அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 30-05-2014 அன்று ஜும்ஆத் தொழுகைக்குப் பின் மதியம் 2 மணியளவில் ஷார்ஜா சிட்டி மர்கஸில் புதிதாக அஜ்மான் - அதிரை TNTJ கூட்டமைப்பின் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அபுதாபி கூட்டமைப்பின் சார்பில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஐக்கிய அமீரக வடக்கு மண்டல ஷார்ஜா கிளையின் துணைச் செயலாளர் சகோதரர் ஜாஃபர் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
பொறுப்பாளர் 1 - சகோ. ஜாவித் (+97151502678)
பொறுப்பாளர் 2 - சகோ. பிஸ்மில்லாஹ் கான் (+971503576076)
பொறுப்பாளர் 3 - சகோ. நவாஸ் கான் (+971553982253)
துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபி - அதிரை TNTJ கிளையின் கூட்டமைப்புச் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும், சகோ. ஷாகுல் ஹமீத் (அதிரை - துபை பொருப்பாளர் 1) அவர்கள் பொறுப்பாளர்களின் கடமைகள் பற்றியும், கலந்துகொண்ட இதர சகோதரர்களின் பங்களிப்பின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.
இறுதியில், துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.