தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம் துபை தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் 29-5-2015 வெள்ளிகிழமை மதியம் 2:00 மணியளவில் அல்லாஹ்வின் கிருபையால் அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இதில் அபுதாபி சார்ஜா அஜ்மான் போன்ற பகுதிகளிலிருந்து அதிரை சகோதர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிரையில் ஏகத்துவ பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் அல் ஹிக்மா பெண்கள் மதரசா பற்றியும் ஆலோசித்து பல தீர்மானங்களோடு முடிவு செய்யப்பட்டு இறுதியாக அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தர்பியா நிகழ்த்தி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!





















































