Showing posts with label பொய். Show all posts
Showing posts with label பொய். Show all posts

Saturday, April 05, 2014

திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று எந்த உத்திரவாதமும் தர முடியாது - பீஜே

திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று எந்த உத்திரவாதமும் தர முடியாது - பீஜே

[திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்ற எந்த வித  உத்திரவாதத்தையும் தர முடியாது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சகோதரர் பிஜே அவர்கள் உணர்வு வார இதழில் கேள்விகள் பகுதியில் ஜெயலலிதா மற்றும் கலைஞர் பாஜகாவுடன் சேர முகந்திரம் இருப்பதை விளக்கி பதில் அளித்து இருந்தார். இதை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொய்யை பரப்புவதையே தொழிலாக கொண்ட ஒரு இணையதளம், ஜெயலலிதா பாஜகாவுடன் கூட்டணி வைப்பார் என்று பீஜே சொல்லிவிட்டார் என்று திரித்து செய்தி வெளியிட்டுயிருந்தார்கள். முழமையான பதிலை வெளியிடாமல், பாதி பதிலை வெட்டி வெளியிட்டுயிருந்தார்கள். பின்னர் சிலர் கேள்வி எழுப்பியவுடன் முழமையான செய்தியை வெளியிட்டுயிருந்தார்கள். செய்தியை திரித்து வெளியிட்டும் இவர்களுக்கு எந்த பலனும் கிட்டவில்லை. உணர்வில் வந்த கேள்வியையும் பதிலையும் முழுமையாக இங்கு வெளியிடுகிறோம்.]

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லையே?

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லை. கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதுபற்றி ஜெயலலிதா தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று மேடை தோறும் கேள்வி எழுப்பியும் வாய் திறக்காமல் இருக்கிறாரே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

காங்கிரஸ் தனது மதவாதப் போக்கில் இருந்து திருந்திக் கொண்டால் காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று கருணாநிதி கூறுவதன் பொருள் என்ன?

ஜெயலலிதாவும், கருணாநிதியும் தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதாயம் தரும் முடிவைத்தான் எடுப்பார்கள். மத்திய ஆட்சியில் தமக்கும் பங்கு இருந்தால்தான் தமிழகத்துக்கு நன்மை செய்ய முடியும் என்ற பதிலை ரெடிமேடாக வைத்துள்ளனர்.

இருவரையும் இந்த விஷயத்தில் நாம் பிரித்துப் பார்க்க முடியாது.

கருணாநிதியை எடுத்துக் கொண்டால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர முயற்சித்து, பா.ஜ.க சேர்த்துக் கொள்ளாததால், கூட்டணி வைக்காமல் போனவர்.

புதிய தலைமுறை தொலைக் காட்சியில் பா.ஜ.கவைச் சேர்ந்த பெண் தலைவி ஒருவர், திமுக சார்பில் கலந்து கொண்ட தலைவரை நோக்கி “எங்களை மதவாத சக்தி என்று சொல்லும் நீங்கள், எங்களுடன் கூட்டணிக்கு கெஞ்சினீர்கள், நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம் என்று சொன்னார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த திமுக தலைவர, இதை மறுக்கவில்லை. உலகமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட குற்றச்சாட்டை திமுக தலைமை இன்று வரை மறுக்கவில்லை.

தேர்தலுக்குப் பின்னால் பார்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் அவர்களுக் கிடையே முடிவாகியுள்ளது என்பது, உன்னிப்பாக கவனிக்கும் அனை வருக்கும் தெரிகின்றது.

இதனால்தான் திருச்சிக்கு மோடியின் முதல் வருகையை எதிர்த்து சில முஸ்லிம் அமைப்புகளும், தமிழர் அமைப்புகளும் போராட்டம் நடத்தியபோது இதைக் கருணாநிதி கண்டித்தார்.

ஏற்காடு இடைத்தேர்தலில் பா.ஜ.க ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதினார்.

தினமலருக்கு அளித்த பிரத்தியோகப் பேட்டியில் ”மோடி எனது நண்பர்” என்றார்.

தேர்தலுக்குப் பின்னால் பா.ஜ.க.வை ஆதரிக்கலாமா என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்றும் கூறினார்.

இதனால் முஸ்லிம் வாக்குகள் முழுமையாக திசை மாறுவதை உணர்ந்து, மோடியும் ராகுலும் அல்லாத ஒருவர் பிரதமராக, ஆதரவு தெரிவிப்போம் என்று பல்டி அடித்தார்.

ராகுல் பிரதமராக ஆதரவு இல்லை என்ற சொல்லில் இருந்தும் பல்டி அடித்து காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று மாற்றினார்.

காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிட்டால் காங்கிரஸை ஆதரிப்போம் எனக் கூறி, பா.ஜ.க போலவே காங்கிரசும் மதவாதக் கட்சி என்று இப்போது கூறுகிறார். இதுதான் இவரது கடைசி நிலையாக உள்ளது. (இதன் பிறகு அடிக்கும் பல்டிகள் எத்தனை என்று இனிமேல் தெரிய வரும்)

மதவாதக் கட்சியாக காங்கிரஸ், இருந்தது இல்லை. மதவாதத்தைக் கைவிடுவதாக காங்கிரஸ் அறிவிக்கத் தேவையில்லை. கைவிடுவதாக அறிவித்தால் இதற்கு முன் மதவாதத்தில் அக்கட்சி இருந்ததாக ஆகிவிடும். காங்கிரஸ் எதை அறிவிக்காதோ அதை அறிவிக்குமாறு கருணாநிதி கேட்கிறார்.

காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. எனவே பாஜக காங்கிரஸ் இரண்டுமே மதவாதக் கட்சிகள்தான். இரண்டில் ஒன்றைத்தான் ஆதரிக்க முடியும் என்பதால் பாஜகவை ஆதரிக்கிறேன் என்று தேர்தலுக்குப் பின்னால் சொல்வதற்காகவே காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பத்தினிப் பெண்ணிடம் போய் இனிமேல் விபச்சாரம் செய்ய மாட்டேன் என்று, அறிவித்தால்தான் உன்னை நம்புவேன் என்று சொல்வதுபோல அவரது கடைசி வாக்குமூலம் உள்ளது.

முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குரிய டயலாக்குகளும் அவரிடம் உள்ளது. அவரை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கத்தினர் அதை எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்கிறார்கள். இந்துத்துவா சக்திகளை ஏமாற்றும் டயலாக்குகளும் அவரிடம் உள்ளன. அவரை நம்பும் பா.ஜ.க.வினர் அதை மேற்கோளாகக் காட்டி தேர்தலுக்குப்பின் திமுகவின் ஆதரவைத்தான் கோருவோமே தவிர, அதிமுகவின் ஆதரவைக் கோரமாட்டோம் என்று கூறுவது இதனால்தான்.

காங்கிரஸ் குறித்தும், மோடி குறித்தும் இந்த இரண்டு மாதத்தில் ஆயிரம் பல்டி அடித்தவருக்கு தேர்தல் முடிந்தபின் இன்னொரு பல்டி அடிப்பது எளிதானதுதான்.

தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க, நான் ஒரு போதும் துணை நிற்கமாட்டேன் என்று கருணாநிதி, தெளிவாகக் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கூறுகிறார்.

அப்படி தெளிவாகக் கூறினாலும் கருணாநிதி அதை அப்பட்டமாக மீறுவதற்கு வெட்கப்பட மாட்டார். இது கருணாநிதியின் நிலை.

ஜெயலலிதா தன்னைப் பிரதமர் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும் அப்படித்தான் ஆரம்பத்தில் காட்டிவந்தார்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் மூன்றாவது அணியில் அங்கம் வகித்தார். கம்யூனிஸ்டுகள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கினார்.

மம்தா, சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் ஆதரவையும் திரட்டினார்.

இப்படி அவர் காட்டிக் கொண்டாலும், பாஜக ஆட்சி அமைக்க தனது எம்பி.க்கள் பலம் உதவுமானால் நிச்சயம் அவர் பாஜகவை ஆதரிக்கத் தவற மாட்டார்.

நான் ஒரு போதும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று அவர் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்கிறார்.

நான், ஒரு போதும் மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா சத்தியம் செய்து கூறினாலும் நம்மைப் பொறுத்தவரை அதை நம்ப மாட்டோம்.

1999ல் நாம் நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில், அவர் இதுபோல் கூறினார். நான்தான் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினேன். நானே அதைக் கவிழ்த்துவிட்டேன். இனி ஒரு போதும் பா.ஜ.கவை ஆதரிக்கமாட்டேன் எனக்கூறிவிட்டு பின்னர் பா.ஜ.கவுடன் சேர்ந்தார்.

”எனவே ஜெயலலிதாவாக இருந்தாலும், கருணாநிதியாக இருந்தாலும் நாங்கள் பாஜகவை ஆதரிக்கவே மாட்டோம் என்று தெளிவான வார்த்தைகளால் சத்தியம் செய்து சொன்னாலும் அறிவுடைய மக்கள் அதை நம்பமாட்டார்கள்.”

ஆனால் கருணாநிதி, இரு முகம் காட்டி இருவகையாக பேசுவதால், இவர் பாஜகவை ஆதரிக்கமாட்டார் என்று அப்பாவிகள் நம்புவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஜெயலலிதா பாஜக பற்றி வாய் திறக்காததால் அவர் பாஜக பக்கம்தான் போவார் என்று அப்பாவிகள் நம்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

”ஜெயலலிதா கருணாநிதி இருவர் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல், இருவரது கடந்த கால செயல்பாடுகளைச் சீர்தூக்கி பார்க்கும் மக்கள் தான் இதைப்புரிந்து கொள்வார்கள்.”

கருணாநிதி, பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என்பதுபோல பேசுகிறார். ஆனால் ஜெயலலிதா வாய் திறக்கமாட்டேன் என்கிறார் என்பதை மட்டும் பார்க்கும் அப்பாவி முஸ்லிம்களின் ஆதரவை ஜெயலலிதா, இழப்பார். ஜெயலலிதா, பாஜகவை ஆதரிப்பார் என்ற பிரச்சாரம் ஓரளவு எடுபடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.

ஆனால் “கருணாநிதி பாஜக பக்கம் போகமாட்டார் என்று நம்பும் இவர்கள் பின் ஏமாறுவார்கள். இருவருமே பாஜகவின் இரகசிய நண்பர்கள் என்று நம்புவதால் நமக்கு எந்த ஏமாற்றமும் ஏற்படாது.
எனவே ஜெயலலிதாவின் மவுனம் முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவைக் குறைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நாம் உறுதிபடக் கூறிக்கொள்கிறோம்.”

ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பதை நாம் அறிவோம்.
பாஜக.வுக்கு அந்த அளவு பெரும்பான்மை கிடைக்கும் என்று பாஜகவிடம் விலை போன ஊடகங்கள் கூட, கருத்துக் கணிப்பில் கூற முடியவில்லை.
கடைசியாக பாஜக ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கும், பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கட்சிகளுக்கும் சேர்த்து 233 இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள். எனவே, இன்னும் நாற்பது எம்பி.க்களின் ஆதரவு தேவைப்படும். இதற்காக பல்வேறு மாநிலக் கட்சிகளிடம் பாஜக பேரம் பேசும்.
அதிமுக 20, திமுக 20 என்ற அளவில் வெற்றி பெற்றால் இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவைத்தான் பெறமுடியும். இரு கட்சிகளுமே பாஜகவுக்கு ஆதரவு அளிக்க போட்டி போடுவார்கள். ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடி என்று ஊழல் செய்ய உதவும் பதவிகளை அடைய இருவரும் துடிப்பார்கள்.
ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து சம்பாதித்ததை(?) விட பல மடங்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவியின் மூலம் சம்பாதிக்க முடியும். இதை இருவருமே எளிதாக விட்டுவிட மாட்டார்கள்.
இருவருமே பாஜகவை ஆதரிக்க போட்டி போடும்போது, 13 மாதங்களில் ஆதரவை வாபஸ் பெற்று வாஜ்பேய் ஆட்சியைக் கவிழ்த்த ஜெயலலிதாவை விட, கருணாநிதியைத்தான் பாஜக தேர்வு செய்யும். குஜராத் கலவரம் போன்ற இன அழிப்பு நடந்தாலும், கருணாநிதி நம்மை உறுதியாக ஆதரிப்பார் என்றுதான் பாஜக நினைக்கும்.

நாற்பது இடங்களையும் ஜெய லலிதா கைப்பற்றினார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மானம் கெட்ட பாஜக அதிமுகவின் ஆதரவை நாடும். அதிமுகவும் ஆதரிக்கும்.

நாற்பது இடங்களையும் திமுக வென்றாலும் இதுதான் நடக்கும்.
ஆட்சியில் பங்கேற்று பதவிகளைப் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்வதற்குத்தான் அரசியல் நடத்துகிறார்களே தவிர, சேவை செய்வதற்கு அல்ல.
பாஜகவுக்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட 233 இடங்கள், காங்கிரசுக்குக் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் இதே நிலைதான் ஏற்படும்.
திமுக 20, அதிமுக 20 என்று வெற்றி பெற்றாலும் இருவரும் காங்கிரசை ஆதரிக்க நான், நீ என்று போட்டி போடுவார்கள். 3ஜி ஊழல் பிரச்சினை வந்தபோது, திமுகவை கழற்றிவிட்டால் காங்கிரசை ஆதரிக்க நான் தயார் என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்ததை நாம் மறந்து விட முடியாது.
ஆனால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸை ஆதரிக்க முன்வந்தாலும் காங்கிரஸ், திமுக ஆதரவைத்தான் ஏற்றுக்கொள்ளும். ஜெயலலிதா, சோனியாவை அவமானப்படுத்தியதை காங்கிரஸ் மறக்காது.
எல்லா தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றினால், தனது ஆதரவினால் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றால் இரண்டு கட்சிகளுமே மானத்தை இழந்து கூட்டு சேருவார்கள்.
காங்கிரசுடன் பாஜக கூட்டுசேராது, அதிமுகவுடன் திமுக கூட்டுசேராது என்பது மட்டுமே இன்றைய நிலையில் உறுதியானது.
மற்ற யாருடனும், யாரும் கூட்டு சேருவார்கள். அரசியல் என்பது பதவி பெற்று சம்பாதிப்பதற்குத்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முடிவாகச் சொல்வது என்றால் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே பாஜகவுடன் சேர்வதால் லாபம் கிடைக்கும் என்றால் சேர்வார்கள். ஆனால் ஜெயலலிதா, பாஜக பற்றி வாய் திறக்காமல் இருப்பது, நுணுக்கமான விஷயத்தைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களின் ஆதரவை இழக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இடஒதுக்கீட்டுக்காக ஆதரிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் முஸ்லிம்களின் ஆதரவில் சிறிய அளவிலாவது இந்த மவுனம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜெயலலிதா உணர்வது, அவருக்கு நல்லது.

Sunday, August 11, 2013

சிறைவாசிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? ஒர் விளக்கம்

சமீபத்தில் பிஜே அவர்களின் பேட்டி ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. 'சிறைவாசிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் குரல் கொடுக்கவில்லை?' என்று ஒரு சகோதரர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலாக இந்த ஆக்கம் வெளிப்படுகிறது. இது சம்பந்தமாக பிஜே அவர்களின் பதில் இதோ,

சம்பந்தப்பட்ட சகோதரரின் கருத்து:
/அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. // 
கோவை குண்டு வெடிப்பில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சுமத்தப்படாத பல சகோதரர்கள் தங்களுடைய இளமை பொழுதை சிறையில் கழிக்கிறார்களே, அவர்களின் குடும்பத்தின் கண்ணீர் பிற சமுதாய இயக்கங்களை கொஞ்சமாவது குரல் கொடுக்க தூண்டியது, இந்த பேட்டியிலாவது இது பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே.. ஏன் அப்பாவி கோவை சிறைவாசிகள் பற்றி வாய்திறக்க பயப்படுகிறீர்கள்.



சிறைவாசிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?

சிறைவாசிகளின் வழக்குகளுக்கோ அவர்களின் குடும்பங்களுக்கோ நான் உதவவில்லை என்றும் மற்றவர்கள் உதவுவதைத் தடுத்தேன் என்றும் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

 தமுமுக ஆரம்பிக்கப்படுவதற்கு நான் சிறைவாசிகளுக்கு உதவி வந்தேன் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன்.

தமுமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் அதில் நான் அமைப்பாளராக இருந்த காலம் வரை சிறைவாசிகளின் வழக்குகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. அவர்களின் குடும்பங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டு வந்தன.

ஆனால் குண்டு வெடிப்புக்குப் பின் அல் உம்மாவைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற கைதிகளுக்கான உதவியை அப்போதைய தமுமுக செய்தது.

பின்னர் சிறைவாசிகளின் பெயரைச் சொல்லி தமுமுக பணம் திரட்டி இயக்கம் நடத்துகிறது என்று தமுமுகவில் மாதாமாதம் உதவி பெற்ற சிலர் வெளிநாடுகளுக்குக் கடிதம் மூலம் பரப்பியதால் இனி மேல் சிறைவாசிகளுக்காக தனியாக உதவி கோருவதில்லை எனவும், இயக்கத்துக்காக திரட்டப்படும் நிதியில் இருந்து இயன்ற உதவிகள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இது பற்றி அன்றைய உணர்வில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிறை வாசிகளுக்கு தமுமுக உதவவில்லை எனக் கூறியவர்கள் மாதாமாதம் தமுமுகவில் உதவி பெற்று அளித்த வவுச்சர்களையும் உணர்வில் வெளியிடும் நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் சிறைவாசிகளின் குடும்பங்கள் மிகுந்த அல்லல்படுவதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்காக உதவும் படி உணர்வில் விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காகவே சிறைவாசிகளால் அமைக்கப்பட்ட ட்ரஸ்டுகளுக்கு உதவுமாறும் எங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் உணர்வில் விளம்பரம் வெளியிட்டோம்.

சிறைவாசிகளுக்காக எங்கள் முகவரிக்கு யாராவது அனுப்பினால் அதை அப்படியே சிறைவாசிகளிடம் மொத்தமாகக் கொடுத்து விடுவோம் என்று அறிவிப்பு செய்து அவ்வாறே கொடுத்தோம். சிறைவாசிகளில் சிலர் மீது நமக்கு கோபம் இருந்தாலும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் நாம் குறுக்கே நிற்கவில்லை.

சிறைவாசிகளை ஜாமீனில் விடுமாறும் நாம் அரசைக் கேட்டு வந்தோம்.

இந்த நிலையில் தான் சென்ற சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது. ஜெயலலிதாவைச் சந்தித்து சிறைவாசிகளின் ஜாமீன் மனு பற்றி கோரிக்கையை நானே முன் வைத்தேன்.

ஆனால் சிறையில் இருந்து சிறைவாசிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர். எங்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் பண்ண வேண்டாம். எங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் சொல்லி இருந்தனர். இன்னும் பலவிதமான குற்றச் சாட்டுக்களையும் அதில் சுமத்தி இருந்தனர். அந்த அறிக்கையைப் பிரசுரமாகவும் கோவை முழுவதும் விநியோகம் செய்தனர்.

நாங்கள் குரல் கொடுப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று சிறைவாசிகள் கருதுவதால் அவர்கள் விஷயமாக எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து அவர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டோம். கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் உறையாற்றச் சென்ற போது அந்தக் கூட்டத்திலேயே அந்த அறிக்கையை விநியோகம் செய்தனர். எங்களை வைத்து அரசியல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அப்பட்டமாக அறிவித்த பின்னர் அவர்கள் பற்றி பேசுவதை நாம் நிறுத்திக் கொண்டோம்.

இதன் காரணமாக நாங்கள் இவர்கள் விஷயத்தில் ஒதுங்கி இருந்தாலும் அவர்கள் எங்களை அணுகும் போது பழைய சம்பவங்களை மனதில் வைத்து நாம் நடந்து கொள்ளவில்லை.

அந்த அடிப்படையில் கடந்த மாதம் சிறைவாசிகள் சார்பில் எங்களைச் சந்தித்து எங்கள் விடுதலைக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்துல் பாசித் வந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.

நாம் பழைய சம்பவங்கள் எதையும் மனதில் வைக்காமல் அவர்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யுமாறு முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் கோரிக்கை மனு அளித்தோம்.

சிறையில் உள்ளவர்களைப் பொருத்த வரை அவர்கள் குழப்ப நிலையில் இருப்பார்கள். எனவே அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் அவர்களுக்கான உதவிகளை மறுக்கக் கூடாது என்று தான் நடந்து வந்துள்ளோம்.

சிறைவாசிகளுக்கு உதவுங்கள் என்று மக்களிடம் கேட்பதைத் தான் நிறுத்திக் கொண்டோம். ஆனால் இயக்கப் பணிகளுக்காகக் கிடைக்கும் நிதியில் இருந்து இப்போதும் நம்மை அணுகும் சிறைவாசிகளுக்கு உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கிறோம். 

Wednesday, April 24, 2013

தமுமுக தேர்தலில் போட்டியிடாது! அதிரடி முடிவு!! (வீடியோ)

தமுமுக தேர்தலில் போட்டியிடாது! அதிரடி முடிவு!! 

தலைப்பை பார்த்து பயந்துவிட வேண்டாம். தமுமுக என்ற இயக்கம் தேர்தலில் போட்டியிடாது, வக்ப் வாரியம் போன்றவற்றில் கூட எந்த பதவியும் வாங்கக்கூடாது என்பது தமுமுகவின் கொள்கையாக இருந்தது. சென்னை வாழ்வுரிமை மாநாட்டிலும் தஞ்சை மாநாட்டிலும் வந்த கூட்டத்தை கண்டு ஆணவம் தலைக்கு ஏறி, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்தது தமுமுக. தேர்தலில் நின்று சாதித்துவிடுவோம் என்று சொன்னவர்கள் அம்மாவிற்கும் அய்யாவிற்கும் ஜால்ரா தட்டி காலத்தை கடத்துகிறார்கள்.

கூட்டத்தை கண்டு தான் அரசியல் ஆசை வந்ததா? என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கும் போது ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மென்று விழுங்குவதையும் அசடு வழிவதையும் கீழ்காணும் வீடியோவில் கண்டு மகிழுங்கள்.

பிஜே அவர்கள் ஆரம்பம் முதல் எந்த நிலைபாட்டில் இருந்தாரோ அதே நிலைபாட்டில் நிலைத்து இருப்பதையும் பாருங்கள்.

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்றவர்கள், அத்தோடு கலந்துவிட்டதை யாரும் மறுக்க மாட்டார்கள். பொய்யர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 01, 2012

சூனியம் பற்றிய எதிர்வாதங்களும், தக்க பதில்களும்!


நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் நபியவர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானதாகவும் புகாரி முஸ்லீம் உள்ளிட்ட கிரந்தங்களில் வரக் கூடிய செய்திகள் குர்ஆனுக்கு முரன்படுகின்றன என்ற காரணத்தினால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்நாடதவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த அறிஞர்கள் அந்த செய்திகளை மறுத்து வருகின்றார்கள்.

அண்மையில் இலங்கை அன்சார் மவ்லவி என்பவர் சூனியம் தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் சில வாதங்களை முன் வைத்திருந்தார். அவர் வைத்த வாதங்களுக்குறிய வரிக்கு வரி பதிலை இங்கு வெளியிடுகின்றோம்.


1. சூனியம் ஓர் அறிமுகம் 

2. குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க ஹதீஸ் கலையில் விதி இல்லையா ?
3. குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவித்தவர்களின் நிலை என்ன?
4. சூனியத்தை நம்பிய இமாம்கள் முஷ்ரிக்குகளா?
5. நபிக்கு சூனியம் செய்யப்பட்டாலும் குர்ஆனின் பாதுகாப்பை அது பாதிக்காது 
6. நபிமார்களின் நாவில் ஷைத்தான் பேசினானாம்
7. மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதன் பொருள் என்ன?
8. எனக்கு சூனியம் வைத்துப் பார் என்று சவால் விடலாமா?
9. சூனியத்தின் மூலம் நபிக்கு உடல் பாதிப்புதான் ஏற்பட்டது, மனபாதிப்பு அல்ல
10. நபி ஆறு மாதம் சூனியத்தால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்ற அறிவிப்பு சரியா ?


11. மேற்கண்ட அறிவிப்பு பலவீனம் என்றாலும் TNTJ வாதத்துக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமா?


12. அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதன் பொருள் என்ன?
13. நபிக்கு சூனியம் வைத்தது ஆயிஷாவுக்கு மட்டும் தான் தெரியும், இதனால்தான் காபிர்கள் விமர்சிக்கவில்லை
14. ஹாரூத் மாரூத் மலக்குகளா?

15. யூதர்கள் சுலைமான் நபியின் பெயரைப் பயன்படுத்தி சூனியத்தை நியாயப்படுத்தியதாக கூறுவது ஆதாரமற்றது
16. தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் பொருள் குர்ஆன் எளிமையானதல்ல என்று சித்தரிக்கும் வாதம் 

17. சூனியத்தை கற்றுக் கொடுக்க ஏன் மலக்குகளை அனுப்ப வேண்டும்?


18. கணவன் மனைவிக்கு இடையில் பிளவு ஏற்படுத்துவது அவ்வளவு பெரிய பாவமா?
19. கோள் சொல்லி கணவன் மனைவியைப் பிரிப்பது என்றால் இது கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயமா?
20. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்றால் யார்? 
21. அஜ்வா பேரீச்சம் பழம் சாப்பிட்டால் விஷம் ஒன்றும் செய்யாதா?
22. கருஞ்சீரகம் அனைத்து நோய்க்கும் மருந்தா?

சூனியம் குறித்த மேலதிக விபரம்:

சூனியம் குறித்து நாம் முன்னரே தெளிவாக விளக்கியுள்ளோம். அவற்றை அறிய விரும்புவோர் கீழ்க்கண்ட ஆக்கங்களைப் பார்க்கவும்

1. வானவர்கள் சூனியத்தைக் கற்றுத்தரவில்லை

2. சூனியம் என்பது கற்பணையே

3. சூனியம் என்பது ஒரு தந்திரமே

4. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதா?

5. ஹாரூத் மாரூத் மலக்குகளா?

6. இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

7. ஸிஹ்ர் ஓர் விளக்கம்

8. ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

9. சூனியத்தால் என்ன செய்ய முடியு?ம்

10. பில்லி சூனியம் உண்மையா?

Saturday, February 25, 2012

பீஜே காட்டிக்கொடுத்தாரா?

கேள்வி:


நீங்கள் கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை காட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு சொல்கின்றார்களே இது உண்மையா? விரிவான விளக்கம் தேவை
ஹசன்
மேலப்பாளையம்

பதில்:

இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது இணையதளத்தில் அளித்த பதிலையே உங்களுக்கும் பதிலாகத் தருகிறேன்.

கேள்வி : குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவில்லையா?

பதில்:
கோவையில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன் பீஜே அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்தார் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

இது பற்றியும் நாம் தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கோவையில் காவலா் செல்வராஜ் கொல்லப்பட்டதன் எதிரொலியாக கோவை காவல்துறை ஒட்டுமொத்தமாக அரசுக்குக் கட்டுப்படாமல் ஸ்ட்ரைக் செய்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக சமூக விரோதிகளை ஏவி விட்டனர். சமூக விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளி 19 பேரைக் கொன்று குவித்தனா். இன்னும் சொல்லிமுடியாத கொடுமைகளை எல்லாம் செய்தனர்.

இந்தக் கொடுமையை மனித உரிமைக் கமிஷன் சிறுபான்மைக் கமிஷன் வரை அப்போதைய தமுமுக மூலம் நாம் கொண்டு சென்றோம்.

தமிழக அரசு இந்தக் கொடுமையை நிகழ்த்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பட்டமாக முஸ்லிம் விரோதப்போக்கை அப்போதைய முதல்வர் வெளிப்படையாகக் காட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் இதற்குப் பழி தீர்ப்பதற்காக கோவையில் சில இடங்களில் குண்டு வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட தகவல்கள் தமுமுக தலைமைக்குக் கிடைத்தது.

குண்டு வெடிப்பு நடந்தால் அப்பாவிகள் பலர் கொல்லப்படுவார்கள் என்று அப்போதைய தமுமுக நிர்வாகிகள் கவலைப்பட்டோம். மேலும் இதன் விளைவு கடுமையாக இருக்கும் ஏற்கனவே கோவை கலவரம் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள கோவை முஸ்லிம்கள் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்க நேரும் என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.

மேலும் அவசரப்பட்டு இச்செயலைச் செயதவர்கள் காகாலத்துக்கும் இன்னல்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.

மேலும் குண்டு வெடிப்பு போன்ற சம்பவம் நடந்துவி்ட்டால் அதற்குமுன் நடந்த கலவரம், முஸ்லிம் இனப் படுகொலை ஆகியவற்றுக்கு நீதி கோரும் தார்மீக பலத்தை நாம் இழந்து விடுவோம் என்றெல்லாம் நாங்கள் கவலைப்பட்டோம்.

இந்தச் சமுதாயம் தாங்கிக் கொள்ள முடியாத கடும் விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்றால் குண்டு வெடிக்காமல் தடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

எனவெ எங்கெங்கே குண்டு வைக்கப்படவுள்ளன என்ற தகவலை விரிவாகத் திரட்டினோம்.

அப்போது காவல் துறை டி ஜி பியாக இருந்த அலெக்ஸாண்டர் அவர்களைச் சந்தி்த்து விளக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

நான், ஜவாஹிருல்லா, ஹைதர் இன்னொருவர் (நினைவில் இல்லை அநேகமாக விஞ்ஞானி ஜலீலாக இருக்கலாம்) ஆக நான்கு பேர் டிஜிபியைச் சந்தித்தோம். பொதுவாக நான் இது போன்ற சந்திப்புகளில் பங்கேற்பதில்லை என்றாலும் இதன் முக்கியத்துவம் கருதி நானும் அதில் ஒருவனாகக் கலந்து கொண்டேன்.

இன்னின்ன இடங்களில் குண்டு வைக்கப்படவுள்ளன. அதனால் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் ஆதாரத்துடன் நாங்கள் எடுத்துச் சொல்லி குண்டு வெடிக்காமல் எப்படியாவது தடுத்து விடுங்கள் என்று வலியுறுத்தினோம்.

கவனமாகக் கேட்டுக் கொண்ட டிஜிபி இந்த தகவலை நீங்கள் கோவை காவல் துறையிடமும் தெரிவியுங்கள் நானும் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். இதன்படி நம்பகமானவர்கள் மூலம் கோவை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முழு விபரமும் சொல்லப்பட்டது.

அவர்கள் நினைத்திருந்தால் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகளைக் கண்டு பிடித்து செயலிழக்கச் செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் கொடுத்த பட்டியலில் காவலர்கள் குடி இருப்பும் ஒரு இடமாகும். அந்த இடத்தில் மட்டும் குண்டு வெடிக்காமல் காவல் துறையினர் காப்பாற்றிக் கொண்டனர். மற்ற இடங்களில் குண்டு வெடிப்பைத் தடுக்க வாய்ப்பு இருந்தும் அவர்கள் தடுக்கவி்ல்லை தடுக்க அவர்கள் விரும்பவில்லை.

19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் மற்றும் பலர் காயப்படுத்தப்படடதிலும் சொத்துக்கள் சூறையாடியதிலும் கோவை காவல் துறையினர் விசாரணையை எதிர் நோக்கி இருந்தார்கள். அதில் இருந்த அவர்கள் தப்பிக்க வேண்டுமானால் அதை விடப் பெரிய கொடுஞ்செயல் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து நிகழ வேண்டும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.

இதன் காரணமாக அவர்கள் குண்டு வெடிப்பைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

குண்டு  வெடிப்பைத் தடுப்பதற்காக நாம் செய்த இந்த முயற்சி யாரையும் காட்டிக் கொடுப்பதற்காகச் செய்தது அல்ல. மாறாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மை கருதி செய்த காரியமாகும். இன்னும் சொல்லப்போனால் குண்டு வைத்தவர்களுக்குக் கூட இது நன்மையாக அமைந்திருக்கும்.

இதையும் காட்டிக் கொடுத்தல் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

ஒட்டு மொத்த சமூதாயத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் காரியம் ஒன்று நடக்க இருப்பது தெரிய வந்தால் இப்போதும் அதைத் தடுக்க நான் முயல்வேன். இது காட்டிக் கொடுத்ததில் சேராது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இது பொதுவாக நான் சொல்லும் பதிலாகும்.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தலைமறைவாகி ஒவ்வொருவராக பிடிபட்டனர். ஒவ்வொருவர் பிடிபடும் போதும் அவர்களைக் காட்டிக் கொடுத்தது பீ ஜே தான் என்றோ தமுமுக என்றோ தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். அவை அனைத்துக்கும் நான் இனைய தளத்தில் பதில் அளித்துள்ளேன்.

ஆனாலும் பல பக்கங்கள் கொண்ட அந்த ஆக்கத்தில் உங்கள் கேள்விக்கான பதிலாக அமைந்த சிறு பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.

ஆன்லைன் பீஜே இணையதளத்தில் உள்ள கட்டுரையின் ஒரு பகுதி...

“சிறைவாசிகள் தொடர்பாக பலவிதமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்த போதும் தமுமுகவில் இருந்த போது தமுமுக சார்பில் அதிகாரப்புர்வமாக நான் பதிலளித்துள்ளேன். அதில் ஒரு பகுதியைத் தான் மேலே பார்த்தீர்கள்.

ஆனால் அதன் பின்னர் சிறைவாசிகளை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த போதும் நான் அதிகாரப்புர்வமாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் பதில் அளிக்கவில்லை. தனிப்பட்ட சில சந்திப்புகளின் போது இதுகுறித்து கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கம் அளித்தது தவிர பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் அது குறித்து நான் விளக்கம் அளிக்கவில்லை இதற்குக் காரணம் இருக்கிறது. இது குறித்து நான் பதில் சொல்லப்போனால் தவறுகள் அனைத்தும் சிறைவாசிகள் மீதுதான் என்பது உறுதியாகும். இதன் காரணமாக சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் குறைந்து விடக்கூடாது என்று நான் கருதியது தான் அந்தக் காரணம்.

அந்த நிலை இப்போது இல்லை. சிறைவாசிகளி்ல் அதிகமானோர் விடுதலை ஆகி விட்டனர். நான் இது குறித்து விளக்காமல் இருந்தால் பீஜே சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்தார் என்ற பொய், வரலாற்றில் உண்மையாகிவிடும். அவ்வாறு ஆகக் கூடாது என்பதாலும், அனைத்தையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அது குறித்து விரிவாக இப்போது விளக்குகிறேன்.

பாஷா அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்த போது அவர்கள் கையெழுத்துப் போட்டு அளித்த சட்டப்புர்வமான வாக்கு மூலத்தி்ல் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு பீஜே தான் பண உதவி செய்தார் என்று கூறி இருந்தனர்.

இப்படி பீஜேயைச் சம்பந்தப்படுத்தி கூறி இருந்தும் பீஜேயை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை? இதில் இருந்து பீஜே அரசாங்கத்தின் உளவாளி என்பது தெரியவில்லையா? என்று பிரச்சாரமும் செயது வந்தனர்.

நாங்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்படாததால் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் பிரச்சாரம் செய்து வரலாயினர்.

அப்துன்னாஸா் மதானி எங்களுக்கு உதவினார் அடைக்கலம் தந்தார் என்று கைது செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத்தினர் கூறியதால் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஆனால் பீஜே மீது வலிமையாக நாங்கள் குற்றம் சுமத்தி இருந்தும் அவர் ஏன் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்படவில்லை என்ற பிரச்சாரம் என்னுடைய எதிரிகள் மத்தியில் நன்றாக எடுபட்டது.

இது குறித்த விளக்கத்தை நான் இப்போது தெளிவுபடுத்துகிறேன்.

பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் எனக்கு எதிராக அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் என்னை நிச்சயம் வழக்கில் சேர்க்க முடியும்.

ஆனால் தமுமுகவுக்கும், அல்உம்மாவுக்கும் இருந்த பகை பற்றியும், அல்உம்மா இயக்கத்தினர் தமுமுக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும், தமுமுக கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டிச் சாய்த்தது பற்றியும், எங்களைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது பற்றியும் அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் எதிரி இயக்கத்தின் மீது பழி சுமத்தவே இதைக் கூறுகின்றனர் என்பது அதிகாரிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே தெரிந்து விட்டது. இதனால் எங்களில் யாரையும் அவர்கள் வழக்கில் சேர்க்கவில்லை.

ஆனாலும் அரசாங்கம் பீஜேயையும் தமுமுகவையும் வழக்கில் சேர்க்காமல் எங்கள் குற்றச் சாட்டைக் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற நினைக்கிறது என்று பல முனைகளில் அல்உம்மா தரப்பில் பிரச்சாரம் செய்து வந்ததால் வேறு வழியில்லாமல் இது குறித்து விசாரித்து என்னை வழக்கில் சேர்க்க எஸ்.ஐ.டி (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) முடிவு செய்தனர்.

அதன்படி பீஜே, ஜவாஹிருல்லா,  ஹைதர் அலி, பாக்கர் ஆகிய நால்வருக்கு எதிராக நீதிமன்ற அனுமதி பெற்று விசாரனைக்கு அழைத்து வரும் உத்தரவு பெற்றனர். மேலும் தமுமுக அலுவலகம், மற்றும் எனது வீடு ஆகியவற்றைச் சோதனை செய்யும் உத்தரவோடு வந்தனர்.

திடீரென தமுமுக அலுவலகத்தில் ரைடு நடத்தினார்கள். அதே நேரம் எனது வீட்டிலும் ஒரு நாள் முழுவதும் சின்னச் சின்ன துரும்பைக் கூட விடாமல் சோதனை செய்தனர்.

எனது வீட்டில் அவா்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.  தமுமுக அலுவலகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சில ஃபைல்களையும், அலுவலகத்தில் இருந்த அனைத்து வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்றனர்.

அத்துடன் எங்கள் நால்வரையும் விசாரணைக்காக கோவை வருமாறு உத்தரவிட்டுச் சென்றனர்.

இதன் அடிப்படையில் இந்த வழக்கில் நிச்சயம் சேர்த்துவிடுவார்கள் என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரிந்ததால் குடும்பத்துக்குச் சொல்ல வேண்டிய வஸிய்யத்களைச் செய்து விட்டு மற்ற மூவருடன் கோவை புறப்பட்டேன்.

ஜவாஹிருல்லா,  ஹைதர், பாக்கர் ஆகிய மூவர் மீதும் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் சாதாரணமான குற்றத்தையே சுமத்தி இருந்தார்கள். அவர்கள் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என்பது என்று எனக்குத் தோன்றியது.. ஆனால் நான் நிச்சயம் கைது செய்யப்படுவேன் என்று உள்ளுணர்வு சொன்னது. அவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுக்களை என் மீது கூறி இருந்தனர்.

நாங்கள் நால்வரும் நான்கு நாட்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டோம்.

குண்டு வைப்பதற்காக ஒரு துணிப் பையில் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் பீஜே தந்தார். அதை மேலப்பாளையம் புகாரி, (அல்லது முஹம்மது அலி) பீஜே வீட்டுக்குப் போய் வாங்கி வந்தார். அந்தப் பணத்தில் தான் குண்டு வைப்பதற்கான பொருள்களை வாங்கினோம் என்பது பாஷா என் மீது சுமத்திய முதல் குற்றச்சாட்டு, என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றதை புகாரியும் உறுதி செய்துள்ளார். இது பொய் என்பதை நான் தான் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கத் தவறினால் வழக்கில் முதல் குற்றவாளியாகக் கூட நான் சேர்க்கப்படலாம் என்று விசாரனை அதிகாரிகள் தெரிவித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர்.

பாஷா ஜாமீனில் வெளியே வந்து தமுமுக அலுவலகத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் “நான் அடிக்கடி கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறேன். அப்படி கைது செய்யப்பட்டால் என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. எனவே இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன். அதை உங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபரிடம் கொடுத்து மாதாமாதம் இலாபம் வரும் வகையில் முதலீடு செய்து உதவுங்கள்” என்று கூறி பாஷா இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். அதைத் தொழில் அதிபர் அன்வா் பாஷா அவர்களிடம் கொடுத்து வைத்து மாதாமாதம் லாபம் வரும் வகையில் அவருக்கு உதவினேன். திடீரென ஒரு நாள் அந்தப் பணம் உடனே வேண்டும் என்று பாஷா கேட்டு அனுப்பினார் உடனே நான் அன்வர் பாஷாவிடம் நிலைமையை விளக்கி பணத்தைக் திருப்பிக் கேட்ட போது நாளை தருவதாகச் சென்னார். அதன் படி மறுநாள் புஹாரியை (அல்லது முஹம்மது அலியை) வரச் செய்து அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டேன்.

மேலப்பாளையம் புகாரியிடம் அதிகாரிகள் விசாரித்த போது உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டார். தொழில் செய்வதற்காக பாஷா அவர்கள் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் வாங்கினாரே தவிர குண்டு வைடிப்புக்காக பீஜே கொடுத்த பணம் அல்ல என்று புகாரி அளித்த வாக்கு மூலமும் என்னைப் பொய் வழக்கில் சேர்க்காததற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.
பாஷா என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் திரும்ப வாங்கினார் என்று அதிகாரியிடம் நான் தெளிவுபடுத்தி எனக்கும் அல்உம்மாவுக்கும் உள்ள கடும் பகை, அவர்களின் கொலை மிரட்டல் காரணமாக எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றையும் எடுத்துக் காட்டினேன். எங்களுக்குள் இவ்வளவு பகை இருக்கும் போது நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினேன்.

என்னிடம் விசாரித்தது போலவே மற்ற மூவரிடமும் தனியாக இன்னொரு டீம் இது குறித்து விசாரணை செய்தது. அவா்களும் நான் கூறியது போலவே கூறினார்கள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

ஆனால் காவல் துறையினர் இதை முழுவையாக நம்பாமல் இதை மேலும் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். நாங்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது மறுநாள் சென்னைக்குத் தகவல் கொடுத்து அன்வர் பாஷா அவர்களின் அலுவலகத்தின் கணக்குப் புத்தகத்தைச் சோதித்தனர். அதில் பாஷா பணம் முதலீடு செய்த விபரம் அவருக்கு திருப்பிக் கொடுத்த விபரம் ஆகியவை இருந்ததால் நான் செய்வது முழு உண்மை என்று போலீசார் கண்டு கொண்டனர்.

அன்வர் பாஷா அவர்கள் இந்த விபரத்தை எழுதி வைத்திருக்காவிட்டால் நானும் 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அல்லது சிறைக்குச் சென்றவுடன் அங்கேயே கொல்லப்பட்டிருக்கவும் கூடும். அல்லாஹ் எனக்குச் செய்த மாபெரும் கருணையால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து நான் தப்பிக்க முடிந்தது.
அடுத்து பாஷாவின் மைத்துனர் ஜூபைர் என்பவர் ஒரு வாக்கு மூலம் கொடுத்திருந்தார். அது இதை விடக் கடுமையானது.

அவரிடம் கைப்பற்றப்பட்ட ஜெர்மன் துப்பாக்கி பற்றி காவல்துறை விசாரித்த போது நான் பீஜேயை 36 தாக்கர் தெருவில் உள்ள உணா்வு அலுவலகத்தில் சந்தித்த போது ஐம்பதினாயிரம் ரூபாய் பனமும் இந்த ஜெர்மன் துப்பாக்கியும் கொடுத்தார் என்று பாஷாவின் மைத்துனர் கூறி இருந்தார்

இது குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பல வகையில் விசாரித்தனர்.

உண்மையில் இது பொய் என்றால் குற்றம் சுமத்தப்பட்ட நான் தான் இதை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று காவல் துறையினா் எதிர்பார்த்தனர்.

இது பொய் என்று என்னால் எப்படி நிரூபிக்க முடியும்? பாஷா மைத்துனர் ஜூபைர் கொடுத்த வாக்குமூலத்தின் நகலைத் தாருங்கள் என்று நான் கேட்டேன் அவர்கள் நகலைத் தந்தனர்.

அவர் பொத்தாம் பொதுவாக இதைக் கூறி இருந்தால் நான் நிச்சயம் பொய் வழக்கில் சிக்கி இருப்பேன்.

ஜூபைர் என்னைச் சந்தித்த மாதத்தையும் வருடத்தையும் குறிப்பிட்டு இருந்தார். (அந்த வருடம் மாதம் இப்போது நினைவில் இல்லை)

அந்த இடத்தில் தான் அல்லாஹ்வின் மாபெரும் அற்பதம் நிகழ்ந்தது எனலாம்.

புரசைவாக்கம் தாக்கா் தெருவில்தான் உணர்வு அலுவலகம் இருந்தது.

பின்னர் இப்ராஹிம்ஷா தெருவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

அலுவலகம் மாற்றப்பட்டு வி்ட்டாலும் நீதிமன்றத்தில் முகவரி மாற்றம் பற்றிய தீர்ப்பு பெற வேண்டும், அது தாமதமானதால் கடைசி பக்கத்தில் 36 தாக்கர் தெரு என்றே போட்டு வந்ததோம். இதைப் பார்த்துவிட்டுத் தான் ஜூபைர் தாக்கர் தெரு அலுவலகத்தில் என்னைச் சந்தித்ததாகக் கூறி விட்டார். ஆனால் அவர் கூறிய அந்தக் காலத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பே நாங்கள் இப்ரா ஹிம் ஷா தெருவுக்கு மாறி வி்ட்டோம்.

அதாவது எந்த மாதத்தில் என்னை தாக்கர் தெரு அலுவலகத்தில் சந்தித்ததாக பாஷாவின் மைத்துனர் கூறினாரோ அந்த மாதத்தில் உணர்வு அலுவலகமே அந்த முகவரியில் இல்லை என்று நான் தெரிவித்தேன்.

எங்களைக் கஸ்டடியில் வைத்துக் கொண்டே சென்னைக்குத் தகவல் கொடுத்து தாக்கர் தெரு முகவரியில் இருந்த உணர்வு எப்போது இடம் மாறியது என்பதை விசாரிக்கச் செய்தனர். அது போல் இப்ராஹீம் ஷா தெருவில் உள்ள உணர்வு அலுவலகத்தில் சென்று சோதித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் பார்த்து நாங்கள் எவ்வளவு காலமாக இந்த முகவரியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.

மறுநாள் நீங்கள் கூறியது உண்மை தான் என அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். நான்கு நாட்கள் கோவையில் வைத்து விசாரித்துவிட்டு என் மீதும் மற்ற மூவர் மீதும் பொய்யாகத் தான் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் புகார் கூறியுள்ளனர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதி செய்த பின் எங்கள் நால்வரையும் விடுவித்தனர்.

அப்துன்னாஸர் மதானி தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டை அவரால் பொய் என்று நிரூபிக்க முடியாததால் அவர் பலகாலம் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு குண்டு வெடிப்பில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதும் இவர்களால் தான் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?

அவரைப் போன்ற பெரிய தலைவர்களையும் வழக்கில் சேர்த்தால் பெரும் போராட்டம் நடக்கும் அதனால் தாங்கள் தப்பிக்கலாம் என்று நினைத்து அவரை வழக்கில் இழுத்து விட்டதாக அவர்களைச் சேர்ந்த ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்போது அப்துன்நாஸர் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கும் இது போன்ற ஒருவரின் வாக்குமூலமே காரணம்.

ஆனால் நான் நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ்வின் உதவி எனக்கு இருந்ததால் இதில் இருந்தும் நான் தப்பித்தேன். அல்லாஹ்வுக்காகப் போராடப் போவதாகச் சொன்னவர்கள் சம்மந்தமில்லாதவர்கள் மீது பழி போடும் அளவுக்குக் கேவலமாக நடந்து கொண்டனர்.

என் மீது இவர்கள் பழி சுமத்தியதால் தான் என்னையும் சாட்சிகள் பட்டியலி்ல காவல்துறை சேர்த்தது. எனக்கும் பாஷாவுக்கும் பகைதான்  இருந்தது என்பதை நீதி மன்றத்தில் சொல்ல வைத்ததற்கு பாஷாவின் பொய்ப புகார் தான் காரணம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீஜே மட்டும் தான் சிறைவாசிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னார் என்று இதையும் பரப்பினார்கள்.

குண்டு வெடிப்பு தொடர்பாக நான் எந்த சாட்சியமும் அளிக்கவில்லை. என் மீது பழி சுமத்தியதால் எனக்கும் இவர்களுக்கும் பகைதான் இருந்தது என்று சொன்னேன். அதுவும் நானாகப் போய் இதைச் சொல்லவில்லை. சிறைவாசிகளின் வழக்கறிஞர் என்னையும் விசாரிகக வேண்டும் என்று மனு போட்டதன் அடிப்படையி்ல் நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியதால் தான் நான் என்னைக் காத்துக் கொள்வதற்காக இவா்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்ற உண்மையைக் கூறினேன்.

என் மீது பொய்ப் பழியையும் சுமத்திவிட்டு, எனக்குச் சம்மன் அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுவும் போட்டு விட்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக பல முறை நீதி மன்றத்துக்கு எனனை அலைய வைத்துவிட்டு, நான் குண்டு வெடிப்பு தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்தும் நான் குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சி கூறியதாகவும் பரப்பினார்கள்.

இதற்காக பாஷா அவர்கள் பிற்காலத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் மற்ற சிலர் இன்னும் திருந்தவில்லை என்பதைக் காண்கிறேன். அவர்களைத் தான் சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.

மீண்டும் நான் உறுதிபடக்கூறிகிறேன், நான் எந்தக் காலத்திலும் எந்த மிரட்டலுக்கும் பயப்படக் கூடியவன் அல்ல. தவ்ஹீத்வாதியாக் இருப்பவன் யாருக்கும் பயப்படமாட்டான்............

இன்னும் முழுமையான விபரங்கள் அறிய நீங்கள் கட்டாயம் ஆன்லைன் பீஜே இணையதளத்தில் உள்ள அந்த முழுக் கட்டுரையையும் வாசியுங்கள்.

நன்றி
உணர்வு

Monday, January 09, 2012

ஸலஃபிகளே ஸஹீஹான ஹதீசை செயல்படுத்துங்கள் (மறுக்காதீர்கள்)!


ஸலஃபிகள் என்ற முன்னோர்களை கண்மூடி பின்பற்றும் கூட்டம், பிஜே ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று சில விஷயங்களை உளறி தள்ளியிருந்தார்கள். அதில், பிஜே ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கிறார், ஸஹாபாக்களையும் ஸலஃபிகளையும் பின்பற்றுவது இல்லை என்று கிறுக்கி தள்ளியிருந்தனர். 

ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை இதுவரை பிஜேவை தவிர்த்து வழிகேட்ட கும்பல்கள் தான் மறுத்துள்ளன என்று கதைவிட்டுயிருந்தார்கள். குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை பல நல்ல அறிஞர்கள் மறுக்க வேண்டும் சட்டம் சொல்லியுள்ளனர் என்று அடுக்கடுக்கான வாதங்களை வைத்தவுடன் பதில் தெரியாமல் திகைத்து போயினர், ஒட்டம் எடுத்தனர். அதைபோல், ஸஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடு என்று நாம் நிருபித்தவுடன் ஒட்டம் எடுத்தனர்.

பதில் இல்லாமல் வலுவாக சிக்கிக்கொண்ட பின், ஹதீஸ்கள் பட்டியலை வெளியிடுங்கள் என்று திசை திருப்புகிறார்கள்.

அவர்களின் ஆர்வத்திற்காக குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ் ஒன்றை நாம் வெளியிடுகிறோம். இந்த ஹதீசை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறுவதோடு நின்றுவிடாமல், அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

நாங்கள் ஹதீசை ஏற்றுக்கொள்வோம், ஆனால் அதை செயல்படுத்த மாட்டோம் என்றால், அது ஏமாற்று வேலை. இந்த ஹதீசை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை செயல்படுத்துவும் முடியாது.

இது சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே உரிய சட்டம் என்றும் கதை விடாமல், அதை செயல்படுத்திக் காட்டுங்கள். அவ்வாறு செயல்படுத்தவில்லை என்றால், நீங்களும் இந்த ஹதீசை மறுக்கிறீர்கள் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.

இந்த ஹதீஸின் அடிப்படையில் சவூதியில் பெண்கள் தனியாக வாகன ஓட்டுநர்கள் உடன் சொல்ல வேண்டியிருப்பதால், அந்த பெண்கள் ஒட்டுநர்களுக்கு பால் கொடுத்து, சகோதரர்களாக ஆக்க வேண்டும் என்று சவூதியின் ஸலஃபி அறிஞர் ஒருவர் ஃபத்வா கொடுத்தார். இந்த ஃபத்வாவிற்கு சவூதியில் உள்ள பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சவூதியில் கூட இந்த சட்டத்தை நடைமுறை படுத்தமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்க அறிவு இல்லாமல், தங்களால் வழிகேடர்கள் என்று கூறப்பட்ட, இஸ்மாயில் சலஃபி போன்றவர்களின் ஆக்கங்களை எடுத்து வாந்தி எடுக்கும் சில்மியின் முரிதுகள் வெட்கப்பட வேண்டும். அல்பானியின் மாணவர் என்றும், நான் தான் தமிழ் உலகத்திலேயே நன்கு படித்தவன் என்று உளறும் சில்மி சுயமாக ஆய்வு செய்ய தெரியாதவர் என்பதற்கு இது ஒரு தக்க சான்று.

இந்த நேரத்தில் சவூதி மார்க்க அறிஞர் ஒருவர், அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் கருத்து சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்ற பிஜேவின் கருத்தை முன்வைத்தார். அவரை எதிர்க்க இந்த அரபு நாட்டு அடிமை கூட்டத்திற்கு திராணியில்லை என்பது ரகசியம். பிஜேவின் கருத்தை சொன்ன அறிஞரை இந்த குழப்பிகள் கூட்டம் எதிர்க்க முடியாது. எதிர்த்தால், சம்பளம் வராது.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்-1:

பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டுதல்:

நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள் சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார். மேலும் அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் (சாலிமை அபூஹுதைஃபா வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்) மேலும் அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை (யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது. 

ஆகவே நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அது தான் அல்லாஹ்விடத்தில் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரராகவும் உங்கள் மார்க்கச் சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள் எனும் (33 : 5ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).

பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு அபூஹுதைஃபா பின் உத்பா அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33 : 5 ஆவது) வசனத்தை அருளி விட்டான் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5088)

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே. அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2878)

சஹ்லா (ரலி) அவர்களும் அவரது கணவர் அபூஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது. 

ஸலஃபி மதஹபினர் இந்த ஹதீசை செயல்படுத்துகிறார்களா? அல்லது மறுக்கிறார்களா? என்று பார்ப்போம். 


இந்த ஹதீஸ் குர்ஆனுடன் எவ்வாறு முரண்படுகிறது என்பது தேவைப்பட்டால் பின்னர் விளக்கப்படும்.

Wednesday, September 22, 2010

'மாமனிதர் நபிகம் நாயகம்' புத்தகம் ரியாத் ஜாலியாத் மூலம் மீண்டும் வெளியீடு!

அல்லாஹ்வின் கிருபையால், மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. பிஜே அவர்களின் பல நூல்களை சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற ஜாலியாத்துகள் (இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையங்கள்) பல சமயங்களில் வெளியிட்டுள்ளன.

அவற்றுள் 'இதுதான் பைபிள்', 'இயேசு இறைமகனா?', 'பித்அத் ஓர் ஆய்வு', 'திருமறையின் தோற்றுவாய்', 'நோன்பு', 'மாமனிதர் நபிகள் நாயகம்' மற்றும் 'அர்த்தமுள்ள இஸ்லாம்' போன்றவையும் அடங்கும்.

சில வருடங்களுக்கு முன்பாக நஸீம் ஜாலியாத் மூலம் 'மாமனிதர் நபிகள் நாயகம்' இலவச பதிப்பாக வெளியிடப்பட்டது. புத்தகத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம் – முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளிடம் அந்த புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, ரப்வா ஜாலியாத், இந்த வருடம் மீண்டும் அப்புத்தகத்தை மீள்பதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

மேலும் படியுங்கள்: பிஜே சவூதியில் நுழைய தடையா? 

'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்.