Thursday, July 25, 2013

ரமளானில் வாரி வழங்கிடுவீர்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சேவை நிறுவனங்களுக்கு ரமளானில் வாரி வழங்கிடுவீர்கள்!

தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
அவனியாபுரம் , மதுரை.



ஒரு வருட ஆ­லிமா பட்டப்படிப்பு வகுப்பில்  நபி வழிச் சட்டங்கள், அரபி இலக்கணம், நபி (ஸல்) அவர்கள் வரலாறு, திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், இஸ்லாமியக் கொள்கை விளக்கம், அரபி மொழியியல், வாரிசுரிமைச் சட்டங்கள், சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, கணணி பயிற்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.


அல் ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்
திருமங்கலம் ,  மதுரை.

இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் ஆண்களுக்காக மதுரையில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.



பாடத்திட்டங்கள்:
  1. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
  2. திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
  3. துஆ மனனம்
  4. தொழுமை முறை
  5. நபிகளார் வரலாறு
  6. இஸ்லாமிய ஒழுங்குகள்
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக  இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
 தொலைபேசி : 9790892220 – 9842199976


இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்.

செலவு விபரங்கள்:



அர்ரஹீம் முதியோர் இல்லம்
பண்டாரவடை, தஞ்சை.




பிள்ளைகள் மற்றும உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டத்தில் முதியோர் இல்லம் நடத்தி வருகின்றது.

முதியோர் இல்ல புகைப்படங்கள்

இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
  1. பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்
  2. அவருடைய தேவையை (மலம் ஜலம் கழித்தல், குளித்தல் மட்டும்) அவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முதியோர் இல்லத்திற்கு வந்த பிறகு அவர்களுக்கு எந்நிலை ஏற்பட்டாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதை கவனித்துக் கொள்ளும்.

இல்லத்தில் சேருவோருக்கு
உணவு,
தங்குமிடம்,
மருத்துவம்,
ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
சேருவதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

 தொலைபேசி :04374 250837

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

செலவு விபரங்கள்:

Sevai Niruvanagal
தஞ்சையில் தற்போது இயங்கி வரும் முதியோர் இல்லம்:

அல் ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்
அவனியாபுரம் , மதுரை.

இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமான பெண்கள் வருகை தருகிறார்கள். அவர்களுக்காக மதுரையில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி பெண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.


பாடத்திட்டங்கள்:
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
துஆ மனனம்
தொழுமை முறை
நபிகளார் வரலாறு
இஸ்லாமிய ஒழுங்குகள்
பெண்கள் என்பதால் மிகுந்த பாதுகாப்போடும் சரியான கண்காணிப்புடனும் இந்நிறுவனம் நடத்தப்படுகின்றது.
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
தொலைபேசி : 0452 2676222,9976649599
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் 

செலவு விபரங்கள்
Sevai Niruvanagal - Copy (3)


அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்
சுவாமிமலை, கும்பகோணம்.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் ஆண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது.

இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:

பெற்றோர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லது பெற்றோர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்க வேண்டும்
குறைந்த பட்சம் 8 வயது இருக்க வேண்டும்.

இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு:
  1. இவர்கள் அரசு பள்ளியில் சேர்த்து கல்வி பயில வைக்கப்படுவார்.
  2. இவர்களுக்கு மாலையில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் டியூஷன் எடுக்கப்படும்
  3. காலையில் TNTJ தாயிகள் மூலம் இஸ்லாமிய வகுப்புகள் நடத்தப்படும்
  4. நல்லொழுக்க பயிற்றிகள் அளிக்கப்படும்
மேலும் இவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம், ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
தொலைபேசி :04352454486,9150505009

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

செலவு விபரங்கள்

Sevai Niruvanagal - Copy (4)



அர்ரஹ்மான் சிறுமியர் ஆதரவு இல்லம்
அவனியாபுரம் , மதுரை.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் பெண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரையில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது.

தொலைபேசி : தொலைபேசி : 0452 2676222,9976649599

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்



செலவு விபரங்கள்
Sevai Niruvanagal - Copy

Tuesday, July 23, 2013

பிற மேடைகளில் பங்கேற்காதது ஏன்? (வீடியோ)

பிற மேடைகளில் பங்கேற்காதது ஏன்?

தவ்ஹீத் ஜமாத்தின் மனிதநேய பணி

நாகப்பட்டினத்தில் இருந்து மீன் லோடு ஏற்றி வந்த மினி லாரி பிலால் நகர் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து செல்லும் போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் இரு சக்கர வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியதுடன் அதில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து முதலுதவி செய்தனர். மேலும் விரைவாக ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 இரவு 1 மணிக்கு  சம்பவம் நடந்த இடத்திற்கு லாரியின் உரிமையாளர் வந்தார் கவிழ்நத லாரியில் சுமார் ரூ 4 லட்சம் மதிப்புள்ளான மீன்கள் இருப்பதாகவும் அதனை உடனே வேறு வாகனத்தில் மாற்றாவிட்டால் அனைத்து மீன்களும் கேட்டுப்போகிவிடும் என்று கூறினார் இதை கேட்டவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கழத்தில் இறங்கி அவர்களுடன் சேர்ந்து அவர்கள் கொண்டு வந்த மாற்று வாகத்தில் ஏற்றுவதற்கு அனைத்து உதவிகளும் செய்தனர். கடைசியாக உரிமையாளர் செல்லும் போது காசு கொடுத்தாலும் இந்த நேரத்தில் யாரும் வராத போது தானாக முன் வந்து நீங்கள் செய்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று தவ்ஹீத் ஜமாத்தினரிடம் நன்றியை சொல்லிவிட்டு சென்றார்கள்.








Sunday, July 21, 2013

அதிரை மேலதெரு சவுக்கு கொள்ளையில் நடைபெற்ற பெண்கள் பயான்

மேலதெரு சவுக்கு கொள்ளையில் நடைபெற்ற பெண்கள் பயான்
மேலத்தெருவில் நோன்பு முதல் தொடர் பெண்கள் பயான் ஆலிமாவை வைத்து நடந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று 21.07.13 காலை மணி 11 முதல் லுகர் வரை பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பயான் செய்தார்கள் .இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் 












Saturday, July 20, 2013

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற இப்தார் மற்றும் இரவு தொழுகை

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற இப்தார்  இரவு தொழுகை மற்றும் தொடர் பயான்களின் கலந்துக்கொண்டவர்களின் புகைப்படங்கள்

இரவுத்தொழுகை




இரவு  தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான்


இப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள்








அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 12/07/13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை






என்னைக் கவர்ந்த இஸ்லாம் - பாதிரிகளின் பிரச்சாரத்தால் இஸ்லாத்தை தழுவிய சகோதரர்!

என்னைக் கவர்ந்த இஸ்லாம் - பாதிரிகளின் பிரச்சாரத்தால் இஸ்லாத்தை தழுவிய சகோதரர்!





இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 4) - பொருள் வசதி நல்லோர் என்பதற்கு அடையாளமா?

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 4) - பொருள் வசதி நல்லோர் என்பதற்கு அடையாளமா?


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Friday, July 19, 2013

Thursday, July 18, 2013

என்னைக் கவர்ந்த இஸ்லாம் - இஸ்லாத்தை தழுவிய பூசாரி!

என்னைக் கவர்ந்த இஸ்லாம் - இஸ்லாத்தை தழுவிய பூசாரி!


Tuesday, July 16, 2013

இஸ்லாத்தை தழுவியவருக்கு கொலை மிரட்டல் விடும் இலங்கை தப்லீக் ஜமாஅத் சாதுக்கள்!

இஸ்லாத்தை தழுவியவருக்கு கொலை மிரட்டல் விடும் இலங்கை தப்லீக் ஜமாஅத் சாதுக்கள்!

இலங்கையில் இந்து மத பூசாரியாக இருந்து இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஏகத்துவ கொள்கையில் உறுதியாக இருப்பதோடு, தப்லீக் தஃலீம் தொகுப்பு என்ற கப்சா புத்தகத்தில் உள்ள கப்சாகளை அம்பலப்படுத்துவதால், சாது வேடத்தில் இருக்கும் தப்லீக் ஜமாஅத்தினர் விடும் கொலை மிரட்டல்.



Monday, July 15, 2013

Sunday, July 14, 2013

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா? தமுமுக போராட்டத்துக்குத் தடை போட தவ்ஹீத் ஜமாஅத்துதான் காரணம் என்றும், வெகுண்டு எழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கதிகலங்கிப் போயுள்ளது என்றும் முகநூல்களில் பரப்புகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதா அவர்களை வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. சட்டமன்றத்தில் பேசும்போதெல்லாம், இவர்கள் அடித்த ஜால்ராவைப்போல் ஜால்ரா அடிக்கவில்லை. மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து கூறிக் கொண்டிருக்கவில்லை. அப்படியிருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதைக்கேட்டு முதல்வர் முடிவு செய்கிறார் என்று இவர்கள் சொல்வது உண்மையென்றால், இவர்கள் தங்களையும் அறியாமல் ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். 

ஜால்ரா அடிப்பவர்களைவிட தட்டிக்கேட்பவர்களுக்குத்தான் அல்லாஹ் மரியாதையை ஏற்படுத்துவான் என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. அதையாவது புரிந்துகொண்டு தவ்ஹீத் ஜமாஅத் போல் நடக்க முயற்சித்து இவர்கள் சொல்வதையும் ஜெயலலிதா கேட்பது போல் நடந்து கொள்ளட்டும். 

ஜெயலலிதா அவர்கள் நம்மைக்கேட்டு எந்த முடிவையும் எடுக்கும் அளவுக்கு நமக்கு அவருடன் நெருக்கம் ஏதுமில்லை. பிற இயக்கங்கள் குறித்து எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று இரகசியக் கோரிக்கை வைப்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிமுறை அல்ல. 

பொதுவாக சென்னையில் பேரணி நடத்துவது என்றால் போக்குவரத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில்தான் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இது போல் யார் பேரணி நடத்தினாலும் தடையை மீறி கைதாவதற்கு உடன்பட்டுத் தான் நடத்த வேண்டும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீதி மன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற அறிவுகூட இவர்களுக்கு இருக்கவில்லை. 

நீதிமன்றத்தை அணுகாமல் காவல் துறையிடம் பேசி நாங்கள் தடையை மீறுகிறோம் என்று சொன்னால் பேச்சுவார்த்தை மூலம் ஒரு இடத்தில் கூடச் செய்து அங்கே கைது செய்வார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. 

அதைச் செய்யாமல் உயர்நீதி மன்றத்தை இவர்கள் அணுகியது மடத்தனமானது. உயர்நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற சாதாரண விஷயம் கூட தெரியாமல் இவர்கள் என்ன இயக்கம் நடத்துகிறார்கள்? கடுகளவு அறிவுள்ளவனைக் கேட்டாலும் இவர்கள் கேட்ட இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறிவிடுவார். 

நீதிமன்றம் தடையை உறுதி செய்யும் நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள். 

உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னர் காவல் துறையினர் பேரணிக்காக கூடாமல் தடுத்து ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீதி மன்றத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இந்த நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள். 

நீதிமன்றம் தலையிடும் வரைதான் புரிந்துணர்வு அடிப்படையில் காவல்துறை செயல்பட முடியும். நீதிமன்றம் தலையிட்ட பின்னர் நீதிமன்றத்துக்கு பதில் சொல்வதற்கேற்பவே காவல் துறை நடக்க முடியும். 

இயக்கம் நடத்தக் கூடியவர்களுக்கு அறிவு இல்லாவிட்டால் அடுத்தவர் மீது பழி போடுவது என்ன நியாயம்? 

வெகுண்டெழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் அரண்டு போய்விட்டது என்று இவர்கள் கூறுவது தான் உச்சகட்ட காமெடியாக உள்ளது. 

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பெரிய பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதைவிடக் குறைவான மக்களையே இவர்களால் திரட்ட முடிந்தது என்பதை அறியலாம். 

தவ்ஹீத் ஜமாஅத் பலவீனமாக உள்ள மாவட்டம் கரூர் மாவட்டம். காவல்துறையின் காட்டு தர்பாரைக் கண்டித்து கண்டனப் போராட்டம் சென்ற வாரம் நடத்தப்பட்டது. முடிவு எடுத்து இரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். எவ்வித விளம்பரமும் உழைப்பும் இல்லாமல் இரு நாட்களில் பலவீனமான மாவட்டம் கூட்டிய கூட்டத்தில் பாதியைக்கூட இவர்கள் மாநில அளவில் கூட்ட முடியவில்லை எனும் போது நாம் ஏன் கதி கலங்க வேண்டும். 

சில ஊடகங்கள் (சன் டிவி உட்பட) நூற்றுக் கணக்கானோர் கைது என்று குறிப்பிட்டனர். அதிகபட்சமாக சுமார் 3000 பேர்கள் என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அந்தக் கூட்டத்தின் வீடியோவை நிறுத்தி நிறுத்தி எண்ணிப் பார்த்தால் மூவாயிரம் பேருக்குள் தேறுவார்கள். 

பல மாதங்கள் உழைத்து இலட்சக்கணக்கில் செலவு செய்த பின்னரும், நாற்பது மாவட்டங்களுக்கு 3000 பேர்கள் என்றால், மாவட்டத்திற்கு 75 பேர் வீதம் வந்துள்ளனர். 

சமுதாயத்தின் முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டமாக இருந்தும், கடுமையாக உழைத்தும், இதற்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஊட்டியும், மாவட்டத்திற்கு 75 பேர் வீதம்தான் வந்துள்ளனர் என்றால் அடித்தளம் அறவே சரிந்து விட்டதை அவர்கள் இதிலிருந்து உணர்வதற்கான எச்சரிக்கை மணியாகவே இது அமைந்துள்ளது. 

இவர்கள் நீதி மன்றத்தை அணுகியது இதனால் கிடைக்கும் பரபரப்பிற்கும், விளம்பரத்திற்கும் உதவலாம். ஒரு நாள் செய்தியோடு இது முடிந்துவிடும். 

கட்டப் பஞ்சாயத்தைக் கைவிட்டு அடிமைச் சேவகம் செய்யும் போக்கில் இருந்து விடுபட்டு, 1995ல் காணப்பட்ட அர்ப்பணிப்பு மனப்பான்மையை நோக்கி இவர்கள் திரும்பாவிட்டால், இருக்கும் சிலரையும் இழப்பார்கள். இதைத்தான் இந்தக்கூட்டத்திலிருந்து இவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். 

உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் தான் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Saturday, July 13, 2013

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 3) - பொருளாதாரத்தை அணுகும் முறை

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 3) - பொருளாதாரத்தை அணுகும் முறை


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே சொல்லவும்.

Friday, July 12, 2013

மாறும் உலகில் மாறாத இஸ்லாம் 2(வீடியோ )

ரமலான் மாத தொடர் உரை 2013

மாறும் உலகில் மாறாத இஸ்லாம் 2



Thursday, July 11, 2013

மாறும் உலகில் மாறாத இஸ்லாம் 1(வீடியோ )


மாறும் உலகில் மாறாத இஸ்லாம் 1

ரமலான் மாத தொடர் உரை 2013


முஸ்லீம்களும், நோன்புக் கஞ்சி அரசியலும்

புனித ரமழான் மாதம் என்பது முஸ்லீம்களின் மிக முக்கியமான காலமாகும். உலகுக்கான வழிகாட்டி திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமாகும்.

பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மையின் தட்டுக்கள் நிறைக்கப்படும் புனிதமிக்க ஒரு மாதம் ரமழான் ஆகும். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் 11 மாதங்கள் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக அமைவது இம்மாதத்தில் செய்யும் நற்செயல்கள் தாம்.

இந்த மாதத்தை பொருத்த வரையில் அனைத்து இஸ்லாமியர்களும் இம்மாதத்தை அடைவதில் அளவிலா மகிழ்ச்சி அடைவார்கள்.
  • காலை மூன்று மணிக்கே எழுந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்.
  • பஜ்ருத் தொழுகைக்கு பள்ளியை நிறைக்கும் மக்கள் கூட்டம்.
  • லுஹர் தொழுகைக்கு தவறாமல் வருபவர்கள்.
  • அசர் தொழுகையுடன் சேர்த்து நோன்புக் கஞ்சி வாங்க வருபவர்கள்.
  • நோன்பைத் திறக்க வேண்டும், சூரியன் எப்போது மறையும் என வைத்த கண் வாங்காமல் காத்திருக்கும் உள்ளங்கள்.
  • தொழுகை தொழப் போக வேண்டும் அனைத்து  வேலைகளையும் இப்போதே முடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே சமையலில் ஈடுபடும் தாய்மார்கள். என்று அனைவரும் ஆசுவாசமாக போற்றிப் புகழும் மாதம் தான் இந்த ரமழான்.
இஸ்லாமிய ஆன்மீகக் கருத்துக்கள் எப்போதும் பேசப்படும் இம்மாதத்தில் தற்போது அரசியலும் கலக்கப்படுவது ஓர் கவலையான உண்மையாகும். கண்டவற்றுக்கும் பேனர், போஸ்டர் அடிக்கும் அரசியல்வாதிகள் தற்போது ரமழானிலும் தங்கள் அரசியல் அங்கத்துவத்தை பேண நினைப்பதுதான் கவலையான விஷயமாகும்.

அரசியல்வாதிகளும், இப்தாரும்.

அதிகாலையில் இருந்து மாலை வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் மக்கள் சூரியன் மறையும் நேரத்தில் நோன்பைத் திறப்பார்கள். நோன்பைத் திறப்பதற்காக அனைத்து மக்களும் காத்திருக்கும் அத்தருணம் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருனமாக இஸ்லாமியர்களினால் பார்க்கப்படுகின்றது.
அப்படிப்பட்ட நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு அங்கென்ன வேலை என்ற கேள்வி எழுவது நியாயமானதே!

ஆம் எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற பாணியில் கொடிகட்டித் திரியும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தங்கள் பச்சோந்தித் தனத்தை காட்டிக் கொள்ளக் கிடைத்த பெரும் சந்தர்ப்பமாக இந்த ரமழான் மாதத்தை நினைக்கிறார்கள்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோன்புக் கஞ்சி அரசியல் மிகவும் பிரபலமானதாகும்.

நோன்பின் மான்புகளைப் பற்றி, திருக்குர்ஆனின் புனிதத்தைப் பற்றி பேனர்கள் வைக்கப்படுகின்றதோ இல்லையோ அம்மா வருகிறார், ஐயா வருகிறார், தமிழினக் காவலர் வருகிறார், முஸ்லீம்களின் இதயம் வருகிறார் என்றெல்லாம் வாசகங்கள் அடங்கிய “கட்டவுட்களை” நாடு முழுவதும் இம்மாதத்தில் காணக்கிடைக்கும்.

பள்ளிவாயல்களில் நோன்பு திறக்கும் நிகழ்வு என்று கூறி அரசியல் வாதிகள் வரவேற்கப்படுவார்கள்.

தொப்பி அணிந்து, சில நேரங்களில் ஜுப்பாவும் போட்டுக் கொண்டு, வெள்ளையும் சொல்லையுமாக வரும் அரசியல் பிரபலங்கள். ஆன்மீக அரங்கில் தங்கள் அரசியல் தர்பாருக்கான இடத்தைப் பிடிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

ஒரு முஸ்லிம் நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் பல இடங்களில் இஸ்லாத்திற்கே தொடர்பில்லாதவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் என்ற பெயரில் அரசியல் நாடகம் போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

சூரியன் மறைந்தால் நோன்பு திறக்க வேண்டும் என்ற மார்க்க வரம்பு இருக்கும் போது, அரசியல் நாடக அரங்கில் இப்தார் நிகழ்ச்சி நடத்தும் நபர்கள் அரசியல் தலைவர் நோன்பு திறக்கும் வரை அவர்கள் நோன்பு திறக்கவும் மாட்டார்கள், பொது மக்களை நோன்பு திறக்கவிடவும் மாட்டார்கள்.

இது எந்த விதத்தில் நியாயம் என்பதை நல்லுள்ளங்கள் புரிய வேண்டும். கண்ட அரசியல் வாதிக்காக புனிதமிக்க மார்க்கக் கடமையை புறக்கணிக்கும் செயலில் நாம் ஈடுபட்டால் அந்த நோன்பினால் எவ்வித பிரயோஜனமும் இறைவனிடம் நமக்குக் கிடைக்காது என்பதை விளங்க வேண்டாமா?

நோன்பு திறத்தல் என்ற உண்ணதமான ஒரு நிகழ்வையும் அரசியல் சாக்கடையாக்க முனையும் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பள்ளிவாயல் நிர்வாகிகளே!

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்பது ஒரு புனிதப் பணி. நோன்பு திறப்பதற்கு உதவி செய்யும் பொது மக்களின் பணத்தை வீண் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்ததாதீர்கள்.

அரசியலை அரசியலுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளுங்கள், ஆன்மீக செயல்பாட்டில் நுழைத்து, புனித செயல்பாடுகளின் புனித தன்மையை கெடுக்காதீர்கள்.

அரசியல் வாதிகளுக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்து, ஆன்மீகத்தைக் கெடுக்கும் அசிங்கமான செயல்பாட்டைத் தவிர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். (அல்குர்ஆன் 18:103-105)

நன்றி
 rasminmisc

Tuesday, July 09, 2013

ரமலான் மாத தொடர் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த வருடத்திய ரமலான் நோன்பு வியாழக்கிழமை ஆரம்பமாகிறது .நமது ஜமாத்தின் சார்பாக ரமலான் மாத பெண்கள் தொடர் பயான் மேலத்தெரு சவுக்கு கொள்ளையில் எப்போதும் நடைபெறும் வீட்டில் பகல்  11 மணி முதல் 12  மணிவரையில் நடை பெரும் இன்ஷா அல்லாஹ்

UAE வாழ் அதிரை சகோதரர்களின் கவனத்திற்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

UAE வாழ் அதிரை சகோதரர்களின் கவனத்திற்கு

இந்த வருடத்திய (2013) ஃபித்ரா மற்றும் சதக்காவை அளிப்பதற்கு கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்


                                DEIRA

1.சாகுல்ஹமீது--------0505063755
2.நசீர் அகமது   --------0559081550
3.நெய்னா முஹம்மது ----0553907189
4.சாதிக் ------0557428381
5.நெய்னா (மக்தும்)-----0507397093


                         ABUDHABI

1.ஜாகிர் ----------0554492722    முசாஃபா
2.சகாபுதீன் ------0558343582    முசாஃபா
3.இல்யாஸ் ------0559925248    சிட்டி
4.ஜபுருல்லாஹ் ----0507510584  சிட்டி

               HORLANZ

1.தமீம் ------0507429180

Monday, July 08, 2013

தவ்ஹீத் பள்ளியின் முக்கிய அறிவிப்பு

அதிராம்பட்டினம் தவ்ஹீத் பள்ளியில் சென்ற வருடங்களை போல் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு கொடுக்கப்படும் கஞ்சி மற்றும் இதர வகைகளுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூ 5000 என்றும் ஸஹா் உணவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ 3000 என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது சென்ற வருடம் இந்த வகைகளுக்காக கொடுத்தவர்களும் புதிதாக கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு உங்களது பங்களிப்பை கொடுக்குமாறு கேட்டுகொள்ளுகிறோம்

மீரா முகைதீன் (+91 99448 24510)
சுலைமான் (+91 95668 22198)

Sunday, July 07, 2013

மணக்கும் குர்ஆனை மனனம் செய்வோம்

அருள்மிகு ரமளான் வந்து விட்டது. ரமளான் என்றாலே குர்ஆன் தான். ஆம்! ரமளான் மாதத்தை ஆக்கிரமிப்பதும், அலங்கரிப்பதும் அருள்மிகு குர்ஆன் தான். அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்களின் இதய ஆவணத்தில் பதிய வைக்கும் அரும்பணியில் ஈடுபட்ட ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தான் அதுவரை அருளப்பட்ட குர்ஆனை மறுபதிவு செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணமான ஆண்டில் இருமுறை மறுபதிவு செய்திருக்கிறார்கள்.

"எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6285

இந்த மறுபதிவு ரமளான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் நடைபெறும் என்பதை புகாரி 3554 ஹதீஸில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஏனிந்த மறுபதிவு? எதற்காக மறுபார்வை? அல்லாஹ்வின் இந்த அருள்மிகு குர்ஆன் எழுத்தளவில், ஏட்டளவில் இல்லாமல் உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.
(அல்குர்ஆன் 29:49) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இதைப் பாதுகாத்தது போன்று நபித்தோழர்களின் உள்ளங்களில் வைத்தும் அல்லாஹ் பாதுகாக்கின்றான்.

இந்த வசனத்தில் "சுதூர்' - உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இது "சத்ர்' என்ற வார்த்தையின் பன்மையாகும். இதன்படி நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மட்டுமல்லாமல் அந்த நபித்தோழர்களின் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. அதன் பிறகு அது அடுத்த தலைமுறையினரின் உள்ளங்களில் பதியப்படுகின்றது; பாதுகாக்கப்படுகின்றது.

அன்றிலிருந்து இன்று வரை இந்தப் புனிதக் குர்ஆன் இவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நபி (ஸல்) அவர்களால் அன்று ஓதப்பட்ட அதே ஒலி வடிவத்தில் ஓசை நயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவிலான ஏடுகள், உள்ளங்களில் உள்ள குர்ஆனின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கின்றன.

முழுமையான, முதன்மையான பாதுகாப்பு, ஓசை வடிவக் குர்ஆனுக்குத் தான். தலைமுறை, தலைமுறையாக பதினான்கு நூற்றாண்டுகளைத் தாண்டி, கால வெள்ளத்தைக் கடந்து கலப்படம் இல்லாமல், கைச்சரக்கு கலக்காமல் மனித உள்ளங்களில் பயணித்து வருகின்ற தன்னிகரற்ற வேதம் இந்தக் குர்ஆன் மட்டும் தான்.

இப்படிக் குர்ஆனை தங்கள் மனப் பேழைகளில் மனனம் செய்வதன் மூலம் பாதுகாத்த மனிதர்கள் மகத்தானவர்கள் ஆவர். மாண்புறு குர்ஆனை சங்கிலித் தொடரில் பாதுகாப்பதற்காக மனனம் செய்து வரும் கன்னித் தலைமுறையினர் கண்ணியத்திற்குரியவர்கள் ஆவர். நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு மகிமை சூட்டுகின்றார்கள்; மதிப்பு கூட்டுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4937

அல்குர்ஆனை மனனம் செய்த மக்கள் மலக்குகளைப் போன்றவர்கள் என்றால் அதன் மகிமையையும் மாண்பையும் சொல்ல வேண்டியதில்லை.

தொழுவிப்பதில் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் முதல் மரியாதை அளிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)
நூல்: புகாரி 4302

மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுவிக்கட்டும். அவர்களில் தொழுவிப்பதற்கு மிகவும் தகுதியானவர் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: முஸ்லிம் 1077

இருக்கும் போது இந்த மரியாதை என்றால் இறந்த பின்னும் மரியாதை தொடர்கின்றது.

நபி (ஸல்) அவர்கள், உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, "இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?'' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, "இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்'' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1343

இம்மாபெரிய சிறப்புக்களைக் கொண்ட இந்தக் குர்ஆனை மனனம் செய்வோர் பொதுவாக தமிழகத்தில் அருகி விட்டனர். இன்றைக்குத் தமிழகத்தில் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோரின் மதரஸாக்களில் மாணவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனர். இதற்குக் காரணம் இதை ஒரு வருவாய்க்குரிய வழியாக மட்டும் ஆலிம்கள் பார்த்தது தான்.

அதனால் மார்க்கக் கல்வி அதனுடைய மதிப்பை இழந்து விட்டது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒரேயடியாக உலகக் கல்வியில் கொண்டு போய் தள்ளுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாக அமைந்தது.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நிலவுகின்றது. ஆனால் நம்மிடம் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் மைக்ரோ அளவில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த ஹாபிழ்கள் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோரிலிருந்து வந்ததால் தான்.

ரமளான் வந்து விட்டது. இம்மாதத்தின் இரவு வேளைகளில் இலட்சக்கணக்கில் உலகெங்குமிருந்து மக்கா, மதீனாவில் மக்கள் குவிகின்றனர். அங்கு ஆட்டம், பாட்டம், இசைக் கச்சேரிகள், ஆபாச நடனங்கள் எதுவுமின்றி எப்படி இத்தனை பேர் குழுமுகின்றனர்? இதுபோன்றே நமது ஊர்களிலும் பள்ளிகளில் எப்படி மக்கள் குவிகின்றனர்? அனைத்து விதமான கேளிக்கைகளையும் இஸ்லாம் தடை செய்த நிலையிலும் இது எப்படி சாத்தியமானது?

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னதத் திருக்குர்ஆன் உலக மக்களைத் தன்வயப்படுத்தி இதை சாத்தியமாக்குகின்றது. சத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.

தேனடையை மொய்க்கும் வண்டுகள் போன்று மக்கள் திருக்குர்ஆனை மொய்த்துக் கொண்டிருக்கின்றனர். அழகிய குரலில் குர்ஆன் ஒலி அலையாய் மாறும் போது, உருகாத உள்ளங்கள் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) ஆகியோர் ஓதும் போது ஆண்களும், பெண்களும் தங்கள் உள்ளங்களைப் பறி கொடுத்த அற்புத நிகழ்வை ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது.

நபி (ஸல்) அவர்களும் குர்ஆனைக் கேட்கும் போது இவ்வாறு தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்திருக்கின்றார்கள். ரீங்காரமிட்டு ஓதிய அபூமூஸா (ரலி) அவர்களை நபியவர்கள் பாராட்டுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) "அபூ மூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி),
நூல்: புகாரி 5048

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தராவீஹ் என்ற பெயரில் நடத்தப்படுகின்ற தொழுகைகளில் ஓதப்படும் குர்ஆன் வசனங்கள் படுவேகமானவை. ஒலிக்கின்ற வார்த்தை ஒன்று கூட விளங்காது. அத்துடன் அவர்களது தொழுகையும் அதி அவசரமானவை. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொழுகைகள் நிதானமானவை. இங்கு தொழுவிக்கும் ஹாபிழ்கள் நின்று நிதானமாகத் தொழுவிக்கின்றனர். ஆனால் இவ்வாறு நடப்பது ஒருசில இடங்களில் தான். தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒரு கூட்டம் நின்று, நீட்டித் தொழவும் நிதானமான நீண்ட கிராஅத்தைக் கேட்கவும், குர்ஆனைக் கேட்டு அழுவதற்கும் காத்திருக்கின்றனர். ஆனால் பரிதாப நிலை, இந்த மக்களுக்குத் தொழுவிக்க ஹாபிழ்கள் இல்லை.

இதைத் தீர்ப்பதற்கு ஒரே வழி தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஹாபிழ்களாகவும், ஆலிம்களாகவும் ஆக்குவது தான். இருபது ரக்அத்களை எட்டு ரக்அத்களாகக் குறைத்து விட்டார்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினர் நம்மை நோக்கிக் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இந்த எட்டு ரக்அத்களில் நிலை, ருகூவு, சுஜூது போன்றவற்றை நீட்டி நின்று தொழுது, இருபதைக் காட்டிலும் அதிக நேரம் எட்டு ரக்அத்தைத் தொழுவதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். தொழுகையில் காட்டப்படும் இந்த நிதானத்திற்காக ஒரு கூட்டம் தவ்ஹீதை நோக்கிப் படையெடுத்து வந்தது.

இப்படி அமல் செய்வதற்காகவே ஒரு கூட்டம் தாகத்துடன் காத்து நிற்கின்றது. இதன் வாயிலாகவும் ஒரு கூட்டம் தவ்ஹீதுக்கு வந்து கொண்டிருக்கின்றது. வரவும் தயாராக இருக்கின்றது. எனவே இந்த அரும்பணியை ஆற்றுவதற்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி
ஏகத்துவம்

மேலத்தெரு மகிழங்கோட்டை ரோட்டில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் 6.7.13 சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு மகிழங்கோட்டை ரோட்டில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்களின் நபி வழியே நம் வழி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.




Saturday, July 06, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 05.07.13(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அபூபக்கர் (ரலி ) அவர்களின் சிறப்பு

உரை :அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

Thursday, July 04, 2013

பிறை பார்பதே நபி வழி (வீடியோ)

உலகப் பிறை சாத்தியமா?
பிறையை பார்க்காமல் கணிப்பதற்கு ஆதாரம் உண்டா?
 பிறையில் குழப்பம் ஏன்? பிறை பார்ப்பதில் நபி வழி எது?
 இதுபோன்ற இன்னும் பல சந்தேகங்களுக்கு சகோதரா் P J  அவர்களின் பதிலை பாருங்கள்


PIRAI PARTHAL from Adiraitntj on Vimeo.

1909. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீ, பைஹகீ, தாரகுத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான், அஹ்மத


ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: அபூதாவூத்


உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வௌ;ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வௌ;ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்” என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்” என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்” என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம்

1013. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' என்னம் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம். 
இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.

ஆறு நாட்களும் சூரியனையோ அது உதிப்பதையோ மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழதிருக்க முடியும்.
மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான். முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.
சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் அல்லாஹ் தன் திருமறையில்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது) (2: 185)

நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

Wednesday, July 03, 2013

நோன்பின் சட்டங்கள் 6 (வீடியோ )

நோன்பின் சட்டங்கள் 6


கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

”ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1982



இரவு தொழுகை எப்படி தொழுவது ?
இரவு தொழுகையின் பெயர் என்ன ?
தராவீஹ் என்று ஒரு தொழுகை உண்டா ?
இரவு தொழுகை எத்தனை ரக்காத் ?

மெகா டிவியில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் – காணத்தவறாதீர்கள்!

மெகா டிவியில் பி.ஜே அவர்கள் உரையாற்றும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் – காணத்தவறாதீர்கள்!


Monday, July 01, 2013

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) 

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

நோன்பின் சட்டங்கள் -5(வீடியோ )

நோன்பின் சட்டங்கள் 5



குளிப்பு கடமையான நிலையில் நோம்பு வைக்கலாமா ?
குளிக்கலாமா ?
பல் விளக்கலாமா ?
குளிக்கும் போது சோப்பு போடலாமா ?
நறுமணம் பூசலாமா?
சமைக்கும் கறிக்கு உப்பு பார்க்கலாமா ?
வாந்தி எடுத்தால் நோம்பு முறியுமா ?
இரத்தம் வெளியேறினால் நோம்பு முறியுமா ?