Showing posts with label தீ. Show all posts
Showing posts with label தீ. Show all posts

Sunday, August 18, 2013

தன்னைத் தானே காப்பாற்ற முடியாத பரிதாப அதிரை அவ்லியா!

அதிராம்பட்டிணத்தில் சமீப காலமாக அவ்லியாக்கள் அடங்கி இருப்பதாக சொல்லப்படும் இடங்கள், மற்றும் அவ்லியாக்களின் நேசர்கள் என்று சொல்பவர்களுக்கு   அடிமேல் அடி விழுந்து வருகிறது.

அவ்லியாக்களுக்கு காலம் காலமாக சந்தணம் பூசி வந்த ஒருவர், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் பூச சென்ற போது முச்சு திணறி மரணம் அடைந்தார். அவ்லியா பக்தரை அந்த அவ்லியா காப்பாற்றவில்லை, கைவிட்டார்.காரணம் அவரால் அது முடியாது  இந்த சம்பவம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹாவில் நடைபெற்றது.

அதிரை மேலத்தெருவில் உள்ள தர்ஹாவிற்கு அருகில் நெய்னா பிள்ளை அப்பா ஒலி என்பவருக்கு மினி தர்ஹா ஒன்று உள்ளது. கடந்த 17.08.2013 அன்று அந்த மினி தர்ஹாவின் கீற்று கொட்டகை தீப்பற்றி எரிந்தது. அவ்லியா கப்ரை உடைத்துக்கொண்டு தீயை அணைப்பார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தீ பற்றிய விஷயத்தை கூட அறிய முடியாத அவ்லியாவை காப்பாற்ற தீ அணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  இறுதியாக, அவ்லியாவின் அடக்கஸ்தலமாக கருதப்படும் தர்ஹாவில் பற்றிய தீயை தீ அணைப்பு  துறையினர் தான் அனைத்தனர் என்பது சோகமான செய்தி.


கேட்பவர்களுக்கு எல்லாம் கஷ்டத்தை போக்குவார் என்று நம்பப்படும் அவ்லியா, தனது கப்ர் தீ பற்றி எரியும் போது  ஒன்றும்  செய்ய முடியாமல் போனது அந்தோ பரிதாபம். நல்ல வேளை அவ்லியாவின் (?) கப்ர் கல்லால் கட்டப்பட்டு இருந்தது, ஒரு வேளை மரம் போன்ற எறியக்கூடிய பொருளில் அமைந்து இருந்தால், அந்த கப்ரும் சேர்ந்து எரிந்து போயிருக்கும்.

ஒரு வேலை கப்ர் வணக்கத்தை எதிர்ப்பவர்கள் தான் இந்த செயலை செய்தார்கள் என்று கப்ர் வணங்கிகள் கூறக்கூடும். அப்படி கூறினாலும், அவ்லியாவிற்கு எந்த சக்தியும் இல்லை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நெய்னா பிள்ளை அப்பா ஒலி அவ்லியாவல் தான் தனது கப்ர் தீ பற்றி எரியும் போது, அதை அணைக்க முடியவில்லை என்றால், நெய்னா பிள்ளை அப்பா ஒலி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்திற்கு மிக அருகில் இருப்பதாக சொல்லப்படும் ஷேக் நசூருதீன் ஒலியுல்லா அவ்லியா, அதிரை கடல்கரைத்தெருவில் இருக்கும் ஹாஜா ஒலி அப்பா அவ்லியா ஆகியோருக்கும் எந்த சக்தியும் இல்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.

அதிரையில் உள்ள அவ்லியாக்கள் தான் நெய்னா ஒலி அப்பாவை கைவிட்டார்கள் என்றால், அதிரைக்கு அருகில் இருக்கும் முத்துப்பேட்டை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள அவ்லியாக்கள் கூட தீ அணைப்பு துறை வந்து தீயை அணைக்கும் முன், வந்து தீயை அணைக்கவில்லை.

மேலும், ஆயிரம் முறை அழைத்தால் பாக்கதாதில் அடங்கி இருக்கும் அப்துல் காதர் ஜெய்லானி தனது கப்ரை பொத்து கொண்டு வந்து ஆஜராவர் என்று சொல்லப்படுவரும்  கைவிட்டுவிட்டார்.

அவ்லியாகளுக்கு நாங்கள் தான் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று ஏமாற்றும் அவ்லியா பக்த கள்ள ஆலிம்களும் கூட இந்த தீயை வந்து அணைக்கவில்லை.

மொத்ததில் அவ்லியாக்களுக்கே அல்லது அவ்லியா பக்தர்களுக்கே மறைவான ஞானமே அல்லது சக்தியே இல்லை என்பது இந்த சமபவத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

தலைப்பு ''தன்னைத் தானே காப்பாற்ற முடியாத பரிதாப அதிரை அவ்லியா!'' என்று அதிரை அவ்லியாவை  பற்றி சொல்ப்பட்டு இருந்தாலும், உலகில் உள்ள எந்த அவ்லியாவிற்கும் எந்த சக்தி இல்லை என்று நிரூபணம்.


அவ்லியாக்கள் எனப்படுவர்களுக்கு எந்த விதமான சக்தியும் இல்லை என்பதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை பாருங்கள்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.  

அல்குர்ஆன் (22:73)

பல தர்ஹாவில் உள்ள கப்ர்களில் உள்ள அடக்கஸ்தலத்தில் அவ்லியாவாக கருத்துப்படுவர் அடக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அவ்லியாக்கள் என்று நம்ப படுபவர் அங்கே அடங்கியிருந்தாலும் தனது கப்ரே தீ பற்றி எரியும் போது, அதை தடுக்கும் சக்தி அவருக்கு இல்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்று.


தமிழ் முஸ்லிம்களிடம் இருந்த தர்ஹா வழிபாடு என்ற கொடிய இணைவைப்பு காரியம் தழிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சியின் வாயிலாக பெருமளவில் துடைத்து எறிப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். 

இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் மிச்சம் மீதி இருக்கும் இணைவைப்பு ஆலயங்கள் மக்களால் உடைத்து எறிப்படும்.

படங்கள் உதவி: அதிரை நியூஸ்