Thursday, October 11, 2012

தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு (தொடர் - 6) - மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்

தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு (தொடர் -6)




மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்:

அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஜவாஹிர் என்ற நூலில் எழுதியுள்ளதாவது:

ஒரு பெண் இறந்து விட்டாள். அடக்கம் செய்யும் போது அப்பெண்ணின் சகோதரரும் உடனிருந்தார். அப்பொழுது அவருடைய பணப்பை அக்கப்ரில் விழுந்து விட்டது. அது அவருக்குத் தெரியவில்லை. பிறகு அது அவருக்கு நினைவு வந்த பொழுது மிகவும் கவலையடைந்தார். யாருக்கும் தெரியாமல் கப்ரை தோண்டி அதனை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குச் சென்று கப்ரை தோண்டியபோது அந்தக் கப்ரு நெருப்புக் கங்குகளால் நிரம்பி இருக்கக் கண்டு பயந்து போய் அழுதவராக தன் தாயாரிடத்தில் வந்து விபரத்தைக் கூறி விளக்கம் கேட்டார். அதற்கு அவருடைய தாயார், “அவள் தொழுகையில் சோம்பல் செய்பவளாக அதனைக் களா செய்பவளாக இருந்தாள்என்று கூறினார்.

இந்த கதை தப்லீகின் தஃலீம் தொகுப்பில் பக்கம் 76ல் இடம்பெற்றுள்ளது.

தொழுகையை விடுவது மிகப்பெரும் பாவம் என்பதும் கப்ருடைய வேதனை உண்டு என்பதும் முழு உண்மைதான். இந்த இரண்டையும் வலியுறுத்த எண்ணற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தக்கதை உண்மையா என்பதே இங்கு ஆராயப்பட வேண்டிய உண்மை.

கப்ரில் நடக்கும் வேதனைகளை உலகில் வாழும் மனிதர்கள் அறிய முடியுமா? என்பதை முதலில் ஆராய்வோம்.

அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன்)

மனிதர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் முன்னே திரை போடப்படுகின்றது என்று இவ்வசனம் கூறுவதால் உயிருடனிருப்பவர்கள் கப்ரில் நடப்பதையும், கப்ரில் இருப்பவர்கள் இவ்வுலகில் நடப்பதையும் அறிய முடியாது என்பதை அறிகிறோம். அறிய முடியும் என்றால் திரை போடப்படுகின்றது என்ற இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமில்லாது போய்விடும்.

இந்த சமுதாயம் கப்ரில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நான் செவியுறுகின்ற கப்ரின் வேதனையை நீங்கள் செவியுறுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்திருப்பேன் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : ஸைத் இப்னு ஸாபித் (ரலி)
நூல் : முஸ்லிம்

கப்ரில் நடந்ததை நீங்கள் அறிந்து கொண்டால் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்ய முன்வரமாட்டீர்கள் என்ற தகுந்த காரணத்தைக் கூறி, அதனால் கப்ரில் நடப்பதை நீங்கள் அறிய முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
கப்ரில் நடக்கும் வேதனையை மனித ஜின் இனத்தைத் தவிர கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட அனைத்தும் செவியுறும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : பரா (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்

இந்த ஹதீஸும் கப்ரில் நடப்பதை எந்த மனிதனும் அறிய முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.
இந்த நபிமொழிகளுக்கும், மேற்கண்ட குர்ஆன் வசனத்துக்கும் முரணாக இந்தக் கதை அமைந்துள்ளது.

தொழுகையை விட்ட எத்தனையோ நபர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திரும்பவும் தோண்டி எடுக்கப்படுகின்றன. எத்தனையோ காபிர்களின் சடலங்களும் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவ்வாறு தோண்டி எடுக்கப்படும்போது தீக்கங்குகளால் கப்ரு நிரம்பியிருந்ததை எவருமே கண்டதில்லை.

ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சில நாட்களுக்குப் பின் மற்றொருவர் அடக்கம் செய்யப்படுகிறார். இப்படி ஒரு இடத்தில் பல நூறு நபர்கள் அடக்கம் செய்யப்படுகின்றனர். மற்றொருவரை அடக்கம் செய்வதற்காக ஒரு அடக்கத்தலம் தோண்டப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் எவரும் கப்ரில் தீக்கங்குகள் நிரம்பி இருந்ததை காணவில்லை.

இந்த நடைமுறையும் அந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளது.

இந்தக் கதை பொய்யானது என்பதற்கு இந்தக் கதையே சான்று கூறுவதையும் சிந்திக்கும் போது உணரலாம்.

அந்தக் கதையில் உலகில் எவருமே காணாத ஒரு காட்சியை ஒருவர் காண்கிறார். இக்கதை உண்மை என்று வைத்துக் கொண்டால் இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியைக் கண்டவர் யார் என்பது பிரசித்தமாக இருக்க வேண்டும்.

இதைக் கண்டவரின் பெயரோ அவரின் தந்தையின் பெயரோ, அவர் நம்பகமானவர் என்பதற்கான சரித்திரக் குறிப்புகளோ எதுவுமே இக்கதையில் இல்லை.

இவ்வளவு அதிசயமான நிகழ்ச்சி நடந்த காலம் என்ன? எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாடு, எந்த ஊர் என்ற விபரமும் இல்லை.
இக்கதையில் வரும் சகோதரிக்கும் முகவரி இல்லை. தாயாருக்கும் முகவரி இல்லை.

இது உண்மை என்றிருக்குமானால் இவ்வளவு விபரங்களும் தெரிந்திருக்கும். அவை பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்தக் கதை ஏற்படுத்தும் தீய விளைவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒருவன் தான் மதிக்கின்ற பெரியாரின் புகழை மேலோங்கச் செய்ய எண்ணி அப்பெரியாரின் கப்ரு ஒளிமயமாக இருந்தது என்று கதை விடலாம். மறுமையில் இறைவன் வழங்கக் கூடிய தீர்ப்பை இங்கேயே வழங்க சிலர் முற்படலாம். தனக்கு பிடிக்காதவர்களின் கப்ரில் தீக்கங்குகளை கண்டதாக கதை விடலாம். இது தான் இந்தக் கதையினால் ஏற்படும் விளைவாகும்.

இந்த விளைவை ஏற்படுத்துவதே இந்தக் கதையை எழுதியவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று நமக்குத் தோன்றுகிறது.
சில பெரியார்களின் கப்ரு வாழ்க்கைப் பற்றி கட்டிவிடப்பட்டுள்ள கதைகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.

கப்ரில் தொழுத பெரியார்:

ஸாபித் பன்னானி (ரஹ்) அவர்கள் இறந்தபின் அன்னாரை அடக்கம் செய்யும்போது நானும் உடனிருந்தேன். அடக்கம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு செங்கல் கீழே விழுந்து உள்ளே துவாரம் ஏற்பட்டது. அதன் வழியாக நான் பார்த்த போது அவர் கப்ருக்குள் நின்று தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அருகிலிருந்தவரிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் பேசாமலிரு என்று என்னிடம் கூறிவிட்டார்.

தப்லீகின் தஃலீம் தொகுப்பு பக்கம் 129 ல் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.

கப்ரில் நடப்பதை எவரும் அறியமுடியாது என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இந்தக் கதையும் நேரடியாக மோதுகிறது.

ஸாபித் பன்னானி அவர்கள் உண்மையில் நல்லடியாராக இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். நல்லடியாராக இருந்தால் கப்ரில் எத்தகைய நிலையில் இருப்பார் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

நல்லடியார்கள் மண்ணறையில் வைக்கப்பட்டதும் முன்கர் நகீர் எனும் இரு வானவர்கள் அவரிடம் கேள்வி கேட்பர். அவர் கேள்விக்கு சரியான விடையளிப்பார். அந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) விளக்கும் போது,

கேள்வி கேட்கப்பட்ட பின் 70 X 70 என்ற அளவில் அவரது அடக்கத் தலம் விரிவாக்கப்படும். பின்னர் அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பின்னர் அவரிடம் உறங்குவீராகஎனக் கூறப்படும். நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இச்செய்தியைக் கூறிவிட்டு வருகிறேன்என்று அவர் கூறுவார். அப்போது இரு மலக்குகளும் புது மணமகனைப் போல் உறங்குவீராக!எனக் கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (திர்மிதி)

நல்லடியார்கள் கியாமத் நாள் வரை மண்ணறையில் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இந்த நபிமொழிக்கு மாற்றமாக ஸாபித் என்ற பெரியார் தொழுது கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி கப்ரிலிருந்து செங்கல் ஒன்று விழுந்துவிட்டது. அதன் மூலம் ஓட்டை ஏற்பட்டது என்று கூறப்படுவதும் நம்பும்படி இல்லை. கப்ரில் செங்கல்லுக்கு வேலை இல்லை. அதுவும் ஸாபித் பன்னானி அடக்கம் செய்யப்படும் போதே இது நிகழ்ந்துள்ளது. செங்கல்லால் கட்டடம் கட்டத் தடை இருந்தும் தொழும் காட்சியைக் கண்டு அறிவித்த இந்த மகான் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

எனவே இந்தக் கதையும் உண்மை கலக்காத பச்சைப் பொய் என்பதில் சந்தேகமில்லை.

உங்களின் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைக்கு தந்து உதவுங்கள்

உங்களின் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைக்கு தந்து உதவுங்கள். தோல்களில் இருந்து கிடைக்கும் தொகை, மார்க்கம் வழிகாட்டியுள்ள பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

உங்களின் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைக்கு வழங்க, கீழ்காணும் அதிரை ததஜ நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள்:

தலைவர் :
பீர் முஹமது - 80153 79211

துணை தலைவர்:
அப்துல் ஜப்பார்- 96295 33887

செயலாளர்:
M.அப்துர் ரஹ்மான் - 95005 16109

துணை செயலாளர்கள்:
ஹைதர் அலி - 96776 26656
முஹமது சுலைமான் - 95668 22198

பொருளாளர்:
A.K. மீரா முகைதீன் - 99448 24510

Tuesday, October 09, 2012

கவிதையும் கவிஞர்களும் (வீடியோ)!


 கவிதையும் கவிஞர்களும்


சிலர் கவிதை எழுதுவது இஸ்லாத்தின் ஒரு கடமை போல சித்தரித்து எழுதி வருகிறார்கள். இணைவைப்பு இல்லாத மற்றும் மார்க்க வரம்புகளை மிறாத கவிதைக்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறது என்ற போதிலும், கவிதைக்கு என்று இஸ்லாத்தில் எந்த சிறப்பும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

கவிஞர்களின் முரண்பாட்டையும் உளறல்களையும் அறிய கீழ்காணும் வீடியோவை பார்வையிடவும்.

Saturday, October 06, 2012

அதிரையில் நடைபெற்ற ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி (வீடியோ)

அதிரையில் நடைபெற்ற ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி (வீடியோ)






Friday, October 05, 2012

நவீன தவ்ஹீத்வாதிகள் (வீடியோ)


நவீன தவ்ஹீத்வாதிகள்

இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! ஏகத்துவமே!

மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு 9000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 5000 ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

இப்படி ஆடு மாடுகளின் விலை ஆகாயத்தைத் தொட்டாலும், என்ன விலையேற்றமாக இருந்தாலும், எவ்வளவு விலை எகிறியிருந்தாலும் அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லிம்கள் தயங்குவதில்லை. அத்தனை விலை கொடுத்து வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை. வைக்கின்ற வைக்கோலுக்கும் புல் கட்டுக்கும் ஒரு தொகை காலியாகி விடுகின்றது.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டி, தீனி போட்டு, கஞ்சி ஊற்றி, கழனி வைத்துப் பராமரித்து வருவதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் அளவே இல்லை. கண்ட கண்ட இடங்களில் ஆடு மாடுகள் போடுகின்ற புழுக்கை, சாணி மற்றும் கழிக்கின்ற சிறுநீர் போன்ற அசுத்தங்களை அவ்வப்போது கழுவி துப்புரவு செய்கின்றனர். அதிலும் மழை நேரத்தில் நச நசவென்று ஒரே ஈரப் பதமாக இருக்கும் நாட்களில் இந்த அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்காகத் தாய்மார்கள் ஆற்றுகின்ற பணி சாதாரணமானதல்ல!

பிற மதங்களில் மாட்டு சாணம், மூத்திரம் போன்றவை புனிதம் என்று மதிக்கப்படுகின்றன. ஆட்டுப் புழுக்கையும், சிறுநீரும் கூட அவர்களிடம் அசுத்தமல்ல! ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவை அசுத்தமானவை. இந்த அசுத்தம் பட்ட இடங்கள் தொழுவதற்குத் தகுதியற்றவை. மேனியில், ஆடையில் பட்டால் கழுவாமல் தொழக் கூடாது என்ற கட்டுப்பாடு! அதனால் இந்த விஷயத்தில் அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள்.

இத்தனை உழைப்பும் எதற்கு? இவ்வளவு தியாகமும் எதற்கு? தியாக வரலாற்றின் எதிரொலியாகத் தான்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

அல்குர்ஆன் 37:103-108

அல்லாஹ்வே பாராட்டுகின்ற இந்த மகத்தான சோதனையின் மறு பதிப்பு தான் குர்பானி!

இது எதை உணர்த்துகின்றது?

1. அல்லாஹ்வின் பாசத்திற்கு மேல் என்னுடைய பிள்ளைப் பாசம், குடும்பப் பாசம் மீறாது; மிகைக்காது என்பதற்காக, இப்ராஹீம் நபி நிகழ்த்திக் காட்டிய, உள்ளத்தை உலுக்குகின்ற ஓர் உன்னத நிரூபணம். நீர்த்துப் போகாது நெஞ்சில் நிலைத்திருக்கும் நினைவு ஆவணம்.

(இதன் அதிக விளக்கத்தை இப்ராஹீம் நபியின் ஏகத்துவ உறுதி என்ற தலைப்பில் நாம் பார்க்கலாம்.)

2. அறுத்துப் பலியிடுதல் என்பது ஒரு வணக்கம்! இதை அல்லாஹ்வுக்காகவே தவிர வேறு யாருக்கும் எதற்கும் செய்யக் கூடாது என்ற படிப்பினையையும் இது உணர்த்துகின்றது.

ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

அல்குர்ஆன் 108:2

இந்த இரு பாடங்களைத் தான் இப்ராஹீம் நபியின் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

இபராஹீம் நபியவர்களின் அறுத்துப் பலியிடுதல் என்ற வணக்கம் மட்டுமல்லாது, அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுக்காகவே ஆகியிருந்தன. அந்த ஏகத்துவ வழியைத் தான் அவர்களது மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களும், மற்றொரு மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழியில் வந்த அரபியர்களும் உருத் தெரியாமல் மாற்றி விட்டனர். மக்காவில் வாழ்ந்த மக்களிடம் இணை வைப்பு என்ற ஷிர்க் நுழைந்து விட்டது. இதைத் துடைக்கவும் தூரக் களைந்தெறியவும் அதே இப்ராஹீம் நபியின் சந்ததியில் வந்தவர்கள் தான் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

இதோ அம்மக்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எதிர் கொண்ட இணை வைப்பு என்ற நோயின் வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான்.

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

இன்று நாம் குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாதையில் அழைக்கும் போது சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் புறமுதுகு காட்டுகின்றனர். அல்லாஹ்வை மட்டும் அழையுங்கள் என்று கூறும் போது அவர்கள் முகம் சுழிக்கின்றனர். முஹ்யித்தீன் என்று சொன்னதும் "கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (அவர்களின் கண்ணியமிக்க ஆன்மாவை அல்லாஹ் தூய்மைப்படுத்துவானாக) என்று கூறி, முகமும் அகமும் பூரித்து விடுகின்றனர்.

முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன் போன்றோரின் பெயர்களில் மவ்லிதுகளை ஓதி, ஆடு மாடுகளை அறுத்துப் பலியிட்டு ஆனந்தமடைகின்றனர்.

அப்படியானால் இவர்களின் "பலி' என்ற வணக்கத்தினால் பலன் என்ன?

இத்தகையவர்களை நோக்கித் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள், தன்னை விலக்கிக் கொண்டதாகப் பிரகடனம் செய்கிறார்கள்.

"உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.

அல்குர்ஆன் 22:37

அல்லாஹ்வும் ஆடு, மாடு, ஒட்டகங்களின் இறைச்சி தேவையில்லை. இறையச்சம் தான் தேவை என்று கூறுகின்றான்.
இறையச்சம் என்றால் என்ன?

ஒரேயொரு இறைவனை மட்டுமே வணங்குவது தான் இறையச்சம்!

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று கேட்டார்.

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை'' என்றனர்.

அல்குர்ஆன் 23:23, 24

இதுபோன்ற வசனங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இறையச்சம் என்று குறிப்பிடுகின்றன. இறையச்சம் என்றால் உடல் நடுங்கி, அஞ்சி, அல்லாஹ்வைத் தொழுது, சில வணங்கங்களைச் செய்வது மட்டும் தான் என்ற அர்த்தத்தை இன்றைய ஆலிம்கள் கொடுக்கின்றனர். இதனால் இந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துக் கொண்டே இதுபோன்ற வணக்கங்களைச் செய்து விட்டுத் தங்களை இறையச்சமிக்கவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் இன்று ஆடு மாடுகளையும் அறுத்துப் பலியிடுகின்றனர். இதனால் தாங்கள் இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றி விட்டதாக நினைக்கின்றனர்.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், ஏகத்துவத்தை ஏற்காத வரை ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று இப்ராஹீம் நபியவர்கள் ஓங்கி பிரகடனப்படுத்தி விட்டார்கள். இதே அடிப்படையில் உங்களுடைய இறைச்சியும், இரத்தமும் தேவையில்லை, இறையச்சம் தான், அதாவது ஏகத்துவம் தான் தேவை என்று அல்லாஹ்வும் அடித்துச் சொல்லி விட்டான்.

எனவே குர்பானி கொடுத்தால் மட்டும் போதாது. ஏகத்துவவாதியாக மாற வேண்டும். அப்போது தான் நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்படும்.

நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட, உண்மையான இறையச்சவாதிகளாக, ஏகத்துவவாதிகளாக மாறுவோமாக!

Thursday, October 04, 2012

குர்பானியின் சட்டங்கள்


இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்:

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.

அறிவிவப்ப்வர் பரா (ரலி)
நுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை:

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
நுல் முஸ்லிம் (3637)

முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் அதா பின் யஸார்,
நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர் அலீ (ரலி)
நுல் புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி:

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (2323)

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

விநியோகம் செய்தல்:

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்:

ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்:

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் பரா (ரலி)
நுல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது:

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (3631)

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)
நுல் நஸயீ (4285)

நாமே அறுக்க வேண்டும்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

Wednesday, October 03, 2012

"முஸ்லிம்களின் போராட்டம் போதும்” - கிழிந்து தொங்கியது ஷம்சுதீன் காஸிமீ என்ற விசமியின் இரட்டை நாக்கு


ஷம்சுதீன் காஸிமி என்ற காமெடியரை பற்றி பொதுவாக எல்லாருக்கும் தெரியும். இவர் தாடி வைச்ச கேடி என்று. தவ்ஹீத் ஜமாஅத் எதை செய்தாலும் அதற்கு எதிராக பேசுவார். ஒரு வார இதழ் நபி (ஸல்) அவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து எழுதியது, அதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தியது. நபி (ஸல்) அவர்களை வம்புக்கு இழுத்தை பற்றி கவலைபடாமல், தவ்ஹீத் ஜமாஅத் அந்த இதழுக்கு எதிராக பேராட்டம் நடத்திய உடன், அந்த இதழுக்கு ஜால்ரா தட்டினார் இந்த தலைப்பாகை அணிந்த உத்தம மகான். இப்போது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து முஸ்லிம்கள் பேராடிய உடன், போராடும் முஸ்லிம்களை கண்டித்து பேசுகிறார். ஊரில் உள்ளவர்கள் அனைவரும் ஆடை அணிந்தால், அம்பனமாக போய் நான் வித்தியாசமானவன் என்ற காட்டி, பெயர் (?) வாங்குவது எப்படியே, அதுபோல் தான் இவரின் செயல் எப்போதும் இருக்கும்.

சமீபத்தில் குர்ஆன் ஹதீசை மட்டும் பார்த்தால், ஒரு வருடம் ஆனாலும் ஒருவன் தொழ முடியாது என்று கூறி தனது மார்க்க அறிவையும், இவர் குர்ஆன் ஹதீசை மதிக்கும் லட்சணத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த சம்சுதீன் காஸிமி என்ற உத்தம புத்திரரின் உண்மை முகத்தை அறிய கீழ்காணும் ஆக்கத்தை படிக்கவும்.

"முஸ்லிம்களின் போராட்டம் போதும்” - கிழிந்து தொங்கியது ஷம்சுதீன் காஸிமீ என்ற விசமியின் இரட்டை நாக்கு

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை   இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான போராட்டங்கள் போதும்” என்று சென்னை மக்கா பள்ளியின் பேஷ் இமாம் சம்சுதீன் காசிமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நபிகள் நாயகத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப் படுத்தி திரைப்படம் எடுத்த யூதன் சாம் பெசிலி, அந்தப் படத்தை “யுடியூப்” மூலம் விளம்பரம் செய்த கிறிஸ்தவ பிஷப் டெர்ரி ஜோன்ஸ், இந்த படத்திற்கு பரிபூரண ஆசி வழங்கி, அனைத்து உதவிகளையும் செய்த அமெரிக்க அரசு ஆகியவற்றிற்கு  எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் போராடி வருகிறார்கள்.  

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அதே சமயம் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் தலைமை ஏற்கும் வகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் முஸ்லிம்களின் போராட்டம் நடந்து, அமெரிக்க துணை தூதரகத்திற்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டம் இருந்தது என்பது யாவரும் அறிந்ததே!

சென்னையில் மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் போராட்டத்தைப் பார்த்து வேலூர் மாவட்டம் போன்ற ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தாமே திரண்டு போராட்டம் நடத்தியது தமிழகம் கண்டிராத ஒன்றாகும்.

இவ்வாறு இந்தியாவுக்கே தலைமை தாங்கும் விதத்தில் தமிழக முஸ்லிம்களின் போராட்டம் இருக்க, அதை முனை மழுங்கச் செய்யும் வகையில் “போராட்டம் போதும்” என்று அறிக்கை வெளியிட்டு அமெரிக்க அடிமை ஆகி இருக்கிறார் சம்சுதீன் காசிமி என்ற பேஷ் இமாம். ஊரில் எல்லோரும் ஆடை அணிந்து சென்றால் தான் மட்டும் அம்மணமாகச் சென்று விளம்பரம் தேட நினைப்பவர் மக்கா பள்ளி பேஷ் இமாம். இந்த எண்ணம் அவரிடம் இல்லாவிட்டால் இது போன்ற அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கவே மாட்டார்.
நபிகள் நாயகம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் அவதூறாக படம் எடுத்த சாம் பெசிலியோ, பிஷப் டெர்ரியோ அல்லது அமெரிக்க அதிபர் ஒபாமாவோ மன்னிப்பு கேட்டு, நடவடிக்கை எடுத்து, அதற்குப் பிறகும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினால், “போராட்டம் போதும்” என்று சொல்லலாம். ஆனால் இவர்களுக்கு எதிராக முஸ்லிம் உலகமே கிளர்ந்தெழுந்த போதும் இன்று வரை இவர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

தங்கள் நடவடிக்கையை திருத்திக் கொள்ளவும் இல்லை. மாறாக முஸ்லிம்களின் போராட்டத்தை தான் ஒபாமா போன்றவர்கள் கண்டிக்கிறார்கள். இந்நிலையில் “போராட்டம் போதாது. இன்னும் வீரியம் பெற வேண்டும்” என்று சொல்வதுதான் ஒரு முஸ்லிமுக்கு அழகாக இருக்கும். இந்த அழகுணர்ச்சி சம்சுதீன் காசிமிக்கு வர வேண்டும். வர வேண்டும் என்று தமிழக முஸ்லிம்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வரக் கூடாத ஒன்று இவருக்கு வந்து, அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் புரிவதை முஸ்லிம்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தமிழக முஸ்லிம்களின் உணர்வு வை.கோ.வுக்கு புரிகிறது. திருமாவளவனுக்கு புரிகிறது. ராமாதாஸுக்கு புரிகிறது. கருணாநிதிக்கும் புரிகிறது. மதச்சார்பின்மை மீது நம்பிக்கையுள்ள அனைவருக்கும் புரிகிறது. அதனால் அந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் அறிக்கை வெளியிட்டு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்தை வெளியிடக்கூடாது.  அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறார்கள். அந்த அறிக்கைகளில் “முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று ஒருவருமே சொல்லவில்லை.

இந்த அரசியல் தலைவர்களுக்கு உள்ள மான உணர்ச்சி சம்சுதின் காசிமிக்கு இல்லாமல் போனது  ஏனோ?  அமெரிக்காவில் ஒரு சீக்கியரின் தலைப்பாகை அவமதிக்கப்பட்டால் பிரதமரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்கு எதிராக கண்டன அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்திற்கு எதிராக பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவோ இதுவரை வாயே திறக்கவில்லை. இவர்கள் வாய் திறந்து முத்து உதிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய காசிமி “முஸ்லிம்களின் போராட்டங்கள் போதும்” என முழங்கியது இன துரோகம் இல்லாமல் வேறென்ன?

அமெரிக்க நிறுவனம் ஒன்று சாமி படம் போட்ட செருப்பை தயாரித்து விற்றது. இது அமெரிக்க விவகாரம் என்று மத்திய அரசு வாய் மூடி இருக்கவில்லை. உடனே கண்டனம் தெரிவித்து, செருப்புகளை வாபஸ் பெற வைத்தது. செருப்பு விவகாரத்தில் இப்படி மதச்சார்பின்மையை உலகுக்கு வெளிக்காட்டிய மத்திய அரசு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்திலும் இவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டுமா? இல்லையா? நடக்கவில்லை எனில் அதை காசிமி சுட்டிக் காட்ட வேண்டும்.  ஆனால் இவரோ மானமிழந்து, மதி கெட்டு “போராட்டங்கள் போதும்” என்கிறார்.

“காளி” என்ற பெயரில் இங்கிலாந்தில் புதிய ரக பீர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பீர் ஒரு போதைப் பொருள். அந்த காளியின் பெயரிலும் விற்கக்கூடாது. வேறு பெயரிலும் விற்கக்கூடாது என்று மத்திய அரசு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் என்ன சொன்னது தெரியுமா? பீருக்கு காளியின் பெயரை வைத்ததை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லி, எடுக்க வைத்துவிட்டது.

இதுபோன்ற உறுதியான அணுகுமுறை “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்தில் இல்லையே! இது இந்திய முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாக நடத்துவது இல்லையா? மத்திய அரசாவது மௌனம்தான் காக்கிறது. ஆனால் காசிமியோ “முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று அறிக்கை வெளியிட்டு முஸ்லிம்களின் உணர்ச்சியோடு விளையாடுகிறார்.

சென்னை மக்கா பள்ளியின் தலைமை இமாம் என்று லெட்டர் பேடு அடித்து அறிக்கை வெளியிட்டவுடன் எல்லா இமாம்களுக்கும் இவர் தலைவர் போலும் என்று பத்திரிகைகாரர்கள் நினைத்துவிடுகின்றனர். சென்னை மக்கா பள்ளிக்கு உலகின் எந்தப் பகுதியிலும் இன்னொரு கிளைப் பள்ளி கிடையாது. உலகின் எந்தவொரு பள்ளிவாசல் இமாமுக்கும் இவர் தலைவரும் கிடையாது. எல்லா பள்ளிவாசல்களிலும் இமாம் ஒருவர் இருப்பார். இவர் விடுமுறை எடுக்கும் போது தொழுகை நடத்த துணை இமாம் இருப்பார். இதுபோல் மக்கா பள்ளியில் இவர் இமாமாக பணிபுரிகிறார். இவர் விடுமுறை எடுத்துவிட்டால் இன்னொருவர் தொழுகை நடத்துவார். இந்த சாதாரண பதவியைத்தான் தமிழகத்தின் பெரும் பதவி போல் “பில்டப்” செய்து இவர் ஊடகங்களில் விளம்பரம் தேடுகிறார்.

இந்தியாவின் எந்த ஒரு பள்ளிவாசல் இமாமும் தன்னை தலைமை இமாம் என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதில்லை. காசிமி மட்டும் இப்படிச் சொல்லிக் கொள்வதின் மூலம் இவருடைய பதவி மோகத்தையும், விளம்பர வெறியையும் தெரிந்து கொள்ளலாம்.  

தர்கா வழிபாட்டுக்கு எதிராக இவர் அனல் கக்கி, பெரிய ஏகத்துவவாதி போல் தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் ஏகத்துவ கொள்கையையும் இவர் தர்கா வழிபாடு அளவுக்கு விமர்சிப்பார்.

முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பது கட்டாயம். முஸ்லிம் பெண்களைப் போல் தலையில் துப்பட்டா போட்டுக் கொண்டு ஜுமுஆ சொற்பொழிவு நிகழ்த்தும் இவருடைய பேச்சில் அமெரிக்க எதிர்ப்பு அதிகமிருக்கும். அந்த அமெரிக்க எதிர்ப்பை பொதுமக்கள் கையில் தூக்கும் போது அதை மழுங்க வைக்கும்   வகையில் இவருடைய நாக்கு தடம் புரளும். இப்படி இரட்டை நாக்கு படைத்த இவரை முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆக மொத்தத்தில் இவர் காசிமி அல்ல, தனது இரட்டை நாக்கால் விஷம் கக்கும் விஷமி.

நன்றி: ஆன்லைன் பிஜே

Monday, October 01, 2012

மானங்கெட்ட மத்ஹபு சட்டங்களை பற்றிப் பிடிப்பது சரிதானா?


மானங்கெட்ட மத்ஹபு சட்டங்களை பற்றிப் பிடிப்பது சரிதானா?


(அஸ்ஸலாமு அலைக்கும் இந்த கட்டுரையை படிப்பவர்கள் ஊரில் உள்ள மௌலானா ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் என்ன என்றும் நீங்களே கேட்டு தெரிந்துகொண்டு மத்ஹபு என்னும் வழிக்கேட்டில் இருந்து விலகி கொள்ளுங்கள்).


நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகளில் எழுதப்பட்டிருக்கும் தடையுத்தரவு. இந்தத் தடை உத்தரவைப் படிப்பவர்களுக்கு, 'மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் ஒரு பாவி' என்ற தோற்றம் ஏற்படும். அதனால் தான் மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்களுக்கு அடி உதை விழுகின்றது. காவல்துறையில் புகார் பதிவாகின்றது. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுகின்றன.

ஏன் இந்தத் தாக்குதல்கள்? மக்கள் ஏன் இந்த மத்ஹபுகளை வெறித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்? என்று சற்று கூர்ந்து கவனித்தால் இந்த மத்ஹபுகளில் மண்டிக் கிடக்கின்ற ஆபாசங்களை, இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் விஷக் கருத்துக்களை பெண்களை வெட்கப்பட வைக்கும் ஆபாசங்களை தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆலிம்கள் மக்களிடம் சொல்லாமல் மறைப்பதால் தான் என்பது புரிகிறது.

மத்ஹபுகளை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் இன்று கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கும் மக்கள் யார் என்று பட்டியல் போட்டால் இவர்களும் ஒருகாலத்தில் பள்ளிவாசல்களில், மத்ஹபு வெறியில் இருந்து கொண்டு தவ்ஹீதுவாதிகளைத் தாக்கியவர்கள் தான் என்பதை சொல்ல கடமை பட்டுள்ளோம்.

பிறகு இவர்கள் ஏன் வெளியில் வந்தார்கள் என்று தெரியுமா? மத்ஹபுச் சட்ட நூற்களில் எழுதப்பட்டுள்ள விஷக் கருத்துகளை, ஆபாசக் களஞ்சியங்களைப் படித்துப் பார்த்த பின்புதான் இந்த மக்கள் மத்ஹபுகளை விட்டு வெளியே வந்தார்கள். எனவே இதை அனைவரும் தெரிந்து கொண்டு, மத்ஹபு மாயையிலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் மக்களிடம் இதைப் பிரச்சாரம் செய்து, அவர்களையும் குர்ஆன், ஹதீஸ் என்ற சத்தியத்தின் பால் இழுக்க வேண்டும் என்பதற்காக இதை இங்கு பிரசுரம் செய்கிறோம்.

ஷாஃபி, அபூஹனீபா, மாலிக், அஹ்மது பின் ஹன்பல் ஆகிய நான்கு இமாம்களால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் தான் மத்ஹபுகள் என்று ஆலிம்கள் பிரச்சாரம் செய்தாலும், உண்மையில் அந்த நான்கு இமாம்களுக்கும் இந்த மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான்கு இமாம்களுமே குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும் என்று ஒருமித்துக் கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஆலிம்கள் இதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்ட நூற்கள் தான் இன்று இமாம்களின் பெயரால் பின்பற்றப்படுகின்றன. இவர்கள் குறிப்பிடும் மத்ஹபுச் சட்ட நூற்களில் காணப்படும் குப்பைகளையும், அபத்தங்களையும், ஆபாசங்களையும் பார்ப்போம் அனைத்து ஆபாசங்களையும் இங்கு சொல்ல இடம் போதாது என்பதால் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறோம். கீழே உள்ளவைகளுக்கு குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றில் ஆதாரம் உள்ளதா என்பதை சகோதரர் மௌலானா அவர்கள் விளக்க கடமை பட்டுள்ளார்? எனவே ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம் சகோதரர் மௌலானா அவர்களே.

1. தொழுகையை முடிக்கும்போது ஸலாம் சொல்வதற்கு பதிலாக தொழுகையில் வேண்டுமென்றே குசு விடலாமாம்!

தொழுகை முழுமையான பிறகு (அதாவது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால்) தொழுகைக்கு வெளியில் செய்யக்கூடிய சொல், செயல் போன்றவற்றினால் தொழுகையை முடிப்பது கூடும். உதாரணமாக சப்தமிட்டு சிரித்தல், வேண்டுமென்றே பின் துவாரத்தின் வழியாகக் காற்றை விடுதல், பேசுதல்,நடத்தல், ஸலாம் கூறுதல் போன்ற காரியங்களால் தொழுகையை முடிப்பது கூடும்.

ரத்துல் முக்தார், பாகம்: 3, பக்கம்: 400

இறையச்சம் கடுகளகாவது இருந்தால் தொழுகையில் இப்படி செய்யலாமா மௌலானா? உங்களால் ஜும்மா மேடையில் பகிரங்கமாக இப்படி செய்வது கூடும் என்று சொல்ல முடியுமா மௌலானா?

2. மூத்திரத்தை முகத்தில் தடவினாள் மூக்கில் இரத்தம் நின்று விடுமாம்!

ஒருவனுக்கு மூக்கில் தொடர்ந்து இரத்தம் வடிந்தால் அல்ஹம்து சூராவை மூத்திரத்தால் அவனது நெற்றியில் எழுதலாம்.

ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்கம்: 117

மூத்திரத்துக்கு இவ்வளவு மகிமை இருப்பதாக மத்ஹபு நூற்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனை, அதன் தலைசிறந்த அத்தியாயமான பாத்திஹா சூராவை மூத்திரத்தால் எழுதலாம் என்று கூறி, குர்ஆனை இழிவுபடுத்துகின்றன. இது தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த சட்டங்களா மௌலானா? சிந்தித்து பதில் சொல்லுங்கள் மௌலானா.

3. இமாமுடைய தகுதிகள்!

அழகான முகமுள்ளவர், சிறந்த வம்சத்தைச் சார்ந்தவர், அழகிய மனைவி உள்ளவர், இவரே இமாமத் செய்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர். துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 259

இமாமத் செய்பவரின் மண்டை பெரிதாக இருக்க வேண்டும். இமாமுடைய 'உறுப்பு' சின்னதாக இருக்க வேண்டும்.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 601

மத்ஹபுச் சட்ட நூற்களில் கூறப்படும் தகுதிகள் இவை. பேஷ் இமாமுக்கு இவ்வளவு அசிங்கமான தகுதிகளை நிர்ணயம் செய்தது குர்ஆனா? ஹதீஸா? சொல்லுங்கள் மௌலானா. இந்தத் தகுதிகளின் அடிப்படையில் தான் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் இமாமைத் தேர்வு செய்கிறீர்களா மௌலானா?

4. சதித் திட்டம்

குர்ஆன் முழுவதையும் படிப்பதை விட பிக்ஹ் நூலைப் படிப்பது மிகச் சிறந்தது. 

கன்சுத்தகாயிக் (முன்னுரை)

அல்லாஹ் நமக்கு அருளிய மாபெரும் பொக்கிஷமான குர்ஆன் பக்கம் மக்களை நெருங்க விடாமல் தடுப்பதற்காக நீங்கள் செய்த சதித் திட்டத்திற்கு, குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உண்டா? மத்ஹபு ஆலிம்களே! பதில் சொல்லுங்கள்.

5. பகுத்தறிவுச் சட்டங்கள்!

பல் துலக்கும் குச்சியைச் சூப்பினால் கண்கள் குருடாகும்.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 124

மௌலானா இந்தப் பகுத்தறிவுச் சட்டம் குர்ஆனின் எந்த வசனத்திலிருந்து பெறப்பட்டது? எந்த ஹதீஸிலிருந்து வகுக்கப்பட்டது? தெளிவுபடுத்துவீர்களா மௌலானா?

6. தொழுகையில் விளையாட்டு!

1) ஒரு மனிதனிடத்தில், 'நீ லுஹர் தொழுகையை நிறைவேற்றினால் உனக்கு ஒரு தீனார் உண்டு' என்று சொல்லப்பட்டு அவரும் அந்த எண்ணத்தில் தொழுதால் அவருக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்.

ரத்துல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 447

2) தொழுபவன் பறவை மீது கல்லெறிந்தால் அவனது தொழுகை வீணாகாது.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677

3) ஒருவன் பறவையை விரட்டினால் அல்லது ஏதோ ஒரு சப்தத்தினால் அழைத்தால் அவனுடைய தொழுகை வீணாகாது.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677

4) சுப்ஹானல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், இன்னும் அல்லாஹ்வை மட்டும் கண்ணியப்படுத்தும் வார்த்தைகளைக் கூறி தொழுகையை ஆரம்பிப்பது மக்ரூஹ‚டன் கூடும்.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 521

5) கடமையான தொழுகையில் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் தொழுபவன் விரும்பினால் சூரத்துல் பாத்திஹாவை ஓதலாம். விரும்பினால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லலாம். விரும்பினால் மவுனமாகஇருந்துவிடலாம்.

மப்சூத், பாகம்: 1, பக்கம்: 81

மௌலானா அவர்களே! மத்ஹபுக் கிதாபுகள் தொழுகையைக் கேலிக்கூத்தாக ஆக்கிக் காட்டுகின்றன. மேற்கூறிய விளையாட்டுக்களுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள். இறையச்சம் கடுகளகாவது இருந்தால் தொழுகையில் இப்படி விளையாடி இருப்பார்களா?

7. மோசடிகள்!

1)இமாமோ, கலீபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு ஹத் தண்டனை கிடையாது.

துர்ருல் ஹிகம், பாகம்: 5, பக்கம்: 310

2) போதையூட்டக் கூடிய கடைசிக் கிண்ணம் தான் ஹராமாகும். ஒன்பது கிண்ணங்கள் மது அருந்தியவனுக்கு பத்தாவது கிண்ணம் புகட்டப்பட்டால் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.
ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 9

3) திருமணம் செய்து கொள்ள முடியாத தாய், சகோதரி போன்றவர்களையோ, அடுத்தவனின் மனைவியையோ, இத்தா இருக்கும் பெண்ணையோ ஒருவன் மணமுடித்து, இது தவறில்லை என்று கருதி உடலுறவு கொண்டால் அவனுக்குத் தண்டனை இல்லை. ஆனால் கண்டிக்கப்படுவான். இது ஹராம் என்று கருதி அவன் செய்திருந்தாலும் இவ்வாறு தான்.

ரத்துல் முக்தார், பாகம்: 15, பக்கம்: 60

இந்த மோசடிகள், ஏமாற்றுக்கள் எல்லாம் மத்ஹபு சட்ட நூற்களில் தான் உள்ளன. இவற்றுக்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா மௌலானா?

8. விசித்திரமான சட்டம்!

ஒரு பெண்ணின் கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாத நிலையில் 120 வருடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவு செய்து (பின்னர் அவளுக்குத் திருமணம் (?) செய்து வைக்க வேண்டும்)

ஹிதாயா, பாகம்: 2, பக்கம்: 62

நடைமுறை சாத்தியமில்லாத, பெண்களுக்குத் துரோகம் இழைக்கின்ற இந்தச் சட்டத்துக்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள் மௌலானா.

9. மத்ஹபு இமாமின் காம சிந்தனை அசிங்கங்கள்!

ஒருவன் தன் பின்துவாரத்தில் தன் ஆண்குறியை நுழைத்தால் விந்து வெளியாகாத வரை குளிப்பு கடமையில்லை.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 175

இந்த மானங்கெட்ட அசிங்கங்கள், குர்ஆன் ஹதீஸில் உள்ளவையா? விளக்குங்கள் மௌலானா.

குறிப்பு: இதை விட ஆபாசமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனால் எங்கள் எழுதுகோல்கள் எழுதுவதற்கு வெட்கப்படுகின்றன.

10.தமிழில் தொழலாம்!

அரபி தெரிந்திருந்தாலும், தொழுகையில் அரபி அல்லாத மொழிகளில் ஓதுவது கூடும்.

ரத்துல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 488

பார்ஸி மற்றும் ஏனைய மொழிகளில் பாங்கு சொல்வது கூடும்.

ஹாஷியத்துல் ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 523

இந்த மாடர்ன் மஸ்அலாவுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் சம்பந்தம் உள்ளதா மௌலானா? தெளிவுபடுத்துங்கள்.

11.ஜும்ஆ!

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் தான் ஜும்ஆ நடத்தப்பட வேண்டும் என்பது ஜும்ஆவின் விதிகளில் ஒன்றாகும்.

ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 83

மேற்கூறிய சட்டத்தின் அடிப்படையில் உலகில் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் எவரது ஜும்ஆவும் நிறைவேறாமல் போகுமே! 'இனி இந்தியாவில் ஜும்ஆ கிடையாது'' என்று அறிவிக்கத் தயாரா மௌலானா? மத்ஹபு நூற்கள் அப்படித் தான் கூறுகின்றன.

12.மத்ஹபு மாறினால் தண்டனை!

நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்று போர்டு வைக்கின்றனர். ஆனால் ஹனபி மத்ஹபைத் தவிர மற்ற மத்ஹபுகள் தவறானவை என்றும் அவற்றைப் பின்பற்றுவது தண்டனைக்குரிய ஒன்று என்று ஹனபி மத்ஹபின் சட்ட நூற்கள் கூறுகின்றன.

ஒரு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவன், ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்.

ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 4, பக்கம்: 249

ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபில் சேர்ந்து விட்டால் அவருடைய சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது.

ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 565

நமது மத்ஹபு தான் சரியானது. மற்றவர்களின் மத்ஹபு தவறானது.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 18

ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி ஷாபியாக இருப்பது பாவமான காரியம் என்றாகிறது. தவறான மத்ஹபில்(ஷாபியாக) இருப்பவர் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதிப்பது ஏன் மௌலானா?

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? என்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் மௌலானா. இமாம்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு 200, 300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்களை ஆதாரமாக ஆக்கியது தான் என்பதை உணர்வீர்கள்.

முரண்பாடுகள்:

இந்த மத்ஹபுச் சட்ட நூற்களில் பொய்களுக்கும் பஞ்சமில்லை. முரண்பாடுகளும் மலிந்து கிடக்கின்றன. மாதிரிக்குச் சில முரண்பாடுகளைப் பார்ப்போம்.

1. முஃதஸிலா பிரிவினரை திருமணம் முடித்துக் கொள்வது கூடும். ஏனென்றால் ஒரே கிப்லாவினரில் எவரையும் காஃபிர் என்று நாம் கூறமாட்டோம்.

துர்ருல்முக்தார், பாகம்: 3, பக்கம்: 50

2. முஃதஸிலா பிரிவினருக்கும் சுன்னத்து வல்ஜமாஅத்தினருக்கும் மத்தியில் திருமணம் செய்வது கூடாது.

ஃபத்ஹ‚ல் கதீர், பாகம்: 6, பக்கம்: 397

3. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சொல்லை நிராகரிப்பவன் மீது மணல் எண்ணிக்கைக்கு அல்லாஹ்வின் லஃனத் உண்டாகட்டும்.

துர்ருல் முக்தார் முன்னுரை

4. இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மது ஆகிய இருவரும் மூன்றில் இரண்டு பங்கு சட்டங்களுக்கும் அதிகமாக அபூஹனீபா இமாமுக்கு மாறு செய்துள்ளனர்.

ஜாமிஉஸ் ஸகீர், பாகம்: 1, பக்கம்: 8

5. ஹனபி மத்ஹபின் இமாம்களான அபூயூசுப், முஹம்மது ஆகிய இருவரின் மீது லஃனத் (அல்லாஹ்வின் சாபம்) உண்டாகட்டும் என்று கூறுகின்றனர்.

இப்படி முன்னுக்குப் பின் முரணான, ஆபாசமான, இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கின்ற சட்டங்களைத் தான் இமாம்களின் பெயரால் எழுதி வைத்துள்ளனர்.

மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்களை வாகாபிகள் என்று சொல்லும் நீங்கள் மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள மத்ஹபுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தயாரா?

மத்ஹபு வெறியை ஊட்டி, மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கும் ஆலிம்களே!

இமாம்களை மதிக்கிறோம் என்ற பெயரில் அவர்களை இழிவு படுத்தும் இந்தச் சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்ற கொள்கையின் பக்கம் வாருங்கள்.

'அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 3:32


அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். 

அல்குர்ஆன் 33:36

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 3.104


மானம் கெட்ட மத்ஹபு சட்டங்களை தூக்கி பிடிக்கும் ஆலிம்சாக்களையும் மௌலானாக்களையும் விவாதிக்க அழைக்கிறது,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிராம்பட்டினம் கிளை.