Showing posts with label பித்தலாட்டம். Show all posts
Showing posts with label பித்தலாட்டம். Show all posts

Sunday, December 01, 2013

அதிரை கடல்கரைத் தெரு கந்தூரி திருவிழா - கடற்கரைத் தெரு ஏகத்துவவாதிகளின் கடமை என்ன?

அதிரை கடல்கரைத் தெரு கந்தூரி திருவிழா - கடற்கரைத் தெரு ஏகத்துவவாதிகளின் கடமை என்ன?

Sunday, March 03, 2013

சவூதியில் பிஜே! (வீடியோ)


பிஜே சவூதி அரேபியாவிற்குள் நுழைய முடியாது. பிஜேவிற்கு சவூதி அரசாங்கம் சவூதிக்குள் நுழைய தடை விதித்துள்ளது என்று அரபு நாட்டு அடிமைகள் பலர் சொல்லி திரிந்தனர்.

பிஜே அவர்கள் உம்ரா செய்ய தான் சவூதி சென்றார். எனவே, அவரது பயணம் பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை. சவூதி அரேபியாவில் தவ்ஹீத் ஜமாஅத் எந்தவித தடையுமின்றி செயல்பட்டு வருகிறது. சகோதரர் பிஜே மற்றும் அல்தாஃபி, தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு சவூதி மண்டல நிர்வாகிகளை சந்தித்தனர். மேலும், அல்கஸீம் மண்டலத்தில் சொற்பொழிவு ஆற்றினார்கள்.





பிஜே சவூதிக்குள் நுழைய முடியாது என்று சொல்லித்திரிந்த அயோக்கர்களின் முகத்தில் தார் பூசப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

பிஜே அல்கஸீம் மண்டலத்தில் ஆற்றிய உரையின் வீடியோ:

தலைப்பு: இஸ்லாம் நமக்கு கிடைத்த பாக்கியம்


Monday, February 11, 2013

பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?


பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?

பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாக்கர் தூக்கி விசப்பட்டார். தவ்ஹீத் ஜமாஅத்தை கடுமையாக எதிர்த்து வந்தவர்கள், பாக்கரை தவ்ஹீத் ஜமாஅத் விரட்டியவுடன் பாக்கர் பின் அணிவகுத்தார்கள். 

பாக்கர் ஆரம்பித்த இயக்கத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் மற்றும் ஊழல் காரணமாக தூக்கி விசப்பட்டவர்களை சேர்த்து இயக்கத்தை பலப்படுத்தினார்கள். பலர் பாக்கரின் காசுக்காக அவர் பின்னால் சென்றார்கள்.

பாக்கர் என்பவர் ஒரு இயக்கத்தை வழி நடத்த தகுதியானவரா? இவர்களுக்கு விளம்பரம் கொடுப்பது சரியா? 

தடம்புரண்ட தவ்ஹீத்வாதிகள் இவரை பின்பற்றுகிறார்கள், இவரை ஆதரிக்கிறார்கள். இந்த பாக்கர் கும்பலில் உள்ளவர்களை சிலர் ஜூம்ஆ உரை கூட ஆற்ற வைக்கிறார்கள்.

பாக்கரின் உண்மையான கொள்கை என்ன? பாக்கர் இயக்கத்தில் இருப்பவர்களின் உண்மையான தவ்ஹீத் என்ன? என்பதை விரிவாக அறிய கீழ்காணும் வீடியோக்களை பாருங்கள்.



பேருந்தில் ஒரு பெண்ணுடன் சில்மிஷம் செய்து சென்றுவிட்டு, அப்படி செய்வது தவறா என்று ஹதீசை தனது கேவலமான செயலுக்கு வளைக்கும் பாக்கர்!



தொடர்ச்சியாக பாக்கர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தவுடன், தவ்ஹீத் ஜமாஅத் பாக்கரை மேடையில் ஏறக்கூடாது என்று தடை போட்டது. மேலும், அவரை ஜமாஅத்தை விட்டு ஒதுங்கி கொள்ளுமாறு அறிவுரை செய்தது. பாக்கர் அதை செவிமடுக்காமல், நான் ரொம்ப நல்லவன் என்றார். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக சதி வேளையில் இறங்க ஆரம்பித்தார்.

பாக்கர் மீது தொடர்ச்சியாக வந்த பொருளதார மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி, மண்ணடியில் பாக்கர் தனது குற்றச்சாட்டை மக்கள் மத்தியில் விவாதிக்க தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விட்டது. இன்று வரை பாக்கர் அந்த சவாலை ஏற்க முன்வரவில்லை.  அந்த விபரத்தை கீழ்காணும் வீடியோவில் காணுங்கள்.



பாக்கர் நல்லவரா? என்பதை இன்று வரை பாக்கருடன் இருக்கும் சித்தீக் சொல்வதை கேளுங்கள்.


சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி, தனது தவறை திருத்திக்கொண்டு வாழ வேண்டிய இந்த நபர் இயக்கம் ஆரம்பித்து படம் காட்டுகிறார், பிழைப்பு நடத்துகிறார்.

இவருக்கு விளம்பரம் கொடுப்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

ஒரு தனி மனிதனின் மானத்தோடு இப்படி விளையாடாலாமா? என்று சிலர் கேட்கலாம். சகோதரர் பிஜே அவர்களின் மானத்தோடு இவர்கள் வரம்பு மீறி விளையாடியிருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் எங்களின் மீது அநியாயமாக பழி சுமத்துகிறது என்று பாக்கர் பொய்யை கூற ஆரம்பித்த காரணத்தினால், நாம் உண்மையை சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

Sunday, September 09, 2012

பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற தமுமுக - மம கட்சியினர்! தடுத்து நிறுத்திய காவல்துறை!!


சமுதாய மக்களின் பணத்தில் வாங்கிய ஆம்புலன்ஸ், சமுதாய சொத்தை ஆக்கிரமிக்க அழகாக பயன்படுகிறது.
தேர்தலில் நிற்க மாட்டோம் என்று மக்களிடம் சத்தியம் செய்த தமுமுகவினர், தவ்ஹீத் எங்களுக்கு தடை என்று அரசியலுக்கு போய், சாக்கடையை தூய்மைப்படுத்த போகிறோம் என்று சாக்கடையாகவே மாறிப்போன தமுமுகவினர், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அராஜகம் என்று தங்களின் தூய்மை முகத்தை காட்டி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டிணம் செக்கடிபள்ளிக்கு சொந்தமான செக்கடிமேட்டில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, காவல்துறையால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாயத்து தேர்தலில் சங்கம் நிறுத்திய வேட்பாளர்களை எங்கள் வேட்பாளர் என்று படம்காட்டி கேவலப்பட்டது. இவர்கள் நிறுத்திய வேட்பாளர்கள் பத்து ஓட்டுகள்கூட  வாங்காமல், இவர்களின் உண்மை பலத்தை காட்டியது என கேவலங்கள் பல வந்தாலும், மீண்டும் கேவலப்பட வேண்டும் என்ற ஆசையில் இப்போது வசமாக சிக்கியருக்கிறார்கள்.

இவர்கள் தமிழகம் முழுவதும் இப்போது செய்யும் ஒரே மகத்தான (?) சேவை.  ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்து படம் காட்டுவது தான். கருணாநிதியிடம் இரண்டு ஆம்புலன்சை  வாங்கிவிட்டு, பின்னர் இவர்களுக்கு சீட்டு கொடுக்காத போது அவரை துரோகி என்றார்கள் (ஆம்புலன்ஸ் வாங்கும் போது அவர் தியாகி). அதிரையிலும் இவர்கள் படம் காட்ட ஒரு ஆம்புலன்சை வாங்கி வைத்துள்ளார்கள்.


இந்த ஆம்புலன்சை  நிறுத்தி வைக்க வேண்டும் எங்களுக்கு செக்கடிமேட்டில் இடம் வேண்டும் என்று இவர்கள் செக்கடிப்பள்ளி நிர்வாகத்தை அணுகியுள்ளார்கள். இதற்கு பள்ளி நிர்வாகிகள், அரசியல் கட்சியாக உள்ள உங்களுக்கு இடம் தந்தால், ஒவ்வோரு இயக்கத்தவர்களும் இடம் கேட்பார்கள் என்று இவர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டார்கள். இவர்கள் ஆம்புலன்சை  நிறுத்த ஷிஃபா மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்ற இடங்கள் இருக்கும் போது, இப்படி தெருவுக்குள் தங்களின் ஆம்புலன்சை நிறுத்தி படம் காட்ட வேண்டும், ஆம்புலன்சுக்கு இடம் என்று சொல்லி வாங்கி, பின்னர் அதை கட்சி அலுவலகமாக பயன்படுத்த வேண்டும் என்ற இவர்களின் உண்மை நோக்கத்தை செக்கடிப்பள்ளி நிர்வாகிகள் கட்சிதமாக புரிந்துகொண்டார்கள்.



பள்ளி நிர்வாகிகள் அனுமதி மறுத்தவுடன், இவர்கள் கட்சியின் உண்மை அராஜகத்தை காட்டும் முகமாக, பள்ளி நிர்வாகிகளின் நல்ல முடிவை ஏற்காமல், நேற்று இவர்கள் செக்கடிமேட்டில் இவர்களின் ஆம்புலன்சை நிறுத்த இரும்பு கெட்டகை போட ஆரம்பித்தனர். தகவல் கிடைத்தவுடன் செக்கடிப்பள்ளி நிர்வாகிகள் காவல்துறையை அணுகிணார்கள். காவல்துறை வந்து இவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தடை போட்டு, இவர்களை விரட்டி அடித்தது. அல்ஹம்துலில்லாஹ்.
ஏனப்பா பள்ளிவாசல் சொத்தை அபகரிக்கிறீர்கள் என்று இவர்களிடம் கேட்டபோது, அது புறம்போக்கு நிலம், அதான் ஆட்டையை போட பார்க்கிறோம் என்றார்களாம் இந்த லஞ்சம் வாங்காத (?) ஆக்கிரமிப்பாளர்கள்.
என்றைக்கு இவர்கள் அரசியலை சுத்தம் செய்ய புறப்பட்டார்களோ!, அன்று முதல் ஆக்கிரமிப்பும் அராஜகமும் இவர்களின் அன்றாட வேலையாக ஆகிவிட்டது. சமீபத்தில் உணர்வு அலுவலகத்தை, தவ்ஹீத் ஜமாஅத்தினர் தர்பியா நிகழச்சிக்காக சென்று இருந்த போது, பூட்டியிருந்த உணர்வு அலுவலகத்தை உடைத்து, உள்ளே புகுந்து மோடியின் சகோதரன் ஜால்ரா மன்னர் எம்எல்ஏ அலுவலகம் என்று எழுதி தங்களின் ஆக்கிரமிப்பு செயலை செய்தார்கள். பின்னர், காவல்துறை வந்து அரை மணி நேரத்தில் உணர்வு அலுவலகத்தின் சாவி எங்களுக்கு வரவில்லையென்றால், டங்குவார் கிழிந்துவிடும் என்றவுடன், இந்த வீர பரம்பறை கூட்டம் சாவியை ஒப்படைத்துவிட்டு ஓட்டம் எடுத்தது.

வக்ப் வாரியத்தில் ஆட்டை போட்டது போதாது என்று, இப்போது அதிராம்பட்டிணத்தில் பட்ட பகலில் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டு மூக்குடைப்பட்டுள்ளனர்.  பிஜேபியுடன் சேர்ந்து கோயில் மீட்பு போராட்டம் நடத்திய இவர்களிடம் முஸ்லிம் விரோத செயலை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?


இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும், ஹாமீத் பக்ரியை தூக்கி விசிய நேரத்தில்,தவ்ஹீத் ஜமாத்துடன்  ஒன்றிணைந்து இருந்த தமுமுகவை விட்டு ஓட்டம் எடுத்துவிட்டு, இப்போது இந்த தமுமுக வில்  சரணாகதி  அடைந்துயிருக்கும் அக்குமார்க் (?) தவ்ஹீத்வாதிகளும் சிந்திக்க வேண்டும்.

Friday, August 24, 2012

ஓரிறைக் கொள்கையும் ஒற்றுமை கோஷமும் (வீடியோ)!

ஓரிறைக் கொள்கையும் ஒற்றுமை கோஷமும் (வீடியோ)

ஒற்றுமையா? மார்க்கமா? 

ஒற்றுமைகாக தவ்ஹீதை விட்டு கொடுக்க வேண்டுமா?

தவ்ஹீத் ஜமாஅத் வருவதற்கு முன் அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்களா?

ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லி இத்தனை இயக்கங்கள் ஏன்?

ஷாஃபி மற்றும் ஹனஃபி மத்ஹபினர்களுக்கு இடையியே நடந்த சண்டைகள் என்ன?

ஒற்றுமை என்று சொல்லி நான்கு மத்ஹபுகள்? நாற்பது தரீக்காக்கள் ஏன்?

தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமையை உடைத்தா?

மார்க்கத்தில் விட்டுகொடுக்கும் போலி ஒற்றுமை இஸ்லாத்தில் உண்டா?

ஒற்றுமை என்று மக்களை ஏமாற்றுபவர்கள் யார்? யார்? போன்ற கேள்விகளுக்கு விடை காண கீழ்காணும் வீடியோவை காணுங்கள்.

உரை: பி.ஜைனுல் ஆபிதீன்

பாகம்-1

பாகம்-2


பாகம்-3

Wednesday, July 11, 2012

என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!! சமுதாய மானம் காக்கும் MLA (?)


என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!!  சமுதாய மானம் காக்கும் MLA (?)

Wednesday, June 13, 2012

இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம், தேர்வாணயம் முற்றுகை : தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!


முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!

முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.




நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.

மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை

இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:

அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.

ஆசிரியர்கள் பற்றிய விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?

இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.

பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.

இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, January 01, 2012

ஜின்களை வசப்படுத்துவது எப்படி?

ஜின்களை வசப்படுத்த முடியுமா? ஜின்களை வசப்படுத்தி வைத்துள்ளோம் என்பவர்களின் ஏமாற்றுதல்களை அறிய.....


Saturday, December 17, 2011

Tuesday, April 05, 2011

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு பற்றிய கேள்விகளும் பதில்களும்

 - வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்தது ஏன்?

 - இந்த முடிவு எடுக்க தக்க காரணம் உள்ளதா?

 - விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற குற்றச் சாட்டுக்கள் ஆளும் கட்சி மீது சொல்லப்படும் நிலையில் இந்த முடிவு சரியானது தானா?

 - இலவசத் திட்டங்களால் நன்மை உண்டா?

 - அதிமுகவை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கங்களின் முடிவு பொது நலம் உள்ளதா?

 - முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்தால் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண:




Thursday, February 17, 2011

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?

இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

‘மவ்லித்’ என்பதின் பொருள்:

‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்)

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?

மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர், தலைசிறந்த - வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்:

உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு பெற வருடத்தில் ஒரு மாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி:

மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.

”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றி பெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன?  என்று அல்லாஹ் கூறுவதை பாருங்கள் 

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர், (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)

செலவு செய்யும் முறை

நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?

”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்:

அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.

”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார். மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி:

எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.

”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள், ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான். மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை:

”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார், மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.

ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

- நன்றி tntj.net (http://www.tntj.net/?p=11236)

Friday, March 05, 2010

அவிஸோ (AWISO) அறக்கட்டளையின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சிறப்புப் பள்ளி மூடப்பட்டது - மௌலானா ஷேக் அப்துல்லாஹ் தப்பி ஓட்டம்

அதிராம்பட்டிணம் MSM நகர் ஆதம் லைனில் அரசின் அனுமதியின்றியும், பள்ளி நடத்தப்பட்ட வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றியும் நடத்தப்பட்டு வந்த "மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சிறப்புப் பள்ளி" குன்றியவர்களுக்கான பயிற்சி பள்ளி அரசு அதிகாரிகளால் இன்று மூடப்பட்டது. அவிஸோ (AWISO) என்ற அறக்கட்டளை சார்பில் இந்த பள்ளி கடந்த நான்கு மாதமாக நடத்தப்பட்டு வந்தது.

இவர்கள் நடத்தும் இந்த பள்ளியை அரசின் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் சோதனை செய்தனர். இன்று RDO உள்பட அரசின் முக்கிய நிர்வாகிகள் நேரில் வந்து இந்த பள்ளியை மூடினர். 

அவிஸோ அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான மௌலானா ஷேக் அப்துல்லாஹ் மற்றும் ஷேகு அப்துல்லாஹ் ஆகியோர் தப்பி ஒடிவிட்டனர்.

அரசின் அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட இந்த பள்ளியை மூடிய அதிகாரிகள், இந்த பள்ளியை நடத்தியவர்களை கைது செய்யாமல் போனது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

அவிஸோ அறக்கட்டளை நடத்திய பள்ளியை அரசு அதிகாரிகள் மூடியபோது எடுத்த படங்கள்:




சமுதாய மக்களுக்கு ஒர் வேண்டுகோள்:

நாங்கள் சமுதாய சேவை செய்கிறோம் என்று கிளம்பும் முகவரி இல்லாத பேர்வழிகளுக்கு உதவும் முன் அவர்களை பற்றி நன்றாக விசாரித்துவிட்டு அவர்களுக்கு உதவுங்கள். இந்த அறக்கட்டளை வசூல் செய்த பணத்தை என்ன செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இது போன்ற முகவரி இல்லாத பேர்வழிகள் கிளம்பும் போது அவர்களை பற்றி விபரம் அறிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையையே அல்லது மாவட்ட கிளை நிர்வாகிகளையே தொடர்பு கொள்ளவும்.

தகவல்: அதிரை Y. அன்வர் அலி

Tuesday, February 23, 2010

பாமரர்களால் குர்ஆனை விளங்க முடியுமா?

இந்த கேள்விக்கு 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சகோதரர் பிஜே அவர்கள் அல் ஜன்னத் இதழில் பதில் அளித்து இருந்தார். அதன் பதிலை ஆன்லைன் பிஜே இணைய தளம் வெளியிட்டது. அதை நாம் இங்கே வெளியிடுகிறோம்.

கேள்வி : சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழிபெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது?

பதில்: மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். குர்ஆன், ஹதீஸையே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது.

குர்ஆனும், ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மை தான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத் தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மை தான்.

இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா? நான்கு இமாம்களும் தமது தாய் மொழியாக அரபி மொழியைக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய, அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.

இதே வாதத்தின் அடிப்படையில் இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதனாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும், அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும்.

அப்படிச் செய்யவில்லையே அது ஏன்? இதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும்.

மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால் தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.

அரபு மொழியில் எழுதப் பட்ட மத்ஹபுச் சட்டங்கள் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால் இந்த நியாயம் குர்ஆன், ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?

மத்ஹபுகள் மீது இவர்களுக்கு வெறி இருப்பதாலும், குர்ஆன், ஹதீஸ் இவர்களுக்குத் தேவையற்றதாக இருப்பதாலுமே இந்தப் பாரபட்சமான முடிவுக்கு வருகின்றனர்.

தவறுகளும் சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபு மொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால் தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன், ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்காது?

மொழிபெயர்ப்புகளில், மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி எல்லா மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். இதை அரபி மொழியறியாதவர்களால் சில வேலை கண்டுபிடிக்கப் படாமலும் போகும்.

ஆனால் அதற்காக குர்ஆன், ஹதீஸை விட்டு விட முடியுமா? விட்டு விட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உள்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.

நம்மால் இயன்றளவு முயற்சித்துப் பார்த்துவிட்டு மொழிபெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன், ஹதீஸை அலட்சியம் செய்வதை மன்னிக்க மாட்டான்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தாங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில் புத்தகங்களில் குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகின்றார்களே விளங்காத குர்ஆன், ஹதீஸை ஏன் மக்களிடம் கூற வேண்டும்?

மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன், ஹதீஸ்கள் கூறினால் விளங்கும் மற்ற விஷயங்களுக்கு விளங்காதா?

இதெல்லாம் ஷைத்தானின் மாய வலை. இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.