Showing posts with label நோன்பு .ரமளான். Show all posts
Showing posts with label நோன்பு .ரமளான். Show all posts

Thursday, July 04, 2013

பிறை பார்பதே நபி வழி (வீடியோ)

உலகப் பிறை சாத்தியமா?
பிறையை பார்க்காமல் கணிப்பதற்கு ஆதாரம் உண்டா?
 பிறையில் குழப்பம் ஏன்? பிறை பார்ப்பதில் நபி வழி எது?
 இதுபோன்ற இன்னும் பல சந்தேகங்களுக்கு சகோதரா் P J  அவர்களின் பதிலை பாருங்கள்


PIRAI PARTHAL from Adiraitntj on Vimeo.

1909. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீ, பைஹகீ, தாரகுத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான், அஹ்மத


ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: அபூதாவூத்


உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வௌ;ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வௌ;ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்” என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்” என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்” என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம்

1013. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' என்னம் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம். 
இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.

ஆறு நாட்களும் சூரியனையோ அது உதிப்பதையோ மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழதிருக்க முடியும்.
மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான். முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.
சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் அல்லாஹ் தன் திருமறையில்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது) (2: 185)

நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

Wednesday, July 03, 2013

நோன்பின் சட்டங்கள் 6 (வீடியோ )

நோன்பின் சட்டங்கள் 6


கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

”ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1982



இரவு தொழுகை எப்படி தொழுவது ?
இரவு தொழுகையின் பெயர் என்ன ?
தராவீஹ் என்று ஒரு தொழுகை உண்டா ?
இரவு தொழுகை எத்தனை ரக்காத் ?

Monday, July 01, 2013

நோன்பின் சட்டங்கள் -5(வீடியோ )

நோன்பின் சட்டங்கள் 5



குளிப்பு கடமையான நிலையில் நோம்பு வைக்கலாமா ?
குளிக்கலாமா ?
பல் விளக்கலாமா ?
குளிக்கும் போது சோப்பு போடலாமா ?
நறுமணம் பூசலாமா?
சமைக்கும் கறிக்கு உப்பு பார்க்கலாமா ?
வாந்தி எடுத்தால் நோம்பு முறியுமா ?
இரத்தம் வெளியேறினால் நோம்பு முறியுமா ?

Friday, June 28, 2013

ரமலானின் சட்டங்கள்-4 (வீடியோ)

நோன்பை ஆரம்பிக்கும் போது நியத் என்று சில வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்களா? நோன்பை முறிக்கின்ற காரியங்கள் எவை இன்னும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இந்த வீடியோவை பாருங்கள்.

Tuesday, June 25, 2013

நோன்பின் சட்டங்கள்-3 (வீடியோ)

நோன்பின் சட்டங்கள்-3 (வீடியோ)

நம்மை நோக்கி நன்மைகளை கொள்ளை அடிக்கும் மாதமான ரமலான் மாதம் வந்து கொண்டு இருக்கிறது .அதை வரவேற்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் தினம் சிறிது நேரம் நோன்பின் சட்டங்களை சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பேசுவார்கள் அது நமது தளத்தில் தினம் வெளியிடப்படும் .

சகோதரர்கள் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் எனில் நமது தளத்தில் கேட்கலாம் .சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பதில் அளிப்பார்கள்.

Sunday, June 23, 2013

நோன்பின் சட்டங்கள்-2 (வீடியோ)


நோன்பின் சட்டங்கள்-2 (வீடியோ)

நம்மை நோக்கி நன்மைகளை கொள்ளை அடிக்கும் மாதமான ரமலான் மாதம் வந்து கொண்டு இருக்கிறது .அதை வரவேற்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் தினம் சிறிது நேரம் நோன்பின் சட்டங்களை சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பேசுவார்கள் அது நமது தளத்தில் தினம் வெளியிடப்படும் .

சகோதரர்கள் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் எனில் நமது தளத்தில் கேட்கலாம் .சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பதில் அளிப்பார்கள்.

Saturday, June 22, 2013

நோன்பின் சட்டங்கள்-1 (வீடியோ)

நோன்பின் சட்டங்கள்-1 (வீடியோ)

நம்மை நோக்கி நன்மைகளை கொள்ளை அடிக்கும் மாதமான ரமலான் மாதம் வந்து கொண்டு இருக்கிறது .அதை வரவேற்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் தினம் சிறிது நேரம் நோன்பின் சட்டங்களை சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பேசுவார்கள் அது நமது தளத்தில் தினம் வெளியிடப்படும் .

சகோதரர்கள் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் எனில் நமது தளத்தில் கேட்கலாம் .சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பதில் அளிப்பார்கள்.

ரமலானின் சட்டங்கள் from Adiraitntj on Vimeo.

Sunday, August 19, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 28

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 28

Friday, August 17, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 27


அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 27

Thursday, August 16, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 26

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 26


Wednesday, August 15, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 25

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 25


Tuesday, August 14, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 24


அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 24

Monday, August 13, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 23

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 23