Showing posts with label பிஜே. Show all posts
Showing posts with label பிஜே. Show all posts

Wednesday, March 19, 2014

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் பரசுராமன் அவர்கள் நமது மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிக்கு கடந்த 12 ஆம் தேதி வருகை தந்தார். இது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவற்றிற்கு விளக்கம் தருவது எங்களின் கடமை என்ற அடிப்படையில் அது பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு இங்கே பதில் தருகிறோம்.

இது பற்றி வந்த முதாவது விமர்சனம், மாற்று மதத்தினர் பள்ளிவாசலுக்கு வரலாமா என்பதாகும். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம், அவ்வாறு நபி (ஸல்) காலத்தில் வந்துள்ளார்கள். மாற்று மதத்தினர் பள்ளியில் இருந்து குர்ஆன் ஒதப்படுவதை செவியேற்றுள்ளார்கள். மாற்று மதத்தினர் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாதவர்கள் இமாம் நின்று தொழ வைக்கும் இடத்திற்கு வரலாமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மாற்றுமதத்தினரும் இவ்வாறு தானே தூய்மையற்றவர்களாக இருந்து இருப்பார்கள். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம் என்ற அனுமதி ஹதீஸ்களில் உள்ளது, பள்ளியில் இந்த இடத்திற்கு வரலாம் இந்த இடத்திற்கு வரக்கூடாது என்ற எந்த தடையும் இல்லாத போது இமாம் இருக்கும் இடத்திற்கு வருவது சரியா? என்று கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது. இது பற்றி முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து, தவ்ஹீத் பள்ளிக்கு வருகை தந்த அதிமுகவின் வேட்பாளர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து, 'இதயதெய்வம்' என்று பேட்டி கொடுத்தார் என்ற ஒரு தவறான தகவலை சிலர் என்ன நடந்தது என்று தெரியாமல் பரப்பியுள்ளார்கள். தவ்ஹீத் பள்ளிக்கு ஆதரவு கேட்டு வந்த அதிமுகவின் வேட்பாளருக்கு, கூளை கும்பிடு போடாமல், அவருக்கு என்று தனி மரியாதை செய்யாமல், தரையில் அமர வைத்து, அந்த வேட்பாளருக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தக்தையும் வழங்கி அழைப்புப்பணி செய்யப்பட்டது. தவ்ஹீத் பள்ளியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, அதிமுகவின் வேட்பாளர் 'இதயதெய்வம்' போன்ற எந்த ஒரு வார்த்தையும் பயன்படுத்தவில்லை. ஒரு வேளை அது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தாலும், அது அவரின் கொள்கை, அவ்வாறு பேசுவது தவறு என்று சூட்டிக்காட்டியிருப்போம். தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் பேசிவிட்டு, பள்ளியை விட்டு வெளியே வந்த அதிமுக வேட்பாளரிடம், அதிரை நியூஸ் இணையதளத்தை சார்ந்தவர்கள் பேட்டி எடுக்கும் போது தான், 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டார். சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வரும் போது எடுக்கப்பட்ட பேட்டி வீடியோவில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சில நிர்வாகிகளும் தென்படுகிறார்கள். இது தான் நடந்த சம்பவம். இவ்வாறு தான் நடந்தது என்பதை அதிரை நியூஸ் இணையதளமும் சம்பந்தப்பட்ட ஆக்கத்தில் தெரிவித்துள்ளது.

கண்டதையும் தெய்வம் என்ற நினைக்கும் ஒருவர் எங்கும் அதை சொல்லுவார், தவ்ஹீத் ஜமாஅத்திடம் பேசும் போது இவ்வாறு சொன்னால் அதை நாம் கண்டிப்போம். அதிரையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிஜே அவர்கள் பேசும் போது, அந்த மேடையில் ஸ்டாலினும் வாக்கு கேட்டு வந்தார், அந்த மேடையில் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்த வேண்டும் திமுகவினர் எவ்வளவோ கெஞ்சினர், தவ்ஹீத் ஜமாஅத் அதை அனுமதிக்கவில்லை. வெடி சத்தம் கூட எங்களுக்கு கேட்கக்கூடாது, வெடி கூட வெடிக்கக்கூடாது என்று கட்டளை போட்டது தவ்ஹீத் ஜமாஅத். இதை திமுகவினர் ஏற்றுக்கொண்டனர்.

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்று கிளம்பிய தவ்ஹீத் (?) பேசிய தமுமுகவினரே, 'வாக்கள பெருமக்களே  வணக்கம்' என்று நோட்டிஸ் அடிக்கும் போது, கண்டதும் தெய்வம் என்று நம்பும் அந்த வேட்பாளரிடம் எதை எதிர்பார்க்க முடியும். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜூம்ஆ மேடையில் வந்து அதிமுக வேட்பாளர் உரையாற்றி, அதில் 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று சொன்னதை போன்று பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தவ்ஹீத் பள்ளிக்கு வெளியே அதிரை நியூஸ் தளத்தினர் பேட்டி எடுக்கும் போது சொன்ன இந்த வார்த்தையை, தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் பேசும் போது அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டதை போன்று கதையை உருவாக்கி பரப்புகிறார்கள். இவ்வாறு சொல்லக்கூடியவர்கள் இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவதூறு சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றால், அதற்காக எதையும் செய்வேன் என்ற கொள்கையில் உள்ளவர்களின் அவதூறு தான் இது.


அவதூறு சுமத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். அதிமுகவை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கிறது என்றால், அதிமுகவினர் கோவிலுக்கு சென்றால் கூட விமர்சனம்  செய்ய ஆட்கள் நிறைய உண்டு. அடுத்தாக, தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரிக்கிறது, திமுகவை சார்ந்த பேரூராட்சித் தலைவருடன் நடுத்தெருவில் தனி அமர்வு என்றும் சந்தேகத்தை ஒருவர் கிழப்புகிறார். நட்பு முறையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியின் கடையில் அமர்ந்து  பேசிக்கொண்டு இருந்த பேரூராட்சித் தலைவரையும் தவ்ஹீத் ஜமாஅத்தை ஏதே கள்ள ஒப்பந்தம் போடுவதை போல அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் அவதூறு செய்கிறார்கள். நடுத்தெருவை சார்ந்த பேருராட்சி தலைவர், நடுத்தெருவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவரின் கடையில் அமர்ந்து பேசுவது ஏதே புதிதாக நடக்கும் விஷயம் அல்ல. தனது மானம் போனாலும், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு பரப்புவோம் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு நல்ல புத்தி வர பிரத்திப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 6


இந்த விமர்சனத்தை முதலில் எடுத்து வைத்தவரின் தவ்ஹீத் (?) கொள்கையே கொடி கட்டி பறக்கிறது. கவிஞரை புகழ்ந்து எழுதும் போது. இறையருட்கவிமணி (இறையருள் பெரும் கவிஞர்) என்று எழுதிய தவ்பா செய்த தவ்ஹீத்வாதி தன்னையும் சீர் தூக்கி பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் நாளை நடப்பதை எல்லாம் அறிய கூடியவர் என்று வரக்கூடிய மௌலூது வரிகளின் இணைவைப்பு உள்ளது என்று பிரச்சாரம் செய்தவர்கள், இன்று கவிஞருக்கு இறையருள் வருகிறது என்று எழுதும் அளவுக்கு வந்து விட்டோமே என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஹஜ்க்கு சென்று வரக்கூடியரை 'ஹாஜி' என்றும், 'அல்ஹாஜ்' என்றும் எழுதுபவர்களை விமர்சனம் செய்தோமே! இன்று அதை நாமே செய்கிறோமே, அதுவும் அக்மார்க் தவ்ஹீத் நாங்கள் என்று சொல்லிக்கொண்டே இவ்வாறு செய்கிறோமே என்று சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். மௌலூது ஒதும் இமாம், இணைவைக்கும் இமாம் இவர்களை பின்பற்றி தொழ கூடாது என்று திருக்குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி சொன்னாமே, இன்று நாம் இணைவைக்கும் இமாம் மற்றும் மௌலூது ஓதும் இமாம் இவர்களை பின்பற்றி தொழுகிறோமே! என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வதற்காக சொல்லவில்லை. மாறாக, இது போன்ற வழிகேடுகளை விட்டு மீண்டு வாருங்கள் என்று காட்டவே இவ்வாறு சொல்லுகிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டு தான் தவ்ஹீத்வாதியாக இருக்க வேண்டும் என்பதல்ல, தவ்ஹீத் ஜமாஅத்தை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தவ்ஹீத் கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கலாம், உண்மையான கொள்கையை விட்டுவிடுவது மறுமையில் என்ன பலனை தரும்?? சிந்தித்து செயல்படுவது நல்லது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். 


அல்குர்ஆன் 3:8

புகைப்பட உதவி: அதிரை நியூஸ்

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?


Saturday, March 08, 2014

Saturday, January 18, 2014

உலகளாவிய அளவில் எழுச்சி பெறும் TNTJவின் அழைப்புப்பணி - உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்

உலகளாவிய அளவில் எழுச்சி பெறும் TNTJவின் அழைப்புப்பணி - உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்

Thursday, January 09, 2014

பி.ஜேவுடன் தான் விவாதிப்பேன் என்பது சரியா?

பி.ஜேவுடன் தான் விவாதிப்பேன் என்பது சரியா?

கேள்வி:
விவாதம் என்றால் ஓட்டம் எடுத்துக்  ண்டிருந்தவர்களில் சிலர் தற்போது  விவாத அறைகூவல் விடுவதும், நெருங்கிச் சென்றால் பீ.ஜே.யுடன் தான் விவாதிப்பேன்; வேறு எவரிடமும் விவாதிக்க  மாட்டேன் என்றும் கூறுவதும் அதிகரித்து வருகின்றனர். இது சரியா? இதற்குக் காரணம் என்ன?

பதில்:
பொதுவாக ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் உள்ள விவகாரம் பற்றிப் பேசுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட இரு மனிதர்கள் தான் விவாதிக்க வேண்டும் என்று கோருவது ஏற்கத்தக்கது. நியாயமானது. ஒரு மனிதன் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கும் போது நான் வரமாட்டேன் என் சார்பில் வேறு ஒருவரை அனுப்புகிறேன் என்று அவன் கூறினால் அதில் நியாயம் இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் ஒரு இயக்கம் கொண்டுள்ள கொள்கை, கோட்பாடுகள் பற்றி விவாதிப்பது என்றால் இன்னார் தான் வரவேண்டும் எனக்  கூறுவது  மடமையாகும். தனக்குத்தானே முரண்படுவதாகும்.

உதாரணமாக பிஜேயுடன் மட்டும்தான் விவாதிப்பேன். கொள்கையில் அவருடன் இணைந்துள்ள எந்த அறிஞருடனும் விவாதிக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அந்தக் கூற்றுக்குள்ளேயே அவருக்கான மறுப்பும் அடங்கியுள்ளது.

பீ.ஜே. அல்லாத எந்த அறிஞரும் எனக்குச் சமமானவர்கள் அல்லர். என்னை விட தரத்தில் தாழ்ந்தவர்கள். அவர்களுடன் விவாதிப்பது என் தகுதிக்கு குறைவானது என்பதுதான் இதன் அர்த்தம். 

பீ.ஜே.என்ற ஒரு மனிதனைத் தவிர மற்ற எவருக்கும் அறிவு இல்லை என்பதுதான் இதன் உள்ளர்த்தம்.

உன் தரத்தைவிட மேலே உள்ளவருடன் தான் நீ விவாதிப்பாயானால் பீ.ஜேயும் அவரது தரத்தைவிட மேலே உள்ளவரிடம் தான் விவாதிப்பார் என்று எடக்கு மடக்காக நாமும் பதில் சொல்ல முடியும். ஆனால் நாம் அவ்வாறு சொல்வதில்லை.

ஒரு கொள்கை சரியா தவறா என்பதுதான் பிரச்சனை. எங்கள் கொள்கையை நிலை நாட்ட யார் தகுதியானவர்கள் என்ற அக்கறை எங்களுக்குத்தான் இருக்கும். விவாதத்தில் தோல்வி ஏற்பட்டால் பீ.ஜே. உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த அனைவரையும் தான் பாதிக்கும். எனவே உங்களுடன் உங்களைவிட மேலானவர்களை அல்லது சமமானவர்களைத் தான் விவாதிக்க ஏற்பாடு செய்வோம். உங்கள் கர்வத்துக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்று நாம் பதில் சொல்கிறொம்.

பீஜேயைத் தவிர மற்றவர்கள் எனக்கு நிகர் இல்லை என்று கருதுவோரின் கர்வத்தையும் ஆணவத்தையும் நாம் அங்கீகரிக்க முடியாது. சில விஷயங்களில் பீஜேயை விடச் சிறப்பாக விவாதிப்பவர்கள் இந்த ஜமாஅத்தில் உள்ளனர். ஒருவன் கிறுக்குத்தனமாக கேட்கிறான் என்பதற்காக மரியாதைக்குரிய எங்கள் அறிஞர்கள் தகுதியற்றவர்கள் என்று ஒப்புக் கொள்ள முடியாது.

பீ.ஜே.என்ற நபர் பலரால் அறியப்பட்டவராக இருக்கிறார். தினசரி ஒரு ஊரிலே இருந்து ஒருவன் புறப்பட்டு என்னுடன் விவாதிக்கத் தயாரா என்று கேட்டால் தினசரி ஒருவருடன் பீஜே விவாதித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

அவர் கேட்பதன் நோக்கம் விவாதம் அல்ல. பி.ஜேயுடன் விவாதித்தேன் என்று பெருமையடிக்கவே இப்படி செய்கிறார் என்பதால் அந்த மடமைக்கு அடிபணியக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். ஆய்வும், அறிவும் இல்லாத பலரும் இப்படி இறங்குவதற்கு இதுதான் காரணம்.

விவாதத்துக்கு யார் அழைத்தாலும் அவருடன் விவாதிக்க யாரை அனுப்புவது என்று முடிவு செய்யும் அதிகாரம் ஜமாஅத்துக்குத் தான் உள்ளது. இவ்வாறு அறைகூவல் விடுவோரின் தகுதி, தரம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு அறிமுகம் இல்லாத அறிஞரை நாம் அனுப்பினால் தங்களுக்கு இதனால் பெயர் கிடைக்காது என்பதற்காக பின்வாங்கி விடுகின்றனர்.

ஒரு விவாதத்தில் பீஜே பங்கு பெற்றுத் தான் ஆக வேண்டும் என்று நிர்வாகக் குழு கருதி அந்த முடிவை எடுத்த போதெல்லாம் நான் விவாதத்தில் பங்கேற்றுள்ளேன்.

நாங்களே இதை சிறப்பாக விவாதிப்போம். பீஜேயைக் கண்மூடி நாங்கள் பின்பற்றுகிறோம் என்ற பொய்ப்பிரச்சாரத்தை இவ்விவாதத்தின் மூலம் உடைத்துக் காட்டும் அளவுக்கு நாங்கள் தெளிவில் இருக்கிறோம் என்று மற்ற அறிஞர்கள் உறுதிபடக் கூறினால் அதை நிர்வாகமும் சரி கண்டால் பீ.ஜே. இல்லாமல் விவாதம் நடக்கும்.

குறிப்பிட்ட இன்னார் கலந்து கொண்டால் தான் சரியாக இருக்கும் என்று நிர்வாகம் கருதி பீஜேயை அல்லது குறிப்பிட்ட ஒருவரை நியமித்தால் அப்போது அதை ஏற்றுக் கொள்வோம்.

ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதைப் பத்து பேர் கூட ஏற்கவில்லை என்றால் அவருடன் விவாதிக்க மூன்றாம் நிலையில் உள்ளவர்களைத் தான் ஜமாஅத் ஏற்பாடு செய்யும்.

ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லி நாடு முழுவதும் அது பரவி மக்கள் மததியிலே சந்தேகம் விளையும் அளவிற்கு இருந்தால் பெரிய விளம்பரத்துடனும் முழு பலத்துடனும் ஜமாஅத் விவாதத்தைச் சந்திக்கும்.

இதுபோல் உளறக்கூடியவர்களைச் சந்திக்க நேர்ந்தால் பி.ஜே கிடக்கிறார் விடுங்கள். நானும் அந்தக் கருத்தில்தான் இருக்கிறேன். என்னுடன் விவாதிக்கத் தயாரா என்று கேளுங்கள். இவர்கள் விவாத அறைகூவலின் லட்சணம் தெரிந்துவிடும்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்பதுதான் தனி மனிதனும் இயக்கமும் அரசாங்கமும் ஏற்று செயல்படுத்தி வரும் கோட்பாடாகும்.

இந்தக் காரியத்தை இந்தக் காரணத்தினால் இவன செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து முடிவு செய்து அந்தக் காரியத்தை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவு உள்ளவர்கள் இதுபோல் கிறுக்குத் தனமாக கோரிக்கை வைக்க மாட்டார்கள்.

நன்றி: ஆன்லைன் பிஜே

Tuesday, January 07, 2014

சிறை செல்வோம் உரிமையை வெல்வோம் (வீடியோ)

சிறை செல்வோம் உரிமையை வெல்வோம்
உரை :சகோ பி ஜெய்னுல் ஆபிதீன்

Saturday, December 14, 2013

எல்லாரையும் போராட்டத்திற்கு மட்டும் அழைப்பது சரியா? (வீடியோ)

எல்லாரையும் போராட்டத்திற்கு மட்டும் அழைப்பது சரியா? (வீடியோ)



Sunday, December 08, 2013

தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள் (வீடியோ)!

தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள் (வீடியோ)!

பாகம்-1


பாகம்-2

Sunday, November 24, 2013

பீஜேயின் தன்னிலை விளக்கம்

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். தனிப்பட்ட மனிதன் செய்யும் தொழில், வியாபாரம் குறித்து யாரும் கேள்விகேட்க உரிமை இல்லை. ஆனால் பொதுவாழ்வில் உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் பற்றி மக்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்று கருதும் போது விளக்கம் அளிக்கும் கடமை பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். இதனால் எனது தொழில் விரிவாக்கம் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது உடல்நிலை பாதிப்பு அடைந்து வெளியூர் பயணங்கள் செல்ல முடியாமல் போனதால் எனது நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கவும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் நானும் எனது பிள்ளைகளும் சேர்ந்து மூன்மார்ட் - moon mart என்ற பெயரில் 400 சதுர அடியில் மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றை மண்ணடியில் வாடகைக் கட்டடத்தில் துவக்கினோம். மக்களின் அமோக ஆதரவின் காரணமாக வாடிக்கையாளர் பெருகியதால் பக்கத்தில் உள்ள இடத்தையும் இணைத்து 700 சதுர அடியில் விரிவாக்கம் செய்தோம்.

இந்த நிறுவனத்துக்கு அதிக முதலீடு இல்லாததாலும் சிறிய கடை என்பதாலும் எந்த பித்னாவும் வரவில்லை. பித்னாவுக்கு வழியும் இல்லை.

மேலும் ரியல் எஸ்டேட் அல்லது பிற சேவை நிறுவனங்கள் நடத்தினால் ஜமாஅத்தின் பெயர் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கும். எங்கள் நிறுவனத்தில் அதற்கு இடமில்லை. வாடிக்கையாளர்கள் எங்கள் வியாபார நேர்மைக்காக மட்டுமே வாடிக்கையாளர்களாக உள்ளனர். தவ்ஹீத் சகோதார்களை விட மற்ற சகோதரர்களும், போரா ஜமாஅத்தினரும், முஸ்லிமல்லாத மக்களும் தான் அதிக அளவில் வாடிக்கையாளராக உள்ளனர். விலைகுறைவு, தரமான பொருட்கள் என்பதற்காகவே வாடிக்கையாளர்களாக உள்ளனர். எனவே ஜமாஅத் சகோதரர்களை தனது வியாபாரத்துக்கு நான் பயன்படுத்திக் கொண்டேன் என்று யாரும் கூற முடியவில்லை.

மண்ணடி பகுதியில் அதிக வாடிக்கையாளர்கள் குவியும் ஒரே நிறுவனமாக மூன் மார்ட் வளர்ந்துள்ளதால் எல்லா நேரமும் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டது. மக்களுக்கு ஏற்படும் வசதிக் குறைவைக் கவனத்தில் கொண்டு கடையை விரிவாக்கம் செய்ய நாங்கள் முயற்சித்து வந்தோம்.

அந்த முயற்சியின் விளைவாக டிசம்பர் முதல் தேதியில் இருந்து பிராட்வே சாலையில் 2400 சதுர அடிபரப்பளவு கொண்ட வாடகைக் கட்டடத்துக்கு moon mart மூன் மார்டை மாற்றுகிறோம்.

அதுபோல் 3500 சதுர அடியில் அமைந்த மற்றொரு வாடகைக் கட்டடத்தில் இன்னொரு நிறுவனத்தை இன்னும் மூன்று மாதங்களில் துவக்கவுள்ளோம்.

இப்போது பல கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பெரிய அளவில் தொழில் செய்வதற்கு என்னிடம் பொருளாதார வசதி இல்லை என்பது பல சகோதரர்களுக்குத் தெரியும்.

நான் எனது அறிமுகத்தைப் பயன்படுத்தி ஜமாஅத் சகோதரர்களிடத்தில் கடன் வாங்கி இருப்பேனோ அல்லது பங்குதாரர்களைச் சேர்த்து தொழிலை விரிவாக்கி இருப்பேனோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

எனது தொழில் விரிவாக்கத்துக்காக நான் ஜமாஅத் சகோதார்களிடமோ மற்றவர்களிடமோ எந்தக் கடனும் வாங்கவில்லை. யாரையும் பங்குதாரராகவும் சேர்க்கவில்லை. கடன் வாங்குவதையும் பங்கு சேர்வதையும் நான் தவிர்ப்பதுடன் அதையே ஆலோசனையாக மற்றவர்களுக்கும் கூறிவருகிறேன். எனவே இந்த ஜமாஅத்தின் அறிமுகத்தை எனது தொழில் வளர்ச்சிக்கு நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியானால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதியை முறைகேடாக நான் பயன்படுத்தி இருக்கலாமோ? அல்லது ஜமாஅத் நிதியில் கடன் பெற்று இருக்கலாமோ என்ற சந்தேகம் வரலாம். ஜமாஅத்தின் நிர்வாக நடைமுறையை அறிந்தவர்கள் இப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இப்படி நினைக்கத் தோன்றலாம்.

நம்முடைய ஜமாஅத்தைப் பொருத்தவரை தலைவர் அல்லது பொதுச் செலாளர் நிதியைக் கையாள முடியாது. நிர்வாகக் குழுவின் ஆலோசனைப் படி பொருளாளர் தான் கையாள முடியும்.

நிர்வாகச் செலவுகளுக்குக் கூட 5000 ரூபாய்தான் தலைவர், பொதுச் செயலாளர் செலவிட முடியும். 25 ஆயிரம் வரை செலவிடுவது என்றால் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரும் ஆலோசித்துத் தான் செலவிட முடியும். அதற்கு மேல் செலவிடுவது என்றால் நிர்வாக குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்ற பின்பே செலவிட முடியும்.

இப்படிப்பட்ட நிர்வாகம் உள்ள ஜமாஅத்தில் நானோ மற்ற எந்த நிர்வாகியோ கடனாகக் கூட பணத்தை எடுக்க முடியாது.

எனது தொழில் விரிவாக்கத்துக்கு எந்த தனிநபரின் உதவியையும் நான் நாடவில்லை. எந்தச் செலவந்தரிடமும் கடனும் பெறவில்லை. பார்ட்னராகவும் சேர்க்கவில்லை. ஜமாஅத்தில் இருந்து கடனாகவும் பெறவில்லை.

யாருக்கும் தெரியாமல் ஜமாஅத் பணத்தை எடுத்துக் கொள்ளவும் இல்லை. எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஜமாஅத்தின் பணம் என் கட்டுப்பாட்டிலோ கைவசத்திலோ இல்லை. ஜமாஅத் பணத்தை அமானிதமாக சில நேரம் என்னிடம் கொடுத்து வைப்பார்கள். தேவைப்படும் போது வாங்கிக் கொள்வார்கள்.

18 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு ஏக்கர் நிலம் ஒன்றை எனது சொந்த ஊருக்கு அருகில் வாங்கிப் போட்டு இருந்தேன். தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலை போடப்பட்டு சாலையில் அந்த இடம் வருவதால் அந்த இடத்தின்மதிப்பு பன்மடங்கு உயர்ந்து அல்லாஹ் பரக்கத் செய்துள்ளான்..

இஸ்மாயீல் சலபி என்பவர் எனது சொத்து குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார் அதற்கு மிக விரிவாக நான் பதில் அளித்தேன். அந்தப் பதிலில் அந்த இடத்தைப் பற்றி முன்னரும் நான் குறிப்பிட்டுள்ளேன். அந்த ஆக்கத்தை வாசிக்க http://onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/salafi_marupuku_marupu/ என்ற இணைப்பைப் பார்க்கவும்.

எனது ஒரே சொத்தான அந்த நிலத்தை உடனடியாக விற்று கடையை விரிவாக்கம் செய்ய அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்.

15 நாட்களுக்கு முன்னர் அந்தச் சொத்தை தொண்டி தவ்ஹீத் சகோதரர்கள் வழியாக விற்றேன். தொண்டியில் இது குறித்து விசாரித்துக் கொள்ளலாம்.

அந்தப் பணத்தையும் தற்போது நடத்திவரும் மூன் மார்ட் நிறுவனத்தின் சரக்குகளையும் சேர்த்துத் தான் தற்போது எனது நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளேன்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் இயக்கத்தை தமது ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சந்தேகப்படும் வகையில் நடக்கக் கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை தருகிறேன்.


 நன்றி: ஆன்லைன்பிஜே

Sunday, August 11, 2013

நோன்பு தரும் படிப்பினை - நோன்புப் பெருநாள் உரை - 2013

நோன்பு தரும் படிப்பினை - நோன்புப் பெருநாள் உரை - 2013

Sunday, March 03, 2013

சவூதியில் பிஜே! (வீடியோ)


பிஜே சவூதி அரேபியாவிற்குள் நுழைய முடியாது. பிஜேவிற்கு சவூதி அரசாங்கம் சவூதிக்குள் நுழைய தடை விதித்துள்ளது என்று அரபு நாட்டு அடிமைகள் பலர் சொல்லி திரிந்தனர்.

பிஜே அவர்கள் உம்ரா செய்ய தான் சவூதி சென்றார். எனவே, அவரது பயணம் பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை. சவூதி அரேபியாவில் தவ்ஹீத் ஜமாஅத் எந்தவித தடையுமின்றி செயல்பட்டு வருகிறது. சகோதரர் பிஜே மற்றும் அல்தாஃபி, தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு சவூதி மண்டல நிர்வாகிகளை சந்தித்தனர். மேலும், அல்கஸீம் மண்டலத்தில் சொற்பொழிவு ஆற்றினார்கள்.





பிஜே சவூதிக்குள் நுழைய முடியாது என்று சொல்லித்திரிந்த அயோக்கர்களின் முகத்தில் தார் பூசப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

பிஜே அல்கஸீம் மண்டலத்தில் ஆற்றிய உரையின் வீடியோ:

தலைப்பு: இஸ்லாம் நமக்கு கிடைத்த பாக்கியம்


Friday, February 08, 2013

புதிய தலைமுறை அக்னி பரிட்சை நிகழ்ச்சியில் சகோ. பிஜே பேட்டி!


புதிய தலைமுறை அக்னி பரிட்சை நிகழ்ச்சியில் சகோ. பிஜே அவர்கள் கலந்து கொண்டு, கேட்டப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்

Saturday, October 20, 2012

YouTube க்கு மாற்றாக ஒரு வீடியோ தளம்! - ஆன்லைன் பிஜே விடியோ!!

நபி (ஸல்) அவர்களை பற்றி அவதூறாக  வெளியிடப்பட்ட வீடியோவை கருத்து சுதந்திரம் என்று கூறி, அதை வீடியோவை நீக்க மறுத்து, தனது அயோக்கித்தனத்தை காட்டியது YouTube.

இதனால் தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்களின் விடியோக்களை முற்றிலுமாக YouTube லிருந்து நீக்கி, YouTube க்கு சரியாக படம் கற்பிக்க வேண்டும் என்ற முடிவை பிஜே அவர்கள் அறிவித்தார். அதன்படி, தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்களின் விடியோக்கள் YouTube லிருந்து அகற்றப்பட்டு வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.


YouTube க்கு மாற்றாக நமக்கு என்று ஒரு விடியோ இணையதளத்தை உருவாக்க தவ்ஹீத் ஜமாஅத் முயன்றது. அது தளம் இப்போது செயல்பட துவங்கிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.