Showing posts with label நடுநிலை வேஷம். Show all posts
Showing posts with label நடுநிலை வேஷம். Show all posts

Thursday, February 12, 2015

நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்!

நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்!
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு பிரச்சாரம் சமுதாயப் பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறது.
v  உமா சங்கரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,
v  கிறித்துவர்களுடன் விவாதங்கள் மூலம் இஸ்லாத்தை பரப்புவது
v  பில்லி சூனியம் ஜோசியம் என்ற பெயரில் மக்களை மடையர்களாக்கி வரும் மந்திரவாதிகளிடம் துணிச்சலாக சவால் விட்டு இஸ்லாத்தையும் ஓரிறைக் கொள்கையையும் நிலை நாட்டி வருவது
v  பிரச்சாரர்களுக்கான பயிற்சி வகுப்பு
v  பிரச்சாரர்களை உருவாக்கும் வகுப்புகள்
v  ஆண்கள், பெண்களுக்கான மதரஸா
v  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தஃவாப் பணி
என்று கணக்கிலடங்காத பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவதைக் கண்டு பொருக்க முடியாமல் வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் நடுநிலைவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பதைத் தங்கள் முக்கியத் தொழிலாக வைத்துள்ளனர். பாவம் வேறு பிழைப்பில்லை இவர்களுக்கு.
எனினும் எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் விவாதக் களத்தில் நேருக்கு நேர் சொல்லுங்கள் என்று இவர்களில் பலருக்கு அழைப்புக் கொடுத்தும் விவாதம் என்றால் ஓடிவிடுகின்றனர்.
அப்படியே விவாதக் களத்திற்கு ஆசைப்பட்டு இவர்கள் வந்தாலும் அங்கு நாம் கொடுக்கும் (பதில்) அடியில் அனைத்தையும் மறந்து விட்டு பேய் (?) அறைந்தார் போல் என்ற பழமொழிக்கு ஏற்ப அமர்ந்து விடுகின்றனர். குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பும் இவர்களுக்கு நம் முன்னிலையில் விவாதத்தில் அவற்றை சொல்ல துப்பில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
எனினும் நடுநிலை வேஷம் போடும் இந்த நயவஞ்சகக் கூட்டத்தினரின் முகத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர்களின் நடுநிலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
நடுநிலை பேசுவோரின் இலட்சனம்
F  நாங்கள் எந்த இயக்கத்தையும் சேராதவர்கள் என்று சொல்லும் இவர்கள் தனி இயக்கமொன்று நடத்துவார்கள்
F  தவ்ஹீத் ஜமாஅத் பிற இயக்கங்களை விமர்சிக்கிறது என்று கூறும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்காத நாள் இல்லை
F  ஒரு சகோதரனின் மானம் கஃபாவைப் போன்று எனக் கூறி அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்கும்  இந்த கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்களை நா கூசாமல் ஆபாச அர்ச்சனை பண்ணுவார்கள்
F  தவ்ஹீத் ஜமாஅத் தனிப் பள்ளி கட்டி சமுதாயத்தை பிரிக்கிறது என்று புலம்பும் இவர்கள் குழப்பம் உண்டாக்கும் பள்ளிவாசல் (?) கூடாரத்தை இவர்கள் பகுதியில் கட்டி வைத்திருப்பார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி கட்டி ஜமாஅத்  பெயரில் பதிவு செய்து கொள்கிறது பள்ளியை அபகரிக்கும் முயற்சி இது என்று சொல்லிக்கொண்டே பிலால் பள்ளியை அபகரிக்க முயற்சி செய்வார்கள் .( பிலால் பள்ளியில் இருந்து சமீபத்தில் விரட்ட பட்டார்கள் )
F  தவ்ஹீத் ஜமாஅத்தில் பயான் செய்வோர் மட்டும் தான் தவ்ஹீத் வாதிகளா? நாங்கள் யார் பயான் செய்தாலும் கேட்போம், அனைவரின் நூல்களையும் படிப்போம் பரப்புவோம், என பிதற்றித் திரியும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் நூல்களை மட்டும் இவர்களின் பள்ளிவாசலிலும் மதரஸாவிலும் அப்புறப்படுத்தி விடுவார்கள்.
F  நாங்களும் தவ்ஹீத் தான் என மக்களை ஏமாற்றி வரும் இவர்கள் மத்ஹபைப் பின்பற்றும் ஆலிம்களைக் கூட ஜும்மாவில் ஏற்றத் தயங்குவதில்லை. ஏனென்றால் இவர்கள் பார்வையில் பிஜேவை எதிர்ப்பது மட்டும் தானே தவ்ஹீத். என்ன கொள்கை உறுதி? அடேங்கப்பா!
F  உலகத்தில் எந்தப் பகுதியில் பிறை பார்த்தாலும் பெருநாள் கொண்டாடுவது தான் சரியான பாதை. அதுவே விஞ்ஞானம், நபி பெருநாள் கொண்டாடியது போல் பெருநாள் கொண்டாடுவது வழிகேடு என கூறும் இந்தக் கூட்டத்தினர் ஊரை ஏமாற்ற இரண்டு பெருநாள் தொழுகையை நடத்துகின்றனர். இதுவே இவர்களின் தனிச் சிறப்பு?
F  தவ்ஹீத் ஜமாஅத் நேற்று ஒரு ஃபத்வா! இன்று ஒரு ஃபத்வா கொடுக்கிறது, நாங்கள் அப்படியெல்லாம் ஆய்வு செய்யும் கூட்டமல்ல, அறைவேக்காட்டுத்தனமான கூட்டம் என்று நிரூபிக்கும் இவர்கள், தங்கள் இயக்கத்தின் சார்பாக பேச அழைத்து வரும் ஆய்வாளர்(?)களை ஒரே மேடையில் அமர வைத்து ஒரே கேள்வியை அனைவரிடமும் கேட்டால் ஒரே நாளில் ஒரே விசயத்தில் எப்படி முரண்பட்டு அந்த ஆய்வாளர்(?)கள் நிற்பார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். அப்போது இவர்களின் முரண்பட்ட ஃபத்வாக்கள் கிழிந்து தொங்கும்.
F  தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சித்து கூட்டம் நடத்தும் இந்தக் கொள்கை கெட்டவர்களுக்கு துப்பிருந்தால் முக்காடு போட்டுக் கொண்டு ஒப்பாரி வைக்கும் பாஸித், அல்லது ஜாகிர் நாயக் அல்லது, ஸலஃப் ஜுப்பா கும்பலை அழைத்து வந்து மத்ஹபைப் பற்றிப் பேச வைக்க இயலுமா? வழிகெட்ட தரீக்காவை பற்றி  பேச வைக்க இயலுமா? அப்போது தெரியும் இவர்கள் தவ்ஹீதைச் சொல்லத் துணிவில்லாத கூட்டம் என்பதும் தகுதியற்ற கூட்டம் என்பதும்.
F  வரதட்சனை மற்றும் ஆடம்பரத் திருமணங்களில் பாரபட்சம் இல்லாமல் கலந்து கொள்வது தான் இவர்களின் நடுநிலைக் கொள்கை
F  இணைவைக்கும் இமாம் பின்னால் நின்று தொழுவது தான் இவர்கள் கூறும் தவ்ஹீத் ஃபத்வா?
F  பணக்காரர்களுக்கு வளையும் தவ்ஹீதைத் தான் இவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஹஜ் உம்ரா பெயரில் தங்கள் சகாக்கள் மோசடி செய்தாலும் ரியல் எஸ்டேட் பெயரில் மக்களை ஏமாற்றித் திரிந்தாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக சொல்லி அடுத்தவன் பணத்தை ஆட்டைப் போட்டாலும் அவர்களுக்குத் தோள் கொடுப்பது தான் இவர்கள் கண்டு பிடித்த சமுதாய ஒற்றுமை? தவ்ஹீத்?
F  சூனியம் கண்ணேறு போன்ற இணைவைப்பை நியாயப்படுத்துதான் இவர்களின் தவ்ஹீத்?
F  தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நின்று விட்டால் மகிழ்ச்சியடைவதும் நடந்து விட்டால் கவலைப்படுவதும் தான் இந்த நயவஞ்சகர்களின் தவ்ஹீத்?

தவ்ஹீதுக்கு எதிராகவே இவர்கள் இயங்குகிறார்கள் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல என்ற நமது குற்றச்சாட்டுக்கு இவர்களிடம் பதில் இல்லாததால் தனி நபர் விமர்சனத்தில் ஈடுபடுகின்றனர். எந்த தனி நபர் மீதான விமர்சனத்தையும் எப்படி எதிர் கொள்வது என்று ஜமாஅத்திற்கு தெரியும். யாருக்காகவும் வளையாத ஜமாஅத் தான் தவ்ஹீத் ஜமாஅத்.
வேலையற்ற வீணர்களின் விமர்சனங்களுக்கு தேவை ஏற்பட்டால் தலைமை விளக்கமளிக்கும். எனினும் யாரும் அவசரப்பட வேண்டாம். ஆசைப்பட வேண்டாம். பேச வேண்டிய மேட்டர் நிறைய இருக்கு. மதரஸாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு இவர்களின் ஆசிரியர்(?) நடவடிக்கை எடுக்கப்பட்ட விசயங்களும் நர்ஸ் விவகாரமும் தாயுடனும் சகோதரியுடனும் கூட பாலியல் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டேன் என்று இவர்களின் ஆய்வாளர்(?) பேசியது உட்பட இன்னும் பல விவகாரங்களும் பாக்கி இருக்கிறது.

அதை மாநிலத் தலைமை விரும்பினால் பேசுவார்கள். அது வரை பொறுத்திருப்போம்உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்து கிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சி னால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.(3:120)

Thursday, February 13, 2014

நடுநிலையா? நயவஞ்சகமா? (வீடியோ)

நடுநிலையா? நயவஞ்சகமா? (வீடியோ)