Showing posts with label ஜமாலி. Show all posts
Showing posts with label ஜமாலி. Show all posts

Sunday, April 22, 2012

கப்ரு வணங்கிகளுடன் கை கோர்த்த ஜாக்!



தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும், தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய ஒன்று: நாம் அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்; இறந்து விட்ட அவ்லியாக்களை அழைத்து உதவி தேடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியிலுள்ள முக்கிய விவகாரமாகும்.

அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதை, இணை வைத்தல் என்று நாம் கூறுகிறோம். ஆனால் அது தான் மறுமை வெற்றிக்கு வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக நமக்கும், அவர்களுக்கும் இடையில் கால் நூற்றாண்டு காலமாக விவாதங்கள் நடந்திருக்கின்றன. முபாஹலாவும் நடந்துள்ளது. இந்த வரிசையில் ஒன்று தான் அண்மையில் நடந்த களியக்காவிளை விவாதம்.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் நீண்ட காலமாக விவாதத்திற்குத் தயார் என்று சவால் விடுவதும் நெருங்கினால் நழுவுவதுமாக இருந்தார். கடைசியில் ஒரு வழியாக மாட்டிக் கொண்டதும் விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. களியக்காவிளையில் விவாதம் நடத்துவது என முடிவானது.

இந்த விவாதம் நடைபெறுவதற்கு முன், இதையொட்டி நடைபெற்ற தவ்ஹீது ஜமாஅத்தின் விவாதக் குழுவில் களியக்காவிளை விவாதம் பற்றி ஜாக் போன்ற அமைப்புகளின் நிலை எப்படியிருக்கும்? என்ற பேச்சு எழுந்தது.

அமைப்பு ரீதியாக ஜாக் என்பது நமக்கு எதிராக இருந்தாலும், மார்க்கச் சட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அகீதா (கொள்கை) விஷயத்தில் அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று பி.ஜே. கூறினார். அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று கலீல் ரசூல் மறுத்தார்.

விவாதம் குறித்து கமாலுத்தீன் மதனி என்ன நிலையில் இருக்கிறார் என்று பார்த்து விடுவோம் என்று கூறி விவாதக் குழுவில் இருந்த கோவை ரஹ்மத்துல்லாஹ், சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர் பேசுவதாகக் கூறி, கமாலுத்தீன் மதனீயை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

நாங்கள் டி.என்.டி.ஜே. பி.ஜே. குரூப்புடன் விவாதம் செய்யவுள்ளோம். அதற்கு மூல கிதாபுகள் தேவை. பிர்தவ்ஸியா மதரஸா அருகில் இருப்பதால் தங்கள் கிதாபுகளைக் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும் என்று சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் கேட்டார்.

அதற்கு எஸ்.கே. கிதாபுகள் எல்லாம் இரவல் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் ஜமாலிய்யாவில் கேட்டு வாங்குங்கள் என்று கூறினார்கள்.

ஜமாலிய்யாவில் சில கிதாபுகள் இல்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறோம் என்று ரஹ்மத்துல்லாஹ் கூற, அதற்கு எஸ்.கே. நீங்கள் பாக்கியாத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஐடியா கொடுத்தார்.

பாக்கியாத்தில் சில புது கிதாபுகள் இல்லை. அவை உங்களிடம் இருக்கும் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறோம்- ரஹ்மத்துல்லாஹ்

அப்படியெல்லாம் கொடுப்பதில்லை- எஸ்.கே.

ரஹ்மத்துல்லாஹ்: அப்படியானால் பி.ஜே. தவ்ஹீது ஜமாஅத்தினர் இது வரை ஜகாத், அரைக்கால் ட்ரவுஸர், பன்றிக் கறி போன்ற விஷயங்கள் குறித்து முரண்பட்டுப் பேசிய பழைய அல்ஜன்னத் குறிப்புகள் தொகுப்பைத் தர முடியுமா?

எஸ்.கே.: அது என்னிடத்தில் இல்லை. திருச்சியில் (ஒரு பத்திரிகை ஆசிரியரைக் குறிப்பிட்டு) ஒரு ஹஜ்ரத் இருக்கிறார். அவரிடம் ஆரம்பத்திலிருந்து அதன் தொகுப்பு இருக்கிறது. அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள்.

ரஹ்மத்துல்லாஹ்: உங்களிடத்தில் அந்தத் தொகுப்பு இல்லையா?

எஸ்.கே.: சென்னையில் இருக்கிறது.

ரஹ்மத்துல்லாஹ்: நாளைக்கு விவாதத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு எப்படி நாங்கள் வாங்க முடியும்?

எஸ்.கே.: இல்லை, இல்லை. நீங்கள் திருச்சியிலேயே வாங்கிக் கொள்ளுங்கள்.

ரஹ்மத்துல்லாஹ்: நீங்கள் சொன்னதாக வாங்கிக் கொள்ளலாமா?

...மறுமொழி கூறாமல் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

யாருக்கும் யாருக்கும் இடையில், என்ன கொள்கையை நிலை நாட்டுவதற்காக விவாதம் நடைபெறுகிறது? என்பதையெல்லாம் பார்க்காமல், அல்லாஹ்வுக்கு எதிரான ஒரு கூட்டத்திற்கு உதவுகின்றார்கள்.

எல்லோருமே தவ்ஹீதுவாதிகள் தான் என்று இன்னும் தமிழகத்தில் சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிந்திப்பதற்காக இந்தத் தொலைபேசி உரையாடலைத் தருகிறோம்.

களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் அசத்தியக் கொள்கையை எதிர்த்து நடந்த விவாதமாகும். மக்கத்து முஷ்ரிக்குகளை விட மோசமான கொள்கை கொண்ட ஒரு கூட்டத்துடன் நடந்த விவாதமாகும். அசத்தியத்திற்கு எதிரான இந்த விவாதப் போரில் நேர்முகமாக வந்து தவ்ஹீது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும். அப்படி உதவாவிட்டாலும் மானசீகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லது எதையும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். இதை விட்டு விட்டு, அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களது வாதம் நிலைபெறுவதற்காக வழி வாய்க்காலைக் கூறுகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்?

இது எஸ்.கே.யின் நிலை!

இன்னொரு கூட்டம், களியக்காவிளை விவாதத்தில் பி.ஜே. தோற்று விட்டார் என்று ஊர் ஊராகப் பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இவர்களும் தவ்ஹீது வாதிகள் என்ற பெயரால் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! களியக்காவிளையில் ஏகத்துவத்திற்கே அல்லாஹ் வெற்றியை அளித்தான் என்பதை, அதன் ஒளிப் பதிவுகளைப் பார்த்த யாரும் கூறுவார்கள். அது தான் உண்மை! ஒரு வேளை நாம் தோற்றிருந்தால் அசத்திய அணியினர் இதை ஊர் ஊராகக் கொண்டு போய் நம்மைக் கேவலப்படுத்தி இருப்பார்கள். அவ்வாறு செய்யாததற்குக் காரணம் அவர்கள் தோல்வியைத் தழுவியதால் தான்.

எந்த அளவுக்கென்றால், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கப்ரிலிருந்து எழுந்து வந்து நேரடியாக நமக்கு உதவுவாரா? என்று நாம் விவாதத்தில் எடுத்து வைத்த கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கும் போது, அல்லாஹ் நேரடியாக வந்து உதவுவானா? என்று கேட்டார்கள். இதைக் கேட்ட சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூட இந்த வாதத்தில் இருந்த ஷிர்க்கை உணர்ந்து கொண்டார்கள்.

அவர்களே தோல்வியை ஒப்புக் கொண்டு, ஒதுங்கி ஓரத்தில் கிடக்கின்ற வேளையில், தாங்களும் தவ்ஹீது வாதிகள் தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு போலிக் கூட்டம் இதைத் தோல்வி என்று சித்தரிப்பதற்குக் காரணம் என்ன?

களியக்காவிளையில் பி.ஜே. தோற்று விட்டார் என்று சுன்னத் ஜமாஅத்தினருக்கு மத்தியில் பொதுக் கூட்டம் போட்டுப் பேசுவதன் மூலம் இவர்கள் என்ன நாடுகிறார்கள்? தொடர்ந்து இந்தப் பிரச்சாரத்தைச் செய்வதன் மூலம் இவர்கள் மறுமையில் என்ன நன்மையை எதிர்பார்க்கிறார்கள்?

இதிலிருந்து இவர்களின் தீய எண்ணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

மகன் இறந்தாலும் பரவாயில்லை! மருமகள் விதவையாக வேண்டும் என்பது போல், ஏகத்துவம் அழிந்தாலும் பரவாயில்லை! பி.ஜே. தோற்க வேண்டும் என்பது தான் இவர்களின் எதிர்பார்ப்பு!

இவர்களின் தனி நபர் எதிர்ப்பைப் பற்றிப் பேசும் போது, ஒரேயொரு இறைவன் தான் என்று பி.ஜே. சொல்வதால் அதற்கும் மாற்றமாக, இல்லையில்லை! இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள் போல் தெரிகின்றதே என்று நம்மவர்களில் சிலர் கிண்டலாகக் கூறுவதுண்டு.

இன்று களியக்காவிளையில், முஹ்யித்தீனும் கடவுள் தான், அதாவது இரண்டு இறைவன் தான் என்று சொல்லும் கூட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் களமிறங்கிப் பிரச்சாரம் செய்வதன் மூலம் அந்தக் கருத்தை இவர்களும் ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள்.

இதிலிருந்து ஜாக் முதல் நமக்கு எதிரான கருத்துடைய இயக்கங்கள் மற்றும் தனி நபர்களின் அடையாளங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். களியக்காவிளை விவாதம் இந்த அடையாளத்தை நன்கு தெளிவாக்கியுள்ளது.

நன்றி: ஏகத்துவம்

Thursday, March 08, 2012

தவ்ஹீத் ஜமாஅத் பிற மேடைகளை தவிர்ப்பது ஏன்?


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.

ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான் என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத் தயங்க மாட்டான்.

உதாரணத்திற்கு, வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் நாம் உறுதியோடு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் நம்மை வழிகெடுக்க ஷைத்தான் வேறு வகையான ஆசை வார்த்தைகளைக் கூறுவான்.

நாமாகக் கேட்டால் தானே தவறு, அவர்கள் விரும்பிக் கொடுத்தால் தவறா? நாம் எதையும் பெண் வீட்டாரிடம் கேட்க வேண்டாம்; அவர்கள் தமது பெண் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தினால் தானே தருகிறார்கள்; இதில் என்ன தவறு? என பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி வரதட்சணை வாங்கத் தூண்டிவிடுவான்.

அதுபோன்று தான் நம்மை சத்தியப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல வகையில் எதிர்த்தவர்கள், நமது பிரச்சாரத்தை முடக்க நினைத்தவர்களின் பல்வேறு சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டதால் ஷைத்தான் தற்போது நமது பிரச்சாரத்தின் வீரியத்தைக் குறைக்க புதியதொரு யுக்தியாக அசத்தியவாதிகள் வழியாகத் தூண்டிவிட்ட ஒரு வாதம் தான் “பிற மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை” என்பது.

இந்த வாதத்திற்குத் தெளிவான விளக்கத்தை நாம் அறிந்து கொண்டால் ஷைத்தானின் இந்தச் சூழ்ச்சியில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.

பொதுவாக பிற இயக்கத்தினர் மேடையில் பிரச்சாரம் செய்வதால் சொற்பொழிவு நிகழ்த்துவோருக்கும் அதைக் கேட்கும் மக்களுக்கும் ஏற்படும் அவலங்களையும் ஒவ்வொன்றாகக் காணலாம்.

தீமையைத் தடுக்க இயலாத நிலை!

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். திருக்குர்ஆன் 3:110
நன்மையை ஏவி தீமையை தடுப்பதால் தான் நம்மைச் சிறந்த சமுதாயம் என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பிற இயக்கத்தினருடன் பிரச்சாரம் செய்யும் பொழுது நம்மால் அவர்களின் தீமையைத் தடுக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

உதாரணத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற பீஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தவிர அனைத்து கொள்கையுடையவருடன் இனைந்து இஸ்லாத்தை நிலைநாட்ட (?) சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பீஸ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இஸ்லாமியக் கண்காட்சி என்ற போர்வையில் வர்த்தக உலகத்தைக் காட்டும் அந்த நிகழ்ச்சியில், பொருளாதார மோகத்தின் உச்சக்கட்டமாக அக்கண்காட்சியின் வாசலில் ஒரு காரை வைத்து 6% வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒரு கொடுமை நடந்தேறியது.

சமூகக் கொடுமை என அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் அறியப்பட்ட, நிரந்தர நரகம் என்று மார்க்கம் கூறுகின்ற இந்த வட்டி என்கிற வன்கொடுமையை யாராலும் கண்டிக்க முடியவில்லை.

வட்டி ஹராம் என்பது அங்கு சென்றிருந்த ஜாக் அமைப்பினருக்குத் தெரியவில்லையா? அல்லது தனக்கு மட்டும் இறையச்சம் உள்ளது போன்று அவ்லியா வேஷம் போடும் முஃப்தி காஸிமிகளுக்குப் புரியவில்லையா? ஏன் இந்த அவல நிலை? பல கொள்கையுடைவர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தி சமரசத்திற்காக சன்மார்க்கத்தைத் தூக்கி எறியும் அவல நிலைக்கு ஆளானார்கள்.

இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் யூசுப் எஸ்.டி.எஸ் என்பவர் அந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது சொற்பொழிவில் இந்தச் சமுதாயம் 73 கூட்டமாகப் பிரியும்; அதில் 72 கூட்டம் நரகத்திலும் ஒரு கூட்டம் சொர்க்கத்திலும் இருப்பதாகக் கூறி, அந்த ஒரு கூட்டம் என்பது ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹன்பலி, தவ்ஹீத், அஹ்லே ஹதீஸ் அனைவரும் தான் சுவனம் செல்லும் அந்த ஒரு கூட்டம் என்று விளக்கம் தருகிறார்.

மத்ஹபுகள் கூடாது என்று பல ஆண்டுகளாக முழக்கமிட்ட ஜாக் அமைப்பினர் கலந்து கொண்ட அந்தச் சபையில் தனது கொள்கைக்கெதிராகப் பேசிய இவரைக் கண்டிக்க இயலவில்லை. கண்டிக்கத் தான் இயலவில்லை என்றால் தவறான கொள்கைகள் அரங்கேறிய அந்த மேடையைப் புறக்கணிக்க மனமும் இல்லை. மேடை மோகம் இவர்களை சத்திய பிரச்சாரத்திலிருந்து சமரசம் செய்ய வைத்துவிட்டது.

பல தரப்பட்ட கொள்கையுடையோராலும் இணைந்து நடத்தப்பட்ட இந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தமது கொள்கையில் சமரசம் செய்ததினால் அவர்களின் கொள்கை உறுதி பீஸ் பீஸாகிப் போய்விட்டது.

இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல தரப்பட்ட கொள்கை உடையவர்களால் தீமையைத் தடுக்க முடியவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜாகிர் நாயக் அவர்களால் கூட இந்த தீமைகளைத் தடுக்க முடியவில்லை.

மத்ஹப், அனாச்சாரங்கள் எனப்படும் பித்அத் ஆகியவற்றை எதிர்த்தால் தானே இந்த ஜாகிர் நாயக்கால் தீமையை எதிர்க்க முடியும். இவரே அதன் ஆதரவாளராக இருந்தால் எப்படித் தடுக்க முடியும்! இந்த ஜாகிர் நாயக் வெறும் மத்ஹப் ஆதரவாளர் மட்டும் கிடையாது; கடவுள் கொள்கையில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு ஒப்பானவர்.

ஜாகிர் நாயக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும்:

இறைவனுக்கு உருவம் இல்லை எனக் கூறி, இறைவன் எங்கும் இருக்கிறான் என்கிற அத்வைதக் கொள்கையை ஷேக் அப்துல்லாஹ் ஜ(கோ)மாலி வாதிட்ட போது, இறைவனுக்கு உருவம் உண்டு எனவும் இறைவன் அர்ஷில் இருக்கிறான் எனவும் இறைவனின் தனித்தன்மையை நிலைநாட்டி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மவ்லவி பி.ஜெ அவர்களால் எடுத்துரைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.

ஜமாலி போன்ற கோமாளித்தனமான வாதங்களைப் போன்றே தான் ஜாகீர் நாயக்கும் ரவிசங்கர் என்பவருடன் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவர் தனது உரையில், இறைவனுக்குப் பிள்ளை இல்லை, பெற்றோர் இல்லை என கூறிவிட்டு, இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை திருக்குர்ஆனும் பகவத் கீதையும் ஒரே மாதிரி தான் கூறுகிறது என இஸ்லாத்திற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார்.

எந்த அளவிற்கென்றால் அவர், இறைவனுக்கு உருவம் இருக்கிறது எனக் கூறினால் நீள வாக்கிலா அகல வாக்கிலா எனக் குழப்பம் வந்து விடும் எனக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் இது குறித்து ஒரு கேள்வியை முன் வைத்தார்.

இதோ அந்தப் பெண் கேட்ட கேள்வி:

நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி (ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம் (ரலி)
நூல்: முஸ்லிம் (836)

இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் எனத் தெளிவாக உள்ளதே இதன் விளக்கம் என்ன? எனக் கேட்கிறார்.

இதற்கு ஜாகீர் நாயக் பதில் கூறும் போது, இந்த ஹதீஸ் குறித்து நாம் அதிகம் சிந்திக்கக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறி விட்டார்கள் எனக் கூறி, இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற அப்துல்லாஹ் ஜமாலியின் கொள்கைக்கு ஆதரவாக மலுப்பலான பதிலைத் தருகிறார்.

இப்படிப்பட்ட கொள்கையுடையவர்களின் மேடைகளை நாம் பகிர்ந்தால் தீமையைத் தடுக்க முடியாமல் சமரசம் செய்த இவர்களின் நிலையைப் போன்று தான் நமக்கும் ஏற்படும். இந்த அவல நிலையை நாமும் ஒரு காலத்தில் சந்தித்து சங்கடத்திற்கு உள்ளாகியிருந்தோம்.

கடந்த 2004ல் நாம் தமுமுகவுடன் சேர்ந்து இருந்த கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளயத்தில் தமுமுக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு, தவ்ஹீத்வாதிகளால் பிரச்சாரம் செய்யப்படும் அந்த மேடைக்கு, தர்கா வழிபாட்டில் மூழ்கித் திளைக்கும் எஸ்.எஸ். ஹைதர் அலி என்பவர், அழைக்கப்பட்டார். அந்த மேடையில் ஏறிய அவர் தனது சொற்பொழிவின் இறுதியில் “நபிகளாரை கனவிலும் நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்தளுள்வானாக” எனப் பிரார்த்தனை செய்து அசத்தியக் கொள்கையை அள்ளித் தெளித்தார்.

அதைக் கண்டிக்கவோ அதற்கு மறுப்பு சொல்லவோ யாருக்கும் திராணி இல்லாமல் போன அவல நிலையை ஒருவரும் மறக்க இயலாது. ஆனால் ஒரு விஷயம், இந்த மேடையில் ஹைதர் அலீ என்ற முஷ்ரிக் ஏறினால் நாங்கள் ஒரு போதும் மேடையில் ஏற மாட்டோம் என மறுத்து ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும் எம்.எஸ்.சுலைமான் அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள். இதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலவில்லை.

இதனால் தான் பிறர் மேடையில் ஏறி நாம் பிரச்சாரம் செய்வதில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

இதுமட்டுமின்றி பிறர் மேடைகளைப் பகிர்வதால் பேச்சாளர்களுக்கு ஏற்படும் மற்றொரு அவலநிலை இதை விடப் படுமோசமானதாகும்.

இரட்டை வேட நாடகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் செல்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: புகாரி 7179

இரட்டை வேடம் போடுபவன் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் என்று நபிகளாரால் மிகவும் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை எந்த ஒரு முஸ்லிமும் செய்யக் கூடாது. குறிப்பாக சத்தியப் பிரச்சாரத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பவர் ஒருக்காலும் செய்யக்கூடாது. ஆனால் பிற கொள்கையுடையவர்களின் மேடைகளைப் பகிர்வதால் இரட்டை வேடம் போடும் நயவஞ்சகனாக மாறும் அவல நிலை ஏற்படும்.

நம்மோடு மேடையில் அமர்ந்திருப்பவரின் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவரை திருப்திப்படுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைக்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

பிற அமைப்பினரின் வழிகெட்ட கொள்கைகளையும் தவறுகளையும் அவர்கள் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களையும் அம்பலப்படுத்தும் போது நம்மிடம் இருந்த வேகமும் வீரியமும் அந்த அமைப்பினரோடு சேர்ந்து மேடை ஏறும் போது, அவர்களோடு பழகி பல்லிளித்து, அவர்களின் குற்றங்களை நாம் ஒன்றும் அறியாதவர்கள் போன்று நடித்து மக்களை மடையர்களாக்கும் நிலை ஏற்படும்.

சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்று கூறிவிட்டு லட்சக்கணக்கில் வசூலித்து மோசடி செய்து, இன்று வரை ஒழுங்காகக் கணக்குக் காட்டாத த.மு.மு.க.வுடன் சேர்ந்து நாம் பிரச்சாரம் செய்தால் இவர்களைக் கண்ணியவான்களாக்க நேரிடும்.

வட்டி இல்லா கடனுதவி பெற வந்த ஓர் அபலைப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய ஒழுக்கங்கெட்ட பாக்கருடன் பிரச்சாரம் செய்தால் அந்த அயோக்கியர்களை ஒழுக்க சீலராக்க நேரிடும்.

உதட்டில் தேனும் உள்ளத்தில் தேளும் கொண்ட அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இந்தத் தன்மை பொருந்திப் போகுமே தவிர, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி பிரச்சாரம் செய்யும் நமக்கு ஒருக்காலும் பொருந்தாது.

பிற அமைப்பினரோடு பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப்போல அதைப் பார்க்கும் மக்களும் பல அவலங்களை சந்திக்க நேரிடும்.

பல்வேறு கொள்கையுடையோர் ஒன்றிணைந்து செய்யும் பிரச்சாரத்தைக் கேட்கும் மக்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பார்ப்போம்.

கொள்கைக் குழப்பம்:

அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் வணங்கக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்ற மக்கள், தான் மட்டும் ஏற்றுக் கொண்டதோடு நிறுத்தி விடாமல் பிற மக்களுக்கும் இந்தக் கொள்கை சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சத்தியப் பிரச்சாரம் எந்தப் பகுதியில் நடந்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் அங்கு சென்று சங்கமமாகி விடுவார்கள். இப்படிப்பட்ட தியாகிகளின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயல் தான் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் சொற்பொழிவாற்றுவது!

எந்த அளவிற்கென்றால் மத்ஹபைப் பின்பற்றக்கூடாது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே வழிகாட்டியாகப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள் இது போன்ற பலதரப்பட்ட கொள்கையுடையோரால் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது அந்த மேடையில் ஓர் அறிஞர், மத்ஹபைப் பின்பற்றக்கூடாது; தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று முழக்கமிட மற்றொரு அறிஞர், ஸஹாபாக்களை மார்க்கத்தின் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம்’ எனவும் பிரச்சாரம் செய்வார். இந்த இரண்டு உரையையும் பார்க்கும் மக்கள், எது சரியான கொள்கை என்பதைக் கண்டறியாமல் குழப்பத்திற்கு ஆளாகிவிடும் சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டும் உள்ளது.

கடந்த காலங்களில் நெல்லை, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிவாசல்களில் ஒரு வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் ஒரு வாரம் ஜாக் அமைப்பு சார்பிலும் ஜுமுஆ பிரசங்கம் நடைபெற்று வந்தது. அப்போது ரமலான், ஹஜ் பெருநாட்களின் போது பிறை விஷயமாக நம் ஜமாஅத் சார்பில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒரு நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கு மாற்றமாக ஜாக் தரப்பில் ஒரு நிலைப்பாட்டில் அறிவிப்பார்கள். இருவரும் ஒரே பள்ளியில் வாரம் விட்டு வாரம் ஜுமுஆ பிரசங்கம் செய்வதால் ஒருவரையொருவர் சாடிப் பேசாமல் தங்களது நிலைப்பாட்டை மட்டும் அறிவிக்கும் நிலைக்குப் தள்ளப்பட்டார்கள்.

இதனால் பார்க்கும் மக்கள் குழம்பிப் போய், பெருநாள் திங்களா? அல்லது செவ்வாயா?’ எனக் கேட்க அதற்கு அந்தச் சபையில் தர்க்க ரீதியாக பதில் சொல்லாமல் ஜாக் சார்பில் திங்கள்கிழமை பெருநாள் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செவ்வாய்கிழமை பெருநாள் எனவும் கூறி இதனால் மக்கள் குழப்பிப் போய் தங்களின் இபாதத்தே கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். நம் ஜமாஅத் சார்பில் மார்க்க ரீதியாகப் பதில் கொடுக்கத் தெரிந்தாலும் பிற மேடைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என்கிற குறுகிய சிந்தனையே இந்த அவலத்தை ஏற்படுத்திவிட்டது.

நம்பிக்கை துரோகம்:

பலதரப்பட்ட கொள்கையுடையோர் தங்கள் கருத்துக்களையும் கொள்கைகளையும் சரிசெய்து கொள்ளாமல் சமரசத்துடனும் சுயநலத்துடனும் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் இந்த மக்களின் கொள்கையில் தான் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும் இன்னொரு பக்கம் இந்த அப்பாவி மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து அவர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளிவிடுகின்றனர்.

தவ்ஹீத் கொள்கையை ஏற்ற மக்கள் வெறுமனே சத்தியவாதிகளின் பிரச்சாரத்தை மட்டுமே பார்த்து இந்த கொள்கையை ஏற்பது கிடையாது. மாறாக இந்தப் பிரச்சாரகர்களின் ஒழுக்கம், நேர்மை, நாணயம் ஆகியவற்றையும் பார்த்துத் தான் இந்தக் கொள்கையை ஏற்கின்றனர். இதுவே இயல்பு.

“இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?” என்று (முஹம்மதே!) கூறுவீராக

அல்குர்ஆன் 10:16

நான் சத்தியத் தூதர், என்னைப் பின்பற்றுங்கள் எனக் கூறாமல் உங்களுக்கு முன்னால் பல ஆண்டுகள் நான் வாழ்ந்துள்ளேன்; என் ஒழுக்கத்தையும் நேர்மையையும் பார்த்து இந்தக் கொள்கைக்கு வாருங்கள். என்னை நம்புங்கள் என நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின்பால் அழைக்கும் போது, தனது நாணயத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

அதைப் போன்று தான் மக்களும் சத்தியப் பிரச்சாரம் செய்வோரை நன்மையை ஏவுபவராகவும், தீமையைத் தடுப்பவராகவும் மட்டும் பார்க்காமல் அவர் ஒழுக்கமுள்ளவராகவும் பார்க்கிறார்கள். ஒருவரை நாம் ஒழுக்க மாண்பு மிக்கவராகப் பார்க்கும் போது அவர் யாருடன் பழகினாலும், யாருடன் இணைந்து மேடையில் சொற்பொழிவு நிகழ்த்தினாலும் அவர்களையும் கண்ணியமானவராகவே கருதுவார்கள்.

அதற்குக் காரணம், நாம் யாரை ஒழுக்கமுள்ளவர் என்று நினைக்கிறோமோ அவர்கள் கழிசடைகளுடன் சகவாசம் வைக்க மாட்டார்கள்; என்றென்றும் ஒழுக்கமுடையோருன் மட்டுமே சகவாசம் வைப்பார்கள் என்று அவர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சத்தியப் பிரச்சாரகர்கள் நடத்தை கெட்டோரையும் தவறான கொள்கையுடையோரையும் கண்டால் கடிந்து பேசுவார்களே தவிர அவர்களுடன் பல்லிளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கும்.

உதாரணமாக, ஒழுக்கக் கேடு மற்றும் பண மோசடியின் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பாக்கரைப் பற்றி நாம் கடுமையாக விமர்சிக்கிறோம். அவர் கடந்த காலங்களில் அடிக்கடி திண்டுக்கல் சென்றார். ஏன் சென்றார்? எதற்காக சென்றார்? என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று அவரால் திண்டுக்கல்லில் ஒரு குடும்பம் நாசமாகி அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான காரணத்தால், தனக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு வேறு எந்தக் குடும்பத்திற்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட கணவர் கண்ணீர் மல்கக் கொடுக்கிறார். “என்னுடைய மணைவி பாக்கரின் உடன் பிறந்த அக்காள் மகள் என்ற உறவைச் சொல்லி அடிக்கடி எனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுவும் நானும் எனது பிள்ளைகளும் வீட்டில் இல்லாத போது பல முறை வீட்டிற்கு வந்திருக்கிறார்; தங்கியுமிருக்கிறார். மிக நெருங்கிய உறவினர் என்று விட்டு விட்டேன். ஆனால் பின்னால் தான் தெரிந்தது, அவருக்கும் எனது மனைவிக்கும் எந்தவிதச் சொந்தமும் இல்லை என்பது” என்று அவர் தனது பேட்டியில் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி வீடியோவில் பேட்டியாகக் கொடுத்து, அது ஒரு இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. பாக்கர் இறையச்சத்தோடு (?) கத்தி, ஆக்ரோஷமாகப் பேசுபவர், இந்த இழிசெயலைச் செய்து விட்டார் என்ற மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளாக்கப்பட்டு, தனது மனைவியை தலாக் விட்டுவிட்டார்.

இப்போது கவனியுங்கள்! இப்படிப்பட்ட கழிசடைகளை வன்மையாகக் கண்டித்து ஒரு புறம் பேசிவிட்டு, மறுபுறம் அவருடன் ஒரே மேடையில் பேசி அந்தக் கழிசடைகளுக்கு நற்சான்று கொடுத்தால் அது, நம் மீது நல்லபிப்ராயம் கொண்ட மக்களுக்கு நாம் செய்யும் துரோகமே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

சிதிலடையும் சிந்தனைத் திறன்:

எதைச் சொன்னாலும் செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் போல் தலையாட்டிக் கொண்டிருந்த நாம் இன்று அல்லாஹ்வின் கிருபையால் குர்ஆனையும் நபிமொழிகளையும் சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். இவ்வாறு சிந்தித்து செயல்படுவதையே இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

அல்குர் ஆன் 25:73.

அல்லாஹ்வின் வசனங்களைச் செவியேற்போர் அதைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்ற இந்த இறைவசனத்தை நம் ஜமாஅத்தின் சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் வலியுறுத்தி மக்களை சிந்திக்கத் தூண்டுகிறோம்.

எந்த அளவிற்கென்றால் கப்ர் வழிபாட்டை வலியுறுத்தி எந்த ஆலிம்சாவாவது உரை நிகழ்த்திவிட்டால் அதற்கு நாம் தனி மேடை போட்டு அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பதிலளிப்பதுடன் அந்த ஆலிம்சாவுக்கு சில கேள்விக் கணைகளைத் தொடுப்போம். அதற்கு அந்த ஆலிம் (?) பதில் சொல்ல முடியாமல் திணறிப் போய்விடுவார். அதைப் பார்க்கும் மக்கள் யாரிடம் சத்தியம் உள்ளது என சிந்தித்து உணர்வார்கள்.

ஆனால் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தால் ஒருவரது தவறை மற்றொருவர் கண்டிக்க முடியாமல் போய்விடும். இதனால் யாருடைய கருத்துக்கள் சரியானவை எனக் கண்டுபிடிக்க முடியாமல் போய் மக்கள் சிந்திக்க மறந்து விடுவார்கள். இதனால் மீண்டும் வந்த வழியே திரும்பிப் போகும் அவலநிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

எனவே பலதரப்பட்ட கொள்கையுடையவர்களின் சமரசப் பேச்சைக் கேட்டு செல்லாக் காசாகிப் போய்விடாமல் குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டும் கொள்கையாகக் கொண்டு, நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் தனித்தன்மையோடு செய்யப்படும் பிரச்சாரத்தில் பங்கேற்று ஈருலகத்திலும் வெற்றிபெற வல்ல ரஹ்மான் நமக்கு அருள்புரிவானாக.

கேக் வெட்டிய ஜாக் மவ்லவி:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பிற மேடைகளில் ஏறுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. நாம் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தது, கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில கசப்பான அனுபவங்களை வைத்துத் தான்.

நமது இந்த நிலைப்பாட்டை நமக்கு எதிரான அமைப்புகள் அனைத்தும் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. இவர்களது விமர்சனம் தவறானது; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையே நியாயமானது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ:

நாகர்கோயில் அருகில் பின்னந்தோடு என்ற ஊரில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இந்த விழாவில் ஜாக் அமைப்பின் பேச்சாளரும், அந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிவாசலின் இமாமுமான யாஸீன் இம்தாதி போய் கலந்து கொள்கின்றார்.

ஒருவேளை, நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா (மீலாது விழா) தான் பித்அத்; ஈஸா நபியின் பிறந்த தின விழா (கிறிஸ்துமஸ்) கொண்டாடுவது சுன்னத் என்று எண்ணுகிறார்கள் போலும்.

இதில் போய் கலந்து கொண்டு, கேக் வெட்டி, பிறந்த தின விழாவைக் கொண்டாடி ஜாக்கின் கொள்கைப் பிடிப்பை நிலைநாட்டியுள்ளார்.

இனி நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாக்களிலும் சோறாக்கி, ஜோராக அங்கேயும் இந்தக் கொள்கைப் பிடிப்பைப் பறைசாற்றினால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

“யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூற்கள்: அஹ்மத், பஸ்ஸார்

இந்த மவ்லவி ஏதோ அறியாமல் கலந்து கொண்டிருக்கிறார் அல்லது மயக்கத்தில் போய் கலந்து கொண்டு விட்டார் என்று யாரும் கடுகளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

ஏனெனில் இவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, போகக் கூடாது என்று இருக்கிறதா? என்று ஜாக்கிற்கே உரிய தனி பாணியில் கேட்டிருக்கின்றார்.

பெண் வீட்டு விருந்து கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் போது, பெண் வீட்டு விருந்துக்குத் தடை இருக்கின்றதா? என்று ஆணித்தரமான(?) அசத்தலான (?) கேள்வியை ஜாக் கேட்கின்றது. அதே அடிப்படையில் தான் இந்தக் கேள்வியும் அமைந்திருக்கின்றது.

அந்த அடிப்படையில் நாளை இவர்கள் மீலாது விழாவும் கொண்டாடுவார்கள். கேட்டால் இதே பதிலைத் தான் தருவார்கள். போகிற போக்கைப் பார்த்தால் குராபிகளை மிஞ்சி விடுவார்கள் போல் தெரிகின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

நன்றி: ஏகத்துவம்

Monday, November 01, 2010

கிழித்தெறியப்பட்ட பரேலவிக் கொள்கையும், நிலைநாட்டப்பட்ட சத்தியமும்

பரேலவிகளுடன் TNTJ நடத்திய 4வது விவாதம்

கடந்த சனி ஞாயிறு நாட்களில் ஒப்பந்தப்படி நடக்க வேண்டிய விவாதம் மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பமானது.

இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸை விளங்க முடியுமா? என்ற தலைப்பில் விவாதம் ஆரம்பமாகியது.

இமாம்களின் விளக்கம் இன்றி, மிகத் தெளிவாக குர்ஆனும் ஹதீஸூம் விளங்கும் என்றும், இமாம்கள் என்பவர்களின் விளக்கத்தினால் தான் நிறைய சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை விவாதிக்க தவ்ஹீத் ஜமாத் தரப்பில் சகோதரர் பி.ஜெயும், இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸ்கள் விளங்காது என்று வாதிக்க பரேலவி ஜமாத் சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் கலந்து கொண்டு வாதிக்க ஆரம்பித்தனர்.

ஆரம்பமே அசத்தலான பி.ஜெயின் வாதம் :

தனது தரப்பின் சார்பில் வாதிக்க ஆரம்பித்த பி.ஜெ குர்ஆன் அனைவருக்கும் இமாம்களின் விளக்கம் இன்றி மிகத் தெளிவாக விளங்கும் என்பதற்கான தனது முதல் ஆதாரமாக திருமறைக் குர்ஆன் வசனங்களை முன்வைத்து விவாதத்தை தொடங்கினார்.

ஆனால் இமாம்களின் கருத்துக்கள் இதற்கு மாற்றமாக பல சிக்கல்களைத் தான் உருவாக்கியுள்ளது என்று இமாம்களின் குருட்டுக் கருத்துக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

ஒரு இரவை ஒரு வருடமாக மாற்றிய அபூஹனீபா :

அல்லாஹ் திருமறைக் குர்ஆனை லைலதுல் கத்ர் என்ற சிறப்புமிகு இரவில் இறக்கியதாக கூறுகிறான் (97:1-5). ஆனால் அபூஹனீபாவோ லைலதுல் கத்ர் இரவு ரமழானிலும் வரும் ரமழான் அல்லாத காலங்களிலும் வரும் வருடம் முழுவதும் வரும் என்று லைலதுல் கத்ர் பற்றி விளக்கம் சொல்லியுள்ளார்.

அல்லாஹ் சொன்னது தெளிவாக விளங்குகிறது இமாம்கள் சொன்னதுதான் இவ்வளவு குழப்பம் மிக்கது என்பதை தனக்கே உரிய அழகிய பாணியில் விளக்கினார் பி.ஜெ.

அதே போல் பரேலவிகள் போற்றிப் புகழும் இப்னு அரபி என்பவர் லைலதுல் கத்ர் இரவு, ஷஃபான், ரபியுள் அவ்வல், ரபியுள் ஆகிர், ரமழான் ஆகிய மாதங்களில் வரும் என்று 97வது அத்தியாயத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.

முடிவு தெரிந்த ஜமாலியின் முதல் வாதம் :

பி.ஜெயின் கேள்விகளுக்கு பதில் சொல்லி தனது வாதத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலி அவர்கள் முதல் வாதத்தை ஆரம்பித்தவுடனேயே இமாம்களின் துணையுடன் தான் குர்ஆன் ஹதீஸை விளங்க வேண்டும் என்ற தனது கருத்து தவறானது என்பதை ஒத்துக் கொண்டார்.

அதாவது இப்னு அரபி லைலதுல் கத்ர் தொடர்பாக சொன்ன கருத்தில் ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் போன்ற மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று கூறியது தவறு ரமழானின் வரும் என்று அவர் சொன்னதை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் கொண்டிருக்கும் கொள்கை தவறு என்பதை ஒத்துக் கொண்டார்.

நபி மீதே அவதூறு பரப்பிய இமாம்களின் விளக்கங்கள் :

ஸைத் (ரலி) அவர்களின் மனைவியை ஸைத் அவர்கள் தலாக் விட்ட பின் நபியவர்கள் திருமனம் செய்து கொண்டார்கள். அல்லாஹ்வே நபியவர்களுக்கு திருமனம் செய்து வைத்ததாக திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

இந்த சம்பவத்திற்கு விளக்கம் சொல்ல வந்த இமாம்கள் என்பவர்கள் நபியவர்கள் ஸைத் (ரலி)அவர்கள் ஸைனப் (ரலி)அவர்களுடன் குடும்பம் நடத்தும் போதே அவர்களை விரும்பியதாகவும் அவர்களை பார்க்கக் கூடாத தோற்றத்தில் பார்த்து விட்டதாகவும் எழுதி வைத்துள்ளதை சுட்டிக் காட்டி இதுதான் நபிமார்களுக்கு இமாம்கள் கொடுக்கும் கண்ணியமா? என்று கேட்டு கேள்வியை பி.ஜெ அவர்கள் முன்வைத்த போது எந்த இமாமும் இப்படிக் கூறவில்லை என்று மறுத்தார் ஜமாலி.

தப்ஸீர் ஜலாலைன் தபரி பகவி நஸபி கஷ்ஷாப் போன்ற கிதாபுகளை எடுத்துக் காட்டி தனது வாதத்திற்கான ஆதாரத்தை நிறுவினார் பி.ஜெ.

எப்படி இதற்கு முந்தைய விவாதங்களில் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் காலத்தை கடத்தினாரோ அதே பாணியில் இம்முறையும் எந்த பதிலையும் சொல்லாமல் காலத்தை கடத்த ஆரம்பித்தார்.ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் தன்னிடம் பதில் இல்லை என்பதை சொல்லும் விதமாக இமாம்கள் தவறு செய்திருந்தால் தவரை விடுத்து நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இமாம்கள் தான் சரியாக விளங்குவார்கள் என்று கூறியவர் இறுதியில் இமாம்கள் தவறாக விளங்கியுள்ளதை ஒத்துக் கொண்டார்.

சொத்துப் பங்கீடும் சொதப்பிய ஜமாலியும்:

சொத்துப் பங்கீடு தொடர்பாக ஒரு கேள்வியை பி.ஜெயிடம் கேட்டார் ஜமாலி.அதாவது ஒரு பெண் இறக்கும் போது அவருக்கு தாய் தந்தை பெண்பிள்ளைகள் கணவன் ஆகியோர் இருந்தால் என்ன சட்டம் என்று கேட்டார் ஜமாலி.

திருக்குர்ஆன் மொழியாக்கம் 111வது குறிப்பில் இது தொடர்பாக கூறியுள்ளோம் தவறாக இருந்தால் அது எப்படி தவறு என்பதை வாதமாக முன்வையுங்கள் என்று சொன்னார் பி.ஜெ ஆனால் சமாளிப்பதில் வல்லவரான ஜமாலியோ அரங்கத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச கூட்டத்தையாவது தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் அதன் பின் எதுவும் பேசவில்லை.

ஜமாலிக்கு இலக்கணம் கற்றுக் கொடுத்த பி.ஜெ :

லா உக்ஸிமு என்பதில் முதலாவது லா வருகிறது லா என்றால் இல்லை என்று அர்த்தம் உக்ஸிமு என்றால் சத்தியம் செய்கிறேன் என்று அர்த்தம் இரண்டையும் சேர்த்தால் சத்தியம் செய்ய மாட்டேன் என்று தானே வரவேண்டும் ஆனால் தாங்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆனில் (மொழியாக்கங்கள் அனைத்திலும் இப்படித்தான் மொழிபெயர்பு செய்துள்ளார்கள்.) சத்தியம் செய்கிறேன் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்களே இமாம்களின் துணையின்றி இதனை விளக்குங்கள் என்று கேட்டார் ஜமாலி.

அரபி இலக்கணம் தெரியாததினால் ஏற்பட்ட குறைதான் இது என்பதை புரிந்து கொண்ட பி.ஜெ இலக்கணப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அதாவது சத்தியத்திற்கு முன்பாக லா எனும் சொல் இடம் பெரும் அந்த லா எனும் சொல்லுக்கு அதிகப் படியாக வரும் லா என்று பெயர். இப்படி சத்தியத்திற்கு முன்பு அதிகப் படியாக லா எனும் எழுத்து வரும் போது அதற்கு பொருள் கொள்ளக் கூடாது என்பது அரபி இலக்கண விதி (ஹிதாயா) இது தெரியாததினால் விளைந்ததுதான் இந்தக் கேள்வி என்பதை தெளிவு படுத்தினார்.

சாலிம் (ரலி) விஷயமாக எடுபடாத ஜமாலியின் சமாளிப்புகள் :

இளைஞராக இருந்த சாலிம் (ரலி)அவர்களுக்கு பாலுட்டும் படி நபியவர்கள் அபூஹஹீதைபா அவர்களின் மனைவியிடம் கூறியதாக முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் தவறானது. நபியவர்கள் மீது யாரோ ஒருவர் பொய்யான கதையை இட்டுக்கட்டியிருக்கிறார். நபியவர்கள் இப்படிப்பட்ட ஒழுக்க சீர்கேட்டுக்கு வழி வகுக்க மாட்டார்கள் என்றும் பால்குடிச் சட்டம் என்பது குழந்தை பிறந்து இரண்டு வருடத்திற்குட்பட்டது என்பதாலும், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நாம் அந்த ஹதீஸை மறுக்கிறோம்.

ஆனால் குறிப்பிட்ட ஹதீஸ் சரியானது அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட வந்த ஜமாலியிடம் அந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் அதற்கு என்ன சட்டம் சொல்வீர்கள் என்று கேட்டார் பி.ஜெ ஆனால் விவாதத்தின் இறுதி வரை சாலிம் விஷயமாக சட்டத்தை ஜமாலி சொல்லவேயில்லை.

ஸாலிம் அவர்கள் வாய் வைத்தா குடித்தார்கள் கறந்து குடித்திருப்பார்கள் என்று சகட்டு மேனிக்கு ஒரு கேள்வியை முன்வைத்தார் ஜமாலி. அப்படியாயின் ஒருவன் ஒரு வீட்டிட்கு அடிக்கடி போய் வரவேண்டி ஏற்பட்டால் அவன் அந்த வீட்டுப் பெண்மணியிடம் பாலைக் கறந்து குடித்தால் சரி என்று சட்டத்தை சொல்வீர்களா? என்று பி.ஜெ அவர்கள் கேட்க வாய் திறக்காமல் இருந்தார் ஜமாலி.

அண்ணியப் பெண்ணிடம் பேன் பார்க்கும் அசிங்கம் :

ஆபாசத்தையும் அசிங்கங்களையும் மாத்திரமே மூலதனமாக கொண்டு இயங்குகின்ற மத்ஹபுவாதிகள் ஹதீஸ்கள் என்ற பெயரால் நபியவர்களைப் பற்றி வரும் ஆபாசங்களுக்கும் முட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

உம்மு ஹராம் (ரலி)அவர்கள் வீட்டிட்கு நபியவர்கள் சென்று அவர்களின் அருகில் தூங்குவார்கள் உம்மு ஹராம் அவர்கள் நபியவர்களுக்கு பேன் பார்த்து விடுவார்கள் என்று இடம் பெறும் ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி நாம் மறுத்து வருகிறோம்.

ஆனால் இந்த ஹதீஸ் சரியானது என்று கூற வந்த ஜமாலியிடம் சரி என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக நிரூபித்துக் காட்டுங்கள் என்று பல முறை கேட்டும் அதனை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

அதே போல் ஒருவன் அண்ணியப் பெண்ணின் மடியில் படுத்து தனது தலையில் பேண் பார்த்துவிடச் சொன்னால் அது சரியென்று நீங்கள் பத்வா கொடுப்பீர்களா? என்றும் பி.ஜெ அவர்கள் கேட்டதற்கு இறுதிவரை ஜமாலி வாய் திறக்கவில்லை.

உடலுறவும் கத்தம் தான் ஜமாலியின் புதிய ஆதாரம் :

மரணித்தவருக்காக குர்ஆன் ஓதி கத்தம் கொடுப்பதென்பது இஸ்லாத்தில் இல்லாத வழிமுறை பித்அத் ஆகும்.நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே பல நபித்தோழர்களும் நபியவர்களின் பிள்ளைகளும் பாசமிகு மனைவி கதீஜா அவர்களும் மரணித்துள்ளார்கள்.ஆனால் அவர்களில் யாருக்காகவும் நபியவர்கள் கத்தம் கொடுத்ததில்லை.கொடுக்கச் சொல்லவும் இல்லை.

ஆனால் கத்தம் என்றொன்று மார்க்கத்தில் இருப்பதாகக் கூறி பொது மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள் இந்த பரேலவிகள்.

அதன் உச்ச கட்டமாக ஒருவன் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மரணித்த எனது தந்தைக்கு இது கத்தமாக மாறிவிடும் என்று சொன்னால் அது கத்தம் தான் என்று இலங்கையில் நடந்த விவாதம் ஒன்றில் ஜமாலி பேசியதை திரையில் போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் பி.ஜெ வாய்ச் சொல்லில் வீரரான் ஜமாலியோ மதில் மேல் பூனையைப் போல் விழித்துக் கொண்டிருந்தார்.

பட்டியல் போட்டார் பி.ஜெ பதறினார் ஜமாலி:

குர்ஆனையும் ஹதீஸையும் இமாம்களின் துணையின்றி விளங்க முடியாது என்று வாதிட வந்த ஜமாலியிடம் இமாம்கள் குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கிய லச்சணத்தை பட்டியலிட்டு இதற்கெல்லாம் பதில் என்னவென்று பி.ஜெ கேட்டார்.கிட்டத்தட்ட 98 கேள்விகள் கேட்கப்பட்டதில் ஒன்றிரண்டிட்கு மாத்திரம் சில் சமாளிப்புகளை சொன்ன ஜமாலி மீதமிருந்த சுமார் 95க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு வாய் திறக்கவில்லை.

சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்த கேள்விகளில் சில……..

(இவையெல்லாம் விளக்கம் என்ற பெயரில் இமாம்கள்(?)என்பவர்கள் கூறியவைகள்)

1.இறைவன் ஒன்றைப் படைக்க நாடினால் ஆகு என்று சொன்னால் அது ஆகிவிடும் என்பது திருமறைக் குர்ஆன் வசனம்.இந்த வசனத்திற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி என்பவர் இந்த குர்ஆன் வசனம் தவறானது என்று கூறிய விளக்கத்தை பி.ஜெ சுட்டிக் காட்டி இதுதான் உங்கள் இமாம்கள் திருமறையை விளங்கும் லட்சனமா என்று கேட்டார்.

2.வருடம் முழுவதும் லைலதுல் கத்ர் என்ற ஹனபியின் விளக்கத்திற்கு பதில் என்ன?

3.இப்னு அரபி ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் ஆகிய மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று சொன்னதற்கு என்ன பதில்?

4.அடுத்தவர் மனைவி மீது நபியவர்கள் ஆசைப் பட்டார்களா?

5.பிர்அவ்ன் முஸ்லிம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?

6.மழை பெய்யும் முறையை ராஸி என்ற இமாம் மறுத்ததற்கு என்ன பதில்?

7.மழை தொழுகை இல்லை என்ற இமாம்களின் விளக்கத்திற்கு என்ன பதில்?

8.கிரகணத் தொழுகையை மறுத்த இமாம்களின் நிலை என்ன?

9.ஏழு வானம் என்றால் இமாம்கள் சொன்ன விளக்கம் 1வது வானத்தில் சந்திரன் ஒட்டப் பட்டுள்ளது.2வது வானத்தில் மெற்குறியும் 3வது வானத்தில் வீனஸ் 4வது வானத்தில் சூரியன் 5வது வானத்தில் செவ்வாய் 6வது வானத்தில் வியாழன் 7வது வானத்தில் சனி வானத்திற்கே இன்னும் மனிதன் போகாத நிலையில் இந்தக் கண்டுபிடிப்புக்கு என்ன விளக்கம்?

10.உருவப் படமோ நாயோ உள்ள வீட்டிற்கு மலக்குகள் வரமாட்டார்கள் என்ற ஹதீஸிற்கு கஸ்ஸாலி கொடுத்த விளக்கம் சரியானதா? இவர்தான் இமாம் என்று சொல்லப்படுபவரா?

11.இடி பற்றிய வசனங்களுக்;கு மலக்குமார் என்று விளக்கம் சொன்னது சரியா?

12.இப்லீஸ் என்பதற்கு இமாம்கள் கொடுத்த விளக்கம் சரியானதா?

13.ஒரு ரக்அத் வித்ர் தொழ முடியும் என்று நபியவர்கள் சொல்லியிருக்க கூடாது என்று இமாம்கள் சொன்னதை ஏற்றுக் கொள்வது முறையா?

14.மஃரிபுக்கு முன் சுன்னத் இருக்கிறது என்று ஹதீஸ் இருக்க சுன்னத் தொழுகை கூடாது என்று சொன்னது சரியானதா?

15.விபச்சாரம் செய்த யூதனுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறது.ஆனால் யூதனுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று அபூஹனீபா சொல்வது சரியானதா?

16.மழைத் தொழுகை ஜமாத்தாக தொழ வேண்டும் என்று ஹதீஸ் இருக்கும் போது ஜமாத்தாக தொழக்கூடாது என்று அபூஹனீபா சொன்னதற்கு விளக்கம் என்ன?

17.நடுத் தொழுகை எது என்பதில் ஏன் இத்தனை தடுமாற்றம்?

18.அத்தீன் என்பதற்கும் ஸைத்தூன் என்பதற்கும் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

19.காளை மாட்டை வணங்கலாம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?

இப்படி கிட்டத்தட்ட 98 கேள்விகளை சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்தார் ஆனால் அதில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கினார் ஜமாலி.

விவாத அரங்கம் சிரிப்பில் மூழ்கிய சில முக்கிய சந்தர்ப்பங்கள் :

இப்லீஸ் என்றால் யார் என்று இமாம்கள் கொடுத்த விளக்கத்தினை சகோதரர் பி.ஜெ எடுத்துக் காட்டியதும் அரங்கமே சிறிப்பில் மூழ்கியது.

அதாவது இப்லீஸ் என்பவன் தனது வாலை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைப்பானாம். பின்பு ஒரு முட்டை போடுவானாம் அது பல ஷைத்தான்களை உருவாக்குமாம்.அந்த இப்லீஸ் மொத்தம் 30 முட்டைகள் போடுவானாம் 10 முட்டை கிழக்கிலும் 10 முட்டை மேற்கிலும் 10 முட்டை மத்தியிலும் போடுவானாம்.(குர்ஆனை இமாம்கள் விளங்கிய லட்சனம் ?)

சிலை வணக்கத்தினை விட்டும் என்னையும் என் சமுதாயத்தையும் காப்பாற்றி விடு என்று இப்றாஹீம் நபி துஆ கேட்டதற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி இந்த வசனம் தங்கம் வெள்ளியில் ஆசைப்படக் கூடாது என்றுதான் சொல்கிறது என்று விளக்கம் கூறியுள்ளார்.என்பதை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்ட ஜமாலி தரப்பால் வந்திருந்தவர்களுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.

தலாக் பற்றி இமாம்கள் விளக்கம் சொல்லும் போது ஒருவன் தலாக் சொன்னால் கெட்ட தலாக், அகலத் தலாக், நீளத் தலாக், மார்பு தலாக், தலை தலாக், முடி தலாக், முதுகு தலாக், பெண் குறி தலாக், பெண் குறியில் உள்ள முடியின் அளவுக்கு தலாக், ரத்தம் தலாக் என்றெல்லாம் பகுதி பகுதியாக தலாக் சொல்லலாம் என்று விளக்கம் சொல்லியுள்ளார்கள். இதற்கு பதில் என்ன என்று பி.ஜெ கேட்க ஜமாலி தரப்பினரே முகம் சுழித்து இவ்வளவு அசிங்கமா இமாம்கள் எழுதியுள்ளது என்று நினைக்குமளவு ஆகிவிட்டது.

அதே போல் முடியில்லாத மர்ம உருப்பின் முடியளவுக்கு தலாக் என்று ஒருவன் சொன்னால் அதற்குறிய சட்டம் என்ன என்ற முஹம்மத் பின் ஹஸனிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தொடர்பாக ஜமாலியிடம் கேட்டதற்கு இறுதி வரை பதிலே இல்லை.

27:52வது வசனத்தில் மறுமையின் அடையாளமாக ஒரு மிருகம் வெளிப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான் அந்த மிருகத்தைப் பற்றி விளக்கம் சொன்ன இமாம்கள் அந்த மிருகத்தினை வர்ணிக்கிறார்கள் அதாவது அந்த மிருகம் மாட்டுத் தலையையும் பன்றிக் கண்ணையும் சிங்கத்தின் நெஞ்சையும் பூனையின் இடுப்பையும் ஒட்டகத்தின் காலையும் கொண்டிருக்குமாம் மூஸா நபியின் கைத் தடியையும் கையில் வைத்துக் கொண்டிருக்குமாம்.

மூஸா நபியவர்கள் பாம்மைப் போட்டதைப் பார்த்தவுடன் பிர்அவ்னுக்கு பெரும் சப்தத்துடன் காற்று வெளிப்பட்டதாம் அன்றுதான் அவன் முதலாவது காற்று விட்டானாம்.

இனிமேல் விவாதம் என்ற பேச்சையே பரேலவிகள் எடுக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு சத்தியம் நிலை நாட்டப் பட்டு அசத்தியம் குழி தோண்டிப் புதைக்கப் பட்டது.

விவாத வீடியோக்கள் வெளியிடப் பட்டுள்ளன அதனைப் பார்ப்பவர்கள் இமாம்கள் என்பவர்களின் அசிங்கமான விளக்கங்களையும் ஜமாலியின் சமாலிப்புகளையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

Tuesday, July 27, 2010

ஷிர்க் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்? சென்னையில் நடந்த பரபரப்பான இரண்டாவது விவாதம்

தொகுப்பு: RASMIN M.I.Sc


நேரடி ரிப்போட்

கடந்த 24.25.2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில் வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான இரண்டாவது விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஆரம்பமாகியது.

இறைவனுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அல்லாஹ்வையே கடுமையாக விமர்சித்து தான் அல்லாஹ்வின் எதிரி என்பதை பகிரங்கமாக வீடியோவில் பதிவு செய்த அப்துல்லாஹ் ஜமாலி இந்த விவாதத்திலாவது உரிய ஆதாரத்தை முன்வைத்து வாதிடுவார் என்று அரங்கில் கூடியிருந்தவர்கள் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்கள்.

விவாதத்தின் இருதியாய் மாறிய ஜமாலியின் ஆரம்பம்:

ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்? என்ற தலைப்பில் சரியாக காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகியது.

முதலாவதாக பேச ஆரம்பித்த சகோதரர் பி.ஜெ அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்ட சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவையைச் சேர்ந்தவர்களும் அவருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் தெளிவான இணைவைத்தலில் ஈடுபடுவதால் அவர்கள் அனைவரும் முஷ்ரிக்குகள் தான் என்பதை மிகத் தெளிவாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பி.ஜெ சொன்னதைப் போல் தான் முஷ்ரிக் என்பதற்கு தானே ஆதாரத்தைக் காட்டி பி.ஜெ அவர்கள் சொன்னதை ஆமோதித்தார் ஜமாலியுடைய முதல் வாதமே விவாதத்தின் கடைசியாக மாறியது என்பதுதான் விவாதத்தின் ஹைலைட்.

தான் முஷ்ரிக் என்பதை நிரூபித்த ஜமாலியின் முதல் கேள்வி:

உலகில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அனைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது.

ஆனால் அப்துல்லாஹ் ஜமாலியும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை என்று சொல்லிக் கொள்பவர்களும் இந்த அதிகாரம் நல்லடியார்கள் என அவர்களால் நம்பப் படுபவர்களுக்கும் இருப்பதாக நம்பி ஏற்றுக் கொண்டிருப்பதால் அவர்கள் அணைவரும் இணைவைத்தல் எனும் ஷிர்க்கை செய்து முஷ்ரிக்காக மாறிவிட்டார்கள் என சகோதரர் பி.ஜெ அவர்கள் தெளிவாகக் கூறினார்.

அதை எதிர்த்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் முஷ்ரிக் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலியோ தான் முஷ்ரிக் அல்ல என்று நிரூபிப்பதை விட்டு விட்டு உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது.என்பதற்கு ஆதாரம் என்ன? என்று கேள்வி கேட்டு அல்லாஹ்வின் ஆற்றலிலேயே சந்தேகத்தை எழுப்பி அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் இந்த அதிகாரம் இருப்பதாக ஒத்துக்  கொண்டு தான் முஷ்ரிக் தான் என்பதை முதல் வாதத்திலேயே ஒத்துக் கொண்டார்.

ஜமாலி தவ்ஹீத் ஜமாத்தின் மேல் வைத்த குற்றச் சாட்டுக்களும் பி.ஜெயின் பதில்களும்:

உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் கேட்டாலும் அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் பதில் தரக்கூடிய ஆற்றல் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் உண்டு என்றால் தசாவதானி ஒரே நேரத்தில் 10 வேலைகளை செய்கிறான் சதாவதானி ஒரே நேரத்தில் 100 வேலைகளை செய்கிறான் இதுவெல்லாம் அல்லாஹ்வுக்கு ஒப்பாகாதா? என்று பி.ஜெயை நோக்கி ஜமாலி கேள்வியைத் தொடுத்தார்.

அதற்கு பதில் அளித்த பி.ஜெ தசாவதானி என்பவன் ஒரே நேரத்தில் 10 காரியங்களை செய்வதும் சதாவதானி ஒரே சந்தர்பத்தில் 100 காரியங்களில் ஈடுபடுவதும் பிறப்பில் உருவாவதோ அல்லது இயற்கையோ கிடையாது மாறாக அது பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்வது அப்படி ஒருவர் ஒரே நேரத்தில் 10 அல்லது 100 காரியங்களை செய்வதால் ஒன்றும் அவர் கடவுளாகவோ அல்லது கடவுளின் தன்மைகள் பெற்றவராகவோ மாற முடியாது.

ஒரு வாதத்திற்கு அப்படி வைத்துக் கொண்டாலும் தசாவதானி சதாவதானி என்றவர்களின் பட்டியலில் ஒரே ஒரு முஸ்லிம் தான் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மற்றவர்கள் அணைவரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தான்.

ஒருவன் தசாவதானியாக அல்லது சதாவதானியாக இருப்பதால் அவன் அவ்லியாதான் என்று நீங்கள் கூறினால் மாற்று மதத்தை சேர்ந்தவர்களைத்தான் அந்தப் பட்டியலில் அதிகமாக இடம் பிடிக்கச் செய்யவேண்டி வரும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னார்.

ஜமாலியின் அர்த்தமற்ற கேள்விகளும் பீ.ஜெயின் ஆணித்தரமான பதில்களும்:


முதலாவதாக தவ்ஹீத் ஜமாத்தும் அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களும் முஷ்ரிக்குகள் எனும் இணைவைப்பாளர்கள் என்று உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிவித்துள்ளீர்கள் அதற்கு என்ன ஆதாரம் என பி.ஜெ ஜமாலி யைப் பார்த்து கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளிலிருந்தும் ஆதாரத்தை எடுத்து தனது குற்றச் சாட்டை மெய்ப்படுத்த வேண்டிய ஜமாலியோ நகைச்சுவையை உண்டு பண்ணும் ஒர் ஆதாரத்தை முன் வைத்தார்.

ஜமாலியின் ஆதாரக் கிரந்தங்களாகிய உணர்வுப் பத்திரிக்கையும் அல்ஜன்னத்தும்:

தவ்ஹீத் ஜமாத்தினர் இணைவைக்கின்றனர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு உணர்வுப் பத்திரிக்கையில் இரத்த தானம் செய்வீர் மனித உயிர் காப்பீர் என இரத்ததானத்தை வழியுறுத்தி செய்யப் பட்டிருந்த விளம்பரத்தை ஆதாரமாக காட்டிய ஜெமாலி அவர்கள்

உயிரைத் தருவதும் அதனை எடுப்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ளது அப்படியிருக்க இரத்ததானம் செய்து உயிர் காக்கும் படி விளம்பரம் செய்து மக்களிடம் கேட்பது இணைவைப்பதாகும்.

இப்படி விளம்பரம் செய்தததினால் தவ்ஹீ;த் ஜமாத் இணைவைத்த விட்டது அது போல் 1988 காலப்பகுதியில் வெளியான அல்ஜன்னத் பத்திரிக்கையில் குழந்தையில்லாத தம்பதியினருக்கு ஒரு வைத்தியர் ஆலோசனைகளும் மருந்தும் தருகிறார் என்று ஒரு விளம்பரம் வெளியிடப் பட்டிருந்தது அதை எடுத்துக் காட்டிய ஜமாலி அவர்கள் குழந்தைப் பாக்கியத்தைத் தருபவன் இறைவன் அப்படியிருக்க நீங்கள் எப்படி குறிப்பிட்ட மருத்துவரிடம் செல்லும் படி பத்திரிக்கையில் விளம்பரம் செய்வீர்கள் இதுவும் ஷிர்க் எனும் இணைவைத்தலாகும்.என வாதிட்டார் ஜமாலி.

அப்துல்லாஹ் ஜமாலியும் அவர் சார்ந்திருக்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினரும் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் முஷ்ரிக்குகள் என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டை பி.ஜெ வைத்து அதனை ஆதாரத்துடன் நிருவியும் காட்டியுள்ளார்.

ஆனால் நாங்கள் முஷ்ரிக்குகள் அல்ல என்று நிருவ வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலியோ கோமாலித்தனமாக தனது நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக உணர்வுப் பத்திரிக்கையையும் அல்ஜன்னத்தையும் காட்டியது அவர்கள் தரப்பில் பார்வையாளர்களாக வந்தவர்களையே முகம் சுழிக்க வைத்து விட்டது.

 # அல்லாஹ்விடம் கேட்டால் எப்படி கிடைக்குமோ அது போல ஒரே நேரத்தில் உலகில் எத்தனை பேர் கேட்டாலும் கூகுல் இணையத்தளம் தேவையானதை உடனே தேடித்தருகிறது.இப்படி தேடித்தருவதால் (Google)கூகுலைப் பயன் படுத்துவது ஷிர்க் என்றாகிவிடுமா என கொஞ்சம் கூட சிந்தனையற்ற சிறுபிள்ளைத் தனமான கேள்வியை பி.ஜெயிடம் ஜமாலி கேட்டார்.

கூகுல்(Google) செர்ச் என்ஜினைப் பொருத்தவரை ஒரே நேரத்தில் பலர் கேட்டாலும் தேடித்தருகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள் அது தேடித்தரும் முறையை முதலில் புரிந்து  கொள்ளுங்கள் கூகுல் செர்ச் என்ஜின் ஒவ்வொரு மைக்ரோ பாயின்டுக்கும் பலரைக் கொண்டு இயக்கப் படுகிறது.அதனால் தான் நாம் கேட்கும் போது அது உடனே தேடித் தருகிறது.

அப்படியே அதனை இயக்குவதற்கு ஆட்கள் இல்லாமலயே அது இயங்கினால் கூட உங்கள் கேள்வியில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

அல்லாஹ் ஒருவருக்கு எதையாவது கொடுத்தால் அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது ஆனால் அல்லாஹ் அவர்கள் கேட்டதற்கு  தெளிவாக பதில் கொடுப்பான்.

ஆனால் கூகுல் செர்ச் என்ஜினில் ஏதாவது ஒன்றை தேடும் போது தேடுபவரின் கண்ணுக்கும் அது தெரிகிறது அதே போல் அது தேடிக் கொடுப்பதும் கண்ணுக்குத்  தெரிகிறது.அதனால் கூகுல் செர்ச் என்ஜினில் தேடுவதை யாரும் இணை வைத்தல் என்று சொல்ல முடியாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார் பி.ஜெ.

சென்னையில் சிக்க வைத்த களியக்காவிலை ஒப்பந்தம்:

# வெளியில் பல இடங்களில் வலிமார்கள் என்று நம்பப்படுபவர்களிடம் கேட்டால் அல்லாஹ் எப்படி பிரித்தறிந்து உதவுவானோ அப்படி உதவுவார்கள் என பேசித்திரிந்த ஜமாலி சென்னை விவாதத்தில் நாம் அப்படி சொல்ல வில்லை அல்லாஹ்வின் இடத்தில் அவர்களை வைக்கவில்லை என வாதிட்டார்.

ஆனால் களியக்காவிலையில் நடந்த விவாதத்திற்கு போட்ட ஒப்பந்தத்திலோ ஒரே நேரத்தில் எத்தனை பேர் எத்தனை மொழிகளில் கேட்டாலும் எங்கிருந்து அழைத்தாலும் அதனை பிரித்தறிந்து அவற்றுக்கு பதில் கொடுக்கும் ஆற்றல் வலிமார்கள் என நம்பப் படுபவர்களுக்கு இருப்பதாக ஒப்பந்தம் போட்டு அதில் அப்துல்லாஹ் ஜமாலி இது தனது தரப்பு நிலைப்பாடு என கொட்டை எழுத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார்.

ஆனால் இந்த விவாதத்திலோ தான் அப்படி எங்கும் கூறவில்லை என வாதிட பி.ஜெ அவர்களோ களியக்காவிலை விவாத ஒப்பந்தத்தை எடுத்துக் காட்டியதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி ஒரே நேரத்தில் எத்தனை பேர் எந்த மொழியில் கேட்டாலும் அவற்றை பிரித்தறிந்து பதில் கொடுக்கும் அதிகாரம் வலிமார்களுக்கு இருப்பதாக தான் கூறுவதாக சொல்ல ஆரம்பித்தார்.

பி.ஜே அவர்களோ அப்படியானால் விவாதத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சொல்லிக் கொண்டிருந்தது உங்கள் நிலைப்பாடா அல்லது களியக்காவிலையில் சொன்னது உங்கள் நிலைப்பாடா? முதலில் தெளிவான ஒரு நிலைப்பாட்டிட்கு வாருங்கள்.என அழகாக ஜமாலிக்கு உபதேசம் செய்தார் பி.ஜெ

உளரி மாட்டிக் கொண்ட அபூ தலாயில்(?):

தனது கருத்துக்கு குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாத இவருக்கு அவருடைய சீடர்கள் வைத்திருக்கும் பெயர் அபூ தலாயிலாம் (ஆதாரத்தின் தந்தை).(சிரிப்பு தாங்க முடியவில்லை)

ஆதாரங்களை அவா்களாக உருவாக்குவதால் இப்படி அழைக்கிறார்களோ தெரியவில்லை.

உண்மையில் இவர் ஆதாரத்தின் தந்தை அல்ல வழிகேட்டின் தந்தை என்பதை சென்னையில் நடந்த இரண்டு விவாதங்களும் அழகாக தெளிவு படுத்திவிட்டது.

இடத்திற்கு ஏற்றது போல் உளரிக் கொண்டு திரிந்த ஜமாலி தான் வலிமார்களை அல்லாஹ்வின் இடத்தில் வைக்கிறேன் வைக்கவில்லை என மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார் அப்போது நீங்கள் வலிமார்கள் என்று உங்களால் நம்பப்படுபவர்களை அல்லாஹ்வின் இடத்தில் தான் வைக்கிறீர்கள் என்பதற்கு ஆதாரமாக அவர் பேசிய ஒரு வீடியோவின் க்லிப்பிங்கை பி.ஜெ போட்டுக் காட்டினார்.

அந்த க்லிப்பிங்கில் அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கை அவ்லியாக்களின் பார்வை அல்லாஹ்வின் பார்வை அவ்லியாக்களின் கேள்வி அல்லாஹ்வின் கேள்வி என ஜமாலி அவ்லியாக்களை அல்லாஹ்வின் இடத்திற்கு உயர்த்தி பேசும் வீடியோ பதிவாகியிருந்தது.

அதனை பி.ஜெ போட்டுக் காட்டியவுடன் அந்த க்லிப்பிங்கிற்கு பதில் சொல்ல முடியாமல் பந்தியில் குந்திய மந்தியைப் போல் முழித்துக் கொண்டிருந்தார் ஜமாலி பாவம்…….

அடுத்ததாக……

ஒரு கையால் முஸாபஹா செய்தல்,

பெண்கள் ஜும்மாவிற்கு பள்ளிக்கு வருதல்,

அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று எழுதுவது,

காபிர்களுக்கும் ஸலாம் சொல்வது ,

தற்கொலை செய்து கொண்டவர்களை காபிர்கள் என்று சொல்வது 
போன்றவைகள் எல்லாம் தவ்ஹீத் ஜமாத்தினரால் மார்க்கத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்ட பித்அத்துகள்.இவைகள் அணைத்திற்கும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பி.ஜெ பதில் தரவேண்டும் என்று ஜமாலி குற்றச் சாட்டை வைத்தார்.

ஆரம்பித்தார் பி.ஜெ அமைதியாகியது அரங்கம்:

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தார் சகோதரர் பி.ஜெ

1.முஸாபஹா விஷயம் :

ஒரு கையால் முஸாபஹா செய்வது பித் அத் கிருத்தவர்களின் செயல்  என்றால் முதலில் உங்கள் கருத்தை தெரிவித்து எந்த அடிப்படையில் அதனை பித்அத் என்று கூறுகிறீர்கள் என விளங்கப் படுத்துங்கள் அதன் பின் நாம் அதற்கு பதில் கொடுப்போம் என்றார் பி.ஜெ.


அதற்கு பதில் சொன்ன ஜமாலி அவர்கள் முஸாபஹா விஷயத்தில் எங்கள் கருத்து ஒரு கையாலும் முஸாபஹா செய்யலாம் இரண்டு கைகளாலும் செய்யலாம் என்பதாகும்.என்றார்

பி.ஜெ அவர்கள் பதில் சொல்லும் போது அப்படியானால் உங்களுக்குள்ள பிரச்சினை மட்டும் என்ற வார்த்தை தானா? இரண்டு கையால் முடியும் ஒரு கையாலும் முடியும் தவ்ஹீத் ஜமாத் ஒரு கையால் மாத்திரம் தான் முஸாபஹா என்று சொல்கிறது.அதனால் அது பித்அத் கிருத்தவர்களின் செயல்பாடு இதுதான் உங்கள் நிலை என்றால் ஒரு கையாலும் முஸாபஹா செய்யலாம் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு யாராவது அதனை நடை முறைப்படுத்தினால் உங்கள் கருத்துப் படி அவரும் கிருத்தவ கலாசாரத்தை பின்பற்றியவராக ஆவாரே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டதுடன் முதலில் ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் தெளிவு படுத்தினார்.

ஆனால் இந்தக் கேள்விக்கும் கடைசி வரை கோமாலி ஸாஹிப் அவர்கள் பதில் தரவே இல்லை.

2.பெண்கள் ஜும்மாவிற்கு வருவது பெண்களை காட்சிப் பொருளாக்குவதாகும் என்ற ஜமாலியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொன்ன பி.ஜெ நபியவர்களின் காலத்தில் ஜும்மாத் தொழுகைக்கு பெண்கள் வந்துள்ளார்கள் அதுபோல் யுத்தக் கலத்துக்கே பெண்கள் வந்துள்ளார்கள் அப்படியிருக்க நபியின் வழிமுறையை கையால்வது எப்படி பெண்களை காட்சிப் பொருளாக்குவதாக மாறும் என கேள்வியெழுப்பியதுடன் அப்படியானால் உங்கள் பெண்கள் ஏ.சி போட்ட கடையில் ஒரு ஆண் மாத்திரம் இருக்கும் நேரத்தில் பொருட்கள் வாங்கவே செல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?

உங்கள் வீட்டுப் பெண்களை கடைக்கு பொருள் வாங்கக் கூட செல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள்.

வெளியிலேயே வர விடாமல் வீட்டிட்குள்ளேயே பூட்டி வையுங்கள் என சொன்னார்.

தர்காக்களில் நடை பெரும் விழாக்களுக்கு ஆண்களும் பெண்களும் சென்று கூட்டமாக வெட்க உணர்வே இல்லாமல் கலந்து கொள்கிறார்கள்.

சில தர்காக்களில் பெண்களின் மறைக்கப் பட வேண்டிய பகுதிகளுக்கு அங்குள்ள ஆலிம்கள் குழந்தைப் கிடைப்பதற்கு என்று n;சால்லி எண்ணைகளைப் பூசி விடுகிறார்கள்.

இதுவெல்லாம் பெண்களை காட்சிப் பொருளாக்குவதில்லையாம் நபிவழியைப் பின்பற்றி பெண்கள் பள்ளிக்கு வருவதுதான் பெண்களை காற்சிப் பொருளாக்குவதாம்;.

என்னே தத்துவம் ?

3.தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் விளம்பரங்களிலும் நோட்டீஸ்களிலும் போஸ்டர்களிலும் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று போடுகிறார்கள் இது பித்அத்தான வழி முறை என்று ஜமாலி அவர்கள் வாதத்தை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த பி.ஜெ அவர்கள் நபியவர்கள் தனது வாழ்நாளில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்) என்றும் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்றும் இரண்டு விதங்களிலும் பயண்படுத்தியுள்ளதால் நாமும் இரண்டு விதங்களிலும் பயண்படுத்திக் கொள்ளலாம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்) என்றோ பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்றோ குறிப்பிடுவதில் பிரச்சினை இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

4.காபிர்களுக்கும் ஸலாம் சொல்வது தற்கொலை செய்து கொண்டவனுக்கு தொழுகை இல்லை போன்ற தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு பித் அத் என்று சொன்ன ஜமாலி அவர்கள் அந்த விஷயங்களுக்கும் தன் தரப்பால் எந்த விதமான ஆதாரத்தையும் காட்ட வில்லை.

இருந்தாலும் பி.ஜெ அவர்களோ நாங்கள் செய்வது பித் அத் என்றால் அவற்றை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள் அப்படி நீங்கள் ஆதாரங்களுடன் எடுத்து வைத்தால் நாம் அதற்கு பதில் தரக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் ஆனால் வழமை போல் ஜமாலி அவர்கள் அதற்கும் பதில் ஏதும் சொல்லவில்லை என்பதே நடந்த உண்மை.

ஸஹாபாக்களை பி.ஜெ சுயமாக விமர்சித்தாரா?

நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற பி.ஜெ அவர்களின் புத்தகத்தில் மறுமையில் சில ஸஹாபாக்களின் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி பி.ஜெ அவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை ஆதாரம் காட்டி எழுதியிருந்தார்.


புத்தகத்தின் அந்தப் பகுதியை விமர்சித்த ஜமாலி பி.ஜெ நபித்தோழர்கள் மீது அபாண்டமாக பழி போடுகிறார் என்றார்.

அதற்கு பதில் சொன்ன பி.ஜெ பல தடவைகள் அந்தப் புத்தகத்தில் நான் மேற்கோள் காட்டியிருக்கும் ஹதீஸை மக்களுக்கு வாசித்துக் காட்டி நான் எப்படி தவறு செய்துள்ளேன் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று பல முறை கேட்டும் ஜமாலி வாசிக்க மறுத்து விட்டார்.

ஆனால் ஹதீஸை வாசித்துக் காட்டினால் தான் சொன்னது பொய்யென்று மக்களுக்கு புரிந்து விடும் என்பதால் அந்த ஹதீஸின் இலக்கத்தை மாத்திரம் மக்கள் மத்தியில் சொன்னார்.

புகாரியில் 3349.3447 இலக்கங்களிலும் பி.ஜெ அவர்களின் நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற புத்தகத்தில் நபியவர்களின் முன்னறிவிப்பு என்ற தலைப்பில் 46ம் பக்கத்திலும் அந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்க ஹதீஸைப் படிப்பவர்கள் பி.ஜெ தனது சுய விருப்பப்படி ஸஹாபாக்களை விமர்சித்தாரா அல்லது நபியவர்களே அப்படித்தான் கூறியுள்ளார்களா என்பதை தெளிவாக புரிய முடியும்.

பி.ஜெயின் கேள்வியும் பதிலின்றி தினறிய ஜமாலியும்:

விவாதத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சகோதரர் பி.ஜெ அவர்கள் ஜமாலியிடம் திரும்பத்திரும்ப ஒரு கேள்வியை முன் வைத்தார் அந்தக் கேள்விக்கு ஜமாலி அவர்கள் கடைசி வரை பதிலே சொல்லவில்லை.

அதாவது உலகில் உள்ள அத்தனை கோடி பேரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் கேட்டாலும் அல்லாஹ் அதனை பிரித்தறிந்து அதற்கு பதில் சொல்வான் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை அப்படியிருக்க அவ்லியாக்களுக்கும் அந்தத் தன்மை இருக்கிறது என்று வாதிடுவது முஷ்ரிக்கின் பண்பு என்பதை பி.ஜெ அவர்கள் எடுத்த சொன்னவுடன் அதற்கு பதில் சொன்ன ஜமாலி அவர்களோ அல்லாஹ்வின் பார்வை கேள்வி ஆகியவற்றுக்கு எல்லை இல்லை ஆனால் அவ்லியாக்களின் பார்வை மற்றும் கேள்விக்கு எல்லை உண்டு என வாதிட்டார்.

அல்லாஹ்வின் கேள்வி மற்றும் பார்வைக்கு எல்லை இல்லை அவ்லியாக்கலுக்க எல்லை உண்டு என்பது உங்கள் வாதம் அப்படியானால் அந்த எல்லை எது?

அப்படி எல்லை பிரிப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?

அந்த எல்லைகளுக்குறிய குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் என்ன?

அவ்லியாக்களின் கேள்விக்கு எல்லை உண்டு என்றால் ஒரே நேரத்தில் எத்தனை பேர்களின் கோரிக்கைக்கு பதில் தருவார்?

போன்ற கேள்விகளை பி.ஜெ அவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார் ஆனால் பாவம் இருதிவரை ஜமாலி இந்தக் கேள்விக்கோ வேறு எந்தக் கேள்விக்குமோ பதில் தரவே இல்லை.

சவால் விட்ட பி.ஜெயும் சறுக்கி விழுந்த ஜமாலியும்:

கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது தம்மிடம் தமிழகத்தில் 45 சதவீதம் பள்ளிகள் இருப்பதாக ஜமாலி தரப்பினர் கூறினர்.


அதற்கு பதில் கொடுத்த பி.ஜெ அவர்கள் இந்த விவாதக் கலத்தில் அதிகப் படியாக பில்டப் செய்து சொல்வதற்க்காகத்தான் இப்படி சொல்கிறீர்களே தவிர உண்மையில் உங்கள் கைவசம் தமிழகத்தில் வெரும் இரண்டு சதவீதத்தினர் மாத்திரமே உள்ளனர் என்பதை ஆதாரத்துடன் பி.ஜெ எடுத்து வைத்தார்.

பி.ஜெயின் கருத்துக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாத ஜமாலியோ உடனே ஜுலை மாநாட்டிற்கு தாவினார்.

மாநாட்டிற்கு கூட்டத்தை வர விடாமல் இருப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது.அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினோம்.என்று பி.ஜெ சொல்ல இல்லை உங்கள் மாநாடு தோழ்வியில் முடிந்து விட்டது எந்தப் பயணும் ஏற்படவில்லை.என்று சிறுபிள்ளைத் தனமாக உளரினார்.

அதே போல் எங்கள் ஜமாத்தின் வீரியம் நாங்கள் சவால் விட்டு ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரை உடனே கூட்டிக் காட்டுவோம் உங்களால் முடியுமா? என்றார்.

மக்கள் கூட்டத்தை கூட்டிக்காட்ட திராணியற்ற ஜமாலியோ வாய் மூடி மௌனித்துப் போனார் பாவம்.

அது போல் நீங்கள் ஒரு மாநாடு நடத்தி உங்கள் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள் அதே போல் ஒரு மாநாடு நடத்தி நீங்கள் கூட்டிய கூட்டத்தைப் போல் 100 மடங்க கூட்டத்தை நாங்கள் கூட்டிக் காட்டுவோம் சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பகிரங்கமாக அறிவித்தார் பி.ஜெ

இந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த விவாதக் கலத்திலேயே நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் என்றார் பி.ஜெ ஆனால் கடைசி வரை சவாலையும் ஜமாலி ஏற்றுக் கொள்ளவில்லை.

எங்கள் ஜமாத் காலத்திற்கு காலம் ஒரு மாநாட்டை நடத்திக் கொண்டு தான் இருக்கிறோம் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஒவ்வொரு மாநாட்டிலும் ஆட்சியாளர்களையே அதிர வைக்கும் அளவுக்கு எங்கள் வீரியம் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.என்று கூறி முடித்தார் சகோதரர் பி.ஜெ.

பதிலின்றி வாயடைத்துப் போய் அமைதிகாத்தார் அப்துல்லாஹ் ஜமாலி.

என்றும் வெற்றி ஏகத்துவத்திற்கே என்பது சென்னை விவாதத்தின் மூலம் மீண்டும் உறுதியாகியது.

அல்ஹம்துலில்லாஹ்.


நன்றி: 
இலங்கை ரஸ்மின் அவர்களின் இணைய தளம் (http://www.rasminmisc.blogspot.com)

Tuesday, July 20, 2010

இறைவனுக்கு உருவம் உண்டா? சென்னையில் நடந்த பரபரப்பான விவாதம்

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை ஆனால் இருக்கிறது. நிலை தடுமாறிய கோமாலி

உண்மை வந்தது. பொய் அழிந்தது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது. 

(அல்குர்ஆன் 17:81) 

17,18.07.2010 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் விவாதம் ஆரம்பமாகியது.

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை.இறைவன் உருவமற்றவன் என்ற தலைப்பில் சு.ஜமாத் தரப்பில் அப்துல்லாஹ் ஜமாலியும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெ அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

விவாதத்தின் நிபந்தனைகளில் முக்கியமானது விவாதிக்கும் இருவரும் தங்கள் கருத்தை நிரூபிப்பதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வசனங்களையும்,ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் எடுத்து வைத்து விவாதிக்க வேண்டும் என்பதாகும்.

முதலில் விவாதிக்க ஆரம்பித்த பி.ஜெ அல்லாஹ் உருவம் உள்ளவன் என்பதற்கு ஆதாரமாக புகாரியின் 2440ம் ஹதீஸை ஆதாரம் காட்டி (இலக்கம் பதிப்புகள் வித்தியாசத்தினால் வித்தியாஸப்பட வாய்ப்புண்டு.ஹதீஸ் தேவையானவர்கள் நமது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்) தனது வாதத்தை முன்வைத்தார்.


ஆனால் அடுத்ததாக வாதிக்க ஆரம்பித்த அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் தனது கருத்தை உருதிப்படுத்த எந்த ஒரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் வெரும் வாதத்தை மாத்திரம் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

உளரிக் கொட்டிய ஜமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று வாதிக்க வந்த ஜமாலி தனது வாதத்திற்கு ஆதாரம் வைக்கவும் இல்லை.பி.ஜெ வைத்த வாதத்தை ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்கவுமில்லை.

ஆனால் தாராளமாக உளரிக் கொட்டிக் கொண்டேயிருந்தார்.அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று சொல்ல வந்த ஜமாலி அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று பி.ஜெ காட்டிய புகாரியில் இடம் பெரும் ஹதீஸிற்கு பொருள் சொன்னார்.

மீண்டும் பி.ஜெ அவர்கள் உங்கள் கருத்து அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பது அப்படியெனில் ஏன் இந்த ஹதீஸிற்கு அல்லாஹ்வின் உருவம் என்று பொருள் சொன்னீர்கள் என கேட்டார்.

மீண்டும் உடனே அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையென்று தான் நான் கூறுகிறேன் என்று தனது தலைப்பிற்கு தாவினார்.

தொடர்ந்தும் இப்படியே அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை ஆனால் இருக்கிறது என்ற பாணியில் தான் ஜமாலி அல்ல தான் ஒரு கோமாலிதான் என்பதை உருதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

குர்ஆனையே மறுத்த கோமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிட்ட பி.ஜெ அதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் பல ஆதாரங்களை அடுக்கினார்.

அல்லாஹ்வுக்கு கைகள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கண்கள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு செவி இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கால் இருப்பதாக வரும் வசனங்கள். என்று பல வசனங்களை ஆதாரம் காட்டி அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது.அதனால் தான் இறைவனுக்கு கை கால் முகம் கண் செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான் என்று தனது வாதத்தை ஊன்றி நிருத்தி விட்டார்.

அதற்கெல்லாம் பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அல்லாஹ்வின் திருமறையையும் நபியவர்களின் வார்த்தைகளையும் தாருமாறாக கிண்டலடிக்க ஆரம்பித்தார்.

இறைவனை இழிவாக்க முயன்ற கோமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக பி.ஜெ ஆதாரத்தை வைத்துப் பேச ஆரம்பித்த மறுகணத்திலிருந்து அல்லாஹ்வையும் அவனுடைய தூதருடையவும் வார்த்தைகளை கேலி செய்ய ஆரம்பித்தார் அல்லாஹ்வின் எதிரி கோமாலி அவர்கள்.

கோமாலி அல்லாஹ்வை கிண்டலடித்துப் பேசி கேட்ட கேள்விகள்.(நவூது பில்லாஹ்)

1.அல்லாஹ்வுக்கு உருவம் இருப்தாக வைத்துக் கொண்டால் நமக்கும் உருவம் இருப்பதால் நாமும் அல்லாஹ்வும் ஒன்றாகி விடுவோம்.

2.அல்லாஹ் ஒற்றைக் கால் உடையவனா?

3.அல்லாஹ்வின் மற்ற கால் எங்கே?

4.அல்லாஹ் திறையை விளக்கி தனது காலைக் காட்டுவான் என்றால் அல்லாஹ் எந்த ஆடையை உடுத்திருந்தான்?

5.ஆடை உடுத்திருக்கவில்லை என்றால் அல்லாஹ் நிர்வாணமானவனா? 

6.அல்;லாஹ்வுக்கு இரண்டும் வலது கை என்றால் இடது கை எங்கே?

7.ஒரே பக்கத்தில் இரண்டு கைகள் அல்லாஹ்வுக்கு இருக்க முடியுமா?

8.இறைவனின் ஒரு காலைக் காட்டுவான் என்றால் மற்றக் கால் இல்லாத நொண்டியாக இறைவன் மாற மாட்டானா?

9.அல்லாஹ்வுக்கு எத்தனை விரல்கள்.

10.அல்லாஹ் விரல்களில் எப்படி உலகத்தை வைத்திருக்க முடியும்?

11.அல்லாஹ் எப்படி வானத்தை சுருட்டுவான்?

12.வானத்தை இறைவன் சுருட்டினால் தானும் சேர்ந்து சுருட்டப் படுவானே?

13.மரங்களை எப்படி ஒரு விரலில் அல்லாஹ் வைத்திருக்க முடியும்?

14.அல்லாஹ் ஒற்றைக் கண்ணனா?

15.அல்லாஹ்வுக்கு இரண்டு கண்களும் இல்லை என்றுதான் புரிய வேண்டும்.

16.அல்லாஹ்விக் கைகளில் இரத்தம் ஓடுகிறதா?

17.அல்லாஹ்வின் கைகளில் தசைகள் உண்டா?

18.இறைவனின் கைகளில் நரம்புகள் உண்டா?

19.உலகத்தை அழிக்கும் போது தன்னைத்தானே அல்லாஹ் அழித்துக் கொள்வானா?

20.உலகம் அழிக்கப் படும் என்றால் இறைவனின் கை கால்கள் அழிக்கப் படுமா?

21.அல்லாஹ் ஆதம் நபியவர்களை போட்டோ எடுத்தானா?

22.அர்சின் எடை 8 மலக்குகள் தூக்கும் அளவு தானா?

இது போன்ற இன்னோரன்ன கேள்விகளை அல்லாஹ்வின் விஷயத்தில் கேட்டு அல்லாஹ்வை கேளிப் பொருளாக மாற்றிட முயன்றார் ஜமாலி என்ற இந்த கோமாலி.

அல்லாஹ் தனது திருமறையில் இப்படிக் கூறுகிறான்.

அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக!(9:65)

அல்லாஹ்வைப் பற்றி திருமறையிலும் நபிமொழிகளிலும் வருகின்ற செய்திகளை பி.ஜெ எடுத்துக் காட்டும் போதெல்லாம் அவைகளை கேலி கிண்டல் செய்த இந்த கேடு கெட்டவனுடைய மறுமை நிலையை அறிந்து கொள்ள இந்த வசனம் ஒன்றே போதுமான சான்றாகும்.

விவாதத்தின் சில முக்கிய விஷயங்கள்.

1.களியக்காவிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இந்த கோமாலியுனும் அவனுடைய கூட்டத்தினறோடும் செய்த விவாதத்தை பாத்து விட்டு தவ்ஹீத் ஜமாத் சொல்வது தான் உண்மை என்பதை அறிந்து ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சகோதரர் பி.ஜெயிடம் கேள்வி கேட்டார்.

அவர் கேள்வியைக் கேட்க்கும் போது நான் களியக்காவிலை விவாதத்தின் பின் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டேன்.

தற்போது உங்களிடம் விவாதம் செய்பவர் அவருடன் இருப்பவர்கள் எல்லோரும் மத்ரஸாவில் எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் தான்.

இங்கு விவாதத்தை பார்க்க வந்திருப்பவர்களில் பெரும்பாலான ஆலிம்கள் என்னிடம் படித்த மாணவர்கள் தான்.


நான் எப்படி களியக்காவிலை விவாதத்தின் பின்னர் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டு இவர்களின் மூட நம்பிக்கைக் கொள்கையை விட்டும் வெளியில் வந்தேனோ அது போல் இன்ஷா அல்லாஹ் வெகு சீக்கிரமாகவே இங்கு இருப்பவர்களில் அதிகமானவர்கள் இந்தக் கொள்கையை ஏற்று தவ்ஹீத் ஜமாத் சொல்வது தான் சரியானது என்பதைப் புரிந்து ஜமாலி போன்றவர்களின் கேடு கெட்ட கொள்கையை விட்டே வெளியில் வருவார்கள். என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார்.

2.அசத்தியத்திற்கு ஆதரவாக வாதிட வந்த ஜமாலி பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு உளரிக் கொட்டினார்.

3.அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று சொல்ல வந்தவர் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வரும் வசனங்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் பண்பு என்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

அரபியல் அல்லாஹ்வின் உருவம் என்று வரும் இடத்தில் எல்லாம் பண்பு என்று பொருள் வைத்துக் காட்டுங்கள் என்று பி.ஜெ சவால் விட்டார்.

பாவம் அத்வைதம் போட்ட பந்தியில் மந்தியாய்க் குந்தியெலுந்த கோமாலியால் கடைசி வரை அந்த ஹதீஸிற்கு பண்பு என்று பொருள் வைக்கவே முடியவில்லை.

3.விவாதத்தின் முதல் நாள் கோமாலியின் சுன்னத் ஜமாத் தரப்பால் வந்தவர்களின் பாதிப் பேரை அடுத்தனால் அதாவது ஞாயிற்றுக் கிழமை காணவேயில்லை.

மேலதிக தகவல்களுக்கு விவாதத்தின் வீடியோவைப் பார்க்கவும்.