Monday, January 05, 2015

அதிரையில் கொள்கையற்ற சர்க்கஸ் கூடாரத்தின் சங்கமம்



அ தா த குழுவினர் கொள்கையற்றவர்கள் என்பது மேலும் நிரூபனமானது.

சூனியம் (சிஹ்ர்) குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை தவறானது என்பதாலும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுக்கும் சில செய்திகள் குர்ஆனுக்கு முரண்படவில்லை என்பதாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தான் விலகியதாகக் கூறிய, அ தா தவிற்கு கிடைத்த புதிய ஆய்வாளர் (?) அப்பாஸ் அலியை அழைத்து வந்து பேச வைத்ததன் மூலம் தாங்கள் கொள்கையற்றவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் அ த த குழுவினர்.
ஏனென்றால்....

மேலே சொன்ன இரண்டு காரணங்களால் தான் அவர் ஜமாஅத்திலிருந்து விலகியிருக்கிறாரே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொல்வது போல் அவர் காசுக்காகவோ, அரபு நாட்டு சம்பளத்துக்காகவோ மாறவில்லை. (?)

அல்லது இலங்கை உமர் அலி போன்று, குர்ஆன் மட்டும் போதும் என்ற வழிகேட்டைச் சொன்ன ரஷாத் கலிஃபா போன்று மூளை குழம்பியதால் அவர் ஜமாஅத்திலிருந்து விலகவில்லை (?). அப்படி மாறினால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது தான் சொன்ன மார்க்கக் கருத்துக்கள் அனைத்தும் பொய் என்றல்லவா அவர் சொல்லியிருப்பார். அப்படி அவர் சொல்லவே இல்லை. (?) பாவம்.

எனவே அவர் கொள்கையற்றவரல்ல, கொள்கையில் உறுதியானவர். மேலே சொன்ன இரண்டு காரணங்கள் தவிர தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் மற்ற அனைத்துக் கருத்துக்களும் சரியானது என்று நம்புகின்றார் (?). அப்பாஸ் அலியின் கொள்கை தெரியாமல் அவரை மேடையேற்றியுள்ளனர் பிஜே எதிர்ப்புக் கொள்கையுடைய அ த த வினர்.

அவரின் கொள்கை உறுதி (?)க்கு சில சான்றுகள்
எஸ் டி பி ஐயைக் குறித்து கொள்கையற்ற கூட்டம் என அவர் ஏகத்துவம் மாத இதழில் கிழி கிழி என கிழித்து கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலிருந்து இன்னும் அவர் மாறவில்லை. (?)

இது தெரியாமல் அந்த அமைப்பிலிருந்து சிலர் வந்து அமர்ந்திருந்தனர். பாவம்!
தமுமுகவை சுனாமியில் ஊழல் செய்தவர்கள், ஃபித்ரா பணத்தை லட்சக்கணக்கில் மூட்டை போட்டவர்கள் என்றெல்லாம் இங்கிருக்கும் போது பேசியவர் தான் அப்பாஸ் அலி. அதிலிருந்தெல்லாம் அவர் இன்னும் மாறவில்லை. (?)

அப்படியிருக்கும் போது தமுமுக குறித்து அவரின் கருத்து என்னவென்றே தெரியாமல் பிஜேவை எதிர்த்துப் பேசுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அக்கூட்டத்தில் இந்த கொள்கை கெட்ட கூட்டமும் வந்திருந்தனர்.
நபித்தோழர்களை பின்பற்றும் சலஃபிக் கூட்டத்தை வழிகெட்ட கூட்டம் என்று அவர் ஏகத்துவம் இதழில் எழுதிய கட்டுரையை பல ஊர்களில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் நோட்டீஸாக அடித்து பரப்பினர். அந்த அளவுக்கு ஸலஃபிக் கொள்கையினரின் வழிகேட்டை தெளிவாக

அடையாளம் காட்டி எழுதியிருந்தார். அந்தக் கருத்திலிருந்தும் அவர் இன்னும் மாறவில்லை. அதிலும் அவர் உறுதியாகத் தான் இருக்கிறார் (?)

இது தெரியாமல் சலஃபுக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் அப்பாவியாய் வந்து இக் கூட்டத்தில் சங்கமித்திருந்தனர். அய்யோ பாவம்! சலஃபுக் கூட்டம்!

பிறை விசயமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தின் அடிப்படையில் தமிழகத்தில் பார்க்கப்படும் பிறையை வைத்தே தமிழகத்தில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற கருத்தையே அப்பாஸ் அலி சொல்லி வந்தார். அதிலிருந்தும் இன்னும் அவர் மாறவில்லை. (?)

இது தெரியாமல் உலகப் பிறை ஊணப் பிறை பார்க்கும் கும்பலும் இதில் சங்கமமாகியுள்ளனர். பெருநாள் வரும் போது அப்பாஸ் அலியை விரட்டி விடுவார்களா? இவர்களின் ஊனப் பிறை குறித்து அப்பாஸ் அலி விமர்சித்து விளக்கமளிப்பாரா? என்பது பின்னால் தெரியும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் வரதட்சனை தான் என்றும் அவர்கள் விரும்பிக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது என்றும் ஆடம்பரத் திருமணம் கூடாது என்றும் அவர் தனது வரதட்சனை ஓர் பெண் கொடுமை என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் கர்ஜனையிலிருந்து அவர் இன்னும் மாறவில்லை.

அப்படியிருக்கும் போது எல்லாக் கல்யாணத்திலும் பிரியாணிக்காக பல் இளிக்கும் கொள்கைக் குன்றுகள் (?) அப்பாஸ் அலியை தெரியாமல் அழைத்து வந்து விட்டனர்.

அது மட்டுமல்ல, இனி அப்பாஸ் அலியை திருமணத்தில் தஃவா செய்ய அழைப்பார்கள். எந்த ஆடம்பரக் கல்யாணத்துக்கும் பெண் வீட்டார் விருந்து போடும் திருமணத்துக்கும் அவர் போக மாட்டாரே? பார்க்கத் தான் போகிறோம் அவரின் கொள்கை உறுதியை(?) ( வேடிக்கையை! )

பிஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் தவறு இருப்பதாகக் கூறியவர்களை தன் வாதத்தின் மூலம் பொறிந்து தள்ளியவரல்லவா? அப்பாஸ் அலி. அதிலிருந்தும் அவர் மாறவில்லை(?)

பிஜே தமிழாக்கத்தில் நிறைய தவறுகள் இருப்பதாக அவதூறுப் பிரச்சாரம் செய்து வரும் அ த த குழுவினர் இதையெல்லாம் அவரிடம் கேட்காமலேயே அவரை மேடைக்கு அழைத்து வந்து விட்டனர்.

அப்பாஸ் அலி முன்னர் சொன்ன ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இவர்களிடம் இருக்கையில் மக்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் மூலை நரைத்தவர்கள்.

பெண்கள் முகத்தை மூடக் கூடாது என்று சலஃபிகளிடம் ஆணித்தரமாக விவாதம் செய்தவர் அப்பாஸ் அலி. அதிலும் இன்று வரை உறுதியாக இருக்கிறார் (?).

இதைப் பற்றியெல்லாம் இனியும் அ தா தவினர் போன்று யாரும் மேடை அமைத்துக் கொடுத்தால் பழைய வேகத்துடன் பேசுவார்( ? ). மேடை கிடைத்ததற்காக கொள்கையை மறைப்பவர் அல்ல இந்த அப்பாஸ் அலி (?)

பாதுகாப்பான பயணமாக இருந்தால் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஹஜ்ஜு உள்ளிட்ட எந்த பயணமாக இருந்தாலும் மஹ்ரமான ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணம் செய்து போகலாம் என்று எழுதிய அப்பாஸ் அலி அதிலும் இனி உறுதியாகத் தான் இருப்பார். (?)

இதையெல்லாம் அவர் எழுதும் போது கேலி செய்த கும்பல் இப்போது அதை மறந்து விட்டு அவர் கூட்டத்துக்கு வந்து விட்டனர். ஹய்யோ! ஹய்யோ! சிரிப்பு தான் வருது.

அதிகாரம் உடையவரே அமீராக இருக்க முடியும். இயக்கத்தின் தலைவர்கள் அமீராக முடியாது. அமீர் என்ற பெயரில் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற கருத்திலேயே அப்பாஸ் அலி இருந்தார். இன்னும் அக்கருத்தில் உறுதியாகத் தான் இருக்கிறார். (?)

அமீரை ஏற்றுக் கொண்ட கூட்டம் அறியாமல் அப்பாஸ் அலியை மேடையேற்றி விட்டனர்.

ஜகாத் விசயத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் கொடுத்த பொருளுக்கே திரும்பத் திரும்ப ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தையும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்னும் அதே கருத்தில் தான் இருக்கிறார் (?).

ஆனால் இக்கருத்து உலகத்தில் யாருமே சொல்லாத கருத்து என்று விமர்சித்த கூட்டம் ஜகாத் விசயத்தில் அப்பாஸ் அலியின் கருத்தை கேட்காமல் மேடையேற்றிவிட்டனர்.


எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் இவர்கள் செயல்படுகிறார்கள். அண்ணனைப் பேசினால் தான் 30 வருடமாக காணாமல் போன இயக்கத்தை வளர்க்க முடியும் என்பது தான் கொள்கையற்ற இந்தக் கூட்டத்தினரின் நோக்கம்

அதனால் தான் தங்களுடன் பல கருத்துக்களில் மாற்றமாக உள்ள அப்பாஸ் அலியை அழைத்து வந்துள்ளனர்

பிற இயக்கத்தினரின் மேடைகளில் ஏறக் கூடாது என்றும் அப்பாஸ் அலி பேசியிருக்கிறாரே பிறகு எப்படி இந்த மேடையில் ஏறினார் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். அவர் கொள்கையில் உறுதியானவர் (?) மிகச் சிறந்த ஆய்வாளர் (?) பணத்துக்காகவோ மேடைக்காகவோ அவர் இவர்களின் மேடை ஏறவில்லை. தான் முன்பு சொன்னதை மறக்கும் நோய் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

இல்லை இல்லை!, தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் தற்போது அப்பாஸ் அலி வாபஸ் வாங்கிக் கொண்டார் என்று இந்தக் கூடாரம் சொல்வார்களானால் சூனியம் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மறுக்கும் ஹதீஸ்களைப் பற்றிய ஆய்வால் (?) அவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்கவில்லை என்பதும், கொள்கை கெட்டுத் தான் மூலை குழம்பித் தான்இ பணத்துக்காகத் தான் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றினார் என்பதும் அதற்காகத் தான் அவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்கி நடவடிக்கை எடுத்தது என்பதும் மேலும் நிரூபனமாகும்.

அப்பாஸ் அலியின் கொள்கை தெரியாமல் அவரை மேடையேற்றியதன் மூலம் இவர்கள் கொள்கையற்றவர்கள் என்பது மேலும் நிரூபனமாகியிருக்கிறது

கொள்கையற்ற கூட்டம் கொள்கையை இழந்த அப்பாஸ் அலியை நம்புகிறது. கொள்கையிழந்த அப்பாஸ் அலி கொள்கையற்ற அனைவருடனும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

அவர்கள் இவரை வழிகெடுப்பார்களா? இவர் அவர்களை வழிகெடுக்கப் போகிறாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.