Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Monday, September 15, 2014

வாழ்வாதார உதவி

அதிராம்பட்டினம் தைக்கால் தெரு மிஸ்கீன் பள்ளிவாசல் அருகில் இரண்டு மனநல பாதிக்கப்பட்டவர்களை வைத்திருக்கும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையின்  முயற்சியால் வீட்டிற்கு கீற்று மாற்றிக்கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்




Monday, July 28, 2014

தரகர் தெருவைச் சார்ந்த சகோதரருக்கு 14 ஆயிரம் மருத்துவ உதவி


அதிராம்பட்டினம் தரகர் தெருவை சார்ந்த சகோதரின் மருத்துவ செலவுக்காக அவரின் தந்தையிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரூ 14000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


Monday, February 24, 2014

அதிரை கிளை சார்பாக வாழ்வாதார உதவியாக தையில் மிஷின்

அதிரை கிளை சார்பாக வாழ்வாதார உதவியாக தையில் மிஷின்

அதிராம்பட்டினம் பாத்திமா நகரில் வசித்துவரும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் அதிரை கிளை சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


Thursday, November 28, 2013

அதிரை கிளை சார்பாக மருத்துவ உதவி

புதுமனைத்தெருவை சார்ந்த சகோதரிக்கு தன் பிள்ளையின் மருத்துவ செலவுக்காக குர்பாணி தோல் விற்றபணத்தில் இருந்து ரூ5000 வழங்கப்பட்டது.


Wednesday, August 21, 2013

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் மருத்துவ உதவி

அதிராம்பட்டினம் சேது ரோட்டை சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ள சகோதரின் அறுவை சிகிச்சைக்காக ரூ 4000 அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டது


தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கல்வி உதவி

மேலத்தெருவை சார்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கு ஒரு வருட கல்வி கட்டணத்தை TNTJ அதிரைக்கிளையின் சார்பாக ரூ 4250 அவரின் தயாரிடம் வழங்கப்பட்டது.


Thursday, June 27, 2013

Saturday, June 22, 2013

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக தையல் மிஷின் வாழ்வாதார உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நெசவுத்தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷன் ஒன்று வழங்கப்பட்டது.

Sunday, March 17, 2013

ரூபாய் மூவாயிரம் மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 13.2.2013 அன்று M.S.M நகரை சேர்ந்த ஒரு சகோதரருக்கு ரூபாய் 3000 மருத்துவ உதவியாக கிளை  துணை செயலாளர் சுலைமான் அவர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


Tuesday, March 12, 2013

ரூபாய் பத்தாயிரம் மருத்துவ உதவி!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 3.3.2013 அன்று மேலத்தெருவை சார்ந்த ஒரு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் மருத்துவ உதவியாக கிளை பொருளாளர் மீரா முகைதீன் அவர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


Thursday, August 23, 2012

அதிரையில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா வினியோகம்!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இந்த வருடம் ஃபித்ராவாக ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா பொருட்களை பெற தகுதியானவர்களை தேடி சென்று வழங்கியது.  அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்தில் 87,640 ரூபாய் அதிரை கிளை வசூல் செய்தது.  மீதமுள்ள 63,800 ருபாய் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையால் அதிரை கிளைக்காக வழங்கப்பட்டது. இந்த தொகை மூலம் நமது ஊரில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இவற்றிக்கான கணக்கு விபரம் கீழே தரப்பட்டுள்ளது. ஃபித்ராவிற்காக வசூல் செய்யப்பட்ட தொகை அந்த பணிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.



Thursday, March 08, 2012

2011 குர்பானி தோல்கள் கணக்கு விபரம் - ரூபாய் 56900 மதிப்பில் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள்

கடந்த ஹஜ் பெருநாள் (2011)  TNTJ அதிரை கிளை மக்களிடம் பெறப்பட்ட குர்பாணி தோல்களை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தில் இருந்து அதிரை அனைத்து பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. அதன் புகைப்படமும், கணக்கு கீழே உள்ளது.


கீழத்தெரு (பழைய படம்)


கீழத்தெரு (பழைய படம்)


கீழத்தெரு (பழைய படம்)


(பழைய படம்)


மேலத்தெரு


நெசவுத்தெரு

மேலத்தெரு

கடற்கரைத்தெரு

பிலால்நகர்

தரகர்தெரு

நெசவுத்தெரு

புதுத்தெரு

Thursday, January 12, 2012

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ரூ.10 லட்சம் நிதியுதவி


சென்னை: தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் புதுவை பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிதியுதவி அளித்துள்ளது. 

இது குறித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் டிசம்பர் 31ம் தேதி முதல் அந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையைச் சேர்ந்தவர்கள் உடனடியாகக் களமிறங்கி அந்த மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர், பால், உணவு ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர். இன்னும் சில கிளைகளில், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தானே புயலால் வீடுகளை இழந்தவர்களும், கூரைகள் இடிந்தவர்களும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

10 லட்சம் நிதியுதவி 

அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாநிலச் செயலாளர்கள் எழும்பூர் சாதிக், அம்பத்தூர் யூசுப், மவ்லவி ஜமால், சமூக ஆர்வலர் தஸ்தகீர், துறைமுகம் கிளைத் தலைவர் ஷரீப் ஆகியோர் அடங்கிய நிவாரணக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கியது. தானே புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்டனர். 

பண்ருட்டி பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ. 2,000த்தை முதல் கட்ட நிவாரண உதவியாக வழங்கினார்கள். இதுவரை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மற்றும் புதுவையில் உள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர்.

நன்றி: தட்ஸ்தமிழ்

மேலும் விபரங்களுக்கு:


Saturday, January 01, 2011

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்

அல்லாஹ்வின் கிருபையால், அதிரை ECR ரோட்டில் கீற்று கொட்டகையில் செயல்பட்டு வரும் 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசலின் கட்டிட பணி துவங்கி, தரைமாட்டம் வரையிலான கட்டிட பணி முடிந்துள்ளது. பொருளாதார பற்றாக்குறையால் கட்டிட பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிரந்தர நன்மையை பெற்று தரும் இந்த பணிக்கு உங்களின் நன்கொடைகளை அள்ளித்தாருங்கள்.

இந்த பள்ளியின் கட்டிட பணிக்கு உதவி செய்ய கோரிக்கை வைத்து, சமீபத்தில் அதிரையில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பீ.ஜே அவர்களின் சொற்பொழிவு வீடியோ: 




மஸ்ஜிதுத் தவ்ஹீத் பற்றி விபரம் அறிய இங்கே சொடுக்கவும்.

உங்களின் நன்கொடைகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்.

உங்களின் நன்கொடைகளை அனுப்ப தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கீழ்காணும் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

தலைவர்:
ராஜிக் அஹமது (99434-47195)

துணைத்தலைவர்:
அப்துல் ஜப்பார் (99769-20828)

செயலாளர்:
ஹைதர் அலி (96776-26656)

Tuesday, October 12, 2010

அதிரை TNTJ வின் வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 29.09.2010 அன்று கடல்கரைத்தெருவில் வசிக்கும் ஏழை பெண்ணிற்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் மெஷின் வழங்கப்பட்டது.


இதை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

Saturday, June 19, 2010

காலத்தால் சிறந்த கல்வி உதவி

ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. அந்தப் பண்புகளில் ஒன்று ஏழைக்கு உதவி வழங்குவதாகும்.

இந்த ஏகத்துவம், ஓர் இறை நம்பிக்கையாளரிடம் குடிகொண்டு விட்டால் அவர் ஏழைக்கு உதவி செய்யும் இனிய பண்புக்குச் சொந்தக்காரராக ஆகி விடுகின்றார். அதுவும் கைமாறு எதிர்பார்க்காமல், நன்றி வார்த்தைக்குக் கூடக் காத்திருக்காமல் அள்ளி வழங்குகின்றார். இந்த தர்மத்தின் காரணமாக அவரிடத்தில் உள்ள எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான். அது தான் இறை திருப்தியாகும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அல்குர்ஆன் 76:8, 9

அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.

அல்குர்ஆன் 92:18-20

ஏழைகளுக்கு வழங்குவதில் இறையன்பு கிடைக்கின்றது என்று இறைவன் கூறியதும் மக்கள் தங்களுக்கும், தங்கள் வாரிசுகளுக்கும் எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் செலவு செய்து விடக் கூடாது என்பதற்காக தர்மத்திற்கு மார்க்கம் ஒரு வரம்பைக் காட்டுகின்றது.

'விடைபெறும்' ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்'' என்றார்கள். பின்னர் நான் "பாதியைக் கொடுக்கட்டுமா?'' எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்து விடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட தன்னிறைவுடையர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைப் பொருத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நன்மையுண்டு'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 1295

மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைத் தான் தர்மம் செய்யும்படி மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மூன்றில் ஒரு பகுதியை வழங்கச் சொல்லி விட்டு மீதியைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அதை பெற்றோர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தினருக்கு வழங்கச் சொல்கின்றது. அதற்கு அதிகம் நன்மை என்றும் கூறி ஆர்வத்தை ஊட்டுகின்றது. உறவினர்களுக்கு வழங்குவதில் இரு மடங்கு நன்மை என்று விளக்குகின்றது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக் கூறி விட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், "அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால் (ரலி), "அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1466

உறவினருக்கு வழங்குவதால் வாழ்நாளில், பொருளாதாரத்தில் வளம் பெருகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 2067

இஸ்லாம் கூறும் இந்தப் போதனையை உலக மக்கள் கடைப்பிடித்தால் உண்மையில் யாசகர்கள் பெருக மாட்டார்கள். அவரவர் தங்கள் சுற்றத்தாருக்கும் சொந்தக்காரர்களுக்கும் வழங்கினால் வீதிகளில் வெள்ளமாய் பெருக்கெடுத்து வருகின்ற பிச்சைக்காரர்களை நாம் காண நேரிடாது. மக்கள் உறவைப் பேணாததால் தான் இந்த அவல நிலை!

ஏழைகளுக்கு உணவளித்தல், உறவினர்களை ஆதரித்தல் என்றால் தங்கள் சொந்த பந்தங்களைத் திருமண விருந்தில் அழைத்து விருந்தளித்து விட்டால் போதும் என்று தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். திருமண விருந்தில் தங்களின் பண பலத்தைக் காட்டியும், வளத்தைக் கொட்டியும் மகிழ்கின்றார்கள். உண்மையில் இஸ்லாம் இது போன்ற காரியங்களை வரவேற்கவில்லை.

ஒரு சிலர், ரமளானுக்கு ரமளான் சில ஆயிரங்களைச் சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு விளம்புகின்றனர். ஒரு சிலர், வேட்டி, சட்டை போன்ற துணிமணிகளை எடுத்து சிலருக்குக் கொடுத்து விட்டு இத்துடன் தங்களுடைய கடமை முடிந்து விடுகின்றது என்று நினைக்கின்றனர்.

இவையெல்லாம் ஒரு தற்காலிக உதவி தான். இதனால் யாருடைய வறுமையும் அகன்று விடாது. இது நிரந்தர உதவியாக ஆகிவிடாது.

உதவி என்பது நிரந்தரமாக அமைய வேண்டும். ஒருவரது வியாபாரத்திற்காக ஏதேனும் உதவி செய்து அவரது பொருளாதார நிலையை மேம்படுத்தலாம். தனது உறவினர்களின் குடும்பத்திலுள்ள மாணவர்களின் கல்விச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

இப்போது கல்லூரிகள் திறந்து விட்டன. மாணவர்கள் கலை, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் கல்லூரிகளில் சேர்வதற்காக, அதற்கான கட்டணத்திற்காக கையறு நிலையில் இருப்பார்கள்.

இவர்களது நிலையைப் பற்றி மற்றவர்களை விட நெருங்கிய உறவினர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்து வைத்திருப்பது அவர்களுக்குக் கடமையுமாகும்.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:272

உறவினர்களை மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைவரையும் இது போன்று அடையாளம் கண்டு உதவி செய்யச் சொல்கிறான். இவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளாதவர்களை, அறியாதவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். சமுதாயத்திலுள்ள பிறருக்கே இந்த நிலை என்றால் உறவினர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

நெருங்கிய உறவினர்களை அடையாளம் கண்டு உதவ முன்வரவில்லை எனில் அவர் உறவைப் பேணாதவர் ஆவார். வசதியிருந்தும் உறவைக் கவனிக்காத குற்றத்திற்கு உள்ளானவர் ஆவார். அல்லாஹ் காக்க வேண்டும்.

கல்வியாண்டின் துவக்கமான இந்தக் கால கட்டத்தில் நம் குடும்பத்தில் ஒரு மாணவனுக்குப் பொறுப்பேற்று நாம் கல்வி உதவி செய்தோம் என்றால் எதிர்காலத்தில் அந்த மாணவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதுடன் மட்டுமல்லாமல் இது போன்று பிறருக்கு உதவவும் முன்வருவான்.

இத்தகைய கல்வி உதவிகள் உண்மையில் காலத்தால் மிகச் சிறந்த உதவியாகும். உலகக் கல்வியைப் போன்றே மார்க்கக் கல்வி கற்பதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டால் அதனுடைய நன்மையின் பரிமாணம் மிகப் பிரம்மாண்டமானது. இதை உணர்ந்து உறவுகளுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் உதவிடுவோமாக!