Showing posts with label பொதுக்கூட்டம். Show all posts
Showing posts with label பொதுக்கூட்டம். Show all posts

Saturday, January 03, 2015

அதிரையில் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்


இன்ஷா அல்லாஹ்  வருகின்ற 10.1.2015 சனிக்கிழமை மஹ்ரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வாபள்ளி அருகில் அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் 


Sunday, January 19, 2014

அதிரையில் நடைபெற்ற மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் !

இந்தியாவில் வாழுகின்ற இஸ்லாமியர்களின் பின் தங்கிய நிலையை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழகத்தின் முக்கிய மாநகர்களில் எதிர் வரும் ஜனவரி 28ல் நடைபெற இருக்கிற சிறை செல்லும் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் நமதூர் தக்வா பள்ளி அருகில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறை நிரப்பும் போராட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும், சையது இப்ராஹிம் அவர்கள் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி ! என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக கூட்டத்திற்கு தலைமை வகித்த அதிரை நகர கிளை செயலாளர் Y. அன்வர் அலி அவர்கள் 'இறையச்சம்' என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. நீதிபதி ரெங்கராஜ் மிஸ்ரா, சச்சார் கமிசன் ஆய்வு அறிக்கைகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலதாமதப்படுத்திவரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

2. தேர்தலின் போது இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கபட நாடகமாடும் அரசியல் கட்சிகளை இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

3.  ஆட்சிக்கு வந்தால் 3.5 சதவித இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவோம் என தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். இதன்படி இவற்றை காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்றி தர வேண்டும் என இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. எதிர் வரும் ஜனவரி 28ல் இடஒதுக்கீடு வழங்க கோரி திருச்சியில் நடைபெற உள்ள சிறை செல்லும் போராட்டத்தில் அதிரையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், அனைத்து பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொள்ள இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

5. அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

6. அதிரை தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கடந்த இரண்டு பொதுக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அதிரை பேருந்து நிலையம் - பழைய போஸ்ட்ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலை பணிகளை துவக்கிய பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் அதிரை நகர இணைச்செயலாளர் சுலைமான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.










Sunday, January 05, 2014

அதிரையில் மாபெரும் பொதுக்கூட்டம்

அதிரையில் மாபெரும் பொதுக்கூட்டம்







Saturday, December 28, 2013

சிறை நிரப்பும் பேராட்டம் ஏன்? அதிரையில் விளக்க பொதுக்கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட அதிராம்பட்டினம் கிளை சார்பாக எதிர்வரும் 18.1.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தக்வா பள்ளி வருகில் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது இதில் மாநில பொதுச்செயளாலர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜனவரி 28 சிறைச்செல்லும் போராட்டம் ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள்.

நாள்: ஜனவரி 18 2014, இன்ஷா அல்லாஹ்
நேரம்: மாலை 6.00 மணியளவில்

இடம்: தக்வா பள்ளி அருகில்

சிறப்புரை:
சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ்
தலைப்பு: ' மறுக்கப்பட்ட நீதியும்இ இழைக்கப்பட்ட அநீதியும்'

சகோ. சையது இப்ராஹிம்
தலைப்பு: அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி!

Friday, February 15, 2013

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 15.02.2013 அன்று அதிரை தக்வா பள்ளி அருகில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மௌலவி யாசிர் இம்தாதி அவர்கள் 'இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பிலும், மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் பெரும்திரளாக பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் அதிகமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

பொதுக்கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத் அதிரை மற்றும் முத்துப்பேட்டை கிளைகளின் இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

விரிவான செய்திகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.

பொதுக்கூட்ட வீடியோ விரைவில் வெளியிடப்படும்.


பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர் ஆன் ஹதிஷை மட்டும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

2. அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்த்லிருந்து கடைத்தெரு வழியாக மகிழங்கோட்டை செல்லும் சாலையை புதிய தார்சாலையாக போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி சம்மந்தப்பட்ட துறை மற்றும் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்..

3. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு இருக்கின்ற தனி இடஓதுக்கீட்டீனை உயர்த்தி தருவோம் என்று திருச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

4. முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று விஷ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மனஉறுதியை பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

5. விஷ்வரூபம் திரைபடத்திற்கு ஆதரவாக பேசிய அதிரை சேர்மன் அஸ்லத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

6. அப்சல் குருவை தூக்கிலிட்டு நீதியை சாகடித்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்

7. கடந்த சில மாதமாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக நிரந்தரமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகத்தை கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியபடுத்திக்கொள்கிறோம். இது மீண்டும் தொடர்ந்தால் அதிரையில் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன் பள்ளி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















Friday, February 08, 2013

அதிரையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


அதிரையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

சிறப்புரை
M.A.பக்கீர் முஹம்மது அல்தாபி
தலைப்பு :நபிவழியை மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்
யாசர் அரஃபாத் இம்தாதி
தலைப்பு :இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு

நாள் :15.02.13






Monday, December 24, 2012

காவல் துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)


காவல்துறை மிருகங்களைக் கண்டித்து விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும் நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Saturday, February 04, 2012

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்(வீடியோ)

கடந்த மாதம் மேலத்தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் வீடியோ.





Wednesday, January 18, 2012

மேலத்தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டம்


T N T J யின் அதிரைக்கிளையின் சார்பாக 17.01.2012 செவ்வாய்கிழமை மேலத்தெருவில் அல் பாக்கியத்துஸ் ஸாலிஹத் பள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாபி இஸ்லாத்தின் பெண்களின் நிலை அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் சகோதரா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இறுதி நபியின் இறுதிப்பேருரை என்ற தலைப்பிலும் மற்றும் சகோதரர் சிகாபுதீன் MISC அவர்களும் உரைநிகழ்த்தினார்கள் இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துக்கொண்டார்கள் (இன்ஷா அல்லாஹ் இதன் வீடியோ விரைவில் வெளியிடப்படும்)












Monday, January 09, 2012

Saturday, May 01, 2010

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்

கடந்த 24.04.2010 அன்று அதிராம்பட்டிணம் தக்வா பள்ளிவாசல் அருகில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.


முதலாவதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர், மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'ஒரிறைக் கொள்கையும், சமுதாய ஒற்றுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில், குர்ஆன் ஹதீசை அடிப்படையாக கொண்டு அமையும் ஒற்றுமை தான் உண்மையான ஒற்றுமையாக இருக்க முடியும் என்பதை அழகாக தெளிவுபடுத்தினர்.

பின்னர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'இம்மையும், மறுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையில் முஸ்லிம்கள் எப்படி மறுமையை லட்சியமாக கொண்டு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

இறுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'உணரப்படாத தீமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில் முஸ்லிம் சமுதாயம் தீமைகள் என்று உணராத பல்வேறு தீமைகளை பட்டியல் போட்டு விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதில் பெண்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.