Showing posts with label திடல் தொழுகை. Show all posts
Showing posts with label திடல் தொழுகை. Show all posts

Monday, October 06, 2014

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை 2014

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை 2014


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபி வழி பெருநாள் திடல்தொழுகை இன்று (06.10.14) காலை 7.00மணிக்கு E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் நடைபெற்றது  இதில் அதிகமான மக்கள் கலந்துக்கொண்டார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க பிரச்சாரகர் மஹ்தும் தொழுகையை நடத்தினார். முன்னதாக தொழுகையில் பின்பற்றக்கூடிய கடமை குறித்து விளக்கி கூறினார்.
அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டனர். திடலில் பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை ஈசிஆர் சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதி முழுவதும் வாகன நெருக்கடி இருந்தது.அல்ஹம்துலில்லாஹ்



















Saturday, August 10, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழி திடல் தொழுகையில் மக்கள் வெள்ளம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை இன்று (9.8.13) காலை 7.30 மணிக்கு E C R பெட்ரேல் பங்க் எதிரே உள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி ரமலானில் பெற வேண்டிய படிப்பினைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் நேற்று பெய்த மழையையும் பொருட்படுத்தாமல்  அதிகமான மக்கள் தொழுகையில் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பெருநாள் திடல் வசூல் ரூ 40260









Friday, August 09, 2013

Saturday, October 27, 2012

அதிரையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை! மக்கள் வெள்ளத்தில் மிதந்த மைதானம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இன்று (27.10.2012) ECR ரோட்டில் அமைத்துள்ள NMS ஜெகபர் அலி மைதானத்தில் நடைபெற்றது. 

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நபிவழியை நிலைநாட்ட ஆண்களும் பெண்களும் திரளாக  கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ்களை பின்பற்றுவதாக சொல்லி கொள்ளும் போலி சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களின் தவறான விளக்கங்களை மக்கள் கேட்பது இல்லை என்று இது காட்டுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள்.









Wednesday, October 24, 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நடத்தும் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நடத்தும் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இந்த வருட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை வழமை போல தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள NMS  ஜெகபர் அலி மைதானத்தில் 27.10.12 சனிக்கிழமை  காலை 7.30 மணியளவில்  நடைபெறும்

மேலும் இப்போது மழைகாலமாக இருப்பதால் அன்றைய தினம் மழையாக இருந்தாலோ அல்லது தண்ணீர் தேங்கி நின்றாலோ லாவண்யா திருமண மண்டபத்தில் தொழுகை நடைபெறும்

அதுசமயம் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி  அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்

Monday, August 20, 2012

அதிரையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை! நபிவழியை நடைமுறைப்படுத்த அணி திரண்ட மக்கள் கூட்டம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இன்று (20.08.2012) ECR ரோட்டில் அமைத்துள்ள NMS ஜெகபர் அலி மைதானத்தில் நடைபெற்றது. 

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நபிவழியை நிலைநாட்ட ஆண்களும் பெண்களும் கடந்த காலங்களை விட மிக அதிகமாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள். (பொருநாள் உரை விரைவில் வெளியிடப்படும்)







Friday, November 19, 2010

அதிரையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' அருகிலுள்ள திடலில் நபிவழிப்படி ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.



இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள்.

Sunday, September 19, 2010

அதிரையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

கடந்த 10.09.2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரை ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளி அருகில் உள்ள திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் உள்பட திரளாக மக்கள் கலந்துகொண்டனர்.

Saturday, December 12, 2009

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.







இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழகை நடத்தி சொற்பொழிவுயாற்றினார்கள்.