Showing posts with label மமக. Show all posts
Showing posts with label மமக. Show all posts

Saturday, April 26, 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விட்ட தமுமுக ரவுடிகள்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விட்ட தமுமுக ரவுடிகள்!

கொலை மிரட்டல் விட்ட தமுமுக ரவுடிகள்!



காவல்துறை முன்னிலையில் மன்னிப்பு கேட்ட தமுமுகவினரை பெரும்தன்மையாக மன்னித்த தவ்ஹீத் ஜமாஅத்!

Sunday, April 20, 2014

தமுமுகவின் துரோகங்களை மன்னிக்க முன்வந்த தவ்ஹீத் ஜமாஅத், ஹைதர் அலி எம்பியாவதை தடுக்கும் ஜவாஹிருல்லாஹ், தமீம் அன்சாரி!

தமுமுகவின் துரோகங்களை மன்னிக்க முன்வந்த தவ்ஹீத் ஜமாஅத், ஹைதர் அலி எம்பியாவதை தடுக்கும் ஜவாஹிருல்லாஹ், தமீம் அன்சாரி!

மயிலாடுதுறையில் மம கட்சியின் சார்பாக போட்டியிடும் ஹைதர் அலியை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையில் கோரிக்கை வைத்தார். இது பற்றி தமுமுக தரப்பில், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக செய்த துரோகங்களுக்கு மன்னிப்பு கேட்டு, இனிமெல் இது போன்ற காரியத்தில் ஈடுபட மாட்டோம் உறுதி தந்தால், தவ்ஹீத் ஜமாஅத் ஹைதர் அலியை ஆதரிப்பதாக தெரிவித்தது. தவ்ஹீத் ஜமாஅத்திடம் வருத்தம் தெரிவிக்க ஹைதர் அலி தயாராக இருந்தார். 

ஹைதர் அலி எம்பி ஆகக்கூடாது என்பதில் ஜவாஹிருல்லாஹ்வும் சுண்டி பேசும் தமீம் அன்சாரியும் உறுதியாக உள்ளார்கள் என்பதை ஹைதர் அலி அவர்கள் கண்ணீர் மலுக இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவரிடம் தெரிவித்தார். அதிரையின் பிரபல செய்தி தளத்திற்கு பேட்டி தந்த தமீம் அன்சாரியின் முகத்தில் ஒரு மறுமலர்ச்சி இல்லாமல் இருந்தது ஏன் என்று இப்போது தான் புரிகிறது.

பச்சிளம் குழந்தையின் ஜனாஸா தொழுகையில் வெறியாட்டம் நடத்தியவர்களை தவ்ஹீத் ஜமாஅத் மன்னிக்க முன்வந்த போதும், ஜவாஹிருல்லாஹ்வும் தமீம் அன்சாரியும் ஹைதர் அலியை மண்னை கவ்வ வைக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள் என்பதை உண்மையான நடுநிலைவாதிகள் புரிந்து கொள்ளுங்கள்.

ஹைதர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூட இருக்கும் போது இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவரின் இவ்வாறு சொன்னதை ஹைதர் அலி அவர்கள் மறுக்க மாட்டார். மறுத்தால் ஆடியோ ஆதாரம் வெளியிடப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.


Wednesday, April 09, 2014

மம கட்சியை ஏன் தோற்கடிக்க வேண்டும்?

மம கட்சியை ஏன் தோற்கடிக்க வேண்டும்?



Tuesday, April 08, 2014

வாழ்வுரிமைக்கே வாக்குரிமை!

நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டது. எனினும் இதன் பலனாய் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் திராவிடக் கட்சிகளை நோக்கியே சென்றன.

இக்கால கட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த தவ்ஹீத் ஜமாஅத், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் என்ற வட்டத்தில் மட்டும் நின்ற தவ்ஹீத் ஜமாஅத், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் சமுதாயப் பணி என்ற இலட்சியத்தையும் கையிலெடுத்து தனது வட்டத்தை வரிவாக்கம் செய்தது. அதன் எதிரொலி தான் தமுமுக என்ற இயக்கத்தின் உதயமாகும்.

தவ்ஹீதுவாதிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் தமிழகத்தில் அரசியல்ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சியின் விளைவாக 1998ல் தேர்தல் புறக்கணிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.

1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கோவையில் 19 முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்றது.

முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற காவல்துறை கயவர்களின் மீது - காட்டு மிருகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் கருணாநிதி என்று சமுதாயம் காத்திருந்தது. ஆனால் கருணாநிதியோ அந்தக் காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல! முஸ்லிம்களின் உயிரைப் பறித்து, உதிரம் குடித்த காட்டுவிலங்குகளுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார். எரிகின்ற முஸ்லிம்களின் இதயங்களில் எண்ணையை ஊற்றினார்.

அந்தப் பாதிப்பையும் கொதிப்பையும் வெளிப்படுத்தும் விதமாகத் தேர்தல் புறக்கணிப்பை தமுமுக சார்பில் அறிவித்தோம். அதனுடைய வீரிய பிரச்சாரம் மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கும் வேளையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இது தமிழகத்தில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் பிஜேபிக்கு சாதகமான பலனை அளித்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி தோல்வியடைந்து, அதிமுக அணி வென்றது.

அதிமுக ஆதரவில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா அரசை 13 மாதங்களில் ஜெயலலிதா கவிழ்த்தார். 1999ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்தித்தது. 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலையொட்டி ஜூலை 4, 1999ல் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்து கொண்டு, அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தோம்.

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படாததாலும், திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததாலும் எந்தக் கட்சியையும் முழுமையாக ஆதரிக்காமல் சமுதாய ரீதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து ஆதரித்தோம். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதன் பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எனவே இடஒதுக்கீட்டை மையமாக வைத்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தோம். இவையனைத்தும் தமுமுக தவ்ஹீதுவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்.

இதன் பின்னர் தேர்தல் காலங்களில், களங்களில் கண்ட அரசியல் தலைவர்கள் சந்திப்பு, மரியாதைகள் போன்றவை தமுமுகவை பதவி மோகத்தில் தள்ளியது. அதனால் தவ்ஹீதுவாதிகள் தமுமுகவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானது. இந்த ஜமாஅத், 2006, ஜனவரி 29 அன்று குடந்தை குலுங்கும் அளவுக்கு மாபெரும் பேரணியை நடத்தியது.

அதன் விளைவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நீதிபதி ராஜரத்தினம் தலைமையில் இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்தார். அந்த அடிப்படையில் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்தது. எனினும் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருந்த கோபம் காரணமாக திமுக வென்றது. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு இல்லாமல் இருந்தால் அதிமுக பலமான எதிர்க்கட்சியாக வந்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் அப்போது எழுதினார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கு நன்றிக்கடனாக தவ்ஹீத் ஜமாஅத் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதவரளித்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

2011 சட்டமன்றத் தேர்தலிலும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரும் கட்சிக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கோரிக்கையை அதிமுக கண்டுகொள்ளவில்லை. திமுக ஏற்றுக் கொண்டது. இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திமுகவை ஆதரித்தது. மின்வெட்டு, ஊழல் போன்ற திமுக எதிர்ப்பு அலையில் திமுக தோல்வியைத் தழுவினாலும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிமுக அசைந்து கொடுக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் காலத்தில் தான் சமுதாயத்தின் கோரிக்கையை ஏறிட்டுப் பார்க்கும்; என்னவென்று கேட்கும். இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகமே ஸ்தம்பிக்கின்ற வகையில் ஜனவரி 28, 2014 அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நான்கு மண்டலங்களில் தமிழகம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இதன் விளைவாக அதிமுக அரசு, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில பிற்பட்டோர் நல வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டப்படி, இதுதான் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகும். இந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தனது ஆதரவை அளிக்கின்றது.

இதுவரை இஸ்லாமிய சமுதாயம் தனது வாக்குரிமையை உணராமல் இருந்தது. விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு உதவாக்கரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் வாக்குகள் பாழாகிக் கொண்டிருந்தன; பயனற்றுப் போயின.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இப்போது இடஒதுக்கீடு என்ற சமுதாய நலனை மையமாகக் கொண்டு, வாழ்வுரிமையை ஆதாரமாகக் கொண்டு அதன் வாக்குரிமை சுழல்கின்றது.

இரு திராவிடக் கட்சிகளுமே இடஒதுக்கீடு எனும் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை தேர்தல் களத்தில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று சாதிக்காமல் சந்தியில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் சாதித்திருக்கின்றது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி இந்த இடஒதுக்கீடு எனும் வாழ்வுரிமை கிடைக்க ஒட்டுமொத்த சமுதாயமும் ஓரணியில் நின்று அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகளின் ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுக்களைப் பார்க்காமல் நாளைய நமது தலைமுறையின் மருத்துவ, பொறியியல், தொழிற்கல்வியின் சீட்டுக்களையும் அரசு வேலைவாய்ப்புகளையும் கவனத்தில் கொண்டு, சமுதாய நலனை முன்னிறுத்தி அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நமது வாழ்வுரிமைக்காக வாக்களிக்க வேண்டும்.

இப்போது சட்டமன்றத்தில் இருக்கின்ற இரண்டு மமக உறுப்பினர்கள் சமுதாயத்திற்காக எதையும் கிழித்துவிடவில்லை. தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக் கட்சியைப் புகழ்வதிலும், எதிர்க்கட்சியை விமர்சிப்பதிலும் தான் தங்கள் பதவிக்காலத்தைக் கழிக்கிறார்களே தவிர இடஒதுக்கீட்டிற்காக எதையும் சாதிக்கவில்லை. சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, தமது ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இவர்களுக்கு வாக்களிப்பது சமுதாயம் தன்னையே நாசத்தில் தள்ளுவதற்குச் சமமாகும்.

மமகவின் நிலை இதுவென்றால், தேர்தல் சமயத்தில் மட்டும் முஸ்லிம் கட்சி என்ற வேஷம் போடும் எஸ்டிபிஐ கட்சி, பாரதீய ஜனதா வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழகத்தில் வடசென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறும் எஸ்டிபிஐ, இனவெறியைப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்; கோயில் - தர்கா திருவிழாக்களுக்கும், பொங்கல் தீபாவளி பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லி டிஜிடல் பேனர் வைப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் முஸ்லிம் கட்சி அல்ல, எல்லா சமுதாயத்திற்கும் பொதுவான கட்சி என்பார்கள். ஆனால் தேர்தல் போட்டி என்று வந்தால் முஸ்லிம் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள். இவர்களின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் பேரம் பேசி, இவர்களுக்கு சீட் கிடைக்காததால் இப்போது சமுதாய வேஷம் தரித்துக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் கிடையாது. இவர்களை ஆதரிப்பதால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து, அது நரேந்திர மோடியின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளன. எனவே இந்தத் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லாத பாரதீய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி, முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

அதிமுக, திமுகவிலுள்ள முஸ்லிம் வாக்குகள் கணிசமாகப் பிரிந்தால் அது அங்கு போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு சாதகமாகவே அமையும். இது தெரிந்து, வேண்டுமென்றே பாரதீய ஜனதாவை வெற்றிபெற வைக்கும் நோக்கில் இவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

மேலும் இவர்கள் அதிகப்பட்சமாக பத்தாயிரம் வாக்குகள் வாங்கினாலும் அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. இதை வைத்து அடுத்த தேர்தல்களில் இவர்கள் திமுக, அதிமுகவுடன் பேரம் பேசுவதற்கு வேண்டுமானால் இந்த வாக்குகள் பயன்படும். சமுதாயத்திற்கு இதனால் கேடு தான் விளையும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பத்தாயிரம் வாக்குகள் பெற்ற மமக இதைத் தான் செய்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு வாக்களிப்பது பாரதீய ஜனதாவுக்கு நேரடியாக வாக்களிப்பதற்குச் சமம். நம்முடைய கைகளாலேயே நாசத்தைத் தேடிக் கொள்ளும் மோசமான செயல் இது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:29

இஸ்லாம் என்றாலே சமுதாயத்திற்கு நன்மையை நாடுவது தான்.

நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான்'' என்று கூறினார்கள். நாங்கள், "யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 57

நம்முடைய வாழ்வுரிமைக்கு வாக்களித்து, நம்முடைய சமுதாய நலனைக் காப்போம்; நாசத்தைத் தவிர்ப்போம்.
 நன்றி ஏகத்துவம்

Thursday, March 27, 2014

நரக நெருப்புக்கு ஆள் சேர்க்கும் தமுமுக!

நரக நெருப்புக்கு ஆள் சேர்க்கும் தமுமுக!

மக்களை நரகப்படுகுழிக்கு முன்னோற்றும் கழகக்காரர்கள்:

ஏகத்துவம் எங்களது உயிர் மூச்சு என்று சொன்ன கொள்கை (?) குன்றுகளின் இன்றைய நிலையை பாரீர்!

தமிழக முஸ்லிம்களை முன்னோற்றும் கழகம் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், இதுபோன்ற இணைவைப்பிற்கு தமிழக முஸ்லிம்களை அழைத்து, நரகத்திற்கு முன்னோற்றும் கழகமாகத்தான் செயல்படுகின்றனர்.
நாங்கள் தாங்க உண்மையான தவ்ஹீத், எப்படி தவ்ஹீத் பிரச்சாரம் செய்றோம் பார்த்தீங்களா?

Saturday, March 08, 2014

மானம் காக்கும் லட்சணம் இதுதானா? - ம.ம.க.வினரே சிந்திப்பீர்!

மானம் காக்கும் லட்சணம் இதுதானா? - ம.ம.க.வினரே சிந்திப்பீர்!

Thursday, March 06, 2014

சந்தனம் பூசி அடிக்கல் நாட்டும் தமுமுகவின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், பாஜகவினரோடு கேக் வெட்டும் தமுமுகவின் ஹாஜா கனி!

சந்தனம் பூசி அடிக்கல் நாட்டும் தமுமுகவின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், பாஜகவினரோடு கேக் வெட்டும் தமுமுகவின் ஹாஜா கனி!


Monday, February 03, 2014

தமுமுக இட ஒதுக்கீடு வாங்கி தந்தாகலாமே! - அதிரை கழக கண்மணிகளுக்கு அறைகூவல்!

தமுமுக இட ஒதுக்கீடு வாங்கி தந்தாகலாமே! - அதிரை கழக கண்மணிகளுக்கு அறைகூவல்!

தமுமுக தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தது என்று தடுமாறும் தமுமுகவின் கழக கண்மனிகள் சிலர் ஒரு இணையதளத்தில் உளறுவதாக அறிகிறோம்.

அந்த தமுமுக கண்மனிகளை நமது இணையதளத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தை பற்றி பேசவும், தமுமுகவின் துரோகங்களை பற்றி பேசவும் இங்கே அழைக்கிறோம்.

நமது இணையதளத்தில் கருத்துகளின் மூலம் உங்களின் வாதங்களை எடுத்து வைக்க தயாரா? கண்மனிகளே!

தமுமுக இடஒதுக்கீடு விஷயத்தில் எவ்வளவு துரோகம் செய்துள்ளது என்பதை அறிய கீழ்காணும் வீடியோவை பாருங்கள்.



என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!! சமுதாய மானம் காக்கும் தமுமுக MLA(?) ஜவாஹிருல்லாஹ்








Wednesday, January 22, 2014

ம.ம.கட்சி திமுகவுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?

ம.ம.கட்சி திமுகவுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?

முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, திருமணப்பதிவுச் சட்டம் ஆகிய இரண்டு காரணங்களைத்தான் அதன் தலைவர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காகவே கூட்டணி சேர்வார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தாலும், அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்களுக்காகவும் சமுதாய நன்மைக்காகவும்தான் இந்த கூட்டணி என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கானது அல்ல.

அதிமுகவில் நாற்பதிலும் தனித்து போட்டி என்று தெளிவுபடக் கூறி விட்டதால் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தாலும் நமக்கு சீட்டு கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். இதையே அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம். அல்லது பொருந்தக் கூடிய வேறு எதையாவது சொல்லி இருக்கலாம். கடுகளவும் நம்ப முடியாத ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் திமுக ஆட்சியில் 3.5 இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மமக கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. திமுகவுடன் இருந்த கூட்டணியைப் பயன்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக பல அடக்குமுறைகளையும் ஏவி விட்டது.

திமுக ஆட்சி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஏவிவிட்ட அக்கிரமங்கள் அனைத்தையும் மறந்து விட்டு மறுநாளே திமுக தலைவரை தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி அறிவிப்புக் கடிதம் கொடுத்தோம். மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று எழுதிக் கொடுத்தோம். அதன்படி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுக கூட்டணியை ஆதரித்தோம்.

திமுக ஆட்சி இட ஒதுக்கீடு அளித்ததற்காக தமுமுகவும் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தியது.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின்போது இவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை. இட ஒதுக்கீட்டுக்காக ஒரு அணியை ஆதரிப்பதுதான் இவர்களின் கொள்கையாக இருந்தால் 3.5 இட ஒதுக்கீடு கிடைத்ததற்காக அந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து இருக்க வேண்டும். கிடைத்த இட ஒதுக்கீட்டுக்கு நன்றி செலுத்தாமல் என்ன செய்தார்கள்.?

அதிமுகவில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இவர்கள் இதற்கு செய்த வாதப்படி அதிமுக இட ஒதுக்கீட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வாதிட்டு பிரச்சாரம் செய்து வந்ததை மறந்து விட்டு அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நோட்டு எவ்வளவு சீட்டு எவ்வளவு என்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் இட ஒதுக்கீடெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல என்று அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் ஒரு எம்பி சீட் கொடுக்கும் அளவுக்கு பலமானவர்கள் அல்ல என்று அதிமுகவுக்கு தெரிந்ததால் அதிமுகவும் சீட் கொடுக்க மறுத்து விட்டது.

இதன் பின்னர் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்கள். பல முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகள் ஆதரவோடு போட்டியிட்டு அவர்கள் வாங்கிய ஓட்டுக்கள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டார்கள். அதுவும் நாற்பது தொகுதிகளில் முஸ்லிம்கள் பலமாக உள்ள நான்கு தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிட்டும் பல அமைப்புகள் ஆதரித்தும் சுயேட்சை வேட்பாளர் வாங்கும் ஓட்டைத்தான் வாங்கினார்கள்.

அப்போது அது பிரச்சனை இல்லை. கருணாநிதி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு செய்த அடக்குமுறைகளையும், தமுமுக ஆளும் கூட்டணியில் இருப்பதையும் மறந்துவிட்டு திமுகவை நாம் ஆதரித்தோம் என்பதையும் இடஒதுக்கிடு கொடுத்து அந்த ஈரம் காய்வதற்குள் இட ஒதுக்கீடு கொடுத்த கட்சிக்கு எதிராக போட்டியிட்டதையும் நினைத்துப் பார்க்கும் மக்கள் மமக சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்வார்களா?

அடுத்து திருமணப் பதிவுச் சட்டத்தையும் காரணமாகக் கூறியுள்ளனர். திருமணப்பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களைப் பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் அதை அதிமுக அரசு சரி செய்யவில்லை என்ற காரணமும் பொய்யான காரணமே.

திமுக ஆட்சியில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் இது குறித்து பல முஸ்லிம் அமைப்புகள் முறையிட்டன. தமுமுகவும் அதில் அடங்கி இருந்தது. பல முறை சந்தித்து முறையிட்டும் திமுக ஆட்சி அதை சரி செய்யவில்லை. அதுபோல் அதிமுகவும் செய்யவில்லை.

இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து பல ஆண்டுகள் இவர்கள் கோரிக்கை வைத்தும் சந்திப்புகள் நடத்தியும் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்தக் காரணத்துக்காக திமுகவுக்கு போய்விட்டோம் என்று சொல்வதை மக்கள் எப்படி நம்புவார்கள் என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

எந்தப் பக்கம் சீட்டு கிடைக்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து கொள்ளும் உன்னதமான கொள்கைக்காகவே அணி மாற்றம் என்பதில் சந்தேகமில்லை.

Sunday, December 01, 2013

சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற தமுமுக, மமக - சாக்கடையில் நீச்சல் அடிக்கும் காட்சி!

சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற தமுமுக, மமக - சாக்கடையில் நீச்சல் அடிக்கும் காட்சி!

தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர். அரசியல் சாக்கடையாச்சே என்று சொன்ன போது, அரசியல் சாக்கடையாக இருந்தால் என்ன? அதை நாங்கள் சுத்தம் செய்வோம் என்றார்கள். அரசியலுக்கு சென்றதிலிருந்து இவர்கள் அகற்றிய அசுத்தங்களை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம்

அதில் தொடர்ச்சியாக, மம கட்சியின் எம்எல்ஏ அஸ்லம் பாஷா, பூஜை புணஸ்காரத்துடன் தொடங்கப்படும் நிகழ்ச்சியை ஒரு பெண்ணோடு ஒட்டி நின்னு தொடக்கி வைக்கிறார். இவர்களை தவ்ஹீத்வாதிகள் என்று நம்பும் ஏமாளிகள் இவர்களை புரிந்து கொள்ளுங்கள். தமுமுக தவ்ஹீத் இயக்கம் என்று ஏமாற்றும் கள்ள தவ்ஹீத்வாதிகள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

Sunday, July 14, 2013

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா? தமுமுக போராட்டத்துக்குத் தடை போட தவ்ஹீத் ஜமாஅத்துதான் காரணம் என்றும், வெகுண்டு எழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கதிகலங்கிப் போயுள்ளது என்றும் முகநூல்களில் பரப்புகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதா அவர்களை வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. சட்டமன்றத்தில் பேசும்போதெல்லாம், இவர்கள் அடித்த ஜால்ராவைப்போல் ஜால்ரா அடிக்கவில்லை. மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து கூறிக் கொண்டிருக்கவில்லை. அப்படியிருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதைக்கேட்டு முதல்வர் முடிவு செய்கிறார் என்று இவர்கள் சொல்வது உண்மையென்றால், இவர்கள் தங்களையும் அறியாமல் ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். 

ஜால்ரா அடிப்பவர்களைவிட தட்டிக்கேட்பவர்களுக்குத்தான் அல்லாஹ் மரியாதையை ஏற்படுத்துவான் என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. அதையாவது புரிந்துகொண்டு தவ்ஹீத் ஜமாஅத் போல் நடக்க முயற்சித்து இவர்கள் சொல்வதையும் ஜெயலலிதா கேட்பது போல் நடந்து கொள்ளட்டும். 

ஜெயலலிதா அவர்கள் நம்மைக்கேட்டு எந்த முடிவையும் எடுக்கும் அளவுக்கு நமக்கு அவருடன் நெருக்கம் ஏதுமில்லை. பிற இயக்கங்கள் குறித்து எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று இரகசியக் கோரிக்கை வைப்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிமுறை அல்ல. 

பொதுவாக சென்னையில் பேரணி நடத்துவது என்றால் போக்குவரத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில்தான் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இது போல் யார் பேரணி நடத்தினாலும் தடையை மீறி கைதாவதற்கு உடன்பட்டுத் தான் நடத்த வேண்டும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீதி மன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற அறிவுகூட இவர்களுக்கு இருக்கவில்லை. 

நீதிமன்றத்தை அணுகாமல் காவல் துறையிடம் பேசி நாங்கள் தடையை மீறுகிறோம் என்று சொன்னால் பேச்சுவார்த்தை மூலம் ஒரு இடத்தில் கூடச் செய்து அங்கே கைது செய்வார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. 

அதைச் செய்யாமல் உயர்நீதி மன்றத்தை இவர்கள் அணுகியது மடத்தனமானது. உயர்நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற சாதாரண விஷயம் கூட தெரியாமல் இவர்கள் என்ன இயக்கம் நடத்துகிறார்கள்? கடுகளவு அறிவுள்ளவனைக் கேட்டாலும் இவர்கள் கேட்ட இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறிவிடுவார். 

நீதிமன்றம் தடையை உறுதி செய்யும் நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள். 

உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னர் காவல் துறையினர் பேரணிக்காக கூடாமல் தடுத்து ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீதி மன்றத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இந்த நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள். 

நீதிமன்றம் தலையிடும் வரைதான் புரிந்துணர்வு அடிப்படையில் காவல்துறை செயல்பட முடியும். நீதிமன்றம் தலையிட்ட பின்னர் நீதிமன்றத்துக்கு பதில் சொல்வதற்கேற்பவே காவல் துறை நடக்க முடியும். 

இயக்கம் நடத்தக் கூடியவர்களுக்கு அறிவு இல்லாவிட்டால் அடுத்தவர் மீது பழி போடுவது என்ன நியாயம்? 

வெகுண்டெழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் அரண்டு போய்விட்டது என்று இவர்கள் கூறுவது தான் உச்சகட்ட காமெடியாக உள்ளது. 

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பெரிய பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதைவிடக் குறைவான மக்களையே இவர்களால் திரட்ட முடிந்தது என்பதை அறியலாம். 

தவ்ஹீத் ஜமாஅத் பலவீனமாக உள்ள மாவட்டம் கரூர் மாவட்டம். காவல்துறையின் காட்டு தர்பாரைக் கண்டித்து கண்டனப் போராட்டம் சென்ற வாரம் நடத்தப்பட்டது. முடிவு எடுத்து இரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். எவ்வித விளம்பரமும் உழைப்பும் இல்லாமல் இரு நாட்களில் பலவீனமான மாவட்டம் கூட்டிய கூட்டத்தில் பாதியைக்கூட இவர்கள் மாநில அளவில் கூட்ட முடியவில்லை எனும் போது நாம் ஏன் கதி கலங்க வேண்டும். 

சில ஊடகங்கள் (சன் டிவி உட்பட) நூற்றுக் கணக்கானோர் கைது என்று குறிப்பிட்டனர். அதிகபட்சமாக சுமார் 3000 பேர்கள் என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அந்தக் கூட்டத்தின் வீடியோவை நிறுத்தி நிறுத்தி எண்ணிப் பார்த்தால் மூவாயிரம் பேருக்குள் தேறுவார்கள். 

பல மாதங்கள் உழைத்து இலட்சக்கணக்கில் செலவு செய்த பின்னரும், நாற்பது மாவட்டங்களுக்கு 3000 பேர்கள் என்றால், மாவட்டத்திற்கு 75 பேர் வீதம் வந்துள்ளனர். 

சமுதாயத்தின் முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டமாக இருந்தும், கடுமையாக உழைத்தும், இதற்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஊட்டியும், மாவட்டத்திற்கு 75 பேர் வீதம்தான் வந்துள்ளனர் என்றால் அடித்தளம் அறவே சரிந்து விட்டதை அவர்கள் இதிலிருந்து உணர்வதற்கான எச்சரிக்கை மணியாகவே இது அமைந்துள்ளது. 

இவர்கள் நீதி மன்றத்தை அணுகியது இதனால் கிடைக்கும் பரபரப்பிற்கும், விளம்பரத்திற்கும் உதவலாம். ஒரு நாள் செய்தியோடு இது முடிந்துவிடும். 

கட்டப் பஞ்சாயத்தைக் கைவிட்டு அடிமைச் சேவகம் செய்யும் போக்கில் இருந்து விடுபட்டு, 1995ல் காணப்பட்ட அர்ப்பணிப்பு மனப்பான்மையை நோக்கி இவர்கள் திரும்பாவிட்டால், இருக்கும் சிலரையும் இழப்பார்கள். இதைத்தான் இந்தக்கூட்டத்திலிருந்து இவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். 

உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் தான் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Wednesday, June 26, 2013

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?


அரசியல்வாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்குச் சொல்லும் காரணம் ஒருகாலத்திலும் உண்மையானதாக இருக்காது.

எங்களின் ஆதாயத்துக்கு எது சரிப்பட்டு வருமோ, அந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அவர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.

இவர்கள் சொல்லும் போலியான மற்ற காரணங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றாலும் இந்த நடவடிக்கை சமுதாயத்துக்காக அல்லது நாட்டு மக்களுக்காக அல்லது தமிழுக்காக என்று எதையாவது வெட்கமில்லாமல் சொல்வது அரசியல்வாதிகளின் வாடிக்கையாக இருக்கிறது.

மமகட்சி என்பதும் ஒரு அரசியல் கட்சியாக இருப்பதால், பல வகைகளில் கடைசித் தரத்தில் உள்ள கட்சி என்பதால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்கிறார்கள்.

இடஒதுக்கீட்டிற்காக ஆதரிப்பது என்றால் கருணாநிதி தமிழக முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ இருக்கிறாரா? அந்த அடிப்படையில் அவர் வாக்குறுதி கொடுத்தால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்பதில்  கொஞ்சமாவது அர்த்தமிருக்கும். மத்திய அரசில் இப்போது அங்கம் வகிக்காத கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக என்ன செய்வார் என்பதற்காக ஆதரித்தார்கள்?

மத்திய அரசை வற்புறுத்துவதற்காக ஆதரித்தார்கள் என்றால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போது கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக கடிதம் எழுதினாரே, அப்போது திமுகவை ஆதரிக்கவில்லையே ஏன்?
இரண்டாண்டுகளுக்கும் மேலாக அதிமுகவினரைவிட அதிகமாக ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்துவிட்டு ஒரே நாளில் அந்தர்பல்டி அடிக்கும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்தினான் என்று தான் நமக்குத் தெரிகிறது.

34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றால்தான் ஒருவர் ராஜ்யசபா உறுப்பினர் ஆக முடியும். காலியான 6 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற முடியாது. அதிமுகவிடம் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு ராஜ்யசபா  எம்பிக்கு 34 வாக்குகள் வீதம் நான்கு பேரை அதிமுக வெற்றி பெறச் செய்வதற்கு 136 உறுப்பினர்கள் போதும். ஆனால் மேலதிகமாக 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஐந்து பேரை தேர்வு செய்ய அதிமுக விரும்பினால், 170 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும். ஆனால் அதிமுகவிடம் 150 உறுப்பினர்கள் உள்ளதால் மேலும் 20 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். பிறகட்சிகளின் ஆதரவைப் பெற்று ஐந்தாவது உறுப்பினரையும் தேர்வு செய்வது அதிமுகவுக்குச் சிரமமானதல்ல.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் மமகட்சி, புதிய தமிழகம், சரத்குமார், தமிழரசன், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட யாருடைய ஆதரவும் அதிமுகவுக்குத் தேவைப்படாது. நான்கு பேரை தேர்வு செய்வதற்குத் தேவையான உறுப்பினர்களைவிட மேலதிகமாக 14 உறுப்பினர்கள் இக்கட்சியிடம் உள்ளனர்.

நான்கு பேர் போக மீதமுள்ள வாக்குகளை தங்களுக்குத் தரவேண்டும்  என்ற  கோரிக்கைகளை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிமுகவிடம் வைத்தனர். டெல்லி சென்ற ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தினர்.

அதிமுக ஐந்து பேரை நிறுத்தினால், பற்றாக்குறையான வாக்குகளுக்காக நம்மை அணுகுவார்கள். தகுந்த முறையில் பேரம் பேசலாம், கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டுக் கொடுத்தால் அதிமுகவுக்கு நம் தயவு தேவைப்படாது என்று மம கட்சியினர் கதி கலங்கி நின்றார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்த பின்னரும் ஜெயலலிதா ஐந்து வேட்பாளர்களை நிறுத்தினார். மமகட்சி வட்டாரம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது.

அதிமுக அணுகியது, திமுக அணுகியது என்றவாறு செய்திகளைக் கொடுத்தார்கள். 

ஜெயலலிதாவிடமிருந்து விரைவில் அழைப்பு வரும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். இரண்டு  நாட்கள்கூட இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஜெயலலிதா நிறுத்திய ஐவரில் ஒருவரை வாபஸ் பெற்று நால்வர் மட்டுமே அதிமுக வேட்பாளர் என்று முடிவை மாற்றினார். தனது எஞ்சிய வாக்குகளை கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கப்போவதாகவும் அறிவித்தார்.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் தனது ஓட்டுக்கள் மூலமாகவே வென்றுவிடுவாரே? அதைவிட அதிகமாகவும் அவரிடம்  ஓட்டுக்கள் உள்ளதே? இனிமேல் நம்மைச் சீண்ட மாட்டார்களே? 
கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜெயலலிதாவின் ஆதரவு கிடைத்தால், கம்யூனிஸ்டுகளிடம் என்ன பேரம் பேச முடியும் என்று குழம்பிப் போனார்கள்.

தனது குடும்பத்தினருக்காக மட்டுமே கட்சி நடத்தும் கருணாநிதிக்கு மட்டுமே இவர்களின் ஆதரவு தேவையாக இருந்தது. மகளை வெற்றி பெறச் செய்வதற்காக அவர் எது வேண்டுமானாலும் செய்வார். எந்த வாக்குறுதியையும் கொடுப்பார். (பின்னர் அல்வாவும் கொடுப்பார்)

ஒரு பொருள் பலருக்கும் தேவைப்படும் போதுதான் எதையும்  நல்ல விலைக்கு விற்க முடியும். ஒரேயொரு நுகர்வோருக்கு மட்டுமே விற்பது என்றால் பெரிய அளவில் பேரம் பேச இயலாது. ஏதோ வந்த வரைக்கும் லாபம் என்ற நிலைக்கு அவர்களின் ஓட்டு மதிப்பை அல்லாஹ் குறைத்து விட்டான்.
ஜெயலலிதா ஐந்து பேரை நிறுத்துவதாக அறிவித்து, ஐந்து பேரை வெற்றி பெற வைக்க முடியும் என்ற நிலையிலும் ஜெயலலிதா அதைச் செய்யவில்லை.

பிறர் தயவால் ஜெயலலிதா ஜெயித்தார் என்ற விமர்சனம்தான் ஜெயலலிதாவை அதிகம் கோபப்படுத்தும் என்பது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

காங்கிரஸோடு கூட்டணி வைத்து அவர் ஜெயித்தபின், எங்களால்தான் அதிமுக ஜெயித்தது என்று காங்கிரஸ் சொன்னபோது சோனியாவை அவரது பூர்வீகப் பெயரைச் சொல்லி கிழிகிழி என்று ஜெயலலிதா கிழித்தார்.

தேமுதிகவுடன் கூட்டணி வைத்து ஜெயித்த ஜெயலலிதாவுக்கும், தேமுதிகவுக்கும் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாமல் இருந்தது. தேமுதிக மூலம்தான் அவர் ஜெயித்தார் என்ற பிரச்சாரம் காரணமாகத்தான் அக்கட்சியை பிரதான எதிரியாக ஆக்கினார்.

பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை என்னால்தான் நீ ஜெயித்தாய் என்று இருவரும் சொல்லிக் கொள்ள முடியும். வாக்களித்தவர்கள் யாருக்காக வாக்களித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. இவரது வாக்கு அவருக்கும் அவரது வாக்கு இவருக்கும் பயன் பட்டிருக்கலாம்.

ஆனால் ராஜ்யசபா தேர்தல் என்பது சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவதாகும். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற கம்யூனிஸ்டுகள் உதவினாலும், தங்களது தயவில்தான் அதிமுக வென்றது எனக்கூறினால் அதை மறுக்க இயலாது. எங்கள் ஆதரவில்தான் அதிமுக வென்றது என மமகட்சியும் கூறலாம். மமகட்சியின் இருவர் வாக்களித்து இப்படிக் கூறினால் ஜெயலலிதாவால் அதை மறுக்க இயலாது.

பிறர் தயவில் வெற்றி பெற்றுள்ளதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாத  ஜெயலலிதா ஒரு ராஜ்யசபா எம்.பி.க்காக அல்லரை சில்லரைகளிடம் ஏன் கெஞ்ச வேண்டும் என்ற ரீதியில்தான் முடிவு எடுப்பார்.
மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடுவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்.பி.சீட் கேட்டார்கள் என்றால் இது ரொம்ப ஓவர் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

ஒருவன் 100 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கச் செல்லும்போது இரண்டு ரூபாய் குறைகிறது. அருகில் இருந்த ஒருவர் நான் அதைத் தருகிறேன் என்று கூறி இரண்டு ரூபாயைத் தருகிறார். இதனால் அந்தப் பொருளை அவரால் வாங்க முடிகிறது. மறுநாள் அதைச் சொல்லிக்காட்டி இந்தப் பொருள் வாங்க உனக்கு நான்தான் உதவினேன். எனவே என்னிடம் 2 ரூபாய் உள்ளது. நீ 98 ரூபாய் போட்டு இதை எனக்கு வாங்கித் தரலாமே என்று கேட்க  முடியுமா?

ராஜ்யசபாவிற்கு, இரண்டு ஓட்டைப் போட்டுவிட்டு ஒரு எம்.பி. (34 எம்.எல்.ஏ.க்கள் மதிப்புடையது) கேட்டால் இது சரிப்பட்டு வராது. இப்படிப் பேரம் பேசும் நிலை சில்லரைக் கட்சிகளுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக  ஜெயலலிதா இம்முடிவை எடுத்தார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு தனது 15 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுக்களைப் போட்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டுச் சேர நேர்ந்தால் அவர்களின்  பேரம் பேசும் பலத்தை வெகுவாகக் குறைத்துவிட்டார்.

கருணாநிதிக்கு இது மகளின் பிரச்சினை என்பதால், மமகட்சிக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கலாம். இரண்டு ஓட்டிற்காக இரண்டு எம்.பி.க்கள் சீட்டு தருவதாகவும் சொல்லியிருக்கலாம். என்ன பேசப்பட்டது என்பது பேசியவர்களுக்குத்தான் தெரியும்.

இவர்கள் என்ன வாங்கியிருந்தாலும், ஜெயலலிதாவின் அதிரடி முடிவால் பெரிய அளவில் பேரம் பேசும் வாய்ப்பை அல்லாஹ் பறித்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

Wednesday, April 24, 2013

தமுமுக தேர்தலில் போட்டியிடாது! அதிரடி முடிவு!! (வீடியோ)

தமுமுக தேர்தலில் போட்டியிடாது! அதிரடி முடிவு!! 

தலைப்பை பார்த்து பயந்துவிட வேண்டாம். தமுமுக என்ற இயக்கம் தேர்தலில் போட்டியிடாது, வக்ப் வாரியம் போன்றவற்றில் கூட எந்த பதவியும் வாங்கக்கூடாது என்பது தமுமுகவின் கொள்கையாக இருந்தது. சென்னை வாழ்வுரிமை மாநாட்டிலும் தஞ்சை மாநாட்டிலும் வந்த கூட்டத்தை கண்டு ஆணவம் தலைக்கு ஏறி, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்தது தமுமுக. தேர்தலில் நின்று சாதித்துவிடுவோம் என்று சொன்னவர்கள் அம்மாவிற்கும் அய்யாவிற்கும் ஜால்ரா தட்டி காலத்தை கடத்துகிறார்கள்.

கூட்டத்தை கண்டு தான் அரசியல் ஆசை வந்ததா? என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கும் போது ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மென்று விழுங்குவதையும் அசடு வழிவதையும் கீழ்காணும் வீடியோவில் கண்டு மகிழுங்கள்.

பிஜே அவர்கள் ஆரம்பம் முதல் எந்த நிலைபாட்டில் இருந்தாரோ அதே நிலைபாட்டில் நிலைத்து இருப்பதையும் பாருங்கள்.

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்றவர்கள், அத்தோடு கலந்துவிட்டதை யாரும் மறுக்க மாட்டார்கள். பொய்யர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

Wednesday, March 20, 2013

விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!

விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!

தமுமுக போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் விடுதலை புலிகளை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து வருகின்றனர். விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் கொடூரங்களையும் பாருங்கள்...

சமுதாய துரோகிகளை அடையாளம் காணுங்கள்......

இலங்கை காத்தான்குடி படுகொலை



இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்து, சொந்த மண்மை விட்டு முஸ்லிம்களை துரத்திய புலிகள் என்ற கொடுர மிருகங்கள்


 [மேற்காணும் வீடியோக்களில் வரும் இசைக்கும் நமக்கும் சம்பந்தம இல்லை. வீடியோவை உருவாக்கியவர்களால் இசை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க]

விடுதலைப்புலிகளை தமிழகத்தில் தைரியமாக தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் எதிர்க்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

புலிகளின் விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?


விடுதலை புலியை ஆதரிக்க மாட்டோம்


விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 1



விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 2


Thursday, November 15, 2012

மம கட்சியின் சமுதாய துரோகங்கள் (வீடியோ)


தவ்ஹீத் எங்களுக்கு தடை. நாங்கள் சாக்கடையை (அரசியலை) சுத்தம் செய்யப்போகிறோம் என்று கூறி, சாக்கடையில் தினம் தினம் குளிக்கும் மம கட்சியின் சமுதாய துரோகங்களை அறிந்து கொள்ள கீழ்காணும் வீடியோக்களை பார்வையிடுங்கள்.

சமீபத்தில் மருத்துவ துறையில் முஸ்லிம்களுக்கு துரோகம் நடந்ததை சப்பை கட்டுகட்டி கேவலப்பட்ட மம கட்சியின் பரிதாப நிலையை பாருங்கள்.

கேள்வி:

பத்திரிக்கை செய்திகளை வைத்தும், நமது சமுதாயத்தை சார்ந்த ஒரு மருத்துவ மாணவர் எனக்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்தாகிவிட்டது. எனக்கு கிடைக்கவில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு புகார் எழுதியதின் அடிப்படையிலும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தியது. தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அதற்கு அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். அரசாங்கமே அமைதி காக்கும் போது, இவர்கள் முந்திக்கொண்டு வந்து துரோகம் நடக்கவில்லை என்று வக்காலத்து வாங்குவது ஏன்? இது தான் சமுதாயத்தின் மானம் காக்கும் லட்சணமோ?

மம கட்சியின் துரோக வரலாறு

Sunday, September 09, 2012

பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற தமுமுக - மம கட்சியினர்! தடுத்து நிறுத்திய காவல்துறை!!


சமுதாய மக்களின் பணத்தில் வாங்கிய ஆம்புலன்ஸ், சமுதாய சொத்தை ஆக்கிரமிக்க அழகாக பயன்படுகிறது.
தேர்தலில் நிற்க மாட்டோம் என்று மக்களிடம் சத்தியம் செய்த தமுமுகவினர், தவ்ஹீத் எங்களுக்கு தடை என்று அரசியலுக்கு போய், சாக்கடையை தூய்மைப்படுத்த போகிறோம் என்று சாக்கடையாகவே மாறிப்போன தமுமுகவினர், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அராஜகம் என்று தங்களின் தூய்மை முகத்தை காட்டி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டிணம் செக்கடிபள்ளிக்கு சொந்தமான செக்கடிமேட்டில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, காவல்துறையால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாயத்து தேர்தலில் சங்கம் நிறுத்திய வேட்பாளர்களை எங்கள் வேட்பாளர் என்று படம்காட்டி கேவலப்பட்டது. இவர்கள் நிறுத்திய வேட்பாளர்கள் பத்து ஓட்டுகள்கூட  வாங்காமல், இவர்களின் உண்மை பலத்தை காட்டியது என கேவலங்கள் பல வந்தாலும், மீண்டும் கேவலப்பட வேண்டும் என்ற ஆசையில் இப்போது வசமாக சிக்கியருக்கிறார்கள்.

இவர்கள் தமிழகம் முழுவதும் இப்போது செய்யும் ஒரே மகத்தான (?) சேவை.  ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்து படம் காட்டுவது தான். கருணாநிதியிடம் இரண்டு ஆம்புலன்சை  வாங்கிவிட்டு, பின்னர் இவர்களுக்கு சீட்டு கொடுக்காத போது அவரை துரோகி என்றார்கள் (ஆம்புலன்ஸ் வாங்கும் போது அவர் தியாகி). அதிரையிலும் இவர்கள் படம் காட்ட ஒரு ஆம்புலன்சை வாங்கி வைத்துள்ளார்கள்.


இந்த ஆம்புலன்சை  நிறுத்தி வைக்க வேண்டும் எங்களுக்கு செக்கடிமேட்டில் இடம் வேண்டும் என்று இவர்கள் செக்கடிப்பள்ளி நிர்வாகத்தை அணுகியுள்ளார்கள். இதற்கு பள்ளி நிர்வாகிகள், அரசியல் கட்சியாக உள்ள உங்களுக்கு இடம் தந்தால், ஒவ்வோரு இயக்கத்தவர்களும் இடம் கேட்பார்கள் என்று இவர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டார்கள். இவர்கள் ஆம்புலன்சை  நிறுத்த ஷிஃபா மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்ற இடங்கள் இருக்கும் போது, இப்படி தெருவுக்குள் தங்களின் ஆம்புலன்சை நிறுத்தி படம் காட்ட வேண்டும், ஆம்புலன்சுக்கு இடம் என்று சொல்லி வாங்கி, பின்னர் அதை கட்சி அலுவலகமாக பயன்படுத்த வேண்டும் என்ற இவர்களின் உண்மை நோக்கத்தை செக்கடிப்பள்ளி நிர்வாகிகள் கட்சிதமாக புரிந்துகொண்டார்கள்.



பள்ளி நிர்வாகிகள் அனுமதி மறுத்தவுடன், இவர்கள் கட்சியின் உண்மை அராஜகத்தை காட்டும் முகமாக, பள்ளி நிர்வாகிகளின் நல்ல முடிவை ஏற்காமல், நேற்று இவர்கள் செக்கடிமேட்டில் இவர்களின் ஆம்புலன்சை நிறுத்த இரும்பு கெட்டகை போட ஆரம்பித்தனர். தகவல் கிடைத்தவுடன் செக்கடிப்பள்ளி நிர்வாகிகள் காவல்துறையை அணுகிணார்கள். காவல்துறை வந்து இவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தடை போட்டு, இவர்களை விரட்டி அடித்தது. அல்ஹம்துலில்லாஹ்.
ஏனப்பா பள்ளிவாசல் சொத்தை அபகரிக்கிறீர்கள் என்று இவர்களிடம் கேட்டபோது, அது புறம்போக்கு நிலம், அதான் ஆட்டையை போட பார்க்கிறோம் என்றார்களாம் இந்த லஞ்சம் வாங்காத (?) ஆக்கிரமிப்பாளர்கள்.
என்றைக்கு இவர்கள் அரசியலை சுத்தம் செய்ய புறப்பட்டார்களோ!, அன்று முதல் ஆக்கிரமிப்பும் அராஜகமும் இவர்களின் அன்றாட வேலையாக ஆகிவிட்டது. சமீபத்தில் உணர்வு அலுவலகத்தை, தவ்ஹீத் ஜமாஅத்தினர் தர்பியா நிகழச்சிக்காக சென்று இருந்த போது, பூட்டியிருந்த உணர்வு அலுவலகத்தை உடைத்து, உள்ளே புகுந்து மோடியின் சகோதரன் ஜால்ரா மன்னர் எம்எல்ஏ அலுவலகம் என்று எழுதி தங்களின் ஆக்கிரமிப்பு செயலை செய்தார்கள். பின்னர், காவல்துறை வந்து அரை மணி நேரத்தில் உணர்வு அலுவலகத்தின் சாவி எங்களுக்கு வரவில்லையென்றால், டங்குவார் கிழிந்துவிடும் என்றவுடன், இந்த வீர பரம்பறை கூட்டம் சாவியை ஒப்படைத்துவிட்டு ஓட்டம் எடுத்தது.

வக்ப் வாரியத்தில் ஆட்டை போட்டது போதாது என்று, இப்போது அதிராம்பட்டிணத்தில் பட்ட பகலில் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டு மூக்குடைப்பட்டுள்ளனர்.  பிஜேபியுடன் சேர்ந்து கோயில் மீட்பு போராட்டம் நடத்திய இவர்களிடம் முஸ்லிம் விரோத செயலை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?


இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும், ஹாமீத் பக்ரியை தூக்கி விசிய நேரத்தில்,தவ்ஹீத் ஜமாத்துடன்  ஒன்றிணைந்து இருந்த தமுமுகவை விட்டு ஓட்டம் எடுத்துவிட்டு, இப்போது இந்த தமுமுக வில்  சரணாகதி  அடைந்துயிருக்கும் அக்குமார்க் (?) தவ்ஹீத்வாதிகளும் சிந்திக்க வேண்டும்.

Tuesday, July 17, 2012

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி (வீடியோ)!

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி (வீடியோ)!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணோசணின் கையை பிடித்து கோவிலை பாதுகாக்கும் மானம்காக்கும் (மானம் போக்கும்) சமுதாய MLA.



Wednesday, July 11, 2012

என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!! சமுதாய மானம் காக்கும் MLA (?)


என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!!  சமுதாய மானம் காக்கும் MLA (?)

Sunday, July 08, 2012

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி!‎


அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதிலிருந்து விலகி, பா.ஜ.கவின் ‎சிறுபான்மைப் பிரிவாக மாறி அவர்களுடன் கூட்டணி வைக்க திட்டமா?‎ – வெளிவராத உண்மைகள்!!‎

மாமல்லபுரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தலசயன பெருமாள் கோயில். ‎இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் முடிவை தொல்லியல் துறை ‎எடுத்துள்ளது. இந்தக் கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. ‎அவ்வாறு அறிவித்தால் அந்தக் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைகள் தடைபட்டுவிடும்; ‎அதுமட்டுமல்லாமல் அங்கு பூஜை செய்ய வரக்கூடிய பக்தர்கள் இதனால் ‎பாதிக்கப்படுவார்கள் என்று சங்பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.‎

ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய ‎அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் ‎இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை ‎புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன ‎பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் ‎கொண்டுவர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி ‎உள்ளது. இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள ‎முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது” என்று இந்த கோவிலுக்கு ‎ஆதரவாக கண்டன அறிக்கை விட்டு வருகின்றனர்.‎

பக்தியின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் அறிக்கை விடுவது மேலோட்டமாக ‎அணுகக் கூடிய விஷயம் அல்ல, பழமையான ஆலயங்களை பழமையான ‎கட்டடங்களைப் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் ‎சட்டத்தின்படி இவ்வளவு காலம் கடந்து விட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‎கட்டடங்களை தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தின் படியே ‎ஏராளமான கோவில்களும் சில பள்ளிவாசல்களும் இன்னும் பல புராதனக் ‎கட்டடங்களும் மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி ‎வருகின்றன.‎

இப்படி ஒரு சட்டம் இருப்பது நமக்கு உடன்பாடானது அல்ல. பழைய கட்டடங்களை ‎பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மக்களின் கோடான கோடி ரூபாய்கள் பாழாக்கப்படு ‎கின்றன. பழைய கட்டடங்களை இடிப்பது அல்லது அதுவாக விழும் வரை ‎விட்டுவிடுவதுதான் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு நல்லது. இதுதான் ‎அறிவுப்பூர்வமானது.‎

ஆனால் இந்தச் சட்டம் இருக்கும் வரை அதற்கேற்ப நடவடிக்கை இருந்து ‎கொண்டுதான் இருக்கும்.‎
இந்து பக்தர்கள் போராடுவதாக இருந்தால் அந்த சட்டத்தை நீக்கக் கோரி போராட்டம் ‎நடத்துவதை விட்டு விட்டு சட்டப்படி ஒரு கோயிலை புராதனச் சின்னமாக ‎அறிவிப்பதை எதிர்ப்பது பயனற்றதாகும். ஆனாலும் அவர்கள் பக்தியின் பெயரால் ‎இப்படி செய்வதில் நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை.‎

ஆனால் வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலை தொல்பொருள் துறை எடுத்துக் ‎கொண்டுள்ளது. அது போல் அதே கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ‎ஆலயத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.‎

ஆனால் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப் ‎படுகிறது. ஆனால் பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. இதை எதிர்த்து ‎தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியுள்ளன. ‎தமுமுகவும் போராட்டம் நடத்தியது. அப்போது இந்துத்துவா இயக்கங்கள் ‎பள்ளிவாசலை வழிபாட்டுக்கு திறந்து விடக் கூடாது என்று எதிர்ப்போராட்டம் ‎நடத்தின.‎

அப்படி இருக்கும் போது அதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் மானம் சூடு ‎சொரணை அனைத்தையும் வந்த விலைக்கு விற்ற ம.ம.கட்சி ஜால்ரா மன்னன் செய்த ‎வேலை ம.ம.கட்சியினருக்கே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ‎அடிக்கும் ஜால்ரா பற்றி மாபெரும் மக்கள் வெள்ளத்தில் தோலுரித்துக் காட்டப்பட்ட ‎பின்னர் சூடு சொரணை இல்லாதவனை அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று ‎ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பிறகும் ஜால்ரா தலைவருக்கு ரோஷம் வந்து கொஞ்சம் ‎சமுதாய உணர்வோடு நடப்பார் என்று ம.ம.கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.‎

சங்பரிவாரத்துடன் இணைந்து கொண்டு ஜால்ரா மன்னன் ஜவாஹிருல்லாவும் ‎களத்தில் குதித்து தான் ஒரு மானம் கெட்ட ஜென்மம் என்பதை நிரூபித்துக் காட்டி ‎விட்டார்.‎

மேலே உள்ள புகைப்படத்தில் பிஜேபியின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் ‎கையோடு கைகோர்த்து போஸ் கொடுப்பது யார் என்று தெரிகின்றதா?‎

அட! நம்ம ம.ம.கட்சியின் வாத்தியார்தாங்க. இப்போது பிஜேபியுடன் புதிய கூட்டணி ‎அமைத்துள்ளார்கள் போலும்.‎
கடந்த 28.06.12 அன்று தலசயன பெருமாள் கோயிலை தொல்லியல்துறை ‎கையகப்படுத்தக்கூடாது என்று கூறி அதைக் கண்டித்து நடைபெற்ற தொடர் முழக்க ‎போராட்டத்தில்தான் இந்த கேவலமான இழிசெயலை இவர் செய்துள்ளார். ‎இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுடன் ‎அவர்களது கொள்கை நிலைபெற வேண்டும் என்பதற்காக கூட்டுச் சேர்ந்து ‎கைகோர்த்து இவர்கள் போஸ் கொடுக்கின்றார்கள் என்றால் இந்த சமுதாய ‎துரோகிகளை என்ன செய்வது?‎

நரேந்திர மோடி வந்து இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் ‎அவனுடனும் இந்த சமுதாய துரோகி கைகோர்த்து இருப்பார் என்பதுதான் மறுக்க ‎முடியாத உண்மை. அந்த அளவிற்கு இவர்களுக்கு பதவி சுகம் தேவைப்படுகின்றது.‎

வாத்தியார் பா.ஜ.க வின் பினாமியா?

பா.ஜ.க விடுக்கும் கோரிக்கையை நமது மானம்கெட்ட வாத்தியார் ஏன் வழிமொழிய ‎வேண்டும். அவர் என்ன பா.ஜ.க வின் பினாமியா?. அநேகமாக வரக்கூடிய ‎பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேசிய நீரோடையில் ‎கலக்க திட்டம் தீட்டியுள்ளார்களோ என்னவோ தெரியவில்லை.‎

அம்மாவை குளிர்விக்க எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்யத் தயார் :‎

ஒருவேளை அம்மாவுக்கு ஜால்ரா தட்டும் இந்த ஜால்ரா மன்னன், பா.ஜ,கவுடன் நாம் ‎நெருங்கினால்தான் அம்மா அவர்கள் மனம் குளிரும். அதனால் பா.ஜ.கவுடன் நாம் ‎நெருக்கமாகிவிடலாம் என்று களத்தில் குதித்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.‎

இப்படிக் கேவலப்படும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான்.‎

இவர்களது இந்த செய்கையின் வாயிலாக எந்த அளவிற்கு கேவலாமான ‎வேலையையும் தாங்கள் செய்யத் தயார் என்பதைத்தான் இந்த சமுதாய துரோகிகள் ‎அடையாளம் காட்டியுள்ளனர்.‎

கொள்கைதான் இல்லை. மற்றவர்கள் திட்டுகின்றார்களே என்ற வெட்க ‎உணர்விலாவது இது போன்ற கேடுகெட்ட செயல்களை செய்யாமல் ‎தவிர்க்கலாமல்லவா? அந்த வெட்க உணர்வையும் இவர் உதிர்த்து விட்டார் என்றால் ‎இனிமேல் இவரை எதைச் சொல்லி, என்ன சொல்லி திட்டுவது? எருமை மாட்டின் மேல் ‎மழை பெய்தது என்ற பழமொழிதான் இங்கு ஞாபகம் வருகின்றது.‎

இந்த ஜனாஸாவின் அட்டகாசமும், அட்டூழியமும் தாங்க முடியவில்லை. ‎இப்போதுதான் ஓராண்டு முடிந்துள்ளது. இன்னும் 4ஆண்டுகள் பாக்கி உள்ளன. ‎அதற்குள் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகின்றதோ இந்த ஜனாஸா? இந்த ‎ஜனாஸாவிடத்திலிருந்து இந்த சமுதாயத்தை அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.‎
பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பது இது முதல் முறை அல்ல பாஜகவின் ஏஜெண்டாக ‎இவர்கள் செயல்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஓரிரு சம்பவங்களை மட்டும் இங்கே ‎சுட்டிக்காட்டுகின்றோம். ‎

• பாபர் மசூதி விஷயத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறிய கட்டப்பஞ்சாயத்து ‎தீர்ப்பை அற்புதமான தீர்ப்பு என்று கூறி வரவேற்று அறிக்கை வெளியிட்டது

‎
• இடஒதுக்கீட்டில் இழைக்கப்படும் துரோகத்தை ஆதரித்து அதற்கு முட்டுக் ‎கொடுத்து ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டி, முஸ்லிம்களை கருவறுக்கும் வேலையை ‎கையில் எடுத்திருப்பது

‎
• இராமேஸ்வரத்தை புனித நகரமாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது
இது போன்ற சம்பவங்களுடன் தற்போது இல.கணேசனுடன் உற்சாகத்தோடு ‎கைகோர்த்து போஸ் கொடுத்திருப்பதையும் இணைத்தால் இவர்தான் தமிழகத்தின் ‎ஏஜெண்டாக இருப்பாரோ! என்ற சந்தேகம் வலுப்பெறுகின்றதா? இல்லையா?‎

Saturday, July 07, 2012

தவ்ஹீத் எங்களுக்கு தடை! எழுதிக்கொடுத்த தமுமுக!!


தமுமுகவிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பிரிவினை ஏற்பட்ட போது பலர் தமுமுகவும் தவ்ஹீத் கொள்கையை தான் கொண்டுள்ளது என்று நம்பினார்கள் (நம்ப அளவுக்கு அவர்களும் ஏமாற்றினார்கள்). ஆனால், தவ்ஹீத் கொள்கை எங்களின் வளர்ச்சி தடை என்று எழுதிக்கொடுத்து விட்டுதான், இவர்கள் பிரிந்தார்கள். இன்றும் தமுமுக தவ்ஹீத் கொள்கையை தான் தூக்கி பிடிக்கிறது என்று சில அப்பாவிகள் நம்புகிறார்கள். 

அந்த இயக்கத்தில் இருக்கும் பலர் ஊருக்கு ஊர் தங்களின் வேஷத்தை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் எழுதிக்கொடுத்த கடிதத்தையும் இவர்கள் தவ்ஹீதிற்காக செய்ய தியாகங்களையும் நாம் வெளியிடும் போது இவர்களின் உண்மை முகம் புலப்படும், இன்ஷா அல்லாஹ்.

இவர்களும் தவ்ஹீத் என்று நம்பும் அப்பாவிகளுக்காக தான் இந்த ஆக்கம்.

தவ்ஹீத் எங்களுக்கு தடை 



(இவர்கள் இப்படி எழுதிக்கொடுத்த முதல் இவர்களை அல்லாஹ் எந்த அளவுக்கு தருதலைகளாக ஆக்கிவிட்டான் என்பதை பின்னர் ஆதாரத்துடன் எழுதுவோம், இன்ஷா அல்லாஹ்).