Tuesday, October 21, 2014

திருமண விருந்திற்குரிய அளவு என்ன?


திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா?

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன? திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம்.

அதற்கான விளக்கங்களை அளிப்பதற்காக இந்தக் கட்டுரை! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமண விருந்தின் உச்சக்கட்டம் என்பதற்கு எவ்வித அளவு கோலையும் நிர்ணயம் செய்யவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) எதற்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கவில்லையோ அதற்கு நாம் எந்த எல்லையையும் நிர்ணயிக்க முடியாது. அதே நேரத்தில் திருமண விருந்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு நபியவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது.

இந்த விருந்து நபிவழியாகும். பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபியவர்கள் வழங்கிய அனைத்து திருமண விருந்துகளையும் மிக மிக எளிமையாகத் தான் வழங்கி நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் இதுதான் பெரிய விருந்தாகும். ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் திருமணம் என்ற காரியத்தில் விருந்தளிக்கும் போது நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு குறைந்த செலவில் விருந்தளிப்பது தான் மிகச் சிறந்ததாகும்.

நபியவர்கள் எதனை முன்மாதிரியாக வழிகாட்டிச் சென்றுள்ளார்களோ அதில்தான் இச்சமுதாயத்திற்கு நன்மை இருக்கிறது. எனவே அதைத் தான் நாம் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், வலியுறுத்த வேண்டும் என்பதே நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அதிகம் செல்வ வசதியுடையவர் திருமணம் அல்லாத காரியங்களில், மார்க்கத்தின் வரம்புகளை மீறாமல், வீண்விரையம் இல்லாமல் அதிகமானவர்களுக்கு விருந்தளித்தால் அதனை நாம் தவறு என்று கூறமாட்டோம்.

ஆனால் திருமண விருந்தில் நபியவர்கள் எளிமையைக் கடைப்பிடித்துள்ளதால் அதையே செல்வந்தரும், ஏழைகளும் கடைப்பிடித்து நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என்றே நாம் கூறுகிறோம். எவ்வளவு வசதியிருந்தாலும் செல்வந்தர்கள் எந்த விருந்தும் கொடுப்பதே கூடாது என்பது நமது நிலைப்பாடல்ல.

மாறாக செல்வந்தராக இருந்தாலும் திருமண விருந்தில் எளிமையைக் கடைப்பிடித்து நபிவழியில் மிகச் சிறந்த முறையை சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதே நம்முடைய ஆவல்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமண விருந்து

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிகப் பெரிய அளவில் திருமண விருந்து அளிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது நடந்த சம்பவங்களை நாம் தெளிவாக அறிந்து கொண்டால் அவர்களின் கருத்திற்கு அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது இரண்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

1. நபியவர்கள் வலீமா விருந்தாக ஒரு ஆட்டை அறுத்து, அத்துடன் ரொட்டியையும் அளித்தார்கள்.

2. உம்மு சுலைம் அவர்கள் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய "ஹைஸ்'' என்ற பலகாரத்தின் மூலம் நபியவர்கள் செய்த அற்புதம்.

உம்மு சுலைம் நபியவர்களுக்காக மட்டும் சிறிதளவு அன்பளிப்பாக வழங்கிய "ஹைஸ்'' என்ற பலகாரத்தில் இறைவனுடைய ஆற்றலினால் நபியவர்கள் நிகழ்த்திய அற்புதத்தில் தான் நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் உணவருந்திருனார்கள். இது வலீமா விருந்து அல்ல. நபியவர்கள் கொடுத்த வலீமா விருந்து மிகவும் எளிமையாகத் தான் நடைபெற்றது.

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிக எளிமையாகத் தான் வலீமா விருந்த வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

அதே நேரத்தில் நபியவர்கள், ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த நாளன்று மற்றொரு அற்புதம் நடக்கிறது. அதில் தான் முன்னூறுக்கும் அதிகமான ஸஹாபாக்கள் விருந்து சாப்பிட்டார்கள். அதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை) மணமுடித்து, தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் "ஹைஸ்' எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, "அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார்.

அவர் உங்களுக்கு சலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் (முடிந்த) சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல்'' என்றார்கள். அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்று, "என் தாயார் உங்களுக்கு சலாம் கூறுகிறார்.

அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார்'' என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (ஓரிடத்தில்) வை'' என்று கூறிவிட்டு, "நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!'' என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள்.

அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும், நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன். -இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு, "ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்'' என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.- (தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு'' என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும்'' என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர். ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர்.

அப்போது, "அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்கு'' என்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்த நேரத்தில் அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கிய நேரத்தில் அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.

நூல் முஸ்லிம் (2803)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் "ஹைஸ்' எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள். (அவ்வாறே நான் கொண்டுசென்று கொடுத்தேன்.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று, நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா)'' என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள். நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.

நூல்: முஸ்லிம் (2804)

நூற்றுக்கணக்கான ஸஹாபாக்கள் சாப்பிட்டது வலீமா விருந்தில் அல்ல. மாறாக நபியவர்கள் "ஹைஸ்'' என்ற பலகாரத்தின் மூலம் நிகழ்த்திய அற்புதத்தில் தான். "ஹைஸ்'' என்பது கெட்டியான பால், பேரீத்தம் பழம் மற்றும் நெய் மூலம் தயாரிக்கப்படும் உணவாகும்.

பல அறிவிப்புகளில் வலீமா விருந்து சம்பவமும், ஹைஸ் என்ற அற்புத உணவு விருந்து சம்பவமும் கலந்து வந்துள்ளதால் அதிகமானவர்கள் கலந்து கொண்டது வலீமா விருந்து தான் என்ற குழப்பம் ஏற்பட்டதற்கு காரணமாகும்.

நாம் இரண்டு நிகழ்வுகளையும் பிரித்து விளங்கிக் கொண்டால் எவ்வித குழப்பமும் இல்லை. நபியவர்கள் அற்புதம் அல்லாத முறைகளில் இருந்து நமக்கு மார்க்கமாக வழிகாட்டியவை தான் நமக்கு முன்மாதிரியாகும். அது போன்று நபியவர்களுக்கு மட்டும் இறைவன் பிரத்யேகமாக வழங்கிய சட்டங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

நபியவர்கள் அற்புதங்களாகச் செய்தவை மக்கள் தம்முடைய இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காகத் தானே தவிர அதிலிருந்து நடைமுறை வாழ்க்க்கைக்குச் சட்டம் எடுப்பது கூடாது.

ஒரு வாதத்திற்கு அப்படி எடுக்கலாம் என்றால் நபியவர்கள் எப்படி ஒரு சிறிய அளவு உணவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவளித்தார்களோ அது போன்று நாமும் சிறிய அளவிலிருந்து உணவளிக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்வது சாத்தியமா? நான் அற்புதத்தின் போது இருந்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொள்வேன்.

உணவின் அளவை கவனத்தில் கொள்ளமாட்டேன் என்பது மடமைத்தனம் ஆகும். அற்புதம் என்பது இறைவனின் உதவியால் செய்வதாகும். அதில் இறைத்தூதர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.

(அல்குர்ஆன் 13:38)

எனவே 300 பேருக்கு நபியவர்கள் உணவளித்தது இறைக்கட்டளைப்படி நபியவர்கள் செய்ததாகும். அல்லாஹ் இலட்சம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று அந்த அற்புதத்தின் போது கட்டளையிட்டிருந்தால் நபியவர்கள் இலட்சம் பேருக்கு அளித்திருப்பார்கள். நபியவர்கள் செய்த அற்புதங்களில் நாம் பின்பற்றுவதற்குரிய முன்மாதிரியை எடுப்பது கூடாது. அற்புதம் என்பது அதைக் காணும் மக்கள் நம்பிக்கை கொள்வதற்காகத் தான்.

அற்புதங்களிலிருந்து பின்பற்றுவதற்குரிய சட்டங்களை எடுத்தால்... ஒரு கோப்பை பாலில் 70 பேருக்குப் புகட்ட வேண்டும். இது நம்மால் சாத்தியமா? விரலிலிருந்து தண்ணீரை ஓடச் செய்து நூற்றுக்கணக்கானவர்கள் உளூச் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா? இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே நபியவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்து வைத்தது தான் வலீமா விருந்தாகும். அதில் தான் நமக்கு முன்மாதிரி உள்ளது. எனவே நபியவர்கள் காட்டித் தந்த முறைப்படி நமது திருமணங்களையும், திருமண விருந்தையும் அமைத்துக் கொள்வோமாக! அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!

மனோ இச்சைகளை மார்க்கமாக்குவதிலிருந்தும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

நன்றி : ஆன்லைன் பீஜே கேள்வி பதில்

மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்


'வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:27)

தற்போது உலகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பல இடங்களில் புயல் காற்று, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, புவி அதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்றவையும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுவதுடன், வீடு வாசல்களையும் இழந்து தவிக்கிறார்கள்.

இப்படியான நேரத்தில் சிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் இறைவனை நிந்திப்பதையும், வாயார வசைபாடுவதையும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம்.

ஆனால் இப்படியான நேரங்களிலெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக சொல்லித் தந்துள்ளது. மார்க்கம் காட்டிய அடிப்படையில் நாம் நடக்கும் போது மழை காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவதுடன் மார்க்கத்தின் கட்டளைகளையும் பின்பற்றிய நன்மையை பெற்றுக் கொள்ள முடியும்.

இரண்டு நேரத் தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.

மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்திலும், மஃரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்திலும் தொழ முடியும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.

வகீஉ என்பவரின் அறிவிப்பில்இ நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் 'தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல் : முஸ்லிம் (1272)

லுஹரையும், அஸரையும் சேர்த்து ஒரு நேரத்திலும், மஃரிபையும், இஷாவையும் சேர்த்து ஒரு நேரத்திலும் நபியவர்கள் தொழுததாக குறிப்பிடும் மேற்கண்ட செய்தியில். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அச்சமோ மழையோ இருக்கவில்லை என்பதிலிருந்து அச்சம் அல்லது மழை இருந்தால் மாத்திரம் தான் நபியவர்கள் சேர்த்துத் தொழுவார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

மதீனாவில் இப்படி செய்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் பயணிகளாக இல்லா விட்டாலும் ஜம்மு செய்து தொழலாம் என்பதை இதில் இருந்து அறியலாம்.

கடமையான தொழுகைகளை வீட்டிலும் தொழுது கொள்ள முடியும்

மழை பெய்யும் நேரத்தில் கடமையான தொழுகைகளைப் பள்ளிக்கு வந்து நிறைவேற்றாமல் வீட்டிலேயே தொழுது கொள்வதற்கும் மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு 'ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்' (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், '(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் 'ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்' என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்' என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : புகாரி (666)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் தான் மக்கள் கூட்டாகத் தொழுது வந்தனர். தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே சாதாரண நேரங்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மழை நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்றால் கடமையான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டியதில்லை என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.

எனவே மழைநேரத்தில் வீடுகளில் கடமையான தொழுகைகளைத் தனியாகவும் தொழுது கொள்ளலாம். வீட்டில் உள்ள நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவும் நிறைவேற்றலாம். என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இழப்புகள் ஏற்படும் போது என்ன செய்வது?

மழையின் காரணமாக வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு அழிவுகள், இழப்புகள் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் நாம் படைத்த இறைவனை மறந்து அவனுடைய வழிகாட்டல்களுக்கு மாற்றமாக நடக்கக் கூடாது. மாறாக இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீஜகுஸ முஸீப(டீஸ(த்)தி வ அக்லிப்ஜகுஸ லீ கைரன் மின்ஹா.

இதன் பொருள் :

நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.

(ஆதாரம்: முஸ்லிம் 1525)

மழை பொழியும் போது என்ன செய்வது?

மழை பெய்யும் போது ஓதுவதற்குறிய ஒரு துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள் அந்த துஆவை ஓதும் போது நாம் மழையின் மூலமாகவும் மறுமையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிப(B) ன் நாபி(F) அன்

இதன் பொருள் :

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

(ஆதாரம்: புகாரி 1032)

அளவுக்கு மேல் மழை பெய்தால்

சாதாரனமான வழமையான முறையில் மழை பெய்தால் மேற்கண்ட துஆவை ஓதும் படி கற்றுத் தந்த நபியவர்கள் அளவுக்கு மேல் மழை பெய்யும் போது ஓதுவதற்கு இன்னொரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள். அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கீழுள்ள துஆவை ஓத வேண்டும்.

اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا


அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா

என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!

(ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)

அல்லது

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B)லி வல் ஆஜாமி வள்ளிராபி(B) வல் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி

இதன் பொருள் :

இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.

(ஆதாரம்: புகாரி 1013, 1016)

அல்லது

اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ


அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(டீஸலி வல் ஆகாமி வபு(B)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி

(ஆதாரம்: புகாரி 1017)

புயல் வீசும் போது என்ன செய்வது?

தற்போதுள்ள சூல்நிலையில் கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயலின் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலைகள் ஏற்படும் போது நாம் ஓத வேண்டிய துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். இந்த துஆவை நாம் ஓதுவதின் மூலம் புயலினால் நமக்கு ஏற்படவிருக்கும் தீங்கை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ


அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(F)ஹா வகைர மா உர்ஸிலத் பி(B)ஹி. வஅவூது பி(B)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(F)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B)ஹி

இதன் பொருள் :

இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(ஆதாரம்: முஸ்லிம் 1496)

மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் செய்வதின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

Sunday, October 19, 2014

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?

அப்துர் ரஹ்மான், சையது அபுதாஹிர் மற்றும் பலர்...

ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகக் கருத்து சொல்பவர்களும், ஆதரவாகக் கருத்து சொல்பவர்களும் எல்லை மீறி உண்மைகளை மறைத்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

உடனடியாக கருத்து சொன்னால், இரண்டில் ஒரு கருத்துடையவர்களின் பட்டியலில் நம்மையும் சேர்த்து விடுவார்கள்.

அவரவர் தமக்கு சாதகமான கருத்தை மட்டும் எடுத்துக் காட்டி தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு என்று சிலரும், எதிர்ப்பு என்று சிலரும் திசைதிருப்பி விடுவார்கள்.

இப்போது அனைவரும் நிதானத் துக்கு வந்துள்ள நிலையில் நம் கருத்து உரிய முறையில் புரிந்து கொள்ளப்படலாம் என்று கருது கிறோம்.

ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதில் எந்தப் பழிவாங்குதலும் இல்லை என்பதுதான் உண்மை.

1991களில் ஜெயலலிதா முதல் வராக இருந்தபோது மக்களால் வெறுக்கப்படும் வகையில் ஆட்சி நடத்தினார். இதன் காரணமாகவே அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு படுதோல்வியைப் பரிசளித்தனர்.

சுதாகரன் என்பவரை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொண்டு, அவருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்ததும், அந்தத் திருமணத்தை அந்தக் கால மகாராஜாக்களை மிஞ்சும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் படு ஆடம்பரமாக நடத்தியதும், கடந்த திமுக ஆட்சியில் மற்றவர்களின் சொத்துக்களை எப்படி அபகரித்தார்களோ, அதுபோல் பல சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதையும் யாரும் மறுக்க முடியாது. அந்தக் கால கட்டத்தில் செய்த ஊழலுக்காகத்தான் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

அவர்மீது மக்கள் அதிக வெறுப்பு கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், இந்தத் தீர்ப்பு வந்திருந்தால் மக்கள் நிச்சயம் அதைக் கொண்டாடி இருப்பார்கள்.

ஒரு சம்பவம் நடக்கும்போது மக்களுக்கு இருந்த உணர்வு காலப்போக்கில் மாறிவிடும்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் அவர் கொல்லப்பட்டு ஓரிரு வருடங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு இருந்தால் அதற்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு இருந்திருக்கும். அதைக் கண்டித்து யாரும் வாய் திறக்க முடியாத அளவுக்கு கொலையாளிகள் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது. ஆனால் தாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் அந்த நிலை மாறிவிட்டது.

நமது நாட்டில் குற்றம் நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு அளிக்கப்படுவது சாதாரணமாகி விட்டது. இதனால் அந்தத் தீர்ப்பு நீதியானது அல்ல என்று மக்கள் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அந்த வகையில்தான் ஜெயலலி தாவுக்கு எதிரான தீர்ப்பும் மக்களால் பார்க்கப்படுகிறது. பெரிய கொள்ளைக்காரர்கள் எல்லாம் வெளியே இருக்கும்போது ஜெயலலிதாவை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம் என்பதுதான் அதிகமான மக்களின் கருத்தாக மாறியுள்ளது. இதற்கு தீர்ப்பை தாமதப்படுத்தும் நீதிமன்ற நடைமுறைதான் காரணம்.

1991 களில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாதம் ஒரு ரூபாய்தான் சம்பளமாக எடுத்துக் கொண்டார். அவர் முதல்வராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் வாங்கிய சம்பளம் வெறும் 60 ரூபாய்கள்தான். ஆனால் அவர்மீது திமுக ஆட்சிக்கு வந்து தொடுத்த வழக்கில் அவருக்கு 66 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதற்கான ஆதாரங்களைத் திரட்டி வழக்கை நடத்தியது.

66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கு ஜெயலலிதாவால் நீதி மன்றத்தில் தக்க பதில் சொல்ல முடியவில்லை. இதற்காகவே அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

கொலைஇ கொள்ளை போன்ற வழக்குகள் சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படும். சாட்சிகள் விலை பேசப்பட்டால், அல்லது மிரட்டப் பட்டால் சாட்சிகள் பல்டி அடித்து விடுவார்கள். இதனால் குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பி விடுவார்கள்.

ஆனால் சொத்து சேர்த்தல் வழக்குக்கு சாட்சிகளைவிட ஆவணங்கள்தான் முக்கியமானவை. சாட்சிகள் துணை ஆதாரங்களாகத் தான் நிறுத்தப்படுவார்கள்.

ஜெயலலிதா பெயரில் பல சொத்துக்கள் வாங்கிஇ சட்டப்படி அது பதிவும் செய்யப்பட்டு இருக்கும் போது அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும்.

அதுபோல் அவர் பெயரில் உள்ள 66 கோடி சொத்துக்களுக்கு வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டிய ஆதாரங்களை அவர் காட்ட வேண்டும். இதுபோல் தன் மீது வழக்கு தொடரப்படும் என்று அவர் நினைத்துப் பார்க்காததால் அதற்காக வரி கட்டவில்லை. எனவே அந்த ஆதாரங்களை அவரால் காட்ட முடியவில்லை.

இப்படி ஆவணங்கள் சான்றாக நிற்கும் வழக்குகளில் முடிவு இப்படித்தான் இருக்கும்.

நாட்டை ஆண்ட காங்கிரசுக்கு மிக நெருக்கமாக இருந்தும் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டார். சிறையில் அடைக் கப்பட்டார்.

மத்திய அரசையே ஆட்டிப்படைத்த திமுக தலைவரின் மகள் கனிமொழியும், மத்திய அமைச்சராக இருந்த ராஜாவும் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் ஊழல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பு அளிக்காமல் விசாரணைக் கைதிகளாக அவர்கள் அடைக்கப்பட்டதை திமுகவால் தடுக்க முடியவில்லை. உடனடியாக ஜாமீனில் கூட கொண்டு வரமுடியவில்லை.

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கெல்லாம் காரணம் இவர் களுக்கு எதிராக ஆவணங்கள் இருந்தன என்பதுதான்.

இந்த வகையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு சட்டப் படியானதுதான்.

ஆனால் இன்னொரு வகையில் பார்த்தால் இந்தத் தீர்ப்பு அநியாயமானது.

ஜெயலலிதா ஊழல் செய்த போது அந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை சட்டத்தில் இருந்ததோ அதன்படிதான் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்கள் உடனடியாக எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளை இழப்பார்கள் என்பதும், அமைச்சர் பதவியை இழப்பார்கள் என்பதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப் பட்ட சட்டமாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த குற்றத்துக்குத் தண்டனை விதிப்பது நீதிக்கு எதிரானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் முன்னர் நடந்த குற்றங்களுக்கு இப்போது உள்ள சட்டப்படி யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று பிரகடனம் செய்தார்கள்.

இதுதான் சரியான நீதியாகும்.

ஆனால் நம்முடைய நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கும், சட்டம் இயற்றுவோருக்கும் இந்த நியாயம் புரியவில்லை.

எதையும் முன் தேதியிட்டு நடை முறைப்படுத்தும் அநியாயத்தை சாதார ணமாகச் சட்டமாக்கி விடுகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊழலுக்கு அபராதம்தான் தண்டனையாக விதிக்கப்பட்டது. பதவி பறிப்போ தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தண்டனையோ அப்போது இருக்கவில்லை.

அப்படி ஒரு சட்டம் 1990களில் இருந்திருந்தால் ஜெயலலிதா இந்த அளவுக்கு வெளிப்படையாக, தக்க ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்திருக்க மாட்டார். அவர் மீது வழக்கும் வந்திருக்காது.

இந்தியாவில் திருடினால் தலையை வெட்டுவதாக இப்போது ஒரு சட்டம் இயற்றினால் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகுதான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டுக்கு இத்தண்டனையை அளிப்பது சரியான நீதி இல்லை.

தலை வெட்டப்படும் என்ற சட்டம் அப்போதே இருந்திருந்தால் அவன் திருடாமலே இருந்திருப்பான். ஆறுமாதம் ஜெயிலில் சோறு போடுவார்கள் என்ற சட்டம் காரணமாகவே அவன் திருடினான்.

முன் தேதியிட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அநியாயத்தை அநியாயம் என்று உணராத நாட்டில் இதுபோல்தான் தீர்ப்புகள் அளிக்கப்படும்.

முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குகளின்போது மட்டும் இவர்களுக்கு இந்த நியாயம் சரியாகப் புரிகின்றது.

உதாரணமாக தடா, பொடா சட்டங்கள் இந்த நாட்டில் இருந்த போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இந்தப் பிரிவுகளின் கீழ் முஸ்லிம்கள் பலர் மீது வழக்கு போடப்பட்டது.

பின்னர் இந்தக் கருப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டன. இந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும், மேற்கண்ட சட்டங்கள் அமுலில் இருந்தபோது இந்த வழக்குகள் போடப்பட்டதால் அவை தடா, பொடா சட்டங்களின்படியே விசாரிக்கப்படும் என்று நீதிமன்றங்கள் கூறிவிட்டன.

சட்டம் இயற்றப்பட்ட தேதிக்கு முன்னர் நடந்தவை புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படாது என்று இதற்கு நியாயம் கற்பித்தனர். அதே பார்வை தான் எல்லா சட்டங்களுக்கும் இருக்க வேண்டும். அனேகமாக முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் இவர்களே ஒப்புக் கொண்ட நியாயத்தை வழங்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்கிறோம்.

இவ்வளவு தாமதமாக தீர்ப்பு அளிக்கலாமா என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்த அநியாயத்தைச் சுட்டிக்காட்டினால் இந்த வழக்கு தாமதமானதற்கு ஜெயலலிதாதான் காரணம் என்று சிலர் பதிலளிக்கின்றனர்.

யார்மீது வழக்கு போட்டாலும் தீர்ப்பு அவர்களுக்குப் பாதகமாக வரும் என்று தெரிந்தால் எப்படியாவது இழுத்தடித்து தீர்ப்பை தள்ளிப்போட முயற்சிப்பது இயல்பானதுதான். யாராக இருந்தாலும் இப்படித்தான் இருப்பார்கள்.

அவர் தள்ளிப்போடுவதற்காக சட்டப்படியான முயற்சிகளைத்தான் செய்தார். சட்டம் சரியில்லாததால் தான் அவரால் இழுத்தடிக்க முடிந்தது. அவர் இழுத்தடிக்கக் கூடாது. நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் என்று நீதிபதியால் உத்தரவிட முடியாத அளவுக்கு சட்டம் பலவீனமாக உள்ளது.

காலண்டரைப் பார்த்து விட்டு எந்த ஊரிலாவது கருப்பனசாமி கோவில் திருவிழா என்று போடப்பட்டு இருந்தால், அந்த விழாவிற்க்கு என் கட்சிக்காரர் செல்ல வேண்டும் எனக் கூறி வழக்கறிஞர்களால் வாய்தா வாங்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு எந்தக் காரணமும் சொல்லக் கூடாது என்று சட்டம் இயற்ற வக்கில்லாமல் இருக்கும்போது அதை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் பயன்படுத்தவே செய்வார்கள்.

தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க, அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி கருணாநிதி நீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் முட்டாள்களாக ஆக்கவில்லையா? அதுபோல்தான் இதுவும்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக கருத்து சொல்வோர் இலட்சக்கணக்கில் ஊழல் செய்த கருணாநிதி குடும்பத்தை வெளியில் விட்டு விட்டு ஜெயலலிதாவை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்? என்று கேட்கின்றனர்.

கருணாநிதி, ஜெயலலிதாவை விட பன்மடங்கு ஊழல் செய்தவர் என்பது நாட்டில் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

எம்ஜிஆரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரமும் கருணாநிதி செய்த ஊழல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டி பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்துக்கு கொண்டு சென்று சர்க்காரியா கமிஷன் அமைக்க வைத்தனர்.

கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று சர்க்காரியா அறிக்கை கொடுத்த பிறகு இந்திரா காந்தியின் காங்கிரசுக்கு அதிக சீட்களைக் கொடுத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக் கூறி காலில் விழுந்து, சட்ட நடவடிக்கையில் இருந்து கருணாநிதி தன்னைக் காத்துக் கொண்டார்.

மேலும் எந்த வழக்காக இருந்தாலும் அவர் தன்னைக் காத்துக் கொள்ள எல்லாவிதமான இழிநிலைக்கும் சென்று தன்னைக் காத்துக் கொள்வார்.

எனவே சட்டப்படி கருணாநிதி ஊழலுக்காகத் தண்டிக்கப்படவில்லை. எனவே சட்டப்படி தண்டிக்கப்பட்ட வழக்கை, தண்டிக்கப்படாத வழக்குடன் இணைத்துப் பேச முடியாது.

2ஜி வழக்கில்தான் கருணாநிதி குடும்பத்தில் பலர் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அது தீர்ப்பு வந்த பின்னர்தான் உறுதியாகத் தெரியும்.

இப்போது ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சரியான முறையில் கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து வழக்கு நடத்தி இருந்தால் தனக்கு வழங்கப்பட்ட இது போன்ற தீர்ப்பை கருணாநிதிக்கும் பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால் அவர் யாருடைய யோசனையையும் கேட்பதில்லை.

அதிமுகவினர் இந்தத் தீர்ப் புக்கு எதிராக கடையடைப்பு வன் முறைகளில் இறங்குவதை ஏற்க முடியாது. பாபர் மஸ்ஜித் வழக்கில் மூன்று கிறுக்கன்கள் நீதிபதிகளாக அமர்ந்து நீதியைக் குழி தோண்டிப் புதைத்தது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் இந்தத் தீர்ப்பு அளித்து இருந்தால் அவர்களின் கண்டனத்தில் நியாயம் இருக்கும். இப்போது இதைக் கண்டிப்பதில் நியாயம் இல்லை. அவர்கள் சட்டப்படி இதற்கு எதிராகப் போராடலாம்.

தீர்ப்பு சட்டப்படியானது என்றாலும் ஜெயலலிதாமீது அனுதாபம் அதிகமாக உள்ளதை மறுக்க முடியாது. அதிமுகவினர் பொதுமக்களுக்கு அளிக் கும் இடையூறுகள் எதிர் விளைவை ஏற்படுத்தி விடும்.

நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு சட்டப்படியானது என்றாலும் அவரது தீர்ப்பில் சந்தேகம் கொள்ள சில அம்சங்கள் உள்ளதை நாம் சுட்டிக் காட்டியாக வேண்டும்.

சஹாரா குழுமத்தின் நிறுவனர், மக்களிடம் நிதி திரட்டி மோசடி செய்துள்ளார் என்ற வழக்கில்இ அவரைக் கைது செய்தனர். ஆனால் மக்களிடம் நிதியைத் திருப்பித் தர வசதியாக, அவரது லண்டன் சொத்துக்களை சிறையில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விற்க நீதிமன்றம் அனுமதித்தது.

வீடியோ கான்பரன்ஸி வசதிகள் செய்யப்பட்டு புருனை சுல்தானுக்கு லண்டன் அரண்மனை, விலை பேசப்பட்டது. மக்களின் பணத்தைத் திருப்பித்தர இதை விட்டால் வழி இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜெயலலிதா அவர்கள் சாதாரண குடிமகள் அல்ல. அவர் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்ற மாநில முதல்வர் ஆவார். அவரது பதவியைப் பறித்தால் மிகப்பெரும் மாநில நிர்வாகத்தில் வெற்றிடம் ஏற்படும். சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும். அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படும்வரை யாருடைய உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற குழப்பம் வரும் என்ற பொது அறிவு நீதிபதி குன்ஹாவுக்கு இல்லை என்றுதான் தெரிகிறது.

பொது அறிவுள்ள நீதிபதி என்றால் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஜெயலலிதா அவர்கள் குற்றவாளி என்ற தீர்ப்பை மட்டும் அளித்து விட்டு அவர் மாற்று அரசுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் அளித்து பின்னர் தண்டனையை அறிவித்து இருக்கலாம்.

அல்லது உடனே சிறையில் அடைப்பது என்றால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் அமைச்சர்களுடன் உரையாட சிறையில் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு இருந்தால் நிர்வாக வெற்றிடம் ஏற்பட்டு இருக்காது. சட்டம் ஒழுங்குப் பிரச்சனையும் வந்திருக்காது.

சஹாரா குழுமத்தின் நிதிப் பிரச்சனையைவிட ஒரு மாநில நிர்வாகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் ஒரு நீதிபதிக்குத் தெரியவில்லை. ஜெயலலிதா அவர்கள் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு முடிவும் எடுக்க மாட்டார்கள் எடுக்க முடியாது என்பது உலகத்துக்கே தெரியும். இந்த பொது அறிவு கூடவா ஒரு நீதிபதிக்கு இல்லாமல் போய்விட்டது?

முதல்வர் பதவி காலியானால் மாற்று ஏற்பாடு செய்யும்வரை கவர்னரின் நிர்வாகத்தில் மாநிலம் இயங்கும் என்றாவது அவர் சொல்லி இருக்கலாம்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்று வரும் போது நீதிமன்றங்கள் அடங்கிப் போயுள்ளன. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து பல உதாரணங்கள் உள்ளன. காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சொல்லியும் அதற்குக் கட்டுப்பட மறுக்கும் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதுதான் காரணம்.

அந்தக் காராணம் தமிழக நிர்வாகத்துக்கு ஏன் பொருந்தவில்லை என்ற கேள்விக்கும் பதில் இல்லை

இன்னொரு முக்கியமான விஷயத் தையும் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

தீர்ப்பு இப்படித்தான் வரும் என்பதை ஜெயலலிதா அவர்கள் முன்னரே அறிந்து கொள்ளவில்லை என்று ஊகிக்க முடிகின்றது. அதனால் தான் அவர் மாற்று ஏற்பாடு குறித்து முன்னரே முடிவு எடுக்கவில்லை.

ஜோசியக்காரன் சொன்னதை வைத்து தீர்ப்பு சாதகமாக வரும் என்று நினைத்தாரா?

வழக்கறிஞர்கள் நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார்களா?

உளவுத்துறை இதை உணரத் தவறிவிட்டதா?

எதுவாக இருந்தாலும் ஜெயலலிதா அவர்கள் தகுதியானவர்களிடம் யோசனை கேட்பதில்லை என்பது தான் அடிப்படைக் காரணம். இதை ஜெயலலிதா எதிர்காலத்திலாவது மாற்றிக் கொள்ள வேண்டும்
 
நன்றி : உணர்வு கேள்வி பதில்

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-6) - ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-6) - ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?

திருக்குர்ஆன் 2:107

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 3:189

'நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர்.'(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள், பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

திருக்குர்ஆன் 5:18

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:40

வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:120

'மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்'என்று (முஹம்மதே!) கூறுவீராக! 

திருக்குர்ஆன் 7:158

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பொறுப்பாளனோ, உதவுபவனோ இல்லை.

திருக்குர்ஆன் 9:116

'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக! 'ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?' எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள்.'அஞ்ச மாட்டீர்களா?' என்று கேட்பீராக! 'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)' என்று கேட்பீராக!'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?' என்று கேட்பீராக! 

திருக்குர்ஆன் 23:84-89

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

திருக்குர்ஆன் 24:42

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்;உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:13,14

மிகைத்தவனும், வள்ளலுமாகிய உமது இறைவனது அருட்கொடையின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா?அல்லது வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அவர்களுக்கு உள்ளதா?...

திருக்குர்ஆன் 38:9,10

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

திருக்குர்ஆன் 39:6

'பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 39:44

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.

திருக்குர்ஆன் 42:49

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் அதிகாரத்துக்குரியவன் பாக்கியம் பொருந்தியவன். (உலகம் அழியும்) அந்த நேரம் பற்றிய அறிவு அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 43:85

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 48:14

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். அனைத்துப் பொருட்கள் மீதும் அவன் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 57:2

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. காரியங்கள் (யாவும்) அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

திருக்குர்ஆன் 57:5

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. அவனுக்கே புகழ் உரியது. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 64:1

எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 67:1

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.

திருக்குர்ஆன் 85:9

பின்னர் அவர்களது உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவார்கள். கவனத்தில் கொள்க! அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவன் விரைவாகக் கணக்கெடுப்பவன்.

திருக்குர்ஆன் 6:62

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இவ்வுலகிலும், மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 28:70

'அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்'என்பதே இதற்குக் காரணம். உயர்ந்தவனும், பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே அதிகாரம். 

திருக்குர்ஆன் 40:12

'நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்' என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:57

'அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.'

திருக்குர்ஆன் 12:40

'என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்' என்றார். 

திருக்குர்ஆன் 12:67

'அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 18:26

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 28:88

முத்துப்பேட்டையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்! - பிஜேபி மாநில செயலாளர் கருப்பு முருகானந்ததிற்கு அழைப்பு !

கருப்பு முருகானந்தம் இல்லம் உட்பட வீடு வீடாக சென்று மாற்று மத சகோதரர்களுக்கு அழைப்பு!

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பிறமத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கொய்யா மஹாலில் நாளை 19-10-2014 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்கான அழைப்புபணி இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது மங்களூர் செம்படவன்காடு ஜாம்புவானோடை. கல்லடிகொல்லை போன்ற முத்துப்பேட்டையை சுற்றியுள்ள. கிராமங்களில் வீடுவீடாக பத்திரிக்கை. கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது

நாம் பத்திரிக்கை கொடுத்து இந்த நிகழ்ச்சியை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் சொல்லிவிட்டு அழைப்பு பணி செய்யும்போது

பிறமத மக்கள் நம்மிடம் காட்டிய மரியாதையும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட விதமும் நெகிழவைத்து விட்டது.

வீட்டுக்கு வந்த நீங்கள் சாப்பிட்டு விட்டுதான் போகனும் என்று கூறியதும் டீ யாவது குடியுங்கள் என வற்புறுத்தியது

மழை கடுமையாக பெய்கிரதே குடையாவது தரட்டுமா என் அக்கரையோடு விசாரித்தது நீங்கள் நேரடியாக வீடுதேடி வந்து அழைத்துள்ளீர்கள். அவசியம் வருகிறோம் என கூறியது போன்ற சம்பவங்கள் நமக்கு புதுமையாக இருந்தது

தாவாவை இன்னும் வீரியமாக செய்தால் மிக எளிதாக பிறமத மக்களை வென்றடுக்கலாம் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது

இதில் முக்கியமாக ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை பகுதியில் வீடு வீடாக பத்திரிக்கை கொடுத்து அழைப்பு செய்தபோது

பிஜெபி பொதுசெயளாலர் கருப்பு என பட்டம் சூட்டிகொண்ட முருகானந்தம். வீட்டிற்கு சென்றோம்

அவரின் அரசாங்க பாதுகாவலர் துப்பாக்கியோடு நம்மை எதிர்கொண்டார் நாம் எதற்காக வந்துள்ளோம் என்பதை சொன்னதும் காத்திருக்க சொன்னார்

தகவல் போனதும் உடனே வெளிவந்த முருகானந்தம் நம்மை வரவேற்றார் நாம் நடத்தும் நிகழ்ச்சியை பற்றி விளக்கிசொல்லிவிட்டு இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேள்வியாக கேளுங்கள் என அழைத்தோம்.

அவசியம் வருவதாக உறுதியளித்தார் தேனீர் அருந்திவிட்டு செல்லும்படி கூறினார் அதை இதமாக மறுத்துவிட்டு திரும்பினோம்.

இந்த இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் நிகழ்ச்சிக்கான அழைப்புபணி வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் என்று சொல்லலாம் இந்த நிகழ்ச்சி வெற்றிபெற நீங்களும் துவா செய்யுங்கள்.

தகவல்: முத்துபேட்டை அன்சாரி


இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 38) - இடை மறித்து பொருளை வாங்குதல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 38) - இடை மறித்து பொருளை வாங்குதல்



இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.

Sunday, October 12, 2014

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 10.10.14(வீடியோ)

ஜும்ஆ உரை : சகோதரர் அப்துல்லாஹ் MISC

தலைப்பு : அல்லாஹ்வின் அருட்கொடை


அரஃபா நோன்பு பிறை ஒன்பதிலா? அல்லது ஹாஜிகள் கூடும் நாளிலா?

மாதத்தின் ஆரம்பத்தையும் இறுதியையும் பிறை தென்படுவதை வைத்தே தீர்மானிக்க வேண்டும் என மார்கம் நமக்குக் கட்டளையிடுகின்றது. பிறை பார்த்து மாதத்தை முடிவெடுக்க வேண்டும் என்பதை பொதுவாக பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். ரமழான், ஷவ்வால், துல்கஃதா போன்ற எந்த மாதமாக இருந்தாலும் பிறை அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படுகின்றது.

ஆனால் துல்ஹஜ் மாதம் மாத்திரம் அரபா நோன்பை வைத்து அதாவது ஸவுதியில் பிறை பார்க்கப்பட்ட அடிப்படையில் ஹாஜிகள் எப்போது அரபா திடலில் ஒன்று சேர்வார்களோ அத்தினத்தில் ஹஜ்ஜுக்கு செல்லாத முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றார்கள்.

இந்தக் கருத்துடையோர் தங்களை சர்வதேசப் பிறைவாதிகளாக அடையாளம் காட்டிக் கொள்கின்றார்கள்.

உண்மையில் சிந்தித்துப் பார்த்தால் ரமழானை தீர்மானிக்கும் போது எந்த நாட்டில் பிறை தென்பட்டாலும் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லும் சர்வதேசப் பிறைவாதிகள் துல்ஹஜ் பிறை விஷயத்தில் சவுதிப் பிறையை மாத்திரம் தான் ஏற்றுக் கொள்கின்றார்கள். மொத்தத்தில் இவர்கள் பின்பற்றுவது சர்வதேசப் பிறையல்ல சவுதிப் பிறை என்பதை நாம் ஆரம்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள்.

சுபுஹ் தொழுத பின் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மக்ரிப் வரை தங்கிவிட்டு மக்ரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள்.

இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது. ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?' என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும் வரை இவ்வாறு பல முறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிறகு 'அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் '(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்' அல்லது 'அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், 'இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்க, 'இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், 'ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்' என்று விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், 'ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்' என்று கூறினார்கள். பிறகு, 'மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி)

நூல்: முஸ்லிம் (2151)

தலைப் பிறையைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வாசகங்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் இருக்கும் போதுஇ அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் அவற்றை அணுகாமல் அரஃபா நோன்பிலிருந்து தலைப் பிறையைத் தீர்மானிப்பதைச் சிலர் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்கள்.

சவூதியின் பிறைக் கணக்குப்படி 9 ஆம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிறை 9 ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம். இது எப்படி அரஃபா நோன்பாகும்? எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள்; சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம்.

அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஹாஜிகள் அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத், ஆனால் சர்வதேசப் பிறைவாதிகளின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது.

ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள்.

அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா?

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும்.

அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும். மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள்.

அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.

நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா? ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது.

அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

மாதத்தை அடைதல்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோஇ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

(திருக்குர்ஆன் : 2:185)

பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது.

திருக்குர்ஆன் ஏக இறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது; இருக்கவும் முடியாது. தேவையில்லாத ஒரு எழுத்துக் கூட அதில் இடம் பெறாது என்பதிலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அழுத்தமான நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையை மனதில் இருத்தி இந்த வசனத்தை ஆராய்வோம். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே கிடைத்து விடும். அப்படியானால் இந்தச் சொற்றொடரின் பயன் என்ன? நடைமுறை வழக்கத்தில் இது போன்ற வார்த்தைகளை யாருமே பயன்படுத்துவதில்லை.

ஃபமன் ஷஹித மின்கும் அல் ஷஹ்ர – உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ

ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன்.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தில் இறைவன் கூறவரும் செய்தி என்ன என்பதை இப்போது ஆராய்வோம்.

இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது. அதையே எடுத்துக் கொள்வோம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.

(திருக்குர்ஆன் : 2:184)

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளியல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது.

எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது.

இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும்.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள முடியும்.

நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும்.

ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும்.

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ ((திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும்.

இந்த நடையில் இன்னும் பல வசனங்களைக் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணலாம். மனிதர்களின் பேச்சு வழக்கிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் காணலாம்.

உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று மனிதர்களிடம் கூறலாம். ஆனால் மலக்குகளைப் பார்த்து உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று கூற முடியாது அவ்வாறு கூறினால் மலக்குகளில் பொய் சொல்பவர்களும் பொய் சொல்லாதவர்களும் உள்ளனர் என்ற கருத்து வந்து விடும்.

இந்த அடிப்படையில் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தையும் ஆராய வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தில் தேவையில்லாத ஒரு வார்த்தை கூட இருக்காது என்பதை நெஞ்சிலிருத்தி ஆராய வேண்டும்.

அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எல்லோருமே அடைந்திருக்கும் போது உங்களில் யார் அடைகிறாரோ எனக் கூறுவது வீணான வார்த்தைப் பிரயோகமாக அமைந்து விடும்.

மரணித்தவர் ரமளானை அடைய மாட்டார்; உயிரோடுள்ளவர் ரமளானை அடைவார் அல்லவா? இதை இறைவன் கூறியிருக்கலாம் அல்லவா? என்று கூற முடியாது. ஏனெனில் குர்ஆன் உயிருள்ளவனைப் பார்த்துப் பேசக் கூடியது. உயிருள்ளவனை எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டது.

உங்களில் என்று முன்னிலையில் பேசப்படுவது உயிருள்ளவர்களை நோக்கித் தான். எனவே உயிருள்ளவர்களில் தான் ரமளானை அடைந்தவர்களும் அடையாதவர்களும் இருப்பார்கள்.

நோன்பு மட்டுமின்றி குர்ஆனில் கூறப்பட்ட எல்லாக் கட்டளைகளும் உயிரோடு உள்ளவர்களுக்குத் தான். எனவே நுண்ணறிவாளனாகிய அல்லாஹ், உங்களில் உயிரோடு உள்ளவர்கள் நோன்பு நோற்க வேண்டும். செத்தவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று கூறுவானா?

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்பதைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களை விட இப்படி விவேகமற்ற விளக்கம் தருபவர்கள் தான் குர்ஆனை அதிகம் அவமதிப்பவர்கள்.

அதாவது உலகில் உயிரோடு வாழக் கூடிய மக்களில் ரமளானை அடைந்தவர்களும் இருக்கலாம். அடையாதவர்களும் இருக்கலாம். அடைந்தவர் நோன்பு பிடியுங்கள். அடையாதவர் எப்போது அடைகிறாரோ அப்போது நோன்பு பிடியுங்கள் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும்.

ஒருவர் அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாரா? அது எப்படி? அறிவியல் அறிவு வளராத காலத்தில் இவ்வாறு கேட்கலாம். உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க முடியாது.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.

மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது

மக்காவிலும்இ மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.

நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.

தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃபாவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?

எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை (2.286) இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா?
ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா?

உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல.


மற்றொரு கோணத்தில் சிந்தித்தால் அரஃபா நாளை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறானது என்பது சந்தேகத்துக்கிடமின்றி விளங்கும்.

ஒரு நாட்டில் துல்ஹஜ் மாதம் முதல் பிறையை ஜனவரி முதல் திகதியில் பார்க்கிறார்கள். அந்த நாளில் சவூதியில் முதல் பிறை தென்படவில்லை. எனவே ஜனவரி 2ஆம் திகதி தான் அவர்களுக்கு முதல் பிறை. இதன் அடிப்படையில் ஜனவரி 10 அன்று சவூதியில் அரஃபா நாள்.

ஆனால் ஜனவரி முதல் திகதி பிறை பார்த்தவர்களுக்கு ஜனவரி 10 அன்று பெருநாள். அதாவது நோன்பு நோற்பது ஹராமான நாள்.

இப்போது ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில் நோன்பு நோற்காமல் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு நோற்கும் நிலை ஏற்படும்.

நாமே கண்ணால் பிறை பார்த்து நாட்களை எண்ணி, இது பத்தாவது நாள் – அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை அறிந்திருக்கும் போது, கண்ணால் கண்ட உண்மையை ஏற்பதா? அல்லது ஹாஜிகள் அரஃபாவில் கூடி விட்டதால் நாம் கண்ட உண்மையை நாமே மறுத்து, பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமா?

இதைச் சிந்தித்தால் இவர்கள் அரஃபா நோன்பை முடிவு செய்யும் விதம் அபத்தமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும்.

தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது.

நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மக்ரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மக்ரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்

அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்; அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம்.

சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மக்ரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் சூரியன் மறையும் போது மக்ரிப் தொழ முடியாது.

எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை.

எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும்.

இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும். 
 நன்றி : rasminmisc

Friday, October 10, 2014

கடற்கரைத்தெருவில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

மேலத்தெருவை சார்ந்த சகோதரர் தமீம் அன்சாரிக்கு இன்று கடற்கரைத்தெருவில் நபிவழித் திருமணம் நடைபெற்றது இதில் மணமகன் 16 கிராம் தங்கத்தை மணமகளின் பொருப்பாளரிடம் மஹராக கொடுத்தார் இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஜாஹித் இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்








அதிரை கிளைச்சார்பாக மாடுகள் குர்பாணி கொடுக்கப்பட்டது

அதிரைக்கிளை சார்பாக இந்தவருடமும் 36 மாடுகள் கூட்டு குர்பாணி மூலம் கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகள் பங்கு தாரர்களுக்கும்  ஏழைகளுக்கும் மற்றும் பக்கத்து  ஊர்களில் உள்ள ஏழைகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


260 குர்பாணி தோல்கள் வசூல் செயப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த பல வருடங்களாக குர்பாணி தோல்களை வசூல் செய்து அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு ஊரில் உள்ள ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருவதை அனைவரும் அறிவீர்கள் அதன் அடிப்படையில் இந்த வருடமும் பெருநாள் தினம் அதற்கு அடுத்த இரண்டு தினங்களில் பல இடையூகளுக்கு மத்தில் சுமார் 260 தோல்கள் வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


Tuesday, October 07, 2014

ஹஜ் பெருநாள் உரை (வீடியோ)

eid from Adiraitntj on Vimeo.

Monday, October 06, 2014

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை 2014

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை 2014


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபி வழி பெருநாள் திடல்தொழுகை இன்று (06.10.14) காலை 7.00மணிக்கு E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் நடைபெற்றது  இதில் அதிகமான மக்கள் கலந்துக்கொண்டார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க பிரச்சாரகர் மஹ்தும் தொழுகையை நடத்தினார். முன்னதாக தொழுகையில் பின்பற்றக்கூடிய கடமை குறித்து விளக்கி கூறினார்.
அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டனர். திடலில் பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை ஈசிஆர் சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதி முழுவதும் வாகன நெருக்கடி இருந்தது.அல்ஹம்துலில்லாஹ்



















குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-5) - இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை!

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-5) - இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை!

ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்' என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:163

அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பித்து விட்டனர். 'அனுபவியுங்கள்! நீங்கள் சென்றடையும் இடம் நரகமே' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 14:30

'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?' என்று கேட்கிறான். 'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 36:78, 79

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 41:9

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

'அல்லாஹ் ஒருவன்' எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:14

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

திருக்குர்ஆன் 7:191,192,193

உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:34

உங்கள் தெய்வங்களில் உண்மைக்கு வழி காட்டுபவர் உண்டா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே உண்மைக்கு வழி காட்டுகிறான் என்று கூறுவீராக! உண்மைக்கு வழி காட்டுபவன் பின்பற்றத்தக்கவனா? பிறர் வழி நடத்தினால் தவிர தானாகச் செல்ல இயலாதவை பின்பற்றத் தக்கவையா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

திருக்குர்ஆன் 10:35

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 30:40

Saturday, October 04, 2014

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 3.10.14(வீடியோ)

தலைப்பு : மன்னித்தல்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் பாகம் 1

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபிவழியில் திடல் தொழுகை அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 6.10.2014 திங்கள் கிழமை காலை 7.00 தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபிவழியில் திடல் தொழுகை வழக்கம் போல் இந்த வருடமும் பிலால் நகர் பெட்ரோல் பங்க்  எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் நடைபெறும் மழையாக இருந்தால் பட்டுக்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள லாவண்யா திருமண மண்டபத்தில் தொழுகை நடைபெறும் உரை சகோதரர்  மஹ்தும் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்
இப்படிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை


Wednesday, October 01, 2014