Monday, February 20, 2012

விவாதத்தில் இருந்து ஒட்டம் எடுத்த ஜெர்ரி தாமஸ் கூட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல்!

விவாதத்தில் இருந்து ஒட்டம் எடுத்த ஜெர்ரி தாமஸ் கூட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல். விபரம் அறிய இங்கே சொடுக்கவும்.

Sunday, February 19, 2012

ஆசிரியரை கொன்ற மாணவன் - பெற்றோர்களின் சிந்தனைக்கு

சென்னை, பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது. செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியராகப் பணியாற்றி வந்த உமாமகேஸ்வரி என்ற 39 வயது ஆசிரியையை அந்தப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் நாம் பெற வேண்டிய பாடங்களும் படிப்பினைகளும் நிறைய உள்ளன. இந்த கொலைக்குக் காரணம் என்ன என்று அந்த மாணவனிடம் போலீஸார் விசாரித்தபோது அந்த மாணவன் அளித்த வாக்குமூலம் நம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

படம் பார்த்து கொலை செய்தேன்

“அக்னி பாத்” என்ற படம் பார்த்தேன், அதில் வரும் சம்பவங்களைப்போல அதைப் பார்த்துத்தான் ஆசிரியரைக் கொலை செய்தேன் என்று அந்த மாணவன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

15 வயது மாணவனுடைய மனதில் இத்தகைய கொடூரமான வக்கிர புத்தியை ஊட்டக்கூடிய மகத்தான(?) பணியை இந்தத் திரைப்படங்கள் செய்து வருகின்றன என்றால், இந்த நாடு எத்தகைய கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதையும், இந்த நிலை முத்திப் போகுமேயானால் நாம் அடிக்கடி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் நடப்பதாக செய்தி்த்தாள்களில் படித்துக்கொண்டிருக்கின்றோமே ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட பள்ளி மாணவன் கைது, பல பேரை துப்பாக்கியால் சுட்ட பள்ளி மாணவன் சிக்கினான், இது போன்ற செய்திகள் நமது தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்துவிடும்.

அதன் பிறகு சமூக விரோதிகளுக்கும், கொள்ளைக் கும்பல்களுக்கும் பயந்து வாழும் நிலைமாறி, எந்த மாணவன் கையில் கத்தியுள்ளதோ? எந்த மாணவன் கையில் துப்பாக்கி உள்ளதோ? என பள்ளி ஆசிரியர்கள் உள்பட பொதுமக்களும் பயந்து சாகும் நிலைக்கு ஆளாக்கப்படலாம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் இந்தக் கேடுகெட்ட திரைப்படத்துறையை ஒழித்தால்தான் இது போன்ற வக்கிர எண்ணங்களும், வன்முறைச் சம்பவங்களும் நிகழாமலும், நம்முடைய இளைய தலைமுறையை இது போன்ற பேராபத்திலிருந்தும் நாம் பாதுகாக்க முடியும்.

திரைப்பட மோகத்தின் உச்சம்

எந்த அளவிற்கு திரைப்பட மோகம் நம் மக்கள் மத்தியில் தலை விரித்தாடுகின்றது என்பதற்கு இந்த நிகழ்வே சான்று பகர்கின்றது. எந்த அளவிற்கென்றால், இந்தக் கொலை சம்பவத்தை இவ்வளவு சீரியஸாக ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டு செய்தித் தாள்களையும், தொலைக்காட்சி சேனல்களையும் திருப்பிப் பார்த்தால், இந்தக் கொலை சம்பவத்தைப் பற்றி அவர்கள் செய்தி சொல்லும் போதும், அதைப்பற்றி எழுதும் போதும் கூட “ஒய் திஸ் கொல வெறி?” ஏன் இந்தக் கொல வெறி? என்று ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளை வைத்துத்தான் செய்தி சொல்லுகின்றார்கள் என்றால், ஒரு துக்ககரமான ஒரு செய்தியைக் கூட இவா்களை சினிமா எந்த அளவிற்கு சிந்திக்கவிடாமல் தடுத்து இவர்களது மூளைக்கு மூடி போட்டுள்ளது என்று நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

பெற்றோர்களே உஷார்

இது போன்ற சம்பங்களில் நாம் பெற வேண்டிய அடுத்த படிப்பினை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஒழுங்காகப் பேணி வளர்க்க வேண்டும் என்பதுதான். இது போன்ற வன்முறையைத் தூண்டக்கூடிய படங்களையும், ஆபாசப் படங்களையும் குடும்ப சகிதம் பார்த்து அனைவரும் பரவசப்பட்டு(?) இருக்கும் போது, இது போன்ற காரியங்களை நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்தால் என்ன? என்ற ஒரு உந்துதல் நமது குழந்தைகள் மனதில் வந்துவிடுகின்றது.

நம்முடைய பெற்றோர்களும் இணைந்து இருந்து பார்த்த, அவர்கள் ரசித்த, அவர்கள் ஆமோதித்த, அவர்கள் கைதட்டி வரவேற்ற, இது போன்ற வன்முறைகளையும், ஆபாசங்களையும் நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்தால் தவறில்லை என்று நமது குழந்தைகள் உள்ளத்தில் பதியுமானால் நாளை நமக்கும் கூட இந்த நிலை ஏற்படலாம்.

பெற்றோர்கள் கொடுக்கும் டார்ச்சா் தாங்க முடியாமல், பெற்றோர்களையே கொலை செய்வது போல ஒரு அழகிய(?) திரைக்கதை, வசனத்துடன் கூடிய ஒரு சினிமாவை பெற்றோர் சகிதம் அமா்ந்து ரசித்துப் பார்க்கும் ஒரு மாணவன், நம்முடைய பெற்றோர் இது போல டார்ச்சர் செய்தால், இந்த படத்தில் தனது பெற்றோரை கிளைமாக்ஸ் காட்சிகள் கொலை செய்யும் மகனைப் போல, நமது பெற்றோரையும் தீர்த்துக் கட்டி விட்டு இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை செய்து காட்டிவிடலாம் என்று முடிவெடுத்தால், உமா மகேஸ்வரி என்ற ஆசிரியைக்கு வந்த கதிதான் சினிமா பார்க்க வைத்து தங்களது குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளை டார்ச்சர் செய்வது கூடாது

அடுத்து, இந்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய படிப்பினை “பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டார்ச்சர் செய்வது கூடாது” என்பதாகும். இப்பொழுது உள்ள கால சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ஏதேனும் ஒரு பாடத்தில் குறைவாக மதிப்பெண் எடுத்துவிட்டால் அந்தக் குழந்தைகளின் பாடு பரிதாபம்தான். “ஏன் நீ மதிப்பெண்கள் குறைவாக வாங்கினாய்” என்று அந்தக் குழந்தைகளை பெற்றோர்கள் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஏதோ ஐந்து மதிப்பெண்கள் குறைந்து விட்டால் உலகமே அழிந்துவிட்டது போல அந்தக் குழந்தைகளை போட்டு பின்னி எடுக்கக் கூடிய பெற்றோர்கள் ஏராளமானவர்கள் உள்ளனா்.

ஒரு பக்கம் இப்படி குழந்தைகளை பெற்றோர்கள் அடித்து துன்புறுத்தி அவர்களுக்கு மெண்டல்  டார்ச்சர் கொடுத்து அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பொது அவர்கள் இதற்கான தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர், துடிக்கின்றனர்.

மறுபக்கம் சரியாகப் படிக்காவிட்டாலோ, அல்லது மதி்ப்பெண்கள் குறைந்து வி்ட்டாலோ, “ஏன் நீ சரியாக படிக்கவில்லை ஏன் மதிப்பெண் குறைத்து வாங்கியுள்ளாய்” என்று ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் அவர்களை கேட்கும் போது அவர்களுக்கு மன அழுத்தம் இன்னும் அதிகமாகின்றது.

வீட்டிற்குப் போனாலும் அடித்து துவைக்கிறார்கள் பள்ளிக்கு வந்தாலும் பின்னி எடுக்கிறார்கள் என்று உணரும் மாணவன், மன அழுத்தத்தின் உச்சிக்குச் சென்றால் என்ன நடக்கும்?

“நடக்கக்கூடாததெல்லாம் நடக்கும்” அவன் பள்ளிக்கும் செல்ல முடியாமல், வீட்டிற்கும் செல்ல முடியாமல் மன அழுத்ததிற்கு ஆளானால் வேறு வழியின்றி அவன் கத்தி விற்கும் கடைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும்தான் உருவாக்குகின்றார்கள். அதற்கு வாழ்வியல்(?) வழிகாட்டும் காரணியாக இந்த கேடுகெட்ட சினிமாக்கள் காரணமாக அமைந்துள்ளன.

இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரவணைப்பதோடு, ஆசிரியர்களும் அவர்களை ஊக்கப்படுத்தும் விஷயங்களை சொல்லி அவர்களை ஊக்குவிப்பதோடு, வன்முறைகளையும், ஆபாசங்களையும் தூண்டும் கேடுகெட்ட சினிமாக்களையும், மெகா சீரியல்களையும் விட்டு மக்கள் வெறியேற வேண்டும். அப்போதுதான் இந்த சமுதாயமும், நாடும் உருப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.


நூல்: புகாரி 892

நன்றி
உணர்வு

Saturday, February 18, 2012

பீஜே கோடிஸ்வரனாக ஆகியது எப்படி?


பீஜே அவர்கள் அரசியல்வாதிகளிடம் பெட்டி வாங்கியும், ஜமாஅத்தை வைத்து பணம் சம்பாதித்தும் கோடிஸ்வரர் ஆகிவிட்டார் என்று சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகிறார்கள். இது போன்ற அவதூறுகளால் மாற்றுக் கொள்கையில் உள்ள பலர் தவ்ஹீதை ஏற்க மறுக்கிறார்கள்.

இதன் உண்மை நிலையை அறிய கீழுள்ள வீடியோவை பார்க்கவும். இதை பார்த்த பிறகும் இது அவதூறு என்பதை நம்ப முடியாவிட்டால், பீஜே கோடிஸ்வராக ஆகிவிட்டார் என்று அவதூறு பரப்புபவர்களை நேரடியாக நிரூபிக்க வருமாறு பீஜே அரைகூவல் விடுத்துள்ளார். இவ்வாறு அவதூறு பரப்புபவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதை நிரூபிக்க முன்வர வேண்டும்.


Friday, February 17, 2012

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு - தொடர் 6 (இறுதி பாகம்)


'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூல் இங்கு தொடராக வெளியிடப்படும். முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.






தொடர் 6:

ஒழுங்கு முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்:

நேரம் கிடைக்கும் போது தூங்குவதின் ஒழுக்கங்கள் சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுக்க நெறிகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக கற்றுத்தர வேண்டும். அவர்கள் தவறுதலாக செய்யும் போது சரியான வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகி-ருக்கும் பகுதியி-ருந்து எடுத்துச் சாப்பிடு!'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

அறிவிப்பவர் : உமர் பின் அபீ சலமா (ரலி)
நூல் : புகாரி (5376)

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலிலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகüன் இடுக்கில் வைத்துக்கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்துகொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஸ்அப் பின் சஃத் (ரஹ்)
நூல் : புகாரி (790)

மார்க்க அறிஞர்களாக மாற்றலாம்:

இஸ்லாமிய ஒழங்கு முறைகளை கற்றுக்கொடுத்து பிள்ளைகளை வளர்க்கும் போது காலப்போக்கில் அச்சிறுவர்கள் பெரியவர்களுக்கே ஒழுங்கு முறைகளை கற்றுத்தரும் ஆசானாக மாறிவிடுவார்கள். உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சிறுவராக இருந்த அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிந்துவைத்திருந்தார்கள்.

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ர-) அவர்கள்  வந்து, "நான் உமர் (ர-) அவர்கüடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியüக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலிலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்- இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை'' என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், "(தங்கüடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியüக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கüல் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்' என்று கூறியுள்ளார்கள்'' என்றேன். அதற்கு உமர் (ர-) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்' என்று சொன்னார்கள். இதை நபி (ஸல்) அவர் கüடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்கüல் உள்ளாரா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ர-) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கüல் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்'' என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்கüல் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ர-) அவர்களுடன் சென்று "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்'' என்று உமர் (ர-) அவர்கüடம் தெரிவித்தேன்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (6245)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாலிபராக இருந்த போது அவர்களை விட வயதில் மூத்தவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து கல்வியில் பொறாமைப்படும் அளவிற்கு இளம் வயதிலே நிறைவான மார்க்க அறிவை இப்னு அப்பாஸ் (ரலி) பெற்றிருந்தார்கள்.

உமர் (ர-) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமüத்து வந்தார்கள். ஆகவே, அவர்கüல் சிலர், "எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டு விட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ர-) அவர்கள், "அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்கüல் ஒருவர்'' என்று பதிலüத்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்கüடம்) உமர் (ர-) அவர்கள், "இதா ஜாஅ  நஸ்ருல்லாஹி..... (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம்  கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)'' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது "அந் நஸ்ர்') அத்தியாயத்தை இறுதி வரை ஓதிக்காட்டி, "இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அவர்கüல் சிலர், "நமக்கு உதவியும் வெற்றியும் அüக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம்'' என்று (விளக்கம்) கூறினர். சிலர், "எங்களுக்குத் தெரியாது'' என்றனர். அல்லது அவர்கüல் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ர-) அவர்கள் என்னிடம், "இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை'' என்றேன். அவர்கள், "அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். நான், "அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்கüன் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள "வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பüப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்'' என்று சொன்னேன். உமர் (ர-) அவர்கள், "நீங்கள் இந்த அத்தியாயத்தி-ருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (4294)

திருக்குர்ஆனை மனனம் செய்ய வைத்தல்:

அல்லாஹ்வுடைய வசனத்தை மனனம் செய்யாத உள்ளம் பாலடைந்த வீட்டைப் போன்றது. பாலடைந்த வீட்டிலே விஷ ஜந்துக்கள் தான் குடியிருக்கும். அது போன்று நமது குழந்தைகளின் உள்ளம் ஆகிவிடக்கூடாது.

சிறுவயதிலேயே குர்ஆன் ஓதக்கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்து மனப்பாடம் செய்ய வைப்பதைப் போல் குர்ஆனில் உள்ள சூராக்களையும் இயன்ற அளவு மனனம் செய்வதற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவர்கள் குர்ஆனில் அதிகமானதை மனனம் செய்து வைத்திருந்தார்கள்.

"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாழ்ந்த) காலத்திலேயே "அல் முஹ்கம்' அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன்'' என்று இப்னு அப்பாஸ் (ர-) அவர்கள் கூறினார்கள். நான் அவர்கüடம், " "அல்முஹ்கம்' என்றால் என்ன?'' என்று கேட்டேன். அவர்கள் " "அல்முஃபஸ்ஸல்'தான் ("அல்முஹ்கம்')'' என்று (பதில்) சொன்னார்கள்.

அறிவிப்பவர் : சயீத் பின் ஜுபைர் (ரஹ்)
நூல் : புகாரி (5036)

மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகüடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்கüடையே) இருக்கவில்லை. ஆகவே,  (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், "உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்கüடமிருந்து மறைக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

அறிவிப்பவர் : அமர் பின் சலிமா (ரலி)
நூல் : புகாரி (4302)

துஆக்களைக் கற்றுத் தர வேண்டும்:

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். எந்த எந்த நேரங்களில் பிரார்த்திக்க வேண்டும். எதை கேட்க வேண்டும் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இவற்றை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

சிறுவராக இருந்த ஹசன் (ரலி) அவர்களுக்கு குனூத்தில் ஓத வேண்டிய துஆவை நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். அதை அவர்கள் மறந்துவிடாமல் மற்றவர்களுக்கு கூறியதால் இன்றைக்கு அந்த துஆவை ஓதும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

வித்ரில் நான் ஓத வேண்டிய வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அல்லாஹ‚ம்மஹ்தினீ ஃபீ மன் ஹதய்த. வஆஃபினீ ஃபீ மன் ஆஃபய்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லைத. வபாரிக் லீ ஃபீமா அஃதய்த. வகினீ ஷர்ர மா களைத. ஃப இன்னக தக்ளீ வலா யுக்ளா அலைக்க. வ இன்னஹ‚ லா யதுல்லு மவ் வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த (என்பதே அந்த வார்த்தைகளாகும்).

பொருள் : இறைவா நீ நேர்வழிகாட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழிகாட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக்கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படமாட்டாது. நீ யாருக்கு பொறுப்பேற்றாயயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா நீயே பாக்கியசாளி. நீயே உயர்ந்தவன்.

அறிவிப்பவர் : ஹஸன் (ரலி)
நூல் : திர்மிதி (426)

குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கின்ற நேரத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்களைப் போன்று மாறிவிட வேண்டும்.

ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் (ர-) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்த-ல் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி.

பொருள் : "இறைவா! நான் கோழைத்தனத்தி-ருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதி-ருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகü-ருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; புதை குழியின் வேதனையி-ருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்'' என்று கூறிவிட்டு, "இந்த விஷயங்கü-ருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் மய்மூன் (ரஹ்)
நூல் : புகாரி (2822)

சிந்திக்கத் தூண்ட வேண்டும்:

ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் அறிவு வளரும் என்று சொல்வார்கள். குழந்தைகளிடத்தில் கேள்விகளைக் கேட்டு பதிலை வரவழைக்கும் போது அவர்கள் அறிவாளியாகிறார்கள். இவ்வாறு செய்வதால் மூளைக்கு வேலை கொடுக்கப்பட்டு சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வழிமுறையை கையாண்டு கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள்.

மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிலிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் "அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்க, "அது பேரீச்ச மரம்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (131)

குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அதை நிவர்த்தி செய்வதற்காக பெற்றோர்களிடம் வருவார்கள். அப்போது பெற்றோர்கள் அதை ஊதாசீனப்படுத்திவிடாமல் சந்தோஷத்துடன் அதற்கு முறையான அடிப்படையில் பதில் சொல்ல வேண்டும்.

நான் என் தந்தையிடம் என் தந்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகியோருக்கும் பின்னாலும் கூஃபாவாகிய இங்கே அபூதாலிபின் மகன் அலீ (ரலி) அவர்களுக்குப் பின்னாலும் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் நீங்கள் தொழுதுள்ளீர்கள். இவர்கள் (தொழுகையில்) கூனூத் ஓதினார்களா? என்று கேட்டேன். அதற்கு என் தந்தை எனது அருமை மகனே (இத) புதிதாக உருவாக்கப்பட்டதாகும் என்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூ மாலிக் (ரஹ்)
நூல் : திர்மிதி (368)

பயிற்சி அளிக்க வேண்டும்:

பருவ வயதை அடையும் போது தான் தொழுகை நோன்பு போன்ற வணக்கங்கள் கடமையாகும். என்றாலும் அதற்கு முன்பே வணக்க வழிபாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி பயிற்சி கொடுக்க வேண்டும். இவ்வாறு பயிற்சி கொடுக்கும் போது மார்க்க சட்டத்திட்டங்கள் அவர்களுக்கு எளிதாகவும் விருப்பமானதாகவும் மாறிவிடும். 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தொழுகை நோன்பு ஹஜ் போன்ற  வணக்கங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் வழக்கம் இருந்துள்ளது.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ர-) அவர்கள் அவர்களை அழைத்து, "(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்'' என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) புறப்பட்டு வந்து, "பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (862)

நபி (ஸல்) அவாகள் முஹர்ரம் பத்தாம்நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!'' என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)
நூல் : புகாரி (1960)

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!

அறிவிப்பவர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி)
நூல் : புகாரி (1858)

ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, "இவனுக்கும் ஹஜ் உண்டா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு'' என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (2596)

காது மூக்கு குத்தலாமா?

காது மூக்கு குத்தக்கூடாது என்று தெளிவாக எந்த ஒரு தடையும் வரவில்லை. மாறாக அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக்கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளை கிழிப்பதும் அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.

"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் (4 : 119)

இயற்கையாக அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபி (ஸல்) அவர்களும் தடைசெய்துள்ளார்கள்.

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அüத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5931)

காதுகளிலும் மூக்கிலும் துளையிடும் போது அழகான தோற்றம் வரும் என்று நாம் நினைப்பதால் தான் காது மூக்கு குத்திக்கொள்கிறோம். இவற்றில் துளையில்லாமல் பிறக்கும் மனிதன் அழகான தோற்றமுள்ளவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம். 

அல்குர்ஆன் (95 : 4)

மிக அழகாக படைப்பது தன்னுடைய தன்மை என்று அல்லாஹ் கூறுகிறான்.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்.  பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

அல்குர்ஆன் (23 : 14)

"அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு "பஅல்' எனும் சிலையைப் பிரார்த்திக் கிறீர்களா?

அல்குர்ஆன் (37 : 125)

காது மற்றும் மூக்கில் துளையிடுவது இறைவனுடைய படைப்பில் குறைகாணுவதைப் பிரதிபலிப்பதால் இதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தச் சட்டம் தெரியாத நேரத்தில் குத்திக்கொண்டவர்கள் துளையை அடைக்க வேண்டியதில்லை. அதில் ஆபரணங்களை இட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் சஹாபிய பெண்கள் காதுகளில் தோடுகளை அணிந்திருந்ததார்கள். காது குத்துவதால் ஏற்பட்ட துளையை அடைக்க வேண்டுமென்றோ அத்துளையில் ஆபரணங்களை அணியக்கூடாது என்றோ நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களுக்குக் கூறவில்லை. மாறாக ஒப்புதல் வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலிலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.  அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள்.  அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.     

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (98)

தாயத்தை தொங்க விடக்கூடாது:

குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது பெற்றோர்கள் அவர்களை தர்ஹாக்களுக்கு அழைத்துச் சென்று தாயத்து என்றக் கருப்புக் கயிறை வாங்கி குழந்தைகளின் மேல் மாட்டிவிடுகிறார்கள். அல்லாஹ்வின் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை அற்பக் கயிற்றின் மீதும் இறந்தவர்கள் மீதும் வைத்துவிடுகிறார்கள். இவ்வாறு செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. 

கயிறுக்கோ இரும்பு வளையத்திற்கோ நோயை அகற்றும் சக்தி இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாகிவிடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பத்து பேரைக் கொண்ட) சிறிய குழு ஒன்று வந்தது. ஒன்பது பேர்களிடத்தில் உறுதிப்பிரமானம் வாங்கினார்கள். ஒருவரிடத்தில் மாத்திரம் (பைஅத்) செய்யவில்லை. அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது நபர்களிடத்தில் (பைஅத்) உறுதிப்பிரமானம் வாங்கினீர்கள். இவரை விட்டுவிட்டீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். உடனே (தாயத்து அணிந்திருந்தவர்) தன் கையை (ஆடைக்குள்) விட்டு தாயத்தை அகற்றினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் பைஅத் செய்துவிட்டு எவன் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் இணைவைத்துவிட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : அஹ்மத் (16781)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன்  இருந்தேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள்  தூதுவர் ஒருவரை அனுப்பி,"எந்த ஒட்டகத்தின் கழுத்திலும்   (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப் படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட  வேண்டும்'' என்று (பொது மக்கüடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ பஷீர் (ரலி)
நூல் : புகாரி (3005)

நோய்க்காக ஓதிப்பார்க்கலாம்:

நோயிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது.

ஆயிஷா (ர-) அவர்கüடம், விஷக்கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஓவ்வொரு விஷ உயிரினத்தின் கடியி-ருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியüத்தார்கள்''  என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்)
நூல் : புகாரி (5741)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால்  பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக்கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்கüன் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்கüன் (உடல்) மீது தடவலானேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (4439)

ஓதிப்பார்க்கும் முறை:

திருக்குர்ஆனுடைய குறிப்பிட்ட சில சூராக்களை ஓதி குழந்தைகளின் உடம்பில் ஊதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவாறு மட்டுமே ஓதிப்பார்க்க வேண்டும். அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் சேர்த்துவிடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் "குல் ஹுவல்லாஹு அஹத்', "குல் அஊது பிரப்பில் ஃபலக்', "குல் அஊது பிரப்பின் னாஸ்'  ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உட-ல் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முத-ல் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உட-ன் முற்பகுதியில் கைகளால் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5017)

நோயாளி குணமாவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். குழந்தைகள் நோயுறும் போது அவற்றை நாம் ஓதிக்கொள்ள வேண்டும்.

நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மா-க் (ர-) அவர்கüடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் "அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்'' என்று சொல்ல, அனஸ் (ர-) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), "சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)'' என்று சொல்ல, அனஸ் (ர-) அவர்கள், "அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமüப்பாயாக! நீயே குணமüப்பவன். உன்னைத் தவிர குணமüப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமüப்பாயாக.)

அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்)
நூல் : புகாரி (5742)

சூரத்துல் பாத்திஹாவை வைத்தும் ஓதிப்பார்க்கலாம். புகாரி (5736)

இணைவைப்பு இருக்கக்கூடாது:

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிலிக்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பித்தல் இல்லையானால் ஓதிப்பார்த்தலிலில் எந்தக் குற்றமும் இல்லை'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (4427)
நூல் : முஸ்லிம் (4427)

மகன் திருந்தாவிட்டால்...

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நாம் எவ்வளவு தான் அறிவுரைகளையும் உபதேசங்களையும் கூறினாலும் சிலர் அதைக் கேட்காமல் தன் இஷ்டம் போல் தடம்புரண்டுச் செல்வார்கள். பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படமாட்டார்கள்.

இத்தகைய பிள்ளைகள் நமக்கு இருந்தால் அவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தும் திருந்தாவிட்டால் அல்லாஹ் நாடியவர்களுக்குத் தான் நேர்வழி கிடைக்கும் என்பதை கவனத்தில் வைத்து பொறுமை காக்க வேண்டும். அவனுக்கு நேர்வழியை தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நூஹ் (அலை) அவர்களின் மகன் கெட்டவனாக இருந்தான். நூஹ் (அலை) அவர்களுக்கு அவன் கட்டுப்பட மறுத்தான். இறைநிராகிப்பாளனாக மரணித்தான். இந்த வரலாற்றை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி "அருமை மகனே! எங்களுடன் ஏறிக்கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!'' என்று நூஹ் கூறினார்.

"ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப் பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான்.

அல்குர்ஆன் (11 : 42)

நூஹ், தம் இறைவனை அழைத்தார். "என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்'' என்றார்.

"நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்'' என்று அவன் கூறினான்.

"இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள்புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் (11 : 45)

நம்மையும் நமது குழந்தைகளையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவானாக.


முற்றும்

Thursday, February 16, 2012

பிப்ரவரி 14 போராட்டம் : சன் நியுஸ், ராஜ் டிவி, கலைஞர் செய்திகள், மக்கள் டிவி வீடியோ

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் குறித்த செய்திகள்




கலவர வழக்கு : குஜராத் அரசிற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ஆமதாபாத் : குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து, குஜராத் ஐகோர்ட், அரசிற்கு கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2002ம் ஆண்டில், குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா கலவரத்தின் எதிரொலியாக தொடர்கலவரங்கள் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்று குஜராத் ஐகோர்ட், கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களாகிய தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்று அவர்களின் சார்பில் குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட 56 பேருக்கு உரிய நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத குஜராத் அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கிற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கலவரத்தால் சேதமடைந்த 600க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களை சீர்படுத்தும் பொருட்டு, நிதியை ஒதுக்க வேண்டும் என்று அரசிற்கு ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி
தினமலர்

Wednesday, February 15, 2012

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் மற்ற மாவட்டங்கள்

 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் பிப்ரவரி 14  அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்

வட சென்னை மாவட்டம் சார்பாக முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கலக்கட்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது







மதுரை மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது



 கடலூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





நாகை வடக்கு மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





வேலூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது



நாமக்கல் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





நெல்லை மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது




தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது




 திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது






 நாகை தெற்கு மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது








காஞ்சி கிழக்கு மாவட்டத்தில்  இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது








திருவாரூரில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது










ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது






கோவை மாவட்டத்தில் கடந்த 14-2-2012 அன்று தடையை மீறி முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது.








பேரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





தேனி மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது.





புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது









குமரி மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





புதுவையில் கடந்த 14-2-2012 அன்று முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது



விழுப்புரம் மேற்கு மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்



ராமநாதபுரத்தில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது





திருச்சி மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது












Tuesday, February 14, 2012

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் தஞ்சை

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக தஞ்சை ரயில் நிலையம் எதிரில் சரியாக 4.00 மணிக்கு துவங்கியது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அன்வர் அலி அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து மாநில செயலாளர் முகம்மது ஒலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் இதில் 2000 க்கு அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துக்கொண்டார்கள் முடிவில் மாவட்ட செயலாளர் பாஷா நன்றி உரையுடன் முடிவடைந்தது .