Showing posts with label மடமை. Show all posts
Showing posts with label மடமை. Show all posts

Wednesday, May 15, 2013

ஜாதியை ஒழிக்க என்ன வழி? (வீடியோ)

ஜாதியை ஒழிக்க என்ன வழி? (வீடியோ)

Tuesday, December 25, 2012

ஹாஜா ஒலி அப்பா அவ்லியாவுக்கு ஆப்பு!



ஹாஜா ஒலி அப்பா அவ்லியா வைச்ச ஆப்பு! - இணைவைத்த நிலையில் மரணத்தைத் தழுவினார் அதிரை அலாவுதீன்.

ஹாஜா ஒலி அப்பா(?)வால் காப்பாற்ற முடியவில்லை ? அதிரையின் அவுலியா நேசர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

23/12/2012 அன்று அதிரை ஹாஜா ஒலி தர்ஹாவில் ஹத்தத்து இரவு அன்று மண்டகப்படி எடுத்து வந்து அவுலியா(?)வின் கபுரில் சந்தனம் பூசுவதற்காக கபுருக்கருகில் சென்றதும் கதவை மூடி விட்டனர் தர்ஹா நிர்வாகிகள்.

ஏற்கனவே சாம்பிரானி, ஊதுவத்தி எறிந்து கபுர் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் புகை மண்டலமாகி இருந்துள்ளது.

கதவைப் பூட்டியதும் லோ ப்ரஷர் நோயாளியான அலாவுதீன் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுத் திணறி இறந்து விட்டார்.

அதிக நேரமாகியும் கதவு திறக்காதது கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் கதவைத் திறக்க தர்ஹா நிர்வாகிகளிடம் கோரியதும் கதவு திறக்கப்பட்டது மரக் கட்டையாக கிடந்த அலாவுதீனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் குடும்பத்தினர்.

ஏக இறைவனுக்கு இணைவைத்த நிலையில் மரணித்த இவருடைய மறுமை வாழ்வை நினைக்கும் போது நெஞ்சு கணக்கிறது.

மன்னிப்பு கிடையாது அல்லாஹ் எச்சரிக்கிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48.

இன்னும் எத்தனைப் பேரை நரகிற்கு அனுப்பும் பணியை இந்த தர்ஹா நிர்வாகிகள் செய்வார்களோ தெரியாது ?

மறுமையில் மனிதர்களின் கால்களில் மிதிபடும் தர்ஹா நிர்வாகிகள்.

இவர்களால் நரகிற்கு அனுப்பப்படுபவர்கள் மறுமையில் அவர்களால் காலில் இட்டு மிதிக்கப்படுவார்கள் என்பதை அறிய வில்லை? அல்லது அறிந்தும் மறுக்கின்றனர்.

எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 41:29

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்' (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன் 2:186)

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 'அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:191 195)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:106)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)


அல்லாஹ்வை தவிர எவரும் யாரையும் அழிக்கவோ காக்கவோ முடியாது என்று உறுதியாக நம்புவோம்.

எந்த அவ்லியாவிற்கும் எந்த சக்தியும் கிடையாது என்று சவால் விடுகிறோம். உண்மையில் அவ்லியாவிற்கு சக்தியிருந்தால், தவ்ஹீத் கொள்கையை ஏற்றுள்ள மக்களின் மீது கை வைத்து பார்க்கட்டும்.

நன்றி அதிரை பாருக் (சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது)

Sunday, April 01, 2012

தேவ்பந்த் மதரஸாவின் முட்டாள்தனமான பத்வா!


பிப்ரவரி 21- ல் ஒருவர் தன் தங்கை குறித்து மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் மதரஸாவிடம் பத்வா கேட்டுள்ளார். 

தனது தங்கையின் கணவர் மது அருந்தி போதையில் தனது தங்கையை பார்த்து தலாக் தலாக் தலாக் (ஒரே தடவையில்) என மூன்று முறை கூறியுள்ளார். அதுவும் செல்போனில் தலாக் கூறியுள்ளார். போதை தெளிந்த பின்பு தான் செய்ததை உணர்ந்துள்ளார். போதையில் தெரியாமல் செய்துவிட்டதை எண்ணி மனம் வருத்தப்பட்டுள்ளார். மனைவியிடமும், மனைவியின் சகோதரரிடமும் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு எனது மச்சான் போதையில் தெரியாமல் தலாக் சொல்லியுள்ளார்; எனவே எனது தங்கையின் நிலை என்ன?  என்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவில் பத்வா கேட்டுள்ளார்.

இதற்கு தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸா ஒரு காட்டுமிராண்டித் தீர்ப்பை மார்ச் 12 -ல் வழங்கியுள்ளது.

உங்கள் தங்கையிடம் 3 தலாக் சொல்லப்பட்டு விட்டது. எனவே உங்கள் தங்கை அவரின் கணவருக்கு ஹராம் (அதாவது விலக்கப்பட்டவள்). தலாக் மொபைல் போனில் சொல்லப்பட்டதாலோ, மது அருந்திய நிலையில் சொல்லப்பட்டதாலோ அது தலாக் இல்லை என ஆகிவிடாது. எனவே அவள் மறுபடியும் அவரது கணவரை மறு திருமணம் செய்ய முடியாது.

இதுதான் அந்த அறிஞர்கள்(?) சொன்ன பத்வா.

இந்த முட்டாள்தனமான பத்வா பற்றி பரேலவி மதரஸாவில் படித்த இத்திஹாதே மில்லத் கவுன்சிலின் தலைவர் மவ்லானா(?) தாகிர் ரஸ்ஸா கான் என்பவரிடம் கேட்கும் போது.... 

"தாருல் உலூம் தேவ்பந்தின் பத்வா சரிதான். தலாக் எந்த நிலையில் சொல்லப்பட்டாலும் அது தலாக் தான். போதையோடு இருந்தாலும், நல்ல நிலையில் இருந்தாலும் தலாக் சொன்னால் அது தாலாக் தான். எனவே அவர்கள் பிரிந்து விட வேண்டும். அவர் இதை மேலும் விளக்கும் போது  தலாக் என்பது "கல்" மாதிரி, திருமணம் என்பது "கண்ணாடி கிளாஸ்" மாதிரி, கல்ல எடுத்து கண்ணாடி கிளாஸ்ல அடிச்சா கிளாஸ் உடஞ்சுடும். சும்மா அடிச்சா என்ன, போதையோடு அடிச்சா என்ன கிளாஸ் உடையத்தான் செய்யும் (என்ன ஒரு விளக்கம்???) என அற்புதமான ஒரு விளக்கத்தைக் கூறியுள்ளார் இந்த பரேலவி இமாம்.

இந்த விஷயத்தில் தேவ்பந்திகளும் பரேலவிகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர். மத்ஹபு நூல்களில் இது போல் எழுதப்பட்டுள்ளதால் பரேலவிகள் எனும் சமாதி வழிபாட்டுக்காரர்களும் தேவபந்திகள் எனும் சமாதி வழிபாட்டை எதிர்ப்பவர்களும் இதில் ஒன்றுபட்டு ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். தலாக் குறித்து திருக்குர்ஆனும் நபிமொழிகளும் கூறும் வழிகாட்டல்கள் பலவற்றை அப்பட்டமாக மீறும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

தலாக்குக்கு சாட்சிகள் அவசியம்:

மனைவியை கண்வன் தலாக் சொல்லும் போது இரண்டு சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கட்டளையிடுகிறது.

நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர். அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

திருக்குர் ஆன் 65:1,2 

விவாகரத்து செய்யும் விதிமுறைகளைக் கூறும் தலாக் என்ற அத்தியாயத்தில் தலாக் சொல்லும் போதும் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் போதும் இரண்டு சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கட்டளையிடுகிறது.

தொலைபேசியில் விவாகரத்து, தபாலில் விவாகரத்து, மின்னஞ்சல் மூலம் விவாகரத்து என்றெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச் செய்வதையும், அதை மார்க்க அறிஞர்கள் சரி காண்பதையும் நாம் காண்கிறோம்.

தபாலில் எழுதும் போதும் தொலைபேசியில் பேசும் போதும் மின்னஞ்சல் அனுப்பும் போதும் இரண்டு சாட்சிகள் இருந்தால் போதும் என்று வேறு சிலர் இதைச் சிலர் விளங்கிக் கொள்கின்றனர்.

விவாகரத்துச் செய்பவனையும், செய்யப்பட்டவளையும், இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும்.

எனவே எதிர்த்தரப்பில் உள்ள பெண் யார் என்பது தெரியாமல், அவள் இவனுக்கு மனைவி தானா என்பதையும் அறியாமல், தன் மனைவியுடன் தான் தொலைபேசியில் பேசுகிறானா என்பதையும் அறியாமல் எவரும் சாட்சியாக முடியாது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் இரண்டு சாட்சிகளை வைத்து விவாகரத்துச் செய்தால் செல்லுமா என்ற சந்தேகமும் சிலருக்கு உள்ளது. வீடியோ மூலம் ஒருவன் விவாகரத்துச் செய்வதையும் அதற்கு இரண்டு பேர் சாட்சிகளாக இருப்பதையும் இங்கிருந்து கொண்டே பார்க்க முடிகிறது; எனவே இது செல்லும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதுவும் தவறாகும். ஏனெனில், இதை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை.

ஒரு திரையில், தலாக் சொல்பவனையும், அதற்குச் சாட்சியான இருவரையும் தான் நாம் பார்க்கிறோம். அவர்கள் எந்தப் பின்னணியில் இருக்கிறார்கள்? திரையில் தென்படாத வகையில் யாரேனும் மிரட்டுவதால் அவ்வாறு சொல்கிறார்களா? சுயநினைவுடன் அதைச் சொல்கிறார்களா? அல்லது கிராபிக்ஸ் மூலம் அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? அது நேரடி ஒளிபரப்பா? அல்லது பதிவு செய்யப்பட்டதை ஒளிபரப்புகிறார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இதில் இருப்பதால் இதுவும் செல்லத்தக்கதல்ல.

எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேர்மையான இரு சாட்சிகளுக்கு முன் சொல்வது தான் தலாக்கின் சரியான வழிமுறையாகும்.

திருக்குர் ஆன் கற்றுத்தரும் இந்த வழிமுறைக்கு முரணாக தொலைபேசியில் சொல்லப்பட்ட தலாக் அமைந்திருப்பதால் இந்த தலாக் செல்லாது என்று தீர்ப்பளிக்க வேண்டியவர்கள் அல்லாஹ்வின் வேதத்துக்கு மாற்றமாக இத்தீர்ப்பை அளித்துள்ளனர்.

முத்தலாக் கூடுமா?

ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ ஒருவன் கூறினாலும் ஒரு விவாகரத்து தான் நிகழ்ந்துள்ளது. ஒரு விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அது போல் இப்போதும் செய்து கொள்ளலாம்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 2691

ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்று கூறி அது மூன்று தலாக்காகவே கருதப்படுதல் நபிகள் நாயகத்துக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.

தேவ்பந்த் பத்வா மேற்கண்ட நபிவழியையும் அப்பட்டமாக மீறியுள்ளது. இவர்களுக்கு மார்க்க அறிவு சிறிதும் இல்லை என்பதற்கு இதுவும் ஆதாரமாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வுக்கு எதிராகவும் நபிகள் நாயகத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட்ட தீர்ப்பு எப்படி இஸ்லாமியத் தீர்ப்பாக இருக்க முடியும்?

போதையில் தலாக் சொன்னால் செல்லுமா?

அடுத்து போதையில் சொல்லப்பட்ட தலாக் செல்லும் என்று கூறி மூன்றாவது தவறைச் செய்துள்ளனர்.

போதையில் ஒருவன் விஷம் குடித்தாலும் போதை இல்லாமல் விஷம் குடித்தாலும் அவன் சாகத் தான் செய்வான். போதையில் கண்ணாடிக் குவளையை எறிந்தாலும் போதையில்லாமல் எறிந்தாலும் அது உடையத்தான் செய்யும். இதுபோல் போதையில் ஒருவன் தலாக் சொன்னாலும் போதையில்லாமல் தலாக் சொன்னாலும் அது நிகழத்தான் செய்யும் என்று இதற்குக் காரணம் வேறு கூறுகிறார்கள். இவர்களுக்கு மார்க்க அறிவு இல்லை என்பதுடன் சிந்திக்கும் திறனும் இல்லை என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

மெட்டீரியலைப் பயன்படுத்துவதற்கும், சிந்தனையைப் பயனபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை இவர்கள் உணரவில்லை. போதையுடன் இருந்தாலும் போதையுடன் இல்லாவிட்டாலும் மெடீரியலை – சடப்பொருட்களைப் பயன் படுத்தினால் அதற்கான விளைவு ஏற்பட்டே தீரும் என்பது உண்மை தான். ஆனால் சிந்தனையைப் பயன்படுத்தும் போது போதையில் இருந்தாலும் போதையில் இல்லாவிட்டாலும் இரண்டு நிலையிலும் சிந்தனைத் திறன் சம்மாக இருக்கும் என்று மூளையுள்ள யாரும் கூற மாட்டார்கள்.

போதையில் ஒருவன் நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் அதன் காரணமாகவே அந்த சாட்சியம் நிராகரிக்கப்பட்டு விடும். போதையில் ஒரு நீதிபதி தீர்ப்பளித்தால் அல்லது இது போன்ற போலி அறிஞர்கள் போதையில் பத்வா கொடுத்தால் அது செல்லும் என்று யாரும் கூற மாட்டார்கள்.

நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் போதையில் இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள். நீங்கள் சொல்வது உங்களுக்கே விளங்கும் வரை.

திருக்குர்ஆன் 4:43

போதை நேரத்தில் ஒருவன் சொல்வது அவனுக்கே தெரியாது என்று இவ்வசனம் கூறுகிறது. எனவே போதையில் ஒருவன் எடுக்கும் முடிவுகளும் ஒப்பந்தங்களும் செல்லாது என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

இவர்களோ பொருத்தமற்ற உதாரணங்களைக் கூறி தங்களின் மதியீனத்தைக் காட்டிக் கொள்கின்றனர்.

போதையில் சொல்லப்பட்டதாலும், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் சொல்லப்படாததாலும் இது தலாக் ஆகாது. இருவரும் தாராளமாக சேர்ந்து வாழலாம் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.