Tuesday, January 10, 2012

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவா பணியும்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (இலங்கை)

சகோ: ஹபில் ஸலபி அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமாவார். இவர் இலங்கையில் பிறந்து தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபிக் கல்லூரியில் கல்வி கற்று தற்போது மத்திய கிழக்கில் வசித்து வருகிறார். இவர் நட்புக்கு இலக்கணம், சிறுவர்களுக்கான இஸ்லாமிய நன்னெறிக் கதைகள்,இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள் போன்ற காலத்தின் தேவையை பூர்த்தி செய்த புத்தகங்களை எழுதியதின் மூலமாக இஸ்லாமிய எழுத்துலகில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்தவர்.இவர் சகோ: பி.ஜெ அவர்களின் பேச்சுக்களையும் புத்தகங்களாக மாற்றியுள்ளார்.அதில் இஸ்லாத்தின் பார்வையில் ஆபாசம் என்ற புத்தகம் ஆபாசம் என்றால் என்ன?அதை எப்படி புரிய வேண்டும்? எப்படி அனுகவேண்டும்? என்பதைப் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதே. இவர் தற்போது சகோ: பி.ஜெ யைப் பற்றி அறிஞர் பி.ஜெ பண்முக ஆளுமையும்,தஃவாப் பணியும் என்ற தொடர் கட்டுரையை எழுதி வருகிறார்.(அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்) வாசகர்களின் நலன் கருதி அதனை நாமும் வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.

இந்த நூற்றாண்டில் தமிழ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆளுமை நிறைந்த அறிஞர் பீஜேவுடைய வரலாற்று ஆய்வு பற்றிய தொடர் இது. கடல் கடந்த அண்மை நாட்டிலுள்ள ஒருவனால் இம்முயற்சி முழமையான சாத்தியமா என்ற அச்ச உணர்வோடுஇ எனக்குக் கிட்டிய தகவல்களை மையமாக வைத்து எழுத ஆரம்பிக்கின்றேன். இதில் உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. குறிப்புக்கள் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தொடருக்குள் நுழைவதற்கு முன்னர் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். ஏனெனில்இ நான் அழைப்புப் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் போதுஇ பல அறிஞர்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்.எனினும்இ சிலரைப் பற்றித்தான் எழுத முடிந்தது.

உமர் பின் அப்துல் அஸீஸ், இமாம் இப்னுத் தைமிய்யா, முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போன்றோர் பற்றி எழுதினேன். அப்போது எந்த விமர்சினத்தையும் முன்வைக்காத சிலர், அறிஞர் பீஜே பற்றி நான் எழுத முனையும் போது மடடும் என்மீது தக்லீத் சாயம் பூசுவதுண்டு. இது இவர்களின் நுணிப்புல் மேதாவித்தனத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிக்காட்டுகிறது.

அறிஞர் பீஜே பற்றிய இத்தொடரின் நோக்கம் தக்லீத் பண்ணுவதற்கோஇதனிமனித வழிபாட்டை ஆதரிப்பதற்கோ அல்ல.குறுட்டு தக்லீதைத் தகர்த்துஇ தனிமனித வழிபாட்டை ஒழிப்பதில் அவரது பணி மகத்தானது. இந்த நுற்றாண்டில் சுதந்திரமாக சிந்திக்கும் ஒரு பெரும் சமூகத்தை அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் உருவாக்கிய அன்னவரின் மகத்தான பணியை மதிப்பீடு செய்வதோடுஇ தமிழ் உலகில அவர் ஏற்படுத்திய ஏகத்துவப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை எதிர்கால தலைமுறைக்கு ஆவணமாக வழங்க வேண்டும் என்பதுமாகும்.

1992ம் ஆண்டு பீஜே அவர்கள் முதல் தடவையாக இலங்கை வந்தார்கள். அப்போதுஇ நான் ஸலபிய்யாக் கலாபீடத்தில் இரண்டாம் வருடத்தில் மாணவனாகக் கற்றுக்கொண்டிருந்தேன்.அவர் எங்களோடு ஸலபிய்யாக் கலாபீட வளாகத்தில் கழித்த நாட்கள் என் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கை வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் சந்திக்கத் தவறியதில்லை. 2005ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட காத்தான்குடி மாநாட்டில் எனக்கும் உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தது. அண்மையில் இரண்டு தடவைகள் இந்தியா சென்று அவரோடு நீண்ட நேரம் பல விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அதேபோல்இஅவரது உரைகள்இஎழுத்துஇசிந்தனைஇபத்வாக்ள் அனைத்தாலும் நான் தாக்கமுற்றிருக்கின்றேன்.அவற்றைத் துணையாகக் கொண்டு இப்பணியைத் தொடங்குகின்றேன்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும்இ அந்தக் கால சூழ்நிலை சவால்களை முறியடித்துஇ சத்திய இஸ்லாத்தை உயிர்ப்பித்துஇ அதன் போதனைகளைத் தெளிவுபடுத்திஇ செயல்திறன் மிக்க கொள்கைவாதிகளை உருவாக்கிஇ மக்களை மூட நம்பிக்கையிலிருந்து விடுவித்துஇ அனாச்சாரங்களிலிருந்தும் அழிவிலிருந்தும் காத்திடஇ அல்லாஹ் சிலருக்குப் பன்முக ஆளுமை அருளாக வழங்குகின்றான்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் மார்க்கத்தை உயிர்ப்பிப்பதற்காக இந்த உம்;மத்திற்குஇ ஒரு சீர்த்திருத்தவாதியை அல்லாஹ் அனுப்புகின்றான் என நபி அவர்கள் கூறிய செய்தி ஒன்று அபூதாவூதில் பதிவாகியிருக்கின்றது.

அதேபோல்இ தெளிவான மார்க்க ஞானம் என்பதும் அல்லாஹ்வின் மிகப்பெரிய அருள். ‘அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோஇ அவருக்கு மார்க்கத்தில் தெளிவை வழங்குகின்றான்’ (புகாரி)

அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாளேயே சமூகத்தில் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறது. இவர்களால் எத்தகைய கேள்விகளுக்கும் மார்க்கத்தின் மூலாதார நிழலில் பட்டென்று பதில் சொல்ல முடிகிறது.இஸ்லாத்தின் பெயரால் தோன்றும் வழிகேட்டுக் கொள்கைகளுக்கு மறுப்பு அளிக்க முடிகிறது. விவாதிக்க அழைப்புவிடுத்துஇ அவர்களோடு விவாதித்துஇ அவர்களின் கொள்கை தவறு என்று நிரூபித்து மக்களுக்குத் தெளிவை வழங்க முடிகிறது. ஏனென்றால்இ இவை அல்லாஹ்வின் மகத்தான அருளகள்.

மார்க்கத்தில் தெளிவுபெற்ற சீர்திருத்தவாதிகளின் வரிசையில்இ எழுச்சிமிக்க அறிவு வெடித்துச் சிதறிஇ வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பிரவாகமெடுக்கின்ற நடப்பு நூற்றாண்டின் சீர்திருத்தவாதியாக அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் காணப்படுகின்றார்கள்.

எழுத்தாற்றல்இ பேச்சாற்றல்இ விவாதத்திறமைஇ ஆய்வு நுணுக்கம்இ அரசியல் வியூகம்இ நவீன விஞ்ஞான அறிவுஇ பத்திரிகா தர்மம்இ இதழியல் ஞானம்இ தலைமைத்துவத் தகைமை போன்ற இன்னோரன்ன பன்முக ஆளுமைப் பண்புகள் அவரிடம் ஒருங்கே ஒன்றிணைந்துள்ளன. இதுஇ வெறும் வீரவணக்கமன்று. அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றஇ அதே வேளை பொறாமையின் காரணமாக சிலாகித்துச் சொல்ல மனம் வராத விடயங்கள்.எனினும்இ அவரது தஃவா மற்றும் சமுதாயப் பணிகளை மணமங்கொள்ளும் பலரால் ஆங்காங்கே சிலாகிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவரது தஃவாவின் தொடக்கத்திலிருந்து துணை நின்று இன்றுவரை பீஜேவுடைய மகத்தான பணிகளுக்குப் பக்க துணையாக நிற்கும் எஸ்.ஷம்ஷூல் லுஹா அவர் ஏகத்து எழுச்சியில் பீஜேவுடைய பங்களிப்பை மதிப்பீடு செய்துள்ளார்.இன்னொருவர் தனது முதுகலைமாணிப் பட்டத்திற்கு பீஜேவுடைய வரலாற்றை ஆய்வாக சமர்ப்பித்துள்ளார். நான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டப் படிப்பிற்கு சமர்ப்பிக்கும் ஆய்வுக்கு இத்தலைப்பை பெரிதும் ஆசைப்பட்டேன்.எனினும்இ அதற்கான வாய்ப்பு அப்போது எனக்குக் கிடைக்கவில்லை.இப்போது அதைவிட விரிவாக எழுதக் கூடிய வாய்ப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய தஃவாவிலும்இ ஆய்விலும்இ எழுத்துப் பணியிலும்இ சமூக விடுதலைப் போராட்டத்திலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாகஇ இடைவிடாது மகத்தான பங்களிப்பாற்றிவரும்இ அறிஞர் பி.ஜைனுலாப்தீன் அவர்களின் ஆழமான இஸ்லாமிய அறிவும்இ விரிந்தஇ செழுமையானஇ சீரிய சிந்தனையும்இ தர்க்கரீதியானஇ எளிய இனிய உரையும் தமிழ் கூறும் நல்லுலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திவரும் இற்றை நாளில்இ பல பரிமாணங்களைக் கொண்டஇ பல்வேறு துறைசார்ந்த அன்னாரின் பணிகள் பற்றி எழுந்தமானமாகஇ தரக்குறைவாக காழ்ப்புணர்வைக் கக்குகின்ற சிலருக்குஇஉண்மை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவர் பற்றிய உண்மைகளை ஊர்வலமாக்க வேண்டியது உண்மை அறிந்தவர்களின் கடமையுமாகும். அதனால்இ அவரது பணிகளை மதிப்பீடு செய்யும் பணியை நான் துவக்கிவைக்கின்றேன்.

அவர் மீது இன்று பலராலும் பரப்படும் வதந்திகள்இஅவதூறுகள் என்பன பத்திரிகைகள்இமீடியாக்கள்இ மிம்பர் மேடைகள்இகுறுந்தகடுகள் என பல்வேறு ஊடகங்கள் மூலம் மக்களை சென்றடைகிறது.இருபக்கங்களையும் பார்ப்பதற்குரிய ஆய்வறிவில்லாத மக்கள் நம்பவும் செய்கின்றனர். எதிர்கால சமூகத்திற்கு இந்த நிலை ஏற்படக் கூடாது என்ற ஆதங்கமும் இதை எழுத என்னைத் தூண்டிய காரணங்களில் ஒன்று.
:
ஜனனமும் கல்வியும்
பீர் முஹம்மதுஇ மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டுஇ பெப்ரவரி மாதம்இ பத்தாம் திகதி இராமநாதபுரம் மாவட்டம்இ தொண்டியில்இ எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர்இ காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்றுஇ மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்றுஇ பட்டம் பெற்றார்.

இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு எழுதும் போது தனது கல்வி பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு தருகின்றேன்.

(என்னைப் பற்றியும் என் சகோதரர் பற்றியும் சில விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும். நானும் என் சகோதரர் பீ ஷைக் அலாவுதீன் என்ற பி.எஸ்.அலாவுதீனும் மதீனாவில் படிக்கவில்லை. உம்ராபாத்திலும் படிக்கவில்லை. மத்ஹப்இ ஷிர்க்இ தரீக்கா மற்றும் எல்லா பித்அத்களையும் ஆதரிக்கும் கல்விக் கூடங்களில் தான் பயின்றோம். அது தான் மார்க்கம் என்று போதிக்கப்பட்டோம். படித்து முடித்து வெளி வந்தவுடன் நாங்கள் நண்பர்களாக விவாதித்துக் கொண்டே இருப்போம். அப்போது தான் தர்கா வழிபாடு தவறு என்று எங்களுக்குத் தோன்றியது. இது குறித்து நாங்களே ஆய்வு செய்துஇ ஆதாரங்களைத் திரட்டிஇ ஷிர்க்கை மட்டும் எதிர்த்தோம். மத்ஹப்இ தரீக்கா இன்ன பிற பித்அத்களை அந்தக் கால காட்டத்தில் நாங்கள் எதிர்க்கவில்லை. அவற்றைத் தவறு என்று கூட அறியவில்லை.

தர்காவை எதிர்க்கின்ற அனைவரும் தவ்ஹீத் வாதிகள் என்று கருதியதால் அது போன்ற எல்லா இயக்கங்களிலும் தொடர்பு வைத்தோம். இதனால் தான் 280 நாட்கள் நான் தப்லீக் ஜமாஅத்தில் இந்தியா முழுதும் சென்றேன். அதுபோல்இ என் சகோதரர் ஜமாஅதே இஸ்லாமிஇ சிம் போன்ற இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் தப்லீகையும் விரும்பினோம். ஜமாஅதே இஸ்லாமியையும் விரும்பினோம். தர்கா வழிபாட்டை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால்.

இந்தக் கால கட்டத்தில் தான் ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற சையித் குதுப் எழுதிய நூலை ஒரு நிறுவனத்துக்காக என் சகோதரர் மொழி பெயர்த்துக் கொடுத்தார்கள். தர்கா வழிபாட்டை சையித் குதுபும் எதிர்த்ததால்இ அந்த நூலிலும் தர்கா வழிபாட்டுக்கு ஆதரவான கருத்து இல்லாததால் நாங்கள் சரி என்று நம்பிய போதுஇ அது மொழி பெயர்க்கப்பட்டது.

குர்ஆன் ஹதீஸில் உள்ள பல விஷயங்களை தப்லீக் ஜமாஅத்இ ஜமாஅதே இஸ்லாமீ ஆகியவை நிராகரிப்பதையும் மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கியதையும் படிப்படியாக கண்டுஇ வெறுத்து ஒதுங்கிய சில மாதங்களில் என் சகோதரர் இளம் வயதில் மரணித்த்து விட்டார். இதன் பின் என் சகோதரர் மொழி பெயர்த்த அந்த நூலை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று பாக்கர் வெளியிட்டார். அது எனக்குத் தெரிய வந்த போதுஇ அது குறித்த விளம்பரத்தை உணர்விலும் வெளியிட மறுத்தேன். அவர் நடத்திய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் அந்த விளம்பரத்தைப் போடக் கூடாது என்றேன். எனது மூன் பப்ளிகேஷனில் மட்டுமன்றிஇ அவரது மீடியா வேல்டிலும் விற்கக் கூடாது என்று கண்டிப்புடன் தடுத்து விட்டேன். தவறான கருத்து அதில் இருக்கும் போது அதை விற்பது எப்படி ஹலாலாகும் என்பதே இதன் காரணம். ஆயிரக்கணக்கில் அந்த புத்தகம் பாகரிடம் தேங்கி இருந்தது.)

சமூகத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்திக் காட்டிய பெரிய அறிஞர்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் போதுஇ ஓர் உண்மையையை நான் உணர்ந்து கொண்டேன்.அவர்கள் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டததைக் கற்று பட்டம் பெறவர்களில்லை.இமாம் இப்னுத்தைமிய்யாஇமுஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்இஅல்பானி போன்ற அறிஞர்கள் குடும்ப சூலழில் கற்று தமது சுய ஆய்வு முயற்சியால் மகத்தான் பணியாற்றியவர்கள்.அந்தப் பின்னணியிலேயே பீஜேவுடைய பணியும் மதிப்பிடப்படவேண்டும்.

பல்கலைக்கழகக் கோட்பாட்டுப் பாடத்திட்டத்திற்குள் சிறைப்பட்ட பலரின் நிலையை நாம் இன்று பார்க்கின்றோம்.அவர்கள் கோட்பாட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள்.

சத்தியத்திற்கு மாற்றமான பாடத்திட்டத்தைப் போதிக்கின்ற ஓரு மதரசாவில் பீஜே கல்வி கற்றாலும்இ உண்மையை விளங்கிக் கொண்ட நாள் முதல் சந்தனக் கூடுஇ முரீது வியாபாரம்இ வரதட்சணைக் கொடுமைஇ தரீக்காஇ ஷிர்க்-பித்அத்இ சமூகக் கொடுமைகள்இ ஆட்சியாளர்களின் அராஜகம் போன்றவைகளைக் கடுமையாக எதிர்த்து வருகின்றார். இதனால்இ பலமுறை கடுமையான தாக்குதலுக்கும் வெட்டுக்குத்துக்கும் உள்ளாகிஇ உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார். பல முறை சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

திருமணம்:

1980ஆம் ஆண்டு வரதட்சணை வாங்காமலே திருமணம் செய்தார். வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடும் ஒரு நாட்டில்இ வரதட்சணை வாங்காத இவரின் வீரமிக்க இச்செயல்இ அன்று வினோதமாக நோக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக பலவாயிரம் இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யத் துணிவு பெற்றுள்ளனர். அத்தோடுஇ வரதட்சணைக் கொடுமையை அறியாமல் அப்போது வாங்கிய தொகையைஇ பகிரங்கமாக திருப்பிக் கொடுக்கின்றனர்.

பீஜே அவர்களும் அவரது அண்ணன் அறிஞர் பீ.எஸ். அலாவுத்தீன் மன்பயீ அவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு ஒரு வாத்தியாரின் பரிதாபகரமான தற்கொலை முடிவு காரணமாக அமைந்தது. பல பெண் குழந்தைகளையுடைய அவர் தனது பெண் குமருகளை கரை சேர்க்கப் வரதட்சணைப் பணம் இல்லாததால் ஆயுள் காப்புறுதி செய்து விட்டுஇ லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை என்பதால் அவரது குடும்பம் குடும்பத் தலைவனையும் இழந்து காப்புறுதிப் பணமும் கிடைக்காமல் தவித்தது. வரதடசணையின் இக்கோர முகம் இவர்களது வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அப்போது ஏகத்துவக் கொள்கையில் பெரியளவு தெளிவு கிடைக்காத நேரம். இப்போது வரட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தை பீஜே அளவுக்கு யாரும் செய்யவில்லை. அறியாமல் வாங்கிய வரத்சணையை திரும்பக் கொடுக்கும் அளவு பெரும் தாக்கத்தை அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நிலை :

மார்க்கப் பிரசாரப் பணியில் ஈடுபடுகின்றவர்களின் பொருளாதாரம் சரியானதாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.அதனால் பீஜேவுடைய பொருளாதார நிலை பற்றி முதலில் இங்கு குறிப்பிடுகின்றேன்.

இன்று மார்க்கப் பிரச்சாரத்திற்காக பலர் அறபு நாடுகளில் சம்பளம் பெற்றுஇ தமது வாழ்வை வழப்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய உலமாக்களில் பலர் மார்க்கப் பிரசாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் ரியால்இதீனார்இதிர்ஹம் எப்பவற்றிற்காக தஞ்சமடைந்தவர்களாகவே உள்ளனர். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். யு.ஊ. அறைகளில் இருந்து கொண்டுஇ ஒன்றிரண்டு பயான்கள் செய்துஇஉப்புச் சப்பில்லாத கட்டுரை எழுதிக் கொண்டுஇ பிரசாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.இத்தகையவர்களில் ஒருவராக இருந்துகொண்டுஇ தனது எஜமானுக்கு ஜால்ராப் போடும் ஒருவர் பீஜே பொருளாதாரம் பற்றி அண்மையில் கேள்வி எழுப்பினார்.அதற்குப் பீஜே அளித்த பதிலை இங்கு தருகின்றேன்.

‘எனது சொத்து எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்துப் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்துஇ பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகின்றேன். இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

முதல் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.

நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு நீங்கள் ஒரு பள்ளிவாச்ல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன். உள்ளது. இரண்டு கிரவுன்ட் அளவு.

நான் தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன்.

எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.

எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒர் அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன். பண்டிங் செய்வேன். இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாஃவா பணியையும் செய்து வந்தேன்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.

எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போதுஇ அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து இலட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினேன்.

அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்.) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும்இ எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்குக் குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)

வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒர் இலட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒர் இலட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.

எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.

மதுரையில் இருந்த போதுஇ நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.

என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.

என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்து சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல. இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ என் மனைவி பெயரிலோ என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன். அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ என் மனைவி மக்கள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள்இ கார்கள்இ பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸலபிக்குத் தந்து விடுகிறேன்.

இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போதுஇ சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அவர்கள் வந்த போதுஇ கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போதுஇ நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிதிருந்ததையும் உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.

இது போல் நீங்கள் அவதூறு பரப்பியதால் தால் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர் (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:273)

மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான்.

அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டைருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.

எனவேஇ இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.

நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும் செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும் மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கண்ட போதுஇ நானும் சுய மரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம். இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை. சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக் எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன். அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்த சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.

மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி இல்லை.

எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.

அதனால் பணத்துக்காக சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.

அதனால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.

அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.

நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோஇ சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன். மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா ப்ஃணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும்இ நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனாலுமஇ; துவக்க காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐஏசி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருவருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காகப் பத்திரிகைகளை சந்தாதாரர்களுக்கு அனுப்புதல்இ ஸ்டாம்ப் ஒட்டுதல்இ பார்சல் கட்டுதல் ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.

அடுத்துஇ அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன். அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போதுஇ மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.

ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவேஇ ஜாக் இயக்கமே எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்து விட்டேன். அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.

இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலபி குறிப்பிடுகிறார்.
அந்த உறுத்தலைத் தவிர்பபதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை)

சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.) இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன். சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.சென்னை வந்ததும் நூல்கள் எழுதிஇ தனியார் புத்தக வெளியீட்டாளர்களிடம் கொடுத்துஇ வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.


எனக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போதுஇ அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர். இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்றுக் கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மனத் திருப்தி ஏற்பட்டது.

ஆனால் நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல்இ கேள்வி – பதில் எழுதுதல்இ பிழை திருத்தல்இ மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்ற்தில்லை. தஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.

நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு – செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான் நேரத்தில் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகிஇ அல்லது சில நிர்வாகிகள் துணயுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.

தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும். நான் பொறுப்பில் தொடர்வதைத்தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவன் என்றால் இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.

ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

இப்போதுஇ அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கிய காரணமாகும்.

தேர்தல் திருவிழாக்கள் வரும் போதுஇ இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும். ஆனால்இ எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன். கடந்த தேர்தல் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கீட்டுக்காக தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம்இ எனக்கோ நான் சார்ந்துள்ள இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பும் இல்லாததே காரணம்.

ரமலான் மாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போதுஇ பல இலட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன். அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்கு பயன்பட்டது. இப்பொது தவ்ஹீத் பணிக்குப் பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால்இ இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்துஇ சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்தேன்.

மீடியா வேல்டு மூலமும் தொலைக்காட்சி மூலமும் குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.

என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆ செய்யுங்கள்.

ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கு வீடு பேசிவிட்டு வந்தால்இ மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.

மார்க்கத்தை தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். புத்தகத்தின் எழுத்துக்காக நான் எந்த விலையும் வைப்பதில்லை. பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் 40 பக்க புத்தகம் 100 ரூபாய் விலை போடப்படும். அப்படி எல்லாம் நான் போடவில்லை.

புத்தகம் தயாரிக்கும் செலவுஇ அதை விற்பனை செய்யும் இடத்துக்கான வாடகை, அட்வான்ஸ், மின் கட்டணம், ஊழியர் சம்பளம் ஆகிவற்றுக்கு நான் முதலீடு செய்த அடிப்படையில் தான் அதில் லாபம் கிடைக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அதில் எனக்கு வருமானம் வருகிறது. அதில் உள்ள முதலீட்டை எடுத்து வேறு ஏதாவது வழியில் பயன்படுத்தினால் எனக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியிலுள்ள ஜாலியாத்கள் இலவசமாக வெளியிட்டுள்ளன. அதனால்இ எனக்குப் பாதிப்பு என்று நான் சிந்திக்காமல் அனுமதித்தேன். பீஜே நூல்களுக்கு சவூதியில் தடையா என்ற கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்.                                                      
தொடரும்

நன்றி
rasminmisc.tk

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா? ஸலஃபி பக்தர்களின் அறியாமை!


கேள்வி: நீங்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் ''இஸ்தவா அலல் அர்ஷ்'' என்பதை ''அர்ஷின் மீது (அல்லாஹ் அமர்ந்தான்'' என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். 'இஸ்தவா' என்பதற்கு 'அமருதல்' என்ற அர்த்தம் கிடையாது. 'அமருதல்' என்பதற்கு அரபியில் 'ஜலசா' என்ற வார்த்தை தான் சரியானது என்று சிலர் கூறுகிறார்கள்.

பதில்:

அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்துள்ளான் என்று குர்ஆனில் ஏழு இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (54)7

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (7 : 54)

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (3)10

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (10 : 3)

اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ(2)13

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆனூ; (13 : 2)

الرَّحْمَانُ عَلَى الْعَرْشِ اسْتَوَى(5)20

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (20 : 5)

الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَانُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا(59)25

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

அல்குர்ஆன் (25 : 59)

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ مَا لَكُمْ مِنْ دُونِهِ مِن وَلِيٍّ وَلَا شَفِيعٍ أَفَلَا تَتَذَكَّرُونَ(4)32

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

அல்குர்ஆன் (32 : 4)

هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنْ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ(4)57

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (57 : 4)

மேற்கண்ட வசனங்கள் தான் நீங்கள் சுட்டிக்காட்டும் வசனங்களாகும். அமர்தல் என்பதற்கு ஜலஸ என்ற சொல் மட்டும் இல்லை. ஏராளமான சொற்கள் உள்ளன. அதில் இஸ்தவா என்பதும் ஒன்றாகும்.

இதே சொல் குர்ஆனில் வேறு இடங்களிலும் அமர்தல் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

وَقِيلَ يَاأَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَاسَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ(44)11

"பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!'' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. "அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்'' எனவும் கூறப்பட்டது.

அல்குர்ஆன் (11 : 44)

இவ்வசனத்தில் அமர்ந்தது என மொழிபெயர்த்துள்ள இடத்தில் இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இடம்பெற்றுள்ளது. இங்கே அமர்தல் என்ற அர்த்தத்தைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொடுக்க இயலாது.

இதே போன்று பின்வரும் வசனத்திலும் அமர்தல் என்ற பொருளிலே இவ்வார்த்தை இடம் பெற்றுள்ளது. 

فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ فَقُلْ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنْ الْقَوْمِ الظَّالِمِينَ(28)23

நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் "அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் (23 : 28)

எனவே இஸ்தவா என்பதற்கு அமர்தல் என்ற பொருள் இருப்பது இவ்வசனங்களின் மூலம் உறுதியாகிறது.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஜலச என்ற அரபுச் சொல்லுக்கும் இஸ்தவா அரபுச் சொல்லுக்கும் அமர்தல் என்ற பொருள் இருந்தாலும் இவ்விரு சொல்லுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கின்றது.

ஜலச என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கும் அரபு மொழியில் பயன்படுத்தப்படும். ஆனால் இஸ்தவா என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கு பயன்படுத்தப்படாது. மாறாக உயரமான ஒரு பொருளின் மீது அமர்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

உதாரணமாக கப்பலின் மீது அமர்தல் மலையின் மீது அமர்தல் வாகனத்தின் மீது அமர்தல் மிம்பரின் மீது அமர்தல் ஆகிய அர்த்தங்களில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இவ்வார்த்தை கூறப்பட்டுள்ளது.

வாகனத்தின் மீது அமர்தல் என்ற பொருளில் பின்வரும் வசனத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ(13)43

நீங்கள் அதன் முதுகுகளில் அமர்ந்து உங்கள் இறைவனின் அருட்கொடையை நினைப்பதற்காகவும், "எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்'' என்று நீங்கள் கூற வேண்டுமென்பதற்காகவும் (அவற்றை வழங்கினான்).

அல்குர்ஆன் (43 : 13 14)

இந்த வசனத்திலும் அதே இஸ்தவா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2914حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ رواه البخاري

அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்த போது இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களை விட்டுப் பின்தங்கி விட்டார்கள். நான் மட்டும் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. அப் போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன். குதிரை மீதேறி அமர்ந்து கொண்டேன்.

குதிரையின் மீதேறி அமர்தல் என்ற பொருளில் இங்கே இஸ்தவா என்ற சொல் கூறப்பட்டுள்ளது.

4278حَدَّثَنِي عَيَّاشُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ إِلَى حُنَيْنٍ وَالنَّاسُ مُخْتَلِفُونَ فَصَائِمٌ وَمُفْطِرٌ فَلَمَّا اسْتَوَى عَلَى رَاحِلَتِهِ دَعَا بِإِنَاءٍ مِنْ لَبَنٍ أَوْ مَاءٍ فَوَضَعَهُ عَلَى رَاحَتِهِ أَوْ عَلَى رَاحِلَتِهِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்ட போது ஒரு பால் பாத்திரத்தை.... அல்லது தண்ணீர்ப் பாத்திரத்தை.... கொண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில் ....அல்லது தமது வாகனத்தில்.... வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டு விட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்கüடம், "நீங்களும் நோன்பை விடுங்கள்'' என்று சொன்னார்கள்.

புகாரி (4277)

இந்தச் செய்தியிலும் நன்கு அமர்தல் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

1379أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الْأَسْوَدِ قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ أَنَّ أَبَا الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَسْتَنِدُ إِلَى جِذْعِ نَخْلَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَلَمَّا صُنِعَ الْمِنْبَرُ وَاسْتَوَى عَلَيْهِ اضْطَرَبَتْ تِلْكَ السَّارِيَةُ كَحَنِينِ النَّاقَةِ حَتَّى سَمِعَهَا أَهْلُ الْمَسْجِدِ حَتَّى نَزَلَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَنَقَهَا فَسَكَتَتْ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது பள்ளியின் ஒரு தூணாக இருந்த பேரீச்ச மரத்தின் மீது சாய்ந்து கொள்வார்கள். மிம்பர் செய்யப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தார்கள்.

நஸாயீ (1379)

7269حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّهُ سَمِعَ عُمَرَ الْغَدَ حِينَ بَايَعَ الْمُسْلِمُونَ أَبَا بَكْرٍ وَاسْتَوَى عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشَهَّدَ قَبْلَ أَبِي بَكْرٍ فَقَالَ أَمَّا بَعْدُ فَاخْتَارَ اللَّهُ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي عِنْدَهُ عَلَى الَّذِي عِنْدَكُمْ وَهَذَا الْكِتَابُ الَّذِي هَدَى اللَّهُ بِهِ رَسُولَكُمْ فَخُذُوا بِهِ تَهْتَدُوا وَإِنَّمَا هَدَى اللَّهُ بِهِ رَسُولَهُ رواه البخاري

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த மறு நாள் முஸ்லிம்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிராமணம் (பைஅத்) செய்து கொடுத்த போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள்.

புகாரி (7269)

மிம்பரின் மீது அமர்தல் என்ற பொருளில் இவ்விரு ஹதீஸ்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

லிசானுல் அரப் என்ற பிரபல அரபு அகராதி நூலில் இவ்வார்த்தைக்கு இப்பொருள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளின் மேற்பகுதியில் இருத்தல் என்று இதற்கு அர்த்தம் எனக் கூறப்பட்டுள்ளது.

لسان العرب - (14 / 408)

 وقال الأَخفش استَوى أَي علا تقول استَوَيْتُ فوق الدابة وعلى ظهر البيت أَي علَوْتُه واستَوى على ظهر دابته أَي استَقَرَّ

இஸ்தவா என்றால் மேல் இருத்தல் என்பது பொருள். வாகனத்தின் மேல் இருத்தல், வீட்டினுடைய முகட்டின் மீது இருத்தல் என்று கூறப்படும்.

லிசானுல் அரப் (பகாம் : 14 பக்கம் : 408)

எனவே இறைவன் அர்ஷ் மீது அமர்ந்து உயர்வாக இருக்கின்றான் என்று பொருள் கொள்வதே சரியானது.

இவ்வாறு அர்த்தம் செய்யக் கூடாது என்று கூறுபவர்கள் இவ்வார்த்தைக்கு வேறு விளக்கங்களைத் தருகின்றார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணத்தின் படி பார்த்தாலும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன.

Monday, January 09, 2012

தலைப் பிரசவம் தாய் வீட்டிற்குறியதா?

RASMIN M.I.Sc



ஆண், பெண் என்ற இரு பிரிவினரில் தங்கள் வாழ்வில் அதிக கஷ்டத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக பெண்களை நாம் காண முடியும்.

ஏன் என்றால் ஆண்களினால் சுகத்துக்காக பயன்படுத்தப் படும் மனைவி அந்த சுகத்தின் மூலம் பிரசவம் என்ற வலியை அனுபவித்தே தீரவேண்டும். கணவனுக்காக தனது வாழ்வை அர்பனம் செய்யும் ஜீவனின் உண்மை வேதனையில் ஆண்கள் எந்தளவுக்கு பங்கெடுத்துக் கொள்கிறார்கள்?

அதிலும் தனது குழந்தையை அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் போது ஆண்களில் எத்தனை பேர் அந்தப் பெண்ணுக்குறிய அனைத்துக் காரியங்களிலும் உதவியாக இருக்கிறோம்?

பெண் என்றால் போதைக்குறியவள்.

ஆணின் அடிமை.

உணர்ச்சிகளே அற்ற ஜடம்.

மனிதனாக மதிக்கப்படத் தேவையற்றவள் என்ற மடமையின் சித்தாந்தத்தை உடைத்து எறிந்த இஸ்லாமிய மார்க்கம் பெண்களின் பிரசவ காலம் தொடர்பாகவும் மிக அழகிய வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.

தலைப் பிரசவம் தாய் வீட்டிலா?

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டால் அவளுடைய 07வது அல்லது 08 வது மாதத்தில் அந்தப் பெண்ணின் பிரசவத்திற்காக அவளுடைய தாய் வீட்டிற்கு அனுப்பிவிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.

இப்படி அனுப்புவது பற்றிய மார்க்கத்தின் நிலைபாட்டை சரியாக நாம் விளங்கிக் கொண்டால் அதைப்பற்றிய சரியான புரிதலுடன் நாம் செயல்பட முடியும்.

தாயின் இடத்தை மாமியார் நிறப்ப முடியாது.

உண்மையில் தாய் பாசம் என்பது மற்றவர்களின் பாசத்தை விட பன்மடங்கு உயர்ந்தது. அதிலும் மாமியார் வீட்டில் ஒரு பெண் இருப்பதற்கும் தாயின் வீட்டில் இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு தாய் கவணிப்பதைப் போல் எந்த மாமியாரும் தனது மருமகளை கவணிக்க மாட்டார்கள்.

பிரசவ காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வின் மிக சங்கடமான ஒரு கால கட்டம் அந்த நேரத்தில் அவளுடைய நிலையை கருத்தில் கொண்டு தாயின் வீட்டில் அவள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை இஸ்லாம் வகுத்துந் தந்துள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தலைப் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பப் படும் பெண்களில் அதிகமானவர்கள் தாய் பாசம் தேவை இந்தக் காலத்தில் தாயுடன் இருந்தால் நல்லது என்பதற்காக அனுப்பப்படவில்லை.

இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்தால் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு மகளாக வருவது என்பது வேறு, ஆனால் நிறைய குடும்பத்தில் மாமியார், கணவர்களினால் பலவந்தமாக தாய் வீட்டிற்கு மனைவிமார் அனுப்பப்படுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் மாமியார் கொடுமை தாங்க முடியாமல், தாயின் வீட்டிற்கு மருமகள் தலைப் பிரசவத்திற்காக வந்துவிடுகிறாள்.

இப்படி அனுப்பி பிரசவம் செய்யவதென்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதன்று.

பெண்ணின் அனைத்து செலவுகளுக்கும் கணவன் தான் பொருப்பாளி.

குடும்பத்திற்காக செலவு செய்யும் பொருப்பை இறைவன் ஆண்கள் மீதுதான் சுமத்தியுள்ளான். ஆண்கள் தான் தங்கள் மனைவியருக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல்குர்ஆன் 4 : 34)

ஆண்கள் தங்கள் உழைப்பின் மூலம் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களுக்கு இந்த சிறப்பு வழங்கப்படுகிறது.

இன்று நமக்கு மத்தியில் தலைப் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு மனைவியை அனுப்பும் கணவர்களில் பலர் இதை நடைமுறைப்படுத்துவதில்லை.

தங்கள் சுமை குறைய வேண்டும் என்பதற்காகத்தான் தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.

இப்படி நடந்து கொள்பவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் சிறந்த கணவர்களாக எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (புகாரி 2554)

தாய் வீட்டிற்கு சென்றால் மன நிம்மதியாக தனது பிரசவ காலத்தை மனைவி செலவு செய்ய முடியும், என்ற சிறந்த எண்ணத்தில் அவளை தாய் வீட்டிற்கு யாராவது அனுப்பினால் கூட அவளின் அனைத்து செலவீனங்களையும் கணவன் தான் பொருப்பெடுக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலையாக இருக்கிறது.

மறுமை நாளில் பொருப்புகள் பற்றிய விசாரனையின் போது இதைப்பற்றிய விசாரனையும் நம்மிடம் உண்டு என்பதை நாம் தெளிவாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

தலைப் பிரசவம் தாய் வீடாக இருந்தாலும், அதன் செலவு கணவனுக்குறியதாக இருக்கட்டும்.

ஸலஃபிகளே ஸஹீஹான ஹதீசை செயல்படுத்துங்கள் (மறுக்காதீர்கள்)!


ஸலஃபிகள் என்ற முன்னோர்களை கண்மூடி பின்பற்றும் கூட்டம், பிஜே ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று சில விஷயங்களை உளறி தள்ளியிருந்தார்கள். அதில், பிஜே ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கிறார், ஸஹாபாக்களையும் ஸலஃபிகளையும் பின்பற்றுவது இல்லை என்று கிறுக்கி தள்ளியிருந்தனர். 

ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை இதுவரை பிஜேவை தவிர்த்து வழிகேட்ட கும்பல்கள் தான் மறுத்துள்ளன என்று கதைவிட்டுயிருந்தார்கள். குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை பல நல்ல அறிஞர்கள் மறுக்க வேண்டும் சட்டம் சொல்லியுள்ளனர் என்று அடுக்கடுக்கான வாதங்களை வைத்தவுடன் பதில் தெரியாமல் திகைத்து போயினர், ஒட்டம் எடுத்தனர். அதைபோல், ஸஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடு என்று நாம் நிருபித்தவுடன் ஒட்டம் எடுத்தனர்.

பதில் இல்லாமல் வலுவாக சிக்கிக்கொண்ட பின், ஹதீஸ்கள் பட்டியலை வெளியிடுங்கள் என்று திசை திருப்புகிறார்கள்.

அவர்களின் ஆர்வத்திற்காக குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ் ஒன்றை நாம் வெளியிடுகிறோம். இந்த ஹதீசை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறுவதோடு நின்றுவிடாமல், அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

நாங்கள் ஹதீசை ஏற்றுக்கொள்வோம், ஆனால் அதை செயல்படுத்த மாட்டோம் என்றால், அது ஏமாற்று வேலை. இந்த ஹதீசை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை செயல்படுத்துவும் முடியாது.

இது சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே உரிய சட்டம் என்றும் கதை விடாமல், அதை செயல்படுத்திக் காட்டுங்கள். அவ்வாறு செயல்படுத்தவில்லை என்றால், நீங்களும் இந்த ஹதீசை மறுக்கிறீர்கள் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.

இந்த ஹதீஸின் அடிப்படையில் சவூதியில் பெண்கள் தனியாக வாகன ஓட்டுநர்கள் உடன் சொல்ல வேண்டியிருப்பதால், அந்த பெண்கள் ஒட்டுநர்களுக்கு பால் கொடுத்து, சகோதரர்களாக ஆக்க வேண்டும் என்று சவூதியின் ஸலஃபி அறிஞர் ஒருவர் ஃபத்வா கொடுத்தார். இந்த ஃபத்வாவிற்கு சவூதியில் உள்ள பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சவூதியில் கூட இந்த சட்டத்தை நடைமுறை படுத்தமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்க அறிவு இல்லாமல், தங்களால் வழிகேடர்கள் என்று கூறப்பட்ட, இஸ்மாயில் சலஃபி போன்றவர்களின் ஆக்கங்களை எடுத்து வாந்தி எடுக்கும் சில்மியின் முரிதுகள் வெட்கப்பட வேண்டும். அல்பானியின் மாணவர் என்றும், நான் தான் தமிழ் உலகத்திலேயே நன்கு படித்தவன் என்று உளறும் சில்மி சுயமாக ஆய்வு செய்ய தெரியாதவர் என்பதற்கு இது ஒரு தக்க சான்று.

இந்த நேரத்தில் சவூதி மார்க்க அறிஞர் ஒருவர், அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் கருத்து சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்ற பிஜேவின் கருத்தை முன்வைத்தார். அவரை எதிர்க்க இந்த அரபு நாட்டு அடிமை கூட்டத்திற்கு திராணியில்லை என்பது ரகசியம். பிஜேவின் கருத்தை சொன்ன அறிஞரை இந்த குழப்பிகள் கூட்டம் எதிர்க்க முடியாது. எதிர்த்தால், சம்பளம் வராது.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்-1:

பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டுதல்:

நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள் சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார். மேலும் அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் (சாலிமை அபூஹுதைஃபா வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்) மேலும் அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை (யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது. 

ஆகவே நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அது தான் அல்லாஹ்விடத்தில் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரராகவும் உங்கள் மார்க்கச் சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள் எனும் (33 : 5ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).

பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு அபூஹுதைஃபா பின் உத்பா அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33 : 5 ஆவது) வசனத்தை அருளி விட்டான் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5088)

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே. அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2878)

சஹ்லா (ரலி) அவர்களும் அவரது கணவர் அபூஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது. 

ஸலஃபி மதஹபினர் இந்த ஹதீசை செயல்படுத்துகிறார்களா? அல்லது மறுக்கிறார்களா? என்று பார்ப்போம். 


இந்த ஹதீஸ் குர்ஆனுடன் எவ்வாறு முரண்படுகிறது என்பது தேவைப்பட்டால் பின்னர் விளக்கப்படும்.

Sunday, January 08, 2012

தவ்ஹீத் பள்ளியின் தற்பொழுதைய நிலை (௦8.1.2012)

அதிராம்பட்டினம் தவ்ஹீத் பள்ளியின் தற்பொழுதைய நிலையில் உள்ள புகைப்படங்கள். இன்னும் சில வாரங்களில் ஜும்ஆ விற்கு பெண்களை அனுமதிக்க இருப்பதால் உங்களின் பொருளாதார உதவிகளை தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.





23.12.2011 ஜும்ஆ பயான்

23.12.2011 அதிரை தவ்ஹீத் பள்ளியில்  சகோதரர் மணாஸ் அவா்களின் ஜும்ஆ உரை

Saturday, January 07, 2012

கிழத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

T N T J அதிரை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் 6.1.2012 இஷா தொழுகைக்கு பிறகு கிழத்தெருவில் நடைபெற்றது இதில் சகோதரர் கைசர் அவர்கள் சொர்க்கம் செல்ல என்ன வழி என்ற தலைப்பிலும் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் 75க்கு அதிகமான சகோதரர்கள் கலந்துக்கொண்டார்கள்.



Friday, January 06, 2012

பங்குச் சந்தை தொழில் (Share Market) கூடுமா?



பொருளாதாரம் சம்பந்தமான மற்ற கேள்விகள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் தெருமுனை பிரச்சாரம்

5.1.2012 வியாழகிழமை இஷா தொழுகைக்கு பிறகு பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்


Monday, January 02, 2012

மேலத்தெருவில் தெருமுனை பிரச்சாரம்

அதிரை த த ஜ சார்பாக தெருமுனை பிரச்சாரம் 30.12.2011 சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தலைவர் Y அன்வர் அலி அவர்கள் பிப்ரவரி 14 ல் தஞ்சையில் நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தின் அவசியத்தையும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முஸ்லிம்களிடம் காணப்படும் மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.






Sunday, January 01, 2012

ஜின்களை வசப்படுத்துவது எப்படி?

ஜின்களை வசப்படுத்த முடியுமா? ஜின்களை வசப்படுத்தி வைத்துள்ளோம் என்பவர்களின் ஏமாற்றுதல்களை அறிய.....


Friday, December 30, 2011

ஸஹாபாக்களை பின்பற்றுவது தவறு (வீடியோ)


ஸஹாபாக்கள் நமது உம்மத்தில் தலைசிறந்தவர்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய குர்ஆன் வசனமே அல்லது ஹதீஸே இல்லை. 

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் தம்பட்டம் அடிக்கும் கூட்டம், தங்களின் வாதத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு குர்ஆன் வசனத்தையும் ஒரு ஹதீசையும் தான் முன்வைத்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். அவர்கள் முன்வைத்துள்ள குர்ஆன் வசனத்தையும் ஹதீசையும் படிக்கும் எவரும், அதில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற எந்த வாசகமும் இடம் பெறவில்லை என்பதை புரிந்துகொள்வார்.

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு வளைத்து நெளித்து ஆதாரம் சொல்லும் இவர்கள், ஸஹாபாக்களோடு சேர்த்து ஸலஃபுகள் (முன்னோர்கள்) என்ற ஸஹாபாக்கள் பின்னர் வந்த சில தலைமுறையினரையும் கண்மூடி பின்பற்றுகிறார்கள்.

வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று யாருக்கும் அஞ்சாமல் சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சனம் செய்யும் ஸலஃபுகள் எந்த அளவுக்கு அறியாமையில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸலஃபு கொள்கையை ஏற்றுயிருக்கும் ஒரு சகோதரின் கருத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அந்த சகோதரின் கருத்து:

பெரும்பாலும் தன்னுடைய எந்த பேச்சுக்களிலும் சரி, உரைகளிலும் சரி ஒரு கருத்தை முன்வைக்கும் போது ஸஹாபாக்கள் அல்லது தாபீஈன்கள் அல்லது அவர்களுக்குப் பின் வந்த நேர்வழிநின்ற நல்லோர்களின் கருத்துக்களிலிருந்து அவர் கோடிட்டுக் காட்டுவதில்லை. மாறாக ஒரு கொள்கையை மக்கள் மன்றத்தில் முன்வைப்பதற்காக குர்ஆனையோ ஹதீசையோ கோடிட்டுக் காட்டும்போது அதற்கு அவர் சுயமாக விளக்கம் தருவது வழக்கம். இதற்கு ஓர் உதாரணம்தான் அல்லாஹ் முதல் வானத்தில் ஒவ்வோர் இரவும் இறங்குகிறான் என்பதற்கு அந்த ஹதீசுக்கு மாத்திரம் அப்படி பொருள் கொடுக்கக் கூடாது என்று கூறி சுய விளக்கம் அளித்தது. ஸஹாபாக்கள் மற்றும் முன் சென்ற நல்லறிஞர்களின் புரிதல்களையும் விளக்கங்களையும் புறம் தள்ளியது.

பதில்:

அதாவது குர்ஆன் ஹதீசை பற்றி பேசினால், முன்னோர்களின் கருத்துகளை கோடிட்டு பேச வேண்டுமாம். இங்கு தான் இவர்களின் குருட்டு பக்தி வெளிப்படுகிறது. மனிதர்கள் என்ற முறையில் மார்க்க ஆய்வில் ஸஹாபாக்களும் அவர்களுக்கு பின்னர் வந்தவர்களும் தவறு செய்துள்ளார்கள் (வேண்டும் என்று அல்ல). தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீசை நேரடியாக மக்களுக்கு விளக்குகிறது. 

அல்லாஹ் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக ஆக்கியுள்ளான் என்று கூறிப்பிடுகிறான். 

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17)

ஆனால், ஸலஃபுகள் என்பவர்களை கோடிட்டு தான் பேச வேண்டுமாம். குர்ஆன் ஹதீசை பற்றி பேசும் போது இவர்கள் கோடிட்டு தான் பேச வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் என்பதை ஸலஃபுகள் விளக்குவார்களா? 

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நாம் வைத்த ஆதாரங்களுக்கு பதிலை காணோம். குர்ஆன்னோடு முரண்படும் ஹதீஸ்களை எவ்வாறு முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் அணுகினார்கள் என்பதற்கு நாம் எடுத்து வைத்த வாதத்திற்கு இவர்களின் பதிலை காணோம். இவர்களால் எமது வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாது. இவர்களின் ஷேக் வந்தாலும் (இந்த ஷேக் தான் அல்பானியின் மாணவர் என்று தம்பட்டம் அடிக்கிறார்) எமது வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாது. 

எமது வாதங்களுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது என்பதை இவர்களே தெளிவாக தெரிந்துள்ள காரணத்தினால் தான், பதில் தராமல், பிஜேவின் ஆசிரியர் யார்? என்று தங்களின் மடமையை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் இந்த குருட்டு வாதங்களுக்கு எமது பதில் விரைவில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ். 

வீடியோ பற்றி:

கீழே உள்ள வீடியோவில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று வாதிடுபவர்களின் வாதங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

* ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா?

*ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று குர்ஆனில் கட்டளையிடப்பட்டுள்ளதா?

* ஸஹாபாக்கள் ஸஹாபாக்களை பின்பற்ற சொன்னார்களா?

* ஸஹாபாக்கள் ஸஹாபாக்களை பின்பற்றினார்களா?

போன்ற கேள்விக்குகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்களை வீடியோவில் காணுங்கள்.

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

பாகம்-4

பாகம்-5

Wednesday, December 28, 2011

யஹ்யா சில்மியின் விமர்சனம் என்ன?




ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?


முஸ்லிம்கள் வஹீயை (இறைச் செய்தியை) மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதையும், வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த அபிப்ராயமாகக் கூறியதை, செய்ததைக் கூட மார்க்கமாகச் செய்ய வேண்யதில்லை என்பதையும் விளங்காத காரணத்தால் நபித் தோழர்களின் கூற்றை ஏற்க வேண்டும் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை மாற்றி அமைக்கின்றனர்.

வஹீ இல்லாமல் தேனை நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதையும், வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொல், செயலைக் கூட வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும், வஹீயைப் பெறாத நபித் தோழர்களின் கூற்றைப் பின்பற்ற வேண்டும் என்று சிலர் வாதிடுவது நமக்கு வியப்பாக இருக்கின்றது.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

(அல்குர்ஆன் 7:3)

என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 2:38)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!

(அல்குர்ஆன் 6:106)

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 

(அல்குர்ஆன்  24:51)

"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

 (அல்குர்ஆன் 24:54)

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங் களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 3:31)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 8:46)

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன் 6:153)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண் பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

 (அல்குர்ஆன் 4:59)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 33:36)

எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

 (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனங்கள் யாவும் இறைச் செய்தியை, குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு நாம் கூறும் போது ஸஹாபாக்களை மதிக்காத, திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்றார்கள்.

நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3673

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல்: புகாரி 2651

அல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன் 9:100)

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

(அல்குர்ஆன் 9:117)

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள்.

(அல்குர்ஆன் 57:10)

இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை. நபித்தோழர்களின் சிறப்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையைக் கிழிக்காமல் நாம் விட்டதில்லை.

ஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை.

- சில நபித் தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.

- பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.

- குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.

என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்து கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.

தமத்துஃ ஹஜ்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.

நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன்.  உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள்.  இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, "லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, "நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்
நூல் : புகாரி 1563

ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார்.  அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார்.  அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார்.  அப்போது இப்னு உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : ஸாலிம்
நூல் : திர்மிதீ (753)

தமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இது ஏன்?

குளிப்பு எப்போது கடமை?

நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?'' என்று கேட்டேன்.  அதற்கு "மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.  பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)
நூல் : புகாரி 293

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும்.  பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

"பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : முஸ்லிம் 526, திர்மிதீ 102

இவ்வாறு மாற்றிய விஷயம் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள், இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.

ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கு, அவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டு, தொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)
நூல்: புகாரி 179, 292

மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

குளிப்புக்காக தயம்மம்:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)யிடம், "அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். "தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), "நபி (ஸல்) அவர்கள், "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?'' என்று கேட்டார். அதற்கு, "(இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.

"அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?'' என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்கு, "இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள்'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா
நூல்: 346, 347

குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும், அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும், சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது?

கொள்ளை நோய்:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5279

கொள்ளை நோய் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி நபித் தோழர்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பவர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால் உமர் (ரலி)க்கும், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்களுக்கும் நீண்ட காலமாக தெரியாமல் இருந்துள்ளதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

அனுமதி கோருதல்:

உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), "அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்'' என்றார்கள். "அவர் திரும்பிச் சென்று விட்டார்'' என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி), அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது), "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்'' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், "இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்'' என்று கூறினார்கள்.

உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், "நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள்'' என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)யை உமர் (ரலி)யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதா? நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா
நூல்: புகாரி 2062, 6245

வியாபாரத்தில் கவனம் செலுத்தியதால் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி தமக்குத் தெரியாமல் ஆகி விட்டது என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் அனைத்தையும் முக்கியமான நபித் தோழர்கள் கூட அறியாமல் இருந்தனர் என்பதும், அதற்கான காரணமும் இங்கே விளக்கப்படுகிறது.

நபிகள் நாயகத்தின் மரணம்:

(நபி-ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) உட்கார மறுத்ததும், மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே, அபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.

அப்போது அபூபக்ர் (ரலி), "உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் மீதாணையாக, அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதையவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1242,3670

நபி (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம், நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித் தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.

முத்தலாக்:

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது.  உமர் (ரலி) அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர்.  அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)'' என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 2689

முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர்.

இன்னும் சில...

மு தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு இடையில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்தது. பின்னர் இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டது. அனைத்து ஸஹாபாக்களுக்கும் தெரிந்த, அன்றாடக் கடமைகளில் ஒன்றான இந்தச் சட்டம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. தாமும் ருகூவில் கைகளை முட்டுக் கால்களுக்கு இடையில் வைத்ததோடு, அடுத்தவரையும் அவ்வாறு செய்யத் தூண்டுகின்றார்கள்.

(பார்க்க முஸ்லிம் 831)

மு ஒரு மாதம் 2 மாதம் என்று குறுகிய காலம் ஒப்பந்தம் செய்து திருமணம் முடிக்கும் வாடகை மனைவி முறை கைபர் போரின் போது தடுக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். ஆனால் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை இது தடுக்கப்படவில்லை என்று கூறிக் கொண்டிருந்தனர்.

(பார்க்க புகாரி 4518)

மு மைமூனா (ரலி) தம்மை நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தனர் என்ற செய்தியை மறுத்துள்ள போதும், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது தான் மணம் முடித்தார்கள் என்று மைமூனாவின் சகோதரி மகன் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

(பார்க்க புகாரி 1837)

நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.

(பார்க்க புகாரி 1128, 1177)

இப்னு உமர் (ரலி) அவர்களும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று கூறும் செய்தி புகாரி 1175ல் உள்ளது.

குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.

நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.

இப்படி எண்ணற்ற சான்றுகள் ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன?

நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை இந்தச் செய்திகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, "நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டு, "முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.

அப்போது நான், "என் இறைவா, என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், "நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 4740, 6524

குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும், நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும். 

திருக்குர்ஆனும், நபிவழியும் அல்லாத வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்பதை நாம் இன்றைக்குச் சொல்லவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக இதைத் தான் நாம் கூறி வருகிறோம். ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதை நிலை நாட்டுவதற்காக இந்த நிலைபாட்டை நாம் எடுக்கவில்லை. 

ஆனால் குர்ஆன், ஹதீஸைத் தவிர வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்று கூறி வந்தவர்கள் கூட ஜகாத் விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் தங்களுக்கு ஆதாரமில்லாததால் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்துள்ளனர்.

இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை ஒன்றை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறோம்.

மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன்.  அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள்.  1. அல்லாஹ்வின் வேதம் 2.  அவனது தூதரின் வழிமுறை என்று நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: ஹாகிம் 318

நன்றி: ஏகத்துவம்