஒற்றுமை இஸ்லாத்தில் உண்டா?

ஒற்றுமை என்று மக்களை ஏமாற்றுபவர்கள் யார்? யார்? போன்ற கேள்விகளுக்கு விடை காண கீழ்காணும் வீடியோவை காணுங்கள்.

உரை: பி.ஜைனுல் ஆபிதீன்

பாகம்-1

பாகம்-2


பாகம்-3

Thursday, August 23, 2012

அதிரையில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா வினியோகம்!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இந்த வருடம் ஃபித்ராவாக ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா பொருட்களை பெற தகுதியானவர்களை தேடி சென்று வழங்கியது.  அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்தில் 87,640 ரூபாய் அதிரை கிளை வசூல் செய்தது.  மீதமுள்ள 63,800 ருபாய் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையால் அதிரை கிளைக்காக வழங்கப்பட்டது. இந்த தொகை மூலம் நமது ஊரில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இவற்றிக்கான கணக்கு விபரம் கீழே தரப்பட்டுள்ளது. ஃபித்ராவிற்காக வசூல் செய்யப்பட்ட தொகை அந்த பணிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.



Monday, August 20, 2012

நோன்பு பெருநாள் திடல் தொழுகை சொற்பொழிவு (வீடியோ)

நோன்பு பெருநாள் திடல் தொழுகை சொற்பொழிவு (வீடியோ)


அதிரையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை! நபிவழியை நடைமுறைப்படுத்த அணி திரண்ட மக்கள் கூட்டம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இன்று (20.08.2012) ECR ரோட்டில் அமைத்துள்ள NMS ஜெகபர் அலி மைதானத்தில் நடைபெற்றது. 

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நபிவழியை நிலைநாட்ட ஆண்களும் பெண்களும் கடந்த காலங்களை விட மிக அதிகமாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள். (பொருநாள் உரை விரைவில் வெளியிடப்படும்)







Sunday, August 19, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 28

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 28

Saturday, August 18, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 

Friday, August 17, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 27


அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 27

Thursday, August 16, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு ஓர் அறைகூவல்!

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு ஓர் அறைகூவல் 

[மார்க்கம் என்ற பெயரில் விட்டு அடிக்கும் ஹைதர் அலி நமது சவாலை இதுவரை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது]

பெண்கள் முகத்தை மூடாவிட்டால் ஹராம் என்று சொல்லும் ஃபத்வா சரியானதா ?

ஹைதர் அலி ஆலிம் (?) அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் எதையாவது சொல்லுவது, அதை பற்றி கேள்வி எழுப்பினால் எஸ்கேப் ஆகிவிடுவது என்பதையே கொள்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் பெண்கள் முகத்தை கட்டாயமாக மறைக்க வேண்டும் என்று அள்ளிவிட்டுள்ளார்.

இதற்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இவருக்கு விவாத அழைப்பு கீழ்காணும் விடியோவில் விடப்பட்டுள்ளது. விவாதத்திற்கு வந்து இவரின் கொள்கையை நிலைநாட்டுகிறாரா? என்று பார்ப்போம்.

விவாதத்திற்கு வந்தால் இவர் தூக்கி பிடிக்கும் மத்ஹபின் அசிங்கங்களையும் ஆபாசங்களையும் அள்ளிப்போட்டு இவரின் முகத்திரையை கிழிக்க வசதியாக இருக்கும். வருடம் முழுவதும் லைலத்துல் கத்ர் வரும் என்று கதைவிடும், இவர் தூக்கி பிடிக்கும் தப்லீக் தஃலிம் கிதாபின் கப்சாக்களையும் அள்ளிப்போட வசதியாக இருக்கும்.

வருகிறாரா என்று பார்ப்போம். சத்தியம் இருந்தால் தானே வர முடியும்? வந்து கேவலப் படுவதா ? அல்லது வராமல்  கேவலப்படுவதா? என்பதை ஆலிம்சா (?) அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தர்ஹாவிற்கு எதிராக பேசிவிட்டு, எவனாவது மிரட்டினால், அடுத்த நாள் நான் அப்படி பேசலைங்க என்று தைரியமாக தனது தொடை நடுக்கத்தை கப்ர் வணங்கிகளிடம் வைத்து கொள்ள வேண்டும். சத்தியத்தில் இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திடம் மோதினால், கேவலம் தான் மிஞ்சும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்கிறோம்.

இந்த ஆலிம்சாவை தூக்கிபிடிக்கும் தவ்ஹீத்வாதிகள் (?) திருந்துவது எப்போது? 

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 26

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 26


Wednesday, August 15, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 25

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 25


Tuesday, August 14, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 24


அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 24

Monday, August 13, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 23

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 23



Saturday, August 11, 2012

இஸ்லாம் இறைவனின் மார்க்கமே


"இஸ்லாம் இறைவனின் மார்க்கமே"

இஸ்லாம் இறைவனின் மார்க்கமே – நிரூபித்த அமெரிக்க – இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்!


மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம்.


இந்த நோய் ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழும் தொழுகையாளிகளாக உள்ள முஸ்லிம்களை தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஞாபக மறதி நோயால் 4 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்க, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் இது குறித்த ஆய்வில் இறங்கினர்.
டெல் அவீவ், யாஃபா, மற்றும் அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் கிளிவ்லேண்டில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துழைப்புடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப டெக்னியான் என்ற இஸ்ரேல் நிறுவனம், மற்றும் ஐக்கிய சுகாதார அமெரிக்க தேசிய நிறுவனம் (ழிமிபி) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுபவர்களுக்கு இந்த ஞாபக மறதி நோய் தாக்குவதில்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழும் நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.
குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் ரிவேகா இஜெல்பெர்க் கூறுகிறார்.
65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை; ஐவேளை தொழும் முஸ்லிம்களை இது பாதிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இயந்திரத்தனமான வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் பல்வேறு வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாகத்தான் தன்னைத்தானே மறக்கக்கூடிய அளவிற்கு ஞாபக மறதி நோய் மனிதனை ஆட்கொள்கின்றது.
இத்தகைய நிகழ்வுகளினால் அல்லல்படும் மனிதனுக்கு அழகான தீர்வை இஸ்லாம் மட்டுமே வழங்குகின்றது. தொழுகையை முறையாகப் பேணித் தொழுவதால் மறுமையில் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற போதிலும் இந்த உலகத்திலும் எண்ணற்ற நன்மைகளை அல்லாஹ் மறைமுகமாக வைத்துள்ளான் என்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான்என்ற பேருண்மையும் இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவந்துள்ளது.
அல்லாஹ் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான் மனிதன் பதறக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான்.அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான்.அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான்.தொழுகையாளிகளைத் தவிர.அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள்
அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும்.அவர்கள் தீர்ப்பு நாளை நம்புவார்கள்.அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள்.
அல்குர்-ஆன் 70 : 19-27
இந்த ஆய்வின் முடிவில் என்ன சொல்லியுள்ளார்களோ அதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தெளிவுபடுத்திவிட்டது.
பதறக்கூடியவனாக உள்ள மனிதனுக்குரிய மருந்து அவன் தொழுகையாளியாக மாறுவதுதான். அதைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து தற்போது கண்டுபிடித்துள்ளார்கள். இதன் மூலம் இஸ்லாம் இறைவனின் மார்க்கமே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
தகவல் : காரைக்குடியிலிருந்து ஹக்கீம் சேட்

Friday, August 10, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 10/08/2012

Saturday, August 04, 2012

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!‎


இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!‎

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!‎
‎- ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் ‎பேராசிரியர்!‎


உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராகக் ‎கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்கப் ‎பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.‎

அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறைப் ‎பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் என்பவர் இயேசு முஸ்லிம் என்பதைத் ‎திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Was jesus a muslim? என்ற தனது புதிய ‎நூலில் அவர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.‎
‎ 

தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளுக்கு உதவுவீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தவ்ஹீத் ஜமாஅத் மறுமையை வெற்றியை அடிப்படையாக கொண்டு கீழ்காணும் தொண்டு நிறுவனங்களை நடத்திவருகிறது.

இதற்கு செலவாகும்  தொகையை ரமலானில் திரட்டி சிறப்பாக நடத்திவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிறுவனங்களில் இருக்கும் நபர்களுக்கு மாத செலவு அடிப்படையில் தொகை கணக்கிடப்பட்டுள்ளது (அந்த விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது).

இந்த தொகையை ஜக்காத் நிதியில் இருந்து வழங்கலாம். இவர்கள் ஜக்காத் கொடுக்க வேண்டியவர்களில் அடங்குவர்.

இதற்கான நன்கொடையை வழங்க சகோதரர் அதிரை ஹைதர் அலி அவர்களை 96776 - 26656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த நிறுவனங்களை பற்றிய விபரம் வீடியோவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம் (திருமங்கலம், மதுரை):


















அல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம் (அவனியாபுரம், மதுரை):




















அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம் (சுவாமிமலை, கும்பகோணம்) :



அர்ரஹ்மான் சிறுமியர் ஆதரவு இல்லம் (அவனியாபுரம், மதுரை):





அர்ரஹீம் முதியோர் இல்லம் (பண்டாரவாடை, தஞ்சை):




Friday, August 03, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 03.08.12

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 03.08.12

Wednesday, August 01, 2012

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கண்டனம்!

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கண்டனம்!


பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் ‎நடத்திக்காட்டிய வாத்தியார்!



பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் ‎நடத்திக்காட்டிய வாத்தியார்!




ம.ம.கட்சியின் மூத்த தலைவர் வத்தியாரின் பதவி வெறி ரொம்ப ‎முற்றிப்போய் அந்தப் பதவி வெறி மிக உச்சத்தை எட்டியுள்ளது.‎
‎ 
கடந்த வாரம் பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவர் எந்த அளவிற்கு ‎பதவி வெறி பிடித்து அலைகின்றார் என்பதைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது.‎
‎ 
சமீபத்தில் வக்ஃபு வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ‎உத்தரவு பிறப்பித்தது. அதில் நமது ஜால்ரா மன்னனின் பெயர் இடம் ‎பெறவில்லை. இந்த அளவிற்கு அம்மாவிற்கு சிங்கி அடித்து, ஜிங்சா ‎தட்டியபோதும், அ.தி.மு.க.வினரே ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு அம்மா ‎புகழ் பாடிய போதும் தனக்கு அதில் இடம் வழங்கப்படவில்லையே என்று ‎நொந்து கொண்ட நமது ஜால்ரா மன்னன் சீறி எழுந்தார்.‎
‎