Friday, May 17, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 17.05.2013 (வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 17.05.2013 (வீடியோ)

உரை: ரிஃபகான்MISc






Thursday, May 16, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணம்

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணம்

அதிரை தரகர் தெருவை சேர்ந்த அன்வர்தீன் அவர்களுடைய மகளுக்கு கடந்த 12.05.13 அன்று மாலை 4.30 மணியளவில் நபிவழியில் திருமணம் நடைபெற்றது .

இதில் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து மார்க்க பிரச்சாரம் பண்ணினார்கள். இதில் திரளான தவ்ஹீத் சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Wednesday, May 15, 2013

ஜாதியை ஒழிக்க என்ன வழி? (வீடியோ)

ஜாதியை ஒழிக்க என்ன வழி? (வீடியோ)

Tuesday, May 14, 2013

பீஜே அவர்கள் குணமடைய துஆ செய்யுங்கள்!

சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பிஜே அவர்கள் 'தனக்காக துஆ செய்யுங்கள்' என்று கோரிக்கை வைத்து எழுதிய ஆக்கம்.

துஆ மட்டும் போதும் 

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். 

எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். 

அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள். 

என் மீது அன்பு வைத்திருந்த கொள்கைச் சகோதாரர்கள் மட்டுமின்றி கொள்கையில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மதிப்பு வைத்திருந்த சகோதரர்களும் ஆங்கில மருத்துவம் தான் சரியானது எனவும் வலியுறுத்தினார்கள். அமெரிக்கா போகலாம். லண்டன் போகலாம். சிங்கப்பூர் போகலாம் எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பல சகோதரர்கள் முன்வந்தனர். ஏழை எளிய மக்கள் கூட எனது நிலத்தை விற்றுத் தருகிறேன்; நகையை அனுப்புகிறேன் என்றெல்லாம் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். 

என் உறவினர்களில் எவ்வளவு செய்வதற்கு தகுதிபடைத்தவர்கள் உள்ளனர். மனமகிழ்வோடு செலவு செய்ய அவர்கள் தாயாராக இருந்தனர். 

அவர்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது என்றாலும் அந்த உதவிகளை நான் கன்னியமான முறையில் மறுத்து விட்டேன். எனது மருத்துவ வகைக்காக பணமாகவோ பொருளாகவோ எந்த உதவியும் யாரிடமும் நான் பெறவில்லை. அதை நான் விரும்பவில்லை. 

அறுவை சிகிச்சை செய்வதற்கு நான் உடன்படாததற்கு இரணடு காரணங்கள் இருந்தன. 

எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக் கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம். 

அறுவை சிகிச்சை என்றால் அதைப் பலரும் அறியும் நிலை ஏற்பட்டு எனக்கு உதவ முன்வருவார்கள்., என்னைக் கேட்காமலே எனக்கு உதவுவார்கள். அடிக்கடி நோய் விசாரிப்பார்கள். மருத்துவமனையில் அத்கிமானோர் குழுமி நோயையும் ஒரு பந்தாவாகக் காட்டும் நிலை ஏற்படும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதும் கூடுதல் காரணம். 

எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போம் என்று மாற்று மருத்துவ முறைகளைப் பல மாதங்கள் கடைப்பிடித்து வந்தேன். 

ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதுடன் கேன்சர்கட்டியின் அளவு தாறுமாறாக அதிகரித்தும் வந்தது. விசாரிப்பவர்களிடம் நன்றாக உள்ளது என்று சொல்லி அவர்கள் எனக்காக கவலைப்படுவதைத் தவிர்த்து வந்தேன். 

ஆனால் அதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதை உண்ர்ந்த போது எனக்கு ஏற்பட்டுள்ள வகை கேன்சருக்கு மாற்று மருத்துவம் இல்லை என்று எனக்கு தாமதமாகத் தோன்றியது. 

எனவே அறுவை சிகிச்சை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். 

ஆனால் இதை ஒருவருக்கும் சொல்லாமல் செய்தால் தான் மேலே சொன்ன விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று கருதி என் மனைவி என் கடைசி மைத்துனன் தவிர யாருக்கும் சொல்லாமல் பிரபலமில்லாத ஒரு மருத்துவமனையில பிரபலமான டாக்டர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்காக அட்மிட் ஆனேன். 

ராஜபாளயம் நிகழ்ச்சியை நேற்று முடித்து விட்டு புறப்பட்டு இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஆப்ரேஷன் செய்து கொண்டேன். 

காலை 11.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை நான்கு மணி நேரம் ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. அல்ஹ்மதுலில்லாஹ். 

மாநில நிர்வாகிகளுக்கோ, உறவினர்களுக்கோ, வேறு நண்பர்களுக்கோ இதை நான் தெரிவிக்கவில்லை. என்னைப் பார்க்க வருவதற்காக அவர்கள் செலவு செய்து வருவதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நான் அறிவேன் மேலும் மருத்துவ மனையில் கூட்டமாக குழுமி அது ஒரு செய்தியாகவும் பரபரப்பாகவும் ஆகிவிடக் கூடாது என்பதாலும். ஒருவருக்கும் சொல்லவில்லை.

ஆபரேஷன் முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் தான் மாநில நிர்வாகிகளுக்கும் உறவினர்களுக்கும் நல்லபடியாக சிகிச்சை முடிந்ததைத் தெரிவித்தேன். 

துன்பம் நேரும் போது மற்றவர்களின் ஆறுதலை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இயல்பாகவே எனக்கு துன்பங்கள் நேரும் போது யாரும் அனுதாபம் காட்டினால் அது குறித்து அக்கறை காட்டினால் அது எனக்கு ஆறுதலைத் தருவதற்கு பதிலாக சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே நான் இது போன்ற விசாரணைகளை விரும்புவதில்லை. 

எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. எனவே தான் நான் ஒருவருக்கும் சொல்லாமல் என் சொந்தச் செலவில் யாருடைய உதவியையும் தயவையும் நாடாமல் நானே அல்லாஹ்வின் அருளால் என் பிரச்சனைக்கு என்னால் இயன்ற தீர்வைக் கண்டுள்ளேன். 

ஆப்ரேஷன் முடிந்து நான் மனஉறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். இதனால் தான் நானே உட்கார்ந்து இதை கம்போஸ் செய்து நானே இணைய தளத்தில் ஏற்ற முடிந்தது. 

இதை நான் அனைவருக்கும் தெரிவிக்கக் காரணம் மாநில நிர்வாகிகளிடமும் என் குடும்பத்தாரிடமும் ஏன் ஒருவருக்கும் சொல்லவில்லை என்று யாரும் கேட்டு அவர்களைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பது தான். அவர்களுக்கே நான் சொல்லாத போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். 

ஆங்கில மருத்துவர்கள் இதன் மூலம் பூரண குணமடைய 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மனிதர்கள் தான். 

அவர்கள் கூறுவது போல் குணமடைய உங்கள் அனைவரின் துஆ மட்டும் போதும். நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான்.

அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன்

Monday, May 13, 2013

வந்தே மாதரத்தின் போது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா?


வந்தே மாதரத்தின் போது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா?

கேள்வி:
பாராளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர் மீராகுமாரும் அவரைக் கண்டித்துள்ளார். அதிகமான எம்.பி.க்களும் இதைக் கண்டித்துள்ளார்கள்.

ஷபிகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்தது சரியா? சபாநாயகர் கண்டித்தது சரியா? 

சந்தான கிருஷ்ணன், ஆவடி

பதில் – அனைத்து முஸ்லிம் எம்.பி.க்களும், கடவுள் நம்பிக்கை இல்லாத எம்பிக்களும், இந்து மதம் சாராத எம்பிக்களும் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். அனைவரும் கோழைகளாக இருக்கும்போது, துணிச்சலாக, ஷபிகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்ததை நாம் பாராட்ட வேண்டும்.

எனது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான பாட்டை நான் பாட முடியாது என்று துணிவாக தனது கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்திய சுதந்திர வரலாறும், இந்திய அரசியல் சட்டமும் தெரியாத மீராகுமார் என்ற அறிவிலி உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றத்துக்கு சபாநாயகராக இருப்பதால் தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி கண்டிக்கிறார்.

நாட்டின் தேசிய கீதம் எது என்று தெரியாதவர் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்க முடிகிறது என்றால் இதைவிட தேசிய அவமானம் எதுவும் இருக்க முடியாது. 

வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நாடு சுதந்திரமடைவதற்கு முன்னாள் வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற நாவல் வெளியானது. இந்த நாவல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைப் பின்னனியாகக் கொண்டதாகும்.

கலவரம் நடந்தால் ஒருவரை ஒருவர் சரியாக இனம் கண்டு தாக்கவேண்டும் என்பதற்காக இந்துக்கள் வந்தே மாதரம் என்பதை தங்கள் அடையாளமாக ஏற்படுத்திக் கொண்டார்கள். வந்தே மாதரம் சொன்னால் அவன் இந்து என்று தாக்காமல் விட்டுவிடுவதற்காகவும், அதைச் சொல்ல மறுப்பவர்கள் முஸ்லிம் என்று அறிந்து கொன்று போடவும் வந்தே மாதரம் என்பது உருவாக்க்கப்பட்டதாக அந்தக் கதையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

இந்த நாவலுக்கு முன் வந்தே மாதரம் என்பது தேசப்பற்றின் அடையாளமாகக் கருதப்பட்டதில்லை. கலவரத்தின்போது இந்துக்கள் வந்தே மாதரம் சொல்வதுபோல் முஸ்லிம்களும் சொல்லிவிட மாட்டார்களா என்றால் வந்தே மாதரம் என்பதை உயிர் போனாலும் சொல்ல மாட்டார்கள் என்பதை அந்தக் கதையில் வரும் இந்துக்கள் விளங்கி வைத்திருந்தனர். 

ஏனெனில் வந்தே மாதரத்தின் பொருள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் இதைச் சொல்லவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது. 

வந்தே மா தரம் என்பதில் மூன்று சொற்கள் உள்ளன. வந்தே என்றால் வந்தனம் செய்கிறோம் – வணங்குகிறோம் – வழிபடுகிறோம் என்பது பொருள். மா என்றால் தாய் என்று பொருள். தரம் என்றால் மண் என்பது பொருள். அதாவது தாய்மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம் என்பது மொத்த வார்த்தையின் பொருளாகும்.

வங்காள மொழிச் சொல்லான இந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்துகொள்ள அகராதியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பாரதியார் தனது பாட்டில் இதன் அர்த்தத்தைத் சொல்லித் தந்துவிடுகிறார். வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம். இது பாரதியார் பாட்டின் முதல் வரிகள். எங்கள் மாநிலத் தாயை வணங்குகிறோம் என்பதுதான் வந்தே மாதரத்தின் பொருள் என்று பாரதியார் பொருள் சொல்லிவிட்டார்.

பராசக்தியையும், கற்சிலைகளையும் கடவுளாகக் கருதிய பாரதியார் மண்ணை வணங்கினால் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அவரைப்போல் நாமும் மண்ணைக் கடவுளாக்குமாறு சொன்னால் இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பாரதியார் பாட்டை மக்கள் என்றைக்கோ மறந்துவிட்டார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் பெயரால் சமாதியை அதாவது கல்லை வழிபடும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற சினிமாக்காரர் “தாய் மண்ணே வணக்கம்” என்று காட்டுக்கூச்சல் போட்டு ஆல்பம் வெளியிட்டு புதிய தலைமுறைக்கும் இதன் பொருளைப் புரிய வைத்துவிட்டார். பாரதியார் போலவே மண்ணை வணங்கும் சினிமாக்காரர் வந்தேமாதரம் பாடிவிட்டுத் தொலையட்டும்.

அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்க மாட்டோம் என்று உறுதி மொழி கூறி இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் எப்படி இதைப் பாடமுடியும்?

இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாத அறிவிலியாக சபாநாயகர் மீராகுமாரி இருக்கிறார். இவர் அறிவிலியாக இருந்தாலும் இவரது தந்தையிடமிருந்து வந்தே மாதரம் வரலாற்றை அறிந்து கொண்டிருந்தால் இப்படி உளறி இருக்க மாட்டார். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நாட்டு மக்கள் எவருக்குமே தெரியாத இவர் சபாநாயகராக்கப்பட்டார். 

பிரதமருக்கு அடுத்த நிலையில் இருந்த இராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் காந்தி சிலையைத் திறந்து வைத்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் உயர் ஜாதியைச் சேர்ந்த காந்தி சிலையைத் திறந்ததால் அந்தச் சிலை தீட்டாகிவிட்டது என்று கூறி சங்பரிவாரக் கும்பல் தீட்டுக் கழிக்கும் சடங்கையும் நடத்தியது. 

அப்படிப்பட்ட சங்பரிவாரக்கும்பலுடன் சேர்ந்துகொண்டு வந்தேமாதரத்திற்கு ஜெகஜீவன்ராமின் மகள் வக்காலத்து வாங்குகிறார் என்றால் இது ஆச்சரியமான உண்மையாக உள்ளது. ஆனந்த மடம் நாவல் பிரபலமடைந்த பின்னர், சங்பரிவாரத்தினர் (இந்து மகாசபை) தங்களது நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம் பாட ஆரம்பித்தனர். 

முஸ்லிம்கள் எதை ஏற்க மாட்டார்களோ அதை தேசியகீதமாக்கினால் முஸ்லிம்கள் பாட மறுப்பார்கள். அதை வைத்து அவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கலாம் என்ற திட்டத்துடன் அந்தக் கருத்தை படிப்படியாக உருவாக்கி பாரதியார் வரைக்கும் கொண்டு சேர்த்தனர். வெள்ளையர் ஆட்சியில் சங்பரிவாரத்தினர் இதை தேசியகீதம் போல் சித்தரித்ததால், காங்கிரஸுக்கும் இந்த நோய் பரவியது. 

காங்கிரஸ் மாநாடுகளிலும் வந்தே மாதரம் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். 1923ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடியபோது அப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த முகம்மது அலி அவர்கள் மேடையிலேயே இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்தார். வெள்ளையர் ஆட்சியில் நடந்த மாகாணத் தேர்தலில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. 

ஏழு மாகாணங்களிலும் வந்தே மாதரம் என்பதை தேசியகீதமாக அறிவித்தார்கள். ஆனால் முகம்மது அலி அவர்களின் எதிர்ப்புக்குப் பின்னர் விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் வந்தே மாதரத்திற்குக் கடுமையான எதிர்ப்பை பரவலாகத் தெரிவிக்க ஆரம்பித்தனர். 

முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் வந்தே மாதரம் எதிராக உள்ளதைக் காலம் கடந்து உணர்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வந்தே மாதரம் பாடத் தேவையில்லை – அவர்கள் ஸாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா என்ற கவிஞர் இக்பாலின் பாடலைப் பாடிக் கொள்ளலாம் என்று இரட்டை தேசிய கீதத்தைக் கொண்டுவந்தது.

இக்பாலின் பாடலின் பொருள் “அகில உலகிலும் சிறந்த நாடு எங்கள் இந்தியா” என்பதாகும்.முஸ்லிம் கவிஞன் பாடிய பாடலில் தேசத்தின் சிறப்பை மட்டுமே பார்க்கிறான். இஸ்லாத்தின் கொள்கை எதையுமே திணிக்கவில்லை. ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் உருவாக்கிய தேசிய கீதத்தில் இந்துமத நம்பிக்கை முஸ்லிம்கள் மீதும், கிறித்தவர்கள் மீதும் மத நம்பிக்கை அற்றவர்கள் மீதும் திணிக்கப்பட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்த வரலாற்றை தனது தந்தையிடமிருந்து மீராகுமார் கற்றிருந்தால், ஷபீகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்த காரணம் தெரிந்தாக வேண்டும் என்று கூறியிருப்பாரா? நாடு சுதந்திரமடைந்த போது சில பகுதிகளில் ஸாரே ஜஹான்சே அச்சா பாடலும் சில பகுதிகளில் வந்தே மாதரமும் பாடப்பட்டு வந்தன.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதை தேசிய கீதமாக ஆக்கலாம் என்ற விவாதத்தின்போது மேற்கண்ட இரு பாடல்களுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இரண்டும் வேண்டாம். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமன என்பதே தேசிய கீதமாக இருக்கட்டும் என்று 1950ஆம் ஆண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

அதிலும் சிறிய அளவிலான மறுப்பு முஸ்லிம்களுக்கு இருந்தபோதும், வந்தேமாதரம்போல் அப்பட்டமான மதத் திணிப்பாக இல்லாத காரணத்தால், முஸ்லிம்களும் இதை ஏற்றுக் கொண்டனர். வந்தேமாதரம் தேசியகீதம் போட்டியில் தோற்றுப் போனதையும், ஜனகனமன என்பதுதான் தேசிய கீதம் என்பதையும் அறியாதவர் நாட்டின் குடிமகன்களில் ஒருவராக இருப்பதற்கே தகுதியற்றவராவார். சுதந்திரப் போராட்ட கால வரலாறுதான் தெரியவில்லை. சமகால வரலாறாவது சபாநாயகருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? அந்த அறிவும் சபாநாயகருக்கு அறவே இல்லை. 

2009ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரமாகிய டெல்லியில் ஜம்மியத்துல் உலமா சபையின் மாநாடு நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த அந்த மாநாட்டில் முதல் நாளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வந்தேமாதரம் என்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானது. முஸ்லிம்கள் அதைப் பாடக்கூடாது என்பதும் தீர்மானங்களில் ஒன்றாகும். 

முஸ்லிம் மதஅறிஞர்களின் சபை இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்று நிறைவேற்றிய தீர்மானத்தை மீராகுமார் அறிந்திருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டார். அந்தத் தீர்மானம் நிறைவேற்றிய பின் உலமா சபை தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சங்பரிவாரத்தினர் கொந்தளித்தனர். 

ஜம்மியதுல் உலமா சபைக்கு எதிராக தேசதுரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டையே ரணகளப்படுத்தினார்கள். தமிழகத்திலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மத்திய அரசும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலுமா என்று சட்ட வல்லுனர்களைக் கலந்து பல ஆலோசனைகளை நடத்தியது.

வந்தேமாதரம் தேசிய கீதமே இல்லை எனும்போது இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டதால் மத்திய அரசு அடங்கியது. இந்த வரலாறும் சபாநாயகருக்குத் தெரியவில்லை. ஊடகங்களும், சினிமாக்காரர்களும், சங்பரிவாரக்கும்பலும் வந்தே மாதரத்தை தேசிய கீதம் போல் சித்தரித்து தவறான கருத்தை மக்கள் மனதில் பதித்து வைத்து விட்டன. ஆனால் சட்டப்புத்தகத்தில் வந்தே மாதரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அது இந்துக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் ஒரு பாடல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. நடுநிலை இந்துக்களும் இதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். 

சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரான ஒரு பாடலை அவர்களும் பாடவேண்டும் என்று வற்புறுத்துவது நேர்மையானதாக இருக்குமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அனைத்து மதத்தினரும், மதத்திற்கு அப்பாற்பட்டவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்கள்தானே எல்லோருக்கும் பொதுவாக இருக்க முடியும்? 

இதை உணர்ந்து இந்துக்களும் அந்தக் கருத்து வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அந்தப் பாடலில் சரஸ்வதி, லட்சுமி போன்றவர்களை கடவுளாகச் சித்தரிக்கும் வரிகள் உள்ளன. இதை எப்படி ஏற்க முடியும் என்று இடதுசாரிகளும், பகுத்தறிவாளர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். சட்டப்பூர்வமான தேசிய கீதமான ஜனகனமனவை சங்பரிவாரத்தினர் இன்றுவரை தங்களது நிகழ்ச்சிகளில் பாடாமல் வந்தேமாதரம் பாடுகின்றனர். இவர்களின் இந்த அடாவடித்தனம் தான் தேசத் துரோகம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.



வந்தேமாதரத்தின் போது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா கேள்வி –பாராளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர் மீராகுமாரும் அவரைக் கண்டித்துள்ளார். அதிகமான எம்.பி.க்களும் இதைக் கண்டித்துள்ளார்கள். ஷபிகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்தது சரியா? சபாநாயகர் கண்டித்தது சரியா? சந்தான கிருஷ்ணன், ஆவட

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.

Sunday, May 12, 2013

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கினைப்புக் கூட்டம்

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கினைப்புக் கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..

TNTJ
அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கினைப்பு கூட்டம் 10.05.2013 வெள்ளிக் கிழமையன்று மக்ரிபிற்குப் பிறகு இரவு 7.45 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.  அதில் TNTJ அபுதாபி மண்டலத்தின் தலைவர் முகமத் ஷேக் அவர்களின் தலைமையில் அதிரை அபுதாபி TNTJ கிளையின் கடந்த மஷூராவில் (ஆலோசனைக் கூட்டத்தின்) செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம்செய்தும், அதனையடுத்து புதிய முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.   நமது சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

Saturday, May 11, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 10.05.13 (வீடியோ )


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 10.05.13
உரை :அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி 



Friday, May 10, 2013

பிள்ளை பிடிக்க தப்லீக் வருகிறது பப்ளிக் ஜாக்கிரதை!

பிள்ளை பிடிக்க தப்லீக் வருகிறது பப்ளிக் ஜாக்கிரதை!

கோடை காலம் வந்ததும் கடுமையான வெயில் வந்து விடுகின்றது. அந்த வெயிலுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளும் வந்து விடுகின்றன. அவற்றில் முதன்மையானது பள்ளிகளுக்கான விடுமுறை! வளர்கின்ற இளைய தலைமுறையினரில் ஒரு கூட்டம், விடுமுறை விட்ட மாத்திரத்தில் கொதிக்கும் வெயிலில் கிரிக்கெட் மைதானத்தைக் குத்தகைக்கு எடுத்து விடுகின்றது. ஒரு கூட்டம் ஊதாரித்தனமாக இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுகின்றனர். ஒரு கூட்டத்தினர் விடுமுறைக் காலத்தை வீணாக்காமல் மார்க்கக் கல்வி கற்பதில் கழிக்கின்றது. இந்தக் கூட்டம் வரவேற்கப்பட வேண்டிய கூட்டம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் மார்க்கம் என்ற பெயரில் பல்வேறு இயக்கங்கள் மாணவர்களைப் பிடிப்பதற்கு வலை விரித்து வைத்திருக்கின்றனர். இந்த இயக்கங்களில் சரியான இயக்கத்தைப் பெற்றோர்கள் தேர்வு செய்து தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டும். படிக்கின்ற பிள்ளைகளை பிடிக்கின்ற இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத்தும் ஒன்று! இந்த தப்லீக் ஜமாஅத்தினர் பிள்ளைகளை 40 நாட்களுக்கு ஊர் ஊராக அழைத்துச் செல்கின்றனர். பிள்ளைகள் இந்த தப்லீக் ஜமாஅத்திற்குப் போய் விட்டு வந்தால் மார்க்கப் பற்றுடனும் பயபக்தியுடனும் தலையெடுப்பான் என்று பெற்றோர்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கையாகும். தப்லீக் ஜமாஅத்தில் செல்கின்ற பிள்ளைகள் உண்மையான மார்க்கத்தைத் தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்றி நடந்தால் சரி என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் தப்லீக் ஜமாஅத்தினரோ மார்க்கத்தைத் தவறாக விளங்கி வைத்துக் கொண்டு மற்றவர்களையும் தவறான பாதையில் வழிகெடுக்கின்றனர். அவற்றை இப்போது பார்ப்போம்.

குர்ஆன், ஹதீஸை வெறுக்கும் கூட்டம்:

தஃலீம் என்ற பெயரில் காலை, மாலை நேரங்களில் ஒரு புத்தகத்தைப் படிப்பார்கள். இதற்குப் பதிலாக குர்ஆன் மொழிபெயர்ப்பையோ, ஹதீஸ் மொழிபெயர்ப்பையோ படியுங்கள் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அதை விட லட்சம் மடங்கு இதில் தான் நன்மை அதிகம் என்பதாகப் பிதற்றுவார்கள். அதிகம் வலியுறுத்தினால் கோபத்தில் கொந்தளிப்பார்கள்; கொதிப்பார்கள்.

நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். “இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?” என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன் 22:72)

அல்லாஹ் கூறுகின்ற இந்த அடையாளத்தை இவர்களது முகத்தில் நாம் காணலாம். இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்

(அல்குர்ஆன் 74:49-51)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று குர்ஆன் என்று சொன்னதும் இவர்கள் வெருண்டு ஓடுவார்கள். இதிலிருந்து இவர்கள் யார் என்று தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

குர்ஆன் வசனங்களை அப்பட்டமாக மறுத்தல்:

இவர்கள் வாசிக்கும் தஃலீம் கிதாபில் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் நேர்மாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும்.

உதாரணத்திற்கு,

ஒரு பெரியார் கப்ரில் நின்று தொழுதார் என்றும் அதை ஒருவர் பார்த்தார் என்றும் கதையளப்பார்கள். இது சுத்தமான பொய் மட்டுமல்ல! குர்ஆன் வசனத்தை நிராகரிக்கின்ற இறை மறுப்பாகும்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன் 23:100)

உலகில் உள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கின்றது. இந்தத் திரையைத் தாண்டி கப்ரில் உள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இங்குள்ளவர்கள் அறிய முடியாது. இங்குள்ளதை அவர்கள் அறிய முடியாது. ஆனால் அல்லாஹ் கூறும் இந்தக் கருத்துக்கு எதிராக அமைந்துள்ள தஃலீம் கிதாப் கதையையும் இதுபோன்ற எண்ணற்ற கதைகளையும் இவர்கள் நம்புகின்றார்கள். இது அல்குர்ஆனை அப்பட்டமாக மறுப்பதாகும்.

தீமையைக் கண்டு ஊமையாய் இருப்பது:

இவர்களது பார்வையில் தப்லீக் என்றால் தொழுகைக்கு அழைப்பது மட்டும் தான். அல்லாஹ்வுக்கு இணையாக “யா முஹ்யித்தீன்’ என்று அழைத்துப் பிரார்த்தனை செய்யும் கொடிய பாவத்தை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். தப்லீக் ஜமாஅத்தில் இருப்பவரின் தாய் தந்தையர் இந்தப் பாவத்தைச் செய்தால் கூட அவர்களை அதிலிருந்து இவர்கள் விலக்க மாட்டார்கள். தர்காவுக்குச் செல்வோரிடம், தர்காவுக்குச் செல்லாதீர்கள் என்று தடுக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் செய்தது இதுபோன்ற தீமையைத் தடுக்கும் தப்லீக் பணியைத் தான். காரணம், இந்தப் பாவத்தைச் செய்தவர்களுக்கு சுவனத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான்.

“மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன் 5:72)

அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் பாவத்தைச் செய்தவர்களுக்கு சுவனத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அதாவது அவர்கள் நரகத்தில் நிரந்தரமாகக் கிடப்பார்கள். இத்தகைய பாவத்தை விட்டும் மக்களைத் தடுக்கும் பணியை இந்த தப்லீக் ஜமாஅத்தினர் செய்ய மாட்டார்கள். தொழுகைக்கு மட்டும் அழைப்பார்கள்; மற்ற தீமைகளைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

தூதர் நபி மீது துணிந்து பொய் சொல்லுதல்:

அந்தப் பெரியார் சொன்னார்; இந்தப் பெரியார் சொன்னார் என்று இல்லாததை எல்லாம் அடித்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் சொல்லாத செய்திகளையெல்லாம் அவர்கள் சொன்னதாகக் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்: மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி) 
நூல்: புகாரி 1291

நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை தப்லீக் ஜமாஅத்தினர் கொஞ்சம் கூடப் பொருட்படுத்துவதில்லை. கஷ்த் என்ற பெயரில் ஊர்வலம் வருவார்கள். அந்த ஊர்வலத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் லட்சக்கணக்கான நன்மைகள் இருக்கின்றன என்று கதையளப்பார்கள். பத்து, நூறு, ஆயிரம் என்ற இலக்கங்களிலெல்லாம் நன்மைகளை அளக்கமாட்டார்கள். லட்சங்களில் தான் அளப்பார்கள். ஒரு நன்மை உண்டு என்று சொன்னாலும் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் சொல்ல வேண்டும். மார்க்கம் இவர்களது அப்பன் வீட்டுச் சொத்து என்பது போல் இவர்கள் இஷ்டத்திற்குச் சொல்வது, இவர்கள் மார்க்கத்தில் துணிந்து பொய் சொல்பவர்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி:

காடே, செடியே, கண்ணே, ரஹ்மானே என்று மனைவி மக்களை விட்டு விட்டு, அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று நாற்பது நாட்கள், நான்கு மாதம் பத்து நாட்கள் ஊர் ஊராய் சுற்றக் கிளம்பி விடுவார்கள். மனைவி மக்களுக்கு உழைத்துக் கொடுப்பது மார்க்கக் கடமை என்பதை உணர மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன!” என்றார்கள். “தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வருடத்தில் பாதி நாட்கள்!” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) 
நூல்: புகாரி 1974

இந்த ஹதீஸின் அடிப்படையில் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையை இவர்கள் செய்வதில்லை. மனைவி மக்களுக்காகப் பாடுபட்டு சம்பாதிப்பதற்கும் அல்லாஹ்விடம் கூலி இருக்கின்றது என்பதை இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மனைவி, மக்களுக்குச் செலவு செய்வதும் ஒரு தர்மம் என்பதை இவர்கள் அறவே சிந்திப்பது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) 
நூல்: புகாரி 56

சூஃபிகள் என்ற வழிகேடர்கள் திருமணம் முடிக்காமல் சன்னியாசி ஆனார்கள். ஆனால் இவர்கள் திருமணம் முடித்து விட்டு, பிள்ளைகளையும் பெற்று விட்டு அவர்களைக் கவனிக்காமல் அவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் அநீதி இழைக்கின்றனர். இத்துடன் இவர்களது அநியாயங்கள் நின்று விடுவதில்லை. தனது பிள்ளை தப்லீக்கில் செல்லவில்லை என்பதற்காக காட்டுமிராண்டித் தனமாக அந்தப் பிள்ளையைத் தாக்கி, சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்ட கொடுமையும் நடந்துள்ளது.

குரல் எழுப்பாத கோழைத்தனம்:

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டாலும் சரி! குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டாலும் சரி! இந்த அக்கிரமத்திற்கு எதிராக, அநீதிக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள். மாறாக வாய் மூடி வாளாவிருப்பார்கள். வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளைக் கண்டிக்காததுடன் மட்டுமில்லாமல் அந்த வரதட்சணைத் திருமணத்தையும் அதில் நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்க மாட்டார்கள். அவ்வாறு புறக்கணிப்பது நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் தப்லீக் பணியில் மிக உயர்ந்த தரத்தில் உள்ள செயலாகும்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். 

(அல்குர்ஆன் 4:140)

இதைக் கவனத்தில் கொண்டு இத்தகைய திருமண விருந்துகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து என்பது போன்று சாப்பாட்டிற்கு முதல் ஆளாய் முந்திக் கொள்கிறார்கள். இது தவிர தப்லீக் ஜமாஅத்தில் செல்பவர்கள் பீடி, சிகரெட் புகைப்பதை ஒரு பொருட்டாகக் கருதுவது கிடையாது. இதில் இருப்பவர்கள் பலர் சர்வ சாதாரணமாக பீடி, சிகரெட் புகைப்பதைக் காண முடியும். தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் அங்கு தரப்படும் உணவுக்கும் ஓய்வுக்கும் அடிமையாகி படிப்பில் கோட்டை விடுவதைப் பார்க்கிறோம்.

அதுபோன்று தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை ஒழுங்காகச் செய்யாமல் 40 நாள், 4 மாதம் 10 நாள் விடுமுறை விட்டுச் செல்வதால் திவாலாகி விடுவதையும், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தப்லீக் செல்வதால் வேலையை விட்டு வெளியேற்றப்படுவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இப்படி தப்லீக் என்ற பெயரில் மார்க்கத்தில் இவர்களது அறியாமையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அவை அனைத்தையும் சொல்வதற்கு இந்த ஆக்கம் போதாது. விரிவான விளக்கங்களுக்கு தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு என்ற நூலைப் பார்க்கவும்.

மேலே நாம் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தப்லீக் என்ற இயக்கம், ஏகத்துவக் கொள்கையிலிருந்து நம்மை விலகச் செய்து, குர்ஆன் ஹதீஸ் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் தடம் மாற்றி தஃலீம் புத்தகத்தை மட்டும் வேதமாகி, அறியாமை வழியில் அழைத்துச் செல்லும் ஓர் இயக்கம் என்பதில் சந்தேகமில்லை. சமாதி வழிபாட்டிலிருந்து மக்களைக் காப்பதற்காக இல்யாஸ் மவ்லானா ஆரம்பித்த தப்லீக் இயக்கம் இப்போது தடம் மாறி நிற்கின்றது. நமது பிள்ளைகளை அதில் சிக்காமல் காக்க வேண்டும். எனவே தான், பிள்ளை பிடிக்க தப்லீக் வருகின்றது, பப்ளிக் ஜாக்கிரதை என்று எச்சரிக்கின்றோம்.

நன்றி : ஏகத்துவம் மே மாதம்

கந்தூரி கமிட்டியாளர்களே! நரகத்திற்கு அழைக்காதீர்கள்!!


நான்கு மத்ஹபை பின்பற்றாதவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது! என்று சொல்லும் நமது ஊர் ஷாஃபி மத்ஹபினர், பள்ளிக்குள் கப்ரையும் (கல்லரை) தர்ஹாவையும் கட்டி வைத்து அழுவது ஏன்?

கந்தூரி கமிட்டியாளர்களே, நீங்கள் நரகத்திற்கு தான் அழைக்கிறீர்கள் என்பதை கீழ்காணும் ஆக்கங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தும். 

அல்லாஹ்விற்கு பயந்து, அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த கொடிய பாவத்தில் இருந்து மீண்டு வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்.

மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி, வயிறு வளர்க்கும் லப்பைகளே, பாத்திஹா ஒதுபவர்களே, உங்களின் மார்க்க அறிவை மறு ஆய்வு செய்யுங்கள்.

பெண்கள் பள்ளிக்கு வருவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்து இருக்கும் போது, அதை தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்தினால், அதை எதிர்த்து பேச வரும் தைரியமிக்க ஆலிம்கள், தர்ஹாவை பற்றி பேசுவது எப்போது?





தொழக்கூடாத பள்ளிவாசல்கள் (வீடியோ)

தொழக்கூடாத பள்ளிவாசல்கள் (வீடியோ)

தொழக்கூடாத பள்ளிவாசல்கள் யாவை?


Wednesday, May 08, 2013

பெருகி வரும் தலாக்கள் (வீடியோ)

பெருகி வரும் தலாக்கள் (வீடியோ)

Saturday, May 04, 2013

சமூக தீமைகளுக்கு எதிராக செக்கடிமேடு அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்


கடந்த 03.05.2013 அன்று அதிரை செக்கடிமேடு அருகில் 'சமூக தீமைகளுக்கு எதிராக' தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் சகோதரர் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். 

இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.








கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் செக்கடிமேடு அருகில் திருமணங்களில் நடைபெறும் பித்அத் மற்றும் அனாச்சாரங்கள் பற்றி பேசும் போது, இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரங்களை செய்யக்கூடியவர்களும் அதை ஆதரிக்கக்கூடியவர்களும் தெருமுனை பிரச்சாரத்தில் கலாட்டா செய்தது குறிப்பிடக்தக்கது.

TNTJ துபாய் அதிரை கிளையின் நிர்வாக கூட்டம்


TNTJ துபாய் அதிரை கிளையின் நிர்வாக கூட்டம்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

TNTJ துபாய் அதிரை  கிளையின் புதிய நிர்வாகம்  03.05.13 வெள்ளிக்கிழமையன்று மக்ரிபிற்கு பிறகு 7.45 மணியளவில்  L.M.I அப்பாஸ் ரூம் மேல் தளத்தில் நடைபெற்றது அதில்  TNTJ  துபாய்     மண்டலத்தின்  செயலாளர் அஷ்ரப் அலி   அவர்களின் தலைமையில் அதிரை  துபாய் TNTJ  கிளையின்     புதிய பொறுப்பாளர்கள்   தேர்வுசெய்யப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ். அதில் கீழ்கானும் நபர்கள்  பொறுப்பாளர்களாக தேர்வுசெய்யப்பட்டார்கள்.

மூன்று பொறுப்பாளர்களும் மற்றும் இரண்டு  துணை  பொறுப்பாளர்களும் தேர்வுசெய்யப்பட்டார்கள்

1, A . ஷாகுல் ஹமீது            050 50 63 755
2, J , நசீர் அஹமது                055 90 81 550
3, S , நெய்னா முஹம்மது   050 42 67 341

துணை   பொறுப்பாளர்:
1, மக்தும்  நெய்னா                 050 73 97 093
2, மொய்தீன் அப்துல் காதர்  050 39 98 943


இந்நிகழ்வில்   துபாய் மற்றும் அபுதாபி பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்  அதில் அபுதாபி பொறுப்பாளர் அவர்களுடைய செயல்பாடுகளைபற்றி  விவாதிக்கபட்டது மற்றும் அதிரை TNTJ  'மஸ்ஜிதுத் தவ்ஹீத்   கட்டுமான தற்போதைய பணிகளைபற்றி  விவாதிக்கப்பட்டது விரைவில் கட்டுமான பணியை முடிப்பதற்காக  மேலும் பள்ளிக்காக நிதி திரட்டுவதற்காக மேலும் புதிய நபர்களை சந்தித்து அவர்களிடம் நிதி திரட்டுவது என  தீர்மானம் செய்யப்பட்டது.

கடந்தாண்டு நடந்த  செயல்திட்டங்களை பற்றியும் பேசப்பட்டது  அதன் கணக்குகளை சமர்பிக்கப்பட்டது மேலும் அதிரையில் இஸ்லாத்திற்கு எதிராக நடைபெற்றுக்கொண்டு இருக்கும்   அதிரைதிருவிழாவை கண்டித்து இவ்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது மேலும் இதுசம்மந்தம்மாக  அதிரை TNTJ நிர்வாகிகள் விழா அமைப்பாளர்களை நேரில்  சந்தித்து இது சம்மந்தம்மாக பேச்சு வார்த்தைநடத்தும்மாறு சொல்ல இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முக்கிய தீர்மானகள்:

1.  அதிரையில் நடைபெறவிருக்கும் கந்தூரியை எதிர்த்து தெருமுனை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் மூலமாகவும் எதிர்க்கபடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

2. இஸ்லாத்திற்கு எதிராக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் அதிரை திருவிழாவை கண்டித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது மேலும் இதுசம்மந்தம்மாக அதிரை TNTJ நிர்வாகிகள் விழா அமைப்பாளர்களை நேரில்  சந்தித்து இதுசம்மந்தம்மாக பேச்சிவார்த்தை நடத்துமாறு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

3. நமதூரில்உள்ள காதிர் மொய்தீன் ஆண்கள்பள்ளிக்கு செல்லும் வழியில் ECR ரோடு இருப்பதால்  விபத்துகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டுமென்று  தீர்மானிக்கப்பட்டது.

4. M.I.S.C. படிப்பதற்காக நமதூர்சார்பாக இரண்டு நபர்களை தேர்வுசெய்து அவர்களின் நான்குவருட முழுபடிப்பு செலவையும் அதிரை UAE கிளை பொறுப்பேற்றுகொள்ளும் என்று  தீர்மானிக்கப்பட்டது.

5. அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசல் கட்டுமான பணி முழுமையடைய  மீதமுள்ள UAE அதிரைவாழ் மக்களிடம் அனுகவேண்டுமென்று என்று தீர்மானிக்கப்பட்டது.

6. மாத சந்தா தரும் நபர்களின்  எண்ணிக்கையை அதிகபடுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.