Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Friday, March 20, 2015

திருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்

திருமண நிலைப்பாடு
திருத்தங்களும் தீர்வுகளும்
"கல்யாணம் முடித்தேன்! கடனாளியாகி விட்டேன்!''
"வட்டிக்கு எடுத்து வகையாகத் திருமணம் நடத்தினேன்! இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன்!''
இப்படிப்பட்ட புலம்பல்கள் நமது செவிப்புலன்களில் வந்து விழுகின்றன. இது யாருடைய புலம்பல்? பெண் வீட்டுக்காரனின் புலம்பல் தான். திருமணம் என்று வந்ததும் பொருளாதாரம் காலியாகிப் போய்விடுகின்றது. இது பொருளாதார ரீதியிலான பாதிப்பு என்றால் இன்னொரு புறம் வாழ்வாதார ரீதியிலான பாதிப்பும் ஏற்படுகின்றது.
அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். இன்று கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கருவிலேயே பொசுக்கப்பட்டு விடுகின்றனர். தப்பித் தவறி பிறந்து விட்டால் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியெறியப்படுகின்றனர்.
கால்நடையிலிருந்து காட்டு விலங்குகள் வரை தாங்கள் ஈன்ற குட்டிகளை உயிரைக் கொடுத்து, பாசத்தைக் கொட்டி வளர்க்கும் போது, பகுத்தறிவுப் பிராணியான இந்த மனித இனம் மட்டும், தான் பெறுகின்ற பிள்ளைகளில் ஆணா? பெண்ணா என்று பேதம் பார்த்து, பெண்ணினத்தை அழிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் என்ன?
வரதட்சணைக் கொடுமை! வாட்டுகின்ற திருமணச் செலவு! இவை தான் இதற்குரிய பதில்.
இதற்காக எந்த ஜமாஅத்தும், எந்த இயக்கமும் இதற்குரிய நடைமுறை செயல்பாட்டுத் திட்டத்தில் இறங்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388
இந்த ஹதீசுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் எளிய திருமணத்திற்கு இலக்கணமாகச் செயல்படும் விதத்தில் மண்டபத் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. இதுகுறித்து ஏகத்துவம் 2011 டிசம்பர் இதழில், "மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
மண்டபத் திருமணத்திற்கு தஃப்தர் உண்டு, தாயீ இல்லை என்ற சட்டம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் பொதுவான சட்டம். இந்தச் சட்டத்தில் அனுமதியின் வாசல் விரிவாகவும் விசாலமாகவும் திறக்கப்பட்டிருந்தது.
நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான். (அல்குர்ஆன் 47:17)
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதற்கேற்ப திருமண நிலைப்பாட்டில் இன்னும் சிறந்த வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் விதமாக, கடந்த 12.11.2013 அன்று நடைபெற்ற மாநில உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் மண்டபத்தில்  நடைபெறும் திருமணங்கள் சம்பந்தமாக பின்வருமாறு ஆலோசிக்கப்பட்டது.
மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களில் கலந்து கொண்டாலும், தங்கள் குடும்பத்து திருமணங்களை மண்டபத்தில் நடத்தினாலும் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டை நாம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.
விருந்தில் கலந்து கொள்வது, தங்கள் குடும்பத் திருமணங்களை நடத்துவது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு அந்த நிலைபாட்டில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கிளை மாவட்ட நிர்வாகிகள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கிளைப் பேச்சாளர்கள், மாநிலப் பேச்சாளர்கள், மாவட்ட கிளை அணிச் செயலாளர்கள் தமது திருமணத்தையோ, தமது பொறுப்பில் உள்ள  சகோதர சகோதரிகள் திருமணத்தையோ, தனது பிள்ளைகள் திருமணத்தையோ மண்டபத்தில் நடத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் எனவும்,
மண்டப திருமணங்களில்  (நபி வழியில் மார்க்கம் தடை செய்யாத வகையில்) நடைபெறும் திருமண விருந்தில் கலந்து கொள்வோர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் அந்தத் திருமணம் சமுதாயத்திற்கு சரியான முன் உதாரணத்திற்கு உட்பட்டதா என்பதை அல்லாஹ்விற்கு அஞ்சி அவரவர் முடிவு எடுத்துக் கொள்வது எனவும் திருத்தம் செய்ய ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஒருசில கட்டங்களில் வீடுகளில் நடக்கும் திருமணங்களில் பந்தல், பரிமாறப்படும் பந்திகளுக்கு நாற்காலிகள் என்று மண்டபத்தை விடப் பன்மடங்கில் செலவு விஞ்சி விடுகின்றது. எளிய திருமணம் என்ற இலக்கணம் இங்கு தகர்க்கப்பட்டு விடுகின்றது. மண்டபத்தில் நடக்கும் திருமணம் எளிமையாக அமைந்து விடுகின்றது. இதைக் கவனத்தில் கொண்டு கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.
சில நேரங்களில் மண்டப திருமணம் வீட்டில் நடக்கும் திருமணத்தை விட குறைந்த செலவுடையதாக இருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. வீட்டில் நடத்த முடியாமல் கடும் எதிர்ப்பு இருக்கும் போது மண்டபத்தில் நடத்தும் நிர்பந்தமும் சில நேரங்களில் ஏற்படும்.
இது போன்ற நிலை உள்ளதா என்பதை கிளையும் மாவட்டமும் தக்க முறையில் பரிசீலித்து, பரிந்துரை செய்தால் அப்போது மட்டும் அதை அனுமதிப்பது என்றும் திருத்தம் செய்யப்படுகிறது.
மண்டபத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு தாயிக்களை அனுப்பவதில்லை என்ற நிலைபாடு அப்படியே நீடிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
திருமண விருந்து
எளிய திருமணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மண்டபத் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகளை தவ்ஹீத் ஜமாஅத் விதித்திருக்கின்றது. இருப்பினும், மண்டப விருந்தில் மட்டும் ஒரு நெருடல் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் கீழ்க்காணும் ஹதீஸ் தான்.
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816, 2819
விருந்தைப் புறக்கணித்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார் என்று ஹதீஸில் வருவது தான் இந்த நெருடலுக்குக் காரணம்.
இதற்கும் அல்லாஹ்வின் அருளால் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒரு நல்ல தீர்வு எடுக்கப்பட்டது. இப்படி ஒரு தீர்வை அடைவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விருந்தழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும் நபிமொழியில் சொல்லப்படும் செய்தி என்ன என்பதை ஆய்வு செய்யும் போது, விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தவராவார் என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த நபிமொழியை மேலோட்டமாகப் பார்க்கும் போது விருந்தழைப்பை மறுக்கக்கூடாது என்று நாம் புரிந்து கொள்வோம். ஆனால் இந்த நபிமொழியின் துவக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளைக் கவனிக்கும் போது இதற்குத் துணையாக வரும் மற்ற ஹதீஸ்களைப் பார்க்கும் போது விருந்து குறித்து நபிகளார் கூறிய உண்மையான பொருள் புலப்படும்.
ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நடத்தப்படும் விருந்தளிப்பு கெட்டவிருந்து எனக் கூறும் நபியவர்கள் அந்த விருந்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள்.
விருந்து குறித்த இந்தச் செய்தியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் "எனக்கு ஆட்டின் கால்குழம்பு விருந்தாக அளிக்கப்பட்டாலும் அதை (அற்பமாகக் கருதாமல்) ஏற்றுக் கொள்வேன்'' என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த இரண்டு ஹதீஸையும் இணைத்து பொருள் கொடுத்தால் விருந்தழைப்பு குறித்து நபிகளார் சொன்னது என்ன என்பதை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்
விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். (ஏழைகள் விடுக்கும்) விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் நபியவர்களுக்கு மாறு செய்தவராவார் என ஹதீஸ் கூறுகின்றது.
ஏழை என்பதற்காக ஒருவரை விருந்துக்கு அழைக்காமல் இருப்பதையும் ஏழை அழைத்தார் என்பதற்காக அவருடைய விருந்தழைப்பைப் புறக்கணிக்கக்கூடாது என்பதையும் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்று நபிகளாரின் கூற்றைப் புரிந்துகொண்டால் எந்தக் குழப்பமும் இருக்காது.
விருந்தழைப்பை மறுக்கக் கூடாது என்று கூறி மண்டபத் திருமணத்திற்கு ஆதரவு கொடுத்து, எளிமையான திருமணத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடக்கூடாது.
அதே சமயம் கிளை அல்லது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் மண்டபத் திருமணத்தில் கலந்து கொள்வதை காரண காரியத்தை அலசி மாநிலத் தலைமை எடுக்க இயலாது. சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருமண விருந்து எளிமையானது தானா அல்லது ஆடம்பரமானதா என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து முடிவெடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறையச்சமுள்ளவர்களுக்கு இமாமாக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தனது இல்லத் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் நிர்பந்தமான சூழல் ஏற்பட்டு மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டால் அவர் சார்ந்திருக்கும் கிளை, மாவட்ட நிர்வாகம் அவரை மண்டபத் திருமணத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தால் அப்போது அவர் பங்கேற்கலாம்.
ஆடம்பரத்தில் சிக்குண்டு சிதறும் சமுதாயத்தின் நிலையை மாற்றுவதற்காக எளிமையானத் திருமணத்திலே பரக்கத் உண்டு என்ற நபிமொழியை பரவலாக நடைமுறைப்படுத்த வேண்டிய உன்னதமான நோக்கத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


-மார்ச் ஏகத்துவம் 2015

Monday, June 23, 2014

கடற்கரைத் தெருவில் நடைபெற்ற நபிவழித் திருமணம்!

தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி அவர்களின் இல்லத்தில் இன்று (22-06-2014) காலை 11.00 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.

இதில் சென்னை ஆவடியை சேர்ந்த கபீர் அவர்களின் மகன் அப்துல் மாலிக் மணமகனுக்கு கடற்கரைதெருவை சேர்ந்த அஹமது ஜலீல் அவர்களின் மகளை 40 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் சகோதரரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் முஜாஹிதீன் மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். இதில் கடற்கரைதெரு ஜமாஅத் நிர்வாகிகள், உட்பட பல கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.





Sunday, June 15, 2014

மேலத்தெருவில் நடைபெற்ற நபிவழி திருமணம்!

மேலத்தெரு சூனா வீட்டு அலி அக்பர் அவர்களின் மகன் தையுப் (தம்பி ராஜா) மணமகனுக்கு இன்று (15.6.2014) காலை 11.30 மணிக்கு  மணமகன் இல்லத்தில் 24 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் தந்தையிடம் கொடுத்து நபிவழித் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மாநில பேசாளர் கபுர் மிஸ்பாயி மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள்.


Tuesday, May 20, 2014

பரக்கத் நிறைந்த திருமணம் (எளிமையான திருமணம்) - வீடியோ



பரக்கத் நிறைந்த திருமணம்

திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோ - விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இத்துடன் மார்க்கம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற புர்கா போன்ற வரைமுறைகளை, வரம்புகளைத் தாண்டி சந்திப்புகளும் சங்கமங்களும் திருமண வீட்டில் நடைபெறுகின்றன.

அண்ணியிடமும், கொழுந்தியாவிடமும் ஆண்கள் இரட்டை அர்த்த வார்த்தைகளில் கிண்டல் செய்வது, பதிலுக்குப் பெண்களும் மச்சான், கொழுந்தன் என்று அதே பாணியில் கிண்டல் செய்கின்ற அநாகரீகக் காரியங்களும் நடக்கின்றன. போதாக்குறைக்கு வீடியோ கேமராக்கள் கல்யாண வீடுகளில் புகுந்து வெறித்தனமாக விளையாடுகின்றன.

கல்யாண வீடு என்றதும் வீட்டிலுள்ள பெண்களும், வெளியிலிருந்து வரும் பெண்களும் தங்களுடைய உயர் ரக பட்டாடைகளை உடுத்தி ஒப்பனை செய்துகொள்வார்கள். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்வார்கள். கூந்தலுக்குப் பூச்சூடிக் கொள்வார்கள். கழுத்துகளிலும் காதுகளிலும் விலையுயர்ந்த நகைகளை அணிந்து கொள்வார்கள். மொத்தத்தில் அழகுப் பதுமைகளாகக் காட்சியளிப்பார்கள். அவர்களின் பிம்பங்களை வீடியோ கேமராக்கள் வளைத்து வளைத்துப் படம் பிடிக்கின்றன.

வீட்டுப் பெண்கள் வீதியில் நிற்கும் உணர்வில் இருக்க மாட்டார்கள். மேனியை விளம்பரப்படுத்தும் மெல்லிய சேலைகளில் இருப்பார்கள். சகஜமாகவும், சர்வசாதாரணமாகவும் வீட்டில் அங்கிங்கென்று அலைவார்கள். குனியும் போதும் நிமிரும் போதும் அவர்களுடைய அங்க அவயங்களிலிருந்து ஆடைகள் அடிக்கடி விலகிக் கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளை வீடியோக்கள் ஒன்று விடாது பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

வீடியோக்காரனின் வேட்டை இத்துடன் நின்று விடுவதில்லை. வீடியோ மையத்தில் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து அதை சி.டி. ஆக்கும் போது அங்குள்ள பணியாளர்களின் பார்வைகளுக்கும் பெண்களின் அழகு மேனிகள் பலியாகின்றன. ஸ்லோமோஸனில் அவர்கள் பெண்களை நிறுத்தி, நிறுத்தி தங்களின் விழிகளால் வேட்டையாடித் தள்ளுகின்றனர்.

வீட்டுப் பெண்களை இப்படி அடுத்தவருக்கு அந்நியருக்கு வேட்டைக் களமாக்கலாமா? விருந்தாக்கலாமா? உடல் கூச வேண்டாமா?

மாப்பிள்ளையின் நண்பர்கள் என்ற பெயரில் அந்நியர், அயலார்களும் உறவினர் என்ற போர்வையில் ஊரார்களும் ஊதாரிகளும் தங்களது மொபைல் போன்களில் மணமகள் உட்பட நமது அக்கா, தங்கைகள் உள்ளிட்ட அனைத்து பெண்களையும் நம் கண் முன்னால் கையோடு கையாக களவாடிச் செல்கின்றனர்; கவர்ந்து செல்கின்றனர்.

இதைவிட மிகக் கொடுமையான விஷயம் அண்ணன் தம்பிமார்களே தங்கள் அக்கா தங்கைகளை, மனைவிமார்களை அந்நியர்களுக்கு இணைய தளத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பில் காட்டுகின்றனர்.

வெளியார் பார்வை வீட்டுக்குள் பாயக்கூடாது, பதியக்கூடாது என்பதற்காக வீட்டுவாசலில் திரைபோடும் இந்த அறிவாளிகள் வானமேறிப் பறக்கும் ஊடகத்தின் வாயிலாக தங்கள் குடும்பப் பெண்களை மானமேறச் செய்கின்றனர்.

வெளியாட்களின் வெறிப்பார்வைக்கும் வேற்றுப் பார்வைக்கும் தங்களின் வீட்டுப் பெண்களை விருந்தாக்குகின்றனர்.

ஆண்களாகிய இவர்களுக்கும் வெட்க உணர்வு, ரோஷ உணர்வு எல்லாம் வெந்து சாம்பாலாகிவிட்டது போல் தெரிகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரை(க் கண்டிக்காதீர்கள்;) (விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கம் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 24

ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு வெட்கம் என்பது அவனது நாடி நரம்புகளுடன் பின்னிப் பிணைந்தது என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

ஆனால் இவர்களுக்கோ இந்த வெட்க உணர்வுகள் இறை மறுப்பாளர்களைப் போன்று அத்தனையும் மழுங்கி, மாயமானவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது. இத்தகையவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற, விடுக்கின்ற எச்சரிக்கையை இங்கே நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24:19

அத்துடன் அடுத்தவரின் காம விழிகளுக்குக் காட்சியாகும் பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை இதோ:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.  ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.  இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.  அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.  ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 3971

இந்தக் காட்சிகளைக் கண்டு ரசிக்கின்ற ரசிகர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை:

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 40:19

முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்

அல்குர்ஆன் 41:20


ஆடம்பர திருமணத்தை தவிர்த்து, திருமணங்களை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் நடத்துவோம். நமது வீட்டுப் பெண்களை அன்னிய ஆடவர்களுக்கு விருந்தாக்குவதில் இருந்து தவிர்போம்.

Wednesday, April 23, 2014

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம்

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சார்ந்த சகோதரர் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மகன் சுலைமான் மணமகனுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் நேற்று  22-04-2013  மாலை 5 மணியளவில் மணமகன் 10 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.





Saturday, February 22, 2014

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமண பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமண பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள் நமக்காக தனிப்பட்ட முறையில் துஆ செய்தால் அது பற்றி பேசும் போது நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறலாம். ஏனெனில் இதில் உண்மை உள்ளது. இதில் எந்தக் குற்றமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக பொதுவாக துஆ செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் பரக்க்கத் எங்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இப்படி கூறுகிறார்கள் என்றால் அதுவும் தவறாகும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மக்களுக்காக சில துஆக்களைச் செய்துள்ளார்கள். நாம் அந்த நன்மக்கள் பட்டியலில் இருக்கிறோமா என்பது நமக்குத் தெரியாது.  இவ்வாறு திருமணப்பத்திரிகை அடிக்கக் கூடியவர் அந்தப் பட்டியிலில் இருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல், இப்படிக் கூறினால், நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டிய குற்றம் சேரும். நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டினால், அதற்கான பரிசு நரகமாகும்.

நல்ல முஸ்லிமாக வாழ்பவர்களின் நிலையே இது தான். ஆனால் நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமணப் பத்திரிகை அடிப்பவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாத்தை கடைப்பிடிப்பதில்லை. எந்த திருமணத்துக்காக பத்திரிகை அடிக்கிறார்களோ அந்த திருமணத்தையாவது நபிகள் நாயகம் காட்டிய வழியில் நட்த்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

அல்லாஹ் மஹர் கொடுக்கச் சொன்னால், இவர்கள் வரதட்சணை வாங்கி திருமணம் நடத்திக் கொண்டு, நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத் என்று போட்டால், இவர்கள் நபிகள் நாயகத்தைக் கேலிப் பொருளாக ஆக்குகிறார்கள் என்று தான் பொருள்.

வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் உடன் பிறப்புக்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் ஷைத்தானின் தம்பிமார்களாக இருக்கும் வகையில் நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறுவதும் நபிகள் நாயகத்தை மேலும் அவமரியாதை செய்யும் செயலாகும்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் பரக்கத்துக்கு உரியது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்திருக்க, பரக்கத்தின் வாசலை இழுத்து மூடும் வகையில் நடந்து கொண்டு நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறினால், அது நபிகள் நாயகத்தை இவர்கள் கேலிப்பொருளாக ஆக்குகிறார்கள் என்று தான் பொருள்.

திருடச்செல்லும் ஒருவன் பிஸ்மில்லாஹ் கூறி திருடுவது போல், பிஸ்மில்லாஹ் கூறி பன்றி இறைச்சி சாப்பிடுவது போல், அல்லாஹும்ம ஜன்னிப்னா என்ற துஆவை ஓதி விபச்சாரியுடன் செலவ்து போல் இவர்களின் முரண்பாடு அமைந்துள்ளது. திருமணத்தில் நபி வழியை மீறுவதுடன் நபிகள் நாயகத்தைக் கேலி செய்த குற்றத்துக்கும் இவர்கள ஆளாகிறார்கள்.

Sunday, November 17, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபி வழி திருமணம்

கீழத்தெருவைச் சேர்ந்த அப்துல் ரெஜாக் அவர்களின் மகன் ராஜா என்கிற ஹாஜா நசுருதீன் மணமகனுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று [ 17-11-2013 ] காலை 11 மணியளவில்  நபி வழி முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் 2-1/4 பவுன் தங்க நகையை மஹராக மணமகளின் பொறுப்பாளரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி நடைமுறையில் திருமணங்கள் எப்படி நடக்கின்றன இஸ்லாமிய திருமணங்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.






Thursday, August 22, 2013

அதிரை பிலால் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம்!

அதிரை பிலால் நகரைச் சார்ந்த அப்துல்லா அவர்களின் இல்லத்திருமணம்  பிலால் பள்ளியில் இன்று [22.8.2013] காலை 11 மணியளவில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கனவன் மனைவியின் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் தெரு ஜமாத்தார்கள் உட்பட பலர்  கலந்துகொண்டார்கள்.




Wednesday, May 08, 2013

பெருகி வரும் தலாக்கள் (வீடியோ)

பெருகி வரும் தலாக்கள் (வீடியோ)

Tuesday, March 26, 2013

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணை, எப்படி வரதட்சணையாகும் (வீடியோ)

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணை, எப்படி வரதட்சணையாகும் (வீடியோ)

அதிரையில் பெண்ணுக்கு கொடுக்கப்படும் வீட்டை, பெற்றோர்கள் விரும்பியா கொடுக்கிறார்கள்?


Wednesday, November 21, 2012

பிஜே அவர்களின் இல்ல திருமணம்!


தவ்ஹீத் எங்களுக்கு தடை என்று கூறி எழுதிகொடுத்துவிட்டு, அரசியலுக்கு போய் நாள்தோறும் மறுமையை பாழாக்கும் செயல்களில் ஈடுபட்டுவரும் ஒரு  இயக்கத்தின் தலைவரின் மகளுக்கு திருமணம் என்றும், அதில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என்றும் சிலர் எழுதிவருகிறார்கள் என்பதை அறிவீர்கள் தானே ?

மணமகள் சார்பாக விருந்து கொடுக்கலாமா? என்று அந்த தானே தலைவரிடம் கேள்வி கேட்க முடியாது தானே? காரணம், மரண தண்டனையை ஒழிப்போம் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, அதில் சொற்பொழிவு ஆற்றிய  அரைவேக்காடு தலைவருக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை தானே? 

பிரச்சினை அதுவல்ல! தலைவர் அவர்களின் மகள் திருமணத்தில் பிஜே அழைக்கப்பட்டாரா? கலந்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். பிஜே அழைக்கப்பட்டாரா? என்று கேள்வி கேட்கும் முன், தலைவரின் மகள் திருமணம் நபிவழியில் நடந்ததா? என்று இவர்கள் கேட்டிருக்க வேண்டும் தானே?

பிஜே அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளை கூட அழைக்காமல், மிக எளிமையான முறையில் நபிவழியில் பிஜே தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

தானே தலைவரின் மகள் திருமணத்திற்கு பிஜே அழைக்கப்பட்டு இருக்க மாட்டார். தானே தலைவர் தானே சென்று  அழைத்து இருந்தாலும், பிஜே  போய் இருக்கவும் மாட்டார். தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டு பெண் வீட்டு விருந்து வாங்குபவர்களின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளக்கூடாது என்பவர் இதிலே கலந்து கொண்டு  இருப்பாரா என்ன? 

பிஜேவின் பிள்ளைகளுக்கு நடந்த திருமணத்தின் வீடியோ காட்சி கீழே உள்ளது. இது தம்பட்டம் அடிப்பதற்காக அல்ல. மாறாக, எது நபி வழி திருமணம் என்று காட்டுவதற்காக. 


நபிவழித் திருமணம் பற்றி முழுமையாக அறிய:


Sunday, March 25, 2012

ஆடம்பர திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?


ஆடம்பர திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?


Tuesday, January 24, 2012

நபிவழித் திருமணம் - சிரிக்க வைக்கும் கேள்விகளும் பதில்களும்

சமீபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிலால் நகர் பள்ளியில் நடத்தி வைத்த நபிவழித் திருமணத்தை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்தியின் கருப்பொருள், நபிவழித் திருமணங்களுக்கு தடைபோடும் ஜமாஅத்தார்கள் மத்தியில், பிலால் நகர் ஜமாஅத்தினர் திருமண பதிவேடு தந்து, பள்ளியிலேயே திருமணத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்ற சொன்னதை வைத்து, பிற ஜமாஅத்தார்கள் இவ்வாறு செய்வார்களா? என்று எழுதியிருந்தோம். இதை பார்த்தவுடன் பலருக்கு வயிற்றெரிச்சல் கிளம்பியது. 

இதை பார்த்தவுடன் ஒரு சகோதரர், நீங்கள் மட்டும் தான் நபிவழியில் திருமணம் செய்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். சகோதரா, நாங்கள் மட்டும் தான் நபிவழியில் திருமணம் செய்துள்ளோம் என்று நாங்கள் எங்கே குறிப்பிட்டுள்ளோம்? மற்றவர்களை தூய்மையற்றவர்கள் என்று கூறுவது நியாயமா? என்றும் கேட்டுள்ளார் அந்தச் சகோதரர், நாங்கள் எங்களது செய்தியில் அவ்வாறு மற்றவர்களை தூய்மையற்றவர்கள் என்று எங்குமே கூறவில்லையே! நீங்கள் கேட்கும் கேள்விகளை பார்த்தால்,  எங்கோ  பிரச்சினை இருப்பது போல் தோன்றுகிறது, இருந்தாலும் அதை கிளற விரும்பவில்லை. நபிவழித் திருமணம் என்று சொல்லுவதால், அது நபிவழித் திருமணங்களாக ஆகிவிடாது. லட்சம் லட்சமாக வரதட்சனை வாங்கி நடத்தப்படும் திருமணங்களை கூட, நமது ஆலிம்கள், 'திருமணம் எனது வழிமுறை' என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீசை சொல்லித்தான் நடத்துகிறார்கள். அந்த ஆலிம்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீசை சொல்லி ஆரம்பிப்பதால், அது நபிவழித் திருமணமாகாது. 

நபிவழியில் யார் திருமணம் செய்தாலும் அது பாராட்டப்பட வேண்டியது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. நாம் இதுபோன்ற திருமணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு காரணம், மக்களை இவ்வாறு செய்யுங்கள் என்று தூண்டுவதற்காக தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், ஒன்றை அடித்துச் சொல்லுவோம், அதிரையில் அதிகமாக நபிவழித் திருமணங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் நடத்திவைத்துள்ளது. இதை தம்பட்டம் அடிப்பதற்காக நாங்கள் சொல்லவில்லை (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரையில் இதுவரை நடத்திய நபிவழித் திருமணங்கள் பற்றி அறிய). நீங்கள் மற்றவர்கள் அனைவரும் நபிவழித் திருமணத்தை ஒரு நாளுக்கு ஐந்து பத்து என்று நடத்துவதை போல் பேசுவதால், இதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் எற்படுகிறது.

அடுத்தாக, அதே சகோதரர் நீங்கள் இது போன்ற திருமணங்களை செய்து பெருமையடிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறார். உங்களின் திருமணத்தை நீங்களே தம்பட்டம் அடிப்பது பெருமை. உங்களின் திருமணம் பாராட்டப்பட வேண்டிய அளவுக்கு இருந்து, அதை மாற்றவர்கள் பெருமையாக சொன்னால், அது தம்பட்டம் ஆகாது. அதுதான், இந்த திருமணத்திற்கும், மணமகன் வந்து இங்கு தம்பட்டம் அடிக்கவில்லை. நபிவழித் திருமணங்களை ஜமாஅத்கள் அங்கரிக்க வேண்டும், வரதட்சனை திருமணங்களை தடைசெய்ய வேண்டும், மக்களும் எளிமையான நபிவழித் திருமணங்களை நடத்த முன்வர வேண்டும், திருமணங்களில் நபி (ஸல்) அவர்கள் காட்டிதந்த சுன்னத்கள் அனைத்தும் பேணப்பட வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் தான் இந்த செய்தி பதியப்பட்டது. இது பெருமையாகாது என்பது குர்ஆன் ஹதீசை விளங்கியிருந்தால் நன்றாக புரியும்.

அதேபோல், எளிமையான திருமணங்கள் நடக்கத்தான் செய்கிறது என்கிறார். எளிமையான திருமணங்கள் அனைத்தும் நபிவழித் திருமணம் அல்ல, வரதட்சனை இல்லாத திருமணங்கள் அனைத்தும் நபிவழித் திருமணங்கள் அல்ல.

நபிவழித் திருமணங்கள் என்றால், அல்லிக்குத்து பைனகுமா போன்ற எந்த பித்அத்தும் இருக்க கூடாது, வரதட்சனை இருக்கக்கூடாது, பெண் வீட்டு விருந்து இருக்கக்கூடாது, திருமணத்தில் நபி (ஸல்) காட்டிய அனைத்து வழிமுறைகளும் பின்பற்றபட வேண்டும். இதை வைத்து, உங்களின் திருமணம் நபிவழித் திருமணமா? என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

அடுத்து, நாம் நடத்திய திருமணம் நபிவழித் திருமணம் இல்லை என்பதற்கு இவர்கள் கண்டுபிடித்த விஷயம் மணமகன் தாடி வைக்கவில்லை என்பதாகும். நபிவழித் திருமணத்திற்கு தாடி வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மணமகன் தாடி வைக்கவில்லை என்றால், மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தை செய்யவில்லை என்று தான் ஆகுமே தவிர, தாடி வைக்காத காரணத்தினால், இது நபிவழித் திருமணம் அல்ல என்று மார்க்கம் அறிந்தவர்கள் சொல்ல மாட்டார்கள், காரணம் தாடி திருமணத்திற்காக பிரத்யேகமாக சொல்லப்பட்ட சுன்னத் அல்ல. ஒருவர் தாடி வைத்துள்ளாரா? இல்லையா? என்பதை நேரில் பார்க்கும் போது தான் தெரியும், காரணம், சிலருக்கு தாடியே வளர்ந்து இருக்காது, சிலருக்கு அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும். மணமகனை நேரில் பார்க்காதவர்கள், போட்டேவை பார்த்து தாடி வைக்கவில்லை என்கிறார்கள். இவர்களால் கண்டுபிடிக்க முடிந்த தவறு இது ஒன்று தான். இருந்தாலும் மணமகன் தாடி வைத்துள்ளார் என்பதை போட்டேவை Zoom செய்து பார்க்கும் எவரும் புரிந்துக்கொள்வார்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள காழ்புணர்வு தான், அவர்கள் செய்யும் ஒரு நல்ல செயலை உங்களால் ஏற்க முடியாமல் போவதற்கு காரணம். இதற்கு முன் சில இணையதளங்களில், பல திருமணங்களை பற்றி பில்டப் கொடுத்து, அழகான திருமணம் என்றெல்லாம் தம்பட்டம் (உங்கள் பாணியில்) அடித்தார்கள், அப்போது எல்லாம் நீங்கள் வாய்திறக்கவில்லை என்பதை நடுநிலையாளர்கள் அவதானிக்காமல் இல்லை. இதே திருமணத்தை பற்றி வேறு ஒரு இணையத்தில் புகழும் கூட்டம், தவ்ஹீத் ஜமாஅத் செய்த காரணத்தினால், வயிற்றெரிச்சல் தாங்காமல், இவர்களிடம் எப்படியாவது தவறை கண்டுபிடிக்க வேண்டும் என்று துடிக்கிறது.

இறுதியாக, தனிநபர் தாக்குதல்களை அனுமதிக்க மாட்டோம் என்று நியாயம் பேசுபவர்கள், மணமகன் தாடி வைக்கவில்லை (அவர் வைத்து இருந்தும் கூட) என்ற தனிநபர் தாக்குதலை அனுமதித்தது ஏன்? தாடி என்பது ஐந்து அல்லது ஆறு நபர்கள் சேர்ந்து செய்யும் சுன்னத்தா? அல்லது உங்களின் நியாய தத்துவம் வேற்று கிரகத்தினருகானதா? (தாடி இருப்பதாக மறுப்பு தெரிவித்தும் இதுவரை வெளியிடவில்லை)

எனவே, நீங்கள் மற்றவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணத்தால், நபிவழியை எதிர்க்காதீர்கள் என்பதை அறிவுரையாக சொல்லி முடிக்கிறோம்.

Saturday, November 26, 2011

இஸ்லாமிய திருமணம்



இஸ்லாமிய திருமண ஒழுங்களை புத்தக வடிவில் அறிய இங்கே சொடுக்கவும்.