Saturday, July 19, 2014
Friday, July 18, 2014
முர்ஷித் அப்பாஸியை சூனிய விவாதத்திற்கு பிடித்து வருபவர்களுக்கு தக்க பரிசு!
Friday, July 18, 2014
No comments
Thursday, July 17, 2014
செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்!
Thursday, July 17, 2014
No comments
பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.
காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை.
இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.
குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.
பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர்.
நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.
நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது.
ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.
செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்:
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.
செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.
1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.
2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.
3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.
4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.
பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர்.
பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.
பக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.
இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.
தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்:
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூல்: புகாரி 6243
இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.
கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.
செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைபர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளி யாவான்.
தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 893
நன்றி www.tntj.net
Wednesday, July 16, 2014
குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-4) - தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை!
Wednesday, July 16, 2014
No comments
குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர் - 4) - தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன் வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!' என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.
திருக்குர்ஆன் 21: 25
'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
திருக்குர்ஆன் 39:65,66
நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்'என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 7:59
ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?' என்று அவர் கேட்டார்.
திருக்குர்ஆன் 7:65
ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து சான்று வந்துள்ளது ..... என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 7:73
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது .... என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 7:85
ஆது சமுதாயத்திடம், அவர்களது சகோதரர் ஹூதை (அனுப்பினோம்). 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் கற்பனை செய்வோராகவே இருக்கிறீர்கள்’ என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 11:50
ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்). 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் அருகில் உள்ளவன்; பதிலளிப்பவன்' என்றார்.
திருக்குர்ஆன் 11:61
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்' என்றார்.
திருக்குர்ஆன் 11:84
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?' என்று கேட்டார்.
திருக்குர்ஆன் 23:23
'அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?' என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!
திருக்குர்ஆன் 43:45
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? 'எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது 'உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல்,இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்' என்றே (பிள்ளைகள்) கூறினர்.
திருக்குர்ஆன் 2:133
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
திருக்குர்ஆன் 9:31
பெண்கள் காது, மூக்கு குத்துதல் பற்றிய தெளிவு
Wednesday, July 16, 2014
No comments
மனிதப் படைப்பில் மிக
முக்கியமானவர்களாக ஆண்,பெண் என்ற இரண்டு சாராரை இறைவன் படைத்திருக்கிறான்.
படைக்கும் ஆற்றலை தனக்கு மாத்திரமே சொந்தமாக்கியிருக்கும் இறைவன் தனது
படைப்பை மிகவும் அழகாகவும், நேரத்தியாகவும் உருவாக்கியிருக்கிறான்.
ஆனால் ஆணுக்குத் துணையாக படைக்கப்பட்ட பெண்கள் இன்று தங்கள் காதுகளை துளையிட்டு அதிலே ஆபரணங்களை அணிகிறார்கள். இது மார்க்க அடிப்படையில் ஆகுமாக்கப்பட்டதா? இது இன்று நமக்கு மத்தியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இந்தப் பிரச்சினையைப் பொருத்தவரை அறிஞர்கள் இரண்டு விதமான கருத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் காது, மூக்கை துளையிட்டு அதிலே ஆபரணங்கள் அணிவது தடையில்லை என்பது முதல் சாராரின் வாதமாகும்.
இரண்டாவது சாராரின் வாதம் பெண்கள் காதுகளிலோ, மூக்கிலோ துளையிட்டு எந்த ஆபரணங்களையும் அணியக்கூடாது.
இந்த இரண்டு சாராரின் கருத்துக்களில் எது சரியானது என்பதை நாம் ஆய்வு செய்து பார்த்தால் இரண்டாவது கருத்தான பெண்கள் தங்கள் உடம்பிpல் துளையிட்டு எந்த ஆபரணங்களையும் அணியக் கூடாது என்ற கருத்துத்தான் சரியானதாக அமைகிறது.
அதற்கான ஆதாரங்களையும், எதிர் வாதங்களையும் பார்ப்போம்.
இறைவனிடம், ஷைத்தானின் உரையாடல்.
إِنْ يَدْعُونَ مِنْ دُونِهِ إِلَّا إِنَاثًا وَإِنْ يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا (117) لَعَنَهُ اللَّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا (118) وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا النساء : 117 – 119
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்துவிட்டான். உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன், அவர்களை வழி கெடுப்பேன், அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்.அவர்களுக்குக் கட்டளையிடுவேன், அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுப்பார்கள்.(மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன். அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள். என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொருப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான இழப்பை அடைந்து விட்டான்.(4: 118,119)
மேற்கண்ட வசனத்தில் ஷைத்தான் மக்களை வழிகெடுக்கும் விதத்தைப் பற்றி சொல்லும் போது ஒரு முக்கியமான முறையைச் சொல்லிக் காட்டுகிறான்.
அதில் ஒரு முறையாக அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள். என்று இறைவனிடம் ஷைத்தான் சொல்லிக் காட்டுகிறான்.
இறைவன் நம்மை படைத்த கோலத்தையே மாற்றுவதற்கு ஷைத்தான் நம்மைத் தூண்டுவான் என்பது மேற்கண்ட வசனத்தில் நமக்குத் தெரிய வருகிறது.
படைப்பதில் வல்லவன் இறைவனே !
அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (23:14)
படைப்பதிலேயே அழகாகப் படைப்பவன் அல்லாஹ்தான் என்று இறைவன் தன்னைப்பற்றி சொல்லிக் காட்டுகிறான்.
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا الفرقان

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது.அவன் பிள்ளைகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. ஒவ்வொரு பொருளையும் படைத்தான் அதைத் திட்டமிட்டு அமைத்தான்.(25:2)
وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ المؤمنون : 17
உங்களுக்கு மேலே ஏழு வழிகளைப் படைத்துள்ளோம்.இப்படைப்பைப் பற்றி நாம் கவனமற்று இருக்கவில்லை. (23:17)
ஒவ்வொரு பொருளையும், கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.(54:49)
வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடன் அவன் படைத்தான், உங்களை வடிவமைத்து உங்கள் வடிவங்களை அவன் அழகுபடுத்தினான். அவனிடமே மீளுதல் உண்டு.(64:3)
படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுற்பமானவன், நன்கறிந்தவன்.(67:14)
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம். (95:4)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் இறைவன் தான் அழகிய படைப்பாளம் என்பதை மிகத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன. இவைன் தனது படைப்பில் ஆண் ஒருவன் எப்படி இருக்க வேண்டும், பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுப் படைத்திருக்கும் போது,பெண்கள் தங்கள் காதுகளை துளையிட்டுக் கொள்வது அவனுடைய படைப்பை குறை காண்பதாகும்.
இறைவனுக்கு சரியாகப் படைக்கத் தெரியவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்வதைப் போன்றதாகும்.
ஏன் என்றால் உலகில் உள்ள எந்த மனிதனும் தான் பிறக்கும் போது காதில் துளையுடன் பிறப்பதில்லை. அப்படிப் பிறக்காத போது நாமாக துளையை உண்டாக்குவது அதிகப் பிரசங்கித் தனமாகும்.
ஒருவருக்கு உடலியல் ரீதியாக ஒரு குறையிருந்து அதை அவர் சரி செய்தால் அது இறைவனின் படைப்பைக் குறை சொல்வதாக ஆகாது. உதாரணத்திற்கு எல்லா மனிதர்களுடைய பற்களும் சரியாக இருக்கும் போது ஒருவருடைய பற்கள் மாத்திரம் கொஞ்சம் நீட்டிக் கொண்டு நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது அவர் அந்த பற்களை மறுத்துவ ரீதியாக சரி செய்தால் அது இறைவனின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்தியதாக கருத முடியாது.
ஏன் என்றால் மனிதர்களின் பற்கள் எப்படி இருக்கிறது என்று இறைவன் பல கோடி மக்களின் பற்களின் மூலம் நமக்குக் காட்டியிருக்கிறான். இப்படியிருக்கும் போது ஒருவரின் பல் மாத்திரம் நீட்டிக்கொண்டிருந்தால் அது அவருடைய உடலியல் பிரச்சினை அதை சரி செய்வதை யாரும் குறை காண முடியாது.
ஆனால் உலகில் பிறக்கும் பெண்கள் தங்கள் காதுகளிலோ, மூக்கிலோ எந்தவிதமான துளையுமில்லாமல் பிறக்கும் போது நாம் அதில் துளையிடுவோமாயின் இறைவனுக்குத் தெரியாத ஒரு அழகிய படை கோலம் நமக்குத் தெரியும் என்ற மமதை அந்த இடத்தில் உருவாகிறது.
பெண்களுக்கு காதுகளில் அல்லது மூக்கில் துளை போடுவது அழகு என்றிருந்தால் படைக்கும் போதே ஒரு துளையை வைத்துப் படைப்பதற்கு இறைவனுக்கு முடியாதா?
நபியின் சாபத்திற்கு உள்ளானவர்கள்:
நபியவர்கள் சிலரைப் பார்த்து சபிக்கும் போது இறைவனி படைப்பை மாற்றுபவர்களையும் சோத்து சபிக்கிறார்கள்.
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ مَا لِي لَا أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي كِتَابِ اللَّهِ (خ) 5943
அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத் தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே என்று சொன்னார்கள். (புகாரி : 5943,5948)
அல்லாஹ் படைத்த படைப்பை விட அழகு என்று நினைத்துக் கொண்டு யாராவது மேலதிகமான உடம்பில் மாற்றம் ஏற்படுத்தினால் அது சாபத்திற்கு உரிய செயல் என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேற்கண்ட செய்தியில் இருந்தும் எந்தக் காரணம் கொண்டும் பெண்கள் காது, மூக்குகளில் துளையிடக் கூடாது என்பது தெளிவாகிறது.
எதிர் கேள்விகளும், நமது பதில்களும்.
முதலாவது வாதம் :
கத்னா (ஸ{ன்னத்) செய்வது உருவத்தை மாற்றுவதாக அமையாதா?
நமது பதில் : இந்தக் கேள்விக்கு இரண்டு விதமான பதில்கள் இருக்கிறது.ஒன்ற கத்னா செய்வதைப் பொருத்தவரையில் இறைவன் கத்னா செய்வதற்கு அவனுடைய நபியின் மூலம் நமக்குக் கட்டளை பிறப்பித்துள்ளான். நபியவர்களே கட்டளையிட்டதை நாம் செய்வது எப்படி உருவ மாற்றமாக அமையும்? அது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இஸ்லாம் நமக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது.
இரண்டாவது கத்னா செய்பவர்கள் யாரும் அழகுக்காக கத்னா செய்வதில்லை. கருவரைக்குள் நாம் இருக்கும் காலம் வரை மர்ம உருப்பு மூடியிருப்பதுதான் குழந்தையின் உடலுக்கு நல்லது.
வெளியில் வந்தவுடன் அதை அகற்றுவதுதான் உடலுக்கு உகந்தது என்பது விஞ்ஞானமே இன்று ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் தான் அதனால் தான் அதனை நபியவர்களே அகற்றும் படி கட்டளையிட்டுள்ளார்கள் இது இறைவனின் படைப்பில் குறை காண்பதாக ஆகாது.
இரண்டாவது வாதம் :
நபியின் காலத்தில் பெண்களே தங்கள் காதணிகளைக் கலட்டிப் போட்டுள்ளார்கள் என்று ஹதீஸ் கூறுகிறது.பெண்கள் காது குத்துவது ஹராம் என்றால் நபியின் காலத்தில் பெண்கள் அணிந்திருக்கிறார்கள் என்ற செய்திக்கு என்ன பதில்?
நமது பதில் :
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَيُّوبَ قَالَ سَمِعْتُ عَطَاءً قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ قَالَ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ عَطَاءٌ أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَمَعَهُ بِلَالٌ فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَجَعَلَتْ الْمَرْأَةُ تُلْقِي الْقُرْطَ وَالْخَاتَمَ وَبِلَالٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ قَالَ أَبُو عَبْد اللَّهِ وَقَالَ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ وَقَالَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (خ : 98)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளை யும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக் கிறேன்.(புகாரி : 98)
மேற்கண்ட ஹதீஸில் பெண்கள் பெருநாள் தினத்தில் கொடுத்த ஸதகாவைப் பற்றிப் பேசுகிறது. அதாவது ஸத்தகா கொடுக்கும் போது அந்தப் பெண்கள் தங்கள் காதுகளில் அணிந்திருந்த காதணிகளையும் எடுத்துப் போடுகிறார்கள்.
இந்தச் செய்தியில் பெண்கள் காதணிகளைப் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற தகவல் உள்ளடங்கியிருக்கிறது. காதுகளில் துளையிட்டிருந்தால் தானே காதணி அணிந்திருக்க முடியும் இல்லாவிட்டால் எப்படி அணிவது என்ற கேள்வியை இதிலிருந்து முன்வைக்கிறார்கள்.
முதலில் காதுகளில் துளையிட்டால்தான் காதணி அணிய முடியும் என்பதில்லை காதுகளில் துளையிடாமலும் காதணி அணிய முடியும். காதுகளில் துளையிட்டுத்தான் நபியின் காலத்தில் பெண்கள் காதணிகளை அணிந்திருந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை வைத்து நாமும் காதுகளில் துளையிடலாம் என்ற வாதத்தை யாரும் முன் வைக்க முடியாது.
நபியவர்களின் முன்னிலையில் யாராவது ஒரு பெண்மணி தனது குழந்தையை அழைத்து வந்து நபியின் கண் முன்னால் காது குத்தி அதனை நபியவர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் காது குத்துவதை நபியவர்கள் அங்கீகரித்தார்கள் என்ற முடிவுக்கு வரலாம்.
ஆனால் மேற்கண்ட ஹதீஸில் மேலதிகமாக நமக்குத் தெரிய வரும் தகவல் என்னவெனில் காது குத்தக் கூடாது என்ற தகவல் தெரியாதவர்கள் இதற்க்கு முன் காது குத்தியிருந்தால் அதைத் தொடர முடியும், கலற்றிப் போடத்தேவையில்லை. என்பது மட்டும் தான் இதில் உள்ள மேலதிக தகவலாகும்.ஆக மொத்தத்தில் இறைவனின் படைப்பை மாற்ற முயலும் இந்தக் காரியத்தை யாரும் செய்யக் கூடாது.
இதற்கு முன் யாராவது காது குத்தியிருந்தால் அவர்கள் அதனை தொடரலாம் என்பதே தெளிவான முடிவாகும்
நன்றி: rasminmisc.com
பெண்கள், பெண்களுக்கு இமாமத் செய்வதற்கு தடையா? (வீடியோ)
Wednesday, July 16, 2014
No comments
தொழுகை என்பது முஃமின்கள் மீது நேரம் குறிக்கப் பட்ட கடமையாகும்.அந்த கடமையை ஜமாத்தாக
நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது.
தொழுகையில் ஆண்கள் இமாமத் செய்கிறார்கள்,பெண்களும் ஆண்களின் பின்னால் இருந்து தொழுகிறார்கள்.அப்படி தொழும் தொழுகை விஷயத்தில் பெண்கள் தொடர்பான இரண்டு முக்கிய சர்சைகள் நமது சமுதாயத்தில் இருக்கிறது அதில் ஒன்று பெண்கள்,ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியுமா? என்பதாகும் மற்றையது பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ய முடியுமா? என்பதாகும் இந்த இரண்டு கேள்விகளுக்குமான தெளிவான பதிலை நாம் இப்போது பார்ப்போம்.
ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்ய முடியுமா?
ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா என்று நாம் ஆய்வு செய்யும் நேரத்தில் ஆண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ததவற்கான எந்த ஆதாரத்தையும் நாம் காணமுடியவில்லை. ஆரம்பத்தில் சகோதரர; பி.ஜெ மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களும் உம்மு வரகா (ரலி)அவா்களின் செய்தியை வைத்தே ஆண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ய முடியும் என்று கூறி வந்தோம்.
ஆனால் அந்த ஹதீஸ் பலவீனமானது என்று தெரிந்தவுடன் அதனை நாம் மாற்றிக் கொண்டோம். அந்த ஹதீஸ் பலவீனமானது என்பதிலிருந்து பெண்கள், ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது,பெண்கள் ஆண்களின் பின்னால் நின்று தொழ வேண்டும என்ற சட்டம் தான் சரியானது என்பதை நாம் விளங்க முடியும்.
பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்ய முடியுமா?
இஸ்லாமிய அறிஞர்களில் ஒரு பகுதியினரும்,இன்று நமக்கு மத்தியில் மார்க்கப் பிரச்சாரம் செய்யும் சிலரும் பெண்கள்,ஆண்களுக்கு இமாமத் செய்யவும் முடியாது.இதே நேரம் பெண்கள்,பெண்களுக்கும் இமாமத் செய்யக் கூடாது தனித் தனியாகத்தான் தொழ வேண்டும் என்று பத்வா கொடுக்கிறார்கள் அவா்கள் சொல்வது மார்க்க அடிப்படையில் தவறான கருத்தாகும்.
ஏன் என்றால் தொழுகை தொடர்பாக நபியவர்கள் சொன்ன அனைத்தும் ஆண்கள்,பெண்கள் என்ற இரு பாலாருக்கும் உரியதே!
அதில் பெண்கள் எதை செய்யக்கூடாது என்பதை நபியவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார;கள் பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்யக் கூடாது என்ற சட்டம் இஸ்லாத்தில் இருந்திருந்தால் நபியவர்கள் கண்டிப்பாக அதனை தெரிவித்திருப்பார்கள்.
பெண்கள் இமாமத் செய்வது தொடர்பான தடையேதும் ஹதீஸ்களில் வந்தில்லையென்பதால் இமாமத் தொடா்பான பொதுவான சட்டம் ஆண் பெண் ஆகிய இரு சாராருக்கும் உரியது என்பதை நாம் அறிய முடிகிறது. சிலா் இமாமத் தொடர்பாக வரும் பொதுவான ஹதீஸ்களை வைத்து பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்று முடிவெடுக்கக் கூடாது என்று கூறிவருகிறார்கள்.
அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தொழுவிப்பார். மக்கள் அனைவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களில் நபி வழியை நன்கு அறிந்தவர் (தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் (தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களின் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அனுமதியின்றி அமர வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்ஸாரீ (ரலி),நூல்கள் : முஸ்லிம் (1192), திர்மிதீ (218 )
நன்கு ஓதத் தெரிந்தவா் இமாமத் செய்யட்டும் என்ற பொதுவான ஹதீஸை ஆதாரமாக வைத்து பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்று முடிவெடுத்தால் பள்ளியிலும் பெண்கள்,ஆண்களுக்கும் இமாமத் செய்ய முடியும் என்ற சட்டம் வந்து விடும் அதனால் அந்த ஹதீஸை வைத்து நாம் பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்ய முடியும் என்று முடிவெடுக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள்.
அவா்கள் எடுத்து வைக்கும் இந்த வாதம் தவறானதாகும்.
அதாவது பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்யலாம் என்று மேற்கண்ட ஹதீஸை வைத்துச் சட்டம் சொன்னால் ஆண்களுக்கும்,பெண்கள் இமாமத் செய்யலாம் என்று விளங்க எந்த நியாயமும் இல்லை.
ஏன் எனில் ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யக் கூடாது என்பது தெளிவானதாகும்.
தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
ஆக பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்வதைத் தடுப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஒரு தடையும் இல்லாததினாலும்,இமாமத்தை பற்றிய பொதுவான செய்திகள் ஆண்,பெண் என்ற இரு சாராருக்கும் உரியதாக இருப்பதினாலும் பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்ய முடியும் என்பதே சரியானதாகும்.

Monday, July 14, 2014
இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 36) - பங்குச் சந்தை (Share Market) கூடுமா?
Monday, July 14, 2014
No comments
இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.
50 லட்சம் பரிசுடன் சூனியக்காரர்களுக்கு சவால் விட்டு அதிரை முழுவதும் போஸ்டர்!
Monday, July 14, 2014
1 comment
50 லட்சம் பரிசுடன் சூனியக்காரர்களுக்கு சவால் விட்டு அதிரை முழுவதும் போஸ்டர்!
உலகம் முழுவதும் உள்ள சூனியக்கார கூட்டம் அனைத்திற்கும், பிஜே அவர்களுக்கு சூனியம் செய்து 50 லட்சம் ரூபாயை தட்டிச்சொல்ல வாய்ப்பு அளித்து அதிரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர். இலங்கையில் இருந்து கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முரிஷித் அப்பாஸி அவர்கள் அதிரைக்கு வந்து இருக்கும் இந்த தருணத்தில் 50 லட்சம் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
முஜாஹித் என்ற பொருக்கியுடன் சேர்ந்து கொண்டு, பிஜேவுடன் தான் விவாதிப்போம் அல்லது எஸ்எல்டீஜேவுடன் தான் விவாதிப்போம் என்ற அப்பாஸி அவர்கள், எஸ்எல்டீஜேவுடன் விவாதிக்க பயந்து ஓட்டம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sunday, July 13, 2014
Saturday, July 12, 2014
இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 35) - நபிகள் காலத்தில் இருந்த மோசடிகள்
Saturday, July 12, 2014
No comments
கொலைக்கார இஸ்ரோலைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டம்
Saturday, July 12, 2014
No comments
பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் யூத சியோனிச பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நோன்பையும் பொருட்படுத்தாமல் திரளான மக்கள் பங்கு பெற்று கேடுகெட்ட இஸ்ரேலின் பயங்ரவாதத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இறுதியில் மாநில செயலாளர் யூசுப் கண்ட உரை நிகழ்த்தினார்
Friday, July 11, 2014
குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-3) - ஒரே இறைவன் தான் இருக்க முடியும்
Friday, July 11, 2014
No comments
குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-3) - ஒரே இறைவன் தான் இருக்க முடியும்
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன் வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
'என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா?' (என்று யூசுஃப் நபி கூறினார்).
திருக்குர்ஆன் 12:39
'அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:42
அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.
திருக்குர்ஆன் 21:22
அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
திருக்குர்ஆன் 23:91
'கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுற மாட்டீர்களா?' என்று கேட்பீராக!'கியாமத் நாள் வரை பகலை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்குக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 28:71,72
உங்களிலிருந்தே அவன் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் பங்காளிகளாக உங்களது அடிமைகளில் எவரும் உள்ளனரா? அதில் நீங்களும் (அவர்களும்) சமமாக இருப்பீர்களா? உங்களுக்கிடையே நீங்கள் அஞ்சுவது போல் அவர்களுக்கு அஞ்சுவீர்களா? விளங்கும் சமுதாயத்துக்கு இவ்வாறே வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம்.
திருக்குர்ஆன் 30:28
ஒரு (அடிமை) மனிதனை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவனுக்கு உரிமையாளர்களாக மாறுபட்ட கருத்துடைய பல பங்காளிகள் உள்ளனர். இன்னொரு மனிதனையும் (இறைவன்) உதாரணமாகக் கூறுகிறான். அவன் ஒரு மனிதனுக்கு மட்டுமே உடையவன். இவ்விருவரும் உதாரணத்தால் சமமானவர்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 29:29
Thursday, July 10, 2014
தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிகளுக்கு வாரி வழங்கிடுவீர்
Thursday, July 10, 2014
No comments
Wednesday, July 09, 2014
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - வீடியோ (பாகம் 1 முதல் 9 வரை மற்றும் கேள்வி பதில்)
Wednesday, July 09, 2014
No comments
Tuesday, July 08, 2014
Saturday, July 05, 2014
ஃபித்ரா ஊருக்கா அல்லது தெருவுக்கா?
Saturday, July 05, 2014
No comments
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர், மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தருமமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
நூல்: புகாரி 1503
அதிரையில் இருக்கும் மக்களில் ஃபித்ரா தர்மம் வாங்க கூடிய சூழலில் உரியவர்கள் என்று கணக்கிட்டால், 20 சதவிகிதத்திற் கும் குறைவாகவே உள்ளனர். ஊரில் வாழும் ஏனைய 80 சதவிகித மக்களும், அவர்களுக்கே கொடுக்கும் நிலை உள்ளதால், வெளிநாட்டில் வாழும் அதிரை சகோதரர்கள் தங்களுக்கும், தங்கள் வருமானத்தில் சார்ந்து இருப்பவர்களுக்கும் உள்ள கடமையான ஃபித்ரா தொகையை கீழ்க்கண்ட சகோதரர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- அல் அய்ன் & அபுதாபி ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. ஜஃபருல்லாஹ் @ +971507510584
- துபாயில் ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. நஸீர் @ +971501545251 & சகோ. ஷாகுல் +971505063755
- அமீரக வடக்கு மண்டலம் (ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குஅய்ன் & ஃபுஜைரா) ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. பிஸ்மில்லாஹ் கான் @ +971503576076
- மற்ற நாடுகளில் உள்ளவர்கள், அருகிலிருக்கும் TNTJ கிழையின்மூலம் அனுப்பவும்.
ஏன் எங்களிடம் கொடுக்கவேண்டும்?
· வசூலிக்கப்படும் தொகை, நம்மூருக்கு தேவைப்படும் அளவிற்கு அனுப்பப்படுகிறது
· நம்மூரில் உள்ள உரியவர்களுக்கு கொடுத்த பின், மீதம் இருக்கும் ஃபித்ரா தொகை, பிற ஊர்களில் இருக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
· விநியோகிக்கப்பட்ட ஃபித்ரா தொகையின் விபரம் கொடுக்கப்படும்.
எங்களின் இந்த ஃபித்ரா (நோன்பு பெருநாள் தருமம்) நிதி திரட்டும் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
- அமீரக அதிரை தவ்ஹித் ஜமாத்
Thursday, July 03, 2014
ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்
Thursday, July 03, 2014
No comments
ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமா கும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர் மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்ட ரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.
ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமை யாக்கப்பட்டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாக வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கி னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்க ளின் சார்பில் வழங்கும்போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்
ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.
ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்க ளில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.
(புகாரி 1395, 1496, 4347)
அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?
முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக் கூடிய வகையில் இது அமைந்துள்ளது.
இரண்டாவது கருத்தில்தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்ப தைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தின ரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். இது உங்களுக்கு உரி யது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது” என்று அவர் கூறினார்... (புகாரி 6979)
பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதி யைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸி லிருந்து அறியலாம்.
எனவே ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.
மேலும் ஏழைகளுக்கு உணவாக பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக் கும் பகுதிக்கு அனுப்பினால்தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.
சென்ற வருடங்களில் நமது அதிரைக்கு ஃபித்ரா வசூல் செய்த நமது ஊர் சகோதரர்கள் தெருவுக்கு தெரு அதாவது மேலத் தெருவில் வசூல் செய்து மேலத் தெருவில் விநியோகம் செய்வது போன்று ஒவ்வொரு தெருவுக்கும் தனித்தனியாக வசூல் செய்தார்கள்
இது போன்று நமது ஊரின் ஒவ்வொரு தெருவின் சகோதரர்களும் ஃபித்ரா கொடுக்கும் சக்தி பெற்ற நிலையில் இல்லை என்பதே கண்கூடு
வசதி படைத்தவர் வசதி இல்லாதவர்களுக்கு ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்ற நிலைபாட்டின் படி ஏழைக்கு கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் நோக்கமாக கொண்டு ஜாஹிலியா காலத்தை போன்று தெரு பாகுபாடு ,ஊர் பாகுபாடு பாராமல் ஏழை என்ற ஒரே பார்வையில் சகோதரர்கள் தங்கள் ஃபித்ரா தொகையை வழங்குங்கள்

வளைகுடாவில் வாழும் அதிரை சகோதரர்கள் தங்களுக்கும், தங்கள் வருமானத்தில் சார்ந்து இருப்பவர்களுக்கும் உள்ள கடமையான ஃபித்ரா தொகையை கீழ்க்கண்ட சகோதரர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- அல் அய்ன் & அபுதாபி ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. ஜஃபருல்லாஹ் @ +971507510584
- துபாயில் ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. நஸீர் @ +971501545251 மற்றும் ஷாகுல் 00971505063755
- அமீரக வடக்கு மண்டலம் (ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குஅய்ன் & ஃபுஜைரா) ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. பிஸ்மில்லாஹ் கான் @ +971503576076
- மற்ற நாடுகளில் உள்ளவர்கள், அருகிலிருக்கும் TNTJ கிளையின்மூலம் அனுப்பவும்.
ஏன் எங்களுக்கு கொடுக்கவேண்டும்?
· வசூலிக்கப்படும் தொகை, நம்மூருக்கு தேவைப்படும் அளவிற்கு அனுப்பப்படுகிறது
· நம்மூரில் உள்ள உரியவர்களுக்கு கொடுத்த பின், மீதம் இருக்கும் ஃபித்ரா தொகை, பிற ஊர்களில் இருக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
· விநியோகிக்கப்பட்ட ஃபித்ரா தொகையின் விபரம் கொடுக்கப்படும்.
எங்களின் இந்த ஃபித்ரா (நோன்பு பெருநாள் தருமம்) நிதி திரட்டும் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
Wednesday, July 02, 2014
Tuesday, July 01, 2014
பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்
Tuesday, July 01, 2014
No comments
பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்