Saturday, February 28, 2015

துபாய் JT மர்கஸில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அல்ஹம்துலில்லாஹ் கடந்த 27/02/2015 வெள்ளிக்கிழமை மாலை 4:45 மணி அளவில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம் துபை JT மர்கஸில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

 1, நமதூரில் தொடங்கபடவுள்ள பெண்கள் அல் ஹிக்மா அரபிக்கல்லுரியின் ஆயுட்கால புரவலர் மற்றும் சந்தாதாரர்கள் சேர்பது என ஆலோசிக்கப்பட்டது .

2, நமது தவ்ஹீத் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு நூல்கள் மற்றும் குரான்  வாங்குவது என தீர்மானிக்கப்பட்டது





Friday, February 27, 2015

அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம் 27.2.2015 வெள்ளிக்கிழமை சுபுஹு தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் கிளைத்தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்று இதில் விரைவில் துவங்கவுள்ள அல்-ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பற்றிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) கல்லூரி நடைபெற இருக்கும் கட்டிடத்தில் மின்சாரம் வேலைகள்  தண்ணீர்  வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்வது
2) கல்லூரி பற்றி இரண்டு இடங்களில் பேனர் வைப்பது
3) உணர்வில் விளம்பரம் செய்வது
4) கல்லூரியின் சேர்க்கை விண்ணப்பத்தை  உடனடியாக பொதுமக்களிடம் வினியோகம் செய்வது
5)கல்லூரிக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பது

6)அல்-ஹிக்மா பெண்கள் கல்லூரிக்கு மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸியை முதல்வராக நியமிப்பது

7) கல்லூரிக்கு வெளியே கல்லூரி நிர்வாக பொறுப்புகளை கவனிப்பதற்கு சகோதரர் கிளை செயலாளர் பக்கீர் முகைதீனை நியமிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன







துபாயில்Tntj அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

இன்ஷாஅல்லாஹ்
அதிரை TNTJ கிளையின் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும்  ஆலோசணை  கூட்டம் வருகின்ற 27/02/2015 வெள்ளிகிழமை  அஸர் தொழுகைக்கு  பிறகு மாலை 4:45 மணி அளவில் தேரா போரி மஸ்ஜித் பின்புறம்உள்ள துபை JT மர்க்கசில் நடைபெறஉள்ளது  . நமது ஊரில் வருகின்ற கல்வி ஆண்டில் துவங்க உள்ள அல் ஹிக்கமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி  துவங்குவதை பற்றியும்  மற்றும் புதிய செயல்பாடுகளை  பற்றியும்  ஆலோசணை செய்ய இருப்பதால் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும்  தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு
அப்துல் ரஹ்மான் 0527788264
சலீம் 0551878637
ஜஹபர் சாதிக் 0557428381

Friday, February 20, 2015

விவாதத்தில் இருந்து அன்சார் மவ்லவி தப்பி ஓட முயற்சி


விவாதத்திலிருந்து அன்சார் மவ்லவி தப்பி ஓட்டம் - முழு விபரம் - Video
+++++++++++++++++++++

சொந்தப் பணத்தில் இந்தியா சென்று விவாதிக்கத் தயார் என்று கூறி வாய்ச்சவடால் விட்டு, தற்போது விவாதத்திருந்து ஓட்டமெடுத்துள்ள அக்கரைப்பற்று அன்சாரின் விவாத நாடகம் பற்றிய சுருக்கமான உரை.

அன்சார் மவ்லவி மற்றும் பி.ஜெ ஆகியோருக்கிடையிலான கடிதப் பரிமாற்றங்களை முழுமையாக படிக்க..

http://www.sltj.lk/ansar-thappi-ottam/



அருமையான ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து  காத்து இருந்தோம் ஓடி ஒழிய இத்தனை வழிகளா ?என்று வியக்க வைக்கிறார் சகோதரர் அன்சார் தப்லீகி .
இந்த விவாதம் நடக்க வேண்டும்  இன்னும் பத்து நாள்  இருக்கின்றது ஸாபித் ,அர்ஹம் ,அப்துல் ஹமீது .முர்ஷித் அப்பாசி ,சித்திக் போன்றவர்கள் எல்லாம் அதிரைக்கே வந்து செல்ல விசா கிடைக்கும்போது இந்த அன்சாருக்கு ஏன் கிடைக்காது ?

அவர்கள் இங்கு வர tntj கடிதம் தேவைப்படவில்லை என்பதை விளக்கி இழுத்து வர யாராவது முயற்சிக்கலாமே
செய்வார்களா ?


Tuesday, February 17, 2015

அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரியை பார்வையிட்ட M I சுலைமான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அதிரையில் துவங்கவுள்ள அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரியை மாநில பொருலாளர் மௌலவி M I சுலைமான் அவர்கள் 13.2.2015 வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள் உடன் மாவட்ட தலைவர் சம்பை சாதிக் பாஷா மற்றும் அதிரை கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர் அல்ஹம்துலில்லாஹ்





Saturday, February 14, 2015

நபிகளாரின் நளினம் அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்(13/02/15)

நபிகளாரின் நளினம்
உரை  கோவை அப்துர்ரஹீம்



Friday, February 13, 2015

அதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்

அதிரை TNTJ கிளை அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 16-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் இரவு 7.00 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் சகோ. ஜாஹிர் தலைமையில் நடைப்பெற்றது.  

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது,   அதில், 22 சகோதரர்களின் உணர்வு, ஏகத்துவம் & தீன்குலப்பெண்மனி ஆகிய வாரம் & மாத இதழ், அல்லாஹ்வின் அருளால் அதிரையில் அபுதாபி சார்பில் துவங்கப்பட்டது. 

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.


இறுதியில்துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.








ஜசாக்கல்லாஹ்..




Thursday, February 12, 2015

நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்!

நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்!
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு பிரச்சாரம் சமுதாயப் பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறது.
v  உமா சங்கரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,
v  கிறித்துவர்களுடன் விவாதங்கள் மூலம் இஸ்லாத்தை பரப்புவது
v  பில்லி சூனியம் ஜோசியம் என்ற பெயரில் மக்களை மடையர்களாக்கி வரும் மந்திரவாதிகளிடம் துணிச்சலாக சவால் விட்டு இஸ்லாத்தையும் ஓரிறைக் கொள்கையையும் நிலை நாட்டி வருவது
v  பிரச்சாரர்களுக்கான பயிற்சி வகுப்பு
v  பிரச்சாரர்களை உருவாக்கும் வகுப்புகள்
v  ஆண்கள், பெண்களுக்கான மதரஸா
v  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தஃவாப் பணி
என்று கணக்கிலடங்காத பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவதைக் கண்டு பொருக்க முடியாமல் வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் நடுநிலைவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பதைத் தங்கள் முக்கியத் தொழிலாக வைத்துள்ளனர். பாவம் வேறு பிழைப்பில்லை இவர்களுக்கு.
எனினும் எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் விவாதக் களத்தில் நேருக்கு நேர் சொல்லுங்கள் என்று இவர்களில் பலருக்கு அழைப்புக் கொடுத்தும் விவாதம் என்றால் ஓடிவிடுகின்றனர்.
அப்படியே விவாதக் களத்திற்கு ஆசைப்பட்டு இவர்கள் வந்தாலும் அங்கு நாம் கொடுக்கும் (பதில்) அடியில் அனைத்தையும் மறந்து விட்டு பேய் (?) அறைந்தார் போல் என்ற பழமொழிக்கு ஏற்ப அமர்ந்து விடுகின்றனர். குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பும் இவர்களுக்கு நம் முன்னிலையில் விவாதத்தில் அவற்றை சொல்ல துப்பில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
எனினும் நடுநிலை வேஷம் போடும் இந்த நயவஞ்சகக் கூட்டத்தினரின் முகத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர்களின் நடுநிலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
நடுநிலை பேசுவோரின் இலட்சனம்
F  நாங்கள் எந்த இயக்கத்தையும் சேராதவர்கள் என்று சொல்லும் இவர்கள் தனி இயக்கமொன்று நடத்துவார்கள்
F  தவ்ஹீத் ஜமாஅத் பிற இயக்கங்களை விமர்சிக்கிறது என்று கூறும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்காத நாள் இல்லை
F  ஒரு சகோதரனின் மானம் கஃபாவைப் போன்று எனக் கூறி அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்கும்  இந்த கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்களை நா கூசாமல் ஆபாச அர்ச்சனை பண்ணுவார்கள்
F  தவ்ஹீத் ஜமாஅத் தனிப் பள்ளி கட்டி சமுதாயத்தை பிரிக்கிறது என்று புலம்பும் இவர்கள் குழப்பம் உண்டாக்கும் பள்ளிவாசல் (?) கூடாரத்தை இவர்கள் பகுதியில் கட்டி வைத்திருப்பார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி கட்டி ஜமாஅத்  பெயரில் பதிவு செய்து கொள்கிறது பள்ளியை அபகரிக்கும் முயற்சி இது என்று சொல்லிக்கொண்டே பிலால் பள்ளியை அபகரிக்க முயற்சி செய்வார்கள் .( பிலால் பள்ளியில் இருந்து சமீபத்தில் விரட்ட பட்டார்கள் )
F  தவ்ஹீத் ஜமாஅத்தில் பயான் செய்வோர் மட்டும் தான் தவ்ஹீத் வாதிகளா? நாங்கள் யார் பயான் செய்தாலும் கேட்போம், அனைவரின் நூல்களையும் படிப்போம் பரப்புவோம், என பிதற்றித் திரியும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் நூல்களை மட்டும் இவர்களின் பள்ளிவாசலிலும் மதரஸாவிலும் அப்புறப்படுத்தி விடுவார்கள்.
F  நாங்களும் தவ்ஹீத் தான் என மக்களை ஏமாற்றி வரும் இவர்கள் மத்ஹபைப் பின்பற்றும் ஆலிம்களைக் கூட ஜும்மாவில் ஏற்றத் தயங்குவதில்லை. ஏனென்றால் இவர்கள் பார்வையில் பிஜேவை எதிர்ப்பது மட்டும் தானே தவ்ஹீத். என்ன கொள்கை உறுதி? அடேங்கப்பா!
F  உலகத்தில் எந்தப் பகுதியில் பிறை பார்த்தாலும் பெருநாள் கொண்டாடுவது தான் சரியான பாதை. அதுவே விஞ்ஞானம், நபி பெருநாள் கொண்டாடியது போல் பெருநாள் கொண்டாடுவது வழிகேடு என கூறும் இந்தக் கூட்டத்தினர் ஊரை ஏமாற்ற இரண்டு பெருநாள் தொழுகையை நடத்துகின்றனர். இதுவே இவர்களின் தனிச் சிறப்பு?
F  தவ்ஹீத் ஜமாஅத் நேற்று ஒரு ஃபத்வா! இன்று ஒரு ஃபத்வா கொடுக்கிறது, நாங்கள் அப்படியெல்லாம் ஆய்வு செய்யும் கூட்டமல்ல, அறைவேக்காட்டுத்தனமான கூட்டம் என்று நிரூபிக்கும் இவர்கள், தங்கள் இயக்கத்தின் சார்பாக பேச அழைத்து வரும் ஆய்வாளர்(?)களை ஒரே மேடையில் அமர வைத்து ஒரே கேள்வியை அனைவரிடமும் கேட்டால் ஒரே நாளில் ஒரே விசயத்தில் எப்படி முரண்பட்டு அந்த ஆய்வாளர்(?)கள் நிற்பார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். அப்போது இவர்களின் முரண்பட்ட ஃபத்வாக்கள் கிழிந்து தொங்கும்.
F  தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சித்து கூட்டம் நடத்தும் இந்தக் கொள்கை கெட்டவர்களுக்கு துப்பிருந்தால் முக்காடு போட்டுக் கொண்டு ஒப்பாரி வைக்கும் பாஸித், அல்லது ஜாகிர் நாயக் அல்லது, ஸலஃப் ஜுப்பா கும்பலை அழைத்து வந்து மத்ஹபைப் பற்றிப் பேச வைக்க இயலுமா? வழிகெட்ட தரீக்காவை பற்றி  பேச வைக்க இயலுமா? அப்போது தெரியும் இவர்கள் தவ்ஹீதைச் சொல்லத் துணிவில்லாத கூட்டம் என்பதும் தகுதியற்ற கூட்டம் என்பதும்.
F  வரதட்சனை மற்றும் ஆடம்பரத் திருமணங்களில் பாரபட்சம் இல்லாமல் கலந்து கொள்வது தான் இவர்களின் நடுநிலைக் கொள்கை
F  இணைவைக்கும் இமாம் பின்னால் நின்று தொழுவது தான் இவர்கள் கூறும் தவ்ஹீத் ஃபத்வா?
F  பணக்காரர்களுக்கு வளையும் தவ்ஹீதைத் தான் இவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஹஜ் உம்ரா பெயரில் தங்கள் சகாக்கள் மோசடி செய்தாலும் ரியல் எஸ்டேட் பெயரில் மக்களை ஏமாற்றித் திரிந்தாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக சொல்லி அடுத்தவன் பணத்தை ஆட்டைப் போட்டாலும் அவர்களுக்குத் தோள் கொடுப்பது தான் இவர்கள் கண்டு பிடித்த சமுதாய ஒற்றுமை? தவ்ஹீத்?
F  சூனியம் கண்ணேறு போன்ற இணைவைப்பை நியாயப்படுத்துதான் இவர்களின் தவ்ஹீத்?
F  தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நின்று விட்டால் மகிழ்ச்சியடைவதும் நடந்து விட்டால் கவலைப்படுவதும் தான் இந்த நயவஞ்சகர்களின் தவ்ஹீத்?

தவ்ஹீதுக்கு எதிராகவே இவர்கள் இயங்குகிறார்கள் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல என்ற நமது குற்றச்சாட்டுக்கு இவர்களிடம் பதில் இல்லாததால் தனி நபர் விமர்சனத்தில் ஈடுபடுகின்றனர். எந்த தனி நபர் மீதான விமர்சனத்தையும் எப்படி எதிர் கொள்வது என்று ஜமாஅத்திற்கு தெரியும். யாருக்காகவும் வளையாத ஜமாஅத் தான் தவ்ஹீத் ஜமாஅத்.
வேலையற்ற வீணர்களின் விமர்சனங்களுக்கு தேவை ஏற்பட்டால் தலைமை விளக்கமளிக்கும். எனினும் யாரும் அவசரப்பட வேண்டாம். ஆசைப்பட வேண்டாம். பேச வேண்டிய மேட்டர் நிறைய இருக்கு. மதரஸாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு இவர்களின் ஆசிரியர்(?) நடவடிக்கை எடுக்கப்பட்ட விசயங்களும் நர்ஸ் விவகாரமும் தாயுடனும் சகோதரியுடனும் கூட பாலியல் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டேன் என்று இவர்களின் ஆய்வாளர்(?) பேசியது உட்பட இன்னும் பல விவகாரங்களும் பாக்கி இருக்கிறது.

அதை மாநிலத் தலைமை விரும்பினால் பேசுவார்கள். அது வரை பொறுத்திருப்போம்உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்து கிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சி னால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.(3:120)

Wednesday, February 11, 2015

அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரி கலந்தாய்வு

அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்று 10/02/15 இஷா தொழுகைக்கு பிறகு மத்ரஸா சம்பந்தமாக தவ்ஹீத் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த அமர்வில் மதரஸாவிற்கு "அல் ஹிக்மா" மகளிர் இஸ்லாமியக் கல்லூரி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!
வரும் கல்வி ஆண்டில் மூன்று வருட பட்டப் படிப்பும், ஒரு வருட வகுப்பும் நடைபெறும், இன்ஷா அல்லாஹ்.
மேல் விவரங்களுக்கு:
சகோ. பக்கீர் முகம்மது - 9500821430
சகோ. அப்துல் ஜப்பார் - 9629533887









மதரசா விற்கான இடம் பார்வை இடல்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கவுள்ள பெண்கள் இஸ்லாமியக் கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாநிலப் பேச்சாளர் சகோதரர் அஷ்ரஃப் தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மற்றும் அதிரைக் கிளையின் பொறுப்பாளரும், மலேஷியக் கிளையின் பொருளாளருமான‌ ஜாஹிர் அவர்களும் இன்று பார்வையிட்டனர்.
இன்ஷா அல்லாஹ் மற்ற விபரங்கள் விரைவில்…















Friday, February 06, 2015

உறவும் பிரிவும் அல்லாஹ்விற்கே (ஜும்மா 06/02/15)


உறவும் பிரிவும் அல்லாஹ்விற்கே



11:46 قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۖ إِنِّي أَعِظُكَ أَن تَكُونَ مِنَ الْجَاهِلِينَ

'நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்' என்று அவன் கூறினான்


 60:4 قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ إِلَّا قَوْلَ إِبْرَاهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَا أَمْلِكُ لَكَ مِنَ اللَّهِ مِن شَيْءٍ ۖ رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ '

உங்களை விட்டும், அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. 'உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ் விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர.247 (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) 'எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது' நமக்கும் இதே அறிவுரை


 58:22 لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

 அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ் வையும் இறுதி நாளையும்1 நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.


 8:67 مَا كَانَ لِنَبِيٍّ أَن يَكُونَ لَهُ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِي الْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ الدُّنْيَا وَاللَّهُ يُرِيدُ الْآخِرَةَ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ 8:68 لَّوْلَا كِتَابٌ مِّنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ

 பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப் பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்

 இன்று நம் நிலை

 மௌலிது ஓதும் பள்ளிவாசலை நாம் புறக்கனித்தோமா ?
இணை கற்பிக்கும் இமாமை புறக்கணித்து உள்ளோமா ?
 வரதட்சனை திருமணங்களை புறக்கணித்தோமா ?

 |புஹாரி ஷெரீஃப் என்ற பெயரில் நடக்கும் கூத்தை புறக்கணித்தோமா ? வரதட்சணைக்கு எதிராக நாம் என்ன செய்தோம் ?
 ஆடம்பர திருமணத்திற்கு எதிராக என்ன செய்தோம் ?
வட்டியை ஒழிக்க வட்டி இல்லாத கடன் திட்டம் செய்வதற்கான முயற்சியாக நாம் என்ன செய்தோம் ?
கந்தூரியை தடுத்து நிறுத்த நாம் செய்யும் முயற்சி போதுமானதா ? தர்காக்களை அப்புற படுத்த செய்த முயற்சி என்ன ? வாழா வெட்டி பெண்களை வாழ வைக்க செய்த முயற்சி என்ன ?

சங்கத்து புத்தகத்தில் பதிவதற்கு 2400 ரூபாய் கொடுத்தால் போதும் வரதட்சனை கொடுக்கின்றீர்களா கொடுத்தால் ஆம் என்று எழுதுங்கள் இல்லை என்றால் இல்லை என்று எழுதுங்கள் என்றே சங்கத்து புத்தகத்தில் அதிகாரபூர்வமாக வரதட்சணையை ஏற்று கொள்ளும் நிலையில் நமது முஹல்லாக்கள் இருக்கின்றது 

Wednesday, February 04, 2015