Showing posts with label வரதட்சணை. Show all posts
Showing posts with label வரதட்சணை. Show all posts

Tuesday, May 20, 2014

பரக்கத் நிறைந்த திருமணம் (எளிமையான திருமணம்) - வீடியோ



பரக்கத் நிறைந்த திருமணம்

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

ஷம்சுல்லுஹா (ரஹ்மானி)


பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.

வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.

கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி:

பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல் வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.

ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து சுருட்டி சுரண்டிக் கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று வேண்டாம் வரதட்சணை வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.

ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.

புறக்கணிப்பு:

இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.

இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.

ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.

அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.

இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! 

(அல்குர்ஆன் 5:2)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.

அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!

சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்:

பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.

வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.

அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.

மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.

இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.

அன்பளிப்பின் அடிப்படை:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 6636

இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.

இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!

திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.

பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.

இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

எனவே இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள்இவிருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி
RASMINMISC.TK

Saturday, May 04, 2013

சமூக தீமைகளுக்கு எதிராக செக்கடிமேடு அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்


கடந்த 03.05.2013 அன்று அதிரை செக்கடிமேடு அருகில் 'சமூக தீமைகளுக்கு எதிராக' தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் சகோதரர் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். 

இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.








கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் செக்கடிமேடு அருகில் திருமணங்களில் நடைபெறும் பித்அத் மற்றும் அனாச்சாரங்கள் பற்றி பேசும் போது, இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரங்களை செய்யக்கூடியவர்களும் அதை ஆதரிக்கக்கூடியவர்களும் தெருமுனை பிரச்சாரத்தில் கலாட்டா செய்தது குறிப்பிடக்தக்கது.

Monday, April 01, 2013

வளைகுடா அவலங்கள் - அயல்நாடுகளில் அவதிப்படும் எம் சகோதரர்களின் கண்ணீர்

வளைகுடா நாடுகளில் நமது சகோதரர்கள் சந்திக்கும் அவலங்களின் வீடியோ தொகுப்பு. நமது சமுதாயம் விழிப்புணர்வு பெறுவதற்காக இங்கு வெளியிடப்படுகின்றது.

பெண்களின் திருமணமத்திற்காக லட்சம் லட்சமாக வாங்கப்படும் வரதட்சணை இந்த சகோதரர்கள் அயல்நாடுகளில் அள்ளப்பட்டு தங்களின் இளமை பாலைவனத்தில் கழிப்பதற்கு காரணமாக அமைகிறது என்றால் அது மிகையல்ல.

வரதட்சணை திருமணங்களை புறக்கணிப்போம், அயல்நாடுகளில் அவதிப்படும் எம் சகோதரர்களின் கண்ணீரை துடைப்போம்.

பாகம்-1

பாகம்-2

Tuesday, March 26, 2013

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணை, எப்படி வரதட்சணையாகும் (வீடியோ)

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணை, எப்படி வரதட்சணையாகும் (வீடியோ)

அதிரையில் பெண்ணுக்கு கொடுக்கப்படும் வீட்டை, பெற்றோர்கள் விரும்பியா கொடுக்கிறார்கள்?


Saturday, January 05, 2013

அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)


அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)


பல ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டிணம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்கா விற்கு எதிரில் உள்ள கூத்து கொட்டகையில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு அற்புதமான உரையை நிகழ்த்தினார். வரதட்சணையில் ஊரி திளைத்த அதிரை மக்களை சிந்திக்க வைத்தது அவரின் வீரிய பேச்சு . பல இளைஞர்கள் வரதட்சணை வாங்குவதை விட்டும் தங்களை தூரமாக்கி கொண்டார்கள்..

ஒரு காலத்தில் நமக்கு தவ்ஹீத் சிந்தனை வர காரணமாக இருந்த,நமக்கு ஆசானாக இருந்த சகோதரர்கள்இன்று கொள்கையில் தடம்புரண்டு போய் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பவர்கள். ஒரு நோட்டிசை வைத்து படம் காட்டுகிறார்கள்.அது சம்மந்தமாக நாம் கேள்வி கேட்கும் போது நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தர்கா கூடாது என்று பிரச்சாரம் செய்தவர்கள் என்றும் அப்போது நாம் பிறந்து கூட இருக்க மாட்டோம் என்று சொன்னார்கள் 


இதற்கு பதிலடி நாம் கொடுத்த பின் ,அனேகமா நீங்கள் பிறந்து இருக்க மாட்டீர்கள் என்று எச்சரிக்கையுடன் தான் கூறினோம் அதை நீங்கள் கவனிக்க வில்லை என்று வார்த்தை விளையாட்டு விளையாடினார்கள்.சத்தியத்தை சொல்ல வயது முக்கியம் இல்லை என்பதை கூட மறந்து விட்டார்கள் .ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது .பழம் பெருமை பேசி ஆக போவது ஒன்றும் இல்லை .அன்று செய்த பிரச்சாரம் இன்று ஏன் செய்யவில்லை என்று நாம் கேட்க .அதற்கு மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு அவர்களின் அமைப்பு ஆரம்பிக்க பட்ட வருடத்தை சொல்லிவிட்டு அதன் பின் கடற்கரை தெருவில் (கவனிக்கவும் கடற்கரை தெருவில் அவர்கள் அமைப்பில் இல்லை) வரதட்சணை மாநாடு நடத்தினோம் என்று மீண்டும் பழம்கதைகளை பட்டியலிட்டார்கள் .
ஆதாரம் கேட்டு பழகிய நாம் மீண்டும் ஆதாரம் கேட்போம் அப்போது எச்சரிக்கையாக கடல்கரைதெருவில் என்று தான் சொன்னோம் நீங்கள் கவனிக்கவில்லை என்று சொல்வார்கள்.ஒரு முஸ்லீம் இரண்டு தடவை குட்டுப் படமாட்டான் 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 6133)

இந்த வரதட்சணை ஒழிப்பு மாநாட்டை எங்கள் சொந்த அமைப்பு (அமைப்பு கூடாது , ஆனா நாங்க ஆரம்பித்தால் கூடும், நாங்க தலைவரா இருந்தா ரொம்பகூடும்) தான் நடத்தியது என்பது போன்று (மேலோட்டமாக பார்த்தால்) ஒரு பெரிய கப்சாவை விட்டுள்ளார்கள்

வரதட்சணை மாநாட்டை நாங்கள் தான் நடத்தினோம் என்பவர்கள் வரதட்சணை திருமணத்தை புறக்கணித்து வாழ்ந்தால் மக்கள் இவர்களை நம்புவார்கள்.

வரதட்சணை மாநாட்டை யார் நடத்தினார்கள், யார் நடத்துவார்கள், யார் இன்றும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.



Tuesday, February 07, 2012

தடை போட்ட காவல்துறை! தகர்த்தெறிந்த டிஎன்டிஜே!


கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக வரதட்சணை என்னும் சமூகக் கொடுமையை எதிர்த்து, “மாபெரும் வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணி” மற்றும் பொதுக்கூட்டம் நடத்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

வரதட்சணையின் கேடுகளை விளக்கி கோவையில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக ஆண்களும், பெண்களும் ஊர்வலமாகச் சென்று, வீடுவீடாக தெருக்கள் தோறும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும், தட்டி பேனர்களைக் கையில் ஏந்தியும், முக்கிய தெருக்களில் 6 இடங்களில் தெருமுனைக் கூட்டத்துடனும், பேரணியின் இறுதியில் மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றும், மாபெரும் வரதட்சணை விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தையும் நடத்த நமது நிர்வாகிகள் முடிவு செய்து முறையாக காவல்துறை அனுமதி கேட்டிருந்த நிலையில், பல்வேறுகட்ட இழுத்தடிப்புகளுக்கு பிறகு நிகழ்ச்சி நடைபெற இருந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று அனுமதி மறுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெகுண்டெழுந்த டிஎன்டிஜே :

வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் தடை போட்டுள்ளோம் என்றால் நமது மக்கள் தலையாட்டிக் கொண்டு சும்மா சென்றுவிடுவார்களா என்ன? தடை என்ற வார்த்தையைக் கேட்டாலே, அததகைய தடைகளை வல்ல இறைவனின் கிருபையால் தகர்தெறிந்து சாதனை படைக்கும் டிஎன்டிஜே சகோதரர்கள், காவல்துறை போட்டுள்ள இந்த்த் தடையைத் தகர்த்தெறிந்து பேரணியாகச் சென்று சமுதாய விழிப்புணர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என முடிவெடுத்து களத்தில் குதித்தனர்.

காவல்துறை குவிப்பு :

இது போன்ற சமூகத்தீமைகளை எதிர்த்து களம் காணும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஆதரவாக காவல்துறையும் களத்தில் நின்று இத்தகைய நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இதை ஊக்குவிக்க வேண்டிய காவல்துறையே, இத்தகைய ஒரு நிகழ்ச்சிக்கு தடைபோட்டது பெரிய ஆச்சரியமான விஷயமாக உள்ளது. டிஎன்டிஜே சகோதரர்கள் தடையை மீறி பேரணி செல்ல இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மர்கஸைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட போலீஸ் படையைக் குவித்தனர்

காவல்துறையின் தடையையும் மீறி ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கோவையின் முக்கிய பகுதியாக உள்ள மதீனா நகர், வள்ளல் நகர், பிலால் நகர், பாத்திமா நகர், ராயல் நகர், சாரமேடு, பொன்விழா நகர், இலாஹி நகர், பிஸ்மி நகர், அல் அமீன் காலனி, ஆகிய பகுதியில் பேரணியாக வந்து உக்கடம் லாரி பேட்டை பகுதியில் வந்து குழுமினர்.

பொதுச்செயலாளரின் எழுச்சி உரை :

ஆயிரக்கணக்கணக்கான மக்கள் காவல்துறையினர் போட்ட தடையையும் மீறி ஆண்களும், பெண்களுமாக அதுவும் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது இந்த சமுதாயம் மறுமை வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளது என்பதை பறைசாற்றுவதாக அமைந்தது.

நமது மக்கள் உக்கடம் லாரிப்பேட்டைப் பகுதியில் குழுமியவுடன் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார். இத்தகைய சமூகத்தீமைகளுக்கு எதிராக களம் காணுபவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டிய காவல்துறை அதற்குத் தடைபோடுவது வெட்கக்கேடு என்றும், எத்தகைய தடைகளைப் போட்டாலும் அதைத் தகர்த்தெறிய தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தனது உரையில் வரதட்சணை எனும் சமூகத்தீமையின் அவலங்களையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் அவர் பட்டியலிட்டார். அவரது கண்டன உரைக்குப் பிறகு கைதுப்படலம் ஆரம்பமானது.

கைது செய்ய வாகனங்கள் போதாமல் காவல்துறையினர் திணறல் :

காவல்துறையினர் தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனங்கள் அனைத்திலும் நமது சகோதர, சகோதரிகளைக் கைது செய்து மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். நமது சகோதரர்களைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் கொண்டு வந்த வாகனங்கள் போதாத காரணத்தினால், கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் போல் தடைகளைத் தகர்த்தெறிந்து பேரணி சென்ற நமது சகோதரர்களைக் கைது செய்ய முடியாமல் திக்குமுக்காடிய காவல்துறையினர் கூடுதல் வாகனங்களை வரவழைத்து பிறகு கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.


தடையை மீறி நீங்கள் பேரணி நடத்தியுள்ளதால் உங்கள் அனைவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டு 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப் போகின்றோம் என்று போலீஸார் பயம் காட்டியுள்ளனர். அதற்குப் பதிலடியாக, “எங்கள் அனைவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டு ஜெயிலில் தள்ளுங்கள்; அதற்கெல்லாம் இந்த சமுதாயம் பயப்படாது; மேலும், அவ்வாறு எஃப்.ஐ.ஆர் போட்டால் பெயிலுக்கு கையெழுத்துப்போட வரும் போதெல்லாம் அதுவும் பேரணியாகத்தான் இருக்கும்” என்று காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தெரிவிக்க தக்பீர் முழக்கம் விண்ணைத் தொட்டது.

அதைத் தொடர்ந்து பின்வாங்கிய காவல்துறை ஒரு பேரணிக்கு தடைபோட்டால் வாராவாரம் இவர்கள் பேரணி நடத்தினாலும் நடத்துவார்கள் போல என்று அஞ்சி நம் சகோதரர்கள் அனைவரையும் இரவு 9மணிக்கு விடுதலை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

தடை போடக் காரணம் என்ன?

இத்தகைய சமூக அவலத்தைத் துடைத்தெறியும் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப்பணிக்கு காவல்துறை ஏன் தடை போட வேண்டும் என நாம் ஆய்வு செய்ததில், சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களை சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள் தான் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்த பின்புலமாக இருந்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.


வரதட்சணை ஒழிப்புப் பிரச்சாரம் வீரியமடைந்தால் தங்கள் ஜமாஅத்துக்கு வரும் வரதட்சணை பணத்திற்கான கமிஷன் கிடைக்காமல் போய் விடும் என்று பதறிவிட்டார்களோ என்னவோ! பெரும்பாலும், இவர்கள் நம்மை எதிர்ப்பதற்கு இவர்களது வருமானம் தடைபடுகின்றது என்பதுதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

பெண்ணுரிமைக்கு எதிராக ஒரு பெண் அதிகாரி :

வரதட்சணை என்னும் இந்த சமூகக் கொடுமையால், பெண்கள்தான் பெருவாரியாக பாதிக்கப்படுகின்றனர். அதை பெண்களே உணர்ந்த பாடில்லை. இந்த வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணிக்கு தடைபோட்டது துணைஆணையாளராக உள்ள ஹேமா என்ற பெண் அதிகாரிதான் என்பது இன்னுமொரு துயரமான செய்தி.

Sunday, January 15, 2012

வரதட்சணை ஒழிப்பு மாநாடு - அதிரை (வீடியோ)

பாகம்-1



பாகம்-2


Saturday, November 26, 2011

இஸ்லாமிய திருமணம்



இஸ்லாமிய திருமண ஒழுங்களை புத்தக வடிவில் அறிய இங்கே சொடுக்கவும்.