பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் நடத்திக்காட்டிய வாத்தியார்!
ம.ம.கட்சியின் மூத்த தலைவர் வத்தியாரின் பதவி வெறி ரொம்ப முற்றிப்போய் அந்தப் பதவி வெறி மிக உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த வாரம் பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவர் எந்த அளவிற்கு பதவி வெறி பிடித்து அலைகின்றார் என்பதைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது.
சமீபத்தில் வக்ஃபு வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில் நமது ஜால்ரா மன்னனின் பெயர் இடம் பெறவில்லை. இந்த அளவிற்கு அம்மாவிற்கு சிங்கி அடித்து, ஜிங்சா தட்டியபோதும், அ.தி.மு.க.வினரே ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு அம்மா புகழ் பாடிய போதும் தனக்கு அதில் இடம் வழங்கப்படவில்லையே என்று நொந்து கொண்ட நமது ஜால்ரா மன்னன் சீறி எழுந்தார்.