Thursday, April 16, 2015

பிலால் நகரில் நடைபெற்ற பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பில் பிலால் நகரில் மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் இல்லத்தில் இன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அஸ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் எஸ்.பி பக்கீர் முஹம்மது, தர்ஹா வழிபாடு குறித்து இஸ்லாம் கூறும் கருத்துகளை அறிமுக உரையாக நிகழ்த்தினார். கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

இனி வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு தொடர்ந்து நடைபெறும் என கூட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது.



Tuesday, April 14, 2015

அதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 10-04-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் இரவு 8.00 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் சகோ. ஜாஹிர் தலைமையில் நடைப்பெற்றது.  

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது,   அதில், பெண்கள் மத்ரஸாவின் நிர்வாக செலவினங்களுக்கு, அபுதாபி சார்பில் மாதந்தோரும் பங்களிப்பு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.


இறுதியில்துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.

நிலவேம்பு கசாயம் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக இன்று காலை 6.00 மணி முதல் இலவச நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது இதில் 300க்கு அதிகமானவர்கள் கசாயம் அருந்தி சென்றனர்












Monday, April 13, 2015

கீழத்தெருவில் சமாதி வழிப்பாட்டிற்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக இன்று இஷா தொழுகைக்கு பிறகு கீழத்தெரு அப்பாஸ் வீட்டின் அருகில் சமாதி வழிப்பாட்டிற்கு எதிரான மாபெரும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சமாதி வழிப்பாடு எதனால் கூடாது என்பதையும் கந்தூரி தவறு என்பவர் என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்கி சிறப்புரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்










Saturday, April 11, 2015

கற்பா? கல்லூரியா?


பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 ஆட்டோ அல்லது வேன் பயணம்

 சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

 ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள். 

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள்  நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.

 வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேன் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப் புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பாடமா? படமா?

உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் - ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம். இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?

பிற மதத்தவருடன் காதல் பயணம்

கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்

இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது. 

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாüயாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாüயாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்...

1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

 'கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி

4. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.

எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.

இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.

நன்றி
ஏகத்துவம்

நிரந்தர நண்மையை பெற்றுத்தரும் பணிக்காக உதவிடுவீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளையின் சார்பாக அல்-ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரி வருகிற மே மாதம் புதுமனைத் தெருவில் வீடு ஒன்று வாடகைக்காக அக்ரீமெண்ட போடப்பட்டு துவங்க உள்ளது அல்ஹம்துலில்லாஹ்
அதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு மிக முக்கியமான பணிகள்  கட்டிட பாராமரிப்பு வேலை, 2 கழிப்பிட வசதிகள், ஒழு செய்வதற்கான வசதிகள், எலக்ட்ரிக் வேலைகளும் முடிந்துள்ளன  

இன்னும் பல தேவைகள் இருப்பதால் அதற்கான விபரத்தை விரிவாக கீழே குறிப்பிட்டுள்ளோம். இந்த மகத்தான  நிரந்தரமான நன்மைகளை பெற்றுத்தரும்  மார்க்கப் பணிக்காக உங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அல்லது ஒவ்வொரு வேலைக்காக குறிப்பிட்டுள்ள தொகையை  ஏற்று அந்த வேலைகளை முடிக்க உதவுமாறு அன்போடு அதிரை கிளைசார்பாக கேட்டுக்கொள்கிறோம்

1 4 மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடிய மேஜை மற்றும் இருக்கை (பெஞ்ச்|டெஸ்க்) ஒரு செட் விலை ரூ 6000 (தேவை 10 செட்கள்) ரூ 60000
.
2 ஆன்லைனில் பாடம் நடத்துவதற்காக இன்ட்டர்நெட் கணக்ஷன் மற்றும் டி.வி ரூ 30000

3 அலுவலகக் தேவைக்காக பர்னிச்சர் சாமான்கள் ரூ 15000

4 பீரோ 10000

5 பாதுகாப்பிற்காக ஏற்கெனவே உள்ள காம்பவுண்ட் (சுற்றுச்சுவர்) சுவரை கூடுதலாக 3 அடி உயர்த்துவதற்கான செலவு 20000

6 பாடம் நடத்த தேவையான குர்ஆன் தமிழாக்கம் ஹதீஸ் நூற்கள் மற்றும் மார்க்க சம்மந்தமான நூற்கள் வாங்க ரூ 10000

7 கண்கானிப்பு கேமரா ரூ 17000

8 மின் விசிரி 6  ரூ 18000

இது தவிர மாதாமாதம் (மதரஸாவிற்கு) செலவிடப்படுகிற நிர்வாக செலவுகளுக்காக ரூ 35000
(நிர்வாக செலவு விபரம் வாடகை, டெலிபோன் நெட் பில், மின்கட்டணம்? ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் இதர செவினங்களுக்காக )

தொடர்புக்கு;
மீரா முகைதீன் (பொருளாளர்) 91 99 44 82 45 10
பக்கீர் முகைதீன் (செயலாளர்) 91 95 00 82 14 30
ஜஹபர் சாதிக் (துபை)  00971 52 901 4341
நசீர் (துபை) 00971 50 154 5251

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்03.04.2015 (வீடியோ)



ஒற்றுமை ஏற்பட என்ன வழி

Thursday, April 09, 2015

அல்ஹிக்மா மற்றும் கோடைகால பயிற்சி முகாம் பற்றிய மஷூரா

அல்ஹிக்மா மற்றும்  கோடைகால பயிற்சி  முகாம் பற்றிய மஷூரா
அஸ்ஸலாமு அலைக்கும் 

இன்று 09/04/5 காலை ஃபஜருக்கு  பிறகு நமது அல் ஹிகமா பெண்கள் இஸ்லாமிய  கல்லூரி தொடர்பாகவும்,வருடா வருடம்  நடக்கும் கோடைகால பயிற்சி  முகாம் பற்றியும் மஷூரா  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்











Tuesday, April 07, 2015

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்!

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்!


ஏகத்துவக் கொள்கை ஒவ்வொரு ஊரிலும் துளிர் விட்டு வளர்வதற்காக உயிர், உடல், பொருள் மூலமாக பெருந்தியாகங்கள் பெருமளவுக்கு முதலீடாகவும், மூலதனமாகவும் செலுத்தப்பட்டிருக்கின்றன.
அதன் பின்னர்தான் ஏகத்துவம் பெரிய மரமாக வளர்ந்து நின்று பலனைத் தருகின்றது. மரம் தான் வளர்ந்து விட்டதே! அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்று ஓர் ஏகத்துவவாதி எண்ணினால் அவர் நிச்சயமாக ஏமாந்து விடுகின்றார். தான் ஈடுபட்ட தியாகத் திருப்பணியில் ஈடுகட்ட முடியாத நஷ்டவாளியாகி விடுகின்றார்.
பூச்சிகள், புழுக்கள் போன்றவை சிறு செடி கொடிகளைத் தான் தாக்கும்; பெரும் மரங்களைத் தாக்காது என்று நினைத்துவிடக் கூடாது. படர்ந்து, விரிந்து நிற்கின்ற பலமான மரத்தைக் கூட வைரஸ் தாக்கி பட்ட மரமாக்கி விட்டிருக்கின்றது.
தவ்ஹீது பாதை என்பது நேரிய, நெடிய பாதையாகும். அந்தப் பாதையின் இறுதி இலக்கை அடைகின்ற வரை ஷைத்தான் ஒரு தவ்ஹீதுவாதியைச் சுற்றிலும் முற்றுகையிட்டு நிற்பான். இதைக் கீழ்க்காணும் வசனத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
"நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிக மானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).
அல்குர்ஆன் 7:16, 17
ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய மாத்திரத்தில், தவ்ஹீது மக்களை வழிமறித்துக் கொண்டு செல்வதற்காக ஜிஹாத் என்ற பெயரில் விடியல் வெள்ளியினர் உள்ளே நுழைந்து வழிகெடுத்தனர். ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தனர். இதற்குப் பதிலடி கொடுத்து அந்த வைரஸ்களிடமிருந்து ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். இன்றும் அந்த விஷக்கிருமிகள் பிரண்ட், பேக் என பல்வேறு பெயர்களில் வந்து தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
அஹ்லுல் குர்ஆன் என்ற விஷக் கூட்டம் முளைத்து, குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ் தேவையில்லை என்று வாதிட்டனர். அந்த வைரஸ்களை விட்டும் அல்லாஹ்வின் அருளால் மக்களை மீட்டெடுத்தோம்.
சர்வதேசப் பிறை என்ற ஜோதிடக் கணிப்பு கோஷ்டியினர் மூலம் ஒரு வைரஸ் தாக்குதல் வந்தது. அல்லாஹ்வின் கிருபையால் அதை விட்டும் இந்த ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். அதுவரை ஜாக் இயக்கத்துடன் ஒன்றுபட்டிருந்த நம்மை, அதை விட்டும் பிரிக்கும் மையப்புள்ளியாக இந்த ஜோதிடப் பிறை கணிப்பு அமைந்தது என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
நாம் வளர்த்த தமுமுகவே நம்மை அழிப்பதற்கான வைரஸாக மாறியது. சளைக்காமல், சடையாமல் அதிலிருந்தும் ஜமாஅத்தைக் கரை சேர்த்தோம்.
இப்போது ஸலஃபு என்றொரு வைரஸ் தோன்றியுள்ளது. இதனால் ஜமாஅத்திற்கு நேரடிப் பாதிப்பு இல்லையென்றாலும் ஆங்காங்கே சிறுவர், சிறுமியர் மதரஸாக்களை அமைத்துக் கொண்டு, அவர்களிடம் சிறு வயதிலேயே விஷத்தை விதைத்து, வருங்கால தலைமுறையை வழித்தடம் மாற்றும் வேலையில் இந்த ஸலஃபுகள் இறங்கியுள்ளனர்.
இன்று நமது ஜமாஅத்தின் கிளைகளில் பெண்கள் மதரஸாவை நிறுவுவதில் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தற்போதுள்ள கால சூழ்நிலையில் 10 அல்லது 12ஆம் வகுப்பு முடித்ததும் தங்கள் பெண் மக்களை மேற்படிப்பு படிக்க அனுப்புவதற்கு மக்கள் கடுமையாக அஞ்சுகின்றனர். அதனால் பட்டப் படிப்பெல்லாம் தேவையில்லை, நமது பெண்மக்கள் ஆலிமாக்களாக வரட்டும் என்று அவர்களை மார்க்கக் கல்வி படிப்பதற்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களுக்குக் கல்வி கொடுக்கின்ற கல்வி நிலையங்கள் அவசியம் தேவை தான். அதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் பெண் ஆலிமாக்களை உருவாக்கும் இந்தத் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அல்லாஹ் காப்பானாக! அதனால் பெண்கள் மதரஸாக்களில் கவனம் செலுத்துவதை விட காலை, மாலை சிறுவர் சிறுமியருக்கான மதரஸாக்களை நடத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் நமது மழலைகள், சந்ததிகள், வருங்காலத் தலைமுறைகள் நாளை நம்முடன் சுவனத்தில் நுழைவார்கள்.
யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம்.
அல்குர்ஆன் 52:21
நம் சந்ததிகளுக்கு ஏகத்துவக் கொள்கையை சரியாகப் போதிக்கவில்லை என்றால் அவர்கள் நரகம் போய்ச் சேர்ந்து விடுவார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். எனவே அந்தச் சின்னஞ்சிறு தளிர்களை தவ்ஹீத் வார்ப்பில் வளர்க்கவும் வார்க்கவும் வேண்டும். அதற்குச் சரியான களமும் தளமும் காலை, மாலையில் நடத்தப்படும் மக்தப் மதரஸாக்கள் தான்.
இன்று தமுமுக, விடியல் வெள்ளி போன்ற அமைப்பினர் தவ்ஹீத் ஜமாஅத் செய்கின்ற வேலைகள் அத்தனையையும் கையில் எடுக்கின்றனர். அவர்கள் காலை, மாலை மக்தப்களையும், பெண்கள் மதரஸாக்களையும் உருவாக்குகின்றனர். இவர்களுக்கு எள்ளளவும் சம்பந்தமே இல்லாத இந்தத் துறையில் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் மறுமை அல்ல!    ஈ கூட எட்டிப் பார்க்காத தங்கள் ஆர்ப்பாட்ட, போராட்டக் களங்களுக்கு மக்களை வினியோகம் செய்யும் கருவூலமாக, களஞ்சியமாக இந்தத் துறைகளைப் பயன்படுத்த முனைகின்றனர். இவர்களின் செயல்கள் முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டது.
இந்தத் துறையில் இவர்கள் கவனம் செலுத்துவதற்கு மற்றொரு காரணம் மார்க்கப்பணி என்றால் அதில் காசு, பணம் பார்க்கலாம். வசூல் வேட்டை நடத்தலாம். அதற்காக இந்த முகமூடியைக் கையில் எடுத்துள்ளனர்.
என்ன தான் இவர்கள் நமது பாதையில் குறுக்கிட்டாலும் அல்லாஹ்வின் அருளால் நமது வளர்ச்சிப் பணி அசாதாரணமாக உள்ளது, அல்ஹம்துலில்லாஹ். இதற்குக் காரணம் நம்முடைய மைய நோக்கமே மறுமை மட்டும் என்பது தான்.
இட ஒதுக்கீடு என்ற சமுதாய நோக்கத்திற்காகத் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்தோம். அதையும் தற்போது அற்று, அறுத்து எறிந்து விட்டோம். மறுமையை மட்டும் உயிர் மூச்சாக ஆக்கிக் கொண்டோம். கொள்கை என்ற விளக்குடன் இலக்கை நோக்கிப் பயணம் செய்வோம்.
இந்தப் பயணத்தின் போது நமது தலைமுறையினரையும் அழைத்துச் செல்வதற்கு, காலை, மாலை நேர மதரஸாக்களில் கவனம் செலுத்துவோம். இதுதவிர மற்ற நேரங்களில் குறிப்பாக மக்ரிப், இஷா நேரங்களில் வாலிபர்கள் மற்றும் முதியவர்களுக்கான மதரஸாக்களை நடத்துவோம். இந்த மதரஸாக்கள் தான் கொள்கை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
நம்மை மட்டும் நரகத்தில் இருந்து காப்பது நமது லட்சியமல்ல! நமது சந்ததிகளையும் சேர்த்து நரகத்திலிருந்து காப்பதே நமது லட்சியமாகும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
(அல்குர்ஆன் 66:6)
இந்த வசனத்தின் ஆணைப்படி, நம்மையும் நமது சந்ததிகளையும் நரகத்திலிருந்து காப்போமாக!


http://www.onlinepj.com/egathuvam/2015-ega/-2015-/#.VSMtQEeUeSo

Sunday, April 05, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27.03.2015 (வீடியோ)


நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தல்

Sunday, March 29, 2015

பல்பு வாங்க இப்படி ஒரு ஆவலா ?

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு!



சமீபத்தில் நமது ஊரில் சகோ அப்துந்நாசர் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில்  நடைபெற்றது. அதில் பலவிதமான கேள்விகளை  நமது  ஊர் சகோதரிகள் கேட்டனர். அவை அனைத்திற்கும் அழகிய முறையில் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கம்  அளிக்கப்பட்டது. இந்த கேள்வி பதில்  மூலம் பலர் பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்!

இதை பொறுக்காத ADT என்ற அமைப்பின் ‘அவதூறு பரப்பிகள்’ வழக்கம் போல் தங்கள் குணத்தை வெளிபடுத்தி, கேளுங்கள் மக்கழே.. கேளுங்கள்..!

//முழுமையாக வெளியிடும் 'திராணி' உண்டா?

ததஜவினர் அடித்துவிடும் தங்களுடைய பத்வாவில் உண்மையாளர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருந்தால் 14.03.2015 அன்று ததஜவினர் அதிரையில் நடந்திய நிகழ்ச்சியின் காணொளியை முழுமையாக பதிய வேண்டும் ஆனால் நமதூர் பெண்களால் நிகழ்ச்சியின் இறுதியில் எழுப்பப்பட்ட கீழ்க்காணும் முக்கிய கேள்வியையும் அதற்கான மவ்லவி அப்துல் நாசரின் பதிலையும் கத்தரித்து விட்டு காணொளியை பதிந்தது ஏன்? இனியாவது வெட்டி ஒழித்த பகுதிகளை மீண்டும் பதிவார்களா?//

இப்படி  ஒரு செய்தியை பரப்பினார்கள். இதில் இருந்த  உண்மை என்ன என்பதை நாங்கள் தெரியபடுத்த கடமைப்பட்டுள்ளோம். நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தப்பின், வஆஹிர் தஃவானா.. என‌ துஆவெல்லாம் ஓதி  நிறைவு பெற்றப்பின் வீடியோ பதிவு நிறுத்தப்பட்டது.

அதற்கு  மேலும்  சகோதரிகள் கேள்வி கேட்டார்கள். அந்த சூழ்நிலையில்தான் அப்படி கேட்கப்பட்ட  கேள்விகளுக்கு சகோதரர் அப்துந் நாசர் பதில் அளித்தார்கள் என்பதை  தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாங்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கும்வரை எந்த ஒன்றையும் கத்தரிக்கவோ, நீங்கள் பரப்பும் அவதூறுகளுக்காக அதை மீண்டும் நூல் வைத்து தைக்கவோ வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை! “பெண்களின் கிடிக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டு முழித்த ததஜ மவ்லவி அப்துல் நாசரின் நிலை” என்று குறிப்பிட்டிருந்த அந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவருக்குமே தெளிவாக தெரியும்.. அந்த கேள்விகளின் நிலையும், சகோதரரின் பதிலில் உள்ள விளக்கமும்!

மனமுரண்டாக மறுப்பவர்களுக்காக சுருக்கமாக இங்கே:
குர்ஆனுடைய (2: 102) இந்த வசனத்துக்கு ‘அல்லாஹ் நாடினால் சூனியக்காரர்கள் பாதிப்பை ஏற்படுத்த சக்தி பெறுவார்கள் என்றால், அல்லாஹ் மாதிரியே அவர்களுக்கும் சக்தி கிடைக்க அல்லாஹ் நாடுவானா?’ என்று மீண்டும் மீண்டும் சகோதரர் அப்துந் நாஸர் அவர்கள் கேட்டும்கூட, அதற்கு பதில் சொல்ல இயலாமல் அடுத்த கேள்விக்கு தாவுகிறார்கள். இதுதான் கிடிக்கிப் பிடியா?? அப்துந் நாஸர் எடுத்து வைத்த வாதம் கிடிக்கிப் பிடியா? ‘ஒவ்வொன்றுக்கும் தாவித் தாவி போகக்கூடாது’, ‘இவ்வளவு ஆதாரத்தை வைத்துக் கேட்டிருக்கிறேன்.. அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் போகக்கூடாது’ என்றெல்லாம் அவ்வப்போது சகோதரர் அறிவுறுத்தவும் செய்கிறார். ஒன்றைவிட்டு இன்னொன்றுக்கு தாவிச் செல்லும் இதே நிலைதான் ஒவ்வொரு கேள்விக்கும் அங்கே நிலவியது.

இந்த இடத்தில் நாம் அந்த சகோதரிகளை குறை சொல்வதற்காக இதைக் குறிப்பிடவில்லை. "அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுத்துவிடுகிறான்" (புஹாரி 71) என்ற நபிகளாரின் பொன்மொழிக்கேற்ப, அசத்தியத்தின் பக்கம் இருக்கும் அந்த சகோதரிகளுக்கும் அல்லாஹ்தஆலா சத்தியத்தின் பக்கம் விரைவில் தெளிவைக் கொடுக்கட்டும், இன்ஷா அல்லாஹ்! ஆனால், சகோ அப்துந் நாஸரின் எதிர் கேள்விகளுக்கு அந்த சகோதரிகள் மறுபதில் சொல்ல இயலாமல் அடுத்தடுத்த கேள்விகளுக்கு அவர்கள் நகர்ந்ததை அப்படியே மறைத்துவிட்டு, சகோ அப்துந் நாஸர் மாட்டிக் கொண்டு முழித்ததாக கைக்கூசாமல் எழுதி வைத்துள்ளவர்களுக்கே இந்த விளக்கம்!

ஆக, நாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்பது அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து சகோதரிகளுக்கும் தெரியும். அப்போது கேள்வியை கேட்டதாக உங்களிடம் சொன்ன சகோதரிகள், வீடியோவை அனைத்துவிட்ட  பின்தான்  இந்த கேள்வியைக் கேட்டோம் என்று  உங்களிடம் சொல்லி  இருப்பார்கள் என்றே  நம்புகிறோம். வழமைப்போல் உண்மையை மறைத்து திசை திருப்பி கேள்வி கேட்க மட்டுமே தெரிந்த அவர்கள், அவர்களின் அவதூறு வேலையை செவ்வனே செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் அருளால் அவர்கள் செய்த பித்தலாட்டத்துக்கு அவர்கள் மேடையிலேயே பதில் கிடைக்க அல்லாஹ் உதவி செய்துவிட்டான். தான் செய்த ஆய்வையே என்னவென்று தெரியாமல்  மறந்துப்போன ஆய்வாளர், நேற்று நமதூரில் பேசுகிறேன் என்று ஏற்கனவே ADT எடுத்த அவதூறு வாந்தியை இவர் பங்கிற்கு திரும்ப எடுக்க முயற்ச்சிக்கும்போது,  நமது நிகழ்ச்சிக்கு வந்த சகோதரிகள் உண்மையில் நடந்தது என்ன என்பதை அங்கேயே தெரியப்படுத்திவிட்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்..!!

“சகோதரிகள் அங்கேயே உண்மையை போட்டுடைத்ததை அப்படியே வெளியிடும் திராணி இப்போது இவர்களுக்கு இருக்கின்றதா?” என்று நாங்கள் கேட்கும் நிலைக்கு திரும்பக் கொண்டு வந்து  நிறுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

சகோ பிஜெ குர்ஆன்  தமிழாக்கத்தில் தவறு, முகம் மறைத்தல் போன்ற அனைத்து கேள்விகளையும் எடிட் பண்ணாமல் அப்படியே வெளியிடுவீர்கள் என்று  நம்புகிறோம். எங்களிடம்  தற்சமயம் ஆடியோ மட்டும்  இருப்பதால் வீடியோ வை தாமதம் இல்லாமல்  வெளியிடுவீர்கள் என்ற ஆவலுடன்..!

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம்.  (அல்குர்ஆன் 27 : 50)

Friday, March 27, 2015

அல்-ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி பாடத் திட்டங்கள்

இன்ஷா அல்லாஹ்
அல்-ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வெகு விரைவில் துவக்கம்….!
நடத்தப்படவுள்ள பாடத் திட்டங்களில் சில…

இஸ்லாமிய சட்ட திட்டங்கள்

அரபு மொழியியல்

 சொல் இலக்கணம்

சொற்றொடர் இலக்கணம்

இஸ்லாமியக் கொள்கை விளக்கம்,

நபிகளார் வரலாறு

இஸ்லாமிய ஒழுக்கங்கள்

திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், மனனம்,

திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் விளக்கவுரை

ஹதீஸ் கலை

வாரிசுரிமை சட்டங்கள்
தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் மாதம் இருமுறை கல்லூரிக்கு வருகை வந்து பாடம் நடத்துவார்கள்


இன்னும் பல இன்ஷா அல்லாஹ்….

பெரும்பாலான சகோதர சகோதரிகளின் கோரிக்கைக்கு இணங்க மூன்றாண்டு ஆலிமா பாடத் திட்டம் ஒரு வருடமாக மாற்றப்பட்டு துவங்கப்பட உள்ளது. சேர விருப்பமுடையோர் உடனடியாக விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.


விண்ணப்பம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9944824510, 9500821430

Thursday, March 26, 2015

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!
                                                                                             ஜாஃபர் நிஷா பின்த் ஷேக் ஃபரீத்


அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் நபியை தங்களின் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்ட பிறகு தொழுகை என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் இரண்டாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ள இந்த தொழுகையை முஸ்லிம்களில் பலர் புறக்கணித்து வருகின்றனர். சிலர் பெயரளவில் இந்தத் தொழுகையைத் தொழுது வருகின்றனர். பிறருக்குக் காட்டுவதற்காகவும் கவனமில்லாமலும் தொழும் இத்தகைய தொழுகையாளிகளை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கண்டிக்கிறான். தொழுகையை புறக்கணிப்பது எப்படிப் பாவமோ தொழுகையில் பொடு போக்காக இருப்பதும் பாவம் தான்.

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவனே அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை . தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (திருக்குர்ஆன். 107: 1-7)

அநாதையை விரட்டுவோரும் ஏழைக்கு உணவளிக்க தூண்டாதவர்களும் பிறருக்கு காட்டுவதற்காக தொழுபவர்களும் மறுமையை நம்பாதவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் கவனமில்லாமல் தொழுவோருக்குக் கேடு தான் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

இன்று பலர் தொழுகையில் நின்றாலும் அவர்களின் கவனெல்லாம் வேறு எங்கோ இருக்கும். வெறுமனே குனிந்து நிமிர்வது மட்டுமே தொழுகை என்று இவர்கள் நினைக்கின்றனர். இன்னும் சிலர் தொழுகையிலேயே தூங்குவார்கள். தொழுகையில் என்ன ஓதிக் கொண்டிருக்கிறோம்? எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கூட உணராமல் தொழுவோரும் உண்டு.

பொருள் தெரியாமல் ஓதினாலும் திருக்குர்ஆனுக்கு நன்மை உண்டு என்றாலும் அதையும் முறையாக ஓதுகிறோமா? வேக வேகமாக ஓதி விட்டு வேக வேகமாக ருகூவு, ஸஜ்தா செய்து விட்டு தொழுகையை நிதானமின்றி முடித்து விடுகிறோம். இது எப்படி இறைவனால் ஏற்கப்படும்? என்பதை நாம் சிந்திப்பதில்லை.

ஒரு நேரம் தொழுவது, ஒரு நேரம் தொழாமல் இருப்பது என்று தொழுகையைத் திருடுவோரும் இருக்கிறார்கள். இந்தத் தொழுகையில் என்ன பயன் இருக்கிறது? இப்படிப்பட்ட கவனமற்ற தொழுகையாளிகளுக்கு நன்மைக் கிடைக்காது, கேடு தான் ஏற்படும் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் கூறுகிறது.

மேலும் இத்தகைய தொழுகை நயவஞ்சகத்தின் அடையாளம் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரித்துள்ளார்கள்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறி களாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன். 4:132)

ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (657)

தொழுவதற்கு நேரமில்லை என்று சொல்லி லுஹர், அஸர், மஹ்ரிப், இஷா ஆகிய நான்கு தொழுகைகளையும் வேண்டுமென்றே விட்டு விட்டு மொத்தமாக இரவில் களா என்ற பெயரில் சிலர் தொழுது வருகின்றனர். இதுவும் தொழுகையில் பொடுபோக்காக இருப்பது தான். 


நாம் நினைத்த நேரத்தில் தொழுவதற்காக இறைவன் தொழுகையைக் கடமையாக்கவில்லை. ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனி நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும்.

நாம் நம்மையறியாமல் தூங்கி விட்டாலோ மறந்து விட்டாலோ நினைவு வந்தவுடன் விட்ட தொழுகையைத் தொழுவது தான் களாவாகும். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள். வேண்டுமென்று தொழுகையை விடுவது களாவாகாது. தொழுகையைப் பாழாக்குவதாகத் தான் ஆகும்.

தொழுகையில் பொடுபோக்காக இருப்பதே பாவம் என்றால் அறவே தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.தொழ நேரமில்லை, சுத்தமாக இல்லை என்றெல்லாம் பல்வேறு சாக்கு போக்குகள் சொல்லி தொழுகையைப் பலர் புறக்கணிக்கின்றனர். 
டி.வி பார்க்கவும் சினிமாவுக்கு போகவும் ஊர் சுற்றவும் புறம் பேசவும் பொருளாதாரம் திரட்டவும் பல மணி நேரங்களை செலவளிக்கும் நாம் தொழுகைக்காக மட்டும் நேரம் இல்லை என்பதை இறைவன் ஏற்றுக் கொள்வானா?
இவ்வுலகில் காற்று மழை, உணவு, மலைகள், சூரியன், சந்திரன் என அனைத்தையும் நாம் அனுபவிப்பதற்காக படைத்த இறைவன், அவனை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்திருக்கிறான். இறைவன் படைத்த நோக்கத்தை நிறைவேற்றவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் இனி வரும் காலங்களிலாவது தொழுகையில் பொடுபோக்காக இருப்பதைத் தவிர்த்து உள்ளச்சத்துடன் தொழுவோம். சுவர்க்கத்தைப் பெறுவோம்!

குற்றவாளி களிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்க வில்லை'' எனக் கூறுவார்கள்.  (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளை1 பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்க ளிடம் வரும் வரை'' (எனவும் கூறுவார்கள்). எனவே பரிந்துரைப்போரின் பரிந்துரை அவர்களுக்குப் பயன் தராது . (அல்குர்ஆன். 74:40-48)


Wednesday, March 25, 2015

செய்யான குளம் அருகில் நடைபெற்ற தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தெருமுனைப்பிரச்சாரம் இன்று (25.03.2015) இஷா தொழுகைக்கு பிறகு காட்டுப்பள்ளித்தெரு செய்யான குளம் அருகில் நடைபெற்றது இதில் மாவட்ட தாயி அன்வர் அலியும் அதனை தொடர்ந்து மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முடநம்பிக்கை என்ற தலைப்பில் தாயத்து, தகடு, தட்டு, பில்லி, சூனியம் ஆகியவை இஸ்லாத்தின் இல்லை என்று விளக்கி உரை நிகழ்த்தினார்கள் இதில் 50 க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள்





Monday, March 23, 2015

தெருமுனைப்பிசச்சாரம் அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.3.2015 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு பிலால் நகரில் (செய்யான குளம் அருகில்) மார்க்கவிளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெறவுள்ளது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்கள் அனைவரும் இதில் கலந்துக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை


இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்


வருகின்ற 27.3.2015 வெள்ளிக்கிழமை ஆயிஷா மகளிர் அரங்கில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்


கேள்விகளுக்கு பதிலளிப்பவர்
அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

நேரம் 

மாலை  4.30 முதல் 6.00 வரை



Sunday, March 22, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.03.2015 (வீடியோ)

மனிதன் படைக்கப்பட்டது அல்லாஹ்வை வணங்குவதற்கே


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.03.2015 (வீடியோ)

Friday, March 20, 2015

திருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்

திருமண நிலைப்பாடு
திருத்தங்களும் தீர்வுகளும்
"கல்யாணம் முடித்தேன்! கடனாளியாகி விட்டேன்!''
"வட்டிக்கு எடுத்து வகையாகத் திருமணம் நடத்தினேன்! இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன்!''
இப்படிப்பட்ட புலம்பல்கள் நமது செவிப்புலன்களில் வந்து விழுகின்றன. இது யாருடைய புலம்பல்? பெண் வீட்டுக்காரனின் புலம்பல் தான். திருமணம் என்று வந்ததும் பொருளாதாரம் காலியாகிப் போய்விடுகின்றது. இது பொருளாதார ரீதியிலான பாதிப்பு என்றால் இன்னொரு புறம் வாழ்வாதார ரீதியிலான பாதிப்பும் ஏற்படுகின்றது.
அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். இன்று கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கருவிலேயே பொசுக்கப்பட்டு விடுகின்றனர். தப்பித் தவறி பிறந்து விட்டால் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியெறியப்படுகின்றனர்.
கால்நடையிலிருந்து காட்டு விலங்குகள் வரை தாங்கள் ஈன்ற குட்டிகளை உயிரைக் கொடுத்து, பாசத்தைக் கொட்டி வளர்க்கும் போது, பகுத்தறிவுப் பிராணியான இந்த மனித இனம் மட்டும், தான் பெறுகின்ற பிள்ளைகளில் ஆணா? பெண்ணா என்று பேதம் பார்த்து, பெண்ணினத்தை அழிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் என்ன?
வரதட்சணைக் கொடுமை! வாட்டுகின்ற திருமணச் செலவு! இவை தான் இதற்குரிய பதில்.
இதற்காக எந்த ஜமாஅத்தும், எந்த இயக்கமும் இதற்குரிய நடைமுறை செயல்பாட்டுத் திட்டத்தில் இறங்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388
இந்த ஹதீசுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் எளிய திருமணத்திற்கு இலக்கணமாகச் செயல்படும் விதத்தில் மண்டபத் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. இதுகுறித்து ஏகத்துவம் 2011 டிசம்பர் இதழில், "மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
மண்டபத் திருமணத்திற்கு தஃப்தர் உண்டு, தாயீ இல்லை என்ற சட்டம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் பொதுவான சட்டம். இந்தச் சட்டத்தில் அனுமதியின் வாசல் விரிவாகவும் விசாலமாகவும் திறக்கப்பட்டிருந்தது.
நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான். (அல்குர்ஆன் 47:17)
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதற்கேற்ப திருமண நிலைப்பாட்டில் இன்னும் சிறந்த வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் விதமாக, கடந்த 12.11.2013 அன்று நடைபெற்ற மாநில உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் மண்டபத்தில்  நடைபெறும் திருமணங்கள் சம்பந்தமாக பின்வருமாறு ஆலோசிக்கப்பட்டது.
மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களில் கலந்து கொண்டாலும், தங்கள் குடும்பத்து திருமணங்களை மண்டபத்தில் நடத்தினாலும் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டை நாம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.
விருந்தில் கலந்து கொள்வது, தங்கள் குடும்பத் திருமணங்களை நடத்துவது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு அந்த நிலைபாட்டில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கிளை மாவட்ட நிர்வாகிகள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கிளைப் பேச்சாளர்கள், மாநிலப் பேச்சாளர்கள், மாவட்ட கிளை அணிச் செயலாளர்கள் தமது திருமணத்தையோ, தமது பொறுப்பில் உள்ள  சகோதர சகோதரிகள் திருமணத்தையோ, தனது பிள்ளைகள் திருமணத்தையோ மண்டபத்தில் நடத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் எனவும்,
மண்டப திருமணங்களில்  (நபி வழியில் மார்க்கம் தடை செய்யாத வகையில்) நடைபெறும் திருமண விருந்தில் கலந்து கொள்வோர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் அந்தத் திருமணம் சமுதாயத்திற்கு சரியான முன் உதாரணத்திற்கு உட்பட்டதா என்பதை அல்லாஹ்விற்கு அஞ்சி அவரவர் முடிவு எடுத்துக் கொள்வது எனவும் திருத்தம் செய்ய ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஒருசில கட்டங்களில் வீடுகளில் நடக்கும் திருமணங்களில் பந்தல், பரிமாறப்படும் பந்திகளுக்கு நாற்காலிகள் என்று மண்டபத்தை விடப் பன்மடங்கில் செலவு விஞ்சி விடுகின்றது. எளிய திருமணம் என்ற இலக்கணம் இங்கு தகர்க்கப்பட்டு விடுகின்றது. மண்டபத்தில் நடக்கும் திருமணம் எளிமையாக அமைந்து விடுகின்றது. இதைக் கவனத்தில் கொண்டு கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.
சில நேரங்களில் மண்டப திருமணம் வீட்டில் நடக்கும் திருமணத்தை விட குறைந்த செலவுடையதாக இருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. வீட்டில் நடத்த முடியாமல் கடும் எதிர்ப்பு இருக்கும் போது மண்டபத்தில் நடத்தும் நிர்பந்தமும் சில நேரங்களில் ஏற்படும்.
இது போன்ற நிலை உள்ளதா என்பதை கிளையும் மாவட்டமும் தக்க முறையில் பரிசீலித்து, பரிந்துரை செய்தால் அப்போது மட்டும் அதை அனுமதிப்பது என்றும் திருத்தம் செய்யப்படுகிறது.
மண்டபத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு தாயிக்களை அனுப்பவதில்லை என்ற நிலைபாடு அப்படியே நீடிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
திருமண விருந்து
எளிய திருமணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மண்டபத் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகளை தவ்ஹீத் ஜமாஅத் விதித்திருக்கின்றது. இருப்பினும், மண்டப விருந்தில் மட்டும் ஒரு நெருடல் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் கீழ்க்காணும் ஹதீஸ் தான்.
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816, 2819
விருந்தைப் புறக்கணித்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார் என்று ஹதீஸில் வருவது தான் இந்த நெருடலுக்குக் காரணம்.
இதற்கும் அல்லாஹ்வின் அருளால் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒரு நல்ல தீர்வு எடுக்கப்பட்டது. இப்படி ஒரு தீர்வை அடைவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விருந்தழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும் நபிமொழியில் சொல்லப்படும் செய்தி என்ன என்பதை ஆய்வு செய்யும் போது, விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தவராவார் என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த நபிமொழியை மேலோட்டமாகப் பார்க்கும் போது விருந்தழைப்பை மறுக்கக்கூடாது என்று நாம் புரிந்து கொள்வோம். ஆனால் இந்த நபிமொழியின் துவக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளைக் கவனிக்கும் போது இதற்குத் துணையாக வரும் மற்ற ஹதீஸ்களைப் பார்க்கும் போது விருந்து குறித்து நபிகளார் கூறிய உண்மையான பொருள் புலப்படும்.
ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நடத்தப்படும் விருந்தளிப்பு கெட்டவிருந்து எனக் கூறும் நபியவர்கள் அந்த விருந்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள்.
விருந்து குறித்த இந்தச் செய்தியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் "எனக்கு ஆட்டின் கால்குழம்பு விருந்தாக அளிக்கப்பட்டாலும் அதை (அற்பமாகக் கருதாமல்) ஏற்றுக் கொள்வேன்'' என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த இரண்டு ஹதீஸையும் இணைத்து பொருள் கொடுத்தால் விருந்தழைப்பு குறித்து நபிகளார் சொன்னது என்ன என்பதை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்
விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். (ஏழைகள் விடுக்கும்) விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் நபியவர்களுக்கு மாறு செய்தவராவார் என ஹதீஸ் கூறுகின்றது.
ஏழை என்பதற்காக ஒருவரை விருந்துக்கு அழைக்காமல் இருப்பதையும் ஏழை அழைத்தார் என்பதற்காக அவருடைய விருந்தழைப்பைப் புறக்கணிக்கக்கூடாது என்பதையும் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்று நபிகளாரின் கூற்றைப் புரிந்துகொண்டால் எந்தக் குழப்பமும் இருக்காது.
விருந்தழைப்பை மறுக்கக் கூடாது என்று கூறி மண்டபத் திருமணத்திற்கு ஆதரவு கொடுத்து, எளிமையான திருமணத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடக்கூடாது.
அதே சமயம் கிளை அல்லது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் மண்டபத் திருமணத்தில் கலந்து கொள்வதை காரண காரியத்தை அலசி மாநிலத் தலைமை எடுக்க இயலாது. சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருமண விருந்து எளிமையானது தானா அல்லது ஆடம்பரமானதா என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து முடிவெடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறையச்சமுள்ளவர்களுக்கு இமாமாக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தனது இல்லத் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் நிர்பந்தமான சூழல் ஏற்பட்டு மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டால் அவர் சார்ந்திருக்கும் கிளை, மாவட்ட நிர்வாகம் அவரை மண்டபத் திருமணத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தால் அப்போது அவர் பங்கேற்கலாம்.
ஆடம்பரத்தில் சிக்குண்டு சிதறும் சமுதாயத்தின் நிலையை மாற்றுவதற்காக எளிமையானத் திருமணத்திலே பரக்கத் உண்டு என்ற நபிமொழியை பரவலாக நடைமுறைப்படுத்த வேண்டிய உன்னதமான நோக்கத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


-மார்ச் ஏகத்துவம் 2015