Wednesday, March 18, 2015

உலக ஆசை!

உலக ஆசை!

ஹீன் பின்த் ஜாஹிர் ஹுஸைன்

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அல்லாஹ் அதை எதற்காகப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கத்தை அது செயல்படுத்துகிறது. இறைவனுக்கு அடிபணிந்து நடக்கிறது. ஆனால் பகுத்தறிவுள்ள மனிதன் மட்டுமே தான் படைக்கப்பட்ட காரணத்தை மறந்து விட்டு அழிந்து போகும் இந்த உலகமே பெரிது என வாழ்கிறான். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் இவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று இறுமாப்பில் வாழ்கிறான்.

மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை கிடையாது என நம்புவோரின் நிலை இதுவென்றால் மறுமை வாழ்க்கையை நம்பும் முஸ்லிம்களும் இதில் விதி விலக்கல்ல. உலக ஆசையில் அல்லாஹ்வையும் மறுமையையும் மறந்து வாழ்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வை ஆராய்ந்தால் இந்த உலகத்தை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதியளித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பை நாங்கள் தயாரித்துத் தருகிறோம். அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்''எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும் அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும் இவ்வுலகத்துக்கும் உள்ளது'' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

இதை நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: திர்மிதி,இப்னுமாஜா

நாம் வெளியூருக்கு பயணம் செய்தால் வீடு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூரில் நமது வேலையை முடிப்போம். அதே போல் தான் இந்த உலகமும். இது நிரந்தரம் கிடையாது. நாம் அனைவரும் மறுமையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்கள் தான்.

இந்த உலகம் என்பது வெறும் வீணும் விளையாட்டுமே என்று அல்லாஹ்வும் தன் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? அல்குர்ஆன். 6:32)

இவ்வுலகை விட மறுமை தான் சிறந்தது என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது நாம் மறுமையைப் பெரிதாக நினைக்கிறோமா?

தங்கள் பிள்ளைகள் உலகக் கல்வியில் முன்னேற வேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புகிறார்களே தவிர மார்க்கக் கல்வி கற்று ஆலிமாக ஆலிமாவாக வர வேண்டும் என்று விரும்புவதில்லை. இத்தனைக்கும் மார்க்கக் கல்வி கற்க இலட்சக்கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை, சீட் கேட்டு அலையத் தேவை இல்லை. மிக இலகுவாக கிடைக்கும் மார்க்கக் கல்விக்கு இவர்கள் மதிப்பதில்லை. ஒரு வேளை பணிரெண்டாம் வகுப்பில் ஃபெயிலாகி விட்டால்  மதரஸாவில் சேர்க்க நினைக்கிறார்களே தவிர மார்க்கப் பிரச்சாரராக தங்கள் பிள்ளைகள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவு. மறுமையில் வெற்றியைத் தேடித் தரும் மார்க்கக் கல்வியில் இவர்களின் நிலை இது.

அது போல் இவ்வுலகில் பணம் வீடு நகை என எல்லா வசதிகளுடனும் சொகுசுகளுடனும் வாழ விரும்புவோர் நிரந்தரமான சொர்க்கத்தின் இன்பங்களை அடைய ஆசைப்படுவதில்லை.

அதே நேரத்தில் இந்த உலகத்தை ஆசைப்படக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. இவ்வுலகம் என்பது காஃபிருக்கு தான் சுவர்க்கமே தவிர முஸ்லிமைப் பொருத்த வரை ஒரு சிறைச்சாலை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.உலகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து  மறுமையை மறந்து விடக் கூடாது.

நாம் மரணித்த பிறகு நம்மை பின் தொடரும் மூன்று காரியங்களைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்

'ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும்.

 அவைநிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி'என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி நூல்: முஸ்லிம் 3084

நாம் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வமோ நம் மீது அதிகமான பாசம் செலுத்தும் குடும்பமோ மரணத்திற்குப் பிறகு நம்மைப் பின் தொடராது. மாறாக நாம் செய்யும் நல்லமல்களே நம்முடன் வரும். எனவே அதிகமான நன்மைகளை நாம் செய்ய வேண்டும்.

 நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள் (அல்குர்ஆன். 98:7) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது கடலில் நம் விரலை முக்கியெடுத்தால் எந்த அளவிற்கு தண்ணீர் சொட்டுமோ அந்த அளவு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இந்த அற்ப உலகத்தில் சிறிது செல்வம் நமக்குக் கிடைத்ததும் சிலருக்கு ஆணவமும் ஆடம்பரம் எனும் பெயரால் காசைக் கரியாக்கும் பழக்கமும் திமிரும் வந்து விடுகிறது. மற்றவர்களை மட்டமாக நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர். மேலும் உலக ஆசைக்கு அடிபணிந்து சினிமா, மது, சூது என சீரழிந்து விடுகின்றனர். ஆனால் தாங்கள் செய்யும் இந்த தவறுகளால் நிரந்தரமாக கிடைக்க இருக்கிற மறுமையின் இன்பங்களை இழக்க வேண்டி வரும் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். இனி வரும் காலங்களிலாவது மறுமைக்காக வாழும் நன்மக்களாக நாம் மாறுவோம். அதிக நன்மை புரிவோம்.

குறிப்பு : ஒவ்வொரு வாரமும்  பெண்கள் பயான்  நடைபெறும்போது  ஒரு மாணவி  பயான் செய்கிறார்  அதனை இங்கே தருகிறோம்

Monday, March 16, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் அதிரை வீடியோ (14/03/15)

அஸ்ஸலாமு  அலைக்கும்  கடந்த  14/03/15 அன்று அதிரையில் நடந்த இஸ்லாம்  ஓர் எளிய மார்க்கம்  நிகழ்ச்சியில் சூனியம் சம்மந்தமாக  அதிக கேள்விகள் கேட்கப்பட்டது

இதில் சகோதரர் அப்துன் நாசர் Misc அவர்கள் கேள்விகளுக்கு சிறப்பான  முறையில்  பதில் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்


















Sunday, March 15, 2015

மருத்துவ உதவி

அதிராம்பட்டினம் திகலர் தெருவை சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவனின் மருத்துவ செலவிற்காக அதிரை கிளை மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை ரூ 17,400 சிறுவனின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்மா பயான் (13/03/15)

தவ்ஹீத் பள்ளி ஜூம்மா  பயான்
நாள்  13/03/15
உரை  அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி




Friday, March 13, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம்  ஓர் எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு  அலைக்கும்  வரும்  சனிக்கிழமை  14/03/15 மாலை  4.00 மணியளவில் நமது  ஊர் CMP லைன்   அன்சாரி  காக்கா  வீட்டில்  பெண்களுக்கான  இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கம்  நிகழ்ச்சி  நடை பெரும்

இதில்  சகோதரர்  அப்துந்நாசர்   அவர்கள் கேள்விகளுக்கு  பதில் அளிப்பார் இன்ஷா அல்லாஹ்




அ த த வினருக்கு அறை கூவல்!

நாம் எதை கேள்வியாகக் கேட்டாலும் பதில் அ த த வின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடுவதில்லை. கள்ள வெப்ஸைட்டில் வரக் காரணம் அவர்கள் சொல்லும் பதில் சரியில்லை என்பது அவர்களுக்கே தெரியும். பாவம்!

திராணியிருந்தால் மேலத்தெரு சுன்னத் வல்ஜமாஅத் பள்ளிவாசல் குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் பின்பற்றும் ஜமாஅத் என்பதையும் அப்துல் மஜீத் மவ்லவி பக்கா தவ்ஹீத்வாதி என்பதையும் உங்கள் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிடுங்கள். நபிவழியில் ஜனாஸா தொழுகை நடத்தியது தவறு. சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் தான் ஜனாஸா தொழுகை நடத்தியிருக்க வேண்டும் என்பதையும் தர்காவை வழிபடுபவர் இணைவைக்கும் இமாம் அல்ல என்பதையும் உங்கள் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிடுங்கள். பதில் சொல்கிறோம் .

இன்னொரு அறைகூவலையும் அ த தவினருக்கு வைக்கிறோம். உங்கள் கருத்துப் படி மேலத் தெருவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  ஜும்மா பள்ளிவாசல் இயங்கும் போது நீங்கள்  ஜும்மாவுக்கென தனியாக பள்ளிவாசல் உருவாக்கியது ஏன்? ஜும்மா பள்ளியில் தொழுவோர் உங்கள் பார்வையில் முஸ்லிம்கள் இல்லையா? நீங்கள் அவர்களை முஸ்லிமென ஒத்துக் கொண்டால் உங்கள் பள்ளியைக் கலைத்து விடத் தயாரா?

இன்னொரு அறைகூவலையும் அ த தவினருக்கு முன் வைக்கிறோம்.

அ த தவினர் அப்துல் மஜீத் மௌலவியை தொழுகை நடத்தும் வேலைக்கு அழைத்து வந்தால் நாங்கள் சேர்த்துக் கொள்ளத் தயார்! அழைத்து வர அ த த தயாரா?

இன்னொரு அறை கூவலையும் முன் வைக்கிறோம். நீங்கள் சொல்கிற அதே ஜும்மா பள்ளியில் இமாமத் செய்யும் இமாமை உங்கள் தனிப் பள்ளியில் இமாமாக சேர்த்துக் கொள்ளத் தயாரா?

நாங்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் கேள்வி மட்டுமே கேட்கக் கூடாது. அது உங்களிடம் பதில் இல்லை என்பதையே காட்டுகிறது. உங்களுக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும். பதில் சொல்லத் தெரியாது என்பது எங்களுக்கு தெரியும். அதை உண்மைப்படுத்தும் வகையில் இல்லாமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொல்ல வேண்டும். அதுவும் உங்கள் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலிருந்து சொல்ல வேண்டும்.

முடியும் இல்லாமல், மூலையும் இல்லாமல், வேறு வேலையும் இல்லாமல், அ த த வின் சம்மதமும் இல்லாமல் உளரும் தனி நபர்களின் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு இனி பதில் தர மாட்டோம். எதுவாக இருந்தாலும் அதிகாரப் பூர்வமாக வந்தால் மட்டுமே பதிலளிப்போம் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
அல்குர்ஆன். 21:18

Wednesday, March 11, 2015

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்

இன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ரஹ்மத் நூலகம் அருகில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்தில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் மற்றும் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்

ஜனாஸாவை காரணமாக வைத்து தவ்ஹீத் ஜமாஅத்தை மேலத்தெருவுக்கு வரவிடாமல் தடுப்பதற்கு எல்லாவேலைகளையும் செய்த அ  த த குழுவிற்கு தெருமுனைப்பிரச்சாரத்தில் கூடி கூட்டத்தின் மூலம் மக்களும் ஜமாஅத்தினரும் பதிலளித்துள்ளனர் வேடதாரிகளை மக்களுக்கும் ஜமாத்திற்கு அடையாளம் காட்டி அல்லாஹ்விற்கே எல்லாபுகழும்










சுன்னத் ஜமாஅத்தினரை தூண்டிவிடும் அ த த குழு


தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் இது போன்ற போர்டுகள் வைத்து ஜனாஸா தொழுகையில், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கும் பிரச்சனைகள் வந்ததுண்டு, கலவரம் நடந்ததுண்டு. ஆனால் அதிரையில் அல்லாஹ்வின் உதவியால் இதுவரை அப்படி ஒரு பிரச்சனை வந்ததில்லை. ஆரம்ப காலத்தில் தொழுகை, தொப்பி, விரலசைத்தல், மத்ஹப் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், ஜனாஸா பிரச்சனை, எங்கள் மையவாடியில் அடக்கக்கூடாது என்பன போன்ற ஈனத்தனமான பிரச்சனைகள் அதிரையில் வந்ததில்லை. அல்ஹம்துலில்லாஹ்! இனி வரவும் செய்யாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. 


ஆனால் சமீபத்தில் அதிரையில் நடந்த ஒரு நபிவழி தொழுகையின் மூலம் கலவரத்தை உண்டு பண்ணி, அதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும், அதிரை பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் இடையில் ஒரு பிரச்சனையை உண்டு பண்ண பேராவல் கொண்டு, அனைத்து ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்ளும் முஸ்லிம்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டம் பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திடம், 'உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சிறு பிரச்சனைகள் இருக்கிறது, அதை பேசி தீர்த்துக்கொள்வோம். இவர்களின் ஜனாஸாவை நமது மையவாடியில் அடக்கம் செய்ய விடக்கூடாது' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அடடா.. என்னே அற்புத கோரிக்கை..!!!

அனைத்து ஹதீஸ்களையும் பின்பற்றும் முஸ்லிம்களே..! உங்களிடம் சில கேள்விகள்: 

- நீங்கள் பிரச்சனை பண்ண விரும்பிய ஜனாஸா தொழுகை நபிவழி தொழுகையா இல்லையா ?

- வீட்டில் பெண்களுடன் சேர்ந்து ஜனாஸா தொழுகை வைப்பது நபிவழியா இல்லையா?

- ரசூலுல்லாஹ் இப்படி தொழ வைத்து இருக்கிறார்களா இல்லையா?

'இல்லை; இது நபிவழி இல்லை, ரசூலுல்லாஹ் அப்படி தொழ வைத்ததே இல்லை, தவ்ஹீத் ஜமாத்தினர்தான் முதன் முதலில் அதிரையில் வீட்டில் பெண்கள் தொழுகையுடன் சேர்த்து ஜனாஸா தொழுகை தொழ வைத்துள்ளனர், அதனால்தான் நாங்கள் எதிர்க்கிறோம்' என்று சொல்லுங்கள். உங்கள் நேர்மையை பாராட்டுகிறோம். அல்லது,

'ஆமாம்; ரசூலுல்லாஹ் அப்படி தொழ வைத்துள்ளார்கள், அது நபிவழிதான், நாங்கள்தான் ஆத்திரத்தில் கண்ணை மறைக்க ஏதோ உளறி விட்டோம், நாங்கள் செய்தது தவறுதான்' என்று சொன்னாலும்கூட உங்கள் நேர்மையை பாராட்டலாம். 

அதை விடுத்து, ஜனாஸாவில் பிரச்சனையே பண்ணாத நமது அதிரை பள்ளி நிர்வாகிகளுக்கு பிரச்சனையை கிளப்பிவிட்டு, தூபமிட்டு கலவரம் உண்டு பண்ணி நீங்கள் சாதிக்கப்போவது என்னவென்று யோசியுங்கள்! 

ஆரம்பத்தில் தவ்ஹீத் சிந்தனையே இல்லாத நமது ஊரில் பல அனாச்சாரங்கள் நடந்தபோது தவ்ஹீத் சிந்தனை உள்ளே நுழைந்தது. அதிரையில் தவ்ஹீத் சிந்தனை வீறுகொண்டு எழுந்தது, அல்ஹம்துலில்லாஹ்! 

நாள் ஆக ஆக தவ்ஹீத் என்ற வார்த்தையின் வட்டங்கள் குறுகலாயிற்று. பல குழுக்களாக பிரிந்து சென்றீர்! இன்று நீங்கள் ஒரு தனிப்பள்ளி கண்டுள்ளீர்கள்! தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய நாங்கள் ஒரு தனி பள்ளி கண்டு இருக்கிறோம். 

நமது பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினர் நமக்குள் நடக்கும் இந்த பிரிவினையை கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்; கண்டு கொள்ளவுமில்லை. 

இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஜனாஸாவை மையவாடியில் அடக்கம் செய்யவிடக் கூடாது என்று கோரிக்கை வைத்து இருக்கும் உங்களை என்னவென்று சொல்வது ??

கம்ப்யூட்டருக்கு பின்னால் உட்கார்ந்து முகம் மறைத்துக் கொண்டு பிஜெயானிகள், பிஜே அடிமைகள் இவர்கள் ஜனாஸாவை பள்ளிக்குள் விடக்கூடாது என்று கொக்கரிக்கும் கொள்கை குன்றுகளாக மாறிவிட்ட உங்களிடம் ஒரே வேண்டுதல்! 

கம்ப்யூட்டரின் மானிட்டர் திரையைவிட்டு உங்கள் கண் திரைக் கொண்டு உங்களுக்கு முன்னால் நிற்பவர்கள் யார் என்று பாருங்கள்! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவன் உங்கள் முன்னால் நிற்பான்.. உங்கள் உடன் பிறப்புக்கள், உங்கள் பெற்றோர், உங்கள் குழந்தைகள் என‌..! 

இவர்களுக்கு எதிராகத்தான் நீங்கள் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினரிடத்தில் கோரிக்கை வைத்து இருக்கிறீர்கள். கலவரமே நடக்காத அதிரையில் கலவரம் நடக்க தூண்டுகிறீர்கள்! என்ன ஒரு வெட்கக்கேடான செயல் இது..!!

உங்களுக்கு எதிராக இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினராக நிற்கும் அனைவருக்கும் குடும்பம் உண்டு. கொள்கையால் இன்று பிரிந்து எதிர் அணியில் நிற்கலாம். நாளை ஜனாஸா தொழுகையில் பிரச்சனை உண்டு பண்ணி ஜனாஸாவை கூறுபோட்டு வெற்றி களிப்பில் கொண்டாட நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் ஒன்றை மறந்து விட்டீர்களே சகோதர்களே! அது என்ன.. ஜனாஸா என்றால் எவன் வீட்டிலோதான் விழும், நமது வீட்டில் விழாது நாம் எல்லாம் சாகா வரம் எடுத்து வந்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறீர்களா..?!

மரணத்தை நினைவு கூறுங்கள்.!!

ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் உண்டு! 
ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் உண்டு!

(7:34) وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ 

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். (7:34)

Tuesday, March 10, 2015

அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி விண்ணப்பம்

அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகளின் பெற்றோர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளையின் செயலாளர் சகோதரர் பக்கீர் முகைதீனை தொடர்பு கொண்டு ரூ 100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளுங்கள் தொடர்புக்கு : +919500821430




Monday, March 09, 2015

ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளின் முகமூடி கிழிந்தது!



ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளின் முகமூடி கிழிந்தது!


அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

அதிரை தாருல் (ஃபித்னா) தவ்ஹீதினரால் நடத்தப்படும் கள்ள வெப்ஸைட் ஒன்றில் சகோதரர் மஹ்ஸின் அவர்கள் வீட்டில் நபி வழியில் நடைபெற்ற ஜனாஸா தொழுகையை விமர்சித்து எழுதியிருந்தனர்.

இவர்களுக்கு குர்ஆனும் தெரியாது, ஹதீஸும் தெரியாது. இந்நிலையில் ஹதீஸையெல்லாம் போட்டு நம்மைக் கிண்டல் செய்கின்றனர். சரி அதுவாவது ஆதாரப்பூர்வமான செய்தியா? என்று கோவையில் இன்று வரை நாறிக்கொண்டிருக்கும் மன்மதக் குஞ்சு மற்றும் இவர்கள் கொண்டாடும் இலங்கை மன்மதக் குஞ்சு அல்லது ரதி மீனா பஸ் ஸ்பெஷல் மன்மதக் குஞ்சு அல்லது இவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் ஓரினச் சேர்க்கை புகழ் ஆலிம்சா (இன்னொரு மைனர் குஞ்சை அவசியம் கருதி தவிர்த்து இருக்கிறோம் )ஆகிய எவரிடமாவது இந்த ஹதீஸ் குறித்து கேட்டு இருக்கலாம் .
அப்படிக் கேட்காமல் விமர்சிக்க துவங்கும் போதே பொய்யான ஹதீஸை சொல்லியே தங்கள் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸா?

3020 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ غُطَيْفِ بْنِ أَعْيَنَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ فَقَالَ يَا عَدِيُّ اطْرَحْ عَنْكَ هَذَا الْوَثَنَ وَسَمِعْتُهُ يَقْرَأُ فِي سُورَةِ بَرَاءَةٌ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ وَلَكِنَّهُمْ كَانُوا إِذَا أَحَلُّوا لَهُمْ شَيْئًا اسْتَحَلُّوهُ وَإِذَا حَرَّمُوا عَلَيْهِمْ شَيْئًا حَرَّمُوهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ وَغُطَيْفُ بْنُ أَعْيَنَ لَيْسَ بِمَعْرُوفٍ فِي الْحَدِيثِ رواه الترمذي

என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலை இருக்கும் நிலையில் நபிகளாரிடம் சென்றேன். அப்போது இந்த சிலையை எரிந்துவிடுங்கள் என்று கூறினார்கள். பின்னர் பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் (31 வது வசனமான) அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், கடவுள்களாக்கினர். என்பதை ஓதினார்கள். மேலும் இவர்கள், அவர்களை வணங்கவில்லை.
மாறாக  அவர்கள் ஏதாவது ஒன்றை ஹலால்  என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) இவர்களும் ஹலாலாக்கிக்கொள்வார்கள். ஏதாவது ஒன்றை அவர்களுக்கு ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) ஹராமாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல் :திர்மிதீ (3020)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் குதைஃஃப் பின் பின் அஃயன், அல்ஹுஸைன் பின் யஸீத் என்ற இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளதால் இது பலவீனமான செய்தி. ஆதாரப்பூர்வமானதல்ல. எந்த செய்தியை வைத்து பிஜேயானிகள் என்று எங்களை விமர்சிக்கிறார்களோ அதுவே ஹதீஸல்ல எனும் போது இவர்களின் ஆரம்பமே கிழிந்து தொங்குகிறது.

போலி ஒற்றுமை

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் மதீனாவில் வாழ்ந்த யூதர்களும் கிறித்தவர்களும் நெருப்பு வணங்கிகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்தியத்திற்கு எதிராக போலி ஒற்றுமையைக் காட்டியது போல் இவர்கள் அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்துடன் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.

அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்திற்கு எங்களையும் தெரியும் உங்களையும் தெரியும். நீங்கள் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் போது மட்டுமே அவர்களுடன் ஒன்று சேருவீர்கள் என்பதையும் நிர்வாகத்திற்கும் பதவிக்கும் ஆசைப்படும் போலி தவ்ஹீத்வாதிகள் நீங்கள் என்பதையும் பதவிக்காக தவ்ஹீதையும் விற்கும் தவ்ஹீத் வேஷம் போடும் கூட்டம் நீங்கள் என்பதையும் அவர்கள் விளங்காமல் இல்லை.

 ஒரு காரியம் சுன்னத்தாக இருக்குமேயானால் எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாமல் உயிரைக் கொடுத்தும் அதை நாங்கள் நிலை நாட்டுவோம் என்பதையும் அவர்கள் விளங்கி வைத்துள்ளனர். ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாக நீங்கள் அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்திற்காக அழாமல் வேறு வேலையிருந்தால் பாருங்கள். உங்களையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள்

ஜனாஸா தொழுகையை நபிவழிப்படி நடத்துவதிலேயே எங்கள் கவனம் இருந்ததால் பள்ளிவாசலில் அறிவிப்புச் செய்வது பற்றி கவனமில்லாமல் இருந்து விட்டோம். அது தவறு தான். ஜும்மா பள்ளி நிர்வாகத்திடம் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்தியதோ பள்ளியில் அடக்கம் செய்ததோ தவறு என்று இவர்கள் நம்மை சாடுகிறார்கள், சுன்னத் வல் ஜமாஅத்தினரை தூண்டி விடுகிறார்கள் என்றால் இவர்கள் தவ்ஹீத்வாதிகளல்ல, நபிவழியைக் கிண்டல் செய்யும் கூட்டம் நபிவழியை எதிர்க்கும் கூட்டம் என்பதை மக்கள் மீண்டும் விளங்கிக் கொண்டுள்ளனர்.
இவர்களின் தவ்ஹீத் சாயம் மீண்டும் வெளுத்துவிட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

இவர்களின் இரட்டை முகம்

தவ்ஹீத் ஜமாஅத்தினர் நபிவழியைக் கடைப்பிடித்தால் கூட தர்ஹாவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும் கூட தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நபிவழியை எதிர்க்கும் அளவுக்கு இவர்களிடம் பொறாமையும் வஞ்சகமும் காழ்ப்புணர்வும் தவ்ஹீத் எதிர்ப்பும் தலைக்கேறியுள்ளது.
தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் போது சுன்னத் வல் ஜமாஅத்தினரை தவ்ஹீத்வாதிகள் என்று கூறும் அளவுக்கு இவர்கள் தரம் தாழ்ந்து போய் விட்டனர்.

அதே நேரத்தில் மார்க்கம் தெரியாதவர்கள் செய்யும் எந்த பித்அத்தையும் இப்படி இவர்கள் எதிர்த்ததுண்டா? என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

இணைகற்பிப்பவர்கள் நரகத்திற்கு அழைக் கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக் கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான் அல்குர்ஆன் 2:221)

மேற்கண்ட வசனங்கள் இணைவைப்பவருக்கு பள்ளிவாசலை நிர்வாகம் செய்யத் தகுதியில்லை என்றும் அவர்கள் நரகத்தின் பக்கம் அழைப்பவர்கள் என்றும் கூறுகின்றன.
இணைவைப்பவர்களைப் புறக்கணிக்குமாறும் பல வசனங்கள் வருகிறது. அந்த அடிப்படையில் இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழுவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.
இணைவைக்கும் இமாம்களின் இணைவைப்பை விமர்சிக்க இவர்கள் துணிந்தார்களா?
மவ்லித் ஓதும் இமாம் இணைவைப்பவர் என்று சொல்ல இவர்களுக்கு திராணி இருக்கிறதா?
இணை வைத்து மக்களை வழிகெடுக்கும் இமாம்களைக் கண்டிக்கத்  துப்பில்லாமல் நம்மை கண்டிக்கின்றனர்.
தர்காவை வழிபட்டுக் கொண்டிருக்கும் இமாமின் பின்னால் மவ்லூத் ஓதி வரும் இமாமின் பின்னால் ஜனாஸா தொழுமாறு நம்மை அழைக்கிறார்கள்.
தர்ஹாவை வழிபடும் இமாம் பின்னால் நின்று தொழலாம் என்று இவர்கள் வாதிப்பார்களேயானால் முதலில் இவர்களின் ஆய்வாளர் (?)களிடம் அதைக் கேட்டு ஃபத்வா வெளியிடட்டும்.

அப்போது இவர்கள் அனைவரின் சாயமும் வெளிப்படும்

வீட்டில் ஜனாஸாத் தொழுகை நடத்தக் காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஐவேளைத் தொழுகையில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தில் கலந்து கொண்டது போல் ஜனாஸா தொழுகையிலும் பங்கேற்றுள்ளனர்.

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்
நூல்: ஹாகிம் 1/519

பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக்கூடாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். மேலும் வீட்டிலும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்பதையும் மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 'ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை' என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் 'தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617

பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டு வரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.
ஐவேளைத் தொழுகைக்கும் ஜனாஸாதொழுகைக்கும் பள்ளிவாசலுக்கு வருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் நடத்தப்படும் தவ்ஹீத் பள்ளியைத் தவிர வேறு எங்கும்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதாலும் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்த நபிவழியில் அனுமதி உண்டு என்ற காரணத்தினாலும் தான் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.


வீட்டில் அடக்கம் செய்தல்


பள்ளிவாசலில் தொழ வைக்காமல் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் வீட்டிலேயே அடக்கம் செய்ய வேண்டியது தானே என்று கேட்கின்றனர்.
வீட்டில் அடக்கம் செய்யக் கூடாது என்று நபிமொழிகளில் வந்த செய்திகள் கூட இந்த கூமுட்டைகளுக்குத் தெரியவில்லை.
'(கடமையில்லாத) உங்கள் தொழுகைகளில் சிலவற்றை உங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளுங்கள். வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 432, 1187

வீடுகளை மண்ணறைகளாக ஆக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்திருப்பதால், குடியிருக்கும் வீட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது.
உங்களால் இது போன்ற நபிவழியை நடைமுறைப்படுத்த துப்பில்லாவிட்டாலும் தைரியம் இல்லாவிட்டாலும் தவ்ஹீத் ஜமாத்தினர் நடைமுறைப்படுத்தும் போது அதை ஆதரிக்காவிட்டாலும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாமல் இருங்கள். சத்தியப் பிரச்சாரம் செய்தவர்களைத் தடுத்ததினால் தான் இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டம் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்பதையும் பயந்து கொள்ளுங்கள் என்பதையும் மார்க்கம் தெரியாமல் மார்க்கத்திற்கு எதிராக எதையாவது உளறி வைக்காதீர்கள் என்பதை மக்கள் இவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

இணைவைப்பு அரங்கேறும்  பள்ளியில் அடக்கம் செய்தது ஏன்?

ஜனாஸா தொழுகைக்கு பள்ளிவாசலைப் புறக்கணித்து விட்டு அங்கு அடக்கம் செய்தது ஏன்?  என்று போலி தவ்ஹீத் பேசுவோர் கேட்கின்றனர்.
இந்தக் கேள்வியை அந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் கூட கேட்கவில்லை. காரணம் இணைவைக்கும் இமாம் பின்னால் நாம் தொழ மாட்டோம் என்பதும் மவ்லித் ஓதப்படும் பள்ளியில் நாம் தொழ மாட்டோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

சில மஸாயில்களில் கருத்து வேறுபாடு அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் இருந்தாலும் தவ்ஹீத் திருமணத்தை நடத்தி வைத்தல், ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்தல் போன்ற விசயங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தினருடன் பள்ளி நிர்வாகம் சுமூகமான போக்கையே மேற்கொள்கின்றனர். ஆனால் அதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நம் இமாமை எப்படிப் புறக்கணிப்பது? பாரம்பரியமிக்க நம் பள்ளியை எப்படிப் புறக்கணிப்பது? இவர்களை எப்படி இங்கே அடக்கம் செய்ய அனுமதிப்பது? என்று ஜனாஸாவை அடக்கம் செய்ய விடக் கூடாது என்ற கோரிக்கையை வைப்பதன் மூலம் இவர்கள் தவ்ஹீதுக்கு எதிரிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களை நம்பும் ஒரு சிலர் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். இல்லையானால் தவ்ஹீத்வாதிகளின் ஜனாஸாவை இணைவைக்கும் இமாம் குளிப்பாட்டுவார், தொழுகை நடத்துவார், ஏராளமான சடங்குகள் நமது மரண நேரத்திலும் நடைபெறும் சூழல் உருவாகி விடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

ஜூம்மா பள்ளியினருக்கும்  இவர்களுக்கும் சில மசாயில்களில் மட்டும் தான் கருத்து வேறுபாடாம் மற்றபடி இவர்களும் அவர்களும் ஒன்று என்று ஒற்றுமை பேச வந்து இருக்கும் வெட்கங்கெட்ட போலி தவ்ஹீத் வாதிகளே அதிரையில் தவ்ஹீத் பள்ளி கட்டும்போது ஒற்றுமை வேஷமிட்டு ஜூம்மா பள்ளியில் தொழுத நீங்கள் தனிப்பள்ளி கண்டதின் அவசியமென்ன என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா  உங்களுக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்ற நப்பாசையில் ஒற்றுமை பேசும் அயோக்கியர்களே !!

5057. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்: அவர்கள் குறைந்தவயது கொண்ட இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும்) அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம் வரை) செல்லாது. எனவே, அவர்களை நீங்கள் எங்கு எதிர்கொண்டாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களை ஒழிப்பது, அவர்களைக் கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக அமையும்' என்று கூறினார்கள்.
என அலீ(ரலி) அறிவித்தார். 67

இப்படி  ஒரு ஹதீஸை போட்ட அயோக்கியர்களே அத்தகைய அயோக்கியர்களை ரசூலுல்லாஹ் அடையாளத்தோடு விளக்கியதை  நாங்கள்  போடுகிறோம் பார்த்துகொள்ளுங்கள்
7562. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'கிழக்குத் திசையிலிருந்து (-இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவேமாட்டார்கள்' என்றார்கள்.
'அவர்களின் அடையாளம் என்ன?' என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மொட்டைபோடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)து தான் (அவர்களின் அடையாளம்)' என்று பதில் சொன்னார்கள்.

மொட்டை போடாமலே யாருக்கு இங்கே சொட்டை என்பதை எழுதியவன்  யோசிக்கட்டும்


//குர்ஆனையும் ஸஹீஹான அனைத்து ஹதீஸ்களையும் ஏற்றுக் கொண்ட, இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்கள் //

என்று  தங்களை  பற்றி  கூறி கொள்வார்களாம்  நபிவழியில்  நடந்த  இந்த ஜனாஸா தொழுகையை  வைத்து  குளிர்  காய  வருவார்களாம் என்னங்கடா லாஜிக் இது ??

Sunday, March 08, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 06.03.2015 (வீடியோ)

நபி (ஸல்) அவர்களும் இளைஞர்களும்



அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27.02.2015 (வீடியோ)

நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை

Friday, March 06, 2015

அல்லாஹ்வின் வல்லமையும் மனிதர்களின் இயலாமையும் (வீடியோ )

அல்லாஹ்வின்  வல்லமையும்  மனிதர்களின் இயலாமையும்


Thursday, March 05, 2015

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக ஜும்ஆ நேரம் மாற்றம்

இன்று முதல் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக அதிரை தவ்ஹீத் பள்ளியில்  12.30 தொடங்கும் ஜும்ஆ பயான் தேர்வு நாட்களில் 12:45 தொடங்கும் தொழுகை 1.30 நடைபெறும் இந்த நேர மாற்றம் 10 ம் வகுப்பு தேர்வு முடியும் வரை நடைமுறையில் இருக்கும்

Saturday, February 28, 2015

துபாய் JT மர்கஸில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அல்ஹம்துலில்லாஹ் கடந்த 27/02/2015 வெள்ளிக்கிழமை மாலை 4:45 மணி அளவில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம் துபை JT மர்கஸில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

 1, நமதூரில் தொடங்கபடவுள்ள பெண்கள் அல் ஹிக்மா அரபிக்கல்லுரியின் ஆயுட்கால புரவலர் மற்றும் சந்தாதாரர்கள் சேர்பது என ஆலோசிக்கப்பட்டது .

2, நமது தவ்ஹீத் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு நூல்கள் மற்றும் குரான்  வாங்குவது என தீர்மானிக்கப்பட்டது





Friday, February 27, 2015

அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம் 27.2.2015 வெள்ளிக்கிழமை சுபுஹு தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் கிளைத்தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்று இதில் விரைவில் துவங்கவுள்ள அல்-ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பற்றிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) கல்லூரி நடைபெற இருக்கும் கட்டிடத்தில் மின்சாரம் வேலைகள்  தண்ணீர்  வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்வது
2) கல்லூரி பற்றி இரண்டு இடங்களில் பேனர் வைப்பது
3) உணர்வில் விளம்பரம் செய்வது
4) கல்லூரியின் சேர்க்கை விண்ணப்பத்தை  உடனடியாக பொதுமக்களிடம் வினியோகம் செய்வது
5)கல்லூரிக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பது

6)அல்-ஹிக்மா பெண்கள் கல்லூரிக்கு மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸியை முதல்வராக நியமிப்பது

7) கல்லூரிக்கு வெளியே கல்லூரி நிர்வாக பொறுப்புகளை கவனிப்பதற்கு சகோதரர் கிளை செயலாளர் பக்கீர் முகைதீனை நியமிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன







துபாயில்Tntj அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

இன்ஷாஅல்லாஹ்
அதிரை TNTJ கிளையின் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும்  ஆலோசணை  கூட்டம் வருகின்ற 27/02/2015 வெள்ளிகிழமை  அஸர் தொழுகைக்கு  பிறகு மாலை 4:45 மணி அளவில் தேரா போரி மஸ்ஜித் பின்புறம்உள்ள துபை JT மர்க்கசில் நடைபெறஉள்ளது  . நமது ஊரில் வருகின்ற கல்வி ஆண்டில் துவங்க உள்ள அல் ஹிக்கமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி  துவங்குவதை பற்றியும்  மற்றும் புதிய செயல்பாடுகளை  பற்றியும்  ஆலோசணை செய்ய இருப்பதால் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும்  தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு
அப்துல் ரஹ்மான் 0527788264
சலீம் 0551878637
ஜஹபர் சாதிக் 0557428381

Friday, February 20, 2015

விவாதத்தில் இருந்து அன்சார் மவ்லவி தப்பி ஓட முயற்சி


விவாதத்திலிருந்து அன்சார் மவ்லவி தப்பி ஓட்டம் - முழு விபரம் - Video
+++++++++++++++++++++

சொந்தப் பணத்தில் இந்தியா சென்று விவாதிக்கத் தயார் என்று கூறி வாய்ச்சவடால் விட்டு, தற்போது விவாதத்திருந்து ஓட்டமெடுத்துள்ள அக்கரைப்பற்று அன்சாரின் விவாத நாடகம் பற்றிய சுருக்கமான உரை.

அன்சார் மவ்லவி மற்றும் பி.ஜெ ஆகியோருக்கிடையிலான கடிதப் பரிமாற்றங்களை முழுமையாக படிக்க..

http://www.sltj.lk/ansar-thappi-ottam/



அருமையான ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து  காத்து இருந்தோம் ஓடி ஒழிய இத்தனை வழிகளா ?என்று வியக்க வைக்கிறார் சகோதரர் அன்சார் தப்லீகி .
இந்த விவாதம் நடக்க வேண்டும்  இன்னும் பத்து நாள்  இருக்கின்றது ஸாபித் ,அர்ஹம் ,அப்துல் ஹமீது .முர்ஷித் அப்பாசி ,சித்திக் போன்றவர்கள் எல்லாம் அதிரைக்கே வந்து செல்ல விசா கிடைக்கும்போது இந்த அன்சாருக்கு ஏன் கிடைக்காது ?

அவர்கள் இங்கு வர tntj கடிதம் தேவைப்படவில்லை என்பதை விளக்கி இழுத்து வர யாராவது முயற்சிக்கலாமே
செய்வார்களா ?


Tuesday, February 17, 2015

அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரியை பார்வையிட்ட M I சுலைமான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அதிரையில் துவங்கவுள்ள அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரியை மாநில பொருலாளர் மௌலவி M I சுலைமான் அவர்கள் 13.2.2015 வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள் உடன் மாவட்ட தலைவர் சம்பை சாதிக் பாஷா மற்றும் அதிரை கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர் அல்ஹம்துலில்லாஹ்





Saturday, February 14, 2015

நபிகளாரின் நளினம் அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்(13/02/15)

நபிகளாரின் நளினம்
உரை  கோவை அப்துர்ரஹீம்



Friday, February 13, 2015

அதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்

அதிரை TNTJ கிளை அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 16-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் இரவு 7.00 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் சகோ. ஜாஹிர் தலைமையில் நடைப்பெற்றது.  

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது,   அதில், 22 சகோதரர்களின் உணர்வு, ஏகத்துவம் & தீன்குலப்பெண்மனி ஆகிய வாரம் & மாத இதழ், அல்லாஹ்வின் அருளால் அதிரையில் அபுதாபி சார்பில் துவங்கப்பட்டது. 

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.


இறுதியில்துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.








ஜசாக்கல்லாஹ்..




Thursday, February 12, 2015

நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்!

நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்!
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு பிரச்சாரம் சமுதாயப் பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறது.
v  உமா சங்கரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,
v  கிறித்துவர்களுடன் விவாதங்கள் மூலம் இஸ்லாத்தை பரப்புவது
v  பில்லி சூனியம் ஜோசியம் என்ற பெயரில் மக்களை மடையர்களாக்கி வரும் மந்திரவாதிகளிடம் துணிச்சலாக சவால் விட்டு இஸ்லாத்தையும் ஓரிறைக் கொள்கையையும் நிலை நாட்டி வருவது
v  பிரச்சாரர்களுக்கான பயிற்சி வகுப்பு
v  பிரச்சாரர்களை உருவாக்கும் வகுப்புகள்
v  ஆண்கள், பெண்களுக்கான மதரஸா
v  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தஃவாப் பணி
என்று கணக்கிலடங்காத பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவதைக் கண்டு பொருக்க முடியாமல் வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் நடுநிலைவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பதைத் தங்கள் முக்கியத் தொழிலாக வைத்துள்ளனர். பாவம் வேறு பிழைப்பில்லை இவர்களுக்கு.
எனினும் எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் விவாதக் களத்தில் நேருக்கு நேர் சொல்லுங்கள் என்று இவர்களில் பலருக்கு அழைப்புக் கொடுத்தும் விவாதம் என்றால் ஓடிவிடுகின்றனர்.
அப்படியே விவாதக் களத்திற்கு ஆசைப்பட்டு இவர்கள் வந்தாலும் அங்கு நாம் கொடுக்கும் (பதில்) அடியில் அனைத்தையும் மறந்து விட்டு பேய் (?) அறைந்தார் போல் என்ற பழமொழிக்கு ஏற்ப அமர்ந்து விடுகின்றனர். குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பும் இவர்களுக்கு நம் முன்னிலையில் விவாதத்தில் அவற்றை சொல்ல துப்பில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
எனினும் நடுநிலை வேஷம் போடும் இந்த நயவஞ்சகக் கூட்டத்தினரின் முகத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர்களின் நடுநிலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
நடுநிலை பேசுவோரின் இலட்சனம்
F  நாங்கள் எந்த இயக்கத்தையும் சேராதவர்கள் என்று சொல்லும் இவர்கள் தனி இயக்கமொன்று நடத்துவார்கள்
F  தவ்ஹீத் ஜமாஅத் பிற இயக்கங்களை விமர்சிக்கிறது என்று கூறும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்காத நாள் இல்லை
F  ஒரு சகோதரனின் மானம் கஃபாவைப் போன்று எனக் கூறி அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்கும்  இந்த கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்களை நா கூசாமல் ஆபாச அர்ச்சனை பண்ணுவார்கள்
F  தவ்ஹீத் ஜமாஅத் தனிப் பள்ளி கட்டி சமுதாயத்தை பிரிக்கிறது என்று புலம்பும் இவர்கள் குழப்பம் உண்டாக்கும் பள்ளிவாசல் (?) கூடாரத்தை இவர்கள் பகுதியில் கட்டி வைத்திருப்பார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி கட்டி ஜமாஅத்  பெயரில் பதிவு செய்து கொள்கிறது பள்ளியை அபகரிக்கும் முயற்சி இது என்று சொல்லிக்கொண்டே பிலால் பள்ளியை அபகரிக்க முயற்சி செய்வார்கள் .( பிலால் பள்ளியில் இருந்து சமீபத்தில் விரட்ட பட்டார்கள் )
F  தவ்ஹீத் ஜமாஅத்தில் பயான் செய்வோர் மட்டும் தான் தவ்ஹீத் வாதிகளா? நாங்கள் யார் பயான் செய்தாலும் கேட்போம், அனைவரின் நூல்களையும் படிப்போம் பரப்புவோம், என பிதற்றித் திரியும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் நூல்களை மட்டும் இவர்களின் பள்ளிவாசலிலும் மதரஸாவிலும் அப்புறப்படுத்தி விடுவார்கள்.
F  நாங்களும் தவ்ஹீத் தான் என மக்களை ஏமாற்றி வரும் இவர்கள் மத்ஹபைப் பின்பற்றும் ஆலிம்களைக் கூட ஜும்மாவில் ஏற்றத் தயங்குவதில்லை. ஏனென்றால் இவர்கள் பார்வையில் பிஜேவை எதிர்ப்பது மட்டும் தானே தவ்ஹீத். என்ன கொள்கை உறுதி? அடேங்கப்பா!
F  உலகத்தில் எந்தப் பகுதியில் பிறை பார்த்தாலும் பெருநாள் கொண்டாடுவது தான் சரியான பாதை. அதுவே விஞ்ஞானம், நபி பெருநாள் கொண்டாடியது போல் பெருநாள் கொண்டாடுவது வழிகேடு என கூறும் இந்தக் கூட்டத்தினர் ஊரை ஏமாற்ற இரண்டு பெருநாள் தொழுகையை நடத்துகின்றனர். இதுவே இவர்களின் தனிச் சிறப்பு?
F  தவ்ஹீத் ஜமாஅத் நேற்று ஒரு ஃபத்வா! இன்று ஒரு ஃபத்வா கொடுக்கிறது, நாங்கள் அப்படியெல்லாம் ஆய்வு செய்யும் கூட்டமல்ல, அறைவேக்காட்டுத்தனமான கூட்டம் என்று நிரூபிக்கும் இவர்கள், தங்கள் இயக்கத்தின் சார்பாக பேச அழைத்து வரும் ஆய்வாளர்(?)களை ஒரே மேடையில் அமர வைத்து ஒரே கேள்வியை அனைவரிடமும் கேட்டால் ஒரே நாளில் ஒரே விசயத்தில் எப்படி முரண்பட்டு அந்த ஆய்வாளர்(?)கள் நிற்பார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். அப்போது இவர்களின் முரண்பட்ட ஃபத்வாக்கள் கிழிந்து தொங்கும்.
F  தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சித்து கூட்டம் நடத்தும் இந்தக் கொள்கை கெட்டவர்களுக்கு துப்பிருந்தால் முக்காடு போட்டுக் கொண்டு ஒப்பாரி வைக்கும் பாஸித், அல்லது ஜாகிர் நாயக் அல்லது, ஸலஃப் ஜுப்பா கும்பலை அழைத்து வந்து மத்ஹபைப் பற்றிப் பேச வைக்க இயலுமா? வழிகெட்ட தரீக்காவை பற்றி  பேச வைக்க இயலுமா? அப்போது தெரியும் இவர்கள் தவ்ஹீதைச் சொல்லத் துணிவில்லாத கூட்டம் என்பதும் தகுதியற்ற கூட்டம் என்பதும்.
F  வரதட்சனை மற்றும் ஆடம்பரத் திருமணங்களில் பாரபட்சம் இல்லாமல் கலந்து கொள்வது தான் இவர்களின் நடுநிலைக் கொள்கை
F  இணைவைக்கும் இமாம் பின்னால் நின்று தொழுவது தான் இவர்கள் கூறும் தவ்ஹீத் ஃபத்வா?
F  பணக்காரர்களுக்கு வளையும் தவ்ஹீதைத் தான் இவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஹஜ் உம்ரா பெயரில் தங்கள் சகாக்கள் மோசடி செய்தாலும் ரியல் எஸ்டேட் பெயரில் மக்களை ஏமாற்றித் திரிந்தாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக சொல்லி அடுத்தவன் பணத்தை ஆட்டைப் போட்டாலும் அவர்களுக்குத் தோள் கொடுப்பது தான் இவர்கள் கண்டு பிடித்த சமுதாய ஒற்றுமை? தவ்ஹீத்?
F  சூனியம் கண்ணேறு போன்ற இணைவைப்பை நியாயப்படுத்துதான் இவர்களின் தவ்ஹீத்?
F  தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நின்று விட்டால் மகிழ்ச்சியடைவதும் நடந்து விட்டால் கவலைப்படுவதும் தான் இந்த நயவஞ்சகர்களின் தவ்ஹீத்?

தவ்ஹீதுக்கு எதிராகவே இவர்கள் இயங்குகிறார்கள் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல என்ற நமது குற்றச்சாட்டுக்கு இவர்களிடம் பதில் இல்லாததால் தனி நபர் விமர்சனத்தில் ஈடுபடுகின்றனர். எந்த தனி நபர் மீதான விமர்சனத்தையும் எப்படி எதிர் கொள்வது என்று ஜமாஅத்திற்கு தெரியும். யாருக்காகவும் வளையாத ஜமாஅத் தான் தவ்ஹீத் ஜமாஅத்.
வேலையற்ற வீணர்களின் விமர்சனங்களுக்கு தேவை ஏற்பட்டால் தலைமை விளக்கமளிக்கும். எனினும் யாரும் அவசரப்பட வேண்டாம். ஆசைப்பட வேண்டாம். பேச வேண்டிய மேட்டர் நிறைய இருக்கு. மதரஸாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு இவர்களின் ஆசிரியர்(?) நடவடிக்கை எடுக்கப்பட்ட விசயங்களும் நர்ஸ் விவகாரமும் தாயுடனும் சகோதரியுடனும் கூட பாலியல் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டேன் என்று இவர்களின் ஆய்வாளர்(?) பேசியது உட்பட இன்னும் பல விவகாரங்களும் பாக்கி இருக்கிறது.

அதை மாநிலத் தலைமை விரும்பினால் பேசுவார்கள். அது வரை பொறுத்திருப்போம்உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்து கிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சி னால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.(3:120)