Tuesday, February 18, 2014
தொண்டியை
சேர்ந்த முஹம்மது பாருக் அவர்களின் மகன் முஹம்மது செய்யது மணமகனுக்கு
அதிரை கடற்கரைதெருவில் நேற்று [17-02-2014] மாலை 5 மணியளவில் நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் 11 பவுன் தங்க நகையை மஹராக
மணமகளின் வீட்டாரிடம் கொடுத்து மணமுடித்தார்.
இதில்
தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தாயி Y.அன்வர் அலி அவர்கள் 'மஹரின்
அவசியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் கடற்கரைத்தெரு ஜமாஅத்தினர் உட்பட பல கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு காலத்தில் ஆடம்பர திருமணங்கள் மட்டுமே நடைபெற்று வந்த நிலை மாறி, நபிவழித் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது மட்டுமின்றி, சுன்னத் வல் ஜமாஅத்தின் பள்ளி நிர்வாகிகளும் நபிவழித் திருமணங்களுக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சிகரமான செய்தி. பிலால் நகர் பள்ளிவாசலின் நிர்வாகத்தினர் தங்களின் பள்ளியிலேயே நபிவழித் திருமணங்களுக்கு அனுமதி தந்து, ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினர். அதை தொடந்து தற்போது, கடல்கரைத் தெரு ஜமாஅத்தினர் நபிவழித் திருமணத்தில் பங்கேடுத்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். அதிரையில் உள்ள மற்ற ஜமாஅத்தினரும் இந்த செயலை செய்ய முன்வர வேண்டும்.
இனி, நாங்கள் வரதட்சனை மற்றும் அனாச்சாரங்கள் இல்லாத நபிவழித் திருமணங்களை மட்டும் தான் நடத்தி வைப்போம் என்று ஜமாஅத்தினர் முடிவு எடுக்க வேண்டும். வரதட்சனையும் ஆடம்பர திருமணமும் நமது ஊரை விட்டு, விரட்டப்பட்டு நபிவழித் திருமணம் மட்டுமே நடந்தால், திருமணம் செய்து சிறிது காலத்திலேயே வெளிநாடுகளுக்கு சென்று, தங்களின் சகோதரிகளின் திருமணத்திற்கு செல்வம் திரட்ட செல்லும் நமது சகோதர்களின் கண்ணீர் கதை முடிவுக்கு வரும், இன்ஷா அல்லாஹ்.