Sunday, April 20, 2014

தமுமுகவின் துரோகங்களை மன்னிக்க முன்வந்த தவ்ஹீத் ஜமாஅத், ஹைதர் அலி எம்பியாவதை தடுக்கும் ஜவாஹிருல்லாஹ், தமீம் அன்சாரி!

தமுமுகவின் துரோகங்களை மன்னிக்க முன்வந்த தவ்ஹீத் ஜமாஅத், ஹைதர் அலி எம்பியாவதை தடுக்கும் ஜவாஹிருல்லாஹ், தமீம் அன்சாரி!

மயிலாடுதுறையில் மம கட்சியின் சார்பாக போட்டியிடும் ஹைதர் அலியை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையில் கோரிக்கை வைத்தார். இது பற்றி தமுமுக தரப்பில், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக செய்த துரோகங்களுக்கு மன்னிப்பு கேட்டு, இனிமெல் இது போன்ற காரியத்தில் ஈடுபட மாட்டோம் உறுதி தந்தால், தவ்ஹீத் ஜமாஅத் ஹைதர் அலியை ஆதரிப்பதாக தெரிவித்தது. தவ்ஹீத் ஜமாஅத்திடம் வருத்தம் தெரிவிக்க ஹைதர் அலி தயாராக இருந்தார். 

ஹைதர் அலி எம்பி ஆகக்கூடாது என்பதில் ஜவாஹிருல்லாஹ்வும் சுண்டி பேசும் தமீம் அன்சாரியும் உறுதியாக உள்ளார்கள் என்பதை ஹைதர் அலி அவர்கள் கண்ணீர் மலுக இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவரிடம் தெரிவித்தார். அதிரையின் பிரபல செய்தி தளத்திற்கு பேட்டி தந்த தமீம் அன்சாரியின் முகத்தில் ஒரு மறுமலர்ச்சி இல்லாமல் இருந்தது ஏன் என்று இப்போது தான் புரிகிறது.

பச்சிளம் குழந்தையின் ஜனாஸா தொழுகையில் வெறியாட்டம் நடத்தியவர்களை தவ்ஹீத் ஜமாஅத் மன்னிக்க முன்வந்த போதும், ஜவாஹிருல்லாஹ்வும் தமீம் அன்சாரியும் ஹைதர் அலியை மண்னை கவ்வ வைக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள் என்பதை உண்மையான நடுநிலைவாதிகள் புரிந்து கொள்ளுங்கள்.

ஹைதர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூட இருக்கும் போது இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவரின் இவ்வாறு சொன்னதை ஹைதர் அலி அவர்கள் மறுக்க மாட்டார். மறுத்தால் ஆடியோ ஆதாரம் வெளியிடப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.


Saturday, April 19, 2014

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்
 ரஹீம்..
அபுதாபி அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 11.04.2014 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 7.15 ணியளவில் அபுதாபி சிட்டி TNTJ ர்கஸில் நடைபெற்றது. அதிரை அபுதாபி TNTJ கிளையின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம்செய்தும்அதனையடுத்து எதிர்வரும் கல்வி வழிகாட்டி முகாம் பற்றியும், நாடாளுமன்ற தேர்தல் பற்றியும், இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் பேசப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில்  தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
ஜசாக்கல்லாஹ்..





Friday, April 18, 2014

Thursday, April 17, 2014

பா.ஜ. அணியில் சேர மாட்டோம்: தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உறுதியளித்த கருணாநிதி!


தவ்ஹீத் ஜமாத்துக்கு கருணாநிதி வரவேற்பு அவரது அறிக்கை: சிறுபான்மையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழகத்தில், 36 தொகுதிகளில், தி.மு.க.,வை ஆதரிப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருப்பதை, வரவேற்கிறேன்; நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில், நான் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினரை, இருகரம் கூப்பி வரவேற்பதாக அறிவித்தேன். மேலும், அவர்கள், தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், 36 தொகுதிகளில் மட்டும், தி.மு.க., அணியினரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கின்றனர். மற்ற 3 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியிலும். தி.மு.க., அணியினரை ஆதரிக்க வேண்டும். மத்தியில், மதச் சார்பற்ற ஓர் அரசு அமைவதற்கான அனைத்து முயற்சிகளிலும், தி.மு.க., ஈடுபடும் என்ற உறுதியையும், அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
 நன்றி தினமலர்

மழைத்தொழுகையில் ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட மாற்று மத சகோதரர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மழைத்தொழுகை 17.4.14 இன்று நடைபெற்றது இதில் மாற்று மத சகோதரர் மானிக்கம் முத்துசாமி அவர்கள் ஆர்வத்துடன் தொழுகையில் கலந்துக்கொண்டார் அவருக்கு மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகத்தை வழங்கினார்கள்

 )
 

புகைப்பட உதவி அதிரை நியூஸ்

அதிரையில் நடைபெற்ற மழை தொழுகை

தமிழகத்தில் மழையில்லாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படத் துவங்கியுள்ளது விவசாயம் மற்றும் அடிப்படை வசதிக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக இன்று காலை 7.00 மணிக்கு மழைவேண்டி பிரார்த்தனையும் அதன் பின் சிறப்புத் தொழுகையும் நடைபெற்றது. 300க்கும் அதிகமான பெண்கள் உட்பட 600க்கும் அதிகமானோர் இதில் கலந்துக்கொண்டனர். இதுகுறிந்து தொழுகை நடத்திய மாநிலச் செயலாளர் அஸ்ரப்தீனிடம் கேட்டபோது மழையைத் தரும் ஆற்றல் இறைவனிடம் மாத்திரமே உள்ளது.  எனவே நபிகள் நாயகம் இறைவனிடம் மழை வேண்டிப் பிரார்த்தனை மற்றும் தொழுகை நடத்தியுள்ளனர் அந்த வழியில் இன்று தொழுகை நடைபெற்றது. இறைவன் நாடினால் மழையைத்தருவான் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்










 

 

Wednesday, April 16, 2014

Tuesday, April 15, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 26) - கண்டெடுக்கும் பொருட்கள்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 26) - கண்டெடுக்கும் பொருட்கள்


இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.

Saturday, April 12, 2014

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.14) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.

இதில் அதிமுகவிற்க அளித்த ஆதரவை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்றது திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் முடிவு பத்திரிக்கையாளர்களிடம் விளக்கப்பட்டது.

Thursday, April 10, 2014

அதிரையில் நடைபெற உள்ள மழை தொழுகை தேதி மாற்றம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக எதிர்வரும் 17.4.2014 வியாழக்கிழமை   காலை 7 மணிக்கு E C R ரோடு கிராணி மைதானத்தில் மழை தொழுகை நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புடையவை:

மழை தொழுகையின் சட்டங்கள்





Wednesday, April 09, 2014

மம கட்சியை ஏன் தோற்கடிக்க வேண்டும்?

மம கட்சியை ஏன் தோற்கடிக்க வேண்டும்?



Tuesday, April 08, 2014

வாழ்வுரிமைக்கே வாக்குரிமை!

நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டது. எனினும் இதன் பலனாய் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் திராவிடக் கட்சிகளை நோக்கியே சென்றன.

இக்கால கட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த தவ்ஹீத் ஜமாஅத், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் என்ற வட்டத்தில் மட்டும் நின்ற தவ்ஹீத் ஜமாஅத், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் சமுதாயப் பணி என்ற இலட்சியத்தையும் கையிலெடுத்து தனது வட்டத்தை வரிவாக்கம் செய்தது. அதன் எதிரொலி தான் தமுமுக என்ற இயக்கத்தின் உதயமாகும்.

தவ்ஹீதுவாதிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் தமிழகத்தில் அரசியல்ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சியின் விளைவாக 1998ல் தேர்தல் புறக்கணிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.

1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கோவையில் 19 முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்றது.

முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற காவல்துறை கயவர்களின் மீது - காட்டு மிருகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் கருணாநிதி என்று சமுதாயம் காத்திருந்தது. ஆனால் கருணாநிதியோ அந்தக் காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல! முஸ்லிம்களின் உயிரைப் பறித்து, உதிரம் குடித்த காட்டுவிலங்குகளுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார். எரிகின்ற முஸ்லிம்களின் இதயங்களில் எண்ணையை ஊற்றினார்.

அந்தப் பாதிப்பையும் கொதிப்பையும் வெளிப்படுத்தும் விதமாகத் தேர்தல் புறக்கணிப்பை தமுமுக சார்பில் அறிவித்தோம். அதனுடைய வீரிய பிரச்சாரம் மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கும் வேளையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இது தமிழகத்தில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் பிஜேபிக்கு சாதகமான பலனை அளித்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி தோல்வியடைந்து, அதிமுக அணி வென்றது.

அதிமுக ஆதரவில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா அரசை 13 மாதங்களில் ஜெயலலிதா கவிழ்த்தார். 1999ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்தித்தது. 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலையொட்டி ஜூலை 4, 1999ல் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்து கொண்டு, அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தோம்.

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படாததாலும், திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததாலும் எந்தக் கட்சியையும் முழுமையாக ஆதரிக்காமல் சமுதாய ரீதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து ஆதரித்தோம். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதன் பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எனவே இடஒதுக்கீட்டை மையமாக வைத்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தோம். இவையனைத்தும் தமுமுக தவ்ஹீதுவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்.

இதன் பின்னர் தேர்தல் காலங்களில், களங்களில் கண்ட அரசியல் தலைவர்கள் சந்திப்பு, மரியாதைகள் போன்றவை தமுமுகவை பதவி மோகத்தில் தள்ளியது. அதனால் தவ்ஹீதுவாதிகள் தமுமுகவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானது. இந்த ஜமாஅத், 2006, ஜனவரி 29 அன்று குடந்தை குலுங்கும் அளவுக்கு மாபெரும் பேரணியை நடத்தியது.

அதன் விளைவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நீதிபதி ராஜரத்தினம் தலைமையில் இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்தார். அந்த அடிப்படையில் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்தது. எனினும் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருந்த கோபம் காரணமாக திமுக வென்றது. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு இல்லாமல் இருந்தால் அதிமுக பலமான எதிர்க்கட்சியாக வந்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் அப்போது எழுதினார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கு நன்றிக்கடனாக தவ்ஹீத் ஜமாஅத் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதவரளித்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

2011 சட்டமன்றத் தேர்தலிலும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரும் கட்சிக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கோரிக்கையை அதிமுக கண்டுகொள்ளவில்லை. திமுக ஏற்றுக் கொண்டது. இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திமுகவை ஆதரித்தது. மின்வெட்டு, ஊழல் போன்ற திமுக எதிர்ப்பு அலையில் திமுக தோல்வியைத் தழுவினாலும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிமுக அசைந்து கொடுக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் காலத்தில் தான் சமுதாயத்தின் கோரிக்கையை ஏறிட்டுப் பார்க்கும்; என்னவென்று கேட்கும். இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகமே ஸ்தம்பிக்கின்ற வகையில் ஜனவரி 28, 2014 அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நான்கு மண்டலங்களில் தமிழகம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இதன் விளைவாக அதிமுக அரசு, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில பிற்பட்டோர் நல வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டப்படி, இதுதான் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகும். இந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தனது ஆதரவை அளிக்கின்றது.

இதுவரை இஸ்லாமிய சமுதாயம் தனது வாக்குரிமையை உணராமல் இருந்தது. விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு உதவாக்கரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் வாக்குகள் பாழாகிக் கொண்டிருந்தன; பயனற்றுப் போயின.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இப்போது இடஒதுக்கீடு என்ற சமுதாய நலனை மையமாகக் கொண்டு, வாழ்வுரிமையை ஆதாரமாகக் கொண்டு அதன் வாக்குரிமை சுழல்கின்றது.

இரு திராவிடக் கட்சிகளுமே இடஒதுக்கீடு எனும் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை தேர்தல் களத்தில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று சாதிக்காமல் சந்தியில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் சாதித்திருக்கின்றது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி இந்த இடஒதுக்கீடு எனும் வாழ்வுரிமை கிடைக்க ஒட்டுமொத்த சமுதாயமும் ஓரணியில் நின்று அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகளின் ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுக்களைப் பார்க்காமல் நாளைய நமது தலைமுறையின் மருத்துவ, பொறியியல், தொழிற்கல்வியின் சீட்டுக்களையும் அரசு வேலைவாய்ப்புகளையும் கவனத்தில் கொண்டு, சமுதாய நலனை முன்னிறுத்தி அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நமது வாழ்வுரிமைக்காக வாக்களிக்க வேண்டும்.

இப்போது சட்டமன்றத்தில் இருக்கின்ற இரண்டு மமக உறுப்பினர்கள் சமுதாயத்திற்காக எதையும் கிழித்துவிடவில்லை. தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக் கட்சியைப் புகழ்வதிலும், எதிர்க்கட்சியை விமர்சிப்பதிலும் தான் தங்கள் பதவிக்காலத்தைக் கழிக்கிறார்களே தவிர இடஒதுக்கீட்டிற்காக எதையும் சாதிக்கவில்லை. சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, தமது ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இவர்களுக்கு வாக்களிப்பது சமுதாயம் தன்னையே நாசத்தில் தள்ளுவதற்குச் சமமாகும்.

மமகவின் நிலை இதுவென்றால், தேர்தல் சமயத்தில் மட்டும் முஸ்லிம் கட்சி என்ற வேஷம் போடும் எஸ்டிபிஐ கட்சி, பாரதீய ஜனதா வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழகத்தில் வடசென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறும் எஸ்டிபிஐ, இனவெறியைப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்; கோயில் - தர்கா திருவிழாக்களுக்கும், பொங்கல் தீபாவளி பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லி டிஜிடல் பேனர் வைப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் முஸ்லிம் கட்சி அல்ல, எல்லா சமுதாயத்திற்கும் பொதுவான கட்சி என்பார்கள். ஆனால் தேர்தல் போட்டி என்று வந்தால் முஸ்லிம் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள். இவர்களின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் பேரம் பேசி, இவர்களுக்கு சீட் கிடைக்காததால் இப்போது சமுதாய வேஷம் தரித்துக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் கிடையாது. இவர்களை ஆதரிப்பதால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து, அது நரேந்திர மோடியின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளன. எனவே இந்தத் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லாத பாரதீய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி, முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

அதிமுக, திமுகவிலுள்ள முஸ்லிம் வாக்குகள் கணிசமாகப் பிரிந்தால் அது அங்கு போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு சாதகமாகவே அமையும். இது தெரிந்து, வேண்டுமென்றே பாரதீய ஜனதாவை வெற்றிபெற வைக்கும் நோக்கில் இவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

மேலும் இவர்கள் அதிகப்பட்சமாக பத்தாயிரம் வாக்குகள் வாங்கினாலும் அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. இதை வைத்து அடுத்த தேர்தல்களில் இவர்கள் திமுக, அதிமுகவுடன் பேரம் பேசுவதற்கு வேண்டுமானால் இந்த வாக்குகள் பயன்படும். சமுதாயத்திற்கு இதனால் கேடு தான் விளையும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பத்தாயிரம் வாக்குகள் பெற்ற மமக இதைத் தான் செய்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு வாக்களிப்பது பாரதீய ஜனதாவுக்கு நேரடியாக வாக்களிப்பதற்குச் சமம். நம்முடைய கைகளாலேயே நாசத்தைத் தேடிக் கொள்ளும் மோசமான செயல் இது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:29

இஸ்லாம் என்றாலே சமுதாயத்திற்கு நன்மையை நாடுவது தான்.

நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான்'' என்று கூறினார்கள். நாங்கள், "யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 57

நம்முடைய வாழ்வுரிமைக்கு வாக்களித்து, நம்முடைய சமுதாய நலனைக் காப்போம்; நாசத்தைத் தவிர்ப்போம்.
 நன்றி ஏகத்துவம்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 25) - பிறர் பொருளில் நமது உரிமை

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 25) - பிறர் பொருளில் நமது உரிமை


இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.

Sunday, April 06, 2014

அதிரையில் நடைபெற்ற இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்ததான முகாம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் 5.4.2014 சனிக்கிழமை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது இதில் ஆர்வத்துடன் பலர் கலந்துக்கொண்டு இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.












Saturday, April 05, 2014

திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று எந்த உத்திரவாதமும் தர முடியாது - பீஜே

திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று எந்த உத்திரவாதமும் தர முடியாது - பீஜே

[திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்ற எந்த வித  உத்திரவாதத்தையும் தர முடியாது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சகோதரர் பிஜே அவர்கள் உணர்வு வார இதழில் கேள்விகள் பகுதியில் ஜெயலலிதா மற்றும் கலைஞர் பாஜகாவுடன் சேர முகந்திரம் இருப்பதை விளக்கி பதில் அளித்து இருந்தார். இதை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொய்யை பரப்புவதையே தொழிலாக கொண்ட ஒரு இணையதளம், ஜெயலலிதா பாஜகாவுடன் கூட்டணி வைப்பார் என்று பீஜே சொல்லிவிட்டார் என்று திரித்து செய்தி வெளியிட்டுயிருந்தார்கள். முழமையான பதிலை வெளியிடாமல், பாதி பதிலை வெட்டி வெளியிட்டுயிருந்தார்கள். பின்னர் சிலர் கேள்வி எழுப்பியவுடன் முழமையான செய்தியை வெளியிட்டுயிருந்தார்கள். செய்தியை திரித்து வெளியிட்டும் இவர்களுக்கு எந்த பலனும் கிட்டவில்லை. உணர்வில் வந்த கேள்வியையும் பதிலையும் முழுமையாக இங்கு வெளியிடுகிறோம்.]

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லையே?

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லை. கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதுபற்றி ஜெயலலிதா தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று மேடை தோறும் கேள்வி எழுப்பியும் வாய் திறக்காமல் இருக்கிறாரே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

காங்கிரஸ் தனது மதவாதப் போக்கில் இருந்து திருந்திக் கொண்டால் காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று கருணாநிதி கூறுவதன் பொருள் என்ன?

ஜெயலலிதாவும், கருணாநிதியும் தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதாயம் தரும் முடிவைத்தான் எடுப்பார்கள். மத்திய ஆட்சியில் தமக்கும் பங்கு இருந்தால்தான் தமிழகத்துக்கு நன்மை செய்ய முடியும் என்ற பதிலை ரெடிமேடாக வைத்துள்ளனர்.

இருவரையும் இந்த விஷயத்தில் நாம் பிரித்துப் பார்க்க முடியாது.

கருணாநிதியை எடுத்துக் கொண்டால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர முயற்சித்து, பா.ஜ.க சேர்த்துக் கொள்ளாததால், கூட்டணி வைக்காமல் போனவர்.

புதிய தலைமுறை தொலைக் காட்சியில் பா.ஜ.கவைச் சேர்ந்த பெண் தலைவி ஒருவர், திமுக சார்பில் கலந்து கொண்ட தலைவரை நோக்கி “எங்களை மதவாத சக்தி என்று சொல்லும் நீங்கள், எங்களுடன் கூட்டணிக்கு கெஞ்சினீர்கள், நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம் என்று சொன்னார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த திமுக தலைவர, இதை மறுக்கவில்லை. உலகமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட குற்றச்சாட்டை திமுக தலைமை இன்று வரை மறுக்கவில்லை.

தேர்தலுக்குப் பின்னால் பார்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் அவர்களுக் கிடையே முடிவாகியுள்ளது என்பது, உன்னிப்பாக கவனிக்கும் அனை வருக்கும் தெரிகின்றது.

இதனால்தான் திருச்சிக்கு மோடியின் முதல் வருகையை எதிர்த்து சில முஸ்லிம் அமைப்புகளும், தமிழர் அமைப்புகளும் போராட்டம் நடத்தியபோது இதைக் கருணாநிதி கண்டித்தார்.

ஏற்காடு இடைத்தேர்தலில் பா.ஜ.க ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதினார்.

தினமலருக்கு அளித்த பிரத்தியோகப் பேட்டியில் ”மோடி எனது நண்பர்” என்றார்.

தேர்தலுக்குப் பின்னால் பா.ஜ.க.வை ஆதரிக்கலாமா என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்றும் கூறினார்.

இதனால் முஸ்லிம் வாக்குகள் முழுமையாக திசை மாறுவதை உணர்ந்து, மோடியும் ராகுலும் அல்லாத ஒருவர் பிரதமராக, ஆதரவு தெரிவிப்போம் என்று பல்டி அடித்தார்.

ராகுல் பிரதமராக ஆதரவு இல்லை என்ற சொல்லில் இருந்தும் பல்டி அடித்து காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று மாற்றினார்.

காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிட்டால் காங்கிரஸை ஆதரிப்போம் எனக் கூறி, பா.ஜ.க போலவே காங்கிரசும் மதவாதக் கட்சி என்று இப்போது கூறுகிறார். இதுதான் இவரது கடைசி நிலையாக உள்ளது. (இதன் பிறகு அடிக்கும் பல்டிகள் எத்தனை என்று இனிமேல் தெரிய வரும்)

மதவாதக் கட்சியாக காங்கிரஸ், இருந்தது இல்லை. மதவாதத்தைக் கைவிடுவதாக காங்கிரஸ் அறிவிக்கத் தேவையில்லை. கைவிடுவதாக அறிவித்தால் இதற்கு முன் மதவாதத்தில் அக்கட்சி இருந்ததாக ஆகிவிடும். காங்கிரஸ் எதை அறிவிக்காதோ அதை அறிவிக்குமாறு கருணாநிதி கேட்கிறார்.

காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. எனவே பாஜக காங்கிரஸ் இரண்டுமே மதவாதக் கட்சிகள்தான். இரண்டில் ஒன்றைத்தான் ஆதரிக்க முடியும் என்பதால் பாஜகவை ஆதரிக்கிறேன் என்று தேர்தலுக்குப் பின்னால் சொல்வதற்காகவே காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பத்தினிப் பெண்ணிடம் போய் இனிமேல் விபச்சாரம் செய்ய மாட்டேன் என்று, அறிவித்தால்தான் உன்னை நம்புவேன் என்று சொல்வதுபோல அவரது கடைசி வாக்குமூலம் உள்ளது.

முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குரிய டயலாக்குகளும் அவரிடம் உள்ளது. அவரை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கத்தினர் அதை எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்கிறார்கள். இந்துத்துவா சக்திகளை ஏமாற்றும் டயலாக்குகளும் அவரிடம் உள்ளன. அவரை நம்பும் பா.ஜ.க.வினர் அதை மேற்கோளாகக் காட்டி தேர்தலுக்குப்பின் திமுகவின் ஆதரவைத்தான் கோருவோமே தவிர, அதிமுகவின் ஆதரவைக் கோரமாட்டோம் என்று கூறுவது இதனால்தான்.

காங்கிரஸ் குறித்தும், மோடி குறித்தும் இந்த இரண்டு மாதத்தில் ஆயிரம் பல்டி அடித்தவருக்கு தேர்தல் முடிந்தபின் இன்னொரு பல்டி அடிப்பது எளிதானதுதான்.

தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க, நான் ஒரு போதும் துணை நிற்கமாட்டேன் என்று கருணாநிதி, தெளிவாகக் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கூறுகிறார்.

அப்படி தெளிவாகக் கூறினாலும் கருணாநிதி அதை அப்பட்டமாக மீறுவதற்கு வெட்கப்பட மாட்டார். இது கருணாநிதியின் நிலை.

ஜெயலலிதா தன்னைப் பிரதமர் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும் அப்படித்தான் ஆரம்பத்தில் காட்டிவந்தார்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் மூன்றாவது அணியில் அங்கம் வகித்தார். கம்யூனிஸ்டுகள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கினார்.

மம்தா, சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் ஆதரவையும் திரட்டினார்.

இப்படி அவர் காட்டிக் கொண்டாலும், பாஜக ஆட்சி அமைக்க தனது எம்பி.க்கள் பலம் உதவுமானால் நிச்சயம் அவர் பாஜகவை ஆதரிக்கத் தவற மாட்டார்.

நான் ஒரு போதும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று அவர் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்கிறார்.

நான், ஒரு போதும் மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா சத்தியம் செய்து கூறினாலும் நம்மைப் பொறுத்தவரை அதை நம்ப மாட்டோம்.

1999ல் நாம் நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில், அவர் இதுபோல் கூறினார். நான்தான் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினேன். நானே அதைக் கவிழ்த்துவிட்டேன். இனி ஒரு போதும் பா.ஜ.கவை ஆதரிக்கமாட்டேன் எனக்கூறிவிட்டு பின்னர் பா.ஜ.கவுடன் சேர்ந்தார்.

”எனவே ஜெயலலிதாவாக இருந்தாலும், கருணாநிதியாக இருந்தாலும் நாங்கள் பாஜகவை ஆதரிக்கவே மாட்டோம் என்று தெளிவான வார்த்தைகளால் சத்தியம் செய்து சொன்னாலும் அறிவுடைய மக்கள் அதை நம்பமாட்டார்கள்.”

ஆனால் கருணாநிதி, இரு முகம் காட்டி இருவகையாக பேசுவதால், இவர் பாஜகவை ஆதரிக்கமாட்டார் என்று அப்பாவிகள் நம்புவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஜெயலலிதா பாஜக பற்றி வாய் திறக்காததால் அவர் பாஜக பக்கம்தான் போவார் என்று அப்பாவிகள் நம்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

”ஜெயலலிதா கருணாநிதி இருவர் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல், இருவரது கடந்த கால செயல்பாடுகளைச் சீர்தூக்கி பார்க்கும் மக்கள் தான் இதைப்புரிந்து கொள்வார்கள்.”

கருணாநிதி, பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என்பதுபோல பேசுகிறார். ஆனால் ஜெயலலிதா வாய் திறக்கமாட்டேன் என்கிறார் என்பதை மட்டும் பார்க்கும் அப்பாவி முஸ்லிம்களின் ஆதரவை ஜெயலலிதா, இழப்பார். ஜெயலலிதா, பாஜகவை ஆதரிப்பார் என்ற பிரச்சாரம் ஓரளவு எடுபடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.

ஆனால் “கருணாநிதி பாஜக பக்கம் போகமாட்டார் என்று நம்பும் இவர்கள் பின் ஏமாறுவார்கள். இருவருமே பாஜகவின் இரகசிய நண்பர்கள் என்று நம்புவதால் நமக்கு எந்த ஏமாற்றமும் ஏற்படாது.
எனவே ஜெயலலிதாவின் மவுனம் முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவைக் குறைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நாம் உறுதிபடக் கூறிக்கொள்கிறோம்.”

ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பதை நாம் அறிவோம்.
பாஜக.வுக்கு அந்த அளவு பெரும்பான்மை கிடைக்கும் என்று பாஜகவிடம் விலை போன ஊடகங்கள் கூட, கருத்துக் கணிப்பில் கூற முடியவில்லை.
கடைசியாக பாஜக ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கும், பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கட்சிகளுக்கும் சேர்த்து 233 இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள். எனவே, இன்னும் நாற்பது எம்பி.க்களின் ஆதரவு தேவைப்படும். இதற்காக பல்வேறு மாநிலக் கட்சிகளிடம் பாஜக பேரம் பேசும்.
அதிமுக 20, திமுக 20 என்ற அளவில் வெற்றி பெற்றால் இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவைத்தான் பெறமுடியும். இரு கட்சிகளுமே பாஜகவுக்கு ஆதரவு அளிக்க போட்டி போடுவார்கள். ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடி என்று ஊழல் செய்ய உதவும் பதவிகளை அடைய இருவரும் துடிப்பார்கள்.
ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து சம்பாதித்ததை(?) விட பல மடங்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவியின் மூலம் சம்பாதிக்க முடியும். இதை இருவருமே எளிதாக விட்டுவிட மாட்டார்கள்.
இருவருமே பாஜகவை ஆதரிக்க போட்டி போடும்போது, 13 மாதங்களில் ஆதரவை வாபஸ் பெற்று வாஜ்பேய் ஆட்சியைக் கவிழ்த்த ஜெயலலிதாவை விட, கருணாநிதியைத்தான் பாஜக தேர்வு செய்யும். குஜராத் கலவரம் போன்ற இன அழிப்பு நடந்தாலும், கருணாநிதி நம்மை உறுதியாக ஆதரிப்பார் என்றுதான் பாஜக நினைக்கும்.

நாற்பது இடங்களையும் ஜெய லலிதா கைப்பற்றினார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மானம் கெட்ட பாஜக அதிமுகவின் ஆதரவை நாடும். அதிமுகவும் ஆதரிக்கும்.

நாற்பது இடங்களையும் திமுக வென்றாலும் இதுதான் நடக்கும்.
ஆட்சியில் பங்கேற்று பதவிகளைப் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்வதற்குத்தான் அரசியல் நடத்துகிறார்களே தவிர, சேவை செய்வதற்கு அல்ல.
பாஜகவுக்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட 233 இடங்கள், காங்கிரசுக்குக் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் இதே நிலைதான் ஏற்படும்.
திமுக 20, அதிமுக 20 என்று வெற்றி பெற்றாலும் இருவரும் காங்கிரசை ஆதரிக்க நான், நீ என்று போட்டி போடுவார்கள். 3ஜி ஊழல் பிரச்சினை வந்தபோது, திமுகவை கழற்றிவிட்டால் காங்கிரசை ஆதரிக்க நான் தயார் என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்ததை நாம் மறந்து விட முடியாது.
ஆனால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸை ஆதரிக்க முன்வந்தாலும் காங்கிரஸ், திமுக ஆதரவைத்தான் ஏற்றுக்கொள்ளும். ஜெயலலிதா, சோனியாவை அவமானப்படுத்தியதை காங்கிரஸ் மறக்காது.
எல்லா தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றினால், தனது ஆதரவினால் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றால் இரண்டு கட்சிகளுமே மானத்தை இழந்து கூட்டு சேருவார்கள்.
காங்கிரசுடன் பாஜக கூட்டுசேராது, அதிமுகவுடன் திமுக கூட்டுசேராது என்பது மட்டுமே இன்றைய நிலையில் உறுதியானது.
மற்ற யாருடனும், யாரும் கூட்டு சேருவார்கள். அரசியல் என்பது பதவி பெற்று சம்பாதிப்பதற்குத்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முடிவாகச் சொல்வது என்றால் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே பாஜகவுடன் சேர்வதால் லாபம் கிடைக்கும் என்றால் சேர்வார்கள். ஆனால் ஜெயலலிதா, பாஜக பற்றி வாய் திறக்காமல் இருப்பது, நுணுக்கமான விஷயத்தைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களின் ஆதரவை இழக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இடஒதுக்கீட்டுக்காக ஆதரிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் முஸ்லிம்களின் ஆதரவில் சிறிய அளவிலாவது இந்த மவுனம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜெயலலிதா உணர்வது, அவருக்கு நல்லது.

Thursday, April 03, 2014

திருடும் நிருபர்களின் மிரட்டும் உளறல்களும் உண்மைகளும்! - போதும் எங்களை அடிக்காதீங்க! - பகுதி-1

திருடும் நிருபர்கள் 'நேருக்கு நேர்'(?) என்ற பெயரில் ஒரு பெரிய ஆக்கத்தை வெளியிட்டு, அரைவேக்காட்டுத்தனமாக பல அவதூறுகளையும், பொய்களையும் அள்ளிவீசியிருந்தார்கள். அவற்றில் உள்ள எல்லா வாதங்களுக்கும் பதில் கொடுத்து திருடும் நிருபர்களின் முகத்திரையை கிழித்து எறிய உள்ளோம். எல்லாவற்றையும் ஒரு ஆக்கமாக வெளியிட்டால் படிப்பதற்கு ஏதுவாக இருக்காது என்பதால், பகுதி பகுதியாக பிரித்து வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதற்கு முன் நாம் கொடுத்த பதிலடிக்கு பதில் தர திராணியற்று கேவலப்பட்டதை போல மீண்டும் கேவலப்படுவார்கள் திருடும் நிருபர்கள், இன்ஷா அல்லாஹ். ஒவ்வோரு பகுதியும் நான்கு நாள் இடைவெளியில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். 

புகழ் போதை தலைக்கு ஏறி, என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறாம் என்று கூட அறியாமல் உளறித்தள்ளிய திருடும் நிருபர்களின் முகத்திரையை நமது இணையதளத்தில் கிழிக்க வேண்டிய நிற்பந்தத்தை திருடும் நிருபர்கள் ஏற்படுத்தி தந்தார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டத்தை பற்றியும் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு பற்றியும் சில்லரைத்தனமாக உளறி, வசமாக வாங்கி கட்டினார்கள். அதில் காரைக்கால் சில்லரையின் வாந்தியை நன்றாக சுவைத்தார்கள். இவர்களின அனைத்து உளறல்களுக்கும் சம்மட்டியடி கொடுத்தோம் (நமது பதிலடியை பார்க்க இங்கே செல்லவும்). அடுத்து, நமது பதிலடிக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில் திருடும் நிருபர்கள், மேலும் பல அவதூறுகளையும் உளறல்களையும் அள்ளிக் கொட்டினார்கள். நமது பதிலடிக்கு பதில் என்ற பெயரில் இவர்கள் உளறியவற்றிக்கு நமது பதிலடி இவர்களுக்கு பேரிடியாக ஆனது (இவர்கள் நமது பதிலடிக்கு கொடுத்த பதிலுக்கு நாம் கொடுத்த இரண்டாவது பதிலடியை காண இங்கே செல்லவும்). நமது பதிலடி பற்றி ஒரு வார்த்தை கூட பதில் தர முடியாமல் மவுனிகளாக மாறிப்போனர்கள் கேவலப்பட்டு போனர்கள் திருடும் நிருபர்கள்.

தங்களை பெரிய அறிவாளிகளாக காட்டி புகழ் தேடுவதற்க்காக அங்கும் இங்கும் காப்பி அடிக்கும் இவர்களின் ரகசியத்தையும் நாம் வெளியே கொண்டு வந்தோம். இவ்வளவு காலமாக நாம் கொடுத்து வைத்திருந்த பில்டப் எல்லாம் உடைந்து போய்விட்டதே என்று தங்களுக்கு தாங்களே புலம்ப ஆரம்பித்தார்கள் (ஆன்லைன் பிஜேவில் இருந்து திருடி மாட்டிய திருட்டு நிருபர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய கட்டுரை இங்கே).

இதற்கிடையில், தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட இயக்கம், பிஜே வழிகேடர் என்று சொல்லி கொண்டே, பிஜேவின் புத்தகத்திலிருந்து அப்படியே திருடி அதை தங்களின் ஆக்கமாக காட்டி புகழ் தேடினார்கள். அதையும் நாம் பகிரங்கப்படுத்தி, இவர்களின் முகத்திரையை கிழித்து எறிந்தோம். ஆன்லைன் பிஜேவின் ஆக்கத்தை தங்களின் ஆக்கமாக காட்டிய இவர்கள், அந்த ஆக்கத்தில் ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை சொல்லவில்லை. இதனால் தான் இவர்களை நாம் திருடர்கள் என்று அழைத்தோம். அடுத்தவர்களின் ஆக்கத்தை தனது ஆக்கமாக காட்டி புகழ் தேடுபவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என்ற திருக்குர்ஆனின் போதனையை எடுத்து காட்டிய பின்னரும் இந்த திருடர்களுக்கு எந்த பயமும் வரவில்லை. நாம் சுட்டிக்காட்டிய  பின்னரும் இது ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை சேர்க்கவில்லை. பின்னர், இவர்களின் இணையதளத்தில் அங்கம் வசிக்கும் சிலர், நீங்கள் திருடுவதாக அவர்கள் சொல்லுகிறார்கள், ஒன்று திருடினோம் என்று சொல்லுங்கள், இல்லை திருடவில்லை என்று சொல்லுங்கள் என்று கேட்டவுடன், உள்ளுகுள்ளே எதிர்ப்பு கிளம்புகிறதோ என்று இவர்கள் வேறு வழியின்றி, இது ஆன்லைன் பிஜேவில் இருந்து திருடப்பட்டது என்பதை சேர்த்துள்ளார்கள்.

இந்த  நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தர கமிஷன் அமைத்த அதிமுகவிற்கு ஆதரவு என்று அறிவித்தது. நம்மை இந்த அடி அடித்து விட்டார்களே, நாம் வாய் கூட திறக்க முடியாமல் நாறடிக்கப்பட்டு விட்டோமே என்று வெறிப்பிடித்து திரிந்து கொண்டிருந்த திருடும் நிருபர்கள், ததஜ அதிமுகவை சும்மா தான் ஆதரிக்கிறது என்றும், அதிமுக அரசு கமிஷன் அமைக்கவில்லை, இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள், இவர்கள் கமிஷன் என்று சொல்லுவது இரு அரசியல் அதிகாரிகள் பேசிக்கொண்டது என்று ஒரு பத்திரிக்கை ஆதாரம் காட்டி, 'தவ்ஹீத் கான்' என்ற கள்ளப்பெயரில், தவ்ஹீதை கிண்டல் செய்து தங்களின் தவ்ஹீத் எதிர்ப்பை காட்டினார்கள். இந்த கமிஷன் அரசு அமைத்தது அல்ல, அது இரு அரசு அதிகாரிகள் பேசிக்கொண்டது என்பதற்கு ஆதாரமாக காட்டிய பத்திரிக்கை செய்தியிலேயே  'தமிழக அரசு' உத்திரவிட்டுள்ளது என்று இருப்பதை எடுத்து காட்டி, நிருபர்களின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தினோம். இவர்கள் வைத்த ஆதாரத்திலேயே இவர்களுக்கு சம்மட்டி அடி இருந்ததை இந்த கயவர்கள் உணரவில்லை. இவர்கள் வைத்த ஆதாரத்திலேயே பதில் இருப்பதை நாம் எடுத்து காட்டியது, திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக மாறியது. வழக்கம் போல இட ஒதுக்கீடு கமிஷன் பற்றி நாம் கொடுத்த பதிலடிக்கு பதில் சொல்ல முடியாமல் கேவலப்பட்டு போனார்கள் திருடும் நிருபர்கள். இட ஒதுக்கீடு கமிஷன் குறித்து இவர்களின் உளறல்களுக்கு நாம் கொடுத்த பதிலடியை காண இங்கே செல்லவும்.

நாம் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு எதிராக வரும் கேள்விகளுக்கும் வாதங்களுக்கும் பதில் சொல்லும் திராணி வேண்டும். எதற்குமே பதில் சொல்ல வக்கற்ற திருட்டு நிருபர் கும்பல், தற்போது பதில் என்ற பெயரில் உளறல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். இது பற்றி எதிராக வரும் எந்த விமர்சனத்திற்கும் நாங்கள் பதில் தர மாட்டோம் என்று தாங்கள் சொல்லுவது பொய் தான், எனவே, அடி வலுவாக இருக்கும் என்று முடிவு செய்து பதில் தர மாட்டோம் என்று சொல்லி தங்களை பொய்யர்கள் என்று அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த திருடும் நிருபர்கள் நமது எந்த வாதங்களுக்கும் பதில் சொல்லவில்லை. எடுத்து வைத்த அனைத்து வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் கேவலப்பட்டுள்ளார்கள். நமது இந்த பதிலடியிலும் அவர்களுக்கு கேவலமே மிஞ்சும்.

அவர்களின் ஆக்கத்தில் ஆரம்பமாக இணைய கடலில் அவர்கள் செய்த புரட்சி என்று வழக்கம் போல இல்லாத ஊருக்கு வழி சொல்லும் அண்ட புளுகளுடன் ஆரம்பாகிறது கதை. இவர்கள் செய்த ஒரே புகழ்ச்சி புகழ் விரும்பிகளை ஒன்றினைத்தது தான். எனது காப்பி பேஸ்ட் கட்டுரையை நீங்கள் புகழ வேண்டும், உங்களின் காப்பி பேஸ்ட் கட்டுரையை நாங்கள் புகழ்வோம் என்ற உயரிய கொள்கை அடிப்படையில் தான் நிருபர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

அடுத்து, இட ஒதுக்கீடு குறித்து அங்கும் இங்கும் திருடப்பட்ட செய்திகளை வைத்தும் இவர்கள் எழுதிய ஒட்டுரை (அவர்கள் பாணியில் கட்டுரை), தமிழக முஸ்லிம்களின் எண்ண ஓட்டமாம். எந்த தமிழக முஸ்லிம்கள் அவர்களின் உணர்வுகளை இந்த நிருபர்களிடம் தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை, எங்களின் உணர்வுகள் இவ்வாறு உள்ளது, அதற்கு ஏற்றால் போல் ஈ அடிச்சான் காப்பி அடிச்சு எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் என்று சொன்னார்கள் போல.

அடுத்து, இவர்களின் கட்டுரையில் யாரையும் தாக்கவில்லையாம், நடுநிலையாம். தவ்ஹீத் ஜமாஅத்தை குறி வைத்து, சிறை செல்லும் போராட்டம் முடிந்தவுடன் தமுமுகவின் ஏஜெண்ட் எழுதிய கட்டுரை தான் அது. யாரை தாக்கி எழுதவில்லை என்றால், தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தும் போது மட்டும் திருட்டு நிருபருக்கு கட்டுரை வருவது ஏன்? ம.ம கட்சியில் போராட்டம் நடத்தும் போது ஏன் கட்டுரை போடவில்லை? அப்போது எங்கே காப்பி அடிக்க போனீர்கள்? முஹம்மது குட்டி பூமி பூஜை செய்கிறார் என்று கட்டுரை போட்டவர்கள், தங்களின் தானே தலைவர் ஜவாஹிருல்லாஹ் அதே செயலை செய்யும் போது ஏன் கட்டுரை  போடவில்லை.

அடுத்து, இட ஒதுக்கீடு குறித்து கட்டுரை எழுதிய மூத்த கட்டுரையாளரை நாம் தாக்கி எழுதிவிட்டோமாம். சில்லரைத்தனமாக உளறினால் சம்பந்தப்பட்டவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவது இயல்பே. அந்த சில்லரைத்தனமான கட்டுரை எழுதியவர்களை நாம் பெயர் குறிப்பிட்டு கூட விமர்சனம் செய்யவில்லை. அந்த மூத்த (?) கட்டுரையாளர் திருட்டு நிருபர் தளத்தில் பல அநாகரீகமான கருத்துகளை சொன்ன போதும், வயதுக்காக நாம் மதிப்பளித்தோம். தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை நிர்வாகி எதோ ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது போல பொய்யை காப்பி பேஸ்ட் தளத்தில் எழுதியிருந்தார், ஆதாரம் கேட்டோம். முக்காடு போட்டுக்கொண்டு ஓடிவிட்டார். மூத்த கட்டுரையாளர் வரம்பு மீறிய போதும், நாம் அவர் விஷயத்தில் வரம்பு மீறவில்லை. தங்களின் முகத்திரை கிழிந்து விட்டதே என்ற வருத்தத்தில் இவ்வாறு ஒரு பொய்யை இட்டுக்கட்டி அனுதாபம் தேடபார்க்கிறார்கள் திருடும் நிருபர்கள்.
கடைசி பத்திக்கு முதல் பத்தியை கவனிக்கவும், தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவர் யாரோ இவ்வாறு செய்துள்ளார் என்று புளுகும் காப்பி ஆசிரியர்.  நாம் வரம்பு மீற ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.

கண்கள் இரண்டும் என்ற தொடரின் ஒட்டுரையாளர் ஆன்லைன் பிஜேவில் இருந்து காப்பி அடித்ததோடு மட்டுமல்லாமல், தவ்ஹீத் ஜமாஅத்தினர் தக்லீத்வாதிகள் என்று சொன்ன போதும் கூட, அவரின் பெயரை கூட நாம் விமர்சனத்தில் குறிப்பிடவில்லை.

அவர்கள் தளத்தில் எவ்வளவு கேவலமாகவும் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றியும் அதன் நிர்வாகிகளை பற்றியும் எழுதலாம், அதற்கு எந்த தடையும் இல்லை என்பதால், வரம்பு மீறி கருத்துக்களை பதிந்த சில கிறுக்கர்களின் கருத்துக்களை சிலர் காட்டி எம்மிடம் விளக்கம் கேட்கும் போது, அவர் வரம்பு மீறிய அளவுக்கு நாமும் வரம்பு மீறி உள்ளோம்.

அடுத்து, நாம் வரம்பு மீறி பேசிய வார்த்தைகளுக்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் தர முடியுமா? என்று கேட்டுள்ளார்கள். முதலில் அவர்கள் எது வரம்பு மீறிய வார்த்தை என்று எடுத்துக்காட்டி இவ்வாறு கேட்க வேண்டும். இதுபற்றி குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் எடுத்து வைக்க நாம் தயார். திருடுபவர்களை திருடர்கள் என்றும், அயோக்கியதனம் செய்பவர்களை அயோக்கியர்கள் என்றும், மன்மதனை வைத்து தர்பியா நடத்துபவர்களை மன்மத தர்பியா கும்பல் என்றும் அழைப்பதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை என்று நாம் நிருபிக்க தயார், இவ்வாறு அழைப்பது தவறு, திருடனை நல்லவன் என்றும், அயோக்கியனை யோக்கியன் என்றும், மன்மதனை வல்லவன் என்றும் அழைக்க வேண்டும் என்றும் திருட்டு நிருபர்கள் ஆதாரம் தருவார்களா?

அடுத்து, கண்கள் இரண்டும் என்ற கட்டுரையின் இரண்டு தொடர்கள் முழுவதும் ஆன்லைன் பிஜேவில் திருடப்பட்டது என்பதை அம்பலப்படுத்தியதை பித்துபிடித்து ஒப்பாரி வைக்கிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார் அந்த நிருபர். கண்கள் இரண்டும் தொடர் வரலாறு பற்றி நாம் அம்பலப்படுத்திய பின் யாருக்கு பித்து பிடித்தது என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நாம் திருடியுள்ளார்கள் என்று சொல்லியுள்ளோம், சும்மா சொல்லவில்லை ஆதாரத்தை வைத்து சுண்டி சொல்லியுள்ளோம். இவ்வாறு சொன்னதை நாம் கற்பனையாக சொல்லியுள்ளோம் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறார். நாம் கற்பனையாக சொன்னோம் என்றால் ஏன் எங்களுக்கு பதிலடி வரவில்லை. குற்றம் உள்ள மனசு குறுகுறுக்கும் அல்லவா? இவர்கள் தளத்தில் வந்த கட்டுரையை அப்படியே எடுத்து வைத்து, அது ஆன்லைன் பிஜேவின் எந்த ஆக்கத்தில் இருந்து திருடியது என்பதையும் காட்டிய பிறகும் நாம் கற்பனையாக சொல்லுகிறாம் என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் எப்படி தான் சொல்ல முடிகிறதோ !

அடுத்து, பொய் சொல்லுபவர்கள் முரண்படுவார்கள் என்பதற்கு ஆதாரமாக கண்கள் இரண்டும் என்ற தொடரை எழுதும் சகோதரர் அந்த இரண்டு தொடரும் முழமையாக ஆன்லைன் பிஜேவில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்பதை சொல்லியுள்ளார். அதற்க்கான ஆதாரத்தை கீழே உள்ள படத்தில் காணவும்,



(கண்கள் இரண்டும் தொடரின் ஆசிரியர் (?) இல்லை நாம் சும்மா விளையாட்டிற்கு தான் ஆன்லைன் பிஜே லிங்க கொடுத்துள்ளேன், அது ஆன்லைன் பிஜேவிலிருந்து எடுக்கப்படவில்லை என்று வாதாடினால், காப்பி கதையை இன்னும் விபரமாக விளக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும்).

இப்போது சொல்லுங்கள், நேருக்கு நேர் (?) கட்டுரை போட்டவர் சொல்லுவது உண்மையா? அல்லது கண்கள் இரண்டும் கட்டுரையை வெளியிட்டவர் சொல்லுவது உண்மையா?

அடுத்து, இவ்வாறு ஆட்டையை போட்டுவிட்டோம் என்றால் ஏன் உங்களின் தளத்தில் அம்பலப்படுத்துகிறீர்கள்? எங்கள் நிர்வாகத்திற்கு சொல்லியிருக்க வேண்டுமல்லவா? என்று கேட்கிறார்கள். இட ஒதுக்கீடு குறித்தும், சிறை செல்லும் போராட்டம் குறித்தும் விமர்சனம் செய்யும் போது எங்களிடம் விளக்கம் கேட்டுவிட்டு போட்டு  இருக்கலாமல்லவா? நீங்கள் விமர்சனம் செய்யும் போது ஒரு நிலை, உங்களின் அயோக்கிய தனங்களை மற்றவர்கள் எடுத்து காட்டும் போது ஒரு நிலையா? பிஜே புத்தகம் போட்டு பணக்காரர் ஆகிவிட்டார் என்று விமர்சனம் செய்யும் போது எங்களிடம் விளக்கம் கேட்டீர்களா? அவர்களின் தளத்தில் கருத்திட்டாவது இது ஆன்லைன் பிஜேவில் இருந்து ஆட்டை போடப்பட்டது என்று சொல்லி இருக்க வேண்டுமாம். உங்களின் தளத்தில் வரும் சாதகமான கருத்துக்களை வைத்துவிட்டு, பாதகமான கருத்துக்களை நீக்கும் உங்களின் நேர்மை எங்களுக்கு தெரியாதா? இந்த கருத்து ஏன் காணாமல் போனது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?

தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது எங்கள் தளத்தில் வந்து ஏன் நீங்கள் கருத்திட்டு கேட்கவில்லை என்று முட்டாளத்தனமாக கேட்க மாட்டோம், இவ்வாறு அறிவாளித்தனமாக கேட்கும் நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது ஏன் இவ்வாறு அணுகவில்லை? சமாளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி உளற வேண்டுமா?

அடுத்து, பிஜே எத்தனை நூல்கள் எழுதியுள்ளார் என்று இவர்கள் மனனம் செய்து வைக்க முடியாதாம். எவ்வளவு முட்டாளத்தனமான வாதம். வரிக்கு வரி காப்பி அடித்தவருக்கு எங்கே இருந்து காப்பி அடித்தோம் என்று தெரியாதா? பிஜேவின் புத்தகங்களின் பெயர்களை மனனம் செய்து வைத்திருந்தால் தான் சொல்ல முடியுமா? காப்பி  அடித்தவர் கப்புனு ஆன்லைன் பிஜே ஆக்கத்தின் லிங்கை எடுத்து போட்டுவிட்டார், விளக்கம் சொல்ல வந்தவர் இப்படி உளப்பி கேவலப்படனுமா?

அடுத்து, கட்டுரை போட்ட நிருபர் ஒரு மிகப்பெரிய காமெடி செய்துள்ளார். அதாவது, காப்பி அடித்ததை பற்றி அண்ணண்மார்கள் அங்கும் இங்கும் ஆட்டை போட்டு நடத்தும் திருட்டு நிருபர் தளத்தின் இமெயில் முகவரிக்கு ஆன்லைன் பிஜேவின் தளத்திலிருந்து நீங்கள் எங்களின் புத்தகத்தை காப்பி அடித்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டு இமெயில் வரவில்லையாம். முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது இவர்களின் இந்த காமெடி. ஆன்லைன் பிஜேவில் இருந்து இவர்களுக்கு மெயில் வரவில்லை என்று இவர்கள் கேட்பது இவர்கள் ஏதோ தமிழகத்தில் பார்க்கப்படும் இணையதளங்களில் முதல் இடத்தில் உள்ள இணையதளத்தை நடத்துவது போல எண்ணிக்கொண்டுள்ளார்கள். உங்களால் கடுமையாக எதிர்க்கப்படும் ஒருவரின் ஆய்வை அப்படியே ஆட்டை போட்டு, அதை நீங்கள் செய்த ஆய்வாக காட்டி ஏன் புகழ் தேடுகிறீர்கள் என்று கேட்டால், இவர்களுக்கு கடுதாசி போட வேண்டுமாம்.

இவர்கள் இவ்வாறு கேட்பதற்கு ஒப்பாக ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம், அட்ரஸ் இல்லாத ஒரு இணையதளம் பிபிசி தளத்தில் இருந்து ஒரு செய்தி எடுத்து, தனது செய்தி போல காட்டி வெளியிடுகிறது. அதை கண்ட பிபிசியின் ஆதரவாளர், இது பிபிசியில் இருந்து போடப்பட்ட ஆட்டை என்று விமர்சனம் செய்கிறார், இதை கண்ட அந்த அட்ரஸ் இல்லாத தளத்தினர், ஏன் இவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டும்? எங்களுக்கு பிபிசியிடம் இருந்து இதுபற்றி எந்த இமெயிலும் வரவில்லையே? என்று கேட்டால் எப்படி விழுந்து விழுந்து சிரிப்போமோ, அது போல தான், அட்ரஸ் இல்லாத இந்த புகழ் விரும்பி இணையதளத்திற்கு ஆன்லைன் பிஜேவில் இருந்து மெயில் வர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது. இவ்வாறு இவர்கள் காப்பி அடித்தது ஆன்லைன் பிஜேவிற்க்கோ அல்லது பிஜே அவர்களுக்கோ  தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

தெரியாமல் திருடுவது வேறு, தெரிந்து திருடுவது வேறு. காப்பி அடித்தவர் தெரியாமல் எங்கேயோ உள்ள ஆக்கத்தை எடுத்து போட்டு, அது பிஜேவின் ஆக்கமாக இருந்தால் சரி என்று சொல்லாம். ஆனால், கட்டுரை போட்டவரே ஆன்லைன் பிஜேவில் இருந்து தான் எடுத்துள்ளார், இதை அவரே ஒத்துக்கொண்டுள்ளார். உண்மை இவ்வாறு இருக்க ஒன்றும் தெரியதவர்கள் போல் நடித்து கேவலப்படுகிறார்கள்.

தெரியாமல் தவறு செய்பவர்களிடம் சுட்டிக்காட்டலாம். தெரிந்து கொண்டு தவறு செய்பவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்ததான் வேண்டும், தவறையும் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதவர்கள் போல நடிப்பவர்களின் முகத்திரை கிழித்து தொங்க போட வேண்டும். காப்பியும் அடித்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல கட்டுரை போடுபவர்களின் முகத்திரை  கிழிக்கப் படவேண்டும்

அடுத்து இவர்கள் எப்படிப்பட்ட பொய்யையும் யாருக்கும் அஞ்சாமல் சொல்லுவார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு வரியை எழுதியுள்ளார்கள், அதாவது கண்கள் இரண்டும் என்ற தொடரில், தொடர் 26 மற்றும் 27 முழுமையாக ஆன்லைன் பிஜேவில் எடுக்கப்பட்டது தான் என்பதை நாம் ஆதாரத்துடன் சூட்டிக்காட்டியுள்ளோம், இதை கட்டுரையாளரும் ஒத்துக்கொண்டு ஆன்லைன் பிஜேவிற்கான லிங் அந்த இரு தொடரிலும் பல நெருக்கடிகளுக்கு பிறகு கொடுத்துள்ளார். இது பற்றி நேருக்கு நேர் பொய் சொல்லும் நிருபர்,  கண்கள் இரண்டும் தொடரில் ஆன்லைன் பிஜேவில் இருந்து ஒரு சில தகவல்கள் எடுக்கபட்டு இருந்ததை அறிந்து ஆன்லைன் பிஜே லிங்க் தந்துவிட்டோம் என்று புளுகுகிறார். கண்கள் இரண்டும் தொடரில் இரண்டு தொடர்களும் (26 மற்றும் 27) ஆன்லைன் பிஜே தளத்தில் அப்படியே காப்பி அடிக்கப்பட்டு இருப்பதை ஆதாரத்துடன் எடுத்துகாட்டி இருக்கும் போது, 'ஒரு சில தகவல்கள்' என்று பச்சை பொய் கூறுவது ஏன்? புகழ் போதை இப்படியா உங்களை தடுமாற செய்யும்.

அவர்களின் வரிகள் கீழே,

அடுத்து, பிஜே அவர்களின் கருத்துக்களும் ஆய்வுகளும் பிற தளத்தில் வந்தால் அதன் நன்மை பிஜேவிற்கு கிடைக்கும் என்று ஏன் நல்லென்ணம் கொள்ளககூடாது என்கிறார். நல்ல எண்ணம் என்ன, ஒருவர் ஒரு நன்மையான காரியத்தை ஆரம்பித்து வைத்து, அதை செய்பவர்களின் நன்மைகளில் செய்பவருக்கு எந்த குறையுமின்றி, அதை ஆரம்பித்து வைத்தவருக்கு கிடைக்கும் என்பதை நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கிறது. இவர்கள் ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டாலும் குறிப்பிடாவிட்டாலும், பிஜேவிற்கு நன்மை கிடைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதே நேரத்தில், யாரோ  செய்த ஆய்வை தனது ஆய்வாக காட்டி புகழ் தேடும் நிருபர் கம்பெனிக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பதை கீழ்காணும் திருக்குர்ஆனின் போதனை எடுத்துக்காட்டுகிறது. நாங்கள் உங்களை விமர்சனம் செய்தாலும், உங்களுக்கு திருக்குர்ஆனின் போதனையை எடுத்துக்காட்டி தண்டனையில் இருந்து காப்பாற்றவே எண்ணுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. 

திருக்குர்ஆன் 3:188

முறையாக சுட்டிக்காட்டாமல், விளக்கம் கேட்காமல் எங்களை இந்த அடி அடித்துவிட்டீர்களே என்று புலம்புகிறார்கள். ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் முன் நீங்கள் அதை செய்து காட்ட வேண்டும், தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்திற்கு குளிர் நேரத்தில் முதியவர்களை ஏன் அழைத்து செல்ல வேண்டும் என்று அட்ரஸ் இல்லாதவன் எடுத்த வாந்தியில் குளிக்கும் போது, முறையாக சுட்டிக்காட்டல், விளக்கம் கேட்டல், என்பதை பற்றி யோசித்து இருக்க வேண்டும்.

சுட்டிக்காட்டினால் ஆன்லைன் பிஜே என்று போட்டு இருப்போமே என்று இந்த நிருபர்கள் சொல்லுவது பச்சை பொய்யே ஆகும். நமது தளத்தில் இவர்களின் காப்பி பேஸ்ட் அம்பலப்படுத்தப்பட்ட பின், இந்த விஷயத்தை ஒரு சகோதரர் அவர்களின் தளத்தில் கருத்தாக பதிகிறார். இவ்வாறு பதிந்தவுடன், நீங்கள் யார்? உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், இல்லாவிடில் உங்களின் கருத்தை நீக்கி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். (இதை நாம் நமது முந்தய பதிவில் சுட்டிக்காட்டினோம், நாம் சுட்டிக்காட்டிய பின் கீழே எடுத்துக்காட்டப்பட்டுள்ள இரு கருத்துகளையும் நீக்கி தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொண்டார்கள்). இப்படி பொய்க்கு மேல் பொய், பித்தலாட்டத்திற்கு மேல் பித்தலாட்டம் என்று தொடர்கிறது நிருபர்களின் அயோக்கியத்தனம். பொய்கள் இன்னும் தோலூரித்து காட்டப்பட உள்ளது, இதற்கிடையில் நேருக்கு நேர் (?) கட்டுரை போட்ட அதே நபர் பொய் சொல்லுவது குறித்து ஹதீஸ்களின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் என்பது அதிசயமான சம்பவம்.
காப்பி பேஸ்ட குறித்து அவர்கள் தளத்தில் ஒரு சகோதரர் பதிந்த கருத்து, இதை நாம் சுட்டிக்காட்டிய பின் காணாமல் போய்விட்டது. 
நெறியாளர் அறிமுகம் செய்ய சொல்லும் கருத்து, இந்த கருத்தும் நாம் சுட்டிக்காட்டிய பிறகு நீக்கீவிட்டார்கள் அற்புத நிருபர்கள்
எல்லாரும் நம்மை தற்போது உற்று நோக்கி கொண்டுள்ளார்களே, இவ்வாறு அயோக்கியத்தனம் செய்தால், நம்மை நார அடிப்பார்களே என்ற வெட்க உணர்வு கூட இவர்களுக்கு இல்லை.

இவ்வாறு நெறிமுறை போட்டவர்கள் அதை எல்லாருக்கும் அமல்படுத்த வேண்டும் அல்லவா? தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள் தவறானவை (காப்பி அடிக்கப்படுவை மட்டும் சரியானவை), என்று ஒரு வீடியோவிற்க்கான லிங்கை 'அதிரை பாமரன்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு  தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கருத்திட்டவரிடம் அறிமுகமும் கேட்கவில்லை, முகவரியும்  கேட்கவில்லை. எப்படி எல்லாம் கேவலப்படுகிறார்கள். இவர்களுக்கும் நடுநிலைக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்றால் எங்களின் நெறிமுறையெல்லாம் குப்பை தொட்டிக்கு போய்விடும் என்று நிருபிக்கும் திருட்டு நிருபர்கள்

காப்பி குறித்து அந்த நிருபர் எழுதிய உளறல்கள் அவர்களின் முகத்திரையை அவர்களே கிழிப்பதால், அவர்கள் இது குறித்து எழுதிய அந்த பகுதி கீழே உள்ளது, வாசகர்கள் சிரிக்காமல் படிக்கவும்.....

எத்தனை பொய்கள், எத்தனை முரண்பாடுகள், எத்தனை காமெடிகள்?
ஒரு விஷயத்தை தெளிவாக இங்கு சொல்லியாக வேண்டும். சம்பந்தப்பட்ட ஆக்கத்திலேயே பிஜே நபி தோழர்களை திட்டினார், ஸஹீஹான ஹதீஸ்கள் சிலவற்றை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுக்கிறார், சூனியம் கற்பனை என்கிறார், சூனியத்தை நம்புபவர்களின் பின்னால் நின்று தொழக்கூடாது என்கிறார், நபிதோழர்கள் இணைவைத்தார்கள் என்கிறார், ஒரு யூதர் வந்து நபி (ஸல்) அவர்களை திருத்தினார் என்கிறார் (இவை எல்லாவற்றை பற்றியும் விவாதிக்க திருட்டு நிருபர் கும்பலுக்கு அறிவு உள்ளது என்றால் இவர்களின் போலித்தனமான குற்றச்சாட்டையும், இவர்களின் சூனியக் கொள்கையும் விவாதிக்க அதிரை ததஜ தயாராக உள்ளது. போகிற போக்கில் இப்படி குற்றச்சாட்டுகளை அள்ளிவிட்டு, நான் இதற்கு மேல் விளக்கம் தர மாட்டேன் என்ற பேடிகளுக்கு எப்படி பதில் எழுதினால் விளங்குமோ அவ்வாறு பதில் எழுதப்படும்). மொத்தத்தில் பிஜே ஒரு பெரிய வழிகேடர் என்கிறார் அந்த சூனிய நிருபர். இப்படி சொல்லிக்கொண்டே, பிஜேவின் புத்தகத்தில் இருந்து திருடுவதற்கு வியாக்கியானமும் கொடுக்கிறார். உங்களின் கொள்கை தான் என்ன? பிஜே வழிகேடர் என்றால் பிஜேவின் ஆய்வை ஏன் திருடுகிறீர்கள்?

இந்த மானம் கெட்ட ஜென்மங்களுக்கு புரியும்படி ஒரு உதாரணம் சொன்னால் புரியலாம். ஒருவர் ஒரு பொருளை இது சுவையான பிரியாணி என்கிறார், இல்லை இல்லை இது மலம் என்கிறார் மற்றொருவர். சிறிது நேரத்தில், மலம் என்று சொன்ன அதே நபர், அதை அள்ளி பிளேட் பிளேடாக உண்ணுகிறார். மலம் என்று சொல்லிவிட்டு, அதையே உண்ணுபவரை பிரியானி திண்ணுகிறார் என்று சொல்லுவோமா? அல்லது மலம் திண்ணுகிறார் என்று சொல்லுவோமா? பிஜேவின் எழுத்துக்களும் பேச்சுகளும் வழிகேடு என்று சொல்லிக்கொண்டு, அவரின் ஆய்வை திருடி புகழ் தேடுவது பிரியாணியை மலம் என்று சொல்லிவிட்டு, அதையே (மலத்தை) உண்ணுவதற்கு சமம். இதை தான் புகழ் போதையில் திருடும் நிருபர்கள் செய்துள்ளார்கள். இந்த நிருபர்களில் கண் தானம், உறுப்பு தானம் பற்றி கூட ஒத்த கொள்கை கிடையாது, அங்கு வைக்கப்படும் விஷயத்தில் முரண்பட்டவர்களே அதிகம், இருப்பின் புகழ் போதைக்காக இவர்களுக்கு உடன்பாடு இல்லாத விஷயத்தை சொன்னாலும் அதை எதிர்க்க மாட்டார்கள்.

குறிப்பு:

நேருக்கு நேராக கட்டுரை போட்டு, அதில் லாரி லாரியாக பொய்களை அள்ள வீசிவிட்டு, இது பற்றி அதிரை ததஜ என்ன பதில் சொன்னாலும், நாங்கள் பதில் தரமாட்டோம் என்று சொன்ன திருடும் நிருபர்கள், எமது பதிலடியின் முதல் பாகம் வெளிவந்தவுடன் பதறி போய், 'தவ்ஹீத்கான்' (தவ்ஹீதை கேவலப்படுத்தி) என்ற பெயரில் வசைபாட ஆரம்பித்துள்ளார்கள். பதிலே சொல்ல மாட்டோம் என்றவர்கள், பதில் சொன்னால் கூட அதை ஏற்றுக்கொள்ளலாம், பதிலே சொல்ல மாட்டோம் என்றவர்கள், அவர்களிடம் பதில் இல்லை என்பதை நிரூபிக்க, வசைபாடலில் இறங்கியுள்ளார்கள்.  நமது இந்த பதிலடி இவர்களை இவ்வாறு அந்தர் பெல்டி அடிக்க வைத்துள்ளது. இன்னும் பல பாகங்கள் வர உள்ளது, உங்களின் முகத்திரை இன்னும் கிழிய உள்ளது. இன்ஷா அல்லாஹ். 

பதில் தர மாட்டோம் என்று வசைபாடும் முரண்பாட்டின் மொத்த உருவங்கள்.....
முரண்பாட்டிலும் பொய்களிலும் காப்பி அடிப்பதிலும் எங்களை மிஞ்ச யாருமுண்டே! - திருடும் நிருபர்கள்.....
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

தொடர்புடைய ஆக்கங்கள்: