Showing posts with label குர்பானி. Show all posts
Showing posts with label குர்பானி. Show all posts

Monday, September 23, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம்

பங்கு ஒன்றுக்கு 1100 ரூபாய் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்களுடன் நங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டு சேர்ந்தோம்
                              அறிவிப்பாளர் :ஜாபிர் (ரலி )நூல் முஸ்லீம் 2325


நாங்கள் நபி (ஸல் ) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது .ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஓர் ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்

  அறிவிப்பாளர் :இப்னு அப்பாஸ் (ரலி )நூல் திர்மீதி 1421 நசாயி 4319 இப்னுமாஜா  3122

குர்பானி தோல் மூலம் ஏழைகள் நலம் நாடுவீர் !!

ஒர் ஒட்டகத்தை குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல் ) அவர்கள் ஒப்படைத்தார்கள் .அதன் மாமிசத்தையும் ,தோலையும் அதன்மீது கிடந்த (கயிறு ,சேணம் போன்ற )வை களையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்கு கூலியாக அதில் எதனையும் வழங்கக்கூடாது என்றும் எனக்கு கட்டளை இட்டார்கள் .அதன் கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்
அறிவிப்பாளர் :அலி (ரலி )நூல் புகாரி 1710 முஸ்லீம் 2320

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை வருடம் தோறும் குர்பானி தோல்களை வசூல் செய்து ஏழைகள் முன்னேறும் வகையில் தையல் இயந்திரம் ,கிரைண்டர் ,போன்ற பொருட்களும் ,கல்வி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளும் அதிரையில் உள்ள ஏழைகளுக்கு வழங்கி வருகிறது .அல்ஹம்துலில்லாஹ் .

காலம் முழுவதும் வசூலில் நடைபெறும் மதரசாக்களும் ,குறிப்பிட்ட ஒரு சிலரும் தோலை வாரிசெல்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர் .உங்கள் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் வழங்கி ஏழைகளுக்கு அதன் பயனை வழங்கிடுவீர்

குறிப்பு :குர்பானி தோல் விற்ற பணத்தில் ஐந்து பைசா கூட இயக்க வளர்ச்சிக்கோ வேறு எந்த பணிகளுக்கோ செலவிடபடாது என்று உறுதிக் கூறுகிறோம்

உங்கள் குர்பானி தோல்களையும்,பங்கினையும் தருவதற்கு தொடர்பு கொள்ள


செல் :

8015379211
9629533887
9500516109
9500299337
9677626656
9944824510

நீங்கள் போன் செய்தால் ,வீடு தேடி வந்து குர்பானி  தோல்களை பெற்றுக்கொள்வோம்

Saturday, October 27, 2012

அதிரையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் சொற்பொழிவு (வீடியோ) - 2012

அதிரையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் சொற்பொழிவு (வீடியோ) - 2012

அதிரை ECR ரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நடைபெற்ற பெருநாள் தொழுகையில் ஆற்றப்பட்ட சொற்பொழிவு



Thursday, October 11, 2012

உங்களின் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைக்கு தந்து உதவுங்கள்

உங்களின் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைக்கு தந்து உதவுங்கள். தோல்களில் இருந்து கிடைக்கும் தொகை, மார்க்கம் வழிகாட்டியுள்ள பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

உங்களின் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைக்கு வழங்க, கீழ்காணும் அதிரை ததஜ நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள்:

தலைவர் :
பீர் முஹமது - 80153 79211

துணை தலைவர்:
அப்துல் ஜப்பார்- 96295 33887

செயலாளர்:
M.அப்துர் ரஹ்மான் - 95005 16109

துணை செயலாளர்கள்:
ஹைதர் அலி - 96776 26656
முஹமது சுலைமான் - 95668 22198

பொருளாளர்:
A.K. மீரா முகைதீன் - 99448 24510

Friday, October 05, 2012

இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! ஏகத்துவமே!

மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு 9000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 5000 ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

இப்படி ஆடு மாடுகளின் விலை ஆகாயத்தைத் தொட்டாலும், என்ன விலையேற்றமாக இருந்தாலும், எவ்வளவு விலை எகிறியிருந்தாலும் அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லிம்கள் தயங்குவதில்லை. அத்தனை விலை கொடுத்து வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை. வைக்கின்ற வைக்கோலுக்கும் புல் கட்டுக்கும் ஒரு தொகை காலியாகி விடுகின்றது.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டி, தீனி போட்டு, கஞ்சி ஊற்றி, கழனி வைத்துப் பராமரித்து வருவதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் அளவே இல்லை. கண்ட கண்ட இடங்களில் ஆடு மாடுகள் போடுகின்ற புழுக்கை, சாணி மற்றும் கழிக்கின்ற சிறுநீர் போன்ற அசுத்தங்களை அவ்வப்போது கழுவி துப்புரவு செய்கின்றனர். அதிலும் மழை நேரத்தில் நச நசவென்று ஒரே ஈரப் பதமாக இருக்கும் நாட்களில் இந்த அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்காகத் தாய்மார்கள் ஆற்றுகின்ற பணி சாதாரணமானதல்ல!

பிற மதங்களில் மாட்டு சாணம், மூத்திரம் போன்றவை புனிதம் என்று மதிக்கப்படுகின்றன. ஆட்டுப் புழுக்கையும், சிறுநீரும் கூட அவர்களிடம் அசுத்தமல்ல! ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவை அசுத்தமானவை. இந்த அசுத்தம் பட்ட இடங்கள் தொழுவதற்குத் தகுதியற்றவை. மேனியில், ஆடையில் பட்டால் கழுவாமல் தொழக் கூடாது என்ற கட்டுப்பாடு! அதனால் இந்த விஷயத்தில் அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள்.

இத்தனை உழைப்பும் எதற்கு? இவ்வளவு தியாகமும் எதற்கு? தியாக வரலாற்றின் எதிரொலியாகத் தான்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

அல்குர்ஆன் 37:103-108

அல்லாஹ்வே பாராட்டுகின்ற இந்த மகத்தான சோதனையின் மறு பதிப்பு தான் குர்பானி!

இது எதை உணர்த்துகின்றது?

1. அல்லாஹ்வின் பாசத்திற்கு மேல் என்னுடைய பிள்ளைப் பாசம், குடும்பப் பாசம் மீறாது; மிகைக்காது என்பதற்காக, இப்ராஹீம் நபி நிகழ்த்திக் காட்டிய, உள்ளத்தை உலுக்குகின்ற ஓர் உன்னத நிரூபணம். நீர்த்துப் போகாது நெஞ்சில் நிலைத்திருக்கும் நினைவு ஆவணம்.

(இதன் அதிக விளக்கத்தை இப்ராஹீம் நபியின் ஏகத்துவ உறுதி என்ற தலைப்பில் நாம் பார்க்கலாம்.)

2. அறுத்துப் பலியிடுதல் என்பது ஒரு வணக்கம்! இதை அல்லாஹ்வுக்காகவே தவிர வேறு யாருக்கும் எதற்கும் செய்யக் கூடாது என்ற படிப்பினையையும் இது உணர்த்துகின்றது.

ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

அல்குர்ஆன் 108:2

இந்த இரு பாடங்களைத் தான் இப்ராஹீம் நபியின் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

இபராஹீம் நபியவர்களின் அறுத்துப் பலியிடுதல் என்ற வணக்கம் மட்டுமல்லாது, அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுக்காகவே ஆகியிருந்தன. அந்த ஏகத்துவ வழியைத் தான் அவர்களது மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களும், மற்றொரு மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழியில் வந்த அரபியர்களும் உருத் தெரியாமல் மாற்றி விட்டனர். மக்காவில் வாழ்ந்த மக்களிடம் இணை வைப்பு என்ற ஷிர்க் நுழைந்து விட்டது. இதைத் துடைக்கவும் தூரக் களைந்தெறியவும் அதே இப்ராஹீம் நபியின் சந்ததியில் வந்தவர்கள் தான் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

இதோ அம்மக்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எதிர் கொண்ட இணை வைப்பு என்ற நோயின் வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான்.

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

இன்று நாம் குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாதையில் அழைக்கும் போது சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் புறமுதுகு காட்டுகின்றனர். அல்லாஹ்வை மட்டும் அழையுங்கள் என்று கூறும் போது அவர்கள் முகம் சுழிக்கின்றனர். முஹ்யித்தீன் என்று சொன்னதும் "கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (அவர்களின் கண்ணியமிக்க ஆன்மாவை அல்லாஹ் தூய்மைப்படுத்துவானாக) என்று கூறி, முகமும் அகமும் பூரித்து விடுகின்றனர்.

முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன் போன்றோரின் பெயர்களில் மவ்லிதுகளை ஓதி, ஆடு மாடுகளை அறுத்துப் பலியிட்டு ஆனந்தமடைகின்றனர்.

அப்படியானால் இவர்களின் "பலி' என்ற வணக்கத்தினால் பலன் என்ன?

இத்தகையவர்களை நோக்கித் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள், தன்னை விலக்கிக் கொண்டதாகப் பிரகடனம் செய்கிறார்கள்.

"உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.

அல்குர்ஆன் 22:37

அல்லாஹ்வும் ஆடு, மாடு, ஒட்டகங்களின் இறைச்சி தேவையில்லை. இறையச்சம் தான் தேவை என்று கூறுகின்றான்.
இறையச்சம் என்றால் என்ன?

ஒரேயொரு இறைவனை மட்டுமே வணங்குவது தான் இறையச்சம்!

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று கேட்டார்.

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை'' என்றனர்.

அல்குர்ஆன் 23:23, 24

இதுபோன்ற வசனங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இறையச்சம் என்று குறிப்பிடுகின்றன. இறையச்சம் என்றால் உடல் நடுங்கி, அஞ்சி, அல்லாஹ்வைத் தொழுது, சில வணங்கங்களைச் செய்வது மட்டும் தான் என்ற அர்த்தத்தை இன்றைய ஆலிம்கள் கொடுக்கின்றனர். இதனால் இந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துக் கொண்டே இதுபோன்ற வணக்கங்களைச் செய்து விட்டுத் தங்களை இறையச்சமிக்கவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் இன்று ஆடு மாடுகளையும் அறுத்துப் பலியிடுகின்றனர். இதனால் தாங்கள் இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றி விட்டதாக நினைக்கின்றனர்.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், ஏகத்துவத்தை ஏற்காத வரை ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று இப்ராஹீம் நபியவர்கள் ஓங்கி பிரகடனப்படுத்தி விட்டார்கள். இதே அடிப்படையில் உங்களுடைய இறைச்சியும், இரத்தமும் தேவையில்லை, இறையச்சம் தான், அதாவது ஏகத்துவம் தான் தேவை என்று அல்லாஹ்வும் அடித்துச் சொல்லி விட்டான்.

எனவே குர்பானி கொடுத்தால் மட்டும் போதாது. ஏகத்துவவாதியாக மாற வேண்டும். அப்போது தான் நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்படும்.

நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட, உண்மையான இறையச்சவாதிகளாக, ஏகத்துவவாதிகளாக மாறுவோமாக!

Thursday, March 08, 2012

2011 குர்பானி தோல்கள் கணக்கு விபரம் - ரூபாய் 56900 மதிப்பில் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள்

கடந்த ஹஜ் பெருநாள் (2011)  TNTJ அதிரை கிளை மக்களிடம் பெறப்பட்ட குர்பாணி தோல்களை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தில் இருந்து அதிரை அனைத்து பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. அதன் புகைப்படமும், கணக்கு கீழே உள்ளது.


கீழத்தெரு (பழைய படம்)


கீழத்தெரு (பழைய படம்)


கீழத்தெரு (பழைய படம்)


(பழைய படம்)


மேலத்தெரு


நெசவுத்தெரு

மேலத்தெரு

கடற்கரைத்தெரு

பிலால்நகர்

தரகர்தெரு

நெசவுத்தெரு

புதுத்தெரு

Friday, October 29, 2010

அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தின் கூட்டுக் குர்பானி திட்டம்

படத்தை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்