Showing posts with label ஜூம்ஆ வீடியோ. Show all posts
Showing posts with label ஜூம்ஆ வீடியோ. Show all posts

Sunday, April 05, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27.03.2015 (வீடியோ)


நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தல்

Sunday, March 15, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்மா பயான் (13/03/15)

தவ்ஹீத் பள்ளி ஜூம்மா  பயான்
நாள்  13/03/15
உரை  அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி




Tuesday, December 30, 2014

மன அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு அதிரை ஜும்மா

மன அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு
உரை : சகோ அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

19/12/14

Friday, December 20, 2013

Tuesday, December 17, 2013

Sunday, October 27, 2013

Saturday, October 12, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 11.10.13(வீடியோ) - புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

புகாரி ஹதீஸை தொகுத்தவரின் உண்மையான பெயர் என்ன?
சஹாபாக்கள் காலத்தில் இருந்து யார் யார் எல்லாம் ஹதீஸ்களை தொகுத்தார்கள் அவர்களின் பெயர் என்ன? 

புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

 

தொடர்புடையவை:

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)!




Friday, October 04, 2013

Friday, September 27, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27.09.13(வீடியோ )





அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27/09/13



Saturday, September 21, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் (வீடியோ ) 20.09.13

அதிரை  தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.09.13



Saturday, September 14, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 06.09.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 06.09.13



Friday, September 13, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 13.09.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்

Friday, August 23, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 23/08/13(வீடியோ )

சுய பரிச்சோதனை 

உரை சகோதரா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 23/08/13(வீடியோ ) from Adiraitntj on Vimeo.

Sunday, August 04, 2013

Sunday, July 28, 2013

Sunday, July 21, 2013

Saturday, July 20, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 12/07/13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை






Saturday, July 06, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 05.07.13(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அபூபக்கர் (ரலி ) அவர்களின் சிறப்பு

உரை :அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

Friday, June 28, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.06.13( வீடியோ)


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அபூபக்கர் (ரலி ) அவர்களின் சிறப்பு

உரை :அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.06.13 from Adiraitntj on Vimeo.

ஆயிஷா (ரலி) அவர;கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு (இரவில்) கொண்டு செல்லப்பட்ட போது அதிகாலையில் இதைப் பற்றி மக்கள் (ஆச்சரியமாகப்) பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை நம்பி உண்மைப்படுத்திய சிலர (கொள்கையை விட்டும்) தடம் புரண்டாரகள். சில இணைவைப்பாளர்கள் அபுபக்கர (ரலி) அவரகளிடம் சென்று இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உமது தோழர (முஹம்மது) கூறிக் கொண்டிருக்கிறாரே அதைப் பற்றி நீர்
என்ன நினைகிறீர? என்று கேட்டாரகள். அதற்கு அபுபக்கர்(ரலி) அவரகள் இவ்வாறு அவர (முஹம்மத்) கூறினாரா? என்று கேட்டார;கள். அதற்கு அவரகள் ஆம் என்றவுடன் முஹம்மத் இதை சொல்லியிருந்தால் திட்டமாக அவர உண்மை தான் சொன்னார; என்று அபு+பக்ர (ரலி) அவரகள் கூறினாரகள். இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்குச் சென்று பகல் வருவதற்கு முன்பே அவர திரும்பினார்  என்பதையா உண்மை என்று நீர் நினைக்கிறீர? என்று இணை வைப்பாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் இதை விட பாரதூரமான விஷயங்களில் எல்லாம் அவரை உண்மையாளர்
என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன். வானத்திலிருந்து காலையிலும் மாலையிலும் (இறைச்) செய்தி (வருவதாக முஹம்மத் கூறுவதையும்) உண்மை என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் எனவே தான் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அஸ்ஸித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர) என்ற பெயர் இடப்பட்டது.

நூல் : ஹாகிம் பாகம் : 10 பக்கம் : 250



3675. 
அனஸ்(ரலி) அறிவித்தார் 
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்" என்று கூறினார்கள். 
 புகாரி 3675

3671. முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அறிவித்தார். 
நான் என் தந்தை (அலீ - ரலி - அவர்கள்) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அபூ பக்ர் அவர்கள்" என பதிலளித்தார்கள். நான், '(அவர்களுக்குப்) பிறகு யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் அவர்கள் (தாம் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள். 'பிறகு (மக்களில் சிறந்தவர்) உஸ்மான்(ரலி) தாம்" என்று (என் தந்தை) சொல்லிவிடுவார்களோ என நான் அஞ்சியவனாக, 'பிறகு (மக்களில் சிறந்தவர்) நீங்கள் தாமே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'நான் முஸ்லிம்களில் ஒருவன்; அவ்வளவு தான்" என்று பதிலளித்தார்கள்.3660. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். 
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன்.466. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் 'அல்லாஹ், தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்ததெடுக்க ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்தார்" என்றார்கள். (இதைக் கேட்ட) அபூ பக்ரு(ரலி) அழலானார்கள். 'இந்த மதுஹகூழ் ஏன் அழகிறார்? தன்னிடம் உள்ளது வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா என்று ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தபோது அந்த அடியார் இறைவனிடம் உள்ளதைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக அழ வேண்டுமா என்ன?' என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி(ஸல்) அவர்கள் தாம். (தங்களின் மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்) அபூ பக்ரு(ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
"அபூ பக்ரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூ பக்ரு தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் (என் இல்லத்திற்கு வருவதற்காக) உள்ள அபூ பக்ரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்."467. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் எந்த நோயினால் மரணமடைந்தார்களோ அந்த நோயின்போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக வெளியே வந்து மேடை மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்பு 'தம் உயிராலும் பொருளாலும் எனக்கு அபூ குஹாஃபாவின் மகன் அபூ பக்ரை விட வேறெவரும் பேருதவியாக எவரையேனும் உற்ற நண்பராக நான் ஏற்படுத்திக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்படுத்திக் கொள்வேன். என்றாலும் (தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதை விட) இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்தது. அபூ பக்ரின் வழியைத் தவிர என்னிடம் வருவதற்காகப் பள்ளிவாசலிலுள்ள எல்லா வழிகளையும் அடைத்து விடுங்கள்!" என்று கூறினார்கள்.
3660. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். 
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன். 
3661. அபுத் தர்தா(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.
3662. அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார். 
நபி(ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா" என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)" என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)" என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

3655. இப்னு உமர்(ரலி) கூறினார். 
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.
3685. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
உமர்(ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) தாம். அவர்கள், 'உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!" என்று பிரார்த்தித்துவிட்டு, '(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூ பக்ர் - ரலி - அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்" என்றும் 'நானும் அபூ பக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்" என்றும் 'நானும் அபூ பக்ரும் உமரும் புறப்பட்டோம்" என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன். 

3919. நபி(ஸல்) அவர்களின் ஊழியரான அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூ பக்ர்(ரலி) மட்டுமே கருப்பு - வெள்ளை முடி உடையவர்களாக இருந்தார்கள். அன்னார் மருதாணியாலும், 'கத்தம்' எனும் (ஒரு வகை) இலைச் சாயத்தாலும் தம் (தாடி) முடியைத் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள்.

6679. இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா (ரஹ் - அலைஹிம்) ஆகியோர், நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா(ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொரு வரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:) 
அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளினான். (ஆயிஷா(ரலி) கூறினார்:) என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். -அப்போது அல்லாஹ், 'உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான். 
அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்' என்றும் கூறினார்கள்.
3092. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது இறைத்தூதர்(ஸல்), அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள்விட்டுச் சென்ற சொத்தாகும்.
3093. ஃபாத்திமாவுக்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசுவதைவிட்டுவிட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தனி நிதியாக)விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாகவிட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூ பக்ர்(ரலி) ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களின் செயல்களில் எதனையாவது நான்விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்றார்கள். (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் தருமமாகவிட்டுச் சென்ற சொத்தை உமர் அவர்கள், அலீ அவர்களுக்கும் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் (அதன் வருமானத்திலிருந்து தம் பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும் படி) கொடுத்துவிட்டார்கள். கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துக்களை உமர் அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, 'அவ்விரண்டும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தருமமாகவிட்டுச் சென்றவை. அவை நபி(ஸல்) அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்)களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்றார்கள். 
இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) (இந்த ஹதீஸை அறிவித்த போது), 'அந்த (கைபர், ஃபதக் பகுதியிலிருந்த) இரண்டு சொத்துக்களும் இன்று வரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன" என்றார்கள்.

Friday, June 21, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.06.13(வீடியோ )


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்
உரை :யாசர் அரஃபாத் இம்தாதி
தலைப்பு  பராஅத் இரவு



அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.06.13 from Adiraitntj on Vimeo.