Showing posts with label சமூக கொடுமைகள். Show all posts
Showing posts with label சமூக கொடுமைகள். Show all posts
Tuesday, December 10, 2013
Sunday, September 09, 2012
பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற தமுமுக - மம கட்சியினர்! தடுத்து நிறுத்திய காவல்துறை!!
Sunday, September 09, 2012
No comments
சமுதாய மக்களின் பணத்தில் வாங்கிய ஆம்புலன்ஸ், சமுதாய சொத்தை ஆக்கிரமிக்க அழகாக பயன்படுகிறது. |
தேர்தலில் நிற்க மாட்டோம் என்று மக்களிடம் சத்தியம் செய்த தமுமுகவினர், தவ்ஹீத் எங்களுக்கு தடை என்று அரசியலுக்கு போய், சாக்கடையை தூய்மைப்படுத்த போகிறோம் என்று சாக்கடையாகவே மாறிப்போன தமுமுகவினர், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அராஜகம் என்று தங்களின் தூய்மை முகத்தை காட்டி வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டிணம் செக்கடிபள்ளிக்கு சொந்தமான செக்கடிமேட்டில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, காவல்துறையால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாயத்து தேர்தலில் சங்கம் நிறுத்திய வேட்பாளர்களை எங்கள் வேட்பாளர் என்று படம்காட்டி கேவலப்பட்டது. இவர்கள் நிறுத்திய வேட்பாளர்கள் பத்து ஓட்டுகள்கூட வாங்காமல், இவர்களின் உண்மை பலத்தை காட்டியது என கேவலங்கள் பல வந்தாலும், மீண்டும் கேவலப்பட வேண்டும் என்ற ஆசையில் இப்போது வசமாக சிக்கியருக்கிறார்கள்.
இவர்கள் தமிழகம் முழுவதும் இப்போது செய்யும் ஒரே மகத்தான (?) சேவை. ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்து படம் காட்டுவது தான். கருணாநிதியிடம் இரண்டு ஆம்புலன்சை வாங்கிவிட்டு, பின்னர் இவர்களுக்கு சீட்டு கொடுக்காத போது அவரை துரோகி என்றார்கள் (ஆம்புலன்ஸ் வாங்கும் போது அவர் தியாகி). அதிரையிலும் இவர்கள் படம் காட்ட ஒரு ஆம்புலன்சை வாங்கி வைத்துள்ளார்கள்.
இந்த ஆம்புலன்சை நிறுத்தி வைக்க வேண்டும் எங்களுக்கு செக்கடிமேட்டில் இடம் வேண்டும் என்று இவர்கள் செக்கடிப்பள்ளி நிர்வாகத்தை அணுகியுள்ளார்கள். இதற்கு பள்ளி நிர்வாகிகள், அரசியல் கட்சியாக உள்ள உங்களுக்கு இடம் தந்தால், ஒவ்வோரு இயக்கத்தவர்களும் இடம் கேட்பார்கள் என்று இவர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டார்கள். இவர்கள் ஆம்புலன்சை நிறுத்த ஷிஃபா மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்ற இடங்கள் இருக்கும் போது, இப்படி தெருவுக்குள் தங்களின் ஆம்புலன்சை நிறுத்தி படம் காட்ட வேண்டும், ஆம்புலன்சுக்கு இடம் என்று சொல்லி வாங்கி, பின்னர் அதை கட்சி அலுவலகமாக பயன்படுத்த வேண்டும் என்ற இவர்களின் உண்மை நோக்கத்தை செக்கடிப்பள்ளி நிர்வாகிகள் கட்சிதமாக புரிந்துகொண்டார்கள்.
பள்ளி நிர்வாகிகள் அனுமதி மறுத்தவுடன், இவர்கள் கட்சியின் உண்மை அராஜகத்தை காட்டும் முகமாக, பள்ளி நிர்வாகிகளின் நல்ல முடிவை ஏற்காமல், நேற்று இவர்கள் செக்கடிமேட்டில் இவர்களின் ஆம்புலன்சை நிறுத்த இரும்பு கெட்டகை போட ஆரம்பித்தனர். தகவல் கிடைத்தவுடன் செக்கடிப்பள்ளி நிர்வாகிகள் காவல்துறையை அணுகிணார்கள். காவல்துறை வந்து இவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தடை போட்டு, இவர்களை விரட்டி அடித்தது. அல்ஹம்துலில்லாஹ்.
ஏனப்பா பள்ளிவாசல் சொத்தை அபகரிக்கிறீர்கள் என்று இவர்களிடம் கேட்டபோது, அது புறம்போக்கு நிலம், அதான் ஆட்டையை போட பார்க்கிறோம் என்றார்களாம் இந்த லஞ்சம் வாங்காத (?) ஆக்கிரமிப்பாளர்கள்.
என்றைக்கு இவர்கள் அரசியலை சுத்தம் செய்ய புறப்பட்டார்களோ!, அன்று முதல் ஆக்கிரமிப்பும் அராஜகமும் இவர்களின் அன்றாட வேலையாக ஆகிவிட்டது. சமீபத்தில் உணர்வு அலுவலகத்தை, தவ்ஹீத் ஜமாஅத்தினர் தர்பியா நிகழச்சிக்காக சென்று இருந்த போது, பூட்டியிருந்த உணர்வு அலுவலகத்தை உடைத்து, உள்ளே புகுந்து மோடியின் சகோதரன் ஜால்ரா மன்னர் எம்எல்ஏ அலுவலகம் என்று எழுதி தங்களின் ஆக்கிரமிப்பு செயலை செய்தார்கள். பின்னர், காவல்துறை வந்து அரை மணி நேரத்தில் உணர்வு அலுவலகத்தின் சாவி எங்களுக்கு வரவில்லையென்றால், டங்குவார் கிழிந்துவிடும் என்றவுடன், இந்த வீர பரம்பறை கூட்டம் சாவியை ஒப்படைத்துவிட்டு ஓட்டம் எடுத்தது.
வக்ப் வாரியத்தில் ஆட்டை போட்டது போதாது என்று, இப்போது அதிராம்பட்டிணத்தில் பட்ட பகலில் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டு மூக்குடைப்பட்டுள்ளனர். பிஜேபியுடன் சேர்ந்து கோயில் மீட்பு போராட்டம் நடத்திய இவர்களிடம் முஸ்லிம் விரோத செயலை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும், ஹாமீத் பக்ரியை தூக்கி விசிய நேரத்தில்,தவ்ஹீத் ஜமாத்துடன் ஒன்றிணைந்து இருந்த தமுமுகவை விட்டு ஓட்டம் எடுத்துவிட்டு, இப்போது இந்த தமுமுக வில் சரணாகதி அடைந்துயிருக்கும் அக்குமார்க் (?) தவ்ஹீத்வாதிகளும் சிந்திக்க வேண்டும்.