Wednesday, January 18, 2012

மேலத்தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டம்


T N T J யின் அதிரைக்கிளையின் சார்பாக 17.01.2012 செவ்வாய்கிழமை மேலத்தெருவில் அல் பாக்கியத்துஸ் ஸாலிஹத் பள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாபி இஸ்லாத்தின் பெண்களின் நிலை அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் சகோதரா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இறுதி நபியின் இறுதிப்பேருரை என்ற தலைப்பிலும் மற்றும் சகோதரர் சிகாபுதீன் MISC அவர்களும் உரைநிகழ்த்தினார்கள் இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துக்கொண்டார்கள் (இன்ஷா அல்லாஹ் இதன் வீடியோ விரைவில் வெளியிடப்படும்)












Tuesday, January 17, 2012

உடலை பாதுகாப்போம்

بسم الله الرحمن الرحيم

உங்கள் மீது மேகத்தை நிழ­டச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். ''நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!'' (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். அல்குர்ஆன் 2:57

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள். அல்குர்ஆன் 2:168

நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய்.. வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?

கலோரி என்றால் என்ன?

சரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா? கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உட­ல் சீரான இயக்கத்துக்கு இந்த கலோரியும் முக்கிய பங்கை செலுத்துகிறது. வியர்வை சிந்தி வேலை செய்வோருக்கு அதிகமாகவும், ''சீட்''டில் உட்கார்ந்து வேலை செய்வோருக்கு குறைவாகவும் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சில பெண்களுக்கு என்று இவ்வளவு கலோரி என்று கணக்கு உண்டு.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், கலோரி என்பது தேவையான சக்தியின் அளவு. இதற்கும் சத்துக்கும் சம்மந்தமில்லை.

''டீன் ஏஜ்'' வரை கலோரி கணிசமாக தேவை தான். ஆனால், நாற்பது வயதை தாண்டிவிட்டால், உடல் எடை கூடிவிட்டால், ''அடடா, கொழுப்பு கூடிவிட்டதே'' என்று கலோரியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஒரு கிராம் எடையுள்ள தண்ணீரை ஒரு டிகிரி சூடாக்கத் தேவைப்படும் வெப்ப சக்தியின் அளவு ஒரு கிலோ கலோரி.

மனிதன் வேலை செய்ய, உயிர் வாழ சக்தி தேவை. வேலை செய்யும் போது உடம்பில் உள்ள சத்து எரிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யச் சாப்பிட வேண்டும். உணவில் உள்ள சத்து உடம்பில் சேர்கிறது. மீண்டும் வேலை செய்யும் பொழுது மீண்டும் சத்து எரிக்கப்படுகிறது. இது ஒரு சுழற்சி. உணவில் இருந்து கிடைக்கும் இந்த சக்தியும் 'கிலோ கலோரி' என்ற அதெ அளவிலேயே அளக்கப்படுகிறது. நடைமுறையில் சுருக்கமாகக் 'கலோரி' என்றே குறிக்கப்படுகிறது.

சுலபமாக புரியும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்த்தால் விசயம் விளங்கிவிடும்.

ஒரு இட்­லிக்கு - 75 கலோரி கிடைக்கிறது.

ஒரு மணி நேரம் நடந்தால் - 160 கலோரி செலவாகிறது.

பொதுவாக ஒரு மனிதன் இயங்குவதற்கு அவரது உடல் அமைப்பு, செய்யும் வேலையைப் பொறுத்து 4000 முதல் 7000 கலோரிகள் வரை தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதென்ன கலோரி... ஏதோ புதுசா எல்லாம் சொல்றாரே டாக்டர் என்று பலரும் எண்ணலாம். உடல் எடை கூடிவிட்டால், சில கிலோ எடையை குறைக்க வேண்டுமானால், முத­ல் அதற்கு கலோரியை குறைக்க வேண்டும். அதுக்காகத்தான், நம்மில் சிலர், உடற்பயிற்சி, ட்ரெட்மில், வாக்கிங் என்று என்னவெல்லாமோ செய்கின்றனர். அப்படி கலோரிக்களை ''எரிக்க எரிக்க''த்தான் உட­ல் எடை குறையும். நீங்களும் ''ஸ்­ம்''மாக இருக்க முடியும்.

உடலை குறைக்க சில வழிகள்...

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சங்கடம், உடல் பருமன். அதிலும், பெண்கள் மத்தியில் அதிகமாக நடக்கும் விவாதம், எப்படி இளைப்பது என்பது தான்.

உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உட­ல் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உட­ன் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை என்பதால், ஓடியாடி வேலை செய்வதோ, சட்டென்று, எழுந்து அமர்வதோ சிரமமாகத் தோன்றும். சோம்பல் அதிகரிக்கும், அதன் விளைவாக, எடை மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கும். உடல் மிகப் பெருத்துவிடுமாயின், தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இப்படிப் பலப்பல தொல்லைகள் தொடர வாய்ப்புண்டு.

இத்தனை பின்விளைவுகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, உண்ணாமல் இருக்கவும் முடியவில்லை. என்னதான் செய்வது என்று சொல்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான். வருத்தப் படவேண்டாம். நிரம்பவும் கஷ்டப்படாமல் இளைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று இங்கு பார்க்கப்போகிறோம்.

முதல் மற்றும் முக்கியத் தேவை என்ன தெரியுமா? உடலை இளைக்க வைத்தே தீருவது என்று தீர்மானித்துக் கொள்வதும், அதி­ருந்து பின்வாங்காமல் இருப்பதும்தான்.


1. எதிர்மறைக் (negetive)  கலோரி உணவு வகைகளை உட்கொள்ளுதல்:

பட்டினி கிடந்தால் இளைக்கலாம் என்ற ஒரு தவறான கருத்து பலரிடம் நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் உணவு அருந்தவில்லை என்றால் நமது உடல் சோர்வடையுமே தவிர இளைக்காது. அது மட்டுமின்றி, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைக் கட்டுக்குள் வைப்பது மிகக் கடினம்.

இதற்குப் பதிலாக, நாம் எதிர்மறைக் கலோரி உணவினைச் சாப்பிடவேண்டும். அது சரி, நெகடிவ் கலோரி உணவு என்றால் என்ன? அதைப்பற்றி முத­ல் தெரிந்துகொள்வோம்.

நெகடிவ் கலோரி உணவு என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, நம் உட­ல் ஆற்றலாகச் சேமிக்கப் படுகிறது. வேலை செய்கையில், இந்த ஆற்றல் செலவழிக்கப்படுகிறது. உணவின் மூலம் பெறும் ஆற்றல் அதிகமாகவும், நாம் செய்யும் வேலைகளில் செலவு செய்வது குறைவாகவும் உள்ளபொழுது, அளவுக்கு அதிகமான ஆற்றல் கொழுப்பாக மாறி நம் உடம்பில் தங்கி, நம்மை குண்டாக்கிவிடுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும், ஒவ்வொரு அளவில் நமது சக்தி செலவாகிறது என்று சொன்னேனல்லவா? அதில், உணவைச் செரிக்கச் செய்யும் வேலையும் அடக்கம்.

பொதுவாக, நாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ள கலோரிகளை விட, அந்த உணவைச் செரிக்கத் தேவைப்படும் கலோரிகள் குறைவுதான். இதனால், உட­ன் ஆற்றல் அளவு ( இந்த ஆற்றல் / சக்தியை, நாம் பணி புரியவோ, நீண்ட தூரம் நடக்கவோ தேவைப்படும் சக்தியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) அதிகரித்து, உடலைப் பருக்க வைக்கிறது.

ஆனால், நாம் சாப்பிடும் சில உணவுகளில் உள்ள கலோரிகள் குறைவாகவும், செரிமானத்திற்கு நம் உடம்பால் பயன்படுத்தப்படும் சக்தி அதிகமாகவும் இருக்கும். அதாவது, நம் உட­ல் சேமிக்கப்பட்டுள்ள அதிகப்படி சக்தியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, நம் உடலை இவ்வகை உணவுகள் ஆளாக்குகின்றன. இவற்றையே நெகடிவ் கலோரி உணவுகள் என்கிறோம். இந்த வகை உணவுகளை எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் உட்கொள்கிறோமோ அந்த அளவு, உட­ல் சேமிக்கப்பட்டுள்ள அதிகப் படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது.

பொதுவாக, அநேகமான காய்கறிகள், பழங்கள் நெகடிவ் கலோரி வகையைச் சேர்ந்தவையே. (காய்கறிகள் - காரட், பீன்சு, முட்டைக்கோசு (cabbage), பூக்கோசு (cauliflower), வெள்ளரிக்காய், கீரைவகைகள், தண்ணீர் விட்டான் கிழங்கு (asparagus), பீட்ரூட் முதலி­யன. பழங்கள் - ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி முத­லியன). வாரத்தில் ஒரு நாள் வெறும் பழங்கள் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது அல்லது இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுவது என்று பழக்கமாக்கிக் கொண்டால், கணிசமாக எடை குறைவதைக் காணலாம். அது மட்டுமன்று. இத்தகைய உணவுகள் உங்கள் செரிமான உறுப்புக்களை சுத்தம் செய்கின்றன. உங்கள் சருமத்தைப் பாதுகாக்கின்றன. மொத்தத்தில் உங்கள் உடல் எடை குறையவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நெகடிவ் கலோரி உணவுகள் உதவுகின்றன.

பட்டினி கிடப்பதற்குப் பதில், நிறையச் சாப்பிடுங்கள், நெகடிவ் கலோரி உணவுகளை.

உடல் பருமன் சுட்டி (BMI) என்றால் என்ன?

உடல் நிறைக்கும், உயரத்திற்கு இடையிலான விகிதம், சுகாதாரத்தில் ஒரு காட்டியாக ஏற்றுகொள்ளப்படும். இது உட­லுள் கொழுப்பின் விகிதாசாரத்தை கணிக்காது.

உடல் பருமன் சுட்டி (BMI) உடல் நிறையை (கிலோ கிராமில்) உயரத்தின் வர்க்கத்தால் (மீற்றரில்) வகுப்பதால் கணிக்கப்படும்.

18-23 இலான உடல் பருமன் சுட்டியே (BMI) - வயது வந்தோரின் சாதாரணமாகும்.

உடல் பருமன் சுட்டி (BMI)  = நிறை (Kg) / உயரம் (m2)

உடல் பருமன் சுட்டி (BMI) கூட்டம் (பிரிவு), சுகாதர பிரச்சினை

18 வயதிற்குள் குறைநிறை அதிகம்

18-23 சாதாரண நிறை குறைவு

23-25 அதிக நிறை அதிகம்

25 வயதிற்க்கு மேல் மிக அதிக நிறை மிக அதிகம்

காரணங்கள்:

* சீரற்ற உணவு பழக்கவழக்கங்கள்..

* உண்ணுதல் சம்பந்தமான நோய்கள் (Anonexin, Bulimia)
* நோய்கள் - (காச நோய், புற்று நோய், நீரிழிவு நோய்)

* மன உளைச்சல, படபடப்பு.

* தைரொயிட் செயற்பாடு அதிகரித்தல்.

* எயிட்ஸ்.

அதிக நிறை என்றால் என்ன?

உடல் பருமன் சுட்டி 23-25 Kg/ m2  இடையில் இருத்தல்.

இது சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது.

காரணங்கள்:

* அதிகம் உண்ணுதல்.

* குறைவான உடற்பயிற்சி.

* சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை.

* வேறு உணவுகள் உட்கொள்ளல்.

* தைரொயிட்ட செயற்பாடு குறைதல்.

* மன உளைச்சல்

மிக அதிக உடல் பருமன் என்றால் என்ன?

அதிகப்படியான காணப்படும் கொழுப்பு, உட­ல் சேகரிக்கப்படுவதால் அது சுகாதாரத்தில் ஒரு பாதிபை ஏற்படுத்தும், மற்றும் மனிதனின் ஆயுட்காலத்தை அது குறைக்கும்.

குறைநிறை என்றால் என்ன ?

உடல் பருமன் சுட்டி 18Kg/m2 இலும் குறைவாக காணப்படுதல்.

பாதிக்கும் லி வயிற்று சுற்றளவு (Waist Circumference)
ஆண்களில் > 89 Cm

பெண்களில் > 79 Cm

-வயிற்று - இடுப்பு விகிதம் (Waist hip ratio)

 0.8 (ஆண்களில்)

 0.7 (பெண்களில்)

உடல் பருமன் சுட்டி 25 Kg/m2  என்பது மிக அதிக நிறை உடையவர்கள்.

நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள்

1. உடல் பயிற்சி. உட­லுள் கலோரிகள் எரிக்கப்படுவதற்கு அசைவு தேவை. அன்றாட, மெதுமையான உடற்பயிற்சி இதற்கு உறுதுணையாக இருக்கும்.

விளையாட்டு: எதாவது ஒரு விளையாட்டு ( நீச்சல், சையிக்கிள் ஒட்டம்.)

2. கால தாமதமற்ற தூக்கம். தூக்கம் உட­ன் செயற்பாட்டில் மிக முக்கியம், எனவே, அன்றாடம் சரியான தூக்கம் அவசியம்.

3. மரக்கறி பழ வகைகள் உண்ணுதல்; மாமிசம், உப்பு, சீனி குறைத்து கொள்ளுதல். மரக்கறி பழ வகைகளில், உடலுக்கு தேவையான விட்டமின்களும், கனியுப்புக்கள் மற்றும் நார் பொருட்டகள் காணப்படும். இவை, பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். மற்றும் உட­ல் கலோஸ்ட்ரோல் சமநிலைக்கும், உணவு கால்வாய் தொகுதியின் செயற்பாட்டிற்கும் உதவும். எனவே, உணவுகளில் மரக்கறிகளை அதிகரித்து கொள்ளுங்கள். ஸீன்று நிறங்களிலான பழ மற்றும் மரக்கறி வகைகளை தேர்ந்தெடுத்து கொள்க. ஐந்து வேறுபட்ட பழ மற்றும் மரக்கறிகள். பச்சை இலைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்க. வேறுபட்ட தாவர பகுதிகளை உட்கொள்க, இலைகள், தண்டு, வேர், பூ மற்றும் பழம்.

4. மன உளைச்சலை தவிர்த்து கொள்க. உங்கள் பிரச்சினைகளை நம்பத்தகுந்த ஒருவரிடம் பகிர்ந்து கொள்வது.

5. நீர் பருகுதல் - ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து குவலை நீர் அருந்த வேண்டும். இது உயிரின் முக்கிய ஒருகூறு என்பதால் அதிகம் தேவைப்படும்.

வெற்றுக்கலோரி (Empty calories)  உணவு என்றால் என்ன?

வெற்றுக்கலோரி உணவு என்பது அதிக கலோரியும், குறைந்த அத்தியாவசிய நுண் சத்துக்களும் கொண்ட உணவு ஆகும்.

வெற்றுக்கலோரி உணவுகளில் சில::

* வறுத்த, பொரித்த கோழி

* சிப்ஸ்

* எண்ணெயில் பொரித்த உணவுகள்

* துரித உணவு வகைகள்

* மிட்டாய், பதப்படுத்தப்பட்ட இனிப்புகள், ஐஸ்கிரீம்

* வெள்ளை கோதுமை ரொட்டி, அரிசி சாதம்

* வெண்ணை, நெய்

மாறாக,

* பொரித்த உணவுக்கு பதில் அவித்த உணவுகள் - அவித்த தோ­ல்லாத கோழி, அவித்த காய்கறிகள்

* இனிப்பான குளிர்பானங்களுக்கு பதில் புதிய இனிப்பு சேர்க்காத பழச்சாறு

* முழு தானிய ரொட்டிகள், முழு தானிய உணவுகள்  இவற்றில் நார்ச்சத்து மற்றும் நுண் சத்துகள் அதிகம் உள்ளன.

* கொறிக்கும் உணவுகளூக்கு பதில் பழங்களைச் சாப்பிடலாம்.

''ப்ரைடு'' உணவுகளால் பாதிப்பா?

''ப்ரைடு'' உணவுகளா? உஷார் நீங்கள் ஆணா, பெண்ணா, டீன் ஏஜா, அடிக்கடி ''ப்ரைடு'' அயிட்டங்கள் வெளுத்துக்கட்டுவீர்களா? ஆண்களாக இருந்தால், அவர்களுக்கு ஐம்பதை தாண்டியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று தான் வரும். ஆனால் பெண்களுக்கு, அவர்கள் திருமணத்துக்கு பின்னர் ''வேலையை'' காட்டிவிடும்.

இதை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்லும் சில எச்சரிக்கை தகவல்கள்:

* சில ''ப்ரைடு'' உணவு வகைகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியமற்ற கொழுப்பு. ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கும்.

* இதை ''டிரான்ஸ் ஃபேட்'' என்பர். ப்ரைடு ரைஸ் (Fried rice), ப்ரைடு சிக்கன் (Fried chicken),  குக்கீஸ், பாஸ்ட்சுஸ் போன்றவற்றில் இருக்கும். இது ரத்த நாளங்களில் பதிந்து சுருக்கிவிடும்.

* கருப்பை தொடர்பான மலட்டுத் தன்மையை இந்த ''ப்ரைடு'' உணவுகளால் ஏற்படும் ''டிரான்ஸ் பேட்'' எனப்படும் கொழுப்பு அதிகரிக்கும்.

* வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த கொழுப்பு சேர்ந்தால் போதும், அதனால் இரண்டு மடங்கு மலட்டுத் தன்மை பாதிப்பு வரும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரிகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் அதிகமாக 300 கலோரி தேவை.

16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு முழு உடல் எடைக்கு தினமும் 2200 கலோரி தேவை.

''நகரத்தில் உள்ள ஒருவர் சராசரியாக 2100 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும். கிராமத்தில் உள்ளவர் சராசரியாக 2400 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும்.

சுமார் ஒரு ­ட்டர் கொள்ளளவு உள்ள கிண்ணத்தில் இருக்கும் சோற்றில் 700 கலோரி சக்தி இருக்கிறது.

ஒரு வேளைக்கு ஒரு கிண்ணம் என்று மூன்று வேளைக்கு மூன்று கிண்ணம் வெறும் சோறு சாப்பிட்டால் 2100 கலோரி சக்தி கிடைத்துவிடும்.

அதேபோல் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து தேவையான அளவும் வித்தியாசப்படும்.

உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 1200 கிலோ கலோரி தேவைப்படும் என்றால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு 1500 வரை தேவைப்படும். ஆண்களுக்கு வேலையைப் பொறுத்து 1800 ­ருந்து 2000 கிலோ கலோரி தேவைப்படும்.

ஒருவருக்கு எவ்வளவு கலோரி தேவைப்படுகிறது

ஒருவருக்கு எவ்வளவு கலோரி தினமும் தேவைப்படுகிறது என்பதை ''ஹாங்ஸ் பெனடிக்ட் பார்முலா''படி டாக்டர்கள் முடிவு செய்கின்றனர். உடலுக்கு கலோரியும் தேவை, உடல் எடையும் கூடிவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கலோரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

* உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrates), புரோட்டீன், கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து கலோரி கிடைக்கிறது.

* உட­ன் எரிசக்தியான கலோரி (Calorie),  பல வகை இயக்கங்களுக்கும் தேவை என்றாலும், அது அதிகமாகிவிட்டால், கொழுப்பாக மாறிவிடும்.

* புரோட்டீன் (protein), கார்போஹைட்ரேட்டின் ஒரு கிராமில் நான்கு கலோரி (Calorie)  உள்ளது. கொழுப்பில் தான் அதிக கலோரி, அதாவது, ஒன்பது கலோரி உள்ளது.

* நீங்கள் சாப்பிடும் முறை, அதனால், உடல் கூடுவது, உடல் உழைப்பு போன்றவற்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட­ல் கலோரியை சேர்க்கக் கூடாது. சேர்ப்பதால் தான் கொழுப்பு கூடி, உடல் எடை கூடுகிறது.

* ஒருவருக்கு எடை கூடிவிட்டது என்றால், அதை போக்க கலோரியை ''எரிக்க'' வேண்டும். உடற்பயிற்சி, ட்ரெட் மில், வாக்கிங் என்று வியர்வை சிந்தி தான் உட­ல் ''கொழுப்பாக தேங்கிய'' கலோரியை எரிக்க முடியும்.

* ஒருவர் ஒரு பவுண்ட் எடையை குறைத்துள்ளார் என்றால், 3500 கலோரியை எரித்து இருக்கிறார் என்று அர்த்தம். உடற்பயிற்சியால், ஒரு வாரத்தில் இதை செய்ய முடியும்.

அதனால், உங்கள் உடல் இயக்கத்துக்கு தேவையான கலோரிகளை சீராக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க சீரான உணவுப் பழக்கங்கள் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளாக சாப்பிட்டால், அதிக கலோரி சேர்ந்து, அதிக கொழுப்பு சேரும்.

அப்படி கொழுப்பு சேர்ந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாமே, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என்று தொடர்ந்துக்கொண்டே செல்லும்.

கலோரி என்றால், எங்கிருந்தும் கிடைக்கவில்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மூலம் 50 முதல் 60 சதவீதம் வரை கலோரி கிடைக்கிறது. புரோட்டீன் மூலம் 20 சதவீதம், கொழுப்பு மூலம் 15 முதல் 20 சதவீதம் கிடைக்கிறது.

கலோரின் உணவுக்கு உணவு மாறுபடும். அதேபோல் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து, தேவையான அளவும் வித்தியாசப்படும்.

பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்

பால் பொருட்கள்:

பால் ஒரு கப் - (225 மி­) 150 கலோரி

வெண்ணெய் 1 டீ ஸ்பூன் - 150

நெய் 1 டீ ஸ்பூன் - 45

தயிர் - 51

பசும்பால் - 65

டீ (ஒரு கப்) - 79

காபி (ஒரு கப்) - 98

ஸ்கிம் மில்க் - 35

பழங்கள்:

ஆப்பிள் (சிறியது) - 50-60

வாழைப்பழம் (நடுத்தரம்) - 100-120

திராட்சை பழங்கள் (சிறியது) 15-50-60

மாம்பழம் (சிறியது) - 100-120

ஆரஞ்சு (நடுத்தரம்) - 50-60

ஜூஸ் வகைகள்

ஆப்பிள் ஜூஸ் - 55

திராட்சை ஜூஸ் - 55

மாம்பழ ஜூஸ் - 58

ஆரஞ்சு ஜூஸ் - 44

பைனாப்பிள் ஜூஸ் - 52

கரும்பு ஜூஸ் - 36

தக்காளி ஜூஸ் - 17

தேங்காய் பால் - 76

இளநீர் - 24

சமைத்த பண்டங்கள்:

அரிசி 25 கிராம் - 80

சப்பாத்தி 1-க்கு - 80

காய்கறிகள் 150 கிராம் - 80

வெஜிடபிள் பிரியாணி ஒரு கப் - 200

அசைவ உணவுகள்:

மீன் 50 கிராம் - 55

இறைச்சி - 75

முட்டை - 75

மட்டன் பிரியாணி ஒரு கப் - 225

கோழிக்கறி 100 கிராம் - 225

மற்ற பண்டங்கள்:

இனிப்பு பிஸ்கட் 15 கிராம் - 70

கேக் 50 கிராம் - 135

கேரட் அல்வா 45 கிராம் - 165

ஜிலேபி 20 கிராம் - 100

ரசகுல்லா - 140

இப்படிக்கு
என். ராஜ் முஹம்மது எம்.ஐ.எஸ்.ஸி,

Monday, January 16, 2012

கிறித்தவ விவாதம் நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ், நாளை தொடங்கி இரண்டு நாட்கள் கிறித்தவர்களுடன் நடைபெறும் விவாதம் ஆன்லைன் பீஜே மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடைபெறும் இவ்விவாதத்தை பாருங்கள் மற்றவர்களையும் பார்க்க செய்யுங்கள். 

தானே புயல் நிவாரண களத்தில் TNTJ (வீடியோ)

தானே புயலின் பாதிப்பை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை நேடியாக வழங்கி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் நேர்காணல், சேதமைந்த காட்சிகள், முதல் கட்ட நிவாரண உதவிகள் வழங்கும் நிகழச்சிகள் உள்ளிட்ட வீடியோ தொகுப்பு




தானே புயல் நிவாரண களத்தில் TNTJ (வீடியோ







குறிப்பு தானே புயலி்ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் அதிரை கிளை நிர்வாகிகளிடம் உங்கள் உதவிகளை அளித்தால் அதை தலைமையிடம் ஒப்படைத்து அதற்குரிய ரசீது பெற்றுத்தரப்படும்

தொடர்புக்கு  9943447195, 9677630322, 9629533887,

Sunday, January 15, 2012

வரதட்சணை ஒழிப்பு மாநாடு - அதிரை (வீடியோ)

பாகம்-1



பாகம்-2


Saturday, January 14, 2012

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

அப்துன் நாஸர் M.I.Sc, பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி
மேலப்பாளையம்.



இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன.

கூட்டுக் குடும்பமாக நாம் வாழ்ந்து வந்தாலும் அதில் மார்க்கம் கூறுகின்ற ஒழுக்க மாண்புகளை முறையாகப் பேணிப் பின்பற்றினால் இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்தும் நம் சமுதாயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தங்கை உறவா? தடுக்கப்பட்ட உறவா?

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் பெண் மக்களை உடன் பிறந்த அக்கா, தங்கை போன்று கருதி அவர்களோடு நெருங்கிப் பழகி வருகின்றனர். வீடுகளில் தனிமையில் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது, வாகனங்களில் பின்னால் வைத்து அழைத்துச் செல்வது போன்று பல விதங்களில் கலந்து பழகி வருகின்றனர். இத்தகைய பழக்க வழக்கங்கள் பல நேரங்களில் அவர்களுக்கு மத்தியில் தவறான தொடர்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அல்லது ஒரு தந்தைக்குப் பிறந்தவர்கள் மற்றும் பால்குடிச் சகோதரர்களுக்கு மத்தியில் தான் அண்ணன் தங்கை உறவு ஏற்படுமே தவிர மார்க்க அடிப்படையில் வேறு யாருக்கு மத்தியிலும் அண்ணன் தங்கை உறவு ஏற்படாது.

திருமணம் செய்வதற்கு தடுக்கப் பட்ட உறவுகளை திருமறைக் குர்ஆன் விவரித்துள்ளது. இந்த உறவினர்களை மணக்க அனுமதியில்லை.

ஆண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்

1. தாய், 2. மகள், 3. சகோதரி, 4.தாயின் சகோதரி, 5. தந்தையின் சகோதரி, 6. சகோதரனின் புதல்விகள், 7. சகோதரியின் புதல்விகள், 8. பாலூட்டிய அன்னையர், 9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள், 10. மனைவியின் தாய், 11. மனைவியின் புதல்வி, 12. மகனின் மனைவி, 13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்:

1. தந்தை 2. மகன் 3. சகோதரன் 4. தாயின் சகோதரன் 5. தந்தையின் சகோதரன் 6. சகோதரனின் மகன் 7. சகோதரியின் மகன் 8. பாலூட்டிய அன்னையின் கணவன் 9. பாலூட்டிய அன்னையின் மகன் 10. கணவனின் தந்தை 11. கணவனின் புதல்வன் 12. புதல்வியின் கணவன் 13. சகோதரியின் கணவனை, சகோதரியுடன் வாழும் போது மணப்பது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:23

இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.

அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.

அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களானால் அவர்களை மணக்கக் கூடாது.

இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவு முறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2451, 4719

இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.(பார்க்க: புகாரி 4719)

மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.

மேற்கண்ட பட்டியலில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் இடம் பெறவில்லை. இதிலிருந்து பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் அந்நியப் பெண்களே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களைத் திருமணம் செய்வது ஆகுமானதாகும்.

ஆனால் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஹராமாக்கி வைத்துள்ளனர். இதனை எந்த ஆலிம்களும் வெள்ளி மேடைகளில் கண்டித்து உரையாற்றுவது கிடையாது. யாராவது பேசினாலும் அவர்களை ஒரு விதமாக பார்க்கக் கூடிய நிலை தான் காணப்படுகிறது.

எனவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அந்நிய ஆணும் பெண்ணும் அண்ணன் தங்கை போன்று கலந்து வாழ்கின்ற இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே:

அது போன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அண்ணியை அன்னை போன்றோ அக்கா போன்றோ கருதி அவர்களோடு நெருங்கிப் பழகக்கூடிய நிலையும் அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய உறவும் பலவிதமான தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாக அமைகின்றது. இவ்வாறு கலந்துறவாடுவது மார்க்கம் காட்டுகின்ற மாண்பிற்கு எதிரானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி 5232


அனுமதி கோரல்:

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் மார்க்கத்திற்கு எதிரான பல்வேறு நடைமுறைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒன்று, வீடுகளுக்குள் நுழையும் போது பேண வேண்டிய ஒழுக்கங்கள் பின்பற்றப் படுவதில்லை.

கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் அதற்குரிய தனித்தன்மை காக்கப்பட வேண்டும். அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் தனித் தனி அறைகளை ஏற்பாடு செய்து, மார்க்கம் கூறுகின்ற ஒழுக்கங்களை அங்கு மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்தால் பல்வேறு விதமான ஒழுக்கச் சீர்கேடுகள் அரங்கேறுவதை விட்டும் நம் குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் வீடுகளுக்குள்ளோ மற்றவரின் அறைகளுக்குள்ளோ செல்லும் போது அனுமதி பெற்றுச் செல்வதாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)

அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.

கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ''திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)

இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார். 'நான் வாசல் தேடி வந்தேன்; உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நிற்க வைத்தே அனுப்பி விட்டார்' என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றிக் குறை கூறிப் பொறுமுகின்றார். இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கு அவர் இடமளிக்க மாட்டார்.

தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்:

வாசலில் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டுத் தன் பெயரை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மொட்டையாக 'நான் தான்' என்று கூறக் கூடாது.

என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், ''யாரது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''நான் தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''நான் தான் என்றால்...?'' என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 6250

மூன்று முக்கிய நேரங்கள்:

கூட்டாக வாழ்கின்ற வாழ்க்கையில் நம்முடைய குழந்தைகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்கங்களையும் நாம் அவர்களுக்கு முறையாகக் கற்பிக்க வேண்டும். பின்வரும் வசனத்தில் மூன்று நேரங்களில் குழந்தைகள் கூட அனுமதி பெற்றுத் தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:57, 58)

இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும். இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்கள் அனுமதி பெறாமல் வரலாமா?

மூன்று முறை அனுமதி கோரல்:

நான் அன்சாரிகளின் அவை ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். ''நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது வீட்டிற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி), ''(உங்களை வரச் சொல்லியிருந்தேனே) நீங்கள் ஏன் வரவில்லை?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப் படவில்லை. ஆகவே நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும். அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்றால் அவர் திரும்பி விடட்டும்'' என்று கூறியுள்ளார்கள்'' என்று கூறினேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வர வேண்டும்'' என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?'' என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சி சொல்ல) வருவார்'' என்று சொன்னார்கள். அங்கு நான் தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே நான் அபூமூஸா (ரலி) அவர்களுடன் சென்று, ''நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்'' என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 6245



பார்வையை உள்ளே செலுத்தாதிருத்தல்:

ஒருவர் இன்னொருவர் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் நுழைவதற்கு அனுமதி பெறுவதற்கு முன், வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் அந்நியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடக் கூடாது என்பது தான் நபி (ஸல்) அவர்களது கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்ப்பதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ''நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலுள்ளவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி 5294



பார்வையைப் பறித்தாலும் பாவமில்லை:

இதனையும் மீறி பார்வையை உள்ளே செலுத்துபவர் மீது கையில் இருப்பதை விட்டெறிந்து கண்ணைப் பறித்தால் கூட தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களது கட்டளை அமைந்துள்ளது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்முனையுடன் அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்துவதற்குச் சென்றதை இப்போதும் நான் பார்ப்பது போல் உள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 6242


உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அபுல்காஸிம் (முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6902

அடுத்தவர் வீட்டுக்கு ஒருவர் செல்லுகையில் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதருடைய கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரையைத் தொங்கவிடுதல்:

வீட்டிற்கு வருபவருக்கென்று ஒழுங்கு முறைகள் இருப்பது போல் வீட்டில் உள்ளவருக்கும் அனுமதியளிக்கும் விஷயத்தில் வரைமுறைகள், ஒழுங்கு முறைகள் உள்ளன. வீட்டில் இருப்பவர்கள் வருவோர், போவோர், தெருவில் கடந்து செல்வோர் யாரும் பார்வைகளைச் செலுத்துவதற்கு வசதியாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. திரைகளைத் தொங்கப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வசனங்களிலும், ஹதீஸ்களிலும் வீட்டில் இருப்பவர்களும் இது போன்று அடுத்தவர் பார்வையில் படும்படி இருக்கக் கூடாது என்பதையும் சேர்த்தே தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்களது வீட்டிலும், அவர்களது மகளார் பாத்திமா (ரலி) வீட்டிலும் திரைகள் தொங்கிக் கொண்டிருந்ததை புகாரி மற்றும் இதர நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

தமிழகத்தின் சில பகுதிகளிலுள்ள முஸ்லிம் பெண்களிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் பேருந்துகளில் செல்லும் போது தாடி, தலைப்பாகையுடன் யாரேனும் பேருந்தில் ஏறினால் அப்பெண்கள் தங்கள் புர்க்காவை நன்கு இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள். வெட்கப்படுவதற்கு இவர்கள் மட்டும் தகுதியானவர்கள், மற்றவர்கள் கிடையாது என்ற போங்கில் இவர்களது இந்தச் செயல் அமைந்திருக்கும். அது போல் இன்று புர்கா சட்டத்தைப் பேணக் கூடிய முஸ்லிம்கள் குறிப்பாக குர்ஆன், ஹதீஸைப் பேணக் கூடியவர்களின் வீட்டிலும் ஒரு விநோதம் நடக்கின்றது.

ஓரளவுக்கு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள் வந்தால் ஒழுக்க மரியாதையுடன் முறைப்படி அனுமதி அளிக்கின்றனர். பேணுதலுடன் நடந்து கொள்கின்றனர்.

ஆனால் அதே சமயம் கார் டிரைவர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், பூக்காரர்கள், வளையல்காரர்கள், சிட்டை வட்டிக்காரர்கள், தங்கள் வயல்களில் உழும் விவசாயிகள், வயர்மேன்கள், பிளம்பர்கள் குறிப்பாக பொற்கொல்லர்கள் ஆகியோர் சர்வ சாதாரணமாக வீட்டிற்கு வந்து செல்கின்றார்கள். இவர்களைப் பெண்கள் கண்டு கொள்வதே கிடையாது. இத்தகையவர்கள் சமையலறை வரை சர்வ சாதாரணமாகப் பவனி வருகின்றார்கள்.

பெண்கள் அடுக்களையில் சமையல் பணியில் இருக்கும் போது முற்றிலும் தங்கள் ஆடைகளைச் சரி செய்து கொண்டு நிற்க இயலாது. இது போன்ற கட்டங்களைப் பெண்களும் வெட்கப்படுவதற்குரிய கட்டங்கள் என்று கருதுவது கிடையாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்நிய ஆண்களை சர்வ சாதாரணமாக வீட்டிற்குள் அனுமதிப்பது இறைக் கட்டளைக்கு மாற்றமானதாகும்.

இதற்கெல்லாம் காரணம், அல்லாஹ்வின் கட்டளையை முழுமையாக உணர்ந்து செயல்படாதது தான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். அல்குர்ஆன் 24:31

இந்த இறைக் கட்டளையைப் பெண்கள் பேணி நடக்க வேண்டும். இந்த இறைக் கட்டளைகளைப் பேணி நடந்தால் நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாக, ஒழுக்கமான வாழ்க்கையாக, மறுமையில் வெற்றி பெறக் கூடிய வாழ்க்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Friday, January 13, 2012

சுயபரிசோதனை




நபிவழித் திருமணம்

அதிரை கிளைச்சார்பாக கடற்கரைத்தெருவில் சகோதரர் Y அன்வர் அலி (மாவட்டத்தலைவர்) அவர்களின் சகோதரியின் மகன் அஸ்வத்கான் அவர்களுக்கு நபிவழிப்படி 11.01.2012 புதன் அன்று காலை 11.00 மணிக்கு மஹர் கொடுத்து திருமணம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத திருமண சடங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.




Thursday, January 12, 2012

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ரூ.10 லட்சம் நிதியுதவி


சென்னை: தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் புதுவை பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிதியுதவி அளித்துள்ளது. 

இது குறித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் டிசம்பர் 31ம் தேதி முதல் அந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையைச் சேர்ந்தவர்கள் உடனடியாகக் களமிறங்கி அந்த மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர், பால், உணவு ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர். இன்னும் சில கிளைகளில், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தானே புயலால் வீடுகளை இழந்தவர்களும், கூரைகள் இடிந்தவர்களும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

10 லட்சம் நிதியுதவி 

அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாநிலச் செயலாளர்கள் எழும்பூர் சாதிக், அம்பத்தூர் யூசுப், மவ்லவி ஜமால், சமூக ஆர்வலர் தஸ்தகீர், துறைமுகம் கிளைத் தலைவர் ஷரீப் ஆகியோர் அடங்கிய நிவாரணக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கியது. தானே புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்டனர். 

பண்ருட்டி பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ. 2,000த்தை முதல் கட்ட நிவாரண உதவியாக வழங்கினார்கள். இதுவரை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மற்றும் புதுவையில் உள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர்.

நன்றி: தட்ஸ்தமிழ்

மேலும் விபரங்களுக்கு:


கீழத்தெரு தெருமுனை பிரச்சாரம் (விடியோ)

கீழத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் நிகழ்த்திய உரை

தமுமுக தவ்ஹீத் ஜமாஅத் பிளவு ஏன்?

தவ்ஹீத் ஜமாஅத் தமுமுக பிளவுக்கு என்ன காரணம்? விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்.

Wednesday, January 11, 2012

பதில் அளிக்க முடியாமல் ஒடி ஒளிந்த ஸலஃபி மத்ஹபினர்!

அதிரை ஸலஃபிகள் என்ற ஜாகில்கள் கூட்டம் எவ்வாறு ஒட்டம் எடுத்தது என்பதை அறிய கீழே உள்ள ஆக்கங்களை பார்வையிடவும்.


ஆர்ப்பாட்டம் ஹராமா? கூறுகெட்ட ஸலஃபிகளின் குதர்க்கவாதம்

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் தரக்கூடாது, ஆனால் தரலாம் - உளறும் குழப்பி கூட்டம்

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா? ஸலஃபி பக்தர்களின் அறியாமை!

ஸலஃபிகளே ஸஹீஹான ஹதீசை செயல்படுத்துங்கள் (மறுக்காதீர்கள்)!

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதின் பொருள் என்ன?

பிஜேவின் ஆசிரியர் யார்? ஆசிரியரை வைத்து தான் நேர்வழி தீர்மானிக்கபடுமா?

ஸலஃபி கொள்கை சரியா?

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?

யஹ்யா சில்மியின் விமர்சனம் என்ன?

ஆர்ப்பாட்டம் ஹராமா? கூறுகெட்ட ஸலஃபிகளின் குதர்க்கவாதம்


ஆர்பபாட்டம் ஹராம் என்று மார்க்கத்தின் அடிப்படை கூட தெரியாத அதிரை குழப்பிகள் கூட்டம் ஃபத்வா வழங்கியுள்ளது.

பொதுவாக, தவ்ஹீத் ஜமாஅத் மெண்டல்களை கண்டுகொள்வது இல்லை. அந்த அடிப்படையில், இவர்களை நாம் கண்டுக்கொள்ளவில்லை. ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் சிலர் இருப்பதால், இவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், எமது தெளிவான பதில்களை நாம் கொடுத்தேம். நமது பதில்களில் மரணஅடி வாங்கிய இந்த குழப்பி கூட்டம், இப்போது தலை கால் புரியாமல் உளறுகிறது.

கப்ர் வணங்கி கூட தனக்கு பதில் தெரியாவிட்டால், வெட்கப்படுவான். இந்த குழப்பி கூட்டத்திற்கு வெட்கம் மானம் சூடு சுரனை என்று எதுவுமே கிடையாது. நாம் எங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுங்கள் என்றால், பழைய சரக்குகளை காப்பி போஸ்ட் செய்வதை தவிர இவர்களால் ஒன்று செய்ய முடியாது. 

இவர்கள் இறுதியாக எடுத்துவைத்த வாதம், ஆர்ப்பாட்டம் ஹராமாம். குர்ஆன் ஹதீஸில் அடிப்படையில் தவறு என்று நிறுவ வேண்டும். அதைவிடுத்து, இவர்கள் மார்க்க அறிஞர் என்று கருதும் ஒருவரின் ஃபத்வாவை அப்படியே உண்டு கக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் எடுத்துவைத்த ஃபத்வா இது தான்:

கேள்வி : இஸ்லாமிய உம்மத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஆர்ப்பாட்ட பேரணிகளை உருவாக்குவது தஃவா வழிமுறையை சார்ந்ததா ? 

பதில் : எங்களுடைய மார்க்கம் குழப்பமானது அல்ல . எங்களுடைய மார்க்கம் ஒழுக்கமானது, ஒழுங்கானது, சாந்தமானது, அமைதியானது. இந்த பேரணி ஆர்பாட்ட ஊர்வலங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை சேர்ந்தது அல்ல.இன்னும், முஸ்லிம்கள் அதற்கு பரீட்சியமானவர்களும் அல்ல . 

எனவே, இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், கருணையான மார்க்கம், ஒழுக்கமான மார்க்கம். குழப்பமான , ஒழுங்கில்லாத , பித்னாக்களை உண்டு பண்ணக் கூடிய மார்க்கம் அல்ல . அது தான் இஸ்லாம். உரிமைகள் , ஷரியாவில் சொல்லித்தரப்பட்ட, அனுமதித்த வழிமுறையில் கேட்டு பெறப்படும். இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல. 

ஷேக் ஸாலிஹ் அல் பவுஸான் ஹபிதஹுல்லாஹ்.
மஜ்மூ ' பதாவா வ ரசா 'இல் பாகம் 2 , இலக்கம் 141, 143, 146

நமது விளக்கம்:

//கேள்வி : இஸ்லாமிய உம்மத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஆர்ப்பாட்ட பேரணிகளை உருவாக்குவது தஃவா வழிமுறையை சார்ந்ததா ? 

பதில் : எங்களுடைய மார்க்கம் குழப்பமானது அல்ல . எங்களுடைய மார்க்கம் ஒழுக்கமானது, ஒழுங்கானது, சாந்தமானது, அமைதியானது. இந்த பேரணி ஆர்பாட்ட ஊர்வலங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை சேர்ந்தது அல்ல.இன்னும், முஸ்லிம்கள் அதற்கு பரீட்சியமானவர்களும் அல்ல . 

எனவே, இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், கருணையான மார்க்கம், ஒழுக்கமான மார்க்கம். குழப்பமான , ஒழுங்கில்லாத , பித்னாக்களை உண்டு பண்ணக் கூடிய மார்க்கம் அல்ல . அது தான் இஸ்லாம். உரிமைகள் , ஷரியாவில் சொல்லித்தரப்பட்ட, அனுமதித்த வழிமுறையில் கேட்டு பெறப்படும்.//

மேலே சொல்லப்பட்டுள்ள எல்லா விஷயத்தையும் நாங்கள் ஏற்கிறோம்.

//இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல. //

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய எந்த பேராட்டத்திலும் இதுவரை இரத்தம் ஒட்டப்படவில்லை. முஸ்லிம்களின் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தப்படவில்லை என்பது மெண்டல்களாகிய அதிரை குழப்பி கூட்டம் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களின் புஷ்வான ஃபத்வா இது தான். இந்த ஃபத்வா வழங்கிய அறிஞரை நாம் குறை கூறவில்லை. காரணம், இந்த ஃபத்வா முஸ்லிம்களின் நாடுகளில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்ற பெயரில் மக்களும் அரசுகளும் மோதிக்கொண்டன, அதை தான் ஃபத்வா கண்டிக்கிறது.

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற உங்களின் அடிப்படையில் கொள்கைக்கு ஆதாரம் தர முடியாத நீங்கள், இது போன்று சம்பந்தம் இல்லாத ஃபத்வாகளை காட்டி மக்களை மடையர்களாக ஆக்க வெட்கப்பட வேண்டும்.

மேலே உள்ள ஃபத்வாவை காட்டி உளறிவிட்டு, மட ஸலஃபி சில அவதூறான வரிகளை எழுதியுள்ளார்.

மட ஸலஃபியின் வரிகள்:

//இந்த ஆர்பாட்ட வழிமுறைகள் உலகுக்கு அறிமுக படுத்தியவர்கள் காந்தியும் லெனின் போன்றவர்களும் ஆவார்கள். இந்த வழிமுறைகளை கையாண்டு , தமது உரிமை வெல்ல என்ற பெயரில் முஸ்லிமான ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகின்றனர். அத்தோடு , இஸ்லாம் வன்மையாக தடுத்த உருவம் 
செதுக்குவதை கூட கையாண்டு , அந்த உருவங்களை எரித்து முழுமையாக இறை மறுப்பாளர்களின் வழிமுறையை கையாண்டு அமைதி போராட்டம் என்று வேறு பெயரிட்டு கொள்கிறார்கள். //

ஒரு விஷயத்தை பற்றி எழுதும் போது, செய்திகளை ஆராய்த்து எழுத வேண்டும். இந்த மட கூட்டத்திற்கும் மார்க்க அறிவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உலக அறிவும் சைபர் தான்.

பேராட்டத்தை அறிமுகம் செய்தவர்கள் காந்தியும் லேனினுமாம். என்ன ஒரு கண்டுபிடிப்பு. நீங்கள் பயன்படுத்தும் கணிணியை அறிமுகம் செய்தது யார் தெரியுமா? நீங்கள் அணியும் பேண்ட என்ன யஹ்யா சில்மியின் கண்டுபிடிப்பா? 

பெண்கள் வீதிக்கு வருகிறார்களாம். என்ன ஒரு தத்துவம். நபி (ஸல்) அவர்கள் போரில் உதவி செய்வதற்கு பெண்களை அழைத்து வந்துள்ளார்கள் என்பது மடாதிபதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பேராட்டங்களில் உருவ பொம்மையை எரித்ததை நீர் பார்த்ததுண்டா? அல்லது உங்கள் மடாதிபதி பார்த்துள்ளரா?  அல்லது தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டங்களுக்கு சிலை செதுக்கி தருவது தான் உம் வேலையா? தவ்ஹீத் ஜமாஅத் உருவ பொம்மையை எரிப்பதை ஏற்கவும் இல்லை, அதை செய்யும் இல்லை. இந்த மார்க்கம் தெரியாத மட கூட்டம் உண்மையை ஆய்வு செய்து எழுத வேண்டும்.

இத்துடன் எமது பதில்கள் நிறுத்தப்படுகின்றன. நீங்கள் எமது வாதங்களுக்கு பதில் சொன்னால், பதிலடி தொடரும். இல்லாவிட்டால், கொடுத்த அடியே போதும் என்று கருதுகிறோம்.

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் தரக்கூடாது, ஆனால் தரலாம் - உளறும் குழப்பி கூட்டம்


தன்னை மடையன் என்று கருதுபவனுக்கு ஒரு விஷயத்தை புரியவைத்துவிடலாம், ஆனால், தன்னை அறிவாளி என்று நினைக்கும் மடையர்களுக்கு என்ன தான் செய்தாலும், எந்த விஷயத்தையும் புரியவைக்க முடியாது. 

மார்க்க அறிவு இல்லாத மடையர்களாக இருந்து கொண்டு, தாங்களை அறியாளிகள் என்று கருதுபவர்களில் முதன்மையானவர்கள் யஹ்யா சில்மி என்ற படித்த ஜாகிலை பின்பற்றும் முரிதுகள். இந்த கூட்டத்தில் தமிழ் உலகத்திலேயே முதன்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முப்பது ஜாகில்கள் உள்ளனர். இவர்களில் சிலர் தான் இப்போது பிஜேவின் ஆய்வுகளை, ஆய்வு செய்கிறார்கள். 

இவர்கள் வைத்த வாதங்களுக்கு நாம் அடுக்கடுக்கான பதில்களை தந்துள்ளோம். அவைகளை படிக்காமல் (அல்லது படித்துவிட்டு, படிக்கதாது போல்) அது எங்கே இது எங்கே என்று முக்கியமான குற்றச்சாட்டுகளை பற்றி பேசாமல், உணவில் உப்பு கம்மி, காரம் அதிகம் என்பது போல சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசி மழுப்பி வருகிறார்கள்.

ஒரு விஷயத்தை பற்றி விவாதிக்கும் போது, நமது வாதங்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு பதில் சொல்ல வேண்டும், நமது வாதங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும். இதைவிடுத்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தராமல், சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசுவது, நாம் தவறான கொள்கையில் உள்ளோம் என்பதற்கு சான்று. இதை தான் குருட்டு ஸலஃபிகள் செய்துகொண்டுள்ளார்கள்.

குருட்டு ஸலஃபிகள் வைத்த எல்லா வாதத்திற்கும் நாம் பதில் அளித்துள்ளோம், அவர்களின் வாதங்களில் நாம் கேள்வியும் கேட்டுள்ளோம். இவற்றுக்கு பதில் சொல்ல முடியாத குருட்டு ஸலஃபிகள், படித்த ஜாகில் யஹ்யா சில்மி உளறி தள்ளிய சம்பந்தம் இல்லாத செய்திகளை பதில் என்ற பெயரில் போட்டு பக்கத்தை நிரப்பி வருகிறார்கள்.

ஸஹாபாக்களை பின்பற்றுவது, குர்ஆனோடு முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை நிறுத்திவைப்பது போன்ற விஷயங்களுக்கு நமது மரணஅடி பதிலுக்கு பிறகு அவற்றை விட்டுவிட்டார்கள்.

இப்போது அவர்கள் பிடித்துக்கொண்டுள்ள விஷயம் என்னவேனில், அதாவது அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் கொடுக்க கூடாது. இதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் அதே நேரத்தில், சில ஹதீஸ்கள் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரணாக இருப்பதை போன்று வரும் ஹதீஸ்களை வேறு வகையில் விளங்க வேண்டும். இதை ஸலஃபி அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

புகாரியில் நாம் அல்லாஹ்வை நோக்கி நடந்தால் அவன் நம்மை நோக்கி ஓடிவருகிறான் என்று ஒரு ஹதீஸ் இடம்பெறுகிறது. இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் பண்பை குறிக்கிற ஹதீஸாகும்.

ஹதீஸ்:

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான் என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (7405)

இந்த ஹதீசை குருட்டு ஸலபிகள் கூட்டம் உள்பட பெரும்பாலானவர்கள், அல்லாஹ் நம்மை நோக்கி ஒடி வருவான் என்றே அல்லது நடந்து வருகிறான் என்றே நம்பவில்லை. அல்லாஹ்வின் அருள் நம்மை நோக்கி வருகிறது என்று கூறுகிறார்கள். அல்லாஹ்வின் பண்பிற்கு விளக்கம் தரக்கூடாது என்றால் இதற்கு ஏன் அப்பா விளக்கம் கொடுக்கிறீர்கள்? அல்லாஹ் முதல் வானத்திலும் உள்ளான், அல்லாஹ்வின் அருளை தேடி ஓடுபவர்களை நோக்கி ஓடவும் செய்கிறான் என்று கூற வேண்டியது தானே?

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தர காரணம் என்னவென்றால், அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்திற்கு எதிராக இந்த ஹதீஸின் கருத்து இருக்கிறது. அதனால், இந்த ஹதீஸ்சை நாம் அல்லாஹ்வின் அருள் நம்மை நோக்கி வருகிறது என்று சமீபத்தில் வாழ்ந்த அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர். இந்த முட்டாள் ஸலஃபிகளுக்கு இந்த ஹதீஸும் தெரியவில்லை, இதற்கு அறிஞர்கள் கொடுத்த விளக்கமும் தெரியவில்லை.

அதைபோல், கீழ் உள்ள ஹதீசையும் நாம் விளங்க வேண்டும் என்று பிஜே கூறுகிறார்:

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி 1145, 6321, 7494

இந்த ஹதீஸின் நேரடி பொருளை எடுத்தால், உலகில் எந்த ஒரு விணாடியிலும், இரவின் முன்றாம் பகுதி இருந்துகொண்டே இருப்பதால், அல்லாஹ் முதல் வானத்திலேயே தான் இருக்கிறான் என்றாகிவிடும். இந்த விளக்கம் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் ஹதீஸின் கருத்துடன் போதும். இதனால், பிஜே அவர்கள் அல்லாஹ்வின் அருள் இரவின் முன்றாம் பகுதியில் இறங்குகிறது என்று விளங்க வேண்டும் என்கிறார். இந்த விளக்கத்தை எங்கள் முன்னோர்கள் சொல்லாமல் பிஜே எப்படி சொல்லாலாம் என்கிறது ஸலபி பக்தர்கள் கூட்டம். 

பூமி உருண்டை என்பதும், உலகின் எதாவது ஒரு பகுதியில் இரவின் முன்றாம் பகுதி இருந்துக்கொண்டே உள்ளது என்பதும் ஸஹாபாக்களுக்கும் அதற்கு பின்னர் வந்தவர்களுக்கும் தெரியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால், அவர்களுக்கு இந்த விளக்கம் முரணாக இருந்து இருக்காது.

முன்னோர்கள் மேல் கொண்ட பக்தியின் காரணத்தினால், ஸலஃபிகளின் விளக்கம் குர்ஆனுடன் மேதினாலும் பரவயில்லை என்று இந்த மடையர்கள் கூட்டம் குதிக்கிறது. 

குர்ஆன் ஹதீஸ் ஞானம் உள்ளவர்களுக்கு பிஜே அவர்களின் விளக்கம் எத்தகையது என்பது புரியும். முட்டாள்களாக இருப்பதால் தான், சில்மி என்ற மாங்கா மடையரிடம் மாட்டிக் கொண்டு தவிர்க்கிறார்கள், இந்த மார்க்க தெரியாத அதிரை குழப்பிகள்.

ஸலஃபிகள் இதற்கு பதில் தருவாரா?

சகோதரர் மனாஸ் இலங்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள். என்று சொல்லி எங்களை விமர்சிக்கும்  நீங்கள் மக்களுக்கு சத்தியத்தைச் சொல்லும் யோக்கியத்தனத்தை மக்களுக்கு நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டவேண்டும். உங்கள் அறிவுக் கடலைக்கொண்டு குர்ஆனுக்கு மாற்றமாக படுபாதகமான செய்திகளையும் நபிகளாருக்கு இழுக்கு ஏற்படும் செய்திகளுக்கு நீங்கள் விளக்கம் தருகிறேன் என்று சொல்லும் உங்கள் வார்த்தைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அல்லாஹ்வுக்குப் பயந்து எங்களை விமர்சிக்கும் முன்னர். ஒரு கணம் உங்கள் நிலையை யோசிக்க வேண்டும் சலபி சலபி என்று மூச்சு விடும் நீங்கள் இந்த சலபி என்ற வார்த்தையை எங்கிருந்து எடுத்தீர்கள். முதலில் இந்த வார்த்தை எப்போது பிரயோகிக்கப்பட்டது. யாருக்குப் பிரயோகிக்கப்பட்டது என்பதை விளக்கவேண்டும்?

இப்போது விசயத்திற்கு வருவோம்.

நீங்களும் நானும் அனைத்து முஸ்லீம்களும் ஏற்றுக் கொண்ட ஒரு செய்திதான் அல்குர்ஆன் முழுமைப் படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். அல்குர்ஆன்:15:09

இதில் யாருக்கும் கூட்டல் குறைத்தல் செய்யமுடியாது என்பதை அல்லாஹ் திருமறையில் தன்னுடைய வேதத்தை தானே பாதுகாப்பேன் என்று சொல்கிறான். அப்படி இருக்கும் போது அல்குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது. அது ஓதப்பட்டுக்கொண்டும் இருந்த நிலையில்தான் நபியவர்கள் மரணித்தார்கள். என்று அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதோ அந்த செய்தி:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்'' என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப் பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.(முஸ்லிம் 2876)

அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் இந்த ஒரு செய்திக்கு முதலில் நீங்கள் பதில் தரவேண்டும் பத்து வசனமாக இருந்து மாற்றப்பட்ட ஐந்து வசனங்கள் எங்கே?

உங்கள் கூற்றின் படி குர்ஆனுக்கு ஹதீஸ் முரண் படவில்லையென்றால் அந்த வசனங்கள் இன்றுள்ள குர்ஆனில் இருக்கின்றதா? உங்களால் காட்ட முடியுமா? அல்லது மாற்றுமதத்தவர்கள் இதை காட்டி விமர்சிக்கும் போது உங்களால் பதில் சொல்ல முடியுமா?அல்லது இது தான் அந்த வசனம் என்று காட்ட முடியுமா?

அடுத்தவர்களை விமர்சிக்கும் முன்னர் நான் இருக்கும் கொள்ளை சரிதானா? என்பதை ஒரு கணம் அல்லாஹ்வையும் மறுமை வாழ்வையும் முன்னிறுத்தி ஆழமாக சிந்தியுங்கள். அப்போது புரியும் குறை பிடிக்கத்தெரிந்த உங்களுக்கு நிறைகாணத் தெரியுமா? விமர்சிப்பதென்றால் ஏராளமான செய்திகள் உள்ளது.

முதலில் நீங்கள் இதற்கு மறுப்புக் கொடுங்கள் அடுத்தடுத்து கேள்விக்கணைகள் உங்களை நோக்கி எறியப்படும். உங்கள் வாதத்தின் படி ஹதீஸ் முரண்படாது என்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தைப் பாதுகாக்கவில்லை அல்லாஹ்வின்தூதரும் மார்க்த்தை முழுமைப் படுத்தவில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்

சலஃபி அவர்களே உங்கள் அறிவுக் கண்னைக் கொஞ்சம் திறக்க முடியுமா?