Monday, September 07, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?


ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?Saturday, July 18, 2015

நபிவழி நோன்பு பெருநாள் திடல்தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைகிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை பிலால் நகர் பெட்ரோல் பங்க் எதிரே கிரானி மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்ற வருடத்தை விட ஆதிகமானவர்கள் கலந்துக்கொண்டு நபிவழி அடிப்படையில் தொழுகையை நிறைவேற்றினர் வருட வருடம் திடல் தொழுகைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது இனிவரும் காலங்களில் அதிரை கிளையின் சார்பாக இரண்டு இடங்களில் பெருநாள் திடல் தொழுகை நடத்துவதற்கு கிளை நிர்வாகம் முயற்சித்துவருகிறது.

திடல் தொழுகை  வசூல்  48720

நோன்பு பெருநாள் உரை P J (18.7.2015)

பெருநாள் உரை (வீடியோ)

Monday, July 13, 2015

Wednesday, July 08, 2015

Sunday, July 05, 2015

உங்களின் ஃபித்ராவை (நோன்புப் பெருநாள் தர்மம்) வாரி வழங்கிடுவீர்

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை ஒவ்வோரு வருடமும் ஃபித்ரா வசூல் செய்து ஃபித்ராவை பெற தகுதியானவர்களை வீடு தேடி சென்று வினியோகம் செய்து வருகிறது. பெருநாளில் உணவு சமைப்பதற்கான பொருள்கள் உள்பட இறைச்சி வாங்குவதற்கு பணமும் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த காலங்களில் சுமார் 600 எழை குடும்பங்கள் பயன்பெற்றன.

நமது ஊரில் வசதி படைத்தவர்கள் சரியான முறையில் ஃபித்ராவை வழங்கினால், நமது ஊரில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களும் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.

எனவே, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நமது அதிரை சகோதரர்கள் உங்களின் ஃபித்ராவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளைக்கு அனுப்பி தாருங்கள். உங்களின் ஃபித்ராவை அனுப்ப கீழ்காணும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்:

ஒரு நபருக்கு ஃபித்ரா தொகையாக ரூபாய் 100 (நூறு) நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.தலைவர்
பீர் முஹம்மத் (+91-80153-79211)

செயலாளர்:
பக்கீர் முகைதீன்  (+91 95008 21430)

பொருளாளர்:
A.K. மீரா முகைதீன் (+91 99448 24510)

துணைத்தலைவர்
அப்துல் ஜப்பார் (+91-96295-33887)குறிப்பு: உங்களின் பகுதிகளில் வசிக்கும் ஃபித்ராவை பெற தகுதியான வீடுகள் பற்றிய விபரங்களையும் மேலே உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தலாம். 

ஃபித்ராவின் சட்டங்களை அறிய இங்கே சொடுக்கவும்.


Monday, June 22, 2015

Friday, June 19, 2015

சஹர் பாங்கு நபிவழியை நடைமுறைப்படுத்துங்கள்!

சஹர் பாங்கு நபிவழியை நடைமுறைப்படுத்துங்கள்!
சஹர் பாங்கு நபிமொழியை நிராகரிக்காதீர்!

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.
பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
‘பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), 
நூல்: புகாரி 621

‘பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: புகாரி 5299,7247 முஸ்லிம், நஸயீ

மேற்கண்ட நபிமொழியை நடைமுறைப்படுத்தும் முகமாக அனைத்தப் பள்ளிவாசல்களிலும் சஹர் நேரத்தில் பாங்கு சொல்லி நபிவழியை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அறிவிப்பு:
கடந்த வருடங்களில் அதிரை ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் ஸஹருக்காக பாங்கு சொல்லப்பட்டது போல், இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் ஸஹருக்கு பாங்கு சொல்லப்படும். 
என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

Wednesday, June 17, 2015

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு

ரமலான் மாதம் ஆரம்பம்!

பிறைதேட வேண்டிய நாளான இன்று 17.06.15 புதன் கிழமை மஹரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டதாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 18.06.15 வியாழக்கிழமை மஹரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

Tuesday, June 16, 2015

ஹாஜா நகரில் நடைபெற்ற பெண்கள் பயான்

இன்று 16.6.2015 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளை சார்பாக ஹாஜா நகரில் சகோதரர் அப்பாஸ் வீட்டில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 20க்கும் அதிகமான ஆண்களும் 50க்கும் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்Monday, June 15, 2015

Friday, June 12, 2015

Friday, June 05, 2015

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக கடற்கரை தெருவை சார்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ரூ 6500  வழங்கினார்கள்
Saturday, May 30, 2015

அதிரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி


பிறையை கண்களால் பார்ப்பது தான் நபிவழியா?

நாளின் துவக்கம் எது? மக்ரிபா? சுபுஹா?

உலகின் ஏதாவது ஓரிடத்தில் பார்க்கப்படும் பிறை அனைத்துப்பகுதிகளுக்கும் பொருந்துமா?

ஓரிடத்தில் பார்க்கப்படும் பிறை எவ்வளவு பகுதியை கட்டுப்படுத்தும்?

அரபா நோன்பை எதன் அடிப்படையில் நோற்பது?

இன்னும் இது போன்று பிறை குறித்த பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில்களை நேரில் கேட்டு தெளிவுபெற அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளை


துபையில் நடைபெற்ற அதிரை (TNTJ) அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம் துபை தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் 29-5-2015 வெள்ளிகிழமை மதியம் 2:00 மணியளவில் அல்லாஹ்வின் கிருபையால் அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. 

இதில் அபுதாபி சார்ஜா அஜ்மான் போன்ற பகுதிகளிலிருந்து அதிரை சகோதர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிரையில் ஏகத்துவ பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் அல் ஹிக்மா பெண்கள் மதரசா பற்றியும் ஆலோசித்து பல தீர்மானங்களோடு முடிவு செய்யப்பட்டு இறுதியாக அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தர்பியா நிகழ்த்தி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!

Monday, May 18, 2015

Sunday, May 17, 2015

அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியில் பரிசளிப்பு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையின் சார்பாக நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு தேர்வு எழுதிய மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று (17.5.2015) ஞாயிற்றுகிழமை மாலை 4.00 மணிக்கு புதுமனைத்தெருவில் உள்ள அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியில் நடைபெறும் இதில் மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் ஆலிமாக்களின் மார்க்க சொற்பொழிவும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி உங்கள் வீட்டு பெண்களை கலந்துக்கொள்ள சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Thursday, May 14, 2015

Monday, May 11, 2015

Thursday, May 07, 2015

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி வகுப்பு பெண்களுக்கு அல்-ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரில் நடைபெற்றுவருகிறது இன்று அல்-ஹிக்மா பெண்கள் கல்லூரிக்கு வருகை தந்த மௌலவி எம்.ஐ சுலைமான் அவர்கள் மாலை கோடைக்கால பயிற்சி வகுப்பிற்கு வருகை தந்த மாணவிகளுக்கு அல்லாஹ்வின் வஹி மட்டுமே மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்Tuesday, May 05, 2015

[தேதி மாற்றப்பட்டுள்ளது] நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சமாதி வணங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்ஷா அல்லாஹ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சமாதி வணங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,பேய் பிசாசு, சூனியம் என்ற பெயரில் பரிகாரம் செய்வதாகக் கூறி அப்பாவிகளிடம் மோசடியாக பணம் பறிக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகள் மீதும்,புரோகிதத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கு மையவாடியில் இடம் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் போட்டு மனித உரிமைக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீதும்,பொது மேடைகளில் கொல்லுவேன், தலையை வெட்டுவேன், சொத்துக்களை சூறையாடுவேன் என்று மிரட்டல் விடும் ரவுடிகள் மீதும்,வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும்,

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: மே 14, வியாழக் கிழமை
இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை,
நேரம்: மாலை 4 மணி

கண்டன உரை: ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி

உத்தம நபியை இழிவுபடுத்த விட மாட்டோம் என்பதை உணர்த்திட…
பத்ர் களத்தை கண்ட சமுதாயமே அலைகடலென ஆர்ப்பரித்து குடும்பத்துடன் வா என அழைக்கிறது…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
சென்னை மாவட்டம்.
9566137765, 7708067163.

Monday, May 04, 2015

சிற்பபாக நடைபெறும் கோடைகால பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளை சார்பாக கோடைகால பயிற்சி பகுப்பு இந்த வருடம் 2.5.2015 சனிக்கிழமை முதல் துவங்கியது ஆண்களுக்கு தவ்ஹீத் பள்ளியிலும் பெண்களுக்கு மதியம் 2.30 மணி முதல் 6.00 மணிவரை புதுமனைத்தெருவில் உள்ள தவ்ஹீத் மதரஸா அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியிலும் நடைபெறுகிறது பெண்களுக்கான வகுப்புகளை மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் ஆலிமாக்கள் பாடம் நடத்துகிறார்கள் இதில் சென்ற வருடங்களை விட அதிகமான மாணவிகள் பயிற்சி வகுப்பிற்கு வருகிறார்கள்

Sunday, May 03, 2015

இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை பட்டுக்கோட்டை ஐ கேர் ஆப்டிக்கல்ஸ் இனைத்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் (3.5.2015 ) இன்று நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் காலை 10.00 முதல் மதியம் 2.00 வரை நடைபெற்றது. 150க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு இலவச கண் பரிசோதனை செய்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்