Tuesday, November 20, 2012

இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்!

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ 
 
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.10:92.


 இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 

உலகின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல்ஆலமீன் குழந்தையின் தாயாருக்கு வாக்குறுதி அளித்தப் பிரகாரம் குழந்தையை ஒப்படைத்து விடுகிறான். அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன். 28:13.

குழந்தை தனது தாயிடம் பாலருந்தி ஃபிர்அவ்னின் மாளிகையில் வளர்ந்து வாலிபடைகிறது. அவர்களே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) எனும் இறைத் தூதராவார்கள். அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும் கல்வியையும் அளித்தோம்.164 நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.திருக்குர்ஆன்.28:14.


ஃபிர்அவ்னிடம் சென்று தூதுத்துவத்தை கூறுவதற்காக இரண்டு அத்தாட்சிகளுடன் இறைவன் அனுப்பி வைத்தான். மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று நான் அல்லாஹ்வின் தூதராவேன் இறைச் செய்தியுடனும் அத்தாட்சிகளுடனும் வந்துள்ளேன் என்றுக் கூறினார்கள்.


அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்க நான் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).181.திருக்குர்ஆன்.7:105.

தூதத்துவத்தை பொய்ப்பிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்காக கொண்டு வந்துள்ள அத்தாட்சிகளைக் காட்டும் படிக்கேட்டான். ''நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வா!'' என்று அவன் கூறினான். அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.. ''இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். திருக்குர்ஆன். 7:106, முதல் 110  வரை.

சூனியக்காரர்கள் நிறைந்து வாழும் பிரதேசமாக எகிப்து திகழ்ந்ததால் கைத் தடி பாம்பாக மாறியதும், கைகள் வெண்மையாக பளிச்சிட்டதையும் கண்டு  சூனியக் கலையை கற்று வந்திருப்பதாகவும், மண்ணின் மைந்தர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக சதி திட்டம் தீட்டுவதாகவும் குற்றம் சுமத்தினான்.  


தூதுத்துவத்தை ஒரே அடியாய் முடிவுக்குக் கொண்டு வரத் திட்டம் தீட்டினான் எகிப்து பிரதேசத்தில் உள்ள கை தேர்ந்த சூனியக்காரர்களை மாளிகைக்கு கொண்டு வர உத்தரவிட்டான். ''திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.. திருக்குர்ஆன்.10:79.


சூனியக்காரர்களின் பட்டாளம் புடைசூழ ஃபிர்அவனின் மாளிகையை நோக்கி படை எடுத்தனர். இதை முறியடிக்க தங்களுக்கு தகுந்த கூலி வேண்டும் என்று ஃபிர்அவனிடம் பேசினர். 

கூலி என்ன ? அதன் பிறகு நீங்களே எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள் என்றுக் கூறி சூனியக்காரர்களை ஊக்கப்படுத்தினான். சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். ''நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று அவர்கள் கேட்டனர். (அதற்கவன்) ''ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என்று கூறினான். திருக்குர்ஆன்.7:113, 7:114.

இதைக் கேட்ட மாத்திரத்தில் வெகுமதிகளுக்கும், ஃபிர்அவனின் நெருக்கத்திற்கும் ஆசைப்பட்ட சூனியக்காரர்கள் மூஸா(அலை) அவர்களைப் பார்த்து முதலில் நீங்கள் தொடங்குகிறீர்களா? நாங்கள் தொடங்குட்டுமா ? என்று அவசரப்பட்டனர்.


என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு அதுவரை அனுமதி வராததால் என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில் நீங்களே செய்யுங்கள் என்றுக் கூறுகிறார்கள்.


''மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று கேட்டனர். ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.182 மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். திருக்குர்ஆன்.7:115, 7:116.

மக்கள் அதைக் கண்டதும் அச்சமுற்றனர் அந்த அச்சம் மூஸா(அலை) அவர்களுக்கும் ஏற்பட்டது. மூஸா(அலை) அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டதற்கு காரணம் அவர்கள் விரும்பிய போதெல்லாம் விரும்பியவாறு அற்புதங்கள் நிகழ்த்த முடியாது. தேவைப் படும் இடங்களில் தேவைப்படும் விதமாக அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கும் விதமே செய்து வந்தார்கள்.


அச்சத்தில் நின்றுக் கொண்டிருந்த மூஸா(அலை) அவர்களை நோக்கி அவர்களின் கையில் வைத்திருந்த கைத் தடியை எறியச் சொன்னான் அல்லாஹ்.


கைத் தடியை எறிந்ததும் மக்களை அச்சுறுதிய அனைத்தையும் அது ஒரே அடியாக விழுங்கி முடித்து விட்டது. ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. திருக்குர்ஆன்.7:117.

இந்நிகழ்வு சூனியக்காரர்கள் அனைவர்களையும் திகிலுறச் செய்தது, அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். நாம் செய்தது கண் கட்டி வித்தை எதிரில் நடந்தது அவ்வாறானதல்ல என்பதை உறுதிபட நம்பினர்.  


மேலும் கைத் தடியை எறிந்தவர் இறைத் தூதர் என்றுக் கூறுவதால் இன்னும் அவர்களுக்கு முழு நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உள்ளம் தூண்டியது. அவ்விடத்திலேயே திருக்கலிமாவை மொழிந்து ஸஜ்தாவில் வீழ்ந்து விடுகின்றனர். அல்லாஹூ அக்பர். சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். ''அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர். திருக்குர்ஆன்.7:120.121,122.


மேற்காணும் சம்பவங்கள் முழுவதும் ஃபிர்அவ்ன் முன்னிலையில் நடைபெறுகிறது. ஃபிர்அவ்ன் விடுவானா ?  என்னைக் கேட்காமல் எப்படி நீங்கள் நம்பிக்கைக் கொள்வது என நம்பிக்கைக் கொண்டவர்கள் மீது சீறிப்பாய்ந்தான் கர்ஜித்தான் இதைக் கூட்டு சதி என்றான். ''நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். திருக்குர்ஆன். 7:123


மூஸா (அலை) அவர்களிடம் ஆள் பலம் அதிகரிப்பதைக் கண்ட ஃபிர்அவன் நாம் நாடு கடத்தப் படலாம் என்றே அதிகம் அஞ்சினான் அதனால் ஒவ்வொரு கட்டத்திலும் இது எங்களை வெளியேற்ற நடக்கும் சதி என்று பிதற்றிக் கொண்டே இருந்தான்.


தர்க்க ரீதியாக இவரை வெல்ல முடியாது இவருக்கு ஆள்பலம் அதிகரித்துக் கொண்டு செல்வதற்குள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொலை செய்து விடுவது சிறந்தது எனும் முடிவுக்கு வந்து தனது ராணுவத்தை தயார் படுத்தினான்.


அவனுடைய ரகசிய கொலை திட்டத்தை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா(அலை) அவர்களையும், அவர்களுடன் ஈமான் கொண்டவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு இரவில் வெளியேறும் படி உத்தரவிடுகிறான் அத்துடன் அவன் இவர்களை பின் தொடர இருப்பதையும் கூறி விடுகிறான். ''என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின் தொடரப்படுவீர்கள்'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். திருக்குர்ஆன்.26:52


அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் அந்த இரவிலேயே மூஸா(அலை) அவர்களும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய வஹி வந்ததும் இரவோடு இரவாக இடம் பெயர்ந்து செல்லலானார்கள். 

அதற்கு முன்பே ஃபிர்அவ்னுடைய கொலைவெறித் திட்டம் தயாராக இருந்ததால் அவனுடைய பெரும்படை அவர்களை விடிய விடிய துரத்தி அதிகாலையில் ஓரிடத்தில் ஓடுவதை அறிந்து கண்டு பிடித்து வேகமாக விரட்டியது... காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். திருக்குர்ஆன்.26:60.


கடல் குறுக்கிடுகிறது சிறிய அளவிலான எண்ணிக்கையுடைய மூஸா(அலை) அவர்களின் கூட்டத்தார்கள் ஃபிர்அவ்னுடைய பெரும் படையைக்கண்டு நம்மைப் பிடித்து விடுவார்கள் என்று அச்சமடைந்தார்கள். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது ''நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். திருக்குர்ஆன். 26:61


அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் நம்மைக் கை விட மாட்டான் பயப்படாதீர்கள் என்று அவர்களை மூஸா(அலை) அவர்கள் தைரியப் படுத்தினார்கள். ''அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார். திருக்குர்ஆன்.26:62


அல்லாஹ்வுடைய மகத்தான உதவி நம்பிக்கைக்கொண்டோரை அடைகிறது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா(அலை) அவர்களிடம் இருக்கும் கைத்தடியை கடலில் அடிக்க உத்தரவிடுகிறான். ''உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. திருக்குர்ஆன்.26:63


கடல் பிளந்து மலை அளவுக்கு உயர்ந்து நின்று வழிவிட்டது அதன் வழியாக மூஸா(அலை) அவர்களின் கூட்டத்தார் வெளியேறுகின்றனர், அதே வழியாக ஃபிர்அவனின் படையும் உள்ளே நுழைந்து அவர்களை விரட்டுகிறது (கடல் மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாருக்காக பிளந்த அதிசயத்தை நேரில் பார்த்தப் பிறகாவது எதோ ஒரு சக்தி செயல்படுகிறது அதனால் மேலும் முன்னேறாமல் நின்று விடுவோம் என்று சிந்திக்க விடாமல் அவர்களுடைய மூளையை தடுத்து விடுகிறான் வல்லோன் அல்லாஹ்.) அதனால் அவ்வழிகளுக்குள் விரட்டிக் கொண்டு நுழைகிறார்கள். அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். திருக்குர்ஆன். 26:64.


இவ்வாறு இரு படைகளும் கடல் பிளவுண்ட மையப் பகுதிக்குள் சங்கமித்தார்கள் இதில் முன்பே நுழைந்து விட்ட மூஸா(அலை) அவர்களும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களும் கடலைக் கடந்து விடுகின்றனர். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். திருக்குர்ஆன்.26:65


கடல் பகுதியை விட்டு அவர்கள் வெளியேறியதும் கடல் மீண்டும் பழைய நிலையை அடைந்து வழிகளை மூடி விட்டது. ஃபிர்அவனின் படையினர் வசமாக மாட்டிக்கொண்டனர். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். திருக்குர்ஆன்..26:66



ஏக இறைவனை மறுத்தக் கூட்டம் கடலுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு உப்புத் தண்ணீரைக் குடித்து மூர்ச்சையாகிக் கொண்டிருந்தனர் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்றுக் கூறியவனோ தானும் ஒரு சாதாரண மனிதன் தான் ன்பதை உப்புத் தண்ணீரைக் குடித்துக் கொண்டு மூச்சுத் திணறும் போது உணர்ந்தான். (இங்காவது அவர்க்ளுக்கு உப்புத் தண்ணீர் கிடைத்தது மறுமையிலோ சலமும், சீழும் தான் ).


ஒரே ஒரு இறைவன் தான் இருக்கின்றான் அவன் அகிலங்களுக்கெல்லாம் அதிபதி, சர்வ வல்லமைப் பொருந்தியவன் அவனை நாம் காணவில்லை என்றாலும் அவன் நம்மைக் காண்கின்றான் நாம் கூறுவதைக் கேட்கின்றான் என்பதை இறுதியில் உறுதியாக நம்பினான்.


மக்களின் அதிபதியே ! இறைவா ! நான் கட்டுப்பட்டேன் என்று விண்ணை முட்டும் அளவுக்கு மூழ்குவதற்கு முன் அயபக் குரல் எழுப்பினான். இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது ''இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்'' என்று கூறினான். திருக்குர்ஆன்.10:90


அல்லாஹ்வுடைய கடும் கோபத்தால் அகம்பாவமும், ஆணவமும் கொண்ட ஃபிர்அவனுக்கு ஏற்பட்ட இந்த துர்பாக்கிய நிலையை பின் வரக்கூடிய மக்கள் தெரிந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவனுடைய உடலை மட்டும் அப்படியே விட்டு வைப்பதாக அவன் மூர்ச்சையாவதற்கு முன் அவனிடம் இறைவன் கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.384  

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். திருக்குர்ஆன்.10:91, 92.


அவனுடைய உடல் கடலோரத்தில் உள்ள பணிப்பாறையில் கண்டெடுக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு ட்படுத்தி ஆய்வாளர்களால் அது ஃபிர்அவ்னின் உடல் தான் என உறுதி செய்யப்பட்டு மக்கள் பார்த்து படிப்பினை பெரும் பொருட்டு அல்லாஹ்வின் அத்தாட்சி காட்சி பொருளாக்கப்பட்டுள்ளது.  

இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. திருக்குர்ஆன்.26:67 

அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக் 

Monday, November 19, 2012

நபிகளாரின் நற்பண்புகள் - பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக இன்று (19.11.2012) மாலை 4.30 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் இஸ்லாத்தின் மீதும் நபிகளாரின் மீதும் தவரான நம்பிக்கையை அகற்றும் விதமாக நபி (ஸல்) அவர்கள் பற்றிய யார் இவர்? என்ற நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே




 

Sunday, November 18, 2012

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சனைப் பாராட்டிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்!

ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சனைப் பாராட்டிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்!



Saturday, November 17, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 16.11.12(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 16.11.12

நபிகள் நாயகம் ஸல் பல திருமணம் புரிந்தது ஏன்?-2

உரை :சகோ அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி

 
 
 
 
 

ஆஷூரா நோன்பு



ஆஷூரா நோன்பு
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது.
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நுல்: புகாரி 1592
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும், கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1916
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் கடைசி வருடத்திலும் ஆஷூரா நோன்புக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் யூதர்களும், கிறித்தவர்களும் இந்த நாளை மகத்துவப்படுத்துகின்றனரே என்று கேட்கப்பட்ட போது அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறியுள்ளனர்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசைப்பட்ட இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான்.
இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது என்பதை ஏராளமான ஹதீஸ்கள் விளக்குகின்றன. மூஸா நபி காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கத் தான் இந்த நோன்பு நோற்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் சில முஸ்லிம்கள் கர்பலா எனும் இடத்தில் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டது இந்த நாளில் தான்; எனவே இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைக்கின்றனர்.
ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்கும் இந்த நோன்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மார்க்கத்தில் ஒரு காரியம் கடமையாகவோ, சுன்னத்தாகவோ ஆக வேண்டுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் தான் ஆகுமே தவிர அவர்களுக்குப் பின்னால் உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்காக எந்த ஒரு வணக்கமும் மார்க்கத்தில் நுழைய இயலாது.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே, இம்மார்க்கத்தை இன்று நான் முழுமைப்படுத்தி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) என்று அல்லாஹ் பிரகடனம் செய்து விட்டான்.

Thursday, November 15, 2012

மம கட்சியின் சமுதாய துரோகங்கள் (வீடியோ)


தவ்ஹீத் எங்களுக்கு தடை. நாங்கள் சாக்கடையை (அரசியலை) சுத்தம் செய்யப்போகிறோம் என்று கூறி, சாக்கடையில் தினம் தினம் குளிக்கும் மம கட்சியின் சமுதாய துரோகங்களை அறிந்து கொள்ள கீழ்காணும் வீடியோக்களை பார்வையிடுங்கள்.

சமீபத்தில் மருத்துவ துறையில் முஸ்லிம்களுக்கு துரோகம் நடந்ததை சப்பை கட்டுகட்டி கேவலப்பட்ட மம கட்சியின் பரிதாப நிலையை பாருங்கள்.

கேள்வி:

பத்திரிக்கை செய்திகளை வைத்தும், நமது சமுதாயத்தை சார்ந்த ஒரு மருத்துவ மாணவர் எனக்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்தாகிவிட்டது. எனக்கு கிடைக்கவில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு புகார் எழுதியதின் அடிப்படையிலும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தியது. தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அதற்கு அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். அரசாங்கமே அமைதி காக்கும் போது, இவர்கள் முந்திக்கொண்டு வந்து துரோகம் நடக்கவில்லை என்று வக்காலத்து வாங்குவது ஏன்? இது தான் சமுதாயத்தின் மானம் காக்கும் லட்சணமோ?

மம கட்சியின் துரோக வரலாறு

Sunday, November 11, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 09.11.12(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 09.11.12

நபிகள் நாயகம் ஸல் பல திருமணம் புரிந்தது ஏன்?

உரை :சகோ அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி

மாமனிதர் நபிகள் நாயகம் - முன்னுரை (தொடர் 1)


இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.
மாமனிதர் நபிகள் நாயகம் - முன்னுரை (தொடர் 1):

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா? என்றால் அதுவும் இல்லை.

திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்று முடிவு செய்து இஸ்லாத்தை ஏற்றார்களா? என்றால் அப்படியும் இல்லை. திருக்குர்ஆன் வசனங்களில் நூறில் ஒரு பகுதி அருளப்படுவதற்கு முன்பே பலர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர்.

மாறாக அவர்கள் முஹம்மது நபியைத் தான் கண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பது வருட வாழ்க்கையில் ஒரே ஒரு பொய் கூட சொல்லி அவர்கள் கண்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அவர்கள் அறிந்ததில்லை.

ஊரில் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லை. மாறாக தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.

சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத் தான் அம்மக்கள் கண்டார்கள்.

'நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்' என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் 'நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது' என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

'அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:16 )

எனவே இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு முன் நபிகள் நாயகத்தைத் தான் முதலில் அறிய வேண்டும்.
நபிகள் நாயகத்தை அறிந்து கொள்ள பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உயிரோட்டமில்லாத நடையில் உள்ளன. நபிகள் நாயகத்தின் குண நலன்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அவை அமையவில்லை.

நபிகள் நாயகம் அவர்களின் குண நலன்களைப் பற்றி எழுதப்பட்ட சில நூல்களில் பெரும்பாலும் கட்டுக் கதைகள் தான் உள்ளன. ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அவை அமையவில்லை.

இந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் தான் மாமனிதர் நபிகள் நயாகம் என்ற நூலை வெளியிடுகின்றோம்.


நபிகள் நாயகத்தின் ஆளுமையை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் உதவும் என்று பெரிதும் நம்புகிறோம்.

மாமனிதர் நபிகள் நாயகம்:

சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.

இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து 'த ஹன்ட்ரட்' (The Hundred) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (Michael Heart) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது 'நூறு பேர்' என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.

மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூல் அவர் குறிப்பிடுகிறார்.

மைக்கேல் ஹார்ட் கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட 'மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதடம் நபிகள் நாயகத்துக்குத் தான்' என்று குறிப்பிடுகிறார்.

வரலாற்று நாயகர்கள் குறித்து நடுநிலையோடும், காய்தல் உவத்தலின்றியும் யார் ஆய்வு செய்தாலும், எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அவரால் நபிகள் நாயகத்துக்குத் தான் முதலிடத்தைத் தர முடியும்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர் அன்று கூறிய, நடைமுறைப்படுத்திக் காட்டிய அனைத்தையும் அப்படியே பின்பற்றும் ஒரு சமுதாயம் உலகில் இருக்கிறது என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் மட்டும் தான்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி கொடுக்கல் வாங்கல், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என எந்தப் பிரச்சினையானாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டவாறு நடக்கக் கூடிய சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளாக உலகில் இருந்து வருகிறது.

'அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் வழிகாட்டி' என்று உலகில் கால் பகுதிக்கும் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள். இத்தகையோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் காட்சியையும் உலகம் காண்கிறது.

உலகில் எந்தத் தலைவருக்கும் இந்தச் சிறப்புத் தகுதி கிடைத்ததில்லை என்பதை யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் மற்றும் அனைவரையும் விட, ஏன் தம் உயிரையும் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்கக் கூடிய பல கோடிப் பேர் இன்றும் வாழ்கிறார்கள்.

உலக மக்களால் காட்டுமிராண்டிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலைவனத்தில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைய முடிந்தது எப்படி?

இக்கேள்விக்கான விடை தான் இந்நூல்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலாக இது இருக்குமோ என்று யாரும் கருதிவிட வேண்டாம்.

இது வரலாற்று நூல் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய ஆன்மீகப் பாதையை விளக்கும் நூலும் அல்ல.

இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகளையோ, அதன் சட்டதிட்டங்களையோ விளக்குவதற்காகவும் இந்நூல் எழுதப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைப் பட்டியட்டு பிரமிப்பை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமன்று.

மாறாக 1400 ஆண்டுகளுக்கு முன் உலகில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏனைய தலைவர்களிடமிருந்து எப்படி தனித்து விளங்கினார்கள்?

'நபிகள் நாயகம் (ஸல்) போன்ற ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை' என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்றாசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்?

நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அவர்களை இன்றளவும் அப்படியே பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையே இந்நூல்.


முஸ்லிமல்லாத நண்பர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் அவர்களது சிறப்பையும், தகுதிகளையும் நிச்சயம் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.


முஸ்லிம்களுக்குக் கூட நபிகள் நாயகம் (ஸல்) குறித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இதில் உள்ளன.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Friday, November 09, 2012

தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை


எஸ். அப்பாஸ் அலீ

தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களை சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களை தொழுகைக்கு அழைப்பது, அதிகமான வணக்கங்கள் புரிவது, பாவம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது, சில மார்க்க விஷயங்களில் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம். இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு இவர்கள் தான் மிகச் சரியாகச் செயல்படுகிறார்கள் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தினருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது போன்று இவர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கின்றது. இவர்களுடைய மறுபாதியை பலர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஒருவருடைய அனைத்து செயல்பாடுகளை வைத்துத் தான் அவர் நல்லவரா? கெட்டவரா என்ற முடிவை எடுக்க வேண்டும். சமுதாயத்துக்குத் தீங்கிழைக்கும் அரசியல்வாதிகள், கொலைகாரர்கள், திருடர்கள் போன்ற தீயவர்களிடம் கூட சில நன்மையான காரியங்களை பார்க்கத் தான் முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர்களை நல்லவர்கள் என்று நாம் கூறிவிடுவதில்லை. அவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கவனத்தில் கொண்டே முடிவெடுக்கின்றோம். இதே போன்று தான் தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் நாம் முடிவெடுக்கக் கடமைபட்டிருக்கின்றோம். இவர்களிடம் பல நன்மையான காரிங்கள் இருப்பதைப் போன்று ஏராளமான வழிகேடுகளும் தவறான நம்பிக்கைகளும் நிறைந்துள்ளன. 

இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள்:

நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பணியை இஸ்லாம் இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தீமையைத் தடுப்பதின் அவசியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது. குர்ஆன், நன்மையை மட்டும் ஏவவில்லை. தீமைகளை செய்யக்கூடாது  என தடுக்கவும் செய்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது தூதுப் பணியில் நன்மையை மட்டும் ஏவவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவியிருந்த  அனைத்துத் தீமைகளையும் தடுத்து ஒழிக்கப் பாடுபட்டார்கள். அவற்றை சமூகத்திலிருந்து அகற்றியும் காட்டினார்கள். இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பணியை, தீமையை ஒழிக்கும் பணியைச் செய்ய வேண்டியதில்லை என்பது  தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை. நன்மையை மட்டும் சொன்னால் போதும். தீமை தானாகச் சென்றுவிடும் என்று குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராகப் பேசி வருகின்றனர். இஸ்லாம் என்றாலே நன்மையை ஏவும் மார்க்கம்; தீமையைத் தடுக்கும் மார்க்கம். இந்த இரண்டில் ஒன்றை ஏற்று, மற்றொன்றை விட்டதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பாதியைப் புறக்கணித்துவிட்டனர். நன்மைகளைச் சொல்லும் போது மக்கள் எதிர்ப்பதில்லை. தீமைகளைக் கண்டிக்கும் போது தான் எதிர்ப்புகளும் சிரமங்களும் தலை தூக்குகின்றன. இந்தச் சிரமங்களை  எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத இவர்கள் தங்களால் இது இயலாது என்று கூறி ஒதுங்கிவிட்டால் அது வேறு விஷயம். ஆனால் அவ்வாறு தனது இயலாமையை ஒப்புக்கொள்ளாமல் அதை மறைப்பதற்காக நன்மைகளை மட்டும் சொல்வதே சிறந்த மார்க்கப் பணி என்றும் இதுவே அறிவுப்பூர்வமான வழி என்றும் பொய்யான தத்துவத்தைக் கூறுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது. சமூகத் தீமைகளை ஒழிக்கவில்லை.

இவர்களின் இந்தத் தவறான கொள்கையால் தான் சமுதாயம் கெட்டு நாசமாகி  இருந்தது. தமிழகத்தில் தவ்ஹீது வருவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே இவர்கள் இருந்தனர். இவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்ததால் இவர்கள் சமுதாயத்துக்கு நன்மையை ஏவிய காரணத்தால் சமூகத்தில் தீமை அழிந்து நல்ல நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தவ்ஹீது ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில் சமுதாய நிலையோ படுமோசமாக இருந்தது. இணைவைப்பு, பித்அத், வட்டி, வரதட்சணை மூட நம்பிக்கைகள் எல்லா அனாச்சாரங்களும் வீரியமாக நடந்தேறிக் கொண்டிருந்தன. தீமையைத் தடுக்காததின் விளைவால் அந்நேரத்தில் தொழுகையாளியாக இருந்த பலர் இணை வைத்துக் கொண்டும் பித்அத்களை செய்து கொண்டும் மூட நம்பிக்கைகளில் மூழ்கியும் இருந்தனர். வட்டி, வரதட்சணை போன்ற பாவங்களை சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருந்தனர். பள்ளிவாசல் நிர்வாகிகளே பாவமான காரியங்களுக்கு முன்னோடியாக இருந்தனர். தப்லீக் ஜமாஅத்தினர் தீமையைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நன்மையை மட்டும் ஏவியதே இந்த மோசமான நிலைக்குக் காரணம். இதன் பிறகு தவ்ஹீது பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டு, தீமைகளுக்கு எதிராகக் குரல் ஒலித்த பின்பே இந்தத் தீமைகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன. சமுதாயத்தில் இந்தத் தீமைகள் புரையோடிப் போயிருந்ததற்கு இவர்களுடைய இந்தத் தவறான கொள்கையே காரணம். சிரமம் இல்லாமல் மார்க்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த நிலைபாட்டிற்கு இவர்களைத் தள்ளியது. தீமையைத் தடுத்ததின் விளைவால் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கண்கூடாகக் கண்ட பிறகும் கூட தங்களின் நிலைபாட்டை இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும் இவர்கள் தீமைகளைக் கண்டித்துப் பேசுவதில்லை. தீமைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவே தான் வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் திருமணங்களில் சர்வ சாதாரணமாகக் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் தாங்களே இத்தீமைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூடத் தடுமாறாமல் இவற்றைச் செய்துவிடுகின்றனர். மார்க்கத்திற்கு எதிராக உறவோ நட்போ வரும் போது மார்க்கத்தை விட உறவுக்கும் நட்பிற்குமே முன்னுரிமை கொடுக்கின்றார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்தின் பாதியை புறக்கணிக்கச் சொல்லும் இப்படிப்பட்ட ஜமாஅத்தால் சமுதாயம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியாது. இவர்களால் சமுதாயத்தை நல்ல ஒரு நிலைக்குக் கொண்டு வரவும் முடியாது. அடிப்படையில் கோளாறு
குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. தப்லீக் ஜமாஅத்தினர் இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளனர். குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தைத் தாண்டி மத்ஹபுகளை மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மத்ஹபுச் சட்டங்கள் மனிதர்களின் சுய சிந்தனையால் உருவாக்கப்பட்டவை. குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் மோதும் வகையில் அமைந்தவை. இந்த வழிகேட்டை இவர்கள் சரி என்று நம்புகின்றனர். தனது வணக்க வழிபாடுகளை இதனடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். இந்தச் சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக அமைந்திருப்பதை அறிந்த பின்னவரும் 
இவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். 

தவ்ஹீதை மட்டும் எதிர்ப்பார்கள்:

தீமைகளைத் தடுக்க வேண்டியதில்லை என்ற கொள்கையில் உள்ள இவர்கள் நம் விஷயத்தில் மட்டும் இக்கொள்கையை தளர்த்திக் கொண்டனர். இவர்களின் கருத்துப்படி நமது கொள்கையும் செயல்பாடுகளும் தீமையானது. இவர்களின் கொள்கைப்படி பார்த்தால் இவர்கள் நம்மை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் நமக்கு எதிராக முழு முயற்சியுடன் செயல்படுகின்றனர். எப்பாடு பட்டாவது நம்மை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். தப்லீக் உலமாக்களும் கப்ரு வழிபாட்டை ஆதரிக்கும் பரேலவிகளும் கொள்கையில் மாறுபட்டவர்கள். தர்ஹா வழிபாட்டை அங்கீகரிக்காத தப்லீக் உலமாக்கள் பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்கவில்லை; போர்க்கொடி உயர்த்தவில்லை. மாறாக மத்ஹபுகள் கூடாது என்று நாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, நமக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்.

தப்லீக் அணியில் முன்னணி வகித்த கலீல் அஹ்மது கீரனூரியார் நமக்கு எதிராகப் போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். பரேலவிஸத்தை எதிர்ப்பதை விட நம்மை எதிர்ப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டார். தப்லீகும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர் என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கலீல் அஹ்மது கீரனூரி நம்மை மேடையில் விமர்சித்தது போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம். கொஞ்சம் பிடித்தாவது விடலாம். அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மை வாட்டி வறுத்தெடுக்க வகை வகையான கூட்டங்கள், மாநாடுகள்!

அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும் என்பது போல் இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம், அல்ஹம்துலில்லாஹ்!
இன்று இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன. இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இது தமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.

தனிமனித வழிபாடு:

இஸ்லாம் அனுமதிக்காத தனிமனித வழிபாட்டை இவர்களிடம் காண முடியும். அமீர் ஸாப் என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் முஸாபஹா செய்யும் பழக்கத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அமீர் இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம் முஸாபஹா  செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு முஸாபஹா செய்கின்றனர். இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? அவனுக்கு நெருக்கமானவர் யார்? என்பதை யாராலும் உறுதிபடக் கூற முடியாது. அப்படி ஒருவர் உறுதியாக அறியப்பட்டாலும் கூட இவ்வாறு செய்து மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி, பெருமைப்படுத்திக் கொள்வது கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்களோ, அவர்களால் இறைநேசர்கள் என்று சான்று வழங்கப்பட்ட அவர்களின் தோழர்களோ இவ்வாறு தங்களை மக்களிடம் பெருமைபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக மக்களுடன் மக்களாக எல்லோரையும் போன்றே வாழ்ந்தார்கள். பணிவை வெளிப்படுத்தினார்கள். சொல்லப்போனால் தங்களை மக்களுக்குப் பணியாற்றும் பணியாளர்கள் என்றே கருதி மக்கள நலப் பணிகளைச் செய்தனர். பெரியார் கதைகள்
இவர்கள் மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போது மக்களுக்குத் தேவையான சரியான தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாக, பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்தக் கப்ஸாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றன. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இவற்றை சிந்தித்துப் பார்த்தால் இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான விஷயங்களும் இருப்பதைக் காணலாம்.  மனித குலத்துக்குத் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமாகப் பரவி கிடக்கின்றன. அப்படியிருக்க இந்தப் புருடாக்கள் எதற்கு? இவை மக்களை அறிவீனர்களாக ஆக்குமே தவிர அறிவாளிகளாக ஆக்காது. கடமை தவறுபவர்கள் ஒரு மனிதன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய  கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துவதைப் போன்று பிற மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்தக் கடமைகளை ஒருவர் முறையாக நிறைவேற்றினால் இதுவும் வணக்கமாகிவிடுகின்றது. எனவே அதற்கு நன்மை உண்டு என்று மார்க்கம் கூறுகின்றது. இஸ்லாத்தின் உபதேசங்கள், கொள்கை கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் ஆகிய அனைத்தும் பிறரைப் பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளன. மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காகக் குறிப்பிட்ட சில நாட்களை ஒதுக்குவது மார்க்கத்தில் குற்றமில்லை. மாறாக இது ஒரு நன்மையான காரியமே. ஆனால் ஒருவர், தான் ஆற்ற வேண்டிய மற்ற கடமைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்த நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும். இந்தச் சாதாரண விஷயத்தைக் கூட தப்லீக் ஜமாஅத்தினர் விளங்கவில்லை. ஒரு வாரம் ஜமாஅத், 40 நாள் ஜமாஅத், நான்கு மாதம் பத்து நாட்கள், என்று வாரக் கணக்கில், மாதக் கணக்கில் நாள் ஒதுக்குமாறு இவர்கள் மக்களிடம் கூறுகின்றனர்.

குடும்ப சூழ்நிலையின் காரணத்தால் இதில் வர இயலாதவர்களும் இருப்பார்கள். இத்தகையவர்கள், நாங்கள் கடையைப் பார்க்க வேண்டியுள்ளது; குடும்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது; எனவே தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஜமாஅத்திற்கு வர இயலாது' என்று கூறுவர். ஆனால் ஜமாஅத்தினர் இவர்களை விட்டு விடுவதில்லை. குடும்பத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவர்களை அழைத்துச் சென்றுவிடுகின்றனர். இவர்களின் இத்தகைய பிரச்சாரத்தால் பலர் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் ஜமாஅத்திற்குப் புறப்பட்டு விடுகின்றனர். ஆனால் இவர்களின் குடும்பமோ ஊரில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும். தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் பலரது குடும்பம் இந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றது. பலர் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற குருட்டு நம்பிக்கையே இதற்குக் காரணம்.

தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்துவிட்டு இதன் பிறகே இறைவன் பார்த்துக் கொள்வான் என நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இவர்களோ முயற்சியைக் கைவிட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் இறைவன் மீது பழி போடாமல் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை முறையாகச் செய்கின்றனர். ஜமாஅத்திற்குச் செல்லும் போது உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் ஒன்று விடாமல் தேவையான அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவற்றை விட்டுவிடுவதில்லை. மேலும் தப்லீக் ஜமாஅத்தில் உள்ள பலர் எளிமை என்ற பெயரில் தங்களைத் தானே வருத்திக் கொள்கின்றனர். மார்க்கம் அனுமதித்த இன்பங்களை ஹராமாக்கிக் கொள்கின்றனர். அலங்கோலமான தோற்றத்தில் தங்களை மாற்றிக் கொள்கின்றனர்.

தப்லீக் ஜமாஅத் என்பது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படாத ஒரு ஜமாஅத் என்பதை விளங்கிக் கொள்ள மேற்கண்ட ஆதாரங்களே போதுமானவையாகும்.

நன்றி: ஏகத்துவம்

Tuesday, November 06, 2012

Saturday, November 03, 2012

தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு (தொடர் -7) - இரவில் உறங்காத பெரியார்கள்


தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு (தொடர் - 7)



இரவில் உறங்காத பெரியார்கள்

அபூ இதாப் ஸல்மீ (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இரவு முழுவதும் தொழுது கொண்டே இருந்தார்கள் பகல் முழுவதும் நோன்பு வைத்திருந்தார்கள். (பக்கம் 132)

இமாம் அஹ்மதுப்னுஹம்பல் (ரஹ்) அவர்கள் தினமும் முன்னூறு ரக்அத்கள் நபில் தொழுபவர்களாக இருந்தார்கள். (பக்கம் 132)

இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையில் அறுபது தடவை குர்ஆனை ஓதி முடிப்பார்கள். (பக்கம் 132)

ஹஜ்ரத் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) ஐம்பது ஆண்டுகள் இஷாவையும், சுபுஹையும் ஒரே உளூவைக் கொண்டு தொழுது வந்தார்கள். (பக்கம் 131)

அபுல் முஃதமர் (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இவ்விதம் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 131)

இமாமுல் அஃளம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் முப்பது ஆண்டுகள் அல்லது நாற்பது ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளூவைக் கொண்டு சுபுஹைத் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 132)

இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களுக்கிருந்த கல்வி சம்மந்தமான வேலைகள் பளுவைப் பற்றி அனைவருக்கும் தெரியும், அத்துடன் அவர்கள் அந்நாட்டின் பிரதம நீதிபதியாகவும் இருந்து வந்ததால் அது சம்மந்தமான வேலைகளும் ஏராளமாக இருந்தன. அவ்வாறிருந்தும் ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 130)

இப்படிப்பட்ட கதைகள் நூல் நெடுகிலும் மலிந்து காணப்படுகின்றன. மத்ஹபையும், தரீக்காவையும் நியாயப்படுத்துவதற்காக இப்பெரியார்களின் வணக்க வழிபாடுகள் பற்றி மலைப்பூட்டப்படுகின்றன.
உண்ணுதல், உழைத்தல், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் இவைகளை எல்லாம் முடித்து விட்டு 200 அல்லது முன்னூறு ரக்அத்கள் தொழ முடியுமா?

நாற்பது, ஐம்பது ஆண்டுகள் உறங்காமல், மனைவியுடன் கூடாமல், மலஜலம் கழிக்காமல் இஷாவுக்குச் செய்த உளூவைக் கொண்டு சுபுஹ் தொழ முடியுமா?

ஒரு இரவுத் தொழுகையில் இரண்டு தடவை குர்ஆனை ஓதி முடிக்க முடியுமா?

இதைச் சிந்தித்தாலே இந்தக் கதைகளின் தரத்தை விளங்கிக் கொள்ளலாம். இதை எல்லாம் தூக்கி சாப்பிடுகிறது மற்றொரு கதை!

ஹஜ்ரத் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 160)

ஒரு ரக்அத்துக்கு ஒரு நிமிடம் என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு இரவுக்கு 1000 ரக்அத் நபில்கள் தொழ முடியுமா? இஷாவிலிருந்து சுபுஹ் வரை 500 நிமிடங்கள் கூட இராது.
இந்தச் சாதாரண கணக்கைக் கூட சமுதாயம் கவனிக்கத் தவறுவதால் ஸகரிய்யா சாஹிப் வாயில் வந்தவாறெல்லாம் கதையளக்கிறார்.

ரக்அத்களின் எண்ணிக்கை பற்றிக் கூறும் போது 1000 ரக்அத்கள், 200 ரக்அத்கள் என்றெல்லாம் பெரியார்கள் தொழுது வந்ததாக பிரமிப்பூட்டும் ஸகரிய்யா சாஹிப் அவர்கள் எப்படித் தொழுதார்கள் என்பதைக் கூறும்போது மலைப்பின் உச்சிக்கே நாம் சென்று விடுகிறோம்.

ஹஜ்ரத் உவைஸுன் கரனீ (ரஹ்) அவர்கள் பிரபலமான பெரியார். தாபியீன்களின் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் இரவு நேரங்களில் தொழும்போது சில சமயங்களில் ருகூவுச் செய்வார்கள். இரவு முழுவதும் அப்படியே ருகூவிலேயே சென்று விடும். சில சமயங்களில் ஸஜ்தாச் செய்வார்கள். இரவு முழுவதும் ஒரு ஸஜ்தாவிலேயே கழிந்துவிடும். (பக்கம் 161)

இப்படியெல்லாம் தொழவேண்டுமென்பதற்காக இந்த சம்பவத்தையும் ஸகரிய்யா சாஹிப் எழுதுகிறார். தொழுகை இப்படித்தான் அமைந்திருக்க வேண்டுமென்றால் 1000 ரக்அத்து சமாச்சாரமெல்லாம் பொய்யென்று ஆகின்றது.

தொழுகையின் சிறப்பு என்ற பெயரில் ஸகரிய்யா சாஹிபுடைய புருடாக்கள் சிலவற்றைக் கண்டோம். பலவீனமான ஹதீஸ்கள் பல இடம் பெற்றிருந்தாலும் அவற்றை நாம் விமர்சனம் செய்யவில்லை. கதைகளை மட்டுமே விமர்சித்துள்ளோம்.

இந்தக் கதைகளை எழுதிய ஸகரிய்யா சாஹிபுக்கே இதில் சந்தேகம் வந்துவிட்டது போலும் யாரும் நம்ப மாட்டார்களே என்ற சந்தேகத்தில் ஒரு முடிவுரையும் தந்து நியாயப்படுத்துகிறார். அவர் கூறுவதையும் கேளுங்கள்!

ஆனால் இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் முதலாவதாக, இந்தச் சம்பவங்கள் எல்லாம் சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவிப்புத் தொடருடன் கூறப்பட்டுள்ளன. நாம் இவற்றைச் சந்தேகிப்போமானால் சரித்திரம் முழுவதுமே நம்பிக்கை அற்றதாகிவிடும். ஒரு நிகழ்ச்சி உண்மை என்பதற்கு அது அதிகமாக பல நூற்களில் பல ஆசிரியர்களால் கூறப்பட்டிருப்பது சான்றாகும்.

இவ்வாறு ஸகரிய்யா சாஹிப் பக்கம் 167 ல் நியாயப்படுத்துகிறார்.

பல நூற்களில் எழுதப்பட்டது உண்மை என்பதற்கு சான்றாக ஒரு போதும் ஆகாது. இதிலும் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இந்தக் கதைகள் அமைந்திருக்கும் போது ஒரு போதும் அது உண்மையாக இராது. சமாதி வழிபாட்டை ஸகரிய்யா சாஹிப் எதிர்த்து வந்தவர். ஆனால் சமாதி வழிபாட்டை நியாயப்படுத்தும் கதைகள் பல நூல்களில் எழுதப்பட்டுள்ளதை அவர் ஏற்கவில்லையே அது ஏன்?
சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவுப்புத் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கூற்றிலும் பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கற்பனைக் கதைகளில் பல அறிவுப்புத் தொடர்களையும் வெளியிட்டு அதன் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையையும் நிரூபிக்க வேண்டும். ஸகரிய்யா சாஹிப் இன்று இல்லாததால் தப்லீகின் தலைமைப் பிரச்சாரர்களாக திகழும் அறிஞர்கள் இதை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இந்தக் கதைகளை நியாயப்படுத்த அவர் கூறும் மற்றொரு நியாயத்தையும் கேளுங்கள்.

இரண்டாவதாக, சில மனிதர்களை நாம் காண்கிறோம். அவர்கள் சினிமா தியேட்டர்களிலும் வீண் வேடிக்கைகளிலும் இரவு முழுவதையும் விழித்திருந்து கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எவ்விதச் சிரமும் தெரிவதில்லை. தூக்கம் விழிப்பதால் துன்பங்கள் ஏதும் தெரிவதில்லை.

இதுவும் அறியாமையில் எழுந்த வாதமே! இந்தக் கதைக்கு உதாரணமாக இவற்றைக் கூறவே முடியாது.
சினிமாவிலேயே இரவைக் கழிக்கும் ஒருவர் பற்றி ஒரு இரவில் 20 சினிமா பார்த்தார் என்று கூறப்படுவதில்லை. ஒரு இரவில் எத்தனை சினிமா பார்க்க முடியுமோ அத்தனை சினிமா பார்த்ததாகத்தான் கூறப்படுகின்றது. ஆனால் ஸகரிய்யா சாஹிபின் கதையில் ஒரு இரவில் எத்தனை ரக்அத்கள் அதிகபட்சம் தொழ முடியுமோ அது போல் ஐம்பது மடங்கு கூடுதலாகக் கூறப்படுகின்றது.
நாற்பது ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள் இரவு முழுவதும் சினிமா பார்த்துக் கொண்டே இருந்தார். பகலிலும் அவர் உறங்கிவிடவில்லை என்று எவரைப் பற்றியும் கூறப்படுவதில்லை. ஏதோ சில திருநாட்களில் இரவில் விழித்துவிட்டு அதற்குப் பகரமாக பகலில் அவர்கள் உறங்குவதாகவே கூறப்படுகின்றது. அப்படித் தான் நடந்தும் வருகின்றது. அந்த நாட்களில் கூட இரவு முழுவதும் மலஜலம் கழிக்கவில்லை என்று கூறப்படுவதில்லை. ஸகரிய்யா சாஹிபின் கதையில் இவையெல்லாம் கூறப்படுகின்றன.

அப்படி யாராவது நாற்பது ஆண்டுகள் இரவில் விழித்து சினிமா பார்த்து விட்டு பகலிலோ, இரவிலோ உறங்காமலிருந்தால் அவர்கள் கீழ்பாக்கத்துக்கு அனுப்பப்படுவதை காண்கிறோம். எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்பது ஆதாரமற்றதாகும்.

இவற்றையெல்லாம் விட ஸகரிய்யா சாஹிபின் கதைகள் தீனுடைய போர்வையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. சினிமா பார்ப்பவனின் கதைக்கு தீனுடைய முத்திரை எதுவும் குத்தப்படுவதில்லை.
எவ்வகையிலும் நியாயப்படுத்திட இயலாத இந்தப் பொய்கள் தான் தொழுகையின் சிறப்பு பகுதி முழுவதும் மலிந்துள்ளன.

மாதிரிக்காக ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே நாம் இனம் காட்டியுள்ளோம். சிந்தனையுடைய மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.

குர்ஆனும், நபிவழிக்கும் முரணான – தப்லீகின் ஸ்தாபகர் காலத்திற்குப் பின்னர் உள்ளவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த நூலை தப்லீக் ஜமாஅத்தினரும் பொது மக்களும் புறக்கணிப்பார்கள் என்று நம்புவோமாக! அடுத்து ரமலானின் சிறப்புகள் பகுதியில் இடம்பெற்றுள்ள கற்பனைக் கதையைப் பார்ப்போம்.

மவ்லானா ஷாஹ் அப்துர்ரஹீம் ஸாஹிப் ராய்ப்பூரி (ரஹ்) அவர்களிடத்திலோ ரமலான் மாதத்தின் இரவு பகல் முழுவதும் குர்ஆன் ஓதுவதாகவே இருந்தது. அதில் கடிதம் எழுதுவதையும் நிறுத்தி விடுவார்கள். அன்பர்களைச் சந்திப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் தராவீஹுக்குப் பின்னால் இரண்டு கோப்பை வெறும் தேநீர் அருந்துகிற நேரத்தில் மட்டும் அவர்களின் சமூகத்துக்கு வந்து செல்லலாம் என்ற அனுமதி சில குறிப்பான பணிவிடையாளர்களுக்கு மட்டும் இருந்து வந்தது.
(ரமலானின் சிறப்பு பக்கம் 17)

மனித ரமலான் சிறப்பான மாதம் என்பதிலோ அதில் இயன்ற அளவுக்கு நன்மைகளில் ஈடுபட வேண்டுமென்பதிலோ எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் இந்தப் பொரியார் நடந்து கொண்டது போல் நடக்க வேண்டுமா? என்பது தான் கேள்வி. இந்தக் கதையை எழுதிவிட்டு தொடர்ந்து ஸகரிய்யா சாஹிப் பின்வருமாறு எழுதுகிறார்:

பெரியார்களுடைய இந்தப் பழக்கவழக்கங்களெல்லாம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துப் படிப்பதற்கு மட்டுமோ அல்லது அவர்களுக்குப் புகழ் வார்த்தைகள் கூறப்பட வேண்டுமென்பதற்காகவோ எழுதப்படுவதில்லை, எனினும் தன் முயற்சிக்குத் தக்கவாறு அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகின்றன. இயன்ற அளவு பூர்த்தியாக்குவதில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இந்தக் கதையைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்பதற்காகவே எழுதியுள்ளதாக ஸகரிய்யா சாஹிப் வாக்கு மூலம் தருகிறார்.

இவரை பின்பற்றினால் என்னவாகும்? மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை இம்மாதம் முழுவதும் செய்யக் கூடாது. தன் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. தொழில் வியாபாரம் செய்யக் கூடாது. பிள்ளை குட்டிகளைக் கவனிக்கக் கூடாது. நண்பர்களை, அண்டை வீட்டாரைச் சந்திக்கக் கூடாது. அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. நன்மையை ஏவி, தீமையத் தடுக்கவும் கூடாது. எந்நேரமும் குர்ஆனை ஓதிக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு நடக்குமாறுதான் ஸகரிய்யா சாஹிப் உபதேசிக்கிறார். சுருங்கச் சொன்னால் பண்டாரங்களாகவும், பரதேசிகளாகவும் முஸ்லிம்கள் ஆகிவிட வேண்டும் என்கிறார்.

புனித ரமலானில் போர்க்களங்களில் நபி (ஸல்) பங்கெடுத்துக் கொண்டதும், சமூகத்தில் அவர்கள் கலந்துரையாடியதும் தம்தோழர்களையும் அவர்கள் சந்தித்ததும் நன்மையை ஏவி தீமையத் தடுத்ததும் இல்லறத்தில் அவர்கள் ஈடுபட்டு குளிப்புக் கடமையானவர்களாக நோன்பு நோற்றதும் பின்பற்றத் தக்கதல்ல என்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் புனித ரமலானை எப்படிக் கழித்தார்கள் என்பதைச் சொல்லியிருந்தால் அது நியாயமானதாக இருக்கும். நபிவழிக்கு மாற்றமாக நடந்தவரகளை பெரியார்கள் என்று அறிமுகப்படுத்தி அவர்கள் வழியில் செல்ல சமுதாயத்தையும் தூண்டுகிறார்.

இவர் சொல்லக் கூடிய பெரியார்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகி இருக்கலாம். ஏனெனில், அவர்கள் உழைத்து உண்பவர்களாக இருந்ததில்லை. பிறரிடமிருந்து காணிக்கைகள் ஹதியாக்களில் காலத்தை ஓட்டியவர்கள். எது எக்கேடு கெட்டாலும் கிடைக்கவேண்டியது கிடைத்து விடும். தனக்குப் பணியாட்களை நியமித்துக்கொள்ளும் அளவுக்கு (அந்தக் கதையில் இதை விளங்கலாம்) உழைக்காமலேயே செல்வத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள்.

எவ்வித வியாபாரமோ, விவசாயமோ, தொழிலோ செய்யத் தேவையில்லாத அளவுக்கு இஸ்லாமே பிழைப்புக்கு வழியாகவும் சொகுசு வாழ்க்கைக்குச் சாதனமாகவும் ஆகிவிட்ட ஸகரிய்யா சாஹிப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம். (ஆனால் அவருக்கும் இது சாத்தியமாகவில்லை என்பதை அவரை நேரில் கண்ட என்னைப் போன்றவர்கள் அறிவார்கள்)

அன்றாடம் கூலி வேலை செய்தே தன் வயிற்றையும், தன் குடும்பத்தார் வயிற்றையும் கழுவக் கூடிய சராசரி மனிதனுக்கு இது சாத்தியமாகுமா?

தங்கள் தொழிலை நேரடியாக மேற்பார்வை செய்தால் தான் இலாபம் அடைய முடியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது சரிபட்டு வருமா?

இந்தப் பெரியார்களுக்குக் கிடைத்தது போன்று இந்த சாமான்ய மக்களுக்கு காணிக்கைகள் குவியுமா என்ன? இஸ்லாமியர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யவே இந்தக் கதைகள் உதவும் என்பதை சமுதாயம் கண்டு கொள்ளவேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கதைக்கு முரணான போதனையையும் வேறொரு இடத்தில் செய்கிறார்.

இது பிறருடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும் மாதம் என்று கூறியுள்ளார்கள். அதாவது ஏழை, எளியோருடன் கலந்துறவாடி நடந்து கொள்ளுதல் என்பதாகும். (ரமலானின் சிறப்பு பக்கம் 20)
ஏழை, எளியோருடன் கலந்துறவாடாமல் அவர்களது கஷ்டத்தில் பங்கு கொள்ளாமல் மேற்படி பெரியார் நடந்துள்ளார் எனும் போது அவர் எப்படி பின்பற்றத்தக்கவராவார்?

இஸ்லாத்திற்குத் தவறான வடிவம் தந்து இஸ்லாம் நடைமுறை சாத்தியமற்ற மார்க்கம் என்று காட்டுவதும் பெரியார்கள் மீது மலைப்பூட்டும் வகையில் பக்தியை ஏற்படுத்துவதும் தான் இவரது நோக்கமோ என்னவோ?

புனித ரமலானின் சிறப்பைக் கூறப் புகுந்த ஸகரிய்யா சாஹிப் ஆங்காங்கே செய்யும் போதனைகளையும் நாம் அலச வேண்டியுள்ளது.

நோன்பு திறக்கும் பொழுது ஹலாலான உணவானாலும் வயிறு புடைக்க அதிகமாகச் சாப்பிடாமலிருப்பது ஏனெனில், இதனால் நோன்பின் நோக்கம் தவறி விடுகின்றது. நோன்பு வைப்பதன் நோக்கம் மனோ இச்சைகளையும் மனிதனிலுண்டாகும் மிருக இச்சைகளையும் குறைத்து ஒளிமயமான சக்திகளையும், மலக்குகளின் தன்மைகளையும் வளர்த்துக் கொள்வதாகும். பதினொரு மாதங்கள் வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கிறோம். ஒரு மாதம் அதில் கொஞ்சம் குறைத்துக்கொண்டால் உயிரா போய் விடப்போகிறது? (பக்கம் 62)

தவறி விட்ட உணவையும் சேர்த்துச் சாப்பிட்டு மனிதன் நோன்பு திறந்தால் நோன்பின் நோக்கமாகிய இப்லீஸை அடக்குதல், நப்ஸின் இச்சையை முறியடித்தல் ஆகியவை எவ்வாறு சாத்தியமாகும்? என்பதற்காக இமாம் கஸ்ஸாலி (ரஹ்) எழுதுகிறார்கள். (பக்கம் 62)

பிஷ்ருல் ஹாபி (ரஹ்) என்ற பெரியாரிடம் ஒரு மனிதர் சென்றார். அப்பொழுது அவர்கள் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் அவர்களுடைய உடைகள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்ட அம்மனிதர் இந்த நேரத்தில் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர்கள் “ஏழைகள் பலர் ஆடையின்றி இருக்கின்றனர். அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ள எனக்கு சக்தியில்லை. ஆகையால், அவர்களைப் போன்றாவது நானிருந்து அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளவே எவ்வாறு நான் இருக்கிறேன் என்று கூறினார்கள். (பக்கம் 64)

சுகவாசிகளின் வழக்கத்தைப் போன்று ஸஹர் நேரத்தில் அதிகமாகச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது நோன்பின் நோக்கத்தைத் தவறச்செய்து விடுகின்றது என்று மராகில் பலாஹ் என்ற நூலின் ஆசிரியர் எழுதுகிறார்கள். (பக்கம் 64)

என்னுடைய ஷைகு மௌலானா கலீல் அஹ்மது சாஹிப் (ரஹ்) அவர்களை ரமலான் மாதம் முழுவதும் நான் கவனித்திருக்கிறேன். இப்தார் ஸஹர் இரண்டு நேரத்துக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டியை விட அதிகமாக அவர்கள் சாப்பிட்டதே இல்லை. இதனைப் பற்றி அவர்களின் சீடர் ஒருவர் கேட்டதற்கு எனக்குப் பசி ஏற்படுவதில்லை. நண்பர்களை கவனத்தில் கொண்டுதான் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து இதனையும் சாப்பிடுகிறேன். (பக்கம் 65)

மவ்லானா – ஷாஹ் அப்துர் ரஹீம் ராய்ப்பூரி (ரஹ்) அவர்கள் சம்மந்தமாக இதைவிட இன்னும் மேலாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் பல நாட்கள் தொடராக இரவு நேரத்தில் ஸஹருக்கும் இப்தாருக்கும் சேர்ந்து சில கோப்பைகள் பாலில்லாத தேநீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள். ஒரு தடவை ஹஜ்ரத் அவர்களின் பிரதமச் சீடர் மவ்லானா ஷாஹ் அப்துல் காதிர் ஸாஹிப் அவர்கள் “ஹஜ்ரத் எதுவும் சாப்பிடாமலிருந்தால் பலவீனம் அதிகமாகி விடுமே? என்று பரிவுடன் கூறியதற்கு அல்ஹம்துலில்லாஹ்! சொர்க்கத்தின் இன்பம் உண்டாகிக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தார்களாம். (பக்கம் 65)

இப்படி ஏராளமான போதனைகளை ஸகரிய்யா சாஹிப் செய்கிறார். சாப்பிடுவது சம்மந்தமாக அவர் கூறியுள்ள போதனைகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நாம் அலசுவோம். இதற்கு முன்னால் குளிரில் நடுங்கிய பெரியார் பற்றி அவர் கூறும் கதையைப் பார்ப்போம்.

ஏழைகள் ஆடையின்றி இருக்கிறார்கள் என்பதற்காக தனது ஆடைகளைக் களைந்து விட்டு குளிரில் அப்பெரியார் நடுங்கியதாக கதை விடுகிறார்.

நபிகள் (ஸல்) காலத்திலும் ஏழைகள் பலர் இருந்துள்ளனர். போதுமான ஆடையின்றி சிரமப்பட்டவர்கள் பலர் இருந்தனர். கபனிடுவதற்கு கூட போதிய ஆடையின்றி மரணித்தவர்கள் பலர் இருந்துள்ளனர். 

அதில் உலக மாந்தரை விடவும் இரக்க குணம் கொண்ட நபியவர்கள் இருக்கின்ற ஆடையைக் கழற்றிவைக்கவில்லை. ஏழைகள் மலிந்துள்ளார்கள் என்பதற்கு பரிகாரம் இதுவென்றால் நபியவர்கள் அவ்வாறு நடந்திருப்பார்கள். முட்டாள்தனமான காரியத்தைச் செய்தவர்களை எல்லாம் பெரியார்கள் என்று முத்திரைக் குத்தி விளம்பரப்படுத்துகிறார்.

ஸகரிய்யா சாஹிப் காலத்திலும் குளிருக்கு நடுங்குமளவுக்கு ஏழைகள் இருந்தனர். இன்றும் உள்ளனர். இந்த போதனையை ஸகரிய்யா சாஹிபும் பின்பற்றவில்லை. அவரது ஸஹாரன்பூர் மதரஸாவின் ஆசிரியர்களும், மாணவர்களும் பின்பற்றவில்லை. தப்லீக் மதரஸாக்களும் பின்பற்றவில்லை.

ஏனைய மதரஸாக்களை விட தப்லீக் மதரஸாக்களில் தான் முட்டுக்கால்களுக்கும் கீழே தொங்குமளவுக்கு ஜிப்பாக்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் துணிப்பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுமளவுக்கு மூன்று சட்டைகள் தைக்கும் அளவுக்கு ஒரு ஜிப்பாவுக்கு துணி தேவைப்படுகிறது.

ஏழைகளைக்கருத்தில் கொண்டு ஒரு ஜுப்பா தைக்கும் செலவில் ஒரு ஏழைக்கு இரு சட்டைகள் தைத்துக் கொடுக்கலாமே! இதுபோதாதென்று பத்து முழம் துணியில் தலைப்பாகை வேறு. அதில் ஐந்து ஏழைகளுக்கு ஆடை வழங்கலாம்.

பிஷ்ருல் ஹாபியைப் போல் எல்லாவற்றையும் கழற்றி எறியாவிட்டாலும் ஏழைகளைக் கருத்தில் கொண்டு இதையாவது செய்யலாம் அல்லவா? இதெல்லாம் நடைமுறைசாத்தியமில்லை என்று தெரிந்தேதான் அவர் எழுதியுள்ளார் என்பதற்காகவே இதைக் கூறவேண்டியுள்ளது.

மனதை அடக்குவதே நோன்பின் நோக்கம் என்று காரணம் கற்பித்துக் கொண்டு மற்ற நாட்களை விடவும் குறைவாக உண்ணச் சொல்கிறார் ஸகரிய்யா சாஹிப். அல்லாஹ்வோ அவனது தூதரோ இந்தக் காரணத்தைக் கூறவில்லை.

யார் பொய்யான பேச்சையும், அதைச் செயல்படுத்துவதையும் விடவில்லையோ அவன் தனது உணவையும், தண்ணீரையும் விட்டு விடுவதில் அல்லஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. இது நபிமொழி. புகாரி உட்பட பல நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

பசியையும், தாகத்தையும் அடக்குவது அல்ல நோன்பின் நோக்கம். அதனால் இறைவனுக்கு ஏதும் ஏற்படப் போவதில்லை. மாறாக இறைவன் தடுத்ததற்காக உணவையும் தண்ணீரையும் சிறிது நேரம் தியாகம் செய்தது போல் இறைவன் தடுத்த அனைத்தை விட்டும் விலகவேண்டியதே நோன்பின் நோக்கம் என்பதை இந்த நபிமொழி விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது வெப்பம் தாளாமல் தமது தலையில் தண்ணீர் ஊற்றியதை நான் பார்த்திருக்கிறேன் என நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

மலக்குகளின் தன்மையை அடைவதுதான் நோன்பின் நோக்கம் என்றால் அந்த வெப்பத்தையும் சிரமத்துடன் நபி (ஸல்) சகித்திருப்பார்கள். தலையில் தண்ணீர் ஊற்றியிருக்கமாட்டார்கள்.
நோன்பு நோற்றிருக்கும் போது தன்னை நபிகள் முத்தமிடுவார்கள் என்று உம்மு ஸலமா அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஹலாலான இச்சையையும் அடக்கிக் கொள்வதே நோன்பின் நோக்கம் என்றால் நபியவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.

விரைந்து நோன்பு துறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பதும் நபிமொழி, ஸஹ்ல் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

உணவின் மேல் உள்ள நாட்டத்தை அகற்றுவதே நோன்பின் நோக்கம் என்றால் நோன்பைத் தாமதமாகத் துறக்குமாறு வழிகாட்டியிருப்பார்கள். அவசரமாக நோன்பு துறக்கச் சொன்னதன் மூலம் உணவின் மேல் உள்ள நாட்டத்தை மனிதன் துறந்து விடலாகாது என்று கற்றுத் தருகிறார்கள்.
ரமலான் காலங்களில் உண்பதைப்பற்றி இறைவன் கூறும்போது,

இரவிலிருந்து பஜ்ர் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:187)

இரவு வந்தது முதல் பஜ்ர் வரையிலும் உண்ணலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். இவ்வளவு நேரமும் ஒருவன் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் கூட நோன்பின் நோக்கத்தை அவன் மீறியவனாக மாட்டான் என்று இந்த வசனம் கூறுகின்றது.

உண்மையில் நோன்பின் நோக்கம், எவ்வளவு உண்கிறான் என்று கணக்கெடுப்பதன்று. உணவின் மீது இவ்வளவு ஆசை உள்ள மனிதன், இறைவன் சொன்னதற்காக பகல் பொழுதில் தியாகம் செய்கிறானா என்று கணக்கெடுப்பதுதான்.

எவ்வளவு உணவை தியாகம் செய்கிறோம் என்பதை விட எதற்காக தியாகம் செய்கிறோம் என்பதே நோன்பின் நோக்கமாகும்.

பாலில்லாத் தேநீரை அருந்தி விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களும், தனக்குப் பசிப்பதேயில்லை என்று கூறி மனித தன்மைக்கும் அப்பாற்பட்டவராகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர்களும் ஒருக்காலும் பெரியார்களாக முடியாது.

உழைக்காமல் வயிறு வளர்க்கும் ஹஜ்ரத்மார்களுக்கே சாத்தியப்படாத இந்தப் போதனை அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்?

திண்ணை தூங்கிகளுக்குரிய மார்க்கமாக இஸ்லாத்தை அறிமுகம் செய்யத்தான் இந்நூல் எழுதப்பட்டதோ என்ற எண்ணம் உறுதியாகின்றதல்லவா?

பெரியார்கள் மீது மலைப்பையும், மதிப்பையும் ஏற்படுத்துவதே ஸகரிய்யா சாஹிபின் நோக்கம் என்பதைப் பின்வரும் அவரது போதனை ஊர்ஜிதம் செய்கின்றது.

எனவே நோன்பு நோற்றிருக்கும் நிலையில் நோன்பு திறப்பதற்காக பொருள் ஏதேனும் இருக்கிறதா இல்லையா? என்ற சிந்தனை அவர்களுக்கு வருவதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் கூட குற்றமெனக் கூறியுள்ளனர். நோன்பின் மாலை, நோன்பு திறப்பதற்காக ஏதேனும் பொருளைத் தயார் செய்ய வேண்டுமென எண்ணங்கொள்வதும் குற்றமென சில பெரியார்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் அவ்வாறு எண்ணுவது உணவளிப்பது பற்றி அல்லாஹ் வாக்களித்திருக்கும் நம்பிக்கையைக் குறைத்து விடுகிறது என்பதற்காக. (நோன்பின் சிறப்பு பக்கம் 67,68)

நோன்பு திறப்பதற்கு முன் எங்கிருந்தாவது ஏதாவது பொருள்ள அவர்களுக்கு வந்தால் மனதின் கவனம் அதன் பக்கம் செல்லாமலிருப்பதற்காகவும், தவக்குல் என்ற இறை நம்பிக்கையில் குறை ஏதும் ஏற்படாமலிருப்பதற்காகவும் அந்தப் பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். (நோன்பின் சிறப்பு பக்கம் 68)

எனினும் இக்காரியங்கள் பெரும் ஆத்மீக வலிமையுடைய மனிதர்களுக்கு உள்ளவையாகும். நம் போன்றோர் இவ்விஷயங்களைச் சிந்திப்பதும் தகுதியில்லாததாக இருக்கின்றது மேலும் அந்த நிலையை அடையாமல் நாம் அதனைத் தேர்ந்தெடுப்பது நம்மை அழிவின் பக்கம் சேர்த்து விடுவதாகும். (நோன்பின் சிறப்பு பக்கம் 68)

ஸகரிய்யா சாஹிபின் மேற்கண்ட போதனைகளை ஊன்றிக்கவனிக்கும் போது அதில் மலிந்து கிடக்கும் தவறுகளையும் இவரது நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

நோன்பு துறப்பதற்காக உணவுகளைத் தயார் செய்வதும் அது பற்றி சிந்திப்பதும் தவக்குல் எனும் இறை நம்பிக்கைக்கு மாற்றமென்றால் அல்லாஹ்வின் ரிஸ்கைத் தேடுங்கள்! ஹலாலான முறையில் பொருளீட்டுங்கள்! என்றெல்லாம் இறைவன் போதிப்பது ஏன்? ஜகாத், ஸதகா போன்ற நல்லறங்களை இறைவன் வலியுறுத்துவது ஏன்? நோன்பு வைப்பதற்கான நேரம் முடிந்ததும் உண்ணுங்கள் பருகுங்கள் என்று இறைவன் போதிப்பது ஏன்? இவையெல்லாம் கூட தவக்குலுக்கு எதிரான போதனைகள் தானா?

திருக்குர்ஆன் போதனைகளையும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதலையும் அறியாத அறிவீனர்கள்தான் இப்படியெல்லாம் கூற முடியும்.

பெரும் ஆத்மீக வலிமையுடையவர்களுக்குத் தான் இந்த போதனைகள் என்றும் சரடு விடுகிறார். இப்படிச் சரடு விடாவிட்டால் வேளாவேளைக்கு உண்டு வந்த ஸகரிய்யா சாஹிப் மாட்டிக் கொள்ள வேண்டி வருமல்லவா? அதனால் தான் ஆத்மீக வலிமை பற்றிப் பேசுகிறார்.

கிடைக்கும் போது சுவையான உணவுகளை உட்கொண்ட நபியவர்கள், உண்பதற்கு ஏதும் உண்டா என்று தன் குடும்பத்தாரிடம் கேட்ட நபியவர்கள், ஆட்டுத் தொடைக் கறியைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்ட நபியவர்கள் ஆத்மவலிமையுடையவர்கள் அல்ல. தவக்குல் உடையவர்கள் அல்ல என்று ஸகரிய்யா சாஹிப் அவர்கள் கூறுகிறார் போலும்.

பெரும் வணிகர்களாகத் திகழ்ந்த அபூபக்கர் சித்தீக் (ரலி) அப்துர் ரஹ்மான் பின் அவ்பு (ரலி) போன்றவர்களும், யாரேனும் தங்களை உண்ண அழைக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்த அபூஹுரைரா (ரலி) போன்ற திண்ணைத் தோழர்களும் ஆத்மீக வலிமை பெற்றவர்கள் அல்லர் தவக்குல் உடையவர்கள் அல்லர் என்கிறார் ஸகரிய்யா சாஹிப்.

தவக்குலை போதிக்கும் இறைவன் தான், பொருள் தேடுவதையும் போதிக்கிறான் என்ற சாதாரண உண்மை கூடதெரியாத அறிவீனர்கள்தான் பெரும் ஆத்மீக வலிமையுடையவர்களாம்.

இஸ்லாமிய சட்டங்களில் இப்படியெல்லாம் இரண்டு நிலைகள் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகள் அனைவருக்கும் பொதுவானது என்ற சாதாரண உண்மை கூட தெரியாத ஸகரிய்யா சாஹிப் போன்றவர்கள் தான் ஷைகுல் ஹதீஸ்களாம்!

ஆத்மீக வலிமை பெற்றவர்களுக்குத் தான் இது சாத்தியம் என்றால், ஆன்மீக வலிமை பெறாத அப்பாவி தப்லீக் ஜமாஅத்தினருக்கு இதை ஏன் போதிக்க வேண்டும்? ஆன்மீக வலிமை உள்ளவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு இதை சொல்ல வேண்டியதுதானே!

ஆத்மீக வலிமை பெறாத பாமரமக்களிடம் இதைக் கூறுவதற்கு காரணம் அந்தப் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்துவது தான் இதைத்தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது.

தொழுகையில் சிறப்பு, ரமலான் சிறப்பு ஆகிய பகுதிகளில் மட்டுமின்றி தொகுப்பு முழுவதும் அபத்தங்கள் நிரம்பியுள்ளன. சிந்திக்கும் மக்களுக்கு இதுவே போதுமாகும்.

நல்ல நோக்கத்தில் தப்லீக் இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கற்பனைத் தொகுப்பை தூக்கி எறிந்தால் வெற்றியடைவார்கள்.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 02.11.12(வீடியோ )


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 02.11.12(வீடியோ )

இஸ்லாமிய பார்வையில் விதி 
உரை :சகோ அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி