Tuesday, April 30, 2013

அதிரையில் துவங்கியது கோடைகால பயிற்சி முகாம் !


அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அதிராம்பட்டினத்தில் மாணவ/மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 25-04-13 அன்று  துவங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.

இதில் ஏராளமான மாணவ, மாண‌விகள்  சேர்ந்து  நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் ப‌யின்று  வருகின்றனர்.

மாணவ/மாணவிகளுக்கு தனித்தனியாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 150 மேற்பட்ட மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி  05-05-13 அன்று நடைபெறும் இன்ஷாஅல்லாஹ். தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்.

































TNTJ துபாய் அதிரை கிளையின் புதிய நிர்வாகம்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 03.05.13 வெள்ளிக்கிழமையன்று மக்ரிபிற்கு பிறகு 7.15 மணியளவில் TNTJ துபாய் அதிரை கிளையின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்க பட உள்ளது .ஆகையால் Tntj உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

இடம் :கோட்டை பள்ளிக்கு அருகில் உள்ள L.M.I அப்பாஸ் ரூம் மேல் தளம்

தொடர்புக்கு :ஷாகுல் ஹமீது            0505065755
                            ஹபீபுல்லாஹ் சேட்   0559800639

துபாய் வாழ் அதிரை TNTJ சகோதரர்கள் மாதாந்திர மஷூரா

அஸ்ஸலாமு அலைக்கும்
துபாயில் இருக்கும் அதிரை TNTJ சகோதரர்களின் மாதாந்திர மஷூரா கூட்டம் வஹ்ஹாப் காக்கா அவர்கள் ரூமில்  26.04.13 அன்று மாலை 7 மணியளவில்  நடைபெற்றது










Wednesday, April 24, 2013

விரட்டிய இடத்தை புரட்டிய தவ்ஹீத்!


வட சென்னை மாவட்டத்திலுள்ள நேதாஜி நகர் பகுதியானது தவ்ஹீத் வரலாற்றில் அதிகமான எதிர்ப்புகளை சந்தித்த பகுதிகளில் முக்கிய பகுதி. ஏனெனில் முரீது, தரீக்கா, தர்ஹா வழிபாடு போன்ற ஷிர்க்கான காரியங்களில் முதன்மையாக இருக்கும் பகுதி. தெருவுக்குத் தெரு தரிக்காக்களை வைத்து “நாயகம் வாப்பா” போன்ற ஷெய்குகளின் காலைக் கழுவிக் குடிப்பது, இருட்டு திக்ர் செய்வது போன்ற அனாச்சாரங்கள் அதிக அளவில் நடக்கும் பகுதி.


1990களில் மெல்லத் துவங்கிய தவ்ஹீத் பிரச்சாரம் 1995-களில் மிக வீரியம் அடைந்து 1998-ல் கலவரம் நடக்கும் அளவிற்குச் சென்றது. 1998 கலவரத்தில் பல தவ்ஹீத் சகோதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் சிறை சென்றனர். வழக்குகளை சந்தித்தனர். இப்படி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யபட்டுவந்தது. தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ததின் விளைவாக தவ்ஹீதை எதிர்த்த மக்களில் பலர் ஏகத்துவவாதிகளாகவும், சிலர் ஏகத்துவத்திற்கு ஆதரவாளர்களாகவும் அல்லாஹ்வின் அருளால் மாறியுள்ளார்கள்.

இளைய சமுதாயம் தொடர்ந்து இந்த தவ்ஹீத் கொள்கையின் பக்கம் வந்தது. இதன் விளைவாக நம்மை விரட்டி அடித்த சுன்னத் ஜமாத் பள்ளிக்கு மிக அருகில் (30 அடி தூரத்தில்) வசிக்கும் சகோதரர் நமது ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நடத்த கோரிக்கை வைத்தார். அதன்படி வாரா வாரம் ஞாயிற்றுக் கிழைமை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்று வருகின்றது.

முதலில் 60 பெண்கள் கலந்து கொண்டார்கள். அடுத்தடுத்த வாரங்களில் அல்லாஹ்வின் அருளால் பயான் நடக்கும் மாடியும் நிரம்பி, பக்கத்து வீட்டு மாடியும் நிரம்பக்கூடிய அளவிற்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதை பொருத்துக்கொள்ளாத சுன்னத் (?) ஜமாத்தினர் முதலில் ஒரு குழுவினர் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று புகார் செய்தனர். அது பலனளிக்கவில்லை என்ற உடன் வாரந்தோறும் நமக்குப் போட்டியாக அதே நேரத்தில் சுன்னத் ஜமாஅத் உலமாக்களை (?) வர வழைத்து பயான் நடத்துகின்றார்கள்.

பெரிய பெரிய ஒலி பெருக்கிகளை நமது பயான் நடக்கும் இடம் அருகில் வைத்து நம்மை பயான் செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்துகின்றார்கள். இந்த வரிசையில் 17/2/13 அன்று வழிகெட்ட பரலேவிகளின் தலைவராக இருக்கக் கூடிய சேக் அப்துல்லாஹ் ஜமாலியை அழைத்து வந்து கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் ஏகத்துவ சிந்தனை கொண்ட சகோதர, சகோதரிகளில் சிலர் அங்கு சென்று ஜமாலியை கேள்வி கேட்டு பயந்து ஓட வைத்துவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்…

கேள்வி கேட்ட ஒரு பெண்மனி “வரதட்சணை கல்யாணத்திற்கு போகலாமா?” எனக் கேட்டார். அதற்கு ஜமாலி “வரதட்சணை தவறுதான்; ஆனால் கல்யாணத்தில் கலந்து கொள்ளலாம். ஏனென்றால் நாம் கலந்து கொள்ளவில்லை என்றால் யார் திருமணத்தை நடத்திவைப்பது?. யாரும் வரவில்லை என்றால் அவர்கள் வழிதவறிப் போய்விடுவார்கள் என அறிவார்ந்த(?) பதிலைக் கூறினார். இந்த பதில் அங்குவந்த பெண்களுக்கு பரலேவி கொள்கையின் மீது வெறுப்பை அதிகப்படுத்தியது.

மேலும் சிறுவர்களும் இளைஞர்களும் கேள்வி கேட்டார்கள். ஒரு சகோதரர் “தொழுகையில் தொப்பி அணிவது சுன்னத் எனக் கூறி தொப்பி இல்லை என்றால் பிளாஸ்ட்டிக் தொப்பி வைத்து தொழ வரும் அனைவரையும் தொப்பி போட சொல்லும் நீங்கள், தாடி வைப்பதும் சுன்னத்தாக இருப்பதால், பிளாஸ்ட்டிக் தொப்பிபோல பிலாஸ்ட்டிக் தாடிவைக்கவும் கட்டாயப் படுத்தலாமே” எனக் கேட்ட போது சிரிப்பொலி ஜமாலியின் காதை கிழித்தது. இதற்கும் பதில் சொல்ல வழியில்லாமல் சில மழுப்பலான பதில்களை வாந்தி எடுத்தார் ஜமாலி.

கேள்விகளின் உக்கிரத்தை உணர்ந்த ஜமாலி உடனடியாக” நிகழ்ச்சி முடிந்துவிட்டது” என ஓட்டம் எடுத்தார். மேலும் தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த பள்ளிவாசல் நிர்வாகிகளையும் வறுத்தெடுத்தார். ஏன் இப்படிப்பட்ட நிகழ்சிக்கு என்னை அழைத்தீர்கள்; பயானுக்கு வந்தவர்களில் பாதிப்பேர் தலையில் தொப்பி இல்லை. நஜாத் காரர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைத்தீர்கள்? என கொட்டி தீர்த்துவிட்டு சென்றார்.

இதன்பிறகு இவர்கள் தொடர்ந்து நடத்தும் பயான்களில் கேள்வி-பதில் பகுதியையே தூக்கிவிட்டனர். இப்படி இவர்கள் அழைத்துவரும் உலமாக்கள் (?) ஷிர்க் பித்அத்தையே தூக்கிப்பிடிப்பவர்களாக இருப்பதினால் இவர்களை இப்படியே விடக்கூடாது என அந்த சுன்னத் ஜமாத் பள்ளி அருகில் நமது ஜமாஅத் சார்பாக நூலகம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இந்த நூலகத்தின் மூலம் இஸ்லாமிய பயான் டிவிடிக்களை இலவசமாகக் கொடுத்து வருகின்றனர்.

மேலும் செல்ஃபோன் மெமரி கார்டுகளில் இலவசமாக இஸ்லாமிய பயான்களை பதிவேற்றம் செய்து தருகின்றனர். மேலும் இணையதளம் மூலமாக கிளையின் செயல்பாடுகளைக் கொண்டு செல்லும் முகமாக தனியொரு இணையதளத்தையும் துவக்கி சிறப்பாக செயல்படுகின்றனர்.

இந்த சுன்னத் ஜாமஅத் பள்ளிவாசலில் “சுன்னத் ஜமாத்தினரைத் தவிர யாரும் தொழ வரக்கூடாது” என பல வருடங்களாக அறிவிப்பு வைத்துள்ளனர். தற்போது இப்படிப்பட்ட அறிவிப்பிற்கு அந்தப் பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஐந்து வேளை தொழுது சமுதாயத்திற்கு தேவையான பல்வேறு நற்பணிகள் புரியும் தவ்ஹீத் மக்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றால், ஒருவேளை தொழுகை இல்லாதவனெல்லாம் எப்படி பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்க முடியும் என, பொது மக்கள் மிகக் கடுமையாக எதிப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். பள்ளிவாசலுக்கு அடுத்த கட்டடத்தில் வசிக்கும் ஒரு சகோதரர் தனது வீட்டு சுவரில் “பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதியானவர்கள் யார்?” என்ற தலைப்பிலும், “அநியாயக்காரன் யார்?” என்ற தலைப்பிலும் குர் ஆன் வசனத்தை எழுதியுள்ளார்.

இப்படியாக அல்லாஹ் தனது கிருபையால் நேதாஜி நகர் பகுதியில் தவ்ஹீதை விரட்டி அடித்த அந்த சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்ந்து இழிவை ஏற்படுத்தி வருகின்றான். மக்களும் தவ்ஹீத்வாதிகளை எதிர்க்க “இந்த தொழுகை இல்லாத ஒழுக்கம் இல்லாத போலி சுன்னத் ஜமாத் தலைவர்களுக்கு அருகதை இல்லை” என எதிர்க்குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் தவ்ஹீத் வாதிகளை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் இந்த போலி சுன்னத் ஜமாத் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் இவர்களின் மிரட்டலுக்கு சிறிதும் அஞ்சாமல் நமது சகோதர்கள் தொடர்ந்து தங்களது பிராச்சாரப் பணியை செய்துவருகின்றனர்.

தமுமுக தேர்தலில் போட்டியிடாது! அதிரடி முடிவு!! (வீடியோ)

தமுமுக தேர்தலில் போட்டியிடாது! அதிரடி முடிவு!! 

தலைப்பை பார்த்து பயந்துவிட வேண்டாம். தமுமுக என்ற இயக்கம் தேர்தலில் போட்டியிடாது, வக்ப் வாரியம் போன்றவற்றில் கூட எந்த பதவியும் வாங்கக்கூடாது என்பது தமுமுகவின் கொள்கையாக இருந்தது. சென்னை வாழ்வுரிமை மாநாட்டிலும் தஞ்சை மாநாட்டிலும் வந்த கூட்டத்தை கண்டு ஆணவம் தலைக்கு ஏறி, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்தது தமுமுக. தேர்தலில் நின்று சாதித்துவிடுவோம் என்று சொன்னவர்கள் அம்மாவிற்கும் அய்யாவிற்கும் ஜால்ரா தட்டி காலத்தை கடத்துகிறார்கள்.

கூட்டத்தை கண்டு தான் அரசியல் ஆசை வந்ததா? என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கும் போது ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மென்று விழுங்குவதையும் அசடு வழிவதையும் கீழ்காணும் வீடியோவில் கண்டு மகிழுங்கள்.

பிஜே அவர்கள் ஆரம்பம் முதல் எந்த நிலைபாட்டில் இருந்தாரோ அதே நிலைபாட்டில் நிலைத்து இருப்பதையும் பாருங்கள்.

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்றவர்கள், அத்தோடு கலந்துவிட்டதை யாரும் மறுக்க மாட்டார்கள். பொய்யர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 18, 2013

இஸ்லாத்தின் பார்வையில் பூகம்பம் (வீடியோ)

இஸ்லாத்தின் பார்வையில் பூகம்பம் (வீடியோ)



Tuesday, April 16, 2013

அகீகாவின் சட்டங்கள்

அகீகாவின் சட்டங்கள்

குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி)
நூல் : புகாரி (5472)

எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?

நபி (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்பமாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம்புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : அஹ்மத் (6530)

விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்துகொள்ளலாம்.

ஆண்குழந்தைக்கு ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹசனுக்கும் ஹ‚ஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் (2458)

பெற்றோருக்கு பதிலாக மற்றவர்கள் கொடுக்கலாமா?

பெற்றோருக்குப் பதிலாக குழந்தையின் உறவினர்கள் அகீகாவை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது. பெற்றோர்கள் தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

குழந்தைக்காக ஆடு அறுக்கப்படும் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெற்றோர்கள் தான் அகீகா கொடுக்க வேண்டுமென்றால் குழந்தையின் பெற்றோர்கள் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள்.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜன்துப் (ரலி)
நூல் : அபூதாவூத் (2455)

மேலும் அலி (ரலி) ஃபாதிமா (ரலி) ஆகிய இருவருக்கும் பிறந்த ஹசன் மற்றும் ஹ‚ஸைன் (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளார்கள். குழந்தையின் உறவினர்கள் யார் வேண்டுமானலும் அகீகா கொடுக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் மற்றும் ஹ‚ஸைன் (ஆகியஇருவருக்காக) அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : நஸயீ (4142)

அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா?

அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜ‚ப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானிக் கொடுப்பவர் உண்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும் அகீகாவும் இறைவனுக்கு செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரேவகையான சட்டம்தான்.

ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக்கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.

அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் (22 : 28)

ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?

அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.

அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)

இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார்.

பெற்றோர்கள் தனக்கு அகீகாக் கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை. 

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தை செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்தப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தப் பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

பிராணியின் எலும்பை உடைக்கலாமா?

அகீகாக் கொடுக்கப்படும் பிராணியின் எலும்பை உடைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் இது பலவீனமான செய்தியாகும். எனவே பிராணியின் எலும்பை உடைப்பதற்கு தடையேதும் இல்லை.

ஹசன் ஹ‚ஸைன் ஆகிய இருவருக்காக ஃபாத்திமா (ரலி) அவர்கள் அகீகா கொடுத்த போது நீங்களும் (இதிலிருந்து) உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக்கொடுங்கள். இதன் எழும்பை உடைத்துவிடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி இமாம் அபூதாவூத் அவர்கள் எழுதிய அல்மராசீல் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை முஹம்மத் பின் அலீ என்பவர் அறிவிக்கிறார். இவர் நபி (ஸல்) அவர்களை சந்திக்கவில்லை. இவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

பெயர் வைத்தலும் முடியயை களைதலும்:

அகீகாக்கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜ‚ன்துப் (ரலி)
நூல் : அபூதாவூத் (2455)

தலைமுடி முழுவதையும் களைய வேண்டும்:

குழந்தையின் முடியை களையும் போது பாதியை மளித்து பாதியை விட்டுவிடக்கூடாது. அறைகுறையாக மளிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நஸயீ (4962)

முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?

பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.

அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : திர்மிதி (1439)

இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.

மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூலில் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹ‚ஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார். ஆனால் அலி பின் ஹ‚ஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.

'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூலிலிருந்து எடுக்கப்பட்டது. முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

இன வாதத்துக்கு இஸ்லாம் கூறும் தீர்வு (வீடியோ)

இன வாதத்துக்கு இஸ்லாம் கூறும் தீர்வு (வீடியோ)

Monday, April 15, 2013

குடந்தையில் நடைபெற்ற TNTJ வின் 14 வது மாநிலப் பொதுக்குழு! - புதிய நிர்வாகிகள் தேர்வு, அக்டோபர் 8ஆம் தேதி மத்தியில் இடஒதுக்கீடு கோரி போராட்டம்!

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று குடந்தை மஹாமஹம் திருமண மஹாலி ல்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

மேலும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கை:

1.    கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலி தா வாக்களித்தார். இரண்டாண்டுகள் கடந்த பின்னரும் இது குறித்து அவர் அசாத்திய மவுனம் சாதித்து வருகிறார். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லி ம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

2.    அவ்வாறு அதிகப்படுத்தித் தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலி ல் முஸ்லி ம்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு பெற்றுத் தர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அயராது உழைக்கும் என்று இப்பொதுக்குழு உறுதியளிக்கின்றது.

3.    நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் முஸ்லி ம்களுக்கு பத்து சதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று காரண காரியங்களுடன் பரிந்துரை செய்திருந்தார். மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவதாக காங்கிரஸ் வாக்களித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லி ம்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யும் மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

4.    முஸ்லி ம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், முஸ்லி ம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு 4.5 சத இட ஒதுக்கீடு என்று கூறி வஞ்சகமாக ஏமாற்றும் மத்திய அரசின் துரோகத்தையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.,

5.    இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் முன்னேறிய சமுதாயங்களான பார்சிகள், சீக்கியர்கள், மற்றும் கிறித்துவர்கள் தான் பயனடைவார்கள். முஸ்லி ம்கள் இதனால் பயனடைய மட்டார்கள் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.

6.    முஸ்லி ம்களுக்கு 6 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போர்ராட்டங்கள் நட்த்திய பின் புதுவை மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் இரண்டு சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதாகவும் இன்னொரு பகுதியில் அறவே இட ஒதுக்கீடு இல்லை எனவும் அறிவித்தது. ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் ஆகிறது.  புதுவை அரசின் இந்த துரோகத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. புதுவை சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு ஆறு சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு புதுவை அரசை வலி யுறுத்துகிறது.
மாபெரும் அறப் பேராட்டம்

7.    தமிழகத்தில் முஸ்லி ம்களின் இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்திலி ருந்து ஏழு சதமாக உயர்த்த மாநில அரசை வலி யுறுத்தியும் இந்திய அளவில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டை சட்டாமாக்க மத்திய அரசை வலி யுறுத்தியும் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று மாபெரும் அறப்போராட்டம் நடத்துவது என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

அப்சல் குரு தூக்குக்குக் கண்டனம்:

8.    நாடாளுமன்றத் தாக்குதலி ல் தொடர்பு இல்லாத அப்சல் குருவுக்கு தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது நீதிபதிகள் சட்டப்படி இந்த வழக்கை அணுகவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இந்தியாவின் நீதித்துறை மீது உலகமே காரித்துப்பும் வகையில் இதுபோல் சட்டத்துக்கு அப்பாற்பட்டு தங்கள் இஷ்டத்துக்கு நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கேற்ப தக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

9.    அப்சல் குருவுக்கு முன்னால் தூக்குத் தண்டனை தீர்ப்புப் பெற்ற பலரது மனுக்கள் நிலுவையில் இருக்க வரிசைக்கு மாற்றமாக அப்சல் குருவின் மனுவை மட்டும் அவசரமாக நிராகரித்த குடியரசுத் தலைவரின் செயலையும், இதற்குக் காரணமான மத்திய அரசையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

10.    கருணை மனு நிராகரிக்கப்பட்ட பலர் உடனே தூக்கில் போடப்படாமல் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்க மத்திய அரசு உதவி வருகிறது. ஆனால் அப்சல் குருவுக்கு மட்டும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் இரகசியமாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய மத்திய அரசின் அயோக்கியத்தனத்தையும் மதவெறிப் போக்கையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது

11.    தூக்குத் தண்டனை கைதிகளை தூக்கில் போடுவதற்கு முன்னர் அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து கடைசி சந்திப்புக்கு  ஏற்பாடு செய்யும் மரபை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கடைப்பிடித்து வருகின்றன. இந்த மரபை மீறி அப்சல் குருவின் குடும்பத்தினரில் யாருக்கும் தெரிவிக்காமல் இரகசியமாக தூக்கில் போட்ட காங்கிரசின் கயமைத் தனத்தை முஸ்லி ம்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.


12.    எந்த மனிதனாக இருந்தாலும் அவனது மத நம்பிக்கைப்படி அவனுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட வேண்டும். கைதிகளாக இருந்தாலும் அது அவர்களின்   கடைசி உரிமையாகும். ஆனால் அப்சல் குருவுக்கு இஸ்லாமிய முறைப்படி ஜனாஸா தொழுகை நடத்தாமல் இந்துக்களின் பிணத்தைப் போல் புதைத்து இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராக காங்கிரஸ் அரசு போர் தொடுத்துள்ளதையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்கள்:

13.    முஸ்லி ம்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரித்து உண்மைக்கு மாறான வகையில் திரைப்படம் எடுக்கும் கமலஹாசன், விஜய், விஜயகாந்த், அர்ஜுன் ஆகிய கூத்தாடிகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இதன் விளைவுகள் இனிமேல் கடுமையாக இருக்கும் என்று கண்டிப்பதுடன் மேற்கண்ட கூத்தாடிகளையும் அவர்களின் திரைப்படங்களை இயக்குபவர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் இப்பொதுக்குழு கடுமையாக எச்சரிக்கின்றது.

14.    முஸ்லிம்களுக்கு எதிராக விஸ்வரூபம் திரைப்படம் அமைந்துள்ளது என்று ஒட்டு மொத்த முஸ்லி ம் சமுதாயமும் கருதும் போது இப்படத்தை தடை செய்திருக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

15. விஸ்வரூபம் என்ற திரைப்படம் இஸ்லாம் மார்க்கத்தையும் முஸ்லி ம்களின் வேதமான திருக்குர்ஆனையும் ஒட்டு மொத்த முஸ்லி ம்களையும் இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. இந்தப் படம் வெளியானால் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அனைத்து முஸ்லி ம் இயக்கங்களும் இக்கோரிக்கையை வைத்தன.

இதனை ஏற்று உடனடியாக இப்படத்தை தடை செய்த முதல்வர் ஜெயலலி தாவின் உறுதியான நடவடிக்கையை இப்பொதுக்கு பாராட்டுகிறது. இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க நடிகர் கமலஹாசன் இறங்கி வரச்செய்த தமிழக அரசுக்கு இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

16.    விஸ்வரூபம் என்பது தனிப்பட்ட ஒரு நடிகனுக்கும் முஸ்லி ம்களுக்குமான பிரச்சனை. இது இந்து முஸ்லி ம் பிரச்சனை அல்ல. இந்துக்களை உயர்த்தி முஸ்லி ம்களைத் தாழ்த்தி இப்படம் எடுக்கப்படவில்லை. ஆனாலும் இப்படத்துக்கு முஸ்லி ம்கள் எதிர்ப்பு தெரிவித்ததைக் காரணம் காட்டி ஒட்டு மொத்த இந்துக்களை முஸ்லி ம்களுக்கு எதிராக தூண்டி விட்ட ஊடகங்கள் அனைத்தையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பரபரப்புக்காக உண்மைக்கு மாற்றமான வகையில் செய்திகளை திரிக்க வேண்டாம் எனவும் இப்பொதுக்குழு ஊடகங்களுக்கு அறிவுரை சொல்கிறது.

17.    முஸ்லி ம் பெயர் தாங்கி இயக்குனர் அமீர் உள்ளிட்ட திரைத்துறையினர் அனைவரும் விஸ்வரூபம் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், முஸ்லி ம்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களைச் செய்திருந்தும் கூட இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் சீமான் ஆகிய இருவர் மட்டும் துணிவாக உண்மையை உடைத்துப் பேசியதற்கு இப்பொதுக்குழு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இஸ்லாமிய சட்டத்தை இழிவுபடுத்துவோரைக் கண்டித்து:

18.    பச்சிளங்குழந்தையைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த குற்றத்துக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா என்ற பெண்ணுக்கு ஆதரவாகப் பேசி இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தை விமர்சனம் செய்த கருணாநிதிக்கு இப்பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

19.    மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என்றால் அது குறித்து எங்களோடு விவாதிக்க தயாரா என்று கருணாநிதிக்கும் அறிவு ஜீவிகள் போர்வையில் உளறி வருவோருக்கும் பகிரங்க விவாத அழைப்பு கொடுத்தும் அதை ஏற்காத இவர்களின் கோழைத்தனத்தையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

20.    இலங்கையில் இந்துத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சிகளும் அங்கே முஸ்லி ம்கள் புத்த பிக்குகளால் தாக்கப்படுவதற்கும் பள்ளிவாசல்களை அடித்து நொறுக்குவதற்கும் எதிராக எவ்விதக் கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை என்பதை முஸ்லி ம்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என முஸ்லி ம் சமுதாயத்தை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

பாபரி மஸ்ஜித்:

21.    பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லி ம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி  நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையைத் துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இப்பொதுக்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.

22.    பாபர் மசூதி குறித்த அலஹாபாத் நீதிபதிகளின் கட்டப்பஞ்சாயத்து அநியாயத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை துரிதமாக விசாரித்து முடிக்க மத்திய அரசு முயல வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் ஆறப்போட்டு அநீதியிழைக்காமல் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

வக்ஃபு வாரியத்தை முற்றாகக் கலைக்கக் கோரி:

23.    கிறித்தவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் கிறித்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. அதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்ரமிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து வருகிறது. ஆனால் முஸ்லி ம் சமுதாய சொத்துகளை அரசின்  வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும் சுரண்டல்  பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லி ம் சமுதாய சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லி ம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என மாநில மத்திய அரசுகளை இப்பொதுக்குழு  கேட்டுக் கொள்கிறது.

24.    உள்ளூர் ஜமாஅத்துகள் வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்தால் மட்டுமே வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

முஸ்லி ம் தனியார் சட்டம்:

25.    பெண்கள் பருவ வயதை அடைந்தவுடன் திருமணத்துக்குத் தயாராகிறார்கள். பருவ வயதை அடைந்து 18 வயதை அடையாத பெண்கள் காதல் வலையில் விழுந்து சீரழிந்து போகிறார்கள். இந்த நிலை ஏற்படாமல் தடுக்க பொறுப்புள்ள சில பெற்றோர்கள் தங்கள் புதல்விகள் 16 வயதை அடைந்தவுடன் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் இது போன்ற திருமணங்களை குழந்தைகள் திருமணம் என்று சொல்லி  அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோர் மீது வழக்கும் பதிவு செய்கிறார்கள். திருமணம் விவாகரத்து உள்ளிட்ட சில சட்டங்களில் முஸ்லி ம்களுக்கு தனியாக சட்டம் உள்ளதால் பருவ வயதை அடைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய முஸ்லி ம்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்படுவதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திருமண பதிவுகளில் கெடுபிடி:

26.    உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருமணங்களை பதிவு செய்ய வேண்டுமென மாநில அரசு சட்டம் இயற்றியது. திருமணத்தை பதிவு செய்ய போகும் போது முஸ்லி ம்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். தற்காலத்தில் முஸ்லி ம்கள் திருமண பத்திரிக்கை கூட அடிக்காமல் எளிமையாக திருமணம் செய்கிறார்கள். திருமண பத்திரிக்கை கொண்டுவர வேண்டுமென அதிகாரிகள் நிர்பந்தம் செய்கின்றனர்.

நமது நாட்டில் ரேஷன் கடைகளில் உள்ள குளறுபடிகளை உலகமே அறியும். பெயரையும் வயதையும் தவறாக எழுதுதல், குடும்ப உறுப்பினர்கள் சிலரது பெயர்களை சேர்க்காமல் விட்டுவிடுதல் போன்ற குறைபாடுகள் ரேஷன் கார்டில் உள்ளது. திருமணத்தை பதிவு செய்யும் போது ரேஷன் கார்டில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு மாற்றமாக உள்ளதால் ரேஷன் கார்டில் பெயர் இல்லை என்பன போன்ற காரணங்களை கூறி திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது.

அதிகமான முஸ்லி ம் பெண்கள் ஆரம்ப கல்வியை தாண்டுவதில்லை. ஆரம்ப கல்வியை கற்ற சான்றிதழ்களையும் பாதுகாப்பதில்லை. திருமணத்தை பதிவு செய்யும் போது கல்வி சான்றிதழ்களை கேட்டு வற்புறுத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற நெருக்கடிகளால் முஸ்லி ம் திருமணங்களை பதிவு செய்வதை தவிர்ப்பதுதான் இச்சட்டத்தால் கிடைத்த நன்மை. எனவே இச்சட்டம் முழுமையாக பயனளிக்க வேண்டுமானால் முஸ்லி ம் நிறுவனங்கள், ஜமாஅத்துகள் முன்னிலையில் பதிவு செய்த திருமணச் சான்றையே ஆதாரமாகக் கொண்டு திருமணத்தை பதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை:

27.    இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும்  இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

28.    இந்த தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலமும் இதனால் ஒழிக்கப்படும் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.

முஸ்லி ம்களுக்கு ரிசர்வு தொகுதி:

29.    சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லி ம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலி த் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லி ம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லி ம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

வன்கொடுமை சட்டங்கள்:

30. பலநூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக வன்கொடுமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை தலி த் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த சிறு பிரச்சனையானாலும் சாதியின் பெயரைச் சொல்லி  திட்டியதாக புகார் கொடுக்கின்றனர். ஜாதி வேறுபாடு காட்டாமல் தலி த் மக்களுடன் நட்புடன் பழகி வரும் முஸ்லி ம்கள் மீதும் இது போல் பல பொய்ப்புகார்கள் அளிக்கப்பட்டு ஜாமீனில் வரமுடியாத நிலையை முஸ்லி ம்கள் சந்திக்கின்றனர். முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சட்ட்த்தை அடியோடு நீக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது,

நோன்புக் கஞ்சிக்கு இலவச அரிசி:

31. ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு சிறப்பு விலையில் அரசு வழங்கும் பச்சரிசி விநியோக முறையை இலகுவாக்கும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. அரிசி வழங்கலி ல் தேவையற்ற கெடுபிடிகள் செய்து முஸ்லி ம்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.

இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுப்போர்:

32.    காழ்ப்புணர்வு காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலி ல் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

இஸ்லாத்தைத் தழுவியோருக்கான அரசு வேலைவாய்ப்பு:

33.    பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தை தழுவினால் அவர்கள் கிறித்தவர்களின் பிற்பட்ட பிரிவினராகக் கருதும் வகையில் அரசாணை உள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை தழுவினால் அவர்கள் பிற்பட்ட சமுதாயமாக கருதப்படுவார்கள் என்று அரசாணை இல்லாததால் கல்வி வேலை வாய்ப்பில் இவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்ட பிறகும் தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நடராஜ் அவர்களை சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர். பின்னர் இப்பொறுப்புக்கு வந்த நவநீத கிருஷணன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை இது குறித்து ஆணை பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கை பொதுக்குழு கண்டிப்பதுடன் உடனடியாக இதற்கு அரசாணை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

பூரண மதுவிலக்கு:

34.    மதுபானங்களும் இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும் கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டை குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்லி  முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த பொதுக்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும் நிம்மதியும் ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தப் பொதுக்குழு வற்புறுத்துகிறது.

35.    மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மதமாற்றம் செய்யும் கிறித்தவ கல்விக்கூடம்:

36.    சமீபகாலமாக கல்வி கற்கச் செல்லும் அதிகமான மாணவ மாணவிகளும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களும் காமப் போதையில் தட்டழிந்து திரிகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கூட ஆண்களுடன் ஓட்டம் பிடிக்கும் நிகழ்ச்சிகளும் ஆசிரியரே மாணவிகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் கல்வி முறையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படித்தால் ஆண்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். அவர்கள் படிக்காமல் பெண்களை ரசிப்பதில் கவனத்தைச் சிதற விடுவதால் ஆண்களின் தேர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்து வராத கோஎஜுகேஷன் என்ற முறை ஒழிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படிக்கும் கல்வி முறையை அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதை தமிழக அரசு உணர்ந்து மாணவ மாணவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

37.    சிறுபான்மை மக்கள் தனியாக கல்விக்கூடம் நடத்த அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையை அதிகமான கிறித்தவப் பள்ளிக்கூடங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன, கிறித்தவ மத வழிபாட்டை முஸ்லி ம்களும் இந்துக்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். தங்கள் சமுதாய மக்களை கல்வியில் உயர்த்திடவே இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. மத மாற்றம் செய்வதற்கு அல்ல. இப்படி சட்டத்துக்கு எதிராக நடக்கும் கல்விக் கூடங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன் இதுபோன்ற கல்விக்கூடங்களின் அனுமதியை ரத்து செய்யுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

38.    சட்டம் ஒழுங்குப்பிரச்சனை ஏற்படக் காரணமாக உள்ள இது போன்ற பள்ளிக்கூடங்களை அனைத்து சமுதாய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இலங்கையிலும் பர்மாவிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை:

39.    இலங்கையில் சிங்கள மக்களுடன் முஸ்லி ம்கள் நல்லி ணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லி ம்களுக்கு எதிராக புத்த பிக்குகள் பள்ளிவாசல்களை இடித்தும் முஸ்லி ம்களுக்கு எதிரான வன்முறையிலும் இறங்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கையின் இந்த அராஜகத்தை உடனே தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் எனவும், முஸ்லி ம் நாடுகளில் வாழும் தமிழ் கூறும் மக்கள் அந்தந்த அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துமாறு இப்பொதுக்குழு கடல் கடந்து வாழும் முஸ்லி ம்களைக் கேட்டுக் கொள்கிறது.

40.    அதுபோல் மியான்மர் எனப்படும் பர்மாவில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாகக் கூறி முஸ்லி ம்களை விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உலகமெங்கும் வாழும் புத்த துறவிகள் மீது எதிர்வினை உலகமெங்கும் நடந்தால் அதற்கு மியான்மர் அரசும் இலங்கை அரசும் தான் பொறுப்பாவார்கள் என்று இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. இது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள தாலய்லாமா உள்ளிட்ட புத்த பிக்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு முஸ்லி ம்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

மத்திய அரசின் ஹஜ் மானியக் கொள்ளை:

41.    ஹஜ் பயணிகளிடம் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அதில் 20 ஆயிரத்தை முஸ்லி ம்களுக்கு கொடுத்து அதை மானியம் எனக் கூறி முஸ்லி ம்களையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் மத்திய அரசின் இந்த வஞ்சகத்தை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. விமானக் கட்டணம், உணவு தங்கும் வசதி அனைத்தும் 70 ஆயிரத்துக்குள் அடங்கும் போது மேலும் 80 ஆயிரம் அதிகமாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. முஸ்லி ம்களிடம் காசு பறித்து அதில் சிறிதளவை அவர்களுக்குக் கொடுத்து அதை மானியம் என்று சொல்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது

வளைகுடா பணியாளர் அவலம்:

42.    வளைகுடா பணியார்களின் அதிகமானோர் குறைந்த ஊதியத்தில் கடினமான வேலைகளை செய்கின்றனர். இவர்களின் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முயல வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இந்தியத் தூதரகங்களின் அலட்சியப் போக்கு:

43.    அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும் ஆணவத்துடனும் பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

44.     தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்திய துதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அணுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை:

45.    சிறுபான்மையானாலும், பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லி ணக்கத்த்தைப் பேண முடியும் என்று அரசுக்கு இபொதுக்குழு ஆலோசனை கூறுகிறது.

கலவர தடுப்பு மசோதா:

46.    ஆட்சிக்கு வந்தால் மதக்லவரத் தடுப்பபு சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் வாக்களித்ததை தாமதமின்றி உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

Sunday, April 14, 2013

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்பதா? (வீடியோ)

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்பதா ?

முஜிபுர் ரஹ்மான உமரி என்பவர் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று பேசி திரிந்தார். இவரை விவாதத்திற்கு அழைத்தது தவ்ஹீத் ஜமாஅத். ஒரு தலைப்பில் விவாதத்திற்கு வந்த முஜிபுர் ரஹ்மான் உமரி, ஒப்பந்தப்படி மற்ற தலைப்புகளில் விவாதம் செய்யாமல் ஓட்டம் எடுத்தார், அன்று முதல் இன்று வரை ஒளிந்து கொண்டுள்ளார். 

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டுமா? என்பதை பற்றி மௌலவி அப்பாஸ் அலி மற்றும் அப்துந் நாசர் ஆகியோர் ஆற்றிய விளக்க உரை.












அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசல் கட்டுமான பணி முழுமையடைய உதவுங்கள்


அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசல் கட்டுமான பணி முழுமையடைய உதவுங்கள்

அதிராம்பட்டிணத்தில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து, இணைவைப்பு, பித்அத் போன்ற பெரும்பாவங்களில் இருந்து மக்களை மீட்டு எடுக்கும் பணியை செவ்வனே செய்ய உதவும், 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' என்ற ஏகத்துவ முழக்க பள்ளிவாசலின் கட்டிட பணி முழுமையடைய உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.

சத்திய பணியில் உங்களின் பங்களிப்பின் மூலம் நன்மையில் உங்களின் பங்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

கட்டுமான பணி முழுமையடைய சுமார் 20 லட்சம் அளவிலான தொகை தேவைப்படுகிறது. 

மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி பற்றிய விபரம்: http://www.adiraitntj.com/p/blog-page.html

நன்கொடை அனுப்ப: http://www.adiraitntj.com/p/blog-page_29.html

நன்கொடை அனுப்ப மற்றும் மேலதிக விபரத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள்.

Saturday, April 13, 2013

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

12.04.13 வெள்ளியன்று மேலத்தெரு சவுக்கு கொள்ளையில்  நடைபெற்ற பெண்கள் பயான் .இதில் சகோதரி ஹதிஜா அம்மாள் அவர்கள் நன்மையின் எடையை அதிகரித்துக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 



அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 12.04.13(வீடியோ )


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 12.04.13(வீடியோ )
உரை :யாசர் அரஃபாத் இம்தாதி 



Wednesday, April 10, 2013

சுப்ஹான மவ்லிதும் சூடான நரகமும் (வீடியோ)

சுப்ஹான மவ்லிதும் சூடான நரகமும் (வீடியோ)

Tuesday, April 09, 2013

தூதர் காட்டிய வழியில் ஒரு தூய அமைப்பு (வீடியோ)

தூதர் காட்டிய வழியில் ஒரு தூய அமைப்பு (வீடியோ)


Monday, April 08, 2013

குர்ஆனுடன் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகள் - மௌலூது பாடல்களில் உள்ள இணைவைப்பு வரிகள்!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஒதப்படும் சுப்ஹான மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பல வருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த - மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தெழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

1. மவ்லித் வரிகள்:

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !

கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,

அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

2. மவ்லித் வரிகள்:

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ

وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!

நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!

புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

3. மவ்லித் வரிகள்:

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ

صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.

இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.

தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!

அவர் இழப்பினை அடையவில்லை.

குர்ஆன் வரிகள்:

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)

4. மவ்லித் வரிகள்:

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ

وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

குர்ஆன் வரிகள்:

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)

அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)

5. மவ்லித் வரிகள்:

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

குர்ஆன் வரிகள்:

“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

6. மவ்லித் வரிகள்:

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

குர்ஆன் வரிகள்:

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

7. மவ்லித் வரிகள்

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)

“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.

(அல்குர்ஆன் 7 : 128)

8. மவ்லித் வரிகள்

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

குர்ஆன் வரிகள்:

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

8. மவ்லித் வரிகள்

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ

اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ

وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

குர்ஆன் வரிகள்:

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)

9. மவ்லித் வரிகள்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

குர்ஆன் வரிகள்:

“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)

10. மவ்லித் வரிகள்:

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

குர்ஆன் வரிகள்:

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)

11. மவ்லித் வரிகள்:

بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

குர்ஆன் வரிகள்:

“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

நபிமொழி:

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

12. மவ்லித் வரிகள்

وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا

கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)

13. மவ்லித் வரிகள்:

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)

உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

14. மவ்லித் வரிகள்:

إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

குர்ஆன் வரிகள்:

தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)

15. மவ்லித் வரிகள்:

நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

நபிமொழிகள்:

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : அபூதாவூத் 2829)

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)

16. மவ்லித் வரிகள்

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا بِحُبِّهِ كُنْ مُقِيْمًا

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ

நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

குர்ஆன் வரிகள்:

நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

நபிமொழி:

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)

17. மவ்லித் வரிகள்

مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

குர்ஆன் வரிகள்:

“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)

18. மவ்லித் வரிகள்

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ

ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

குர்ஆன் வரிகள்:

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

- நன்றி TNTJ.NET

தொடர்புடையவை: