இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!
இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!- ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்!
உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராகக் கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்கப் பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறைப் பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் என்பவர் இயேசு முஸ்லிம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.