Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Saturday, April 05, 2014

திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று எந்த உத்திரவாதமும் தர முடியாது - பீஜே

திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று எந்த உத்திரவாதமும் தர முடியாது - பீஜே

[திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்ற எந்த வித  உத்திரவாதத்தையும் தர முடியாது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சகோதரர் பிஜே அவர்கள் உணர்வு வார இதழில் கேள்விகள் பகுதியில் ஜெயலலிதா மற்றும் கலைஞர் பாஜகாவுடன் சேர முகந்திரம் இருப்பதை விளக்கி பதில் அளித்து இருந்தார். இதை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொய்யை பரப்புவதையே தொழிலாக கொண்ட ஒரு இணையதளம், ஜெயலலிதா பாஜகாவுடன் கூட்டணி வைப்பார் என்று பீஜே சொல்லிவிட்டார் என்று திரித்து செய்தி வெளியிட்டுயிருந்தார்கள். முழமையான பதிலை வெளியிடாமல், பாதி பதிலை வெட்டி வெளியிட்டுயிருந்தார்கள். பின்னர் சிலர் கேள்வி எழுப்பியவுடன் முழமையான செய்தியை வெளியிட்டுயிருந்தார்கள். செய்தியை திரித்து வெளியிட்டும் இவர்களுக்கு எந்த பலனும் கிட்டவில்லை. உணர்வில் வந்த கேள்வியையும் பதிலையும் முழுமையாக இங்கு வெளியிடுகிறோம்.]

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லையே?

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லை. கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதுபற்றி ஜெயலலிதா தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று மேடை தோறும் கேள்வி எழுப்பியும் வாய் திறக்காமல் இருக்கிறாரே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

காங்கிரஸ் தனது மதவாதப் போக்கில் இருந்து திருந்திக் கொண்டால் காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று கருணாநிதி கூறுவதன் பொருள் என்ன?

ஜெயலலிதாவும், கருணாநிதியும் தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதாயம் தரும் முடிவைத்தான் எடுப்பார்கள். மத்திய ஆட்சியில் தமக்கும் பங்கு இருந்தால்தான் தமிழகத்துக்கு நன்மை செய்ய முடியும் என்ற பதிலை ரெடிமேடாக வைத்துள்ளனர்.

இருவரையும் இந்த விஷயத்தில் நாம் பிரித்துப் பார்க்க முடியாது.

கருணாநிதியை எடுத்துக் கொண்டால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர முயற்சித்து, பா.ஜ.க சேர்த்துக் கொள்ளாததால், கூட்டணி வைக்காமல் போனவர்.

புதிய தலைமுறை தொலைக் காட்சியில் பா.ஜ.கவைச் சேர்ந்த பெண் தலைவி ஒருவர், திமுக சார்பில் கலந்து கொண்ட தலைவரை நோக்கி “எங்களை மதவாத சக்தி என்று சொல்லும் நீங்கள், எங்களுடன் கூட்டணிக்கு கெஞ்சினீர்கள், நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம் என்று சொன்னார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த திமுக தலைவர, இதை மறுக்கவில்லை. உலகமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட குற்றச்சாட்டை திமுக தலைமை இன்று வரை மறுக்கவில்லை.

தேர்தலுக்குப் பின்னால் பார்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் அவர்களுக் கிடையே முடிவாகியுள்ளது என்பது, உன்னிப்பாக கவனிக்கும் அனை வருக்கும் தெரிகின்றது.

இதனால்தான் திருச்சிக்கு மோடியின் முதல் வருகையை எதிர்த்து சில முஸ்லிம் அமைப்புகளும், தமிழர் அமைப்புகளும் போராட்டம் நடத்தியபோது இதைக் கருணாநிதி கண்டித்தார்.

ஏற்காடு இடைத்தேர்தலில் பா.ஜ.க ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதினார்.

தினமலருக்கு அளித்த பிரத்தியோகப் பேட்டியில் ”மோடி எனது நண்பர்” என்றார்.

தேர்தலுக்குப் பின்னால் பா.ஜ.க.வை ஆதரிக்கலாமா என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்றும் கூறினார்.

இதனால் முஸ்லிம் வாக்குகள் முழுமையாக திசை மாறுவதை உணர்ந்து, மோடியும் ராகுலும் அல்லாத ஒருவர் பிரதமராக, ஆதரவு தெரிவிப்போம் என்று பல்டி அடித்தார்.

ராகுல் பிரதமராக ஆதரவு இல்லை என்ற சொல்லில் இருந்தும் பல்டி அடித்து காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று மாற்றினார்.

காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிட்டால் காங்கிரஸை ஆதரிப்போம் எனக் கூறி, பா.ஜ.க போலவே காங்கிரசும் மதவாதக் கட்சி என்று இப்போது கூறுகிறார். இதுதான் இவரது கடைசி நிலையாக உள்ளது. (இதன் பிறகு அடிக்கும் பல்டிகள் எத்தனை என்று இனிமேல் தெரிய வரும்)

மதவாதக் கட்சியாக காங்கிரஸ், இருந்தது இல்லை. மதவாதத்தைக் கைவிடுவதாக காங்கிரஸ் அறிவிக்கத் தேவையில்லை. கைவிடுவதாக அறிவித்தால் இதற்கு முன் மதவாதத்தில் அக்கட்சி இருந்ததாக ஆகிவிடும். காங்கிரஸ் எதை அறிவிக்காதோ அதை அறிவிக்குமாறு கருணாநிதி கேட்கிறார்.

காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. எனவே பாஜக காங்கிரஸ் இரண்டுமே மதவாதக் கட்சிகள்தான். இரண்டில் ஒன்றைத்தான் ஆதரிக்க முடியும் என்பதால் பாஜகவை ஆதரிக்கிறேன் என்று தேர்தலுக்குப் பின்னால் சொல்வதற்காகவே காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பத்தினிப் பெண்ணிடம் போய் இனிமேல் விபச்சாரம் செய்ய மாட்டேன் என்று, அறிவித்தால்தான் உன்னை நம்புவேன் என்று சொல்வதுபோல அவரது கடைசி வாக்குமூலம் உள்ளது.

முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குரிய டயலாக்குகளும் அவரிடம் உள்ளது. அவரை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கத்தினர் அதை எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்கிறார்கள். இந்துத்துவா சக்திகளை ஏமாற்றும் டயலாக்குகளும் அவரிடம் உள்ளன. அவரை நம்பும் பா.ஜ.க.வினர் அதை மேற்கோளாகக் காட்டி தேர்தலுக்குப்பின் திமுகவின் ஆதரவைத்தான் கோருவோமே தவிர, அதிமுகவின் ஆதரவைக் கோரமாட்டோம் என்று கூறுவது இதனால்தான்.

காங்கிரஸ் குறித்தும், மோடி குறித்தும் இந்த இரண்டு மாதத்தில் ஆயிரம் பல்டி அடித்தவருக்கு தேர்தல் முடிந்தபின் இன்னொரு பல்டி அடிப்பது எளிதானதுதான்.

தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க, நான் ஒரு போதும் துணை நிற்கமாட்டேன் என்று கருணாநிதி, தெளிவாகக் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கூறுகிறார்.

அப்படி தெளிவாகக் கூறினாலும் கருணாநிதி அதை அப்பட்டமாக மீறுவதற்கு வெட்கப்பட மாட்டார். இது கருணாநிதியின் நிலை.

ஜெயலலிதா தன்னைப் பிரதமர் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும் அப்படித்தான் ஆரம்பத்தில் காட்டிவந்தார்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் மூன்றாவது அணியில் அங்கம் வகித்தார். கம்யூனிஸ்டுகள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கினார்.

மம்தா, சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் ஆதரவையும் திரட்டினார்.

இப்படி அவர் காட்டிக் கொண்டாலும், பாஜக ஆட்சி அமைக்க தனது எம்பி.க்கள் பலம் உதவுமானால் நிச்சயம் அவர் பாஜகவை ஆதரிக்கத் தவற மாட்டார்.

நான் ஒரு போதும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று அவர் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்கிறார்.

நான், ஒரு போதும் மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா சத்தியம் செய்து கூறினாலும் நம்மைப் பொறுத்தவரை அதை நம்ப மாட்டோம்.

1999ல் நாம் நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில், அவர் இதுபோல் கூறினார். நான்தான் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினேன். நானே அதைக் கவிழ்த்துவிட்டேன். இனி ஒரு போதும் பா.ஜ.கவை ஆதரிக்கமாட்டேன் எனக்கூறிவிட்டு பின்னர் பா.ஜ.கவுடன் சேர்ந்தார்.

”எனவே ஜெயலலிதாவாக இருந்தாலும், கருணாநிதியாக இருந்தாலும் நாங்கள் பாஜகவை ஆதரிக்கவே மாட்டோம் என்று தெளிவான வார்த்தைகளால் சத்தியம் செய்து சொன்னாலும் அறிவுடைய மக்கள் அதை நம்பமாட்டார்கள்.”

ஆனால் கருணாநிதி, இரு முகம் காட்டி இருவகையாக பேசுவதால், இவர் பாஜகவை ஆதரிக்கமாட்டார் என்று அப்பாவிகள் நம்புவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஜெயலலிதா பாஜக பற்றி வாய் திறக்காததால் அவர் பாஜக பக்கம்தான் போவார் என்று அப்பாவிகள் நம்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

”ஜெயலலிதா கருணாநிதி இருவர் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல், இருவரது கடந்த கால செயல்பாடுகளைச் சீர்தூக்கி பார்க்கும் மக்கள் தான் இதைப்புரிந்து கொள்வார்கள்.”

கருணாநிதி, பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என்பதுபோல பேசுகிறார். ஆனால் ஜெயலலிதா வாய் திறக்கமாட்டேன் என்கிறார் என்பதை மட்டும் பார்க்கும் அப்பாவி முஸ்லிம்களின் ஆதரவை ஜெயலலிதா, இழப்பார். ஜெயலலிதா, பாஜகவை ஆதரிப்பார் என்ற பிரச்சாரம் ஓரளவு எடுபடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.

ஆனால் “கருணாநிதி பாஜக பக்கம் போகமாட்டார் என்று நம்பும் இவர்கள் பின் ஏமாறுவார்கள். இருவருமே பாஜகவின் இரகசிய நண்பர்கள் என்று நம்புவதால் நமக்கு எந்த ஏமாற்றமும் ஏற்படாது.
எனவே ஜெயலலிதாவின் மவுனம் முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவைக் குறைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நாம் உறுதிபடக் கூறிக்கொள்கிறோம்.”

ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பதை நாம் அறிவோம்.
பாஜக.வுக்கு அந்த அளவு பெரும்பான்மை கிடைக்கும் என்று பாஜகவிடம் விலை போன ஊடகங்கள் கூட, கருத்துக் கணிப்பில் கூற முடியவில்லை.
கடைசியாக பாஜக ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கும், பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கட்சிகளுக்கும் சேர்த்து 233 இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள். எனவே, இன்னும் நாற்பது எம்பி.க்களின் ஆதரவு தேவைப்படும். இதற்காக பல்வேறு மாநிலக் கட்சிகளிடம் பாஜக பேரம் பேசும்.
அதிமுக 20, திமுக 20 என்ற அளவில் வெற்றி பெற்றால் இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவைத்தான் பெறமுடியும். இரு கட்சிகளுமே பாஜகவுக்கு ஆதரவு அளிக்க போட்டி போடுவார்கள். ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடி என்று ஊழல் செய்ய உதவும் பதவிகளை அடைய இருவரும் துடிப்பார்கள்.
ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து சம்பாதித்ததை(?) விட பல மடங்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவியின் மூலம் சம்பாதிக்க முடியும். இதை இருவருமே எளிதாக விட்டுவிட மாட்டார்கள்.
இருவருமே பாஜகவை ஆதரிக்க போட்டி போடும்போது, 13 மாதங்களில் ஆதரவை வாபஸ் பெற்று வாஜ்பேய் ஆட்சியைக் கவிழ்த்த ஜெயலலிதாவை விட, கருணாநிதியைத்தான் பாஜக தேர்வு செய்யும். குஜராத் கலவரம் போன்ற இன அழிப்பு நடந்தாலும், கருணாநிதி நம்மை உறுதியாக ஆதரிப்பார் என்றுதான் பாஜக நினைக்கும்.

நாற்பது இடங்களையும் ஜெய லலிதா கைப்பற்றினார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மானம் கெட்ட பாஜக அதிமுகவின் ஆதரவை நாடும். அதிமுகவும் ஆதரிக்கும்.

நாற்பது இடங்களையும் திமுக வென்றாலும் இதுதான் நடக்கும்.
ஆட்சியில் பங்கேற்று பதவிகளைப் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்வதற்குத்தான் அரசியல் நடத்துகிறார்களே தவிர, சேவை செய்வதற்கு அல்ல.
பாஜகவுக்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட 233 இடங்கள், காங்கிரசுக்குக் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் இதே நிலைதான் ஏற்படும்.
திமுக 20, அதிமுக 20 என்று வெற்றி பெற்றாலும் இருவரும் காங்கிரசை ஆதரிக்க நான், நீ என்று போட்டி போடுவார்கள். 3ஜி ஊழல் பிரச்சினை வந்தபோது, திமுகவை கழற்றிவிட்டால் காங்கிரசை ஆதரிக்க நான் தயார் என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்ததை நாம் மறந்து விட முடியாது.
ஆனால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸை ஆதரிக்க முன்வந்தாலும் காங்கிரஸ், திமுக ஆதரவைத்தான் ஏற்றுக்கொள்ளும். ஜெயலலிதா, சோனியாவை அவமானப்படுத்தியதை காங்கிரஸ் மறக்காது.
எல்லா தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றினால், தனது ஆதரவினால் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றால் இரண்டு கட்சிகளுமே மானத்தை இழந்து கூட்டு சேருவார்கள்.
காங்கிரசுடன் பாஜக கூட்டுசேராது, அதிமுகவுடன் திமுக கூட்டுசேராது என்பது மட்டுமே இன்றைய நிலையில் உறுதியானது.
மற்ற யாருடனும், யாரும் கூட்டு சேருவார்கள். அரசியல் என்பது பதவி பெற்று சம்பாதிப்பதற்குத்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முடிவாகச் சொல்வது என்றால் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே பாஜகவுடன் சேர்வதால் லாபம் கிடைக்கும் என்றால் சேர்வார்கள். ஆனால் ஜெயலலிதா, பாஜக பற்றி வாய் திறக்காமல் இருப்பது, நுணுக்கமான விஷயத்தைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களின் ஆதரவை இழக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இடஒதுக்கீட்டுக்காக ஆதரிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் முஸ்லிம்களின் ஆதரவில் சிறிய அளவிலாவது இந்த மவுனம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜெயலலிதா உணர்வது, அவருக்கு நல்லது.

Wednesday, March 19, 2014

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?


Sunday, March 09, 2014

அதிமுகவிற்கு ஆதரவு ஏன்? விமர்சனங்களும் விளக்கங்களும்

அதிமுகவிற்கு ஆதரவு ஏன்? விமர்சனங்களும் விளக்கங்களும்

தமுமுக பிஜேபியோடு சேர்ந்து போராட்டம் பண்ணிய போது நாங்க சும்மா தாங்க இருந்தோம், அம்மாவை அடுத்த பிரதமர் என்றும், தானே புயல் மீண்டும் வராதா என்றும் ஜால்ராவில் கின்னஸ் சாதனை படைத்த ஜவாஹிருல்லாவை கூட நாங்கள் வாய் திறந்து கேட்டது இல்லைங்கோ, ஆனா ததஜ எதை செய்தாலும் நாங்க எதரிப்போமுங்கோ , நாங்க நடுநிலையானவர்களுங்கோ, எங்களை நம்புங்கோ நம்புங்கோ.... 
தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சிறை செல்லும் போராட்டத்தை நடத்தியது. இடஒதுக்கீட்டை ஆணையம் அமைத்து உயர்த்தி தருவது தான் பாதுகாப்பானது என்பதை சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பின் மறு ஆய்வு செய்து ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றியதன் அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளது 

இது சம்பந்தமாக எழுந்த அனைத்து  விமர்சனங்களுக்கும் சகோ பிஜே அவர்கள்  கீழ்காணும் வீடியோக்களில்  பதில் தந்துள்ளார். இவற்றை பார்த்து எங்களை எதிர்க்கக்கூடிய ஆதரிக்க கூடிய எவரும் உங்களுக்கு எழும் கேள்விகளையும் விமர்சனங்களையும் கருத்து பகுதியில் பதியலாம். அதற்கான பதில் தரப்படும். இன்ஷாஅல்லாஹ்

தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் எதிர்க்கும் சில நடுநிலையாளர்கள் (?) தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இணையதளங்களில் மட்டும் தங்களின் விமர்சனங்களை பதிகிறார்கள், இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இணையதளத்தில் மட்டும் தங்களின் விமர்சனங்களை பதிய காரணம், அங்கு அவர்களை காப்பாற்றி விடுவார்கள், ததஜவிற்கு எதிரான தங்களின் அவதூறுகளை பரப்பலாம் என்பது இவர்களின் நோக்கம். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த ஆக்கத்தில் தங்களின் கருத்துக்களை பதியலாம், அவர்களுக்கு முழு உரிமை உண்டு, அவர்களின் அனைத்து வாதங்களுக்கும் அழகிய முறையில் பதில் தரப்படும்.

பிஜேவின் புத்தகத்தில் இருந்து திருடி கட்டுரை போடும் திருட்டு நிருபர்கள் சில சந்தேங்களை கிளப்பி விட்டுள்ளார்கள், அது தனியாக கவனிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

இது அல்லாமல், ஃபேஸ்புக்கில் நாம் என்ன வேண்டுமானலும் எழுதலாம். அதற்கு பதில் எழுதுபவர்களின் கருத்துக்களை நாம் நீக்கலாம் என்று சிலர் மணப்பால் குடிக்கிறார்கள். இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

பாகம்-1

பாகம்-2


பாகம்-3

பாகம்-4

பாகம்-5

Monday, August 26, 2013

திமுக அதிமுக என்று மாறி மாறி ஆதரிப்பது சரியா?

திமுக அதிமுக என்று மாறி மாறி ஆதரிப்பது சரியா?

Tuesday, April 05, 2011

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு பற்றிய கேள்விகளும் பதில்களும்

 - வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்தது ஏன்?

 - இந்த முடிவு எடுக்க தக்க காரணம் உள்ளதா?

 - விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற குற்றச் சாட்டுக்கள் ஆளும் கட்சி மீது சொல்லப்படும் நிலையில் இந்த முடிவு சரியானது தானா?

 - இலவசத் திட்டங்களால் நன்மை உண்டா?

 - அதிமுகவை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கங்களின் முடிவு பொது நலம் உள்ளதா?

 - முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்தால் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண:




Sunday, March 27, 2011

திமுகவை ஆதரிக்க என்ன காரணம்?

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.

இறைவனின் மாபெரும் கிருபை:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.

இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.

கொள்கை ரீதியாக மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும் யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம் எனலாம். சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரப்போகும் தேர்தலையும் சமுதாயத்தின் நன்மையை முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்தது.

பொதுக்குழுவும் அவசர செயற்குழுவும்:

மற்ற தேர்தல்களைப் போல அல்லாமல் இந்தத் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமான அவசரமான தேர்தலாக மாறிப் போனது. இந்த அவசரத்தில் எப்படியாவது துண்டு போட்டு 3 சீட்டு பிடித்து விட வேண்டும் என்ற ரீதியில் இதே சிந்தனையாக, அந்த அமைப்பு சார்ந்த எந்த மக்களின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக மற்ற அமைப்பினர்கள் தூது விட்டுக் காத்திருக்க, இந்த அவசரத்திலும் அசராமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவைக் கூட்டி மக்கள் முடிவைக் கேட்டது.

அதாவது ஆளும் திமுக இடஒதுக்கீட்டு அதிகரிப்பை இப்போதே சட்டமாக்க வேண்டும். அப்படி சட்டமாக்கினால் திமுகவை ஆதரிப்பது என்ற ஒரே முடிவு. அவ்வாறு நடைபெறா விட்டால் அதிமுக அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். திமுக இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னால் அதிமுகவை ஆதரிப்பது என்ற செயல் திட்டத்தோடு சேலம் பொதுக்குழு நிறைவுபெற்றது.

ஆனால் ஆளும் திமுகவினர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமாக்காமல் சென்றதால் பொதுக்குழு முடிவுப்படி அதிமுகவை ஆதரிக்கும் செயல்திட்டத்தோடு சென்னை திநகரில் அவசர செயற்குழு கூட்டப்பட்டது. செயற்குழு அறிவித்த அந்த நேரத்தில் அதிமுக தலைமை தவ்ஹீத் ஜமாத்தோடு இந்த இடஒதுக்கீடு விசயத்தில் நெருங்கி வந்திருந்தது.

அதாவது கட்டாயமாக தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என்ற நிலையில் இருந்தது அதிமுக தலைமை. ஆனாலும் அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் அல்வா கொடுப்பார்கள் என்ற ரீதியில் அதே நிலைபாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது அதிமுக இடஒதுக்கீட்டை அறிவித்தால் அவர்களுக்கு சீரிய ஆதரவு என்றும், அறிவிக்காவிட்டால் சும்மா கடமைக்கு தார்மீக ஆதரவு என்றும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.

அதிமுகவினர் ஏற்படுத்திய நம்பிக்கை:

செயற்குழு முடிந்தும் கூட திமுகவினர் தலைமையைத் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் அவர்களை நிராகரித்து அனுப்பியது தலைமை. ஆனாலும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார்கள் அதிமுகவினர். தேர்தல் அறிக்கை பற்றி அவர்களிடத்திலே தொடர்ந்து கேட்கப்பட்டது. அதெல்லாம் கவலையே படாதீர்கள். உங்கள் கோரிக்கையான சமுதாய இடஒதுக்கீடு அதிகப்படுத்தும் செய்தி ஒரு எழுத்து கூட விடுபடாமல் தேர்தல் அறிக்கையில் தயாராகி விட்டது என சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய செயற்குழு முடிவை மூடியே வைத்து மவுனம் காத்தது.

அதிமுகவின் துரோகமும் சமுதாயக்காவலர்களின் மௌனமும்:

இந்த நிலையில் திருச்சியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த அதிமுக தலைவர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் அதில் இஸ்லாம் அல்லது முஸ்லீம் என்ற ஒரு வார்த்தை கூட இல்லாலது கண்டு கொதிப்படைந்தது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை. சாதரண துரோகத்தைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் இது பச்சை நம்பிக்கை துரோகம் என்ற ரீதியில் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி இதை மக்கள் மன்றத்தில் வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அதிமுகவை ஆதரித்தவர்களும், அவர்களிடத்திலே சீட்டு வாங்கியவர்களும் இதைப் பற்றி ஏதாவது பேசினால் நமக்கு கிடைத்த சீட்டு பறிபோய் விடும் என்ற நிலையில் வாய்மூடி மௌனியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், பார்த்தீர்களா! ஜெயலலிதா திருச்சி கூட்டத்திலே இடஒதுக்கீடு குறித்து சொல்லிவிட்டார் என்ற ரீதியில் முழக்கமிடவும் துவங்கிவிட்டார்கள்.

தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்த செய்தி இல்லையென்றதும் பதறியடித்து கூட்டணியை விட்டே வெளியே வந்திருக்க வேண்டாமா? அல்லது இடஒதுக்கீடு குறித்த உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள் என அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டாமா? எங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கிடைத்தால் போதும் நாங்கள் வெற்றிபெற்றால் போதும் என போகிற போக்கில் காற்றுவாக்கில் சொல்கிற கோரிக்கைகளுக்கு கொடிபிடித்து அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களின் செயல் வெறுப்பைத் தான் ஏற்படுத்துகிறது

மீண்டும் கூடிய அவசர பொதுக்குழு:

இந்த விசயத்தில் திருப்தியடையாத‌ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக‌ அவசர பொதுக்குழுவைக் கூட்டியது. செய்யவே மாட்டேன் என சொல்பவனும், வாய்ப்பிருந்தால் செய்வேன் என சொல்பவனும் சமமாக மாட்டான். அதே ரீதியில் தான் திமுகவினரின் இன்றைய நிலையும், அதிமுகவினர் இன்றைய நிலையையும் மக்கள் மன்றத்திலே வைப்பது என முடிவுசெய்யப்பட்டு இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து அதை இருமடங்காக்கி வழங்குவேன் என தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, இடஒதுக்கீட்டு விசயத்தை மட்டும் தூக்கி தூர எறிந்தார்.

அதைப் பற்றி பேசுவதற்கோ கேட்பதற்கோ அம்மாவின் நவீன அடிமைகள் தயங்கும் போது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பணிய மாட்டோம், தேர்தல் நட்பு தேர்தல் முடியும் வரை மட்டும் தான். அடுத்த நாள் அவர்களால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையாக களமிறங்குவோம், நமக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை, நம் ஆதரவு தான் அவர்களுக்குத் தேவை என்ற ரீதியில் இன்று வரை இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரு கட்சியினர் செய்த துரோகங்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தது.

வாக்கெடுப்பும் மக்களின் தீர்ப்பும்:

இந்த இடத்தில் சமுதாயத்திற்கு அதிமுக செய்த நம்பிக்கை துரோகத்தை விட, திமுகவின் துரோகம் கொஞ்சம் குறைவு என்ற ரீதியிலும், தவ்ஹீத் ஜமாஅத்திடம் வாக்குறுதி கொடுத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஏமாற்ற நினைத்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற ரீதியிலும் இரண்டு விசயங்கள் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன.

1) இந்த தேர்தலில் நம் சமுதாயத்திற்கு யாருமே நன்மை செய்துவிடவில்லை, இரண்டு கட்சிகளுமே துரோகம் தான் செய்தார்கள். எனவே யாருக்கும் ஆதரவு இல்லை. ஜமாஅத் பெயரையும் கொடியயும் பயன்படுத்தி ய்யாருக்கும் வேலை செய்யக் கூடாது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்து ஓட்டளிக்கலாம்

2) திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்ததும் சமமானதல்ல என்பதால் திமிகவுக்கு ஆதரவு அளிப்பது

என்ற இரண்டு விசயங்கள் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன. மக்களுக்கு வாய்ப்பளித்து முதல் கோரிக்கை சராசரியாக 20 % வாக்குகளைப் பெற்றது. அதே போல இரண்டாவது கோரிக்கை மக்களின் ஏகோபித்த தீர்ப்பாக ஏறத்தாழ 80% வாக்குகளைப் பெற்றது.

மக்களின் ஏகோபித்த முடிவைத்தான் தலைமையே ஏற்றுக் கொள்ளும் என்ற ரீதியில் திமுக அணியை 234 தொகுதிகளிலும் ஆதரிப்பது என்ற மக்களின் முடிவை தலைமை அறிவித்தது. இது எந்த நிலையிலும் தன்னிச்சையான முடிவு அல்ல.

ஆக சமுதாயத்தைக் காட்டி ஒன்று, இரண்டு, மூன்று அதுவும் இல்லைன்னாலும் பரவாயில்லை கிடைத்ததை வாங்கிக்கொண்டு கிடையாய்க் கிடக்கிறோம், நீங்கள் தான் சமுதாய காவலர், நாங்கள் காலங்காலமாக நீங்கள் சமுதாயத்திற்கு என்ன துரோகம் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம், எங்களுக்கு 3 தாருங்கள் நாங்கள் 300க்கு உழைப்போம் என அவர்களுக்கு கொடி தூக்குவதும், இவர்களை ஆதரிக்கும் போது அவர்களைத் திட்டுவதும், அவர்கள் பக்கம் ஓடிவிட்டால் இவர்களைத் திட்டுவதும் என மோடிமஸ்தான் வேலைகளைச் செய்து எப்படியாவது தங்களை சமுதாய காவலர்களாக காட்டிக்கொள்ள துடிக்கும் சமுதாய துரோகிகளுக்கு மத்தியில் மக்கள் முடிவே அமைப்பின் முடிவு என்ற நிலையை மட்டும் கையாளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து விளங்குகின்றது. எல்லா புகழும் இறைவனுக்கே!