Monday, August 18, 2014

அதிரையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக 16-8-2014 நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் சகோ. செய்யது இப்ராஹீம் அவர்கள் கலந்து கொண்டு சகோதரர் சகோதரிகளின்  கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!







  




 

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம்



TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..

அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 15.08.2014 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 7.40 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதில், ரமலானில் ஃபித்ரா அமீரக திர்ஹம்ஸ் 3,840/- வசூலிக்கப்பட்டதையும், அதிலிருந்து ஊருக்கு ரூபாய் 18,000/- விநியோகிக்கப்பட்டதையும் விளக்கப்பட்டது. மீதமுள்ள தொகை தலைமைக்கு அனுப்பபட்டு தேவையுள்ள ஊர்களில் விநியோகம் செய்யப்பட்டதையும் விளக்கப்பட்டது.

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.



ஜசாக்கல்லாஹ்..



Tuesday, August 12, 2014

லாரல் பள்ளி மானவர்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் தீர்வு

லாரல் பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் துளை துரத்தில் இருந்து  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நீண்ட காலமாக வண்டிப்போட்டை பஸ் நிறுத்திலிருந்து லாரல் பள்ளி  வாகனத்தில் ஏறிச்செல்வதும் ஒரு சில  நேரங்களில் பள்ளி வாகனத்தை தவறவிடுவதும் என பல சிறமங்களை சந்தித்துவந்தனர்

இதை அறிந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் லாரல் பள்ளியின் தாளாலரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று தாளாலர் அவர்கள் திங்கள் முதல் அதிரை பெரிய ஜும்ஆ பள்ளி அருகில் புதிதாக பஸ் நிறுத்தத்திற்கு அனுமதியளித்தார்கள் அதன் படி திங்கள் முதல் சானாவயல் கீழத்தெரு மற்றும் அதை சுற்றியுள்ள மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜும்ஆ பள்ளி நிறுத்தத்திலிருந்து ஏறிச்செல்கிறார்கள் இந்த பஸ் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றியும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்


Sunday, August 10, 2014

தேவை நிவாரணமல்ல! நியாயம்!

ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நடத்தப்படுகின்ற ஓர் ஒற்றுமை மாநாடு தான் ஹஜ் என்று சொல்லலாம்.

நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம் ஆகியவை மனித சமுதாயத்தை அடையாளம் காட்டுகின்ற அளவுகோல் தானே தவிர அவை மனித சமுதாயத்தைக் கூறு போடுகின்ற பிரிவினைக் கோடுகள் அல்ல என்று திருக்குர்ஆன் தெளிவுபடக் கூறுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்இ கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இதனுடைய செயல்திட்டம் தான் ஹஜ் எனும் மாநாடாகும்.

கருப்பினத்தைச் சார்ந்த ஆப்பிரிக்கரையும், வெள்ளை இனத்தைச் சார்ந்த ஐரோப்பியரையும், வெவ்வேறு மொழிகள் பேசுகின்ற பல்வேறு இனத்தவர்களையும், தலைவர்களையும், குடிமக்களையும் ஒரே வெள்ளை ஆடை உடுத்தச் செய்து, உங்களில் நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம், ஆண்டான், அடிமை என்ற பேதம் இல்லை. நீங்கள் எல்லோரும் ஆதமுடைய மக்கள் என்று அல்லாஹ் இந்த மாநாடு மூலம் மனித சமுதாயத்திற்கு உரைக்கவும் உணர்த்தவும் செய்கின்றான்.

உலகத்தில் எந்த ஒரு முனையிலும், எந்த ஒரு மதத்திடமும், சித்தாந்தத்திடமும் உலக மக்களை ஒன்றிணைக்கின்ற செயல்திட்டம் அறவே இல்லை. இஸ்லாத்தில் மட்டுமே அது இருக்கின்றது. மனித குலத்தை ஒரு கயிற்றில் இணைக்கின்ற சக்தி இஸ்லாத்தில் மட்டும் தான் இருக்கின்றது.

உலக மக்களுக்கு இந்த உண்மையை ஹஜ் மாநாடு உணர்த்துகின்ற அதே வேளையில், முஸ்லிம்களுக்குக் குறிப்பாக ஒரு உண்மையை உணரச் செய்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 6011

இந்த சகோதர பாச உணர்வையும், ஒற்றுமையையும் இறுகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு ஹஜ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி 2446

ஈமானிய கட்டமைப்பு என்பது இறுகப் பிணைந்த ஒரு கட்டட அமைப்பை ஒத்திருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹஜ் மாநாடு கோடிட்டுக் காட்டுகின்றது.

இதைத் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

'மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்'' (என்றும் கூறினோம்.)

அல்குர்ஆன் 22:26, 27

இந்த ஒற்றுமை உணர்த்துதலும் ஹஜ்ஜின் பலன்களில் உள்ளது தான். ஆனால் ஹஜ்ஜின் மூலம் இந்த விளைவுகளை இஸ்லாமிய உலகம் கண்டிருக்கின்றதா என்றால் இல்லை.

இஸ்லாமிய, ஈமானிய உடலின் கை, கால்கள் உடைக்கப்படுகின்றன; கண்கள் குத்தப்படுகின்றன; காதுகள் அறுக்கப்படுகின்றன. இஸ்லாமிய கட்டமைப்பு எதிரிகளால் உடைக்கப்படுகின்றது. அதில் ஓட்டைகளும் உடைசல்களும் விழுந்து ஒட்டுமொத்த கட்டடத்தையும் பாதிக்கச் செய்கின்றன. இதற்கு நிதர்சனமான, நேரடியான எடுத்துக்காட்டு தான் பாலஸ்தீனம்.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்களை ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திவிட்டனர் என்று குற்றம் சாட்டி, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பாலஸ்தீனத்தில் மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் நடத்தி, பெண்கள்இ பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் என்று பாராமல் அழித்து வருகின்றது. மக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளையும் மனிதநேயமற்ற யூத வெறியர்கள் குண்டு வீசித் தகர்த்து வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர்.

சிறுநீரகம் இழந்து டயாலிஸிஸ் செய்து கொள்கின்றஇ இதயநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்கின்றஇ கை கால்களை இழந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளையும் இஸ்ரேல் கொன்று குவிக்கின்றது. இதுவரை வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இப்போது தரைவழித் தாக்குதல் தொடுத்து தனது அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றது.

கொத்துக் கொத்தாக குழந்தைகளின் பிணங்கள், அவர்களை மடியில் கிடத்திக் கொண்டு கதறும் தாய்மார்கள்இ தாய் தந்தையரின் பிணத்தின் அருகே என்ன நடக்கின்றது என்று அறியாமல் அனாதையாக நிற்கும் மழலைகள் என பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள் அன்றாடம் பாலஸ்தீனத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

மேற்கத்திய நாடுகளும் அயோக்கிய நாட்டு சபையும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இராக்கில் பேரழிவு ஆயுதங்களை சதாம் வைத்திருக்கிறார் என்று பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, இராக்கின் மீது போர் தொடுத்து, அதுவரை ஷியா, சன்னி, குர்து இன மக்கள் அனைவரையும் ஒரே ஆளுமையின் கீழ் வைத்திருந்த சதாமைத் தூக்கில் போட்டு, அந்த நாட்டையே இரத்தக் களறியாக்கிய அமெரிக்க வெறிநாய் இன்று பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களுக்காகக் களமிறங்கவில்லை. காரணம், தன்னை வளப்படுத்துகின்ற எண்ணை வளம் பாலஸ்தீனத்தில் இல்லை. அது இருந்திருந்தால் மனித குலத்தைப் பாதுகாக்கின்றேன் என்ற பெயரில் படையெடுத்து ஊடுருவல் நடத்தியிருக்கும்.

வளமும் வலிமையும் உள்ள இஸ்லாமிய நாடுகள் வழக்கம் போல் சில நிவாரணங்களை விமானங்கள் மூலம் அனுப்பிவிட்டு, இஸ்ரேலின் இந்தக் கோரத் தாக்குதலைக் கண்டிக்கத் திராணியற்று மரணத்திற்கு நிகரான மவுனத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு இப்போதைய தேவை நிவாரணம் அல்ல. நியாயம்.

'எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
அல்குர்ஆன் 4:75

இந்த வசனம் கூறும் அந்தப் பரிகாரத்தைத் தான் பாலஸ்தீன மக்கள் இறைவனிடம் கோருகின்றார்கள். இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுக்க நியாயமான காரணம் இருந்தும் போர் தொடுக்காமல் இவ்வுலக வாழ்க்கை வசதிகளை அனுபவித்துக் கொண்டு வாளாவிருக்கின்றனர்.

இவர்கள் மீது இறைவன் இதுபோன்ற நிலையை ஏவி விட எவ்வளவு நேரம் ஆகும் என்பதை மறந்து வாழ்கின்றனர். ஒருக்கால் இவர்களை இம்மையில் இறைவன் தண்டிக்காமல் விட்டாலும் மறுமையில் அவன் விடப்போவதில்லை.

எனவே ஹஜ் மாநாடு முஸ்லிம் சமுதாயத்திற்குத் தருகின்ற ஒற்றுமைப் பாடத்தை அரபு நாடுகள் உணர்ந்து நடக்க வேண்டும்.

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 8.8.14(வீடியோ)

பிரச்சார கலத்தில் சோர்வு கொள்ளவேண்டாம்



Saturday, August 09, 2014

மத்திய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்பாட்டம்

இன்று 9.8.14 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துன்டிக்க வழியுரித்தி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக்கொன்டு அந்த இடமே அதரும் வகையில் தங்களுடை கண்டன கோசங்களை எழுப்பினார்கள் இறுதியில் மாநில துனை பொதுச்சொளலார் முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார்கள்


















அதிரை கிளையின் ஆலோசனைக் கூட்டம்





அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம் 8.8.2014 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியின் கிளை தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) நாளை (9.8.14) பட்டுக்கோட்டையில் நடைபெற இருக்கும் ஆர்பாட்டத்தில் நமதூரில் இருந்து அதிகமான வாகனங்களில் மக்களை அழைத்து செல்வது

2) வருகின்ற 16.8.2014 சனிக்கிழமை சைய்யது இபுராகீமை வைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்து என தீர்மானிக்கப்பட்டது

3) இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சியை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடத்துவது

4) பள்ளிக்கு அருகில் இடம் வாங்குவது பற்றி நிர்வாகிகள் ஆலோசனை செய்வது

5) அதிரை கிளையின் சார்பாக இளைஞர்களை சந்தித்து மாணவரணி அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Thursday, August 07, 2014

வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்ட பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நடுத்தெரு ஆயிஷா மகளீர் அரங்கள் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெற்றது. இனி வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறும் அதில் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்

Tuesday, August 05, 2014

பட்டுக்கோட்டையில் இஸ்ரோலை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம்


மத்திய அரசே இஸ்ரேலின் இன அழிப்பைக் கண்டித்து இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்ட ஈகுவடார், பிரேசில், பெரு, சிலி, பொலிவியா ஆகிய நாடுகளுக்கு உள்ள மனிதாபிமானம் 22 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவுக்கு இல்லையா? மத்திய அரசே இஸ்ரேலுடன் உள்ள எல்லா உறவுகளையும் உடனே முறித்து விடு!

 என வழியுரித்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 9.8.2014 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் நடைபெற இருக்கிறது இதில் நமதூரில் இருந்து அதிகமான மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என் அதிரை கிளை கேட்டுக்கொள்கிறது

கண்டன உரை சகோதரர் யூசுப்  மாநில துனை பொதுச்செயலாளர்

Monday, August 04, 2014

50 லட்சத்தை உங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டியது தானே ஏன் தவ்ஹீத் ஜமாஅத் தர வேண்டும் ?

கேள்வி
சூனியக்காரனுடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சூனியக்காரன் சூனியம் செய்து உங்களைத் தற்கொலை செய்ய வைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் 50 லட்சம் ரூபாய் தரும் என்று கூறியுள்ளீர்கள். உங்கள் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டியது தானே என்று சிலர் கேட்கிறார்கள்.

முஹம்மது சரீப், கானத்தூர்

பதில்

சூனியக்காரனை அல்லாஹ்வாக்கி ஈமானை இழந்தவர்கள் இந்தக் கேள்வியின் மூலம் அதை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள். சூனியக்காரன் தனது சூனியத்தில் வென்று 50 லட்சம் வாங்கப் போகிறான் எனபதில் இவர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

நடக்கவே நடக்காது என்ற விஷயத்தில் விடப்படும் அறைகூவலை எப்படி புரிந்து கொள்வது என்ற அறிவு இவர்களுக்கு இல்லை.
அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கிறது என்று கூறுவோருக்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மூலம் அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கச் சொல்கிறான்.
அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 43:81
அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருந்தால் நான் முதலில் வணங்குவேன் என்று கூறினால் அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கக்கூடும் என்றும் அந்தப் பிள்ளையை நபிகள் நாயகம் வணங்குவார்கள் என்றும் மூடன் தான் புரிந்து கொள்வான்.
அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பதை அதிக அழுத்தத்துடன் சொல்வதற்காகவே இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று அறிவுடையோரும் அல்லாஹ்வை நம்பியவர்களும் புரிந்து கொள்வார்கள்.
சூனியக்காரன் வெல்லப்போவதும் இல்லை. நாம் 50 லட்சம் கொடுக்கப் போவதும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லவே இதைக் கூறுகிறோம். இதை ஒப்பந்த வீடியோவில் கூட தெளிவு படுத்திவிட்டோம்.
என் பணத்தையே கொடுப்பதாகச் சொன்னாலும் சூனியக்காரன் நம்பிக்கைப்படி நான் செத்துவிட்ட பின் என்னிடம் அவன் வாங்க முடியாது. அதற்காகத் தான் தவ்ஹீத் ஜமாஅத் தரும் என்று சொல்லப்பட்டது.
என் பணத்தையும் நான் கொடுக்கும் நிலை ஏற்படாது. ஜமாஅத்தின் பணத்தையும் கொடுக்கும் நிலை ஏற்படாது. சூனியக்காரன் ஒருக்காலும் வெல்ல மாட்டான் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
"உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.
திருக்குர்ஆன் 10:77
"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)
திருக்குர்ஆன் 20:69
அல்லாஹ்வின் கூற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள் சூனியக்காரன் வெல்ல மாட்டான் என்றுதான் நம்புவார்கள். அதை இன்னும் அழுத்தமாகச் சொல்வதற்குத் தான் ஐம்பது லட்சம் தருவதாகச் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
அல்லாஹ்வின் இந்தக் கூற்றில் நம்பிக்கை இல்லாமல் சூனியக்காரன் வெல்வான் என்று நம்பி காஃபிராகிப் போனவர்கள் தான் ஐம்பது லட்சம் யாருடைய பணம் என்று கேட்பார்கள். சூனியக்காரனை அல்லாஹ்வாக்கியே தீருவது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது இந்தக் கேள்வியில் இருந்து இன்னும் உறுதியாகிறது.

இறைவன் நாடினால் சூனியம் செய்வான் என்று கூறுவது கூற்றமா ?

கேள்வி
சூனியக்காரன் சுயமாக சூனியம் செய்வான் என்று நாங்கள் சொல்லவில்லை. அல்லாஹ் நாடினால் அவன் செய்வான் என்றுதான் சொல்கிறோம். இது குற்றமா? என்று கேட்கிறார்கள். அல்லாஹ் நாடினால் செய்வான் என்று சொல்வது எப்படி குற்றமாகும்? பி. அன்வர் பாட்சா, பெரியமேடு

பதில்

அல்லாஹ் எதைச் செய்வான்? எதைச் செய்ய மாட்டான் என்று அல்லாஹ்வால் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டு விட்டது.

அல்லாஹ் எதைச் செய்வான் என்று சொல்லப்பட்டுள்ளதோ அந்த விஷயத்தில் தான் அல்லாஹ் நாடினால் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். அல்லாஹ் எதைச் செய்யமாட்டான் என்று சொல்லப்பட்டுள்ளதோ அந்த விஷயங்களில் அல்லாஹ் நாடினால் என்று சேர்த்துச் சொன்னால் அதுவும் இறை மறுப்பாகும்.

அல்லாஹ் நாடினால் செத்து போவான் என்று சொல்லி விட்டு நான் செத்துப் போவான் என்றா சொன்னேன்? (நவூது பில்லாஹ்) அல்லாஹ் நாடினால் தான் என்று சேர்த்துச் சொன்னேன் என்று சொன்னால் அது சரியான நம்பிக்கை என்று கூறுவார்களா?

இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

அல்லாஹ் நாடினால் சாப்பிடுவான் அல்லாஹ் நாடினால் தூங்குவான் என்று சொன்னால் இவர்கள் ஒப்புக் கொள்வார்களா?

இதை அல்லாஹ் நாட மாட்டான் என்று தெளிவுபடுத்திய பின் அல்லாஹ் நாடினால் செய்வான் என்று ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா?

தன்னைப் போல் செயல்படும் தன்மையை அல்லாஹ் யாருக்கும் வழங்க மாட்டான் என்று நம்புவதுதான் ஈமான்.

எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.
"சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக! திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான். திருக்குர்ஆன் 25:2

அல்லாஹ் நாடினால் சிலைகள் மூலம் காரியம் நடக்கும் என்று கூட இந்த அறிவீனர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்? திருக்குர்ஆன் 16:71

அறிவற்ற மூடர்களே உங்களின் சின்ன அதிகாரத்தைக் கூட நீங்கள் இன்னொருவனுக்குக் கொடுக்காத போது மாபெரும் ஆற்றல் பெற்ற நான் என்னைப் போல் செயல்படும் அதிகாரத்தை எப்படி சூனியக்காரனுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுக்குச் சொல்வது போல் இந்த வசனம் அமைந்துள்ளது.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

Sunday, August 03, 2014

பித்ரா வினியோகம் மற்றும் வரவு செலவு கணக்கு

இந்த வருடம் 2014 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக     ரூ 1,42,650 தொகைக்கு பித்ரா வினியோகம் செய்யப்பட்டது அதன் வரவு செலவு கணக்கு கீழே உள்ளன





Friday, August 01, 2014

காவல்துறை நன்பர்களுக்கு தாவா செய்த அதிரை கிளையினர்

நோன்பு பெருநாளை முன்னிட்டு அதிரைக்கு பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரை சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்துவிட்டு மாமனிதர் நபி நாயகம் என்ற புத்தகத்தையும் அதிரை கிளை சார்பாக வழங்கப்பட்டது


பி.ஜே-விற்கு சூனியம் செய்ய முன்வந்த மணிகண்டம்..!

சூனியம் பலிக்காவிட்டால் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக வாக்குறுதி..!!