விவாதத்திலிருந்து முஜாஹித் தப்பி ஓடியதன் பின்னணி என்ன? (வீடியோ )
திருக்குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்படுமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாதிக்க அறைகூவல்விட்ட முஜாஹித் என்பவர் இன்று 25.12.13 தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடந்த விவாத ஒப்பந்தத்தில் பின்வாங்கி ஓட்டமெடுத்துவிட்டார்.
தன்னோடு விவாதிக்க பீஜேதான் வர வேண்டும். இல்லாவிட்டால் விவாதிக்க வரமாட்டேன்.
விவாதத்தில் பீஜே வாதங்களை எடுத்து வைக்கத் தேவையில்லை. அவர் வந்து விவாதம் நடக்கும் அரங்கில் அமர்ந்து இருந்தாலே போதும் என்றும் நிபந்தனை விதித்தார்.
என்னோடு விவாதிக்க பீஜே வராவிட்டால் பீஜே அல்லாத மற்ற தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்களோடு விவாதிக்க நான் வரமாட்டேன். பீஜே என்னோடு விவாதிக்க வராவிட்டால் எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு மட்டும்தான் நான் விவாதிப்பேன். அந்த விவாதத்தில் எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிற தாயீக்கள் கலந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிற தாயீக்கள் கலந்து கொண்டால் அவர்களோடும் விவாதிக்க வரமாட்டேன் என்று கூறி அந்தர்பல்டி அடித்து விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓடிவிட்டார்.
பீஜேயோடுதான் விவாதிப்பேன் என்றும், எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு மட்டும்தான் தான் விவாதிப்பேன் என்றும் அவர் சொன்ன வரட்டு வாதங்கள் அனைத்திற்கும் விவாத ஒப்பந்தத்தில் பதிலளிக்கப்பட்டது. நாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாததால்தான் இந்த தப்பியோடும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதை வீடியோவை பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.
சம்பந்தமில்லாத விஷயங்களை நிபந்தனைகளாகப்போட்டு விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓட்டமெடுத்துவிட்டு தவ்ஹீத் ஜமாஅத் பின்வாங்கிவிட்டதாக தற்போது பொய் பரப்பி வருவதாக அறிகிறோம்.
மண்ணடியில் மூன்று நாள் இருப்பதாக அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. வருடத்தின் 365 நாட்களும் நாங்கள் மண்ணடியில்தான் இருக்கின்றோம். விவாத ஒப்பந்தத்தில் தக்க காரணத்தோடு நாம் விளக்கியதை ஒப்புக்கொண்டு நம்மோடு விவாதிக்க அவருக்கு தைரியம் இருந்தால் மறுபடியும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கின்றோம். வரக்கூடிய 26.01.14 தேதிக்குள் அவர் தன்னை திருத்திக் கொண்டு மறுபடியும் நம்மை கடிதம் மூலம் தொடர்பு கொண்டால் அது குறித்து பரிசீலிக்க தயார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓட்டமெடுத்தது யார்? விவாத ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை விவாத ஒப்பந்த வீடியோவை பார்த்தால் அறிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் முழுமையான வீடியோ பார்க்க...