Showing posts with label ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி. Show all posts
Showing posts with label ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி. Show all posts

Monday, February 03, 2014

பரேலவிசத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம்!

பரேலவிசத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம்

அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி.

அவர் அண்மையில் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் தான் உள்ளார்கள் என்ற ஒரு பயங்கர வாதத்தை வைத்துள்ளார். இது குர்ஆனுக்கு எதிரான யுத்தப் பிரகடனமாகும். அப்பட்டமான இறை நிராகரிப்பு வாக்குமூலமாகும்.

அவரது இந்தக் கூற்றை நம்பி, அவரது பாட்டையில் செல்பவர் நிரந்தர நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுவார் என்பதால் இந்த நரகத்தின் ஏஜெண்டிடமிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவரது இந்த அபத்தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். அப்துல்லாஹ் ஜமாலியின் அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் திருத்தூதரான நபி அவர்கள் முஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விடவும் மேலானவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:6)

இவ்வசனத்தின் மூலம் பயனுள்ள பல பாடங்களை அல்லாஹ் நமக்குச் சொல்லித் தருகிறான்.

தன்னை ஒரு முஃமின் என்று பறைசாற்றிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தன்னுடைய உயிரைவிடவும் உயர்ந்தவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்காதவன் உண்மையான முஃமின் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைப் போன்றவர்களல்ல. நமது உயிரை விடவும் உயர்ந்தவர்கள்.
ஆனால் நம்மிலே புறப்பட்டிருக்கின்ற ஒரு கூட்டம் நன்றாய் கதை அளந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் உள்ளங்களில் விஷ விதைகளைத் தூவப் பார்க்கின்றது. அவற்றில் ஒன்று:

நபிகள் நாயகம் (ஸல்) நம்மைப் போன்றவர்களே!

இதைக் கூறுகின்ற போது அவர்களின் தொனியில் அலட்சியம் தென்படுகின்றது. இதைக் கேட்கின்ற உண்மையான முஃமின் உள்ளம் புண்படுகின்றது.

இந்த அபத்தமான கூற்றுக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பதில் கொடுத்துவிட்டார்கள்.

உங்களில் யாரும் என்னைப் போன்றில்லை.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரீ, முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது யாரைப் பார்த்து? ஸஹாபாப பெருமக்களைப் பார்த்து. ஸஹாபா பெருமக்கள் யார்?

நபிமார்களுக்கு அடுத்த மனித சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்.

இவர்களைப் பற்றி இறைவன் கூறுவதாவது:

இறைவன் இவர்களைப் பொருந்திக் கொண்டான். இவர்களும் இறைவனைப் பொருந்தினார்கள்.

(அல்குர்ஆன் 98:8)

இத்தனை சிறப்பும், உயர்வும் பெற்றுள்ள ஸஹாபா பெருமக்களே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்றில்லை என்கிறபோது, தற்போது புறப்பட்டிருக்கிற இக்கூட்டம் எம்மாத்திரம்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நமக்குமிடையே இருக்கின்ற வேறுபாடுகள் ஏராளம். அதற்குண்டான ஆதாரங்கள் தாராளம்.

நமது விளக்கம்:

அல்லாஹ்வின் தூதரை மதிப்பது என்றால் அவர்களுடைய கட்டளையை முழுமையாகப் பின்பற்றுவது தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

ஆனால் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கின்றோம் என்று சொல்கின்ற இந்த பரேலவிச (ஆ)சாமிகள் நபி (ஸல்) அவர்களது கட்டளைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் மாற்றுமதக் கலாச்சாரம் கூடாது என்று கூறினால் இவர்கள் கோயில் திருவிழாக்களைப் பின்பற்றி சந்தனக்கூடு, யானை வழிபாடு என அத்தனையும் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற ஹதீஸை நாம் செயல்படுத்தினால் அதை இவர்கள் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை, அதைச் செயல்படுத்துபவர்களை நரம்புத் தளர்ச்சி என்று கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள். இவர்கள் தான் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிச்கிறார்களாம்.

அதே சமயம் இவர்கள் விரலை வெட்டி விடுவோம் என்று சொன்னாலும், உயிரை எடுத்து விடுவோம் என்று சொன்னாலும் அதற்கு அஞ்சாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அந்த நபிவழியை செயல்படுத்துகின்றனர். யார் நபியை உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள்; யார் அவமதிக்கின்றார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாநாபி (ஸல்) அவர்கள் மனிதரே!

நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் என்று நாம், நமது சுய விருப்பப்படி கூறுவது போல் ஒரு போலித் தோற்றத்தை இந்த பரேலவி பயங்கரவாதி ஏற்படுத்துகின்றார்.

உண்மையில் இது எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்ற கூற்றாகும்.

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

இதைத் தான் நாம் கூறுகின்றோம். நமக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் உள்ள வேறுபாடு வஹீ என்ற இறைச்செய்தியாகும். அந்த உயர்ந்த தகுதியை இந்த உலகத்தில் அவர்களுக்குப் பின் வேறு யாரும் பெற முடியாது என்று அடித்துச் சொல்கிறோம். இப்படிக் குர்ஆன் கூறுகின்ற வேறுபாட்டுடன் புரிந்திருக்கின்ற நம்மைத் தான் சுய விருப்பத்தின் அடிப்படையில் கூறுவதாக விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். இதிலிருந்து இவர்களது விஷமத்தனத்தை, விஷச் சிந்தனையைப் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் இல்லை என்பதற்கு புகாரியிலிருந்து ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார்கள். அந்த ஆதாரத்திலும் அவர்கள் ஒரு பயங்கர மோசடியைச் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியைச் சொல்லிவிட்டு, மற்றொரு பகுதியை இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இது தொடர்பாக புகாரியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்!'' என்று (மக்களிடம்) கூறியபோது, "நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?' என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்'' என்றோ "உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்'' என்றோ கூறினார்கள்.

நூல்: புகாரி 1961

இந்த ஹதீஸ் புகாரியில் 1922, 1962, 1963, 1964, 1965, 1966, 1967, 6851, 7241, 7242, 7299 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் பல இடங்களிலும் பதிவாகியுள்ளது.

இவை அனைத்திலும், எனக்கு என்னுடைய இறைவன் உணவளிக்கிறான்; குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுக்கின்றான் (அதாவது, நான் பட்டினி கிடக்கவில்லை) என்பதையும் சேர்த்தே சொல்கின்றார்கள். இதை வசதியாக, தங்களுக்குச் சாதகமாக மறைத்துவிட்டு ஹதீஸ் முதல் பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளனர். ஹதீஸில் உள்ளதை மறைப்பது மோசடியாகும்.

இத்தகைய மோசடி செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகள், நபிமார்களுடைய சாபமும் இறங்குகின்றது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:159

இதிலிருந்து இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதற்கான குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்ப்போம்.

வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இவர்களாகவே நபி (ஸல்) அவர்கள் மனிதர் அல்ல என்று முடிவெடுத்துவிட்டு அதற்குத் தக்க குர்ஆன், ஹதீஸை வளைக்க முயற்சிக்கின்றனர். அதற்குத் தான் ஹதீஸின் ஒரு பகுதியை விட்டு விட்டு, மற்றொரு பகுதியை மட்டும் ஆதாரமாக எடுக்கின்றனர். ஆனால் அல்லாஹ் தெளிவாக, முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்று ஆணித்தரமாகச் சொல்கின்றான்.
மர்யமுடைய குமாரர் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் கடவுளாக ஆக்கிவிட்டனர். இதை அல்லாஹ் கண்டிக்கிறான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

அல்குர்ஆன் 5:75

ஈஸா நபி அவர்களும், அவர்களது தாயாரும் மனிதர்கள் தான். அவர்களுக்குப் பசி, தாகம் இருந்தது. அதனால் உணவு சாப்பிட்டார்கள். சாப்பிட்ட அவர்கள் மல, ஜலம் கழித்தார்கள். அவ்விருவரும் கடவுளாக முடியாது என்பதற்கு இவ்விரு குறைபாடுகளையும் ஆதாரமாகக் காட்டுகின்றான். உணவு உட்கொள்ளுதல் என்பது நேர்முக ஆதாரம். சாப்பிட்டு விட்டு மலஜலம் கழித்தாக வேண்டும் என்ற மறைமுக ஆதாரத்தையும் மக்களுக்குப் புரியும் படி தெளிவாக இறைவன் குறிப்பிடுகின்றான்.

இதே விஷயத்தைத் தான் நபி (ஸல்) அவர்களுக்கும் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

"இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 25:7

நபி (ஸல்) அவர்களும் உணவு சாப்பிடுபவர் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இங்கு நபி (ஸல்) அவர்கள் உணவு சாப்பிடுபவர்கள் என்று நேரடியாகவும், மலஜலம் கழிப்பவர்கள் என்று மறைமுகமாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சாப்பிடுபவர் கடவுளாக இருக்க முடியாது என்ற ஆதாரம் இதில் பெறப்படுவதுடன் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்ற கருத்தையும் இவ்வசனம் தெளிவாக விளக்குகின்றது.

நபிவழிச் சான்றுகள்:

அல்குர்ஆனில் இதுபோன்று ஏராளமான சான்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்றைக் கூறியுள்ளோம். இனி, ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்பதற்குரிய சான்றுகளைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தம்மை மனிதர் என்று பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்றார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள்.

(இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகை யின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்கüடம், "இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)'' என்றனர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, "ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்கüல்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, "உங்கüல் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 401

நபி (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.  தொழுகையின் ரக்அத்துகள் நபி (ஸல்) அவர்களுக்கு மறந்து போனதை இது தெளிவுபடுத்துகின்றது. "உங்களைப் போன்ற மனிதன் தான்; உங்களைப் போலவே நானும் மறக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்கüடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்üவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்கüல் ஒற்றைப்படையான நாüல் உள்ளது.

நூல்: புகாரி 813

இந்த ஹதீஸ் லைலத்துல் கத்ரு மறந்து போனதை விளக்குகின்றது.

இதுபோன்று புகாரி 482, 2358, 6967, 7169, 7181, 7185 ஆகிய ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தெரிவிக்கின்றன.

"அல்லாஹ்வே! முஹம்மது மனிதர் தான். மனிதர்கள் கோபப்படுவது போன்றே அவர் கோபப்படுகின்றார். நான் உன்னிடத்தில் ஓர் வாக்குறுதி பெற்றிருக்கிறேன். எனக்கு நீ அதில் மாற்றம் செய்ய மாட்டாய். யாரையாவது ஓர் இறைநம்பிக்கையாளரை நான் நோவினை செய்திருந்தால் அல்லது அவரைத் திட்டியிருந்தால் அல்லது அவரை அடித்திருந்தால் அதை அவருக்கு இறுதிநாளில் (அவரது பாவத்திற்கு) பரிகாரமாகவும், அதைக் கொண்டு அவரை உன்னிடம் நெருங்க வைக்கும் வணக்கமாகவும் ஆக்குவாயாக!'' என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4708

இந்த ஹதீஸ்கள் தெள்ளத் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் தான் என்று தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலும் ஆதாரங்களை இதே இதழில், "இணை கற்பித்தல்' என்ற தொடரில் "மாநபியும் மனிதரே!' என்ற தலைப்பில் காண்க!

நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் வஹீ எனும் இறைச் செய்தியாகும் என்பதை மேலே நாம் கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் இன்னும் ஏராளமான ஆதாரங்களும் உணர்த்துகின்றன.

ஆனால் இந்த பரேலவிச பயங்கரவாதிகள் நபி (ஸல்) அவர்களை மனிதத் தன்மையிலிருந்து உயர்த்தி, இறைத்தன்மைக்குக் கொண்டு செல்கின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"நபி (ஸல்) அவர்கள், "கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) "அல்லாஹ்வின் அடியார்' என்றும் "அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்'' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நூல்: புகாரி 3445

இந்த பயங்கரவாதிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. இந்த லட்சணத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக மதிக்கிறோம், நேசிக்கிறோம் என்ற வெற்றுப் பேச்சு வேறு! இவர்களின் இந்த லட்சணத்தையும் இவர்கள் முன்வைக்கின்ற ஆதாரங்களின் லட்சணங்களையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.

நன்றி :  http://onlinepj.com/egathuvam/2014/ega-2014-feb/

Monday, November 01, 2010

கிழித்தெறியப்பட்ட பரேலவிக் கொள்கையும், நிலைநாட்டப்பட்ட சத்தியமும்

பரேலவிகளுடன் TNTJ நடத்திய 4வது விவாதம்

கடந்த சனி ஞாயிறு நாட்களில் ஒப்பந்தப்படி நடக்க வேண்டிய விவாதம் மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பமானது.

இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸை விளங்க முடியுமா? என்ற தலைப்பில் விவாதம் ஆரம்பமாகியது.

இமாம்களின் விளக்கம் இன்றி, மிகத் தெளிவாக குர்ஆனும் ஹதீஸூம் விளங்கும் என்றும், இமாம்கள் என்பவர்களின் விளக்கத்தினால் தான் நிறைய சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை விவாதிக்க தவ்ஹீத் ஜமாத் தரப்பில் சகோதரர் பி.ஜெயும், இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸ்கள் விளங்காது என்று வாதிக்க பரேலவி ஜமாத் சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் கலந்து கொண்டு வாதிக்க ஆரம்பித்தனர்.

ஆரம்பமே அசத்தலான பி.ஜெயின் வாதம் :

தனது தரப்பின் சார்பில் வாதிக்க ஆரம்பித்த பி.ஜெ குர்ஆன் அனைவருக்கும் இமாம்களின் விளக்கம் இன்றி மிகத் தெளிவாக விளங்கும் என்பதற்கான தனது முதல் ஆதாரமாக திருமறைக் குர்ஆன் வசனங்களை முன்வைத்து விவாதத்தை தொடங்கினார்.

ஆனால் இமாம்களின் கருத்துக்கள் இதற்கு மாற்றமாக பல சிக்கல்களைத் தான் உருவாக்கியுள்ளது என்று இமாம்களின் குருட்டுக் கருத்துக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

ஒரு இரவை ஒரு வருடமாக மாற்றிய அபூஹனீபா :

அல்லாஹ் திருமறைக் குர்ஆனை லைலதுல் கத்ர் என்ற சிறப்புமிகு இரவில் இறக்கியதாக கூறுகிறான் (97:1-5). ஆனால் அபூஹனீபாவோ லைலதுல் கத்ர் இரவு ரமழானிலும் வரும் ரமழான் அல்லாத காலங்களிலும் வரும் வருடம் முழுவதும் வரும் என்று லைலதுல் கத்ர் பற்றி விளக்கம் சொல்லியுள்ளார்.

அல்லாஹ் சொன்னது தெளிவாக விளங்குகிறது இமாம்கள் சொன்னதுதான் இவ்வளவு குழப்பம் மிக்கது என்பதை தனக்கே உரிய அழகிய பாணியில் விளக்கினார் பி.ஜெ.

அதே போல் பரேலவிகள் போற்றிப் புகழும் இப்னு அரபி என்பவர் லைலதுல் கத்ர் இரவு, ஷஃபான், ரபியுள் அவ்வல், ரபியுள் ஆகிர், ரமழான் ஆகிய மாதங்களில் வரும் என்று 97வது அத்தியாயத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.

முடிவு தெரிந்த ஜமாலியின் முதல் வாதம் :

பி.ஜெயின் கேள்விகளுக்கு பதில் சொல்லி தனது வாதத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலி அவர்கள் முதல் வாதத்தை ஆரம்பித்தவுடனேயே இமாம்களின் துணையுடன் தான் குர்ஆன் ஹதீஸை விளங்க வேண்டும் என்ற தனது கருத்து தவறானது என்பதை ஒத்துக் கொண்டார்.

அதாவது இப்னு அரபி லைலதுல் கத்ர் தொடர்பாக சொன்ன கருத்தில் ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் போன்ற மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று கூறியது தவறு ரமழானின் வரும் என்று அவர் சொன்னதை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் கொண்டிருக்கும் கொள்கை தவறு என்பதை ஒத்துக் கொண்டார்.

நபி மீதே அவதூறு பரப்பிய இமாம்களின் விளக்கங்கள் :

ஸைத் (ரலி) அவர்களின் மனைவியை ஸைத் அவர்கள் தலாக் விட்ட பின் நபியவர்கள் திருமனம் செய்து கொண்டார்கள். அல்லாஹ்வே நபியவர்களுக்கு திருமனம் செய்து வைத்ததாக திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

இந்த சம்பவத்திற்கு விளக்கம் சொல்ல வந்த இமாம்கள் என்பவர்கள் நபியவர்கள் ஸைத் (ரலி)அவர்கள் ஸைனப் (ரலி)அவர்களுடன் குடும்பம் நடத்தும் போதே அவர்களை விரும்பியதாகவும் அவர்களை பார்க்கக் கூடாத தோற்றத்தில் பார்த்து விட்டதாகவும் எழுதி வைத்துள்ளதை சுட்டிக் காட்டி இதுதான் நபிமார்களுக்கு இமாம்கள் கொடுக்கும் கண்ணியமா? என்று கேட்டு கேள்வியை பி.ஜெ அவர்கள் முன்வைத்த போது எந்த இமாமும் இப்படிக் கூறவில்லை என்று மறுத்தார் ஜமாலி.

தப்ஸீர் ஜலாலைன் தபரி பகவி நஸபி கஷ்ஷாப் போன்ற கிதாபுகளை எடுத்துக் காட்டி தனது வாதத்திற்கான ஆதாரத்தை நிறுவினார் பி.ஜெ.

எப்படி இதற்கு முந்தைய விவாதங்களில் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் காலத்தை கடத்தினாரோ அதே பாணியில் இம்முறையும் எந்த பதிலையும் சொல்லாமல் காலத்தை கடத்த ஆரம்பித்தார்.ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் தன்னிடம் பதில் இல்லை என்பதை சொல்லும் விதமாக இமாம்கள் தவறு செய்திருந்தால் தவரை விடுத்து நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இமாம்கள் தான் சரியாக விளங்குவார்கள் என்று கூறியவர் இறுதியில் இமாம்கள் தவறாக விளங்கியுள்ளதை ஒத்துக் கொண்டார்.

சொத்துப் பங்கீடும் சொதப்பிய ஜமாலியும்:

சொத்துப் பங்கீடு தொடர்பாக ஒரு கேள்வியை பி.ஜெயிடம் கேட்டார் ஜமாலி.அதாவது ஒரு பெண் இறக்கும் போது அவருக்கு தாய் தந்தை பெண்பிள்ளைகள் கணவன் ஆகியோர் இருந்தால் என்ன சட்டம் என்று கேட்டார் ஜமாலி.

திருக்குர்ஆன் மொழியாக்கம் 111வது குறிப்பில் இது தொடர்பாக கூறியுள்ளோம் தவறாக இருந்தால் அது எப்படி தவறு என்பதை வாதமாக முன்வையுங்கள் என்று சொன்னார் பி.ஜெ ஆனால் சமாளிப்பதில் வல்லவரான ஜமாலியோ அரங்கத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச கூட்டத்தையாவது தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் அதன் பின் எதுவும் பேசவில்லை.

ஜமாலிக்கு இலக்கணம் கற்றுக் கொடுத்த பி.ஜெ :

லா உக்ஸிமு என்பதில் முதலாவது லா வருகிறது லா என்றால் இல்லை என்று அர்த்தம் உக்ஸிமு என்றால் சத்தியம் செய்கிறேன் என்று அர்த்தம் இரண்டையும் சேர்த்தால் சத்தியம் செய்ய மாட்டேன் என்று தானே வரவேண்டும் ஆனால் தாங்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆனில் (மொழியாக்கங்கள் அனைத்திலும் இப்படித்தான் மொழிபெயர்பு செய்துள்ளார்கள்.) சத்தியம் செய்கிறேன் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்களே இமாம்களின் துணையின்றி இதனை விளக்குங்கள் என்று கேட்டார் ஜமாலி.

அரபி இலக்கணம் தெரியாததினால் ஏற்பட்ட குறைதான் இது என்பதை புரிந்து கொண்ட பி.ஜெ இலக்கணப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அதாவது சத்தியத்திற்கு முன்பாக லா எனும் சொல் இடம் பெரும் அந்த லா எனும் சொல்லுக்கு அதிகப் படியாக வரும் லா என்று பெயர். இப்படி சத்தியத்திற்கு முன்பு அதிகப் படியாக லா எனும் எழுத்து வரும் போது அதற்கு பொருள் கொள்ளக் கூடாது என்பது அரபி இலக்கண விதி (ஹிதாயா) இது தெரியாததினால் விளைந்ததுதான் இந்தக் கேள்வி என்பதை தெளிவு படுத்தினார்.

சாலிம் (ரலி) விஷயமாக எடுபடாத ஜமாலியின் சமாளிப்புகள் :

இளைஞராக இருந்த சாலிம் (ரலி)அவர்களுக்கு பாலுட்டும் படி நபியவர்கள் அபூஹஹீதைபா அவர்களின் மனைவியிடம் கூறியதாக முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் தவறானது. நபியவர்கள் மீது யாரோ ஒருவர் பொய்யான கதையை இட்டுக்கட்டியிருக்கிறார். நபியவர்கள் இப்படிப்பட்ட ஒழுக்க சீர்கேட்டுக்கு வழி வகுக்க மாட்டார்கள் என்றும் பால்குடிச் சட்டம் என்பது குழந்தை பிறந்து இரண்டு வருடத்திற்குட்பட்டது என்பதாலும், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நாம் அந்த ஹதீஸை மறுக்கிறோம்.

ஆனால் குறிப்பிட்ட ஹதீஸ் சரியானது அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட வந்த ஜமாலியிடம் அந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் அதற்கு என்ன சட்டம் சொல்வீர்கள் என்று கேட்டார் பி.ஜெ ஆனால் விவாதத்தின் இறுதி வரை சாலிம் விஷயமாக சட்டத்தை ஜமாலி சொல்லவேயில்லை.

ஸாலிம் அவர்கள் வாய் வைத்தா குடித்தார்கள் கறந்து குடித்திருப்பார்கள் என்று சகட்டு மேனிக்கு ஒரு கேள்வியை முன்வைத்தார் ஜமாலி. அப்படியாயின் ஒருவன் ஒரு வீட்டிட்கு அடிக்கடி போய் வரவேண்டி ஏற்பட்டால் அவன் அந்த வீட்டுப் பெண்மணியிடம் பாலைக் கறந்து குடித்தால் சரி என்று சட்டத்தை சொல்வீர்களா? என்று பி.ஜெ அவர்கள் கேட்க வாய் திறக்காமல் இருந்தார் ஜமாலி.

அண்ணியப் பெண்ணிடம் பேன் பார்க்கும் அசிங்கம் :

ஆபாசத்தையும் அசிங்கங்களையும் மாத்திரமே மூலதனமாக கொண்டு இயங்குகின்ற மத்ஹபுவாதிகள் ஹதீஸ்கள் என்ற பெயரால் நபியவர்களைப் பற்றி வரும் ஆபாசங்களுக்கும் முட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

உம்மு ஹராம் (ரலி)அவர்கள் வீட்டிட்கு நபியவர்கள் சென்று அவர்களின் அருகில் தூங்குவார்கள் உம்மு ஹராம் அவர்கள் நபியவர்களுக்கு பேன் பார்த்து விடுவார்கள் என்று இடம் பெறும் ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி நாம் மறுத்து வருகிறோம்.

ஆனால் இந்த ஹதீஸ் சரியானது என்று கூற வந்த ஜமாலியிடம் சரி என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக நிரூபித்துக் காட்டுங்கள் என்று பல முறை கேட்டும் அதனை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

அதே போல் ஒருவன் அண்ணியப் பெண்ணின் மடியில் படுத்து தனது தலையில் பேண் பார்த்துவிடச் சொன்னால் அது சரியென்று நீங்கள் பத்வா கொடுப்பீர்களா? என்றும் பி.ஜெ அவர்கள் கேட்டதற்கு இறுதிவரை ஜமாலி வாய் திறக்கவில்லை.

உடலுறவும் கத்தம் தான் ஜமாலியின் புதிய ஆதாரம் :

மரணித்தவருக்காக குர்ஆன் ஓதி கத்தம் கொடுப்பதென்பது இஸ்லாத்தில் இல்லாத வழிமுறை பித்அத் ஆகும்.நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே பல நபித்தோழர்களும் நபியவர்களின் பிள்ளைகளும் பாசமிகு மனைவி கதீஜா அவர்களும் மரணித்துள்ளார்கள்.ஆனால் அவர்களில் யாருக்காகவும் நபியவர்கள் கத்தம் கொடுத்ததில்லை.கொடுக்கச் சொல்லவும் இல்லை.

ஆனால் கத்தம் என்றொன்று மார்க்கத்தில் இருப்பதாகக் கூறி பொது மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள் இந்த பரேலவிகள்.

அதன் உச்ச கட்டமாக ஒருவன் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மரணித்த எனது தந்தைக்கு இது கத்தமாக மாறிவிடும் என்று சொன்னால் அது கத்தம் தான் என்று இலங்கையில் நடந்த விவாதம் ஒன்றில் ஜமாலி பேசியதை திரையில் போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் பி.ஜெ வாய்ச் சொல்லில் வீரரான் ஜமாலியோ மதில் மேல் பூனையைப் போல் விழித்துக் கொண்டிருந்தார்.

பட்டியல் போட்டார் பி.ஜெ பதறினார் ஜமாலி:

குர்ஆனையும் ஹதீஸையும் இமாம்களின் துணையின்றி விளங்க முடியாது என்று வாதிட வந்த ஜமாலியிடம் இமாம்கள் குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கிய லச்சணத்தை பட்டியலிட்டு இதற்கெல்லாம் பதில் என்னவென்று பி.ஜெ கேட்டார்.கிட்டத்தட்ட 98 கேள்விகள் கேட்கப்பட்டதில் ஒன்றிரண்டிட்கு மாத்திரம் சில் சமாளிப்புகளை சொன்ன ஜமாலி மீதமிருந்த சுமார் 95க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு வாய் திறக்கவில்லை.

சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்த கேள்விகளில் சில……..

(இவையெல்லாம் விளக்கம் என்ற பெயரில் இமாம்கள்(?)என்பவர்கள் கூறியவைகள்)

1.இறைவன் ஒன்றைப் படைக்க நாடினால் ஆகு என்று சொன்னால் அது ஆகிவிடும் என்பது திருமறைக் குர்ஆன் வசனம்.இந்த வசனத்திற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி என்பவர் இந்த குர்ஆன் வசனம் தவறானது என்று கூறிய விளக்கத்தை பி.ஜெ சுட்டிக் காட்டி இதுதான் உங்கள் இமாம்கள் திருமறையை விளங்கும் லட்சனமா என்று கேட்டார்.

2.வருடம் முழுவதும் லைலதுல் கத்ர் என்ற ஹனபியின் விளக்கத்திற்கு பதில் என்ன?

3.இப்னு அரபி ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் ஆகிய மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று சொன்னதற்கு என்ன பதில்?

4.அடுத்தவர் மனைவி மீது நபியவர்கள் ஆசைப் பட்டார்களா?

5.பிர்அவ்ன் முஸ்லிம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?

6.மழை பெய்யும் முறையை ராஸி என்ற இமாம் மறுத்ததற்கு என்ன பதில்?

7.மழை தொழுகை இல்லை என்ற இமாம்களின் விளக்கத்திற்கு என்ன பதில்?

8.கிரகணத் தொழுகையை மறுத்த இமாம்களின் நிலை என்ன?

9.ஏழு வானம் என்றால் இமாம்கள் சொன்ன விளக்கம் 1வது வானத்தில் சந்திரன் ஒட்டப் பட்டுள்ளது.2வது வானத்தில் மெற்குறியும் 3வது வானத்தில் வீனஸ் 4வது வானத்தில் சூரியன் 5வது வானத்தில் செவ்வாய் 6வது வானத்தில் வியாழன் 7வது வானத்தில் சனி வானத்திற்கே இன்னும் மனிதன் போகாத நிலையில் இந்தக் கண்டுபிடிப்புக்கு என்ன விளக்கம்?

10.உருவப் படமோ நாயோ உள்ள வீட்டிற்கு மலக்குகள் வரமாட்டார்கள் என்ற ஹதீஸிற்கு கஸ்ஸாலி கொடுத்த விளக்கம் சரியானதா? இவர்தான் இமாம் என்று சொல்லப்படுபவரா?

11.இடி பற்றிய வசனங்களுக்;கு மலக்குமார் என்று விளக்கம் சொன்னது சரியா?

12.இப்லீஸ் என்பதற்கு இமாம்கள் கொடுத்த விளக்கம் சரியானதா?

13.ஒரு ரக்அத் வித்ர் தொழ முடியும் என்று நபியவர்கள் சொல்லியிருக்க கூடாது என்று இமாம்கள் சொன்னதை ஏற்றுக் கொள்வது முறையா?

14.மஃரிபுக்கு முன் சுன்னத் இருக்கிறது என்று ஹதீஸ் இருக்க சுன்னத் தொழுகை கூடாது என்று சொன்னது சரியானதா?

15.விபச்சாரம் செய்த யூதனுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறது.ஆனால் யூதனுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று அபூஹனீபா சொல்வது சரியானதா?

16.மழைத் தொழுகை ஜமாத்தாக தொழ வேண்டும் என்று ஹதீஸ் இருக்கும் போது ஜமாத்தாக தொழக்கூடாது என்று அபூஹனீபா சொன்னதற்கு விளக்கம் என்ன?

17.நடுத் தொழுகை எது என்பதில் ஏன் இத்தனை தடுமாற்றம்?

18.அத்தீன் என்பதற்கும் ஸைத்தூன் என்பதற்கும் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

19.காளை மாட்டை வணங்கலாம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?

இப்படி கிட்டத்தட்ட 98 கேள்விகளை சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்தார் ஆனால் அதில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கினார் ஜமாலி.

விவாத அரங்கம் சிரிப்பில் மூழ்கிய சில முக்கிய சந்தர்ப்பங்கள் :

இப்லீஸ் என்றால் யார் என்று இமாம்கள் கொடுத்த விளக்கத்தினை சகோதரர் பி.ஜெ எடுத்துக் காட்டியதும் அரங்கமே சிறிப்பில் மூழ்கியது.

அதாவது இப்லீஸ் என்பவன் தனது வாலை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைப்பானாம். பின்பு ஒரு முட்டை போடுவானாம் அது பல ஷைத்தான்களை உருவாக்குமாம்.அந்த இப்லீஸ் மொத்தம் 30 முட்டைகள் போடுவானாம் 10 முட்டை கிழக்கிலும் 10 முட்டை மேற்கிலும் 10 முட்டை மத்தியிலும் போடுவானாம்.(குர்ஆனை இமாம்கள் விளங்கிய லட்சனம் ?)

சிலை வணக்கத்தினை விட்டும் என்னையும் என் சமுதாயத்தையும் காப்பாற்றி விடு என்று இப்றாஹீம் நபி துஆ கேட்டதற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி இந்த வசனம் தங்கம் வெள்ளியில் ஆசைப்படக் கூடாது என்றுதான் சொல்கிறது என்று விளக்கம் கூறியுள்ளார்.என்பதை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்ட ஜமாலி தரப்பால் வந்திருந்தவர்களுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.

தலாக் பற்றி இமாம்கள் விளக்கம் சொல்லும் போது ஒருவன் தலாக் சொன்னால் கெட்ட தலாக், அகலத் தலாக், நீளத் தலாக், மார்பு தலாக், தலை தலாக், முடி தலாக், முதுகு தலாக், பெண் குறி தலாக், பெண் குறியில் உள்ள முடியின் அளவுக்கு தலாக், ரத்தம் தலாக் என்றெல்லாம் பகுதி பகுதியாக தலாக் சொல்லலாம் என்று விளக்கம் சொல்லியுள்ளார்கள். இதற்கு பதில் என்ன என்று பி.ஜெ கேட்க ஜமாலி தரப்பினரே முகம் சுழித்து இவ்வளவு அசிங்கமா இமாம்கள் எழுதியுள்ளது என்று நினைக்குமளவு ஆகிவிட்டது.

அதே போல் முடியில்லாத மர்ம உருப்பின் முடியளவுக்கு தலாக் என்று ஒருவன் சொன்னால் அதற்குறிய சட்டம் என்ன என்ற முஹம்மத் பின் ஹஸனிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தொடர்பாக ஜமாலியிடம் கேட்டதற்கு இறுதி வரை பதிலே இல்லை.

27:52வது வசனத்தில் மறுமையின் அடையாளமாக ஒரு மிருகம் வெளிப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான் அந்த மிருகத்தைப் பற்றி விளக்கம் சொன்ன இமாம்கள் அந்த மிருகத்தினை வர்ணிக்கிறார்கள் அதாவது அந்த மிருகம் மாட்டுத் தலையையும் பன்றிக் கண்ணையும் சிங்கத்தின் நெஞ்சையும் பூனையின் இடுப்பையும் ஒட்டகத்தின் காலையும் கொண்டிருக்குமாம் மூஸா நபியின் கைத் தடியையும் கையில் வைத்துக் கொண்டிருக்குமாம்.

மூஸா நபியவர்கள் பாம்மைப் போட்டதைப் பார்த்தவுடன் பிர்அவ்னுக்கு பெரும் சப்தத்துடன் காற்று வெளிப்பட்டதாம் அன்றுதான் அவன் முதலாவது காற்று விட்டானாம்.

இனிமேல் விவாதம் என்ற பேச்சையே பரேலவிகள் எடுக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு சத்தியம் நிலை நாட்டப் பட்டு அசத்தியம் குழி தோண்டிப் புதைக்கப் பட்டது.

விவாத வீடியோக்கள் வெளியிடப் பட்டுள்ளன அதனைப் பார்ப்பவர்கள் இமாம்கள் என்பவர்களின் அசிங்கமான விளக்கங்களையும் ஜமாலியின் சமாலிப்புகளையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

Tuesday, October 26, 2010

மத்ஹபுக்கு வக்காலத்து வாங்க வந்தவர் மானத்தை இழந்தார்: சென்னை 3வது விவாதம்

சென்னையில் ஷேக் அப்துல்லாஹ் சமாளியுடன் நடைபெற்ற பரபரப்பான விவாதத்தின் நேரடி தொகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (23, 24.10.2010) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.

இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு :

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.

தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு :

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப்பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.

விவாதத்தின் ஆரம்பமும் அரண்டு போன ஜமாலியும்:

விவாதம் ஆரம்பிப்பதற்காக இரு தரப்பு நடுவர்கள் சார்பாகவும் நாணயச் சுழற்சி மேற் கொள்ளப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தவ்ஹீத் ஜமாத் தரப்பால் சகோதரர் பி.ஜெ தனது வாதத்தை ஆரம்பித்தார்.

பொய்களின் மொத்த உருவம் ஜமாலி:

விவாதத்தின் ஒப்பந்தப்படி ஜமாலியினதும் அவரால் ஒப்புக் கொள்ளப்பட்டவர்களினதும் ஆபாசமான அசிங்கமான முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை சகோதரர் பி.ஜெ பட்டியலிட ஆரம்பித்தார்.

முதலாவதாக அபூதாலிப் 'முஸ்லிம்' என்று ஓரிடத்திலும், இன்னோரிடத்தில் அபூதாலிம் காபிர் என்றும் ஜமாலி பேசிய இரண்டு வீடியோ ஆதாரங்களை திரையில் போட்டுக் காட்டினார் சகோதரரர் பி.ஜெ அவர்கள்.

இடத்திற்கு தகுந்தால் போல் பேசுவதில் இவர் வல்லவர் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட இந்த வீடியோவில் அபூதாலிப் 'முஸ்லிம்' என்பதற்கு இப்னு அஸாகீர் நஸயீ அபூதாவுத் ஆகிய கிரந்தங்களில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அதன் ஒரு பகுதியை சொல்லி மறு பகுதியை மறைத்திருந்தார்.
அந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியே அபூதாலிப் அவர்கள் காபிர் தான் என்பதற்கு சான்றாக இருந்தது.

மீதியை ஏன் மறைத்தீர்கள்? மக்கள் மத்தியில் ஏன் இப்படி பொய்களையும் புரட்டுகளையும் பறப்புகிறீர்கள்? என்று விவாதத்தின் இறுதிவரைக் கேட்டும் இந்தக் கேள்விக்கு ஜமாலி பதிலே தரவில்லை.

முதல் வாதத்திலேயே உளற ஆரம்பித்த ஜமாலி:

பி.ஜெவின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் ஆபாசங்கள் அசிங்கங்கள் இருக்கிறது என்று வாதிட வந்த ஜமாலி அவர்கள்.முதல் வாதத்திலேயே தலைபிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமின்றி பேச ஆரம்பித்தார்.

பி.ஜெ ஆண்கள் தொடையை மறைக்க வேண்டும் என்று கூறினார். தற்போது ஆண்கள் தொடையை திறந்து கொள்ள அனுமதியுண்டு என்று கூறுகிறார். இது அவர்களது வெளியீடுகளில் உள்ள அபத்தம் என்று முதல் வாதத்தையும், கலாலா தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களின் திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் 4வது அத்தியாயம் 12வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தினை அரைகுறையாக வாசித்துவிட்டு, அதில் தவறு உண்டு என்று தனது இரண்டாவது வாதத்தையும் முன்வைத்தார்.

முரண்பாடு என்றால் என்னவென்று ஜமாலிக்கு பாடம் நடத்திய பி.ஜெ:

விவாதம் ஆரம்பித்த அடுத்த கணமே உளறுவதற்கும் ஆரம்பித்தார் ஜமாலி. இருந்தாலும் அவருடைய உளறளுக்கும் விவாதம் என்பதால் பதில் கொடுக்க வேண்டியது பி.ஜெயின் கடமை என்பதால் முதலில் முரண்பாடு என்றால் என்ன என்று விளக்கம் சொன்னார்.

ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு, பிறகு தான் சொன்ன கருத்து தவறு, தற்போது திருத்திக் கொண்டு, இந்தக் கருத்துக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்து விட்டு, முதலாவது கூறிய கருத்துக்கு மாற்றமாக கருத்துச் சொன்னால், அதற்குப் பெயர் முரண்பாடு அல்ல, திருத்தம் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் பாடமாக நடத்திக் காட்டினார் சகோதரர் பி.ஜெ அவர்கள்.

இதே நேரம் ஜமாலியைப் போல் ஒரு மேடையில் ஒரு கருத்தையும், இன்னொரு மேடையில் அதற்கு மாற்றமாக இன்னொரு கருத்தையும் சொல்லிவிட்டு மக்கள் மத்தியில் ஒரு கொள்கையற்றவனாக தன்னை காட்டிக் கொள்வதென்பது மூடத்தனம் கயமைத்தனம் பித்தலாட்டம் முரண்பாடு என்பதையும் மிக அழகாக விளக்கிச் சொன்னார்.

கிழித்தெறியப் பட்ட மத்ஹபு குப்பைகளும் மாட்டிக் கொண்ட ஜமாலியும்:

ஜமாலியுடையவும் அவர் ஆதரிப்பவர்களினதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இருக்கும் முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் கயமைத்தனங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார் பி.ஜெ

ஆனால் சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட ஒரு கேள்விக்குக் கூட ஜமாலியினால் இறுதி வரை பதில் தரவே முடியவில்லை.

மத்ஹபுகளில் மலிந்திருந்த அசிங்கங்கள்:

ஹனபி மற்றும் ஷாபி போன்ற மத்ஹபுகளில் ஒரு சாதாரண மனிதன் கூட நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசங்களும் அபத்தங்களும் கயமைகளும் நிறைந்துள்ளதை சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்டு சொன்னார்.

சகோதரர் பி.ஜெ பட்டியலிட்ட மத்ஹபு அசிங்கங்களை தலைப்புவாரியாக இங்கு குறிப்பிடுகிறோம் 

1.தானாக காற்றை விட்டு தொழுகைகளை முடிக்கலாம்.

2.கிழக்கிலிருக்கும் ஒருவரும் மேற்கில் இருக்கும் இன்னொருவரும் திருமணம் முடிக்கலாம். அப்படி முடித்து ஆறு மாதத்தில் மனைவி பிள்ளை பெற்றால் அதனை குறை சொல்ல முடியாது. ஏனெனில் கராமத்தின் மூலம் அவன் அவளிடத்தில் வந்து போயிருக்கக் கூடும். 

3.ஹஜ்ஜுடைய நேரத்தில் மனைவி தவிர யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொண்டாலும் ஹஜ் முறியாது.

4.ஹஜ்ஜுடைய காலத்தில் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும் ஆணின் ஹஜ்ஜை முறிக்காது.

5.சிறுமியுடன் விபச்சாரம் செய்தால் தண்டனையில்லை.(மத்ஹபு நூல்கள் அதற்காக சொல்லும் காரணங்களை விவாதத்தில் பார்த்துக் கொள்ளவும்).

6.ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை.

7.விபச்சாரம் செய்துவிட்டு பணம் கொடுத்துவிட்டால் அதற்கு தண்டனை இல்லை.

8.பைத்தியத்துடன் விபச்சாரம் செய்தால் தண்டனை கிடையாது.

9.வெளிநாட்டுக் காபிர் உள்நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் காபிருக்கு தண்டனை கிடையாது.

10.ஒரு பெண்ணை கண்ணியா இல்லையா என்று கண்டுபிடிக்க அவளை சுவற்றில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும். அது சுவற்றில் படுகிறதா? இல்லையா? என்பதை வைத்து அவள் கண்ணியா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

11.விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டவன் விபச்சாரியை மனைவி என்று சொல்லிவிட்டால் தண்டனை இல்லை.

12.தனது மர்ம உருப்பை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைத்தால், அவனுக்கு சட்டம் என்ன? என்று அதற்கு சட்டம் தொகுத்துள்ள மத்ஹபுவாதிகள்.

13.தான் திருமணம் செய்த மனைவியுடன் இரவில் உணர்ச்சியுடன் நெருங்கும் போது அவளுடைய மகளின் மீது தவறுதலாக கைபட்டுவிட்டால் மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள திருமன உறவு நீங்கிவிடும்.

14.இரண்டு பேர் திருடச் சென்று ஒருவன் உள்ளே சென்று திருடிவிட்டு வெளியிலிருப்பவனுக்கு அதனை கொடுத்தால் இருவருக்கும் தண்டனை இல்லை.(உள்ளே போனவன் திருடியதை வெளியில் கொண்டுவரவில்லை வெளியில் இருந்தவன் உள்ளே போய் திருடவில்லை இதுதான் மத்ஹபின் விளக்கமாம்.)

15.தூங்கி எழுந்ததும் பல் துலக்கும் போது முதலாவது வரும் எச்சிலை விழுங்கிவிட வேண்டும்.

16.ஹஜ்ஜின் போது சுய இன்பம் செய்தால் அது ஹஜ்ஜை பாதிக்காது.

17.தொழ வைத்த இமாமையே குர்பானி கொடுக்களாம்.

18.சிறிதளவு கஞ்சா அடிக்கலாம்.

19.குழந்தையை கடத்தியவனுக்கு தண்டனை இல்லை.

20.பல் துலக்கும் போது தனது இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் பல் துலக்க வேண்டும்.

மத்ஹபில் உள்ள குப்பைகள் பட்டியல் போட்டு எடுத்துக் காண்பித்தார் சகோதர் பி.ஜெ. அந்த அசிங்கங்களுக்கு விவாதத்தின் இறுதி வரை எந்த ஒரு பதிலையும் தராது தனது தோல்வியை ஒத்துக் கொண்டு அமைதி காத்தார் ஜமாலி.

நபியவர்கள் மீதே பொய் சொன்ன ஜமாலி, எடுத்துக் காட்டும் படி சவால் விட்டார் பி.ஜெ.

கழுதையுடன் புணருவது தொடர்பான மத்ஹபு குப்பைகளை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்டும் போது மத்ஹபு தொடர்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத ஜமாலி இதற்கு மட்டும் நபியவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை சொன்னார்.

அதாவது :

யார் மிருகத்துடன் புணர்கிறானோ அவனுக்கு தண்டனை இல்லை. என்று நபியவர்கள் கூறிய செய்தி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொய் சொன்னார் ஜமாலி.

அப்படி ஒரு ஹதீஸே இல்லை. இருந்தால் திர்மிதியில் இருந்து எடுத்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார் பி.ஜெ. ஆனால் நபியின் மீது பொய் சொன்ன பொய்யர் ஜமாலி இறுதிவரை அப்படி ஒரு ஹதீஸைக் காட்டவே இல்லை.

ஜமாலி நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டிய பொய்கள்:

  • அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக இப்னு அஸாகீரில் உள்ளதாக குறிப்பிட்டார் ஜமாலி. ஆனால் இப்னு அஸாகீரில் உள்ள செய்தியோ அபூதாலிப் காபிர் என்பதைத் தான் குறிப்பிடுகிறது.

நபியவர்கள் அபூதாலிபை காபிர் என்று எந்த ஹதீஸில் சொன்னாரோ, அதே ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக நபியின் மீதே பொய் சொன்னார் ஜமாலி.

இது தொடர்பாக அபூதாவுத் நஸாயி போன்ற கிரந்தங்களிலும் ஹதீஸ் வருவதாக சொன்னவர் கடைசி வரை ஹதீஸைக் காட்டவே இல்லை.

புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலும் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கான ஆதாரம் இருப்பாக சொன்னார் ஜமாலி. ஆனால் அதற்கு மாற்றமாக அபூதாலிப் காபிர் என்பதற்கான ஆதாரம் தான் புகாரி முஸ்லிமில் உள்ளது.
  • ஒளூ செய்யும் போது வாய்ப் பகுதியை மூன்று முறை தனியாகவும் மூக்கை மூன்று முறை தனியாகவும் நபியவர்கள் கழுவியதாக புகாரியை ஆதாரம் காட்டி பொய் சொன்னார்.
  • பெண்கள் ஜும்மாத் தொழுகைக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் சொன்னதாக முஸ்லிமில் ஹதீஸ் இருக்கிறது என்று இல்லாத ஹதீஸை இருப்பதாக நபியவர்கள் மீது இட்டுக் கட்டினார்.

  • பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் வரை குர்பானி கொடுக்களாம் என்ற நபியவர்கள் கூறியதாக முஅத்தாவில் ஹதீஸ் இருப்பதாக இல்லாத செய்தியை நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டினார்.

யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும்.

(முஸ்லிம்)

என்ற நபிமொழியை எடுத்துக் காட்டி, இந்த ஹதீஸிற்கு ஏற்றாட் போல், உங்கள் வாதம் உள்ளது என்பதை பி.ஜெ அவர்கள் விவாதக் கலத்திலேயே ஜமாலியிடம் தெரிவித்தார்.

தண்டவாளம் ஏறியது ஜமாலியின் வண்டவாளம்:

விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக செயல்படுகிறது என்று வாதிட வந்த ஜமாலியின் முரண்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் வீடியோ காட்சியாக போட்டுடைத்தார் பி.ஜெ.

அதாவது கூட்டத்திற்கு தகுந்தாற் போல் இடத்திற்கு ஏற்றாற் போல் பேசுவதில் வல்லவரான ஜமாலி ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு தில்லுமுல்லு வேலைகளை செய்வார்.

அவை வீடியோவாக அரங்கத்தில் போட்டுக் காட்டப்பட்டு அவரிடமே விளக்கம் கேட்கப்பட்டது.

விவாதம் செய்வாதாக அரங்கத்திற்கு வந்தவர் மதில் மேல் குந்திய பூனை போல் இருதி வரை உளரிக் கொட்டிக் கொண்டே இருந்தார்.

அரங்கத்தில் போடப்பட்ட ஜமாலியின் ஒன்றுக் கொன்று முரண்பட்ட வீடியோக்கள் தலைப்பு வாரியாக.

  • மார்க்க விஷயத்தில் பித்அத் புதிதாக ஒன்றும் உருவாகாது ஆனால் உலக விஷயத்தில் உருவாகும் (வாகனங்கள் நாம் பயன் படுத்தும் பொருட்கள்) என்று ஓரிடத்தில் பேசிய ஜமாலி இன்னோரிடத்தில் தான் சொன்னதை தானே மறுத்துப் பேசிய காட்சி போட்டுக் காட்டப்பட்டது.

  • அபூதாலிப் முஸ்லிம் என்று ஒரு மேடையிலும் அவர் காபிர் தான் என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய வீடியோ அரங்கத்தினர் மத்தியில் போட்டுக் காண்பிக்கப் பட்டது.

  • இறைவன் அர்ஷில் இருக்கிறான் என்று ஒரு மேடையிலும் அர்ஷில் இல்லை என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.
  • ஒரு விஷயம் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை என்று தமிழகத்திலும் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்று இலங்கையிலும் ஜமாலி பேசிய வீடியோ போடப்பட்டு முரண்பாட்டிட்கு விளக்கம் கோறப்பட்டது.

  • மார்க்க விஷயத்திற்கு சவூதி ஆதாரமாகாது என்று ஒரு வீடியோவிலும் ஆதாரமாகும் என்று இன்னோர் வீடியோவிலும் தனக்குத் தானே முரண்பட்ட காட்சி அரங்கத்தினர் முன்னிலையில் போடப்பட்டது.

  • தவ்ஹீத்வாதிகள் மதிக்கும் அறிஞர்களை மரியாதையாக தான் பேசுவதாக குறிப்பிட்ட ஜமாலியிடம் இப்னு தைமிய்யா அவர்களை அவன் இவன் என்று ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப்பட்டது.

  • இறைவனுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூட கூறவில்லை என்று கடந்த விவாதத்தில் வாதித்தவர் இப்னு தைமிய்யா இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறினார் என இப்னு தைமிய்யாவை மேடையில் வைத்து வசை பாடும் காட்சி போட்டுக் காண்பிக்கப் பட்டது.
இப்படி தனக்குத் தானே ஜமாலி அவர்கள் முரண்பட்டு பேசிய விடியோக்கள் அரங்கத்தில் திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

அந்த வீடியோக்களை பார்த்தவுடன் அவர்கள் தரப்பு மக்களே ஜமாலி யார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

போடப்பட்ட எந்த ஒரு வீடியோவுக்கும் பதில் தர முடியாமல் திண்டாடினார் ஜமாலி.

பி.ஜெ விட்ட சவாலும் விரண்டோடிய ஜமாலியும்:

மத்ஹபு நூல்களில் உள்ள ஆபாசங்களையும் அசிங்கங்களையும் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட போது அதில் உள்ள அசிங்கங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேச திராணியற்றுப் போன ஜமாலி இப்படியெல்லாம் அசிங்கங்களை இவர்கள் வாசித்துக் காட்டுகிறார்கள் என்று நீழிக் கண்ணீர் வடித்தார்.

அப்போது பி.ஜெ அவர்கள் அவரிடத்தில் மத்ஹபில் உள்ள அசிங்கத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து அசிங்கம் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் நீங்கள் இதை தைரியம் இருந்தால் படித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்.

ஆனால் விவாதத்தின் இருதி வரை அதை அவர் படிக்கவே இல்லை.

விவாதத்திற்கு அவர்கள் தரப்பால் வந்தவர்களே முகம் சுழித்துப் போகும் அளவுக்குத் தான் ஜமாலியின் வாதங்கள் அமைந்தன.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்:

அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள். தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)