Sunday, March 08, 2015
Friday, March 06, 2015
Thursday, March 05, 2015
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக ஜும்ஆ நேரம் மாற்றம்
Thursday, March 05, 2015
No comments
இன்று முதல் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக அதிரை தவ்ஹீத் பள்ளியில் 12.30 தொடங்கும் ஜும்ஆ பயான் தேர்வு நாட்களில் 12:45 தொடங்கும் தொழுகை 1.30 நடைபெறும் இந்த நேர மாற்றம் 10 ம் வகுப்பு தேர்வு முடியும் வரை நடைமுறையில் இருக்கும்
Saturday, February 28, 2015
துபாய் JT மர்கஸில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம்
Saturday, February 28, 2015
No comments
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்ஹம்துலில்லாஹ் கடந்த 27/02/2015 வெள்ளிக்கிழமை மாலை 4:45 மணி அளவில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம் துபை JT மர்கஸில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
1, நமதூரில் தொடங்கபடவுள்ள பெண்கள் அல் ஹிக்மா அரபிக்கல்லுரியின் ஆயுட்கால புரவலர் மற்றும் சந்தாதாரர்கள் சேர்பது என ஆலோசிக்கப்பட்டது .
2, நமது தவ்ஹீத் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு நூல்கள் மற்றும் குரான் வாங்குவது என தீர்மானிக்கப்பட்டது
Friday, February 27, 2015
அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம்
Friday, February 27, 2015
No comments
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம் 27.2.2015 வெள்ளிக்கிழமை சுபுஹு தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் கிளைத்தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்று இதில் விரைவில் துவங்கவுள்ள அல்-ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1) கல்லூரி நடைபெற இருக்கும் கட்டிடத்தில் மின்சாரம் வேலைகள் தண்ணீர் வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்வது
2) கல்லூரி பற்றி இரண்டு இடங்களில் பேனர் வைப்பது
3) உணர்வில் விளம்பரம் செய்வது
4) கல்லூரியின் சேர்க்கை விண்ணப்பத்தை உடனடியாக பொதுமக்களிடம் வினியோகம் செய்வது
5)கல்லூரிக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பது
6)அல்-ஹிக்மா பெண்கள் கல்லூரிக்கு மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸியை முதல்வராக நியமிப்பது
7) கல்லூரிக்கு வெளியே கல்லூரி நிர்வாக பொறுப்புகளை கவனிப்பதற்கு சகோதரர் கிளை செயலாளர் பக்கீர் முகைதீனை நியமிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
துபாயில்Tntj அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்
Friday, February 27, 2015
No comments
இன்ஷாஅல்லாஹ்
அதிரை TNTJ கிளையின் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் ஆலோசணை கூட்டம் வருகின்ற 27/02/2015 வெள்ளிகிழமை அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 4:45 மணி அளவில் தேரா போரி மஸ்ஜித் பின்புறம்உள்ள துபை JT மர்க்கசில் நடைபெறஉள்ளது . நமது ஊரில் வருகின்ற கல்வி ஆண்டில் துவங்க உள்ள அல் ஹிக்கமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி துவங்குவதை பற்றியும் மற்றும் புதிய செயல்பாடுகளை பற்றியும் ஆலோசணை செய்ய இருப்பதால் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு
அப்துல் ரஹ்மான் 0527788264
சலீம் 0551878637
ஜஹபர் சாதிக் 0557428381
அதிரை TNTJ கிளையின் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் ஆலோசணை கூட்டம் வருகின்ற 27/02/2015 வெள்ளிகிழமை அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 4:45 மணி அளவில் தேரா போரி மஸ்ஜித் பின்புறம்உள்ள துபை JT மர்க்கசில் நடைபெறஉள்ளது . நமது ஊரில் வருகின்ற கல்வி ஆண்டில் துவங்க உள்ள அல் ஹிக்கமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி துவங்குவதை பற்றியும் மற்றும் புதிய செயல்பாடுகளை பற்றியும் ஆலோசணை செய்ய இருப்பதால் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு
அப்துல் ரஹ்மான் 0527788264
சலீம் 0551878637
ஜஹபர் சாதிக் 0557428381
Friday, February 20, 2015
விவாதத்தில் இருந்து அன்சார் மவ்லவி தப்பி ஓட முயற்சி
Friday, February 20, 2015
No comments
+++++++++++++++++++++
சொந்தப் பணத்தில் இந்தியா சென்று விவாதிக்கத் தயார் என்று கூறி வாய்ச்சவடால் விட்டு, தற்போது விவாதத்திருந்து ஓட்டமெடுத்துள்ள அக்கரைப்பற்று அன்சாரின் விவாத நாடகம் பற்றிய சுருக்கமான உரை.
அன்சார் மவ்லவி மற்றும் பி.ஜெ ஆகியோருக்கிடையிலான கடிதப் பரிமாற்றங்களை முழுமையாக படிக்க..
http://www.sltj.lk/
அருமையான ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்து இருந்தோம் ஓடி ஒழிய இத்தனை வழிகளா ?என்று வியக்க வைக்கிறார் சகோதரர் அன்சார் தப்லீகி .
இந்த விவாதம் நடக்க வேண்டும் இன்னும் பத்து நாள் இருக்கின்றது ஸாபித் ,அர்ஹம் ,அப்துல் ஹமீது .முர்ஷித் அப்பாசி ,சித்திக் போன்றவர்கள் எல்லாம் அதிரைக்கே வந்து செல்ல விசா கிடைக்கும்போது இந்த அன்சாருக்கு ஏன் கிடைக்காது ?
அவர்கள் இங்கு வர tntj கடிதம் தேவைப்படவில்லை என்பதை விளக்கி இழுத்து வர யாராவது முயற்சிக்கலாமே
செய்வார்களா ?
Tuesday, February 17, 2015
அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரியை பார்வையிட்ட M I சுலைமான்
Tuesday, February 17, 2015
No comments
Saturday, February 14, 2015
நபிகளாரின் நளினம் அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்(13/02/15)
Saturday, February 14, 2015
No comments
Friday, February 13, 2015
அதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்
Friday, February 13, 2015
No comments
அதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 16-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் இரவு 7.00 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் சகோ. ஜாஹிர் தலைமையில் நடைப்பெற்றது.
அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதில், 22 சகோதரர்களின் உணர்வு, ஏகத்துவம் & தீன்குலப்பெண்மனி ஆகிய வாரம் & மாத இதழ், அல்லாஹ்வின் அருளால் அதிரையில் அபுதாபி சார்பில் துவங்கப்பட்டது.
மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இறுதியில், துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.
ஜசாக்கல்லாஹ்..
Thursday, February 12, 2015
நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்!
Thursday, February 12, 2015
No comments
நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்!
அல்லாஹ்வின்
அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு பிரச்சாரம் சமுதாயப் பணிகளைச் சிறப்பாக செய்து
வருகிறது.
v
உமா
சங்கரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,
v
கிறித்துவர்களுடன்
விவாதங்கள் மூலம் இஸ்லாத்தை பரப்புவது
v
பில்லி
சூனியம் ஜோசியம் என்ற பெயரில் மக்களை மடையர்களாக்கி வரும் மந்திரவாதிகளிடம் துணிச்சலாக
சவால் விட்டு இஸ்லாத்தையும் ஓரிறைக் கொள்கையையும் நிலை நாட்டி வருவது
v
பிரச்சாரர்களுக்கான
பயிற்சி வகுப்பு
v
பிரச்சாரர்களை
உருவாக்கும் வகுப்புகள்
v
ஆண்கள்,
பெண்களுக்கான மதரஸா
v
நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தஃவாப் பணி
என்று
கணக்கிலடங்காத பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவதைக் கண்டு பொருக்க முடியாமல்
வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் நடுநிலைவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர்
தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பதைத் தங்கள் முக்கியத் தொழிலாக வைத்துள்ளனர். பாவம் வேறு
பிழைப்பில்லை இவர்களுக்கு.
எனினும்
எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் விவாதக் களத்தில் நேருக்கு நேர் சொல்லுங்கள் என்று
இவர்களில் பலருக்கு அழைப்புக் கொடுத்தும் விவாதம் என்றால் ஓடிவிடுகின்றனர்.
அப்படியே
விவாதக் களத்திற்கு ஆசைப்பட்டு இவர்கள் வந்தாலும் அங்கு நாம் கொடுக்கும் (பதில்) அடியில்
அனைத்தையும் மறந்து விட்டு பேய் (?) அறைந்தார் போல் என்ற பழமொழிக்கு ஏற்ப அமர்ந்து விடுகின்றனர். குற்றச்சாட்டுக்களை
மக்கள் மத்தியில் பரப்பும் இவர்களுக்கு நம் முன்னிலையில் விவாதத்தில் அவற்றை சொல்ல
துப்பில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
எனினும்
நடுநிலை வேஷம் போடும் இந்த நயவஞ்சகக் கூட்டத்தினரின் முகத்தை மக்கள் அறிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக இவர்களின் நடுநிலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
நடுநிலை
பேசுவோரின் இலட்சனம்
F
நாங்கள்
எந்த இயக்கத்தையும் சேராதவர்கள் என்று சொல்லும் இவர்கள் தனி இயக்கமொன்று நடத்துவார்கள்
F
தவ்ஹீத்
ஜமாஅத் பிற இயக்கங்களை விமர்சிக்கிறது என்று கூறும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்காத
நாள் இல்லை
F
ஒரு
சகோதரனின் மானம் கஃபாவைப் போன்று எனக் கூறி அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்கும் இந்த கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்களை நா கூசாமல்
ஆபாச அர்ச்சனை பண்ணுவார்கள்
F
தவ்ஹீத்
ஜமாஅத் தனிப் பள்ளி கட்டி சமுதாயத்தை பிரிக்கிறது என்று புலம்பும் இவர்கள் குழப்பம்
உண்டாக்கும் பள்ளிவாசல் (?) கூடாரத்தை இவர்கள் பகுதியில் கட்டி வைத்திருப்பார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி கட்டி ஜமாஅத் பெயரில் பதிவு செய்து கொள்கிறது பள்ளியை அபகரிக்கும் முயற்சி இது என்று சொல்லிக்கொண்டே பிலால் பள்ளியை அபகரிக்க முயற்சி செய்வார்கள் .( பிலால் பள்ளியில் இருந்து சமீபத்தில் விரட்ட பட்டார்கள் )
F
தவ்ஹீத்
ஜமாஅத்தில் பயான் செய்வோர் மட்டும் தான் தவ்ஹீத் வாதிகளா? நாங்கள் யார் பயான் செய்தாலும்
கேட்போம், அனைவரின் நூல்களையும் படிப்போம் பரப்புவோம், என பிதற்றித் திரியும் இவர்கள்
தவ்ஹீத் ஜமாஅத்தினரின் நூல்களை மட்டும் இவர்களின் பள்ளிவாசலிலும் மதரஸாவிலும் அப்புறப்படுத்தி
விடுவார்கள்.
F
நாங்களும்
தவ்ஹீத் தான் என மக்களை ஏமாற்றி வரும் இவர்கள் மத்ஹபைப் பின்பற்றும் ஆலிம்களைக் கூட
ஜும்மாவில் ஏற்றத் தயங்குவதில்லை. ஏனென்றால் இவர்கள் பார்வையில் பிஜேவை எதிர்ப்பது
மட்டும் தானே தவ்ஹீத். என்ன கொள்கை உறுதி? அடேங்கப்பா!
F
உலகத்தில்
எந்தப் பகுதியில் பிறை பார்த்தாலும் பெருநாள் கொண்டாடுவது தான் சரியான பாதை. அதுவே
விஞ்ஞானம், நபி பெருநாள் கொண்டாடியது போல் பெருநாள் கொண்டாடுவது வழிகேடு என கூறும்
இந்தக் கூட்டத்தினர் ஊரை ஏமாற்ற இரண்டு பெருநாள் தொழுகையை நடத்துகின்றனர். இதுவே இவர்களின்
தனிச் சிறப்பு?
F
தவ்ஹீத்
ஜமாஅத் நேற்று ஒரு ஃபத்வா! இன்று ஒரு ஃபத்வா கொடுக்கிறது, நாங்கள் அப்படியெல்லாம் ஆய்வு
செய்யும் கூட்டமல்ல, அறைவேக்காட்டுத்தனமான கூட்டம் என்று நிரூபிக்கும் இவர்கள், தங்கள்
இயக்கத்தின் சார்பாக பேச அழைத்து வரும் ஆய்வாளர்(?)களை ஒரே மேடையில் அமர வைத்து ஒரே
கேள்வியை அனைவரிடமும் கேட்டால் ஒரே நாளில் ஒரே விசயத்தில் எப்படி முரண்பட்டு அந்த ஆய்வாளர்(?)கள்
நிற்பார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். அப்போது இவர்களின் முரண்பட்ட ஃபத்வாக்கள்
கிழிந்து தொங்கும்.
F
தவ்ஹீத்
ஜமாஅத்தை விமர்சித்து கூட்டம் நடத்தும் இந்தக் கொள்கை கெட்டவர்களுக்கு துப்பிருந்தால்
முக்காடு போட்டுக் கொண்டு ஒப்பாரி வைக்கும் பாஸித், அல்லது ஜாகிர் நாயக் அல்லது, ஸலஃப்
ஜுப்பா கும்பலை அழைத்து வந்து மத்ஹபைப் பற்றிப் பேச வைக்க இயலுமா? வழிகெட்ட தரீக்காவை
பற்றி பேச வைக்க இயலுமா? அப்போது தெரியும்
இவர்கள் தவ்ஹீதைச் சொல்லத் துணிவில்லாத கூட்டம் என்பதும் தகுதியற்ற கூட்டம் என்பதும்.
F
வரதட்சனை
மற்றும் ஆடம்பரத் திருமணங்களில் பாரபட்சம் இல்லாமல் கலந்து கொள்வது தான் இவர்களின்
நடுநிலைக் கொள்கை
F
இணைவைக்கும்
இமாம் பின்னால் நின்று தொழுவது தான் இவர்கள் கூறும் தவ்ஹீத் ஃபத்வா?
F
பணக்காரர்களுக்கு
வளையும் தவ்ஹீதைத் தான் இவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஹஜ் உம்ரா பெயரில் தங்கள் சகாக்கள்
மோசடி செய்தாலும் ரியல் எஸ்டேட் பெயரில் மக்களை ஏமாற்றித் திரிந்தாலும் வெளிநாட்டுக்கு
அனுப்பி வைப்பதாக சொல்லி அடுத்தவன் பணத்தை ஆட்டைப் போட்டாலும் அவர்களுக்குத் தோள் கொடுப்பது
தான் இவர்கள் கண்டு பிடித்த சமுதாய ஒற்றுமை? தவ்ஹீத்?
F
சூனியம்
கண்ணேறு போன்ற இணைவைப்பை நியாயப்படுத்துதான் இவர்களின் தவ்ஹீத்?
F
தவ்ஹீத்
ஜமாஅத் நடத்தும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நின்று விட்டால் மகிழ்ச்சியடைவதும் நடந்து விட்டால்
கவலைப்படுவதும் தான் இந்த நயவஞ்சகர்களின் தவ்ஹீத்?
தவ்ஹீதுக்கு
எதிராகவே இவர்கள் இயங்குகிறார்கள் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல என்ற நமது குற்றச்சாட்டுக்கு
இவர்களிடம் பதில் இல்லாததால் தனி நபர் விமர்சனத்தில் ஈடுபடுகின்றனர். எந்த தனி நபர்
மீதான விமர்சனத்தையும் எப்படி எதிர் கொள்வது என்று ஜமாஅத்திற்கு தெரியும். யாருக்காகவும்
வளையாத ஜமாஅத் தான் தவ்ஹீத் ஜமாஅத்.
வேலையற்ற
வீணர்களின் விமர்சனங்களுக்கு தேவை ஏற்பட்டால் தலைமை விளக்கமளிக்கும். எனினும் யாரும்
அவசரப்பட வேண்டாம். ஆசைப்பட வேண்டாம். பேச வேண்டிய மேட்டர் நிறைய இருக்கு. மதரஸாவில்
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு இவர்களின் ஆசிரியர்(?) நடவடிக்கை எடுக்கப்பட்ட விசயங்களும்
நர்ஸ் விவகாரமும் தாயுடனும் சகோதரியுடனும் கூட பாலியல் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க
மாட்டேன் என்று இவர்களின் ஆய்வாளர்(?) பேசியது உட்பட இன்னும் பல விவகாரங்களும் பாக்கி
இருக்கிறது.
அதை
மாநிலத் தலைமை விரும்பினால் பேசுவார்கள். அது வரை பொறுத்திருப்போம்உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்து கிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சி னால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.(3:120)
Wednesday, February 11, 2015
அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரி கலந்தாய்வு
Wednesday, February 11, 2015
No comments
அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்று 10/02/15 இஷா தொழுகைக்கு பிறகு மத்ரஸா சம்பந்தமாக தவ்ஹீத் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த அமர்வில் மதரஸாவிற்கு "அல் ஹிக்மா" மகளிர் இஸ்லாமியக் கல்லூரி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!
மதரசா விற்கான இடம் பார்வை இடல்
Wednesday, February 11, 2015
No comments
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கவுள்ள பெண்கள் இஸ்லாமியக் கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாநிலப் பேச்சாளர் சகோதரர் அஷ்ரஃப் தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மற்றும் அதிரைக் கிளையின் பொறுப்பாளரும், மலேஷியக் கிளையின் பொருளாளருமான ஜாஹிர் அவர்களும் இன்று பார்வையிட்டனர்.
இன்ஷா அல்லாஹ் மற்ற விபரங்கள் விரைவில்…
Friday, February 06, 2015
உறவும் பிரிவும் அல்லாஹ்விற்கே (ஜும்மா 06/02/15)
Friday, February 06, 2015
No comments
11:46 قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۖ إِنِّي أَعِظُكَ أَن تَكُونَ مِنَ الْجَاهِلِينَ
'நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்' என்று அவன் கூறினான்
60:4 قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ إِلَّا قَوْلَ إِبْرَاهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَا أَمْلِكُ لَكَ مِنَ اللَّهِ مِن شَيْءٍ ۖ رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ '
உங்களை விட்டும், அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. 'உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ் விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர.247 (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) 'எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது' நமக்கும் இதே அறிவுரை
58:22 لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ் வையும் இறுதி நாளையும்1 நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
8:67 مَا كَانَ لِنَبِيٍّ أَن يَكُونَ لَهُ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِي الْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ الدُّنْيَا وَاللَّهُ يُرِيدُ الْآخِرَةَ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ 8:68 لَّوْلَا كِتَابٌ مِّنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ
பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப் பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்
இன்று நம் நிலை
மௌலிது ஓதும் பள்ளிவாசலை நாம் புறக்கனித்தோமா ?
இணை கற்பிக்கும் இமாமை புறக்கணித்து உள்ளோமா ?
வரதட்சனை திருமணங்களை புறக்கணித்தோமா ?
|புஹாரி ஷெரீஃப் என்ற பெயரில் நடக்கும் கூத்தை புறக்கணித்தோமா ? வரதட்சணைக்கு எதிராக நாம் என்ன செய்தோம் ?
ஆடம்பர திருமணத்திற்கு எதிராக என்ன செய்தோம் ?
வட்டியை ஒழிக்க வட்டி இல்லாத கடன் திட்டம் செய்வதற்கான முயற்சியாக நாம் என்ன செய்தோம் ?
கந்தூரியை தடுத்து நிறுத்த நாம் செய்யும் முயற்சி போதுமானதா ? தர்காக்களை அப்புற படுத்த செய்த முயற்சி என்ன ? வாழா வெட்டி பெண்களை வாழ வைக்க செய்த முயற்சி என்ன ?
சங்கத்து புத்தகத்தில் பதிவதற்கு 2400 ரூபாய் கொடுத்தால் போதும் வரதட்சனை கொடுக்கின்றீர்களா கொடுத்தால் ஆம் என்று எழுதுங்கள் இல்லை என்றால் இல்லை என்று எழுதுங்கள் என்றே சங்கத்து புத்தகத்தில் அதிகாரபூர்வமாக வரதட்சணையை ஏற்று கொள்ளும் நிலையில் நமது முஹல்லாக்கள் இருக்கின்றது
Wednesday, February 04, 2015
Tuesday, January 27, 2015
Wednesday, January 21, 2015
புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துத்திற்கு உதவி செய்வீர்
Wednesday, January 21, 2015
No comments
அதிராம்பட்டினம் திலகர் தெருவைச்சார்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சகோதரின் 13 வயது மகன் ஹோட்கின் லிம்போமா வகை கேன்ஷரால் பாதிக்கப்பட்டுள்ளான் இந்த கேன்ஷர் 2வது ஸ்டேஜில் உள்ளது உடனே கீமோதெரபி ட்ரீட்மெண்ட ஆரம்பிக்க வேண்டும் இதுவரை கடனுபட்டு ரூ30 000 வரை டெஸ்ட்களுக்கு செலவாகிவிட்டது எனவே கொடையுள்ள படைத்தவர்கள் இந்த சிறுவனின் மருத்துவ உதவிக்காக அதிரை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் உங்கள் உதவிகளை வழங்கினால் அதை சிறுனின் மருத்துவ சிகிச்சைகாக வழங்கப்படும்
தொடர்புக்கு : 9944824510, 9500821430, 8015379211
வங்கி கணக்கு விபரம்:
வங்கி கணக்கு பெயர் (Name) : TAMIL NADU THOWHEED JAMAATH
வங்கி பெயர் (Bank Name) : CANARA BANK
கணக்கு எண் (Account Number) : 1201201001103
Branch) : ADIRAMPATTINAM
Branch) : ADIRAMPATTINAM
| IFSC Code: | CNRB0001201 |
Saturday, January 17, 2015
Friday, January 16, 2015
Sunday, January 11, 2015
அதிரையில் நடைபெற்ற மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம்
Sunday, January 11, 2015
No comments
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக நேற்று 10.1.2015 சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி அருகில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று இதில் M I சுலைமான் வஹி அல்லாதது வழிகேடே! என்ற தலைப்பிலும் செய்யது இபுராகீம் அப்பாஸ் அலியின் உளறல்களுக்கு வரிக்கு வரி பதில் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் குருகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தில் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Monday, January 05, 2015
அதிரையில் கொள்கையற்ற சர்க்கஸ் கூடாரத்தின் சங்கமம்
Monday, January 05, 2015
No comments
அ தா த குழுவினர் கொள்கையற்றவர்கள் என்பது மேலும் நிரூபனமானது.
சூனியம் (சிஹ்ர்) குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை தவறானது என்பதாலும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுக்கும் சில செய்திகள் குர்ஆனுக்கு முரண்படவில்லை என்பதாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தான் விலகியதாகக் கூறிய, அ தா தவிற்கு கிடைத்த புதிய ஆய்வாளர் (?) அப்பாஸ் அலியை அழைத்து வந்து பேச வைத்ததன் மூலம் தாங்கள் கொள்கையற்றவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் அ த த குழுவினர்.
ஏனென்றால்....
மேலே சொன்ன இரண்டு காரணங்களால் தான் அவர் ஜமாஅத்திலிருந்து விலகியிருக்கிறாரே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொல்வது போல் அவர் காசுக்காகவோ, அரபு நாட்டு சம்பளத்துக்காகவோ மாறவில்லை. (?)
அல்லது இலங்கை உமர் அலி போன்று, குர்ஆன் மட்டும் போதும் என்ற வழிகேட்டைச் சொன்ன ரஷாத் கலிஃபா போன்று மூளை குழம்பியதால் அவர் ஜமாஅத்திலிருந்து விலகவில்லை (?). அப்படி மாறினால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது தான் சொன்ன மார்க்கக் கருத்துக்கள் அனைத்தும் பொய் என்றல்லவா அவர் சொல்லியிருப்பார். அப்படி அவர் சொல்லவே இல்லை. (?) பாவம்.
எனவே அவர் கொள்கையற்றவரல்ல, கொள்கையில் உறுதியானவர். மேலே சொன்ன இரண்டு காரணங்கள் தவிர தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் மற்ற அனைத்துக் கருத்துக்களும் சரியானது என்று நம்புகின்றார் (?). அப்பாஸ் அலியின் கொள்கை தெரியாமல் அவரை மேடையேற்றியுள்ளனர் பிஜே எதிர்ப்புக் கொள்கையுடைய அ த த வினர்.
அவரின் கொள்கை உறுதி (?)க்கு சில சான்றுகள்
எஸ் டி பி ஐயைக் குறித்து கொள்கையற்ற கூட்டம் என அவர் ஏகத்துவம் மாத இதழில் கிழி கிழி என கிழித்து கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலிருந்து இன்னும் அவர் மாறவில்லை. (?)
இது தெரியாமல் அந்த அமைப்பிலிருந்து சிலர் வந்து அமர்ந்திருந்தனர். பாவம்!
தமுமுகவை சுனாமியில் ஊழல் செய்தவர்கள், ஃபித்ரா பணத்தை லட்சக்கணக்கில் மூட்டை போட்டவர்கள் என்றெல்லாம் இங்கிருக்கும் போது பேசியவர் தான் அப்பாஸ் அலி. அதிலிருந்தெல்லாம் அவர் இன்னும் மாறவில்லை. (?)
அப்படியிருக்கும் போது தமுமுக குறித்து அவரின் கருத்து என்னவென்றே தெரியாமல் பிஜேவை எதிர்த்துப் பேசுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அக்கூட்டத்தில் இந்த கொள்கை கெட்ட கூட்டமும் வந்திருந்தனர்.
நபித்தோழர்களை பின்பற்றும் சலஃபிக் கூட்டத்தை வழிகெட்ட கூட்டம் என்று அவர் ஏகத்துவம் இதழில் எழுதிய கட்டுரையை பல ஊர்களில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் நோட்டீஸாக அடித்து பரப்பினர். அந்த அளவுக்கு ஸலஃபிக் கொள்கையினரின் வழிகேட்டை தெளிவாக
அடையாளம் காட்டி எழுதியிருந்தார். அந்தக் கருத்திலிருந்தும் அவர் இன்னும் மாறவில்லை. அதிலும் அவர் உறுதியாகத் தான் இருக்கிறார் (?)
இது தெரியாமல் சலஃபுக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் அப்பாவியாய் வந்து இக் கூட்டத்தில் சங்கமித்திருந்தனர். அய்யோ பாவம்! சலஃபுக் கூட்டம்!
பிறை விசயமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தின் அடிப்படையில் தமிழகத்தில் பார்க்கப்படும் பிறையை வைத்தே தமிழகத்தில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற கருத்தையே அப்பாஸ் அலி சொல்லி வந்தார். அதிலிருந்தும் இன்னும் அவர் மாறவில்லை. (?)
இது தெரியாமல் உலகப் பிறை ஊணப் பிறை பார்க்கும் கும்பலும் இதில் சங்கமமாகியுள்ளனர். பெருநாள் வரும் போது அப்பாஸ் அலியை விரட்டி விடுவார்களா? இவர்களின் ஊனப் பிறை குறித்து அப்பாஸ் அலி விமர்சித்து விளக்கமளிப்பாரா? என்பது பின்னால் தெரியும்.
பெண் வீட்டார் விருந்தளிப்பதும் வரதட்சனை தான் என்றும் அவர்கள் விரும்பிக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது என்றும் ஆடம்பரத் திருமணம் கூடாது என்றும் அவர் தனது வரதட்சனை ஓர் பெண் கொடுமை என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் கர்ஜனையிலிருந்து அவர் இன்னும் மாறவில்லை.
அப்படியிருக்கும் போது எல்லாக் கல்யாணத்திலும் பிரியாணிக்காக பல் இளிக்கும் கொள்கைக் குன்றுகள் (?) அப்பாஸ் அலியை தெரியாமல் அழைத்து வந்து விட்டனர்.
அது மட்டுமல்ல, இனி அப்பாஸ் அலியை திருமணத்தில் தஃவா செய்ய அழைப்பார்கள். எந்த ஆடம்பரக் கல்யாணத்துக்கும் பெண் வீட்டார் விருந்து போடும் திருமணத்துக்கும் அவர் போக மாட்டாரே? பார்க்கத் தான் போகிறோம் அவரின் கொள்கை உறுதியை(?) ( வேடிக்கையை! )
பிஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் தவறு இருப்பதாகக் கூறியவர்களை தன் வாதத்தின் மூலம் பொறிந்து தள்ளியவரல்லவா? அப்பாஸ் அலி. அதிலிருந்தும் அவர் மாறவில்லை(?)
பிஜே தமிழாக்கத்தில் நிறைய தவறுகள் இருப்பதாக அவதூறுப் பிரச்சாரம் செய்து வரும் அ த த குழுவினர் இதையெல்லாம் அவரிடம் கேட்காமலேயே அவரை மேடைக்கு அழைத்து வந்து விட்டனர்.
அப்பாஸ் அலி முன்னர் சொன்ன ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இவர்களிடம் இருக்கையில் மக்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் மூலை நரைத்தவர்கள்.
பெண்கள் முகத்தை மூடக் கூடாது என்று சலஃபிகளிடம் ஆணித்தரமாக விவாதம் செய்தவர் அப்பாஸ் அலி. அதிலும் இன்று வரை உறுதியாக இருக்கிறார் (?).
இதைப் பற்றியெல்லாம் இனியும் அ தா தவினர் போன்று யாரும் மேடை அமைத்துக் கொடுத்தால் பழைய வேகத்துடன் பேசுவார்( ? ). மேடை கிடைத்ததற்காக கொள்கையை மறைப்பவர் அல்ல இந்த அப்பாஸ் அலி (?)
பாதுகாப்பான பயணமாக இருந்தால் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஹஜ்ஜு உள்ளிட்ட எந்த பயணமாக இருந்தாலும் மஹ்ரமான ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணம் செய்து போகலாம் என்று எழுதிய அப்பாஸ் அலி அதிலும் இனி உறுதியாகத் தான் இருப்பார். (?)
இதையெல்லாம் அவர் எழுதும் போது கேலி செய்த கும்பல் இப்போது அதை மறந்து விட்டு அவர் கூட்டத்துக்கு வந்து விட்டனர். ஹய்யோ! ஹய்யோ! சிரிப்பு தான் வருது.
அதிகாரம் உடையவரே அமீராக இருக்க முடியும். இயக்கத்தின் தலைவர்கள் அமீராக முடியாது. அமீர் என்ற பெயரில் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற கருத்திலேயே அப்பாஸ் அலி இருந்தார். இன்னும் அக்கருத்தில் உறுதியாகத் தான் இருக்கிறார். (?)
அமீரை ஏற்றுக் கொண்ட கூட்டம் அறியாமல் அப்பாஸ் அலியை மேடையேற்றி விட்டனர்.
ஜகாத் விசயத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் கொடுத்த பொருளுக்கே திரும்பத் திரும்ப ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தையும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்னும் அதே கருத்தில் தான் இருக்கிறார் (?).
ஆனால் இக்கருத்து உலகத்தில் யாருமே சொல்லாத கருத்து என்று விமர்சித்த கூட்டம் ஜகாத் விசயத்தில் அப்பாஸ் அலியின் கருத்தை கேட்காமல் மேடையேற்றிவிட்டனர்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் இவர்கள் செயல்படுகிறார்கள். அண்ணனைப் பேசினால் தான் 30 வருடமாக காணாமல் போன இயக்கத்தை வளர்க்க முடியும் என்பது தான் கொள்கையற்ற இந்தக் கூட்டத்தினரின் நோக்கம்
அதனால் தான் தங்களுடன் பல கருத்துக்களில் மாற்றமாக உள்ள அப்பாஸ் அலியை அழைத்து வந்துள்ளனர்
பிற இயக்கத்தினரின் மேடைகளில் ஏறக் கூடாது என்றும் அப்பாஸ் அலி பேசியிருக்கிறாரே பிறகு எப்படி இந்த மேடையில் ஏறினார் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். அவர் கொள்கையில் உறுதியானவர் (?) மிகச் சிறந்த ஆய்வாளர் (?) பணத்துக்காகவோ மேடைக்காகவோ அவர் இவர்களின் மேடை ஏறவில்லை. தான் முன்பு சொன்னதை மறக்கும் நோய் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
இல்லை இல்லை!, தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் தற்போது அப்பாஸ் அலி வாபஸ் வாங்கிக் கொண்டார் என்று இந்தக் கூடாரம் சொல்வார்களானால் சூனியம் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மறுக்கும் ஹதீஸ்களைப் பற்றிய ஆய்வால் (?) அவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்கவில்லை என்பதும், கொள்கை கெட்டுத் தான் மூலை குழம்பித் தான்இ பணத்துக்காகத் தான் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றினார் என்பதும் அதற்காகத் தான் அவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்கி நடவடிக்கை எடுத்தது என்பதும் மேலும் நிரூபனமாகும்.
அப்பாஸ் அலியின் கொள்கை தெரியாமல் அவரை மேடையேற்றியதன் மூலம் இவர்கள் கொள்கையற்றவர்கள் என்பது மேலும் நிரூபனமாகியிருக்கிறது
கொள்கையற்ற கூட்டம் கொள்கையை இழந்த அப்பாஸ் அலியை நம்புகிறது. கொள்கையிழந்த அப்பாஸ் அலி கொள்கையற்ற அனைவருடனும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
அவர்கள் இவரை வழிகெடுப்பார்களா? இவர் அவர்களை வழிகெடுக்கப் போகிறாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!
Sunday, January 04, 2015
கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து அப்பாஸ் அலி பதறி ஓட்டம்:
Sunday, January 04, 2015
No comments
அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....
கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து அப்பாஸ் அலி பதறி ஓட்டம்:
ஞாயிற்றுக்கிழமை 04.01.2015 அதிரையில் அப்பாஸ் அலி உரை நிகழ்த்த உள்ளதாகவும், அந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கேள்வி கேட்டால் அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்ற ரீதியில் பல பில்டப்புகளை கொடுத்து கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
04.01.2015 அன்று அதிரையில் அப்பாஸ் அலி.
கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து அப்பாஸ் அலி பதறி ஓட்டம்:
ஞாயிற்றுக்கிழமை 04.01.2015 அதிரையில் அப்பாஸ் அலி உரை நிகழ்த்த உள்ளதாகவும், அந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கேள்வி கேட்டால் அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்ற ரீதியில் பல பில்டப்புகளை கொடுத்து கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
04.01.2015 அன்று அதிரையில் அப்பாஸ் அலி.
ததஜவினருக்கு அறிய வாய்ப்பு!
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்இன்ஷா அல்லாஹ், அதிரையில் எதிர்வரும் 04.01.2015 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து...
ததஜவினருக்கு அறியதோர் வாய்ப்பு
1. ஒரு சில மாதங்களுக்கு முன் மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் காரைக்கால் நகருக்கு வருகை தந்திருந்தபோது, ததஜவினர் 'சூனியம்' குறித்து தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும்இ தெளிவுபெற வேண்டி சிறப்பு கேள்வி பதில் நேரத்தை ஒதுக்கித் தரும்படியும் பகிரங்கமாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி வேண்டிக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களும் அவர்களின் மனநிலையில் உள்ள ஏனைய ததஜவினரும்...
2. ததஜ தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தபடி, மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் பேசும் இடங்களில் எல்லாம் சூனியம் சம்பந்தமாக கேள்வி கேட்டு அவரை திணறடிக்க விரும்பும் ததஜவினரும்...
3. மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கேள்வி கேட்க விரும்பும் ததஜ சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்...இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்.
மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் உரைக்குப்பின் நேரடியாக கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.
மேற்கண்டவாறு அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தனர். இந்த அறிவிப்பில் சொல்லப்பட்டது பெயரளவுக்குச் செய்யப்பட்டதா? உண்மையாகவே தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய எங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக அறிவிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அப்பாஸ் அலியை வைத்து பொதுக்கூட்டம் நடத்தும் தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கு நமது அதிரை கிளை சார்பாக கடிதம் வழங்கினோம்.
அதில் கீழ்க்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
அதிரை தாருத் தவ் ஹீத் நிர்வாகிகளுக்குஇ
அஸ்ஸலாமு அலைக்கும்
எங்களுக்கு சூனியம் தொடர்பாக சுமார் 30க்கும் மேற்பட்ட கேள்விகள் உள்ளன. அவை அனைத்துக்கும் விளக்கம் அளித்தால் தான் உண்மையான அறிவிப்பாக இது இருக்க முடியும். அவ்வாறு இல்லாமல் கூட்டம் முடியும் நேரத்துக்கு நெருக்கத்தில் கேள்வி பதில் என்று ஆரம்பித்துஇ இத்துடன் நேரம் முடிந்து விட்டது என்று சொல்லப்பட்டால் அந்த அறிவிப்பு போலி அறிவிப்பாகி விடும். எனவே இதை உறுதிப்படுத்திக் கொள்ள இக்கடிதம் அளிக்கிறோம். எங்களின் கேள்விக்காக குறைந்தது எங்களுக்கு இரண்டு மணி நேரங்கள் ஒதுக்கித் தர வேண்டும்.
அல்லது குறைந்தது 20 கேள்விகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இப்படி உறுதி மொழி அளித்து எங்களுக்கு எழுத்து மூலமான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
மேலும் கேள்விகள் எழுத்து மூலமாக இல்லாமல் வாய்மொழியாக கேட்க அனுமதிக்க வேண்டும். எழுத்து மூலமாக கேள்வி என்று அறிவித்தால் அதில் தனக்கு சாதமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் நாடகம் நடத்தி எங்கள் கேள்விகள் தவிர்க்கப்படும் என்ற சந்தேகம் ஏற்படும். இதற்கு இடம் தாரமல் நேரடி வாய் மொழியான் கேள்விக்கு உத்தரவாதம் தர வேண்டும் என்று கோரி இம்மடலை அளிக்கிறோம்.
ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேரடியாக கேள்விகள் கேட்க தங்களது எழுத்துப்பூர்வமான ஒப்புதலை வரக்கூடிய 31.12.14 புதன் கிழமை இரவு 8மணிக்குள் வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
அதிரை கிளை தலைவர்
மேற்கண்டவாறு நாம் அவர்களுக்கு அளித்த கடிதத்திற்கு கீழ்க்கண்டவாறு பதிலளிதத்தன் மூலம் வாய்ச்சொல் வீரர் அப்பாஸ் அலி நமது தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையினரது கேள்விகளை சந்திக்க திராணியில்லாமல் ஓட்டமெடுத்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
அவர்கள் அளித்துள்ள பதிலை பாருங்கள்:
'2மணி நேரத்தில் தவ்ஹீத் ஜமாத்தினர் மட்டுமல்லாது பார்வையாளர் பகுதியில் இருப்பவர்களது கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும். 3 நிமிட்த்திற்கு மேல் கேள்வி கேட்க அனுமதியில்லை' இது தான் அவர்களது பதில் கடித்த்தின் சாரம்சம்.
தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரிய வாய்ப்பு என்று தான் அவர்களது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்கள்.
நாம் குறைந்தது 20 கேள்விகள் கேட்பதற்கோ அல்லது குறைந்தது 2மணி நேரமோ ஒதுக்கச்சொல்லி கேட்டிருந்தோம். நமது கேள்விகளை எதிர்கொள்ள நான் தயார் என்று சொல்பவர் என்ன செய்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்தை நாங்கள் ஒதுக்குகின்றோம்; தவ் ஹீத் ஜமாஅத்தினர் எப்படி வேண்டுமானாலும், அந்த இரண்டு மணி நேரத்தில் கேள்விகளைக் கேட்கலாம்; அத்துனை கேள்விகளுக்கும் அப்பாஸ் அலி வரிக்கு வரி பதிலளிப்பார் என்று பதில் தந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பதிலளிக்க திராணியில்லாமல், 'இரண்டு மணி நேரத்தை கேள்வி பதில் நிகழ்ச்சிக்காக நாங்கள் ஒதுக்கியுள்ளோம்; அதில் தவ் ஹீத் ஜமாஅத்தினரும் கேள்வி கேட்கலாம்; தவ் ஹீத் ஜமாஅத் அல்லாத பார்வையாளர் பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்படும் என்று சொல்லி தவ் ஹீத் ஜமாஅத்தினரது கேள்விகளுக்கு பயந்து பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டமெடுத்துள்ளனர்.
கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு கேள்விகளை மட்டும் தவ் ஹீத் ஜமாஅத்தினரை கேட்க விட்டு விட்டு, பார்வையாளர் பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் கேள்வி கேட்க அனுமதி அளித்துள்ளதால் உங்களுக்கு கேள்வி கேட்க அனுமதியில்லை என்று ஓட்டமெடுப்பதற்குத்தான் இத்தகைய நாடகம் என்பதை அனைவரும் எளிதில் விளங்கலாம்.
தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரிய வாய்ப்பு என்று அறிவிப்பு செய்துவிட்டு, கேள்வி கேட்க அனுமதிக்கின்றோம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் வந்து தாராளமாக கேள்வி கேட்கலாம் என்று சொல்லிவிட்டு, நாம் கேள்வி கேட்க அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தவுடன் அந்தர் பல்டி அடித்து, 'உங்களுக்கும் பதில் சொல்வார்; ஊருக்கும் பதில் சொல்வார்' என்று ஓட்டமெடுத்துள்ளார் அப்பாஸ் அலி.
மேலும் ஒரு கேள்வி கேட்க 3 நிமிட்த்திற்கு மேல் அனுமதியில்லையாம். சந்தேகங்களுக்கு பதில் சொல்பவர் இப்படித்தான் 3 நிமிட ஷரத்துகளை போடுவார்களா?
பொதுப்படையாக கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றோம் என்று போட்டிருந்தால் நாம் கடிதம் கொடுத்திருக்கமாட்டோம். தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரிய வாய்ப்பு என்று ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை கோடிட்டுக்காட்டி அறிவிப்பு செய்துவிட்டு எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்று சொல்லி அறிவிப்பு செய்துவிட்டு இப்படி அந்தர் பல்டி அடித்துள்ளதன் மூலம் இவர்களது உண்மை முகம் அம்பலமாகியுள்ளது.
மேலும் கேள்விக்கு பதில் அளிப்பதாக இருந்தால் எவ்வித சலசலப்பும் ஏற்படாது என்பதற்கு பொறுப்பேற்று நாம் உறுதிமொழிக்கடிதம் வழங்க வேண்டுமாம். அப்பொழுதுதான் கேள்வி பதில் நிகழ்ச்சியில் நாம் கேள்வி கேட்க அனுமதி அளிப்பார்களாம். அப்படியானால் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு மட்டும்தான் கேள்வி கேட்க அனுமதி அளிக்கின்றோம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். நாம் எவ்வித சலசலப்பும் ஏற்படாது என்று பொறுப்பேற்று கடிதம் வழங்கிய பிறகு பார்வையாளர்கள் பகுதியில் இருந்து யாராவது சலசலப்போடு கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வார்களாம். இப்படி ஒரு முரண்பட்ட உளறலையும் தங்களது கடித்த்தில் உளறியுள்ளனர்.
இஸ்மாயில் ஸலபி கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக அறிவிப்புச் செய்தவுடன் 2மணி நேரம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்கியதுமே ஆட்டம் கண்டு சப்பை காரணங்களைச் சொல்லி ஓட்டமெடுத்தார். அதுபோலத்தான் தற்போது அப்பாஸ் அலியும் தவ்ஹீத் ஜமாஅத்தினரது கேள்விகளுக்கு பதிலளிக்க திராணியில்லாமல் ஓட்ட மெடுத்துள்ளார். சூனியத்திற்கு கொடி தூக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த இழி நிலையைத்தான் வல்ல ரஹ்மான் ஏற்படுத்துவான் என்பது மீண்டும் ஒரு முறை நீருபணமாகி உள்ளது.
குறிப்பு : அப்பாஸ் அலியின் உளறல்களுக்கு வரிக்கு வரி பதிலளிக்கக் கூடிய மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 10.01.15 சனிக்கிழமை இரவு 6.30மணிக்கு நடைபெறும் இன்ஷா அல்லாஹ்....
வாழ்வாதார உதவிகள்
Sunday, January 04, 2015
No comments
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக வருட வருடம் வசூல் செய்த குர்பானி தோல்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அதிரையில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிகளை செய்துவருகிறது அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் தோல்கள் மூலம் கிடைத்த பணத்தில் முதல் தவனையாக 5 நபர்களுக்கு கிளைச்சார்பாக உதவிகள் செய்யப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்
சுரைக்காய் கொல்லையை சார்ந்த மின்சார வசதி கூட இல்லாத மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சகோதரிக்கு தையல் மிஷின் வழங்கியபோது
மேலத்தெருவை சார்ந்த சகோதரிக்கு கிரைன்டர் மிஷின் வழங்கியபோது
தரகர் தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவி வழங்கியபோது
தரகர் தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவி வழங்கியபோது
தரகர் தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவி வழங்கியபோது

















































