Showing posts with label தவ்ஹீத். Show all posts
Showing posts with label தவ்ஹீத். Show all posts

Sunday, November 09, 2014

கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பினரை திக்குமுக்காட வைத்த விவாத வீடியோ

கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பினரை திக்குமுக்காட வைத்த விவாத வீடியோ
















கொள்கையைற்றவர்கள் யார்?

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8

பாகம்-9

பாகம்-10

பாகம்-11

பாகம்-12

விவாதத்தின் அனைத்து பாகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய பதிவுகள்:

Saturday, November 08, 2014

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும், பின்பற்ற கூடாது என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர்!

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும், பின்பற்ற கூடாது என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர்!




கீழே உள்ள வீடியோவை முதலில் பார்த்து விட்டு, பின்னர் வீடியோவிற்கு கீழ் உள்ள விளக்கத்தை படியுங்கள்



மேலே உள்ள வீடியோவில் லபீலில் முமினின் என்று சொல்லி ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்கிறார், ஜமீல் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம், முன்றாவதாக எதுவும் கிடையாது என்கிறார். இவர்கள் இருவரும் வேறு வேறு தரப்பில் விவாதம் செய்பவர்கள் அல்ல. தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையில்லாத சிகமணிகளால் தாருத் தவ்ஹீத் அமைப்பு கொள்கை இருக்கிறது என்று காட்ட தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் அவர்கள் இலங்கை சென்று தேடிப்பிடித்து கொண்டு வரப்பட்ட அர்ஹம் மௌலவி. 

ஒரு பக்கம் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று ஜமீல் சொல்ல, அர்ஹம் மௌலலி ஸஹாபாக்களை பின்பற்றதவர்கள் சொர்க்கம் சொல்ல முடியாது என்கிறார். 

இதை பார்த்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது என்பதா? அல்லது சொந்த காசில் சூனியம் வைப்பது என்பதா?


இந்த லட்சணத்தில் கொள்கை இருக்கு என்று தம்பட்டம் வேறு!

Friday, November 07, 2014

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரம் கொண்டு வந்த கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் - அதிரையில் நடைபெற்ற பரபரப்பான விவாதம்

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரம் கொண்டு வந்த கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் - அதிரையில் நடைபெற்ற பரபரப்பான விவாதம்

தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற) அமைப்பின் சார்பாக விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் (இடமிருந்து வலது, முதலாம் நபர் (தமுமுக, மனித நேய மக்கள் கட்சியின் அதிரை கிளை பொறுப்பாளர், இரண்டாம் நபர்: தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல், முன்றாம் நபர்: அப்துல் ஹமீத் - பாக்கர் அமைப்பின் மாநில செயலாளர், நான்காம் நபர்: லாபித் - இலங்கை அன்சார் தப்புலிக்கியின் மாணவர், நான்காம் நபர்: அர்ஹம் - இலங்கைக்கார், ஜந்தாம் நபர்: ஜமாலுதீன் - தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர். கடைசி நபர்: நிஜாமுதீன் - தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர்).
கடந்த மாதம் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் அதிராம்பட்டிணம் பவித்ரா திருமண மண்டபத்தில் 'கொள்கையற்றோர் யார்?' என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பிற்கும் விவாதம் நடைபெற்றது. 


தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆதாரங்களை முன்வைப்பதற்கு முன்பாகவே, தாருத் தவ்ஹீத் அமைப்பிற் கொள்கை கிடையாது என்பதற்கு தாருத் தவ்ஹீத் அமைப்பினரே பகிரங்க ஆதாரம் கொண்டு வந்து இருந்தனர். ஆம், தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பின் சார்பாக விவாதம் செய்ய அழைத்து வரபட்டவர்களே, தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரமாக இருந்தது.


தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பின் சார்பாக விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்:

1. அதிரை ஜமீல் (தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர்)
2. அதிரை நிஜாமுதீன் (தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர்)
3. அதிரை ஜமாலுதீன் 
4. அப்துல் ஹமீத் (சென்னை)
5. இலங்கை அர்ஹம் மௌலவி - எஸ்எல்டீஜே அமைப்புடன் விவாதம் செய்ய ஒப்பந்தம் போட்டு விட்டு, விவாதம் செய்ய வராமல் ஓட்டம் எடுத்தவர்
6. இலங்கை ஸாபித் 

தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக விவாதம் செய்ய வந்தவர்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்ய வேண்டியது இங்கு அவசியம்.

அதிரை ஜமாலுதீன்:

அதிரை ஜமாலுதீன் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் துபாய் மண்டல தலைவராக இருந்தவர். பாக்கர் பெண் லீலைகள் காரணமாக தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி விசப்பட்டவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கர் கண்ட புது அமைப்பில் சேர்ந்தவர். அதிரை ஐமாலுதீன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சூனியம் இல்லை என்று தான் சொன்னது, குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க கூடாது, கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க தேவையில்லை போன்ற விஷயங்கள் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தில் இவர் இருக்கும் போது இவர் நடித்துக்கொண்டு இருந்துள்ளார் என்பது இப்போது தெளிவாகிறது. இவர் பாக்கர் இயக்கம் மடிந்த பின்னர் அதிரை ஆல் முஹல்லா, ஹல்வா முஹல்லா, லட்டு முஹல்லா என்று பல பல இயக்கங்கள் ஆரம்பித்து அவையும் அழிந்த பின்னர் தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பில் மிக சமீபத்தில் தஞ்சம் புகுந்தவர். 

அப்துல் ஹமீத் (சென்னை):

இவரும் பாக்கர் மீது தொடர் பெண் குற்றச்சாட்டுகளால் தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி எறிப்பட்ட போது, பாக்கர் கண்ட புரட்சி இயக்கத்தில் இருந்தவர் (இடையில் பாக்கரை விட்டும் பிரிந்து விட்டார்). இவர் தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். இவர் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்ற கொள்கையில் உள்ளவர். இவர் குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்க்கூடாது என்று பேசிய வீடியோ ஆதாரத்தை நாம் கடந்த ரமலான் மாததத்தில் நமது தளத்தில் எடுத்துகாட்டினோம். இன்று வரை பதில் இல்லை. 

இலங்கை அர்ஹம் மௌலவி:

இலங்கையை சார்ந்த அர்ஹம் மௌலவி என்பவர் இதுவரை அதிரை எட்டிகூட பார்க்காதவர். இலங்கை உள்ள எஸ்எல்டீஜே அமைப்புடன் விவாதம் செய்ய ஒப்பந்தம் செய்து விட்டு ஒட்டம் எடுத்தவர். இவரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் இலங்கைக்கு சென்று இப்படி ஒரு விவாதத்தில் நாங்கள் மாட்டிவிட்டோம் என்று கொஞ்சி அழைத்து வரப்பட்டவர். இவருக்கு தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பை பற்றி இதற்கு முன்னர் கேள்வி கூட பட்டு இருக்க மாட்டார். ஒருவர் என்ன கொள்கையில் உள்ளார்கள் என்றே தெரியாமல் பறந்து வந்துள்ளார் அர்ஹம் என்பவர்.  என்ன அமைப்பு என்றே தெரியாமல் அவர்களுக்கு கொள்கை உள்ளது என்று கூவா வந்துள்ளர் அர்ஹம்.

இலங்கை ஸாபித்:

இவரும் இலங்கையில் இருந்து பிடித்து வரப்பட்டவர். இவருக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பு என்ன கொள்கையில் உள்ளது என்று கூட தெரியாமல் வந்தவர். 

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை எங்கே?

ஒரு அமைப்பிற்கு கொள்கை இருக்க இல்லையா? என்பதை அந்த அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் பேசி நிருபிக்க வேண்டும். தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்கு என்பதற்கு இலங்கையில் இருந்தும் சென்னையில் இருந்தும் பிடித்து வரப்பட்டவர்கள் பேசியதே தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை என்பதற்கு போதுமான ஆதாரம். அவர்களுக்கு கொள்கை இல்லை என்பதற்கு அவர்களே ஆதாரம் கொண்டு வந்து, தவ்ஹீத் ஜமாஅத் கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை இருக்கா?

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை கிடையாது என்பதற்கு எந்த ஒரு சான்றையும் தாருத் தவ்ஹீத் தரப்பு முன்வைக்கவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை கிடையாது என்றால் அதன் எதிரிகள் கூட சிரிப்பார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நேரத்திற்கு இடத்திற்கும் தகுந்தாற்போல் நிறம் மாறும் தன்மை இருந்தால், தாருத் தவ்ஹீத் மேடையிலேயே பேசி இருக்கும். கொள்கையில் உறுதியாக இருப்பதால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த அளவுக்கு எதிர்க்கப்படுகிறது.

தாருத் தவ்ஹீத் அமைப்பு பெரும்பாலான விஷயங்களில் TNTJ வை ஆதரிக்கக்கூடிய அமைப்பு - தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் அதிரடி:

தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையற்றவர்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தை முன்வைக்காதது மட்டுமல்லாது, தாருத் தவ்ஹீத் அமைப்பு பெரும்பாலான விஷயங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை ஆதரிக்க கூடியது என்று ஒரு குண்டை போட்டார் தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் அவர்கள். அதன் வீடியோவை இங்கே காணவும். இவ்வாறு சொன்னவுடன் விவாதத்தில் பத்து கேள்வி கேட்டுவிட்டோம், பத்தெம்பது கேள்வி கேட்டுவிட்டோம் என்று காமெடி பண்ணிய பாக்கரின் ஆதாரவாளர் என்ன புலம்பி இருப்பாரே! 

ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது!

கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக விவாதிக்க வந்த ஒவ்வோருவரும் மற்றவருக்கு பதிலடி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். எங்களுக்கு கொள்கை இருக்கிறது எங்களுக்கு கொள்கை இருக்கிறது என்று அவர்கள் கூவினாலும், அது ஏட்டுக்சுரைக்காயாகவும் வீடியோ சுரைக்காயாகவும் தான் இருக்கும்.  அவர்களின் விவாதம் செய்ய வந்த ஒவ்வோருவருக்கும் ஒவ்வோரு கொள்கை என்று அவர்களுக்கோ நன்றாக தெரியும். ஒரு பத்து மார்க்க விஷயங்களை முன்வைத்து, இதற்கு தாருத் தவ்ஹீத் அமைப்பின் கொள்கை என்ன என்று விளக்கி எல்லா தாருத் தவ்ஹீத் நிர்வாகிகளும் கையெப்பம் இட்டு மக்களுக்கு விளக்குங்கள் என்று ஒரு சவாலை நாம் முன்வைத்தால், அதற்கு அவர்களால் பதில் தர முடியாது.

சூனியம் இருக்க இல்லையா? நீங்க முதலில் ஓரு முடிவுக்கு வாருங்கள்

சூனியத்திற்கு எதிராக இருப்பதாக தாருத் தவ்ஹீத் செயலாளர் சொல்லுகிறார், அவருக்கு பதிலடி தருகிறார் ஜமாலுதீன். யார் சொல்லுவதை பா நாங்க கேட்க. முதலில் உங்களுக்குள் ஒரு விவாதம் வைக்கக்கூடாதா?



குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டுமா? ஏற்க கூடாதா? நீங்கள் முதலில் ஒரு முடிவுக்கு வாருங்க செயலாளர் சார்!

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்கிறார் தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் அவர்கள், அவருக்கு கவுண்டர் கொடுத்து குர்ஆனோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க கூடாது என்கிறார் தாருத் தவ்ஹீத் அமைப்பால் விவாதம் செய்ய அழைத்து வரப்பட்ட அப்துல் ஹமீது. யார் சொல்லுவதை பா நாங்க கேட்க? உங்களுக்கு கொள்கை இருக்கிறது என்று எப்படி வெட்கம் இல்லாமல் உங்களால் பேச முடிகிறது?

குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று சொல்லும் தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் - http://www.tubechop.com/watch/3886865

குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்று சொல்லும் தாருத் தவ்ஹீத் அமைப்பால் அழைத்து வரப்பட்ட அறிஞர் அப்துல் ஹமீது - http://www.tubechop.com/watch/3338372

கொள்கை இல்லை என்பதை ஹாஜி அமீரும் ஏற்றுக்கொண்டாரோ!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லாபித்  மற்றும் அர்ஹம் போன்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடர்கள் என்று ஒரு பக்கம் சொல்ல, ஜமீல் மற்றும் ஜமாலுதீன் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பெரும்பாலும் ஆதரிக்கக்கூடியவர்கள் என்று அவர்களுக்கு பதிலடி தந்தார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் கூட உடன்பாடு இல்லை!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லாபித்  மற்றும் அர்ஹம் போன்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடர்கள் என்று ஒரு பக்கம் சொல்ல, ஜமீல் மற்றும் ஜமாலுதீன் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பெரும்பாலும் ஆதரிக்கக்கூடியவர்கள் என்று அவர்களுக்கு பதிலடி தந்தார்கள்.

ஆணவம் வேண்டாம்!

இன்றைய தவ்ஹீத் ஜமாஅத் முக்கயஸ்தர்களால் நிர்வாகிக்க்பட்ட இயக்கங்களில் ஜமீல் அவர்கள் இருந்த போது, ஜமீல் அவர்களுக்கே உரிய ஆணவ போக்கினால் அவருக்கு எந்த பொருப்பும் தரப்படவில்லை என்பதை விவாதத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. அதற்கு ஜமீல் அவர்கள் மௌனத்தையே பதிலாக தந்தார். தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை ஜமீல் அவர்களுக்கே நன்றாக தெரியும். இருந்த போதிலும் நான் நடத்தும் இயக்கத்தை கொள்கையற்றவர்கள் என்று சொல்லிவிட்டார்களே, எனது இமோஜ எப்படி விட்டுத்தருவது என்று ஆணவம் தான் அவரை விவாதம் அளவுக்கு வந்து, இப்படி அசிங்கப்பட வைத்துள்ளது.

விவாதம் செய்ய வந்தது தாருத் தவ்ஹீத்தா? தமுமுகவா?

விவாதம் செய்ய வந்தது தாருத் தவ்ஹீத் அமைப்பா? அல்லது தமுமுவவா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தாருத் தவ்ஹீத் தரப்பின் சார்பாக நடுவர், பார்வையாளர்களில் நான்கில் முன்று பகுதியினர், தமுமுக முன்னால் மற்றும் இன்றைய தஞ்சை மாவட்ட செயலாளர்கள், தமுமுகவின் கிளை நிர்வாகிகள், தமுமுகவின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவாளர்கள் என் அனைத்து தமுமுகவினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீதிற்கு கொள்கை இருக்கு என்று காட்ட உலகம் சுற்றிய வாலிபர்கள்:

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்கு என்று காட்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர் நாடு கடந்து, ஊர் ஊராக சுற்றி இறுதியாக சென்னையில் இருந்து அப்துல் ஹமீது என்பவரையும், இலங்கையிலிருந்து தாருத் தவ்ஹீத் என்றால் என்னவேன்றே தெரியாத இருவரையும் பிடித்து வந்தார்கள். பாவம் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இல்லாத கொள்கையை எங்கே போய் தேடினாலும் கிடைக்குமா என்ன?

திருடும் நிருபர்களின் காமெடி:

பிஜே ஒரு வழிகேடர் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் பிஜே கட்டுரைகளை திருடி அதை தங்களின் ஆக்கமாக காட்டி, புகழ் தேடி புகழ் போதையில் மிதக்கும் திருடும் நிருபர்கள், 'அதிரை தாருத் தவ்ஹீத் நட்சித்திரமாக மின்னியதாக காமெடி' செய்துள்ளார்கள். நான்கு நாட்கள் தாருத் தவ்ஹீத்திற்கு வக்காலத்து வாங்க அதிரைக்கு முதல் முறையாக வந்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்களும் விவாதத்தில் பட்ட பாடு அவர்களுக்கு தான் தெரியும். 

தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகெட்ட கொள்கையில் தாருத் தவ்ஹீத் அமைப்பு:

கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க தேவையில்லை என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை தாருத் தவ்ஹீத் எதிர்க்கிறாதா? ஆதரிக்கறாதா? என்று கேட்டு சொல்லுங்கள். பின்னர் இது பற்றி பேசலாம். 

பேருராட்சி தலைவர் மீது அவதூறு சொல்லி கேவலப்பட்ட தாருத் தவ்ஹீத்:

அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாக இருக்கும் காரணத்தினால், அஸ்லம் அவர்கள் எங்கே ஒரு திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றியதாக ஒரு பொய்யான செய்தியை விவாத்தில் முன்வைத்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாளராக உள்ளவர்கள் தவறு செய்தாலும் , அதை தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாக ஆகாது. தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவறு செய்தால் அதற்கு தான் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாகும். எனினும், அஸ்லம் பற்றி செய்தி அவதூறாகும். தாருத் தவ்ஹீத் அமைப்பு விவாதத்தில் அஸ்லம் அவர்கள் மீது குற்றம் சுமத்த இன்னுமொரு காரணமும் உண்டு. தமுமுகவினருக்கும் அஸ்லம் அவர்களுக்கும் ஆகாது, தாருத் தவ்ஹீத் கலந்து கொண்ட விவாதத்தில் பின்புலத்தில் இருந்து இயக்கியதே தமுமுக தான். அவர்களால் இந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தாருத் தவ்ஹீத் வைத்த இந்த குற்றச்சாட்டை அறிந்த அஸ்லம் அவர்கள் விவாத மேடையிலேயே ஏறி, என் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டு பொய், அதற்கு ஆதாரம் தர வேண்டும் என்றார். அதற்கு தாருத் தவ்ஹீத் கொள்கையில்லா கூட்டத்தால் பதில் தர முடியாமல் கேவலப்பட்டு போனார்கள்.

மாற்று கொள்கை உள்ளவரை மேடை ஏற்றுவது:

தேவநாதன், டி.ரஜேந்தர் போன்றறோரை தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஏற்றியதாக தாருத் தவ்ஹீத் தரப்பு வாதம் வைத்தது. இதை செய்தது பாக்கர் தான் என்பதும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது, தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதம் செய்பவர்களில் அதிரை ஜமாலுதீன் மற்றும் சென்னை அப்துல் ஹமீது ஆகியோர் தவ்ஹீத் ஜமாஅத்தில் தான் இருந்தனர். அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சொல்லப்பட்டவுடன் மவுனமே பதிலாக வந்தது. மேலும், பாக்கர் செய்த காரியத்திற்க்காக அன்றே பாக்கர் கண்டிக்கப்பட்டார் என்பதையும் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஒரு சில தருணங்களில் (மார்க்க நிகழ்ச்சி அல்லாத) வேறு அமைப்பை சார்ந்தவர்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டதும், அவை இனிமேல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதையும் விளக்கி கூறப்பட்டது.

ரதிமினாவை பற்றி வாய் திறக்காத அந்த நபர்!

ரதிமீனா பேருந்தில் ஒரு இரவு முழுவதும் ஒரு பெண்ணுடன் சல்லாபம் செய்து கொண்டு பயணித்த பாக்கர், இன்னும் பல பெண்களுடன் சல்லாப வேளைகளில் ஈடுபட்டதாக தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விரட்டப்பட்டார். பாக்கரின் காம சோட்டைகளை சிலர் பாக்கர் போட்ட எழும்பு துண்டிற்க்காக ஆதரித்தார்கள். அவ்வாறு ஆதரித்தவர்களில் அதிரையை சார்ந்தவர் ஒருவர் முக்கியமானவர், அவரும் தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதிக்க வந்து இருந்தார். பாக்கரின் கேடுகெட்ட செயல்களை பற்றி எல்லாம் கேள்வி எழுப்பப்பட்ட போது அந்த நபர் அமைதியாகவே இருந்தார்.

பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?

பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்

முழு விவாத வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.

நான்கு நாட்கள் நடைபெற்ற முழு விவாத தொகுப்பை இங்கே காணலாம்.

தொடர்புடைய பதிவுகள்:

தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்!

கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸிக்கு சவால் (வீடியோ)

திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும்!

பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?

பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்

Wednesday, November 05, 2014

அப்பாஸ் அலி நீக்கம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்

அப்பாஸ் அலி நீக்கம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்

கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நம் ஜமாஅத்தில் பிரச்சாரகராக இருந்து வந்த அப்பாஸ் அலி குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் விஷயத்தில் கொள்கை முரண்பாடு கொண்டு விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் நம் ஜமாஅத்தில் இருந்து விலகியுள்ளது உண்மையாகவே வரவேற்கத்தக்கதாகத் தான் ஜமாஅத் கருதுகிறது.

அவரது செயல்பாடும் நிலைபாடும் ஜமாஅத்திற்கு உகந்ததாக இல்லை என்பதற்காக அவர் பல முறை உயர் நிலைக்குழுவில் கண்டிக்கப்பட்டுள்ளார்.

அது குறித்து சுருக்கமாக சில தகவல்களைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

வெளிநாடுகளுக்கு பிரச்சாரப் பணிக்காக ஜமாஅத்தின் சார்பில் ஜமாஅத்தின் செலவில் அனுப்பப்படுவோர் எக்காரணம் கொண்டும் அங்குள்ள கிளைகளிடமோ தனி நபர்களிடமோ அன்பளிப்புகள் மற்றம் சன்மானம் பெறக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இது குறித்து 09.04.12 அன்று பகிரங்கமாகவும் ஜமாஅத் சார்பில் எல்லா மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அப்பாஸ் அலி மட்டும் இதை மீறி பெரிய அளவில் அளிக்கப்பட்ட அன்பளிப்புகளையும் பணத்தையும் பெற்று வந்தார். இது பின்னர் தெரிய வந்த போது உயர் நிலைக்குழுவிலை வைத்து கடுமையாக்க் கண்டிக்கப்பட்டு வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்.

ஆன்லைன் பீஜேயில் கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ஒரு கேள்விக்கு இவ்வளவு என்று ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு மீண்டும் பொய்யான கணக்குக் காட்டி பணம் பெற முயற்சிக்கும் போது அதை சைய்யத் இப்ராஹீம் சுட்டிக்காட்டியதுடன் நிர்வாகக்குழுவில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்.

இதுபோன்று நெல்லையிலிருந்து சென்னைக்கு ஜுமுஆ உரை நிகழ்த்த வந்த போது ஜுமுஆ செய்த கிளையில் போக்குவரத்துப் பணம் பெற்ற பின் மாநிலத் தலைமையில் போக்குவரத்துச் செலவு கேட்ட போது மாநிலச் செயலாளர் சாதிக் அப்பாஸ் அலியிடம் ‘ உங்களுக்கு அந்தக் கிளையிலேயே பணம் கொடுத்திருப்பார்களே எனக் கேட்ட பின் சுதாரித்து பணம் வேண்டாம் எனக் கூறினார். இதற்காகவும் நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டார். இதில் இருந்து அவர் பணத்துக்காக எதையும் செய்யும் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்

பிஜே அவர்கள் இது குறித்து அவருக்கு அறிவுரை கூறினார்.இப்படி நடந்து கொண்டதை அவரும் உணர்ந்து வருத்தம் தெரிவித்தார்,

இவரது இந்தப் பணத்தாசை இவரைக் கொள்கையை விட்டு வெளியேற்றி விடும் என்று நிர்வாக குழுவில் ஆலோசனை செய்யும் அளவுக்கு இவரது நிலை இருந்தது.

இவர் பண விஷயத்தில் சரியாக இல்லை என்பதால் வெளிநாட்டு மண்டலங்களுக்கு மீண்டும் பழைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டதுடன் உணர்விலும் போடப்பட்டது.

ஆனால் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பத்து நாட்களுக்கு முன் சவூதிக்கு பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர் இப்போதும் ஜமாஅத் நிலைபாட்டை மீறி அன்பளிப்புகள் பெற்று வந்துள்ளார்,

இது குறித்து ஜமாஅத் விசாரிக்கும் என்பதற்காக அவர் அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

இதுபோன்ற காரணங்களினால் அவர் வெளியேற வேண்டியவர் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. .

அடுத்ததாக ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாக தனிப்பட்ட நபர்களிடம் இவர் பேசியுள்ளார் என்ற விபரம் தெரிய வந்து 12.11.2013 அன்று இது குறித்து பேசுவதற்காக உயர் நிலைக் குழு கூட்டப்பட்டது.

தர்கா வழிபாட்டுக்காரர்களும் மத்ஹபு வழிபாட்டுக்காரர்களும் செய்வதை நாம் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் கூறுவதற்கும் ஆதாரம் உண்டு எனக் கூறினார். உயர்நிலைக் குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு ஹதீஸ் பற்றி பேசும் போது பீஜே அவர்களிடம் இதைப் பலவீனமாக ஆக்கிவிடுவோமா என்று அப்பாஸ் அலி கேட்டார். பலவீனமான ஹதீஸை பலவீனம் என்று சொல்வது வேறு. சரியான ஹதீஸைப் பலவீனமாக்குவோமா என்று கேட்பது வேறு என்று பீஜே அவர்கள் அதைக் கண்டித்த விபரத்தையும் சபையில் அம்பலப்படுத்தினார்.

நமக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் பலவீனமாக்கி விடுவோமா என்ற கேட்டவர் தற்போது இறை அச்சத்தைக் காரணம் காட்டியுள்ளார். இவர் எந்த ஆதாயத்துக்காக மாறினார் என்பதையும் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உயர்நிலைக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும் இதைக் கடுமையாகக் கண்டித்தனர். ஒரு பாமரனுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட உங்களுக்கு இல்லை என்று ஆலிமல்லாத உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் அவரிடம் கேட்கும் அளவுக்கு எல்லா வழிகேட்டையும் நியாயப்படுத்தினார்.

எனவே நீங்கள் தெளிவு அடையும் வரை பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் மேலாண்மைக் குழு உறுப்பினர் பொறுப்பை விட்டும் விலகுமாறு உயர் நிலைக் குழு உத்தரவிட்டு அவ்வாறு ராஜினாமா செய்தார்.

இத்தனை ஆண்டுகள் ஜமாஅத்தில் இருந்துள்ளார் என்பதால் இஸ்லாமியக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டாம். வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அகீதா அல்லாத இலக்கணம் உள்ளிட்ட பாடம் மட்டும் நடத்தட்டும் என்று மேலாண்மைக் குழுத் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் அப்போது நீக்கப்படவில்லை.

புரியாமல் இருந்து விட்டேன். எம் ஐ சுலைமான் அவர்கள் விளக்கம் சொன்ன பிறகு புரிந்து கொண்டேன். எனவே என்னைப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துங்கள், நான் மனக்குழப்பத்தில் உண்மை அறியாமல் பேசிவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்தார்.பிறகு 03.03.2014 முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.அன்று முதல் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லி பத்து நாட்களுக்கு முன்னர் வரை ஒரு மாதம் ரியாத் ஜித்தா தம்மாம் ஆகிய மண்டலங்களில் பிரச்சாரம் செய்த போது சூனியம் குறித்து ஜமாஅத்தின் நிலைபாட்டைப் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்து ஆய்வு செய்வதாகக் கூறும் இவர் கடந்த சில மாதங்களில் குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் சூனியம் குறித்தும் மாவட்டங்கள் தோறும் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சிகளில் பிரதான தலைப்பாக எடுத்து அமைப்பின் நிலைப்பாட்டையே பேசினார்.

ஆனால் தற்போது சவுதிக்குப் பயணம் செய்து வந்த பின் அமைப்பிலிருந்து விலகுவதாகவும் அமைப்பின் கொள்கை குறித்து பல மாதங்கள் ஆய்வு செய்ததாக சொல்லும் இவரது இரட்டை நிலை இவர் பணத்திற்காக எதையும் செய்வார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

எனவே பணத்திற்காக கொள்கையை பனயம் வைக்கும் இவரது நடவடிக்கைகளும் கொள்கையிலிருந்து இவர் தடம்புரண்டதும் நிரூபனமான காரணத்தினல் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். இயக்கம் தொடர்பாக இவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை அப்பாஸ் அலியின் இந்த நடவடிக்கையால் ஜமாஅத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இவரை விட பன்மடங்கு பிரச்சாரம் செய்துவந்த ஹாமித் பக்ரி ,இணைவைப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவிட்டு பின்னர், தான் கொண்ட கொள்கையிலிருந்து வழிகெட்டு கப்ருவணங்கியாகயாக மாறிவிட்டார். அவர் தடம்புரண்டபோது. உறுதியுள்ள கொள்கைச் சகோதரர்களிடம் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதுபோலத்தான் அப்பாஸ் அலியின் நிலையும். அப்பாஸ் அலி கொள்கை மாறிப்போனதால் அவருக்கு உலக ஆதாயம் ஏற்படலாம். ஆனால் சூனியம் குறித்தும் குர்ஆனுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் மக்கள் மன்றத்தில் அவர் விளக்கமளிக்க முன்வந்தால் நமது கொள்கை சகோதரர்கள் அவருடைய கடந்த கால விளக்கங்களை வைத்தே அவரின் அசத்தியக்கொள்கையை அம்பலத்துவார்கள். இதனால் சத்தியம் மேலோங்கத்தான் செய்யும் இன்ஷாஅல்லாஹ்.

”உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதி ஆக்கி வைப்பாயாக்” நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை நாமும் கேட்போமாக.

இப்படிக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச் செயலாளர்

Saturday, October 25, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.

திருக்குர்ஆன் 13:11

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ருக் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (விண்ணிலி ருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா? என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக! அவ்வாறில்லை! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.

திருக்குர்ஆன் 3:123,124,125

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 3:160

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 5:11

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 5:67

ஆயினும் அவரை (நூஹை) பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

திருக்குர்ஆன் 7:64

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன் என்று உங்களுக்குப் பதிலளித்தான். நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான். 

திருக்குர்ஆன் 8:9,10,11

மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.

திருக்குர்ஆன் 8:26

(முஹம்மதே!) அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நாடினால் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியின் மூலமும், நம்பிக்கை கொண்டோர் மூலமும் உம்மைப் பலப்படுத்தினான்.

திருக்குர்ஆன் 8:62

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டால் (ஏக இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்;ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:40

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.

திருக்குர்ஆன் 10:103

நமது கட்டளை வந்த போது ஹூதையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அவர்களைக் கடுமையான வேதனையிலிருந்து காப்பாற்றினோம்.

திருக்குர்ஆன் 11:58

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

திருக்குர்ஆன் 11:66

நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 

திருக்குர்ஆன் 11:94

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்! என்றனர். நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம். அவரையும், லூத்தையும் காப்பாற்றி நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் (சேர்த்தோம்).

திருக்குர்ஆன் 21:68,69,70,71

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.


திருக்குர்ஆன் 26:63,64,65,66

மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.

மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.

மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.

இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.

மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். 

திருக்குர்ஆன் 39:13

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரீ 1445

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4661)

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 7376

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.

நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.

இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல், பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.

அதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமையோ, பிற சமுதாயத்தவரையோ சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், “அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். பதிலுக்கு அவர், “வ அலைக்கும் ஸலாம்’ என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், “உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக!’ என்பதாகும்.

முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போதும், மறைமுகமாக தொலைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்கின்ற வாழ்த்துக்களில் முஸ்லிம்கள் பரப்புவது இந்த அமைதியைத் தான்.

இஸ்லாத்தில் சிறந்த செயல் எது? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 12

இஸ்லாத்தில் சிறந்தது எது என்ற கேள்விக்கு முதலாவதாக, பசித்தோருக்கு உணவளித்தல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறுகின்றார்கள். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பாரபட்சம் இல்லை.

இரண்டாவதாக, முஸ்லிம், பிற மதத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்தைக் கூறி அமைதியைப் பரப்பச் சொல்கின்றார்கள்.

ஒருவர் தனக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருப்பார். அவரை நோக்கி, ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. ஒருவர் தனது குழந்தை இறந்து விட்ட சோகத்தில் இருப்பார். அவரிடமும், “உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. இப்படி இன்பம், துன்பம் என எந்த நிலையில் இருந்தாலும் அனைவர் மீதும் ஸலாம் எனும் அமைதியைப் பரப்பச் சொல்கின்றது இஸ்லாமிய மார்க்கம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான’ அல்லது “அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 51

மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு பாதையில் முஸ்லிம்கள் மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள். அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி, புறையோடச் செய்து அவர்களது உயிர்களுக்கே உலை வைக்கின்ற கல், முள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் ஓரம்சம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது, ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கொள்கையே மற்றவர்களை இன்னல், இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது தான் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

காலைப் பதம் பார்க்கின்ற கல், முள்ளையே அகற்றச் சொல்லும் இஸ்லாம், ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை வைக்கச் சொல்லுமா என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கüலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2472

இப்படிப் பாதையிலிருந்து கற்கள், முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு இறைவன் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகின்றான் என்றால், பேருந்துகள், இரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை வந்து நிற்கும் நிலையங்களிலும், மக்கள் குழுமுகின்ற வணிக வளாகங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற பாதைகளிலும் குண்டு வைத்துக் குலை நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை வழங்குவான்? நிச்சயமாக நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதுதான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடாகும்.

ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

“முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: திர்மிதி 2551

“பிற மனிதனுக்கு உனது கையினால், நாவினால் இடைஞ்சல் அளிக்காமல் இருந்தால் நீ ஒரு முஸ்லிம்’ என்று கூட நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் அவ்வாறு சொல்லாமல், “மனிதர்கள் உன்னுடைய நாவினால், கையினால் பாதுகாப்புப் பெற வேண்டும்’ என்று சொல்கிறார்கள். உன்னிடமிருந்து பிறர் பாதுகாப்புப் பெறுவதை நீ தீர்மானிக்கக் கூடாது; ஏனெனில் நீ ஏற்படுத்திய பாதிப்பின் தன்மை உனக்குத் தெரியாது; பாதிக்கப்படுபவர் அல்லது மற்றவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

அந்த அளவுக்கு, ஒரு முஸ்லிம் தனது நாவினாலும், கையினாலும் பிற மக்களுக்குத் துன்பம் தரக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6018

அண்டை வீட்டுக்காரர் முஸ்லிமாகவும் இருக்கலாம்; முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். மொத்தத்தில் அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அத்தகையோர் இஸ்லாத்தின் பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.

இறைவனுக்குப் பல அழகான பெயர்கள் உள்ளன. அவற்றில் “ஸலாம்’ என்பதும் ஒன்று. இதன் பொருள் அமைதியானவன் என்பதாகும். இறைவனின் திருப்பெயரும் அமைதியானவன் என்று அமையப் பெற்றிருக்கும் போது அமைதியான அந்த இறைவன் இந்த அமளி துமளிகளை எப்படி ஆதரிப்பான்?

அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.

அல்குர்ஆன் 10:25

மொத்தத்தில் இஸ்லாம் என்றால் உயிருக்கு உத்தரவாதம்! உடமைக்கு உத்தரவாதம்! கற்புக்குக் காவல் அரண்! பெண்களுக்குப் பாதுகாப்பு!

இஸ்லாம் என்றால் அமைதி! இஸ்லாம் என்றால் அபயம்!

இதனால் தான் இந்த மார்க்கத்தின் அதிபதி இதை ஓர் அமைதி மார்க்கம் என்று கூறுகின்றான்.

பாதுகாப்பான ஒரு வீட்டில் இருக்கும் போது அதில் வெயிலின் கொடூரம் கிடையாது. குளிரின் கொடுமை கிடையாது. கொட்டும் மழை கிடையாது. குலை நடுங்க வைக்கும் இடியோ, கண்ணைப் பறிக்கும் மின்னலோ இதில் தெரியாது. இவை அத்தனைக்கும் ஓர் இல்லம் பாதுகாப்பாக இருப்பது போல் ஒரு மனிதனின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இஸ்லாம் இருக்கின்றது. அந்தப் பாதுகாப்பு இல்லமான இஸ்லாம், ஒருபோதும் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஆதரிக்காது.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்கின்றனர். அந்த அடிப்படையில், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் சமுதாயமோ, இஸ்லாமிய மார்க்கமோ பொறுப்பாகாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இஸ்லாம் ஓர் ஆக்க சக்தி! அது அழிவு சக்தி அல்ல என்பதை நம்மைச் சுற்றியுள்ள சமுதாயங்களிடம் கொண்டு செல்வோம். சாந்தி, சமாதானம், ஆக்கம், அமைதி இவையே இஸ்லாம் என்பதை தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமின்றி தரணியெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

Sunday, October 19, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-6) - ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-6) - ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?

திருக்குர்ஆன் 2:107

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 3:189

'நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர்.'(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள், பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

திருக்குர்ஆன் 5:18

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:40

வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:120

'மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்'என்று (முஹம்மதே!) கூறுவீராக! 

திருக்குர்ஆன் 7:158

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பொறுப்பாளனோ, உதவுபவனோ இல்லை.

திருக்குர்ஆன் 9:116

'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக! 'ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?' எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள்.'அஞ்ச மாட்டீர்களா?' என்று கேட்பீராக! 'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)' என்று கேட்பீராக!'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?' என்று கேட்பீராக! 

திருக்குர்ஆன் 23:84-89

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

திருக்குர்ஆன் 24:42

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்;உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:13,14

மிகைத்தவனும், வள்ளலுமாகிய உமது இறைவனது அருட்கொடையின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா?அல்லது வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அவர்களுக்கு உள்ளதா?...

திருக்குர்ஆன் 38:9,10

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

திருக்குர்ஆன் 39:6

'பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 39:44

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.

திருக்குர்ஆன் 42:49

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் அதிகாரத்துக்குரியவன் பாக்கியம் பொருந்தியவன். (உலகம் அழியும்) அந்த நேரம் பற்றிய அறிவு அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 43:85

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 48:14

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். அனைத்துப் பொருட்கள் மீதும் அவன் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 57:2

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. காரியங்கள் (யாவும்) அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

திருக்குர்ஆன் 57:5

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. அவனுக்கே புகழ் உரியது. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 64:1

எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 67:1

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.

திருக்குர்ஆன் 85:9

பின்னர் அவர்களது உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவார்கள். கவனத்தில் கொள்க! அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவன் விரைவாகக் கணக்கெடுப்பவன்.

திருக்குர்ஆன் 6:62

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இவ்வுலகிலும், மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 28:70

'அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்'என்பதே இதற்குக் காரணம். உயர்ந்தவனும், பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே அதிகாரம். 

திருக்குர்ஆன் 40:12

'நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்' என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:57

'அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.'

திருக்குர்ஆன் 12:40

'என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்' என்றார். 

திருக்குர்ஆன் 12:67

'அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 18:26

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 28:88

Monday, October 06, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-5) - இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை!

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-5) - இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை!

ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்' என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:163

அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பித்து விட்டனர். 'அனுபவியுங்கள்! நீங்கள் சென்றடையும் இடம் நரகமே' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 14:30

'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?' என்று கேட்கிறான். 'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 36:78, 79

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 41:9

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

'அல்லாஹ் ஒருவன்' எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:14

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

திருக்குர்ஆன் 7:191,192,193

உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:34

உங்கள் தெய்வங்களில் உண்மைக்கு வழி காட்டுபவர் உண்டா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே உண்மைக்கு வழி காட்டுகிறான் என்று கூறுவீராக! உண்மைக்கு வழி காட்டுபவன் பின்பற்றத்தக்கவனா? பிறர் வழி நடத்தினால் தவிர தானாகச் செல்ல இயலாதவை பின்பற்றத் தக்கவையா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

திருக்குர்ஆன் 10:35

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 30:40

Friday, September 26, 2014

அவதூறு சுமத்தி விட்டு ஓட்டமெடுக்க முயலும் மீடியா மொஜிக்கர் நிஜாமுதீனை விரட்டும் தவ்ஹீத் ஜமாஅத்!

அவதூறு சுமத்தி விட்டு ஓட்டமெடுக்க முயலும் மீடியா மொஜிக்கர் நிஜாமுதீனை விரட்டும் தவ்ஹீத் ஜமாஅத்!

தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞரும், சினிமா தியோட்டரில் மார்க்க ஆய்வு செய்யும் மார்க்க மேதையுமான அதிரை மீடியா மெஜிக் நிஜாம் என்பவர் விவாதத்தில் தப்பிக்க போடும் வித்தைகளை தோலூரித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று (26.09.2014) அனுப்பட்ட கடிதம்.




Wednesday, July 16, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-4) - தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை!

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர் - 4) - தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!' என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.

திருக்குர்ஆன் 21: 25

'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65,66

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்'என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:59

ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?' என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 7:65

ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து சான்று வந்துள்ளது ..... என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:73

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது .... என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:85

ஆது சமுதாயத்திடம், அவர்களது சகோதரர் ஹூதை (அனுப்பினோம்). 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் கற்பனை செய்வோராகவே இருக்கிறீர்கள்’ என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 11:50

ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்). 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் அருகில் உள்ளவன்; பதிலளிப்பவன்' என்றார்.

திருக்குர்ஆன் 11:61

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்' என்றார்.

திருக்குர்ஆன் 11:84

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?' என்று கேட்டார்.

திருக்குர்ஆன் 23:23

'அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?' என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!

திருக்குர்ஆன் 43:45

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? 'எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது 'உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல்,இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்' என்றே (பிள்ளைகள்) கூறினர்.

திருக்குர்ஆன் 2:133

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

திருக்குர்ஆன் 9:31