Wednesday, November 30, 2011

துருவி துருவி ஆராய்தல்

தொடர்:1
ஆக்கம் :மனாஸ் (இலங்கை)


உலகில் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடிய மன நிலையில் தான் படைக்கபட்டுள்ளனர். இன்று வாழும் மனிதர்களில் எவரும் எந்தத் தவறுகளையும் செய்யும் தன்மையற்றவர்களாக வாழ்கிறார்கள் என்று யாராலும் சொல்லமுடியாது. அல்லாஹ் மனிதனை பலவீனமானவனாகத்தான் படைத்துள்ளான். அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்

அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளான். அல்குரஆன் :4:28

அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள் கூட அவர்களின் பிராச்சாரங்களை பாதிக்காத தவறுகளைத் தான் செய்யமுடியாமல் வாழ்தார்களே தவிர மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடம் தவறுகள் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அவர்களும் தவறுகள் செய்துள்ளார்கள். நபிமார்களில் தவறுகள் செய்து திருந்தியவர்களின் வரலாற்றைப் பார்போம்.

ஆதம் (அலை) அவர்கள் செய்த தவறு

உலகில் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து சொர்க்கத்தில் இன்பகரமாக வாழ்ந்து வருமாறு கட்டளையிட்டான். அவர்களிடம் அல்லாஹ் ஒரு மரத்தை சுட்டிக் காட்டி அந்த மரத்தின் பக்கம் நீங்கள் நெருங்கக்கூடாது. என்று கட்டளையிட்டும் கூட அவர்களை அந்த ஷைத்தான் வழிகெடுத்து அந்த மரத்தின் பக்கம் சென்று அதன் கனியைப் புசித்ததால் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தார்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் செய்த தவறினால் சுவனத்தில் இருந்து நாம் வாழும் பூமிக்கு சென்று வாழுமாறு கட்டளையிட்டான்.

திருமறைக் குர்ஆன் இது பற்றி இவ்வாறு தெளிவு படுத்துகிறது

''ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம்.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையி­ருந்து அவர்களை வெளியேற்றினான். ''இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன'' என்றும் நாம் கூறினோம்.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக்கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் :2:35,36,37

மற்றொரு வசனத்தில் .....

''ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கி னால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகிவிடுவீர்கள்'' (என்றும் கூறினான்)

அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ''இருவரும் வானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.

''நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே'' என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.

அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக்கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து ''இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான்.

''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் இழப்பை அடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர். அல்குர்ஆன்: 7:19லி23)

ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்தார்கள் பிறகு அவர் செய்த தவறுக்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடியதாகவும் அல்லாஹ் மன்னித்ததாகவும் இந்த வசனங்கள் தெளிவாக நமக்கு கூறுகிறது.

தொடரும்......