Friday, January 04, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் - உண்டு சுகிக்கவில்லை, உடுத்தி மகிழவில்லை (தொடர் 4)



இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.

மாமனிதர் நபிகள் நாயகம் - உண்டு சுகிக்கவில்லை, உடுத்தி மகிழவில்லை (தொடர் 4)

உண்டு சுகிக்கவில்லை:

மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம்.
'மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை' என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

'எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். 'என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) 'பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்' என விடையளித்தார்.

அறிவிப்பவர் : உர்வா
நூல் : புகாரி 2567, 6459

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) இடம் கேட்டேன். அதற்கு அவர் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை' என்றார். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா?' என்று கேட்டேன். அதற்கவர் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை' என்றார். 'தோல் நீக்கப்படாத கோதுமை மாவைச் சக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கவர் 'தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம். பின்னர் வாயால் அதை ஊதுவோம். உமிகள் பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம்' என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ ஹாஸிம்
நூல் : புகாரி 5413

'நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை' என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5374

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை' என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5416, 6454

'ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக) எடுத்து வைப்போம். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். 'இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு 'குழம்புடன் கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே' என விளக்கமளித்தார்.

நூல் : புகாரி 5423

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி 'சாப்பிடுங்கள்' என்று அனஸ் (ரலி) கூறி விட்டு 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை' எனக் கூறினார்.

அறிவிப்பவர் : கதாதா
நூல் : புகாரி 5385, 5421, 6457

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) 'எனது வீட்டிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 2069, 2508

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு சுலைம் (ரலி) இடம் வந்து இதைக் கூறினேன். அதற்கவர் 'என்னிடம் ஒரே ஒரு ரொட்டித் துண்டும், சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும் என்றார்' என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்
(ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம் 3802

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன்' என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார்.

நூல் : புகாரி 5414

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரிடம் 'குழம்பு ஏதும் உள்ளதா?' எனக் கேட்டனர். 'வினிகரைத் தவிர வேறு ஏதும் எங்களிடம் இல்லை' என்று குடும்பத்தினர் கூறினார்கள். அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். 'வினிகர் சிறந்த குழம்பாக இருக்கிறதே' என இரு முறை கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3824

நான் எனது வீட்டின் நிழல் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கிச் சென்று அவர்களின் பின்னால் நடக்கலானேன். 'அருகே வா' என்று அவர்கள் அழைத்ததும் அருகில் சென்றேன். என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள். தமது வீட்டுக்குச் சென்றவுடன் 'காலை உணவு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் 'இருக்கிறது' என்று கூறி விட்டு மூன்று ரொட்டியைக் கொண்டு வந்து வைத்தார்கள். 'குழம்பு ஏதும் உள்ளதா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். 'சிறிதளவு வினிகரைத் தவிர வேறு ஏதும் இல்லை' என்று குடும்பத்தினர் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதைக் கொண்டு வாருங்கள்' என்றார்கள். வீட்டிலுள்ளவர்கள் கொண்டு வந்தனர். எனக்கும், அவர்களுக்கும் தலா ஒரு ரொட்டியை முன்னால் வைத்தார்கள். மூன்றாவது ரொட்டியைச் சரி பாதியாக்கி ஒரு பாதியை எனக்கு முன்னால் வைத்து விட்டு இன்னொரு பாதியைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம் 3826

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியைக் காண்கிறேன்; எனவே அவர்களுடன் சேர்த்து ஐந்து நபர்களுக்கான உணவைத் தயார் செய்வீராக!' என்று அபூ ஷுஐப் (ரலி) தமது ஊழியரிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்களுடன் (விருந்துக்கு அழைக்கப்படாத) இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். 'இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்து விட்டார். இவருக்கும் அனுமதியளிப்பதாக இருந்தால் அனுமதியளிப்பீராக! இல்லாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்!' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ ஷுஐப் (ரலி) 'இவருக்கும் அனுமதி அளிக்கிறேன்' என்றார்.

நூல் : புகாரி 2081, 2456, 5434, 5461

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டனர். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அவ்விருவரும் பசி' என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வந்துள்ளேன்' என்றார்கள்... ஹதீஸ் சுருக்கம்.

நூல் : முஸ்லிம் 3799

இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பல கோணங்களில் நாம் அலசிப் பார்க்க வேண்டும்.

ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். காய்ந்து போன ரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை.

செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாத, வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்ற நிலையும் இருந்தது. அவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் தன்னிறைவு பெற்றிருந்தது போல் உலகில் இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லை. (இதைப் பின்னர் நாம் விளக்குவோம்)
  • அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு அந்த மாமன்னரால் எப்படி வாழ்க்கை நடத்த முடிந்தது?
  • குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுவது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது?
  • காய்ந்த ரொட்டியும், வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி?
  • அந்த உணவைக் கூட தினமும் சாப்பிட முடியாத நிலையை எப்படி அவர்களால் சகித்துக் கொள்ள முடிந்தது?
  • ஒரு நாள் தயாரிக்கப்பட்ட பழைய குழம்பை பதினைந்து நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கு நிகரான வறுமையான வாழ்க்கையை உலக வரலாற்றில் நம்மால் காண முடியுமா?
  • முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது வீட்டிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும் நிலையை உலகில் எந்த மன்னரேனும், எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியுமா?
  • காய்ந்த ரொட்டியையும், தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் வீட்டிருந்து வாங்கி பசியை நீக்கிய தலைவர் கற்பனைக் கதையில் கூட இருக்க முடியுமா?
  • பசிக் களைப்பை அவர்களின் முகத்தில் கண்டு சாதாரணக் குடிமகன் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கை எளிமையாக இருந்துள்ளது எப்படி?

இந்தச் சான்றுகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை; செல்வத்தைக் குவிக்கவில்லை என்பது விளங்கும்.

இந்த உணவுப் பழக்கத்தை மட்டும் வைத்து நபிகள் நாயகம் தமது பதவியைப் பயன்படுத்தி செல்வத்தைக் குவிக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்? எளிமையான உணவுப் பழக்கம் உடைய எத்தனையோ பேர் வளமான நிலையில் உள்ளனரே? வேறு வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றனரே! அது போல் நபிகள் நாயகமும் தமது பதவியின் மூலம் செல்வத்தைக் குவித்து வேறு வகையான சுக போகங்களை அனுபவித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

உடுத்தி மகிழவில்லை:

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி 'இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்' என்று குறிப்பிட்டார்.

நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து 'இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்' என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 1277, 2093, 5810

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள். இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள்.

நூல் : புகாரி 390, 807, 3654

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள்.

நூல் : புகாரி 1031, 3565

மக்கள் அனைவரையும் திரட்டி நடத்தப்படும் மழைத் தொழுகையின் போது கூட அக்குள் தெரியும் அளவுக்கு போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக அணிந்திருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வரியைத் திரட்ட ஒருவரை அனுப்பினார்கள். நிதி திரட்டி வந்த அவர் 'இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது உங்களுக்கு உரியது' என்றார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் தனது வீட்டிலோ, தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்! இவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்ப்போம்' எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அவர்களின் அக்குளை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தமது கைகளை உயர்த்தி 'இறைவா! நான் எடுத்துச் சொல்லி விட்டேனா?' எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 2597, 6636, 6979, 7174, 7197

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது என்பதையும் இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

உணவு, உடை போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான். இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்

தவ்ஹீத் தலைமை அலுவலக ஜும்மா 04.01.13(வீடியோ )

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை
உரை :சகோ செய்யது இப்ராஹிம்
டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன ?
மதுரை ஆதினம் கூறிய கருத்து தவறா ?




Thursday, January 03, 2013

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!


இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

அல்குர்-ஆன் 24 : 2

 திருமணம் முடித்த ஒரு நபர் விபச்சாரம் செய்ததற்காக அவருக்கு மரண தண்டணை வழங்கச் சொல்லி நபிகளார் உத்தரவிட்டார்கள்

(புகாரி : 6828 ஹதீஸின் கருத்து)

 குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும் என்பதும், அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பதும்தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

 குற்றச் செயல்களுக்கு திருக்குர்-ஆன் கூறும் தண்டனைகளை அதிமேதாவிகளும், அறிவுஜீவிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வோரும் விமர்சனம் செய்து வந்தனர். திருடியவர்களுக்கு கையை வெட்டுதல், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கசையடி மற்றும் கல்லால் எறிந்து அவர்களை கொலை செய்யும் சட்டங்கள், கொலைக்குக் கொலை, கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்று இஸ்லாம் கூறும் தீர்வுகள் காட்டுமிராண்டித்தனமானவை. அவைகள் மனித நேயத்திற்கு எதிரானவை. இஸ்லாம் வழங்கச் சொல்லும் தண்டனைகள் மனிதத்தன்மை அற்றவை. இந்தச் சட்டங்களை பின்பற்றச் சொல்லிவரும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈவுஇரக்கமற்றவர்கள்; பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள் என்று குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினர் இந்த அதிமேதாவிகள்.

 எந்த நாவினால் இஸ்லாத்தைக் குறைகூறினார்களோ! எந்த நாவு இந்த சட்டங்களெல்லாம் மனிததன்மையற்ற செயல்கள் என்று சொன்னதோ அதே நாவுகள் இப்போது இஸ்லாம் கூறும் இத்தகைய சட்டங்கள்தான் தற்போது வேண்டும் என்று சொல்கின்றன. வல்ல இறைவன் அவர்களை அவ்வாறு சொல்லவைத்துள்ளான்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்:

கடந்த 16.12.12 அன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தனது ஆண் நண்பருடன் நள்ளிரவில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பினார். அவர்கள் இருவரும் கதவுகள் மூடப்பட்ட சொகுசுப்பேருந்தில் பயணித்தனர். அப்போது அந்த 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை தாக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் அதே பேருந்தில் இருந்த அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது.

 பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளது. அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடக்கம்.

 (குறிப்பு : மருத்துவக்கல்லூரி மாணவி நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியது குறித்த தகவல்களை எந்த மீடியாக்களும் கண்டுகொள்ளவுமில்லை; கண்டிக்கவுமில்லை. அதுகுறித்த தகவல்கள் “பதில்கள்” பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதையும் காண்க..)

 தற்போது இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும் என இந்தியா முழுவதுமுள்ள அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பியுள்ளார்கள். போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்தப் பெண்ணை கற்பழித்த கயவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாதர் சங்க அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் இவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படும் தூக்குதண்டனையை அனைவரும் காணும் வகையில் நிகழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டத்தில் குதித்த மாணவிகள் வைத்துள்ளனர்.

இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரச் சொல்லும் பா.ஜ.க:

 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சம்பவத்தைப்பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்ற அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர்களை தூக்கிலிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். அதே கோரிக்கையை அ.தி.மு.க சார்பில் மைத்ரேயன் வைத்துள்ளார்.

 எந்தவிதமான எதிர்ப்புமின்றி அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை வரவேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் ஷிண்டேவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்று இஸ்லாம் கூறிய சட்டம் காட்டுமிராண்டித்தனம் என்று கூறியவர்கள்தான் தற்போது இஸ்லாம் கூறும் தீர்வை அரசியலமைப்புச் சட்டமாக வடிவமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் இஸ்லாம் கூறும் தீர்வை நோக்கி திரும்பியுள்ளது. இஸ்லாம் கூறும் தீர்வுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாக அமையும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் சேர்ந்து தற்போது நிரூபித்துக் கொண்டுள்ளது.

 கற்பழிப்பு என்பது பெண்ணின் சம்மதம் இல்லாமல் நிகழ்த்தப்படும் கொடூரச் செயல். விபச்சாரம் என்பது ஆண் பெண் இருவரும் இணைந்து இருவரும் சம்மதித்துச் செய்யும் ஈனச்செயல். கற்பழிப்புக்கு மரணதண்டனை வழங்கச் சொல்லும் இவர்கள் வெகுவிரைவில் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் பாகுபாடின்றி மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இதுமட்டுமே தீர்வாகுமா?:

 கற்பழிப்பு நிகழ்த்தியவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது மட்டுமே இந்த சம்பவங்களுக்கு முழுமையான தீர்வாக அமையாது. மாறாக பாலியல் ரீதியான குற்றச் செயல்களை தூண்டிவிடக்கூடிய வகையில் அமைந்துள்ள அனைத்து மானங்கெட்ட செயல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தப்பட்டால்தான் இதுபோன்ற குற்றச்செயல்கள் குறையும். இஸ்லாம் அதற்கான வழிகாட்டுதல்களையும் தெளிவாக வழங்குகின்றது.

இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்:

ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்

பெண்கள் ஆண்களுடன் குழைந்து பேசக்கூடாது

அந்நிய ஆண்களுடன் பெண்கள் தனித்திருக்கக் கூடாது

பெண்கள் தங்களுக்கு மணம் முடிக்கத்தடை செய்யப்பட்ட ஆண்களைத்தவிர மற்றவர்கள் முன்னிலையில் தங்களது உடல் அழகை வெளிக்காட்டக்கூடாது. பர்தாவைப் பேண வேண்டும்.
இதையும் மீறி யாரேனும் விபச்சாரம் செய்து பிடிபட்டு, அது தகுந்த 4 சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் அவர் திருமணம் முடிக்காதவராக இருந்தால் அவரை நூறு கசையடி அடிக்க வேண்டும்.
திருமணம் முடித்தவராக இருந்தால் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். அதை ஒருசாரார் பார்க்க வேண்டும்.

 மேற்கண்ட விஷயங்களை சரியாக கடைப்பிடித்தாலே பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு பெண்கள் ஆளாவதை தடுத்துவிடலாம். எய்ட்ஸ் நோயும் பரவாது. எய்ட்ஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம்.

 ஆனால் நம் நாட்டில் விபச்சாரத்தை தூண்டிவிடக்கூடிய அத்தனை விஷயங்களுக்கும் லைசென்ஸ் கொடுத்து அவிழ்த்துவிட்டுவிட்டு, இவர்களே பெட்ரோலை ஊற்றி நெருப்பையும் பற்ற வைத்துவிட்டு அய்யகோ! எரிகின்றதே! என்று கூப்பாடு போடும் நிலைதான் தற்போது நிலவி வருகின்றது. அதற்குரிய ஆதாரத்தை வேறெங்கும் தேடத்தேவையில்லை. இந்த கற்பழிப்பு செய்தியை கண்டித்த போது பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்வே இதற்குச் சான்று பகர்கின்றது.

வேதம் ஓதும் சாத்தான்கள்:

 மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டது குறித்து ஹிந்தி நடிகையும், கூத்தாடி அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயாபச்சன் எம்.பி பேசும்போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது. அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள் என்பதால் இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.

 எல்லோரும் ஓரிரு நாளில் இந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் துரத்தி வரும், ஆறாத வடுவாக அது கூடவே இருக்கும்.

 மனதளவில் அந்தப் பெண் எவ்வளவு துயரத்தை அனுபவிப்பார். இதற்கெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும் என்று கூறியபடி அவர் அழுதுள்ளார் என்று மீடியாக்கள் மிகவும் சோகத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

 இதுபோன்ற மானக்கேடான விஷயங்கள் பரவுவதற்கும், மக்களில் பெரும்பாலானோர் காமவெறி பிடித்த மிருகங்களாக மாறுவதற்கும் ஜெயா பச்சன் போன்ற நடிகைகள் தங்களது சதையை வெளிக்காட்டி ஆட்டம் போடுவதுதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க இயலுமா? எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஆட்டோ டிரைவரோடு ஓடக்கூடிய அவலங்களுக்குக் காரணம் இது போன்ற நடிகைகள் தங்களது கல்லாவை நிரப்பிக்கொள்வதற்காக ஆபாசமாக நடிக்கும் திரைப்படங்களும், மெகா சீரியல்களும்தான் என்பதை யாராவது மறுப்பார்களா?

 விபச்சாரத்தை தூண்டக்கூடிய வகையில் சதை வியாபாரம் நடத்தும் இத்தகைய சதை வியாபாரிகள்தான் நாட்டில் நடக்கும் கற்பழிப்புகள் உள்ளிட்ட அனைத்துவிதமான பாலியல் ரீதியான குற்றங்களுக்கும் காரணம் எனும்போது காரியத்திற்குக் காரணமான அடிப்படைக் காரணத்தைக் களையாமல் காரியத்தை மட்டும் கண்டித்து எந்தப்பலனும் இல்லை.

 எனவே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமெனில் விபச்சாரத்திற்கு இஸ்லாம் கூறும் தண்டனைகளை வழங்குவதுடன் அதைத்தடுக்க இஸ்லாம் காட்டும் வழிமுறைகளையும் அனைவரும் கையாள்வதே சரியான தீர்வாக அமையும்.


“இஸ்லாமிய பெண்களை போன்று அனைவரும் ஆடை அணிய வேண்டும்” மதுரை ஆதினத்தின் கருத்து சரியானதே! 82% வினர் ஆதரவு: புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு



பாலியல் வன்முறைகளை தடுக்க அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களை போன்று சுய கட்டுப்பாட்டுடன் ஆடைகளை அணிய வேண்டும் என்ற மதுரை ஆதினத்தின் கருத்து குறித்து புதிய தலைமை இணையதளம் கடந்த டிச 30 அன்று கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் 82 சதவிகிதத்தினர் மதுரை ஆதனித்தின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அல்ஹம்மதுலில்லாஹ்.
இஸ்லாமிய சட்டம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதையும், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பதற்கு பெண்ணியம் பேசியவர்கள் எந்த ஹிஜாப்பை ஆயுதமாக எடுத்தார்ளோ அந்த ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு அல்ல அவர்களை ஆண்களின் வக்கிர எண்ணங்களிலிருந்து பாதுகாப்பதற்கு தான் என்பதை இன்றைக்கு உலகம் ஒத்துக் கொண்டுள்ளது. எல்லாபுகழும் இறைவனுக்கே…

Wednesday, January 02, 2013

தஞ்சை மேலக்காவேரியில் இஸ்லாம் எளிய மார்க்கம் மற்றும் பட்டமளிப்பு விழா (வீடியோ )


தஞ்சை மேலக்காவேரியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மற்றும் பட்டமளிப்பு விழா 
Melakauvery Part 2 from Jahir on Vimeo.
Melakaavery Part 3 from Jahir on Vimeo.

இதில் நமதூரை சேர்ந்த இரு மாணவிகள் பட்டம் பெற்றனர் ,அல்ஹம்துலில்லாஹ் !

pattamalippu from Jahir on Vimeo.

Tuesday, January 01, 2013

அவ்லியாவை மாமாவாக ஆக்கிய அவ்லியா பக்தர்கள்(வீடியோ )

அவ்லியாவை மாமாவாக ஆக்கிய அவ்லியா பக்தர்கள்!




காதலர்களை சேர்த்து வைக்கும் மாமா அவ்லியா from Adiraitntj on Vimeo.

“பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்” இது நாம போட்ட தலைப்பல்ல CNN போட்டது


CNN தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ”பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்” என்ற தலைப்பில் பின் வரும் இணைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
http://religion.blogs.cnn.com/2011/05/13/half-of-new-testament-forged-bible-scholar-says/
இந்த நீண்ட செய்தியின் தமிழாக்கத்தை அப்படியே நேயர்களுக்கு தருகின்றோம்.

பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்
-ஜான் பிலைக் (CNN -தொலைகாட்சியின் செய்தி தொடர்பாளர்)
உடல்பலஹீனமானமுதியவர்ஒருவர்சிறைச்சாலையில், குளுரில்நடுநடுங்கஅமர்ந்துஇருக்கிறார். முன்பு ஒருமுறை மரணத்தில் இருந்து தப்பியவர். ஆனால் இம்முறையோ மரண தண்டனை உறுதி செய்யபட்டுள்ளார்.
“ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”2 -ம் திமோத்தேயு(4:6-7)
அந்த வயதான முதியவர் வேறு யாருமில்லை அவர் தான் பவுல். மேலே குறிப்பிட்டுள்ள பைபிளின் படி புதிய ஏற்பாட்டின் மிகவும் சோகம் தோய்ந்த பகுதியாக கிருத்தவர்களால் கருதப்படுகிறது. பவுல் மரணிக்கும் முன்பு இறுதி வார்த்தைகளாக மேற்குறிப்பிட்டவாறு கூறினார் என்று பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள் .
ஆனால் அங்கு தான் ஒரு பிரச்சனை. அதுவென்ன பிரச்சனை? அதாவது இதனை உண்மையில் பவுல் கூறவில்லை. அது அவர் சொற்கள் இல்லை !உண்மையில், பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதிக்கும் மேல் உள்ள பகுதிகளை பவுல் என்கின்ற அபோஸ்தல பெயர்தாங்கிகள் தான் எழுதினார்கள்.
“பெய்யைச் சொல்லி நல்லதைப் பரப்பினால் அது மக்களிடம் எடுபடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் பல மக்களிடம் காணப்பட்டது” என்று மிகவும் பிரசுத்தி பெற்ற பைபிளின் முற்கால கையெழுத்து பிரதிகளையும் ஆய்வு செய்யும், மிகவும் அனுபவமிக்க கிருத்துவ அறிஞர் எஹ்ர்மன்(Ehrman) தனது புத்தகமான “போர்ஜரிஸ்” (போலியாக இட்டுகட்டபட்டவைகள்) என்பதில் கூறுகிறார்.
மொத்தம் உள்ள 27 புதிய ஏற்பாடு புத்தகங்களில் 11 புத்தகங்கள்பொய்யாக இட்டுகட்டபட்டவை.
இயேசுவின் சீடர்கள் எழுதிய புத்தகங்கள் என்று குறிப்பிடப்படும் பைபிளின் புதிய ஏற்பாடுகளில் சில பகுதிகளும் அவர்கள் எழுதியவை இல்லை. ஏனெனில், இயேசுவின் சீடர்கள் படிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாக இருந்தனர்.
இயேசுவின் சீடர்கள் படிப்பறிவில்லாத விவசாயிகளா?
எஹ்ர்மனின் இந்த புத்தகம் அவரின் மற்ற பல புத்தகங்களை போலவே பல்வேறு விதமான விமர்சனங்களை கிளப்பிய வண்ணம் உள்ளது. அதில் ஒருவர் “பென் வித்தரிங்டன் (Ben Witherington)” இவர் “போர்ஜரி” என்ற எஹ்ர்மானின் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.ஆனால், அதில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை!
வித்தரிங்டன், எஹ்ர்மனின் புத்தகத்தை “ஒரு மூர்க்க தனமான ஏமாற்று புத்தகம், இதையும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள்” என்று விமர்சிக்கிறார்.
வித்தரிங்டன் மேற்படி எஹ்ர்மனின் புத்தகத்துக்கு ஒரு நீண்ட விமர்சனைத்தையே எழுதியுள்ளார். அதில், புதிய ஏற்பாட்டில் II பேதுருவைதவிர ஏனையவை இயேசுவின் வாழ்வுக்கும் பவுலுக்கும் சாட்சியாயிருந்த எழுத்தறிவுள்ள மிகச்சிறு கூட்டத்தினரால் எழுதப்பட்டிருக்க முடியும் என்கிறார்.
அடுத்து II திமோத்தேயு-வில் பவுலின் கூற்றாக சொல்லப்படுவது, அவர் எழுதாவிட்டாலும் அவர் சொல்லச் சொல்ல வேறு ஒரு எழுத்தர் வருங்கால சந்ததியினருக்காக எழுதியிருக்கலாம் என்றும்,
தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய, பவுலின் மனதைப் புரிந்து கொண்ட நண்பரோ அல்லது உதவியாளரோ பவுலின் கூற்றை செவியேற்று இருக்கலாம். இது புனையப்பட்டதல்ல! மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரின் வாக்கு! என்கிறார் வித்தரிங்டன்.
ஆனால்எஹ்ர்மன்,பேதுருவின் (பீட்டரின்) கடிதங்களை மாத்திரம் விமர்சித்துவிட்டு மற்றவைகளை விட்டுவிடவில்லை ! அவர், பரிசுத்த சுவிசேஷங்கலாக கருதப்படும் மத்தேயு, மார்க் மற்றும் யோவான் சுவிஷங்களும் கூட அவர்கள் எழுதியவைகள் இல்லை. இதில் எந்த ஒன்றும் இயேசுவின் சீடர்களால் எழுதப்படவில்லை. அதற்க்கு இரண்டு காரணங்களையும் முன் வைக்கின்றார்.
முற்காலத்தில் எழுத பெற்ற எந்த சுவேஷங்களானாலும் அவைகளில், அதை எழுதியவர்கள் யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆக சுவேஷங்களின் பெயர்களை உண்டாக்கியவர்கள் பிற்கால எழுத்தர்கள் தான் என்று கூறுகிறார்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று இயேசுவின் சீடர்களாக கருதப்படும் பவுல் மற்றும் (பீட்டர்) ஆகிய இருவருக்கும் இன்றைக்கு பைபிளில் அவர்கள் பெயரில் உள்ள அதிகாரங்களுக்கும் எந்த விதமான சம்மதமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.
இதற்க்கு சான்றாக பைபிளில் அப்போஸ்தலர் 4 : 13 இல் இயேசுவின் சீடர்களான, பேதுரு மற்றும் ஜான் இருவரும் மீனவர்களாக் இருந்தனர். இது பற்றி குறிப்பிடுகையில் “agrammatoi,(அக்ரமத்தொய்)”என்ற கிரேக்க மொழிசொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடி அர்த்தம் “எழுதப்படிக்க தெரியாதவர்கள்” என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
இவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கும்போது எப்படி இந்த ஆகாங்களை இவர்கள் எழுதியிருப்பர் என்பதே எஹ்ர்மனின் வாதம்.
பைபிளில் பவுலின் பெயரால் எழுதப் பட்டவைகள் உண்மையான பவுலால் எழுதப்பட்டது தானா?
புதிய ஏற்பாட்டின் உண்மையான மூல பிரதியான பவுலின் கடிதங்களில் சுமார் சரிபாதி (13 கடிதங்களில் 7 கடிதங்கள்) போலியானவையே என்று ஏர்மன் கூறுகிறார்.
அவரது கடிதங்கைளை நுனுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் போது, பயன்படுத்தப்பட்ட சொற்களின் தரங்கள், மற்றும் தனது போதனைக்கு தேரந்தெடுத்த சொற்களிலுள்ள தெளிவான முரண்பாடே இதற்கு காரணம்.
அதாவது, ஒவ்வொருவரது மொழி நடையும் வித்தியாசமானது. சிலர் ரத்தினச்சுருக்கமாகவும், சில பந்தி பந்தியாகவும் எழுதுவர். ஆனால் பவுலின் கிரேக்க மொழி நடையானது முதல் ரகம். கிரேக்கத்தில் குறுகிய சொற்களையே பயன்படுத்துவார். கனகச்சிதமான வசனங்களை பயன்படுத்துவார். ஆனால் எபேசியரில் (Ephesians) பவுலின் நடைக்கு மாற்றமாக மிக நீண்ட வசனங்களைக் கொண்டதாக காணப்படுகிறது.
இவ்வாறு நீண்ட வசனங்களை பயன்படுத்தவது கிரேக்க மொழியில் உள்ளதுதான். ஆனாலும், பவுலின் மொழிநடை அவ்வாறானதல்ல என்கிறார். இந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தமிழ் பைபிளில் எபேசியருக்கு வழங்கிய ஆசிரியர் உரை அமைந்துள்ளது.
முதலாம் கொரிந்தியரில் பவுல்,பெண்கள் அனைவரும் தேவாலயங்களில “வாய் மூடிஅமைதியாக இருக்க வேண்டும், கேள்விகள் கேட்கக்கூடாது. அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் வீட்டில் சென்று தன் கணவனை தான் கேட்க வேண்டும்” என்கின்ற 14ம்அதிகாரத்தின் 34 மற்றும்35 வசனங்களை எஹ்ர்மன் மேற்கோள் காட்டுகிறார்.
மேலும், இதேமுதலாம்கொரிந்தியரில்11ம்அதிகாரத்தின் 5,6 மற்றும்13ஆவதுவசனங்களில் பவுல்,“பெண்கள் திருச்சபைகளுக்கு வந்து இறைவேண்டலில் ஈடுபடும் போது தலையை மறைக்கவேண்டும்” என்று கூறுகிறார்.
பவுல், 11ம்அதிகாரத்தில்பேச அனுமதித்து விட்டு 14ம் அதிகாரத்தில் பேசக்கூடாது என்று எப்படிசொல்வார்? என்று எஹ்ர்மன்கேட்கிறார். இதிலிருந்து இதற்கும் பவுலுக்கும் சம்மந்தமில்லை என்று தெரிகிறது.
ஏன்பொய்யானசெய்தியைபுனைந்தார்கள்?
பைபிளில் பொய்யான செய்திகள் புனயபட்டதற்க்கு முக்கிய காரணம் முற்கால கிறித்துவ தேவாலயங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடுகள் தான் . கிறித்துவ தேவாலயங்கள் பெண்களை நடத்தும் விதம், தலைமைத்துவம் மற்றும் எஜமானர்களுக்கும், அடிமைகளுக்கும் இடையேயான உறவு முறைகள் போன்ற விஷயங்களில் முரண்பட்டு சிதறி கிடந்தனர், என்கிறார் எஹ்ர்மன்.
தாம் எதை நம்ப வேண்டும் என்பதை பற்றி, ஒவ்வொரு கிறிஸ்துவ பிரிவைச் சார்ந்தவருக்கு மத்தியில் பயங்கரமான கருத்து வேறுபாடுகள் நிலவின. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாதங்களை நிலை நிறுத்த வேதத்தின் துணையை நாடினர் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒருவர் எந்த பிரிவினரையும் சாராதவராக இருப்பின், அவர் தன்னுடைய பெயரை கொண்டு எந்த ஒன்றையும் எழுதாமல் பேதுரு (பீட்டர்) அல்லது யோவான் (ஜான்)என்கின்ற பெயர்களில் தங்கள் கருத்துகளை எழுதி வெளியிட்டனர்.
ஆக இந்த ஆரம்ப முதல் நான்கு நூற்றாண்டுகளில் தான் பேதுரு, யோவான் என்கின்ற பெயர்களில் பல்வேறு நபர்கள் தங்களை ஏசுவிற்கு மிகவும் நெருங்கியவர்களாக காட்டி கொண்டு தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பேதுரு, யோவான்என்கின்ற பெயர்களை பயன்படுத்தி போலியாக நூற்றுக்கணக்கான செய்திகளை இட்டுகட்டினர் என்று மதிப்பிட்டு எஹ்ர்மன் கூறுகிறார்.
இதனை வித்தரிங்டன் அவர்களும் மறுக்க முடியாத காரனத்தால், முற்கால கிறித்துவ பிரிவினர்களிடையே பல்வேறு முரண்பாடுகளும் பொய்யான செய்திகளும், கட்டுகதைகளும் மிதந்து கொண்டிருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார் !
அதே சமயம், பேதுரு (பீட்டர்) என்பவர் மீனவர் என்கின்ற காரனத்தால் அவர் எழுத படிக்க தெரியாதவர் என்று கூறுவது சரி இல்லை என மறுக்கிறார். ஏனெனில் மீனவர்களும் கூட வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பந்தங்களை செய்ய எழுத்தை கையாளுகின்றனர் என்று பேட்டி ஒன்றில் கூறுகிறார் வித்தரிங்டன்.
ஊடக பரபரப்பை மக்கள் விரும்புவதால், எர்ஹமனின் ஆக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்று வித்தரிங்டன்கூறுகிறார்.
விவிலியத்தை பற்றிய ஞானமே இல்லாத இயேசுவை தேடக்கூடிய கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். எந்த விதமான வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்து சொல்லலாம்.ஏனெனில் “போர்ஜெட்(Forged)” போன்ற புத்தகங்களை ஆய்வு செய்யும் மக்கள் மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ ஒரு புதிய கருத்துக்கு செல்லவாய்ப்பே இல்லை என்கிறார் வித்தரிங்டன்.
ஆனால் எஹ்ர்மனின்கோணமோ இதற்க்கு மாற்றமானது.
“போர்ஜெட்(Forged)” என்கின்ற புத்தகத்தின் மூலம் பல மக்கள் உண்மையை கண்டு கொள்வர்.நானும் கூட இந்த உண்மைகளை முதலில் ஒப்பு கொள்ள மறுத்தேன். ஆனால் இப்போது இல்லை” என்று முன்னால் கிருத்துவ அடிப்படைவாதியான எஹ்ர்மன் கூறுகிறார். தற்போது அவர் கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்கின்ற கொள்கைக்கு மாறி விட்டார் !
பைபிளின் புதிய ஏற்பாடு கடவுளின் கரம் கொண்டு எழுதப் பட்டதல்ல, மாறாக அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் மனித கரங்களின் அச்சு தான் பதிந்துள்ளது !!
“நான் இதை மக்கள் தூக்கி வீச வேண்டும் என்றோ அல்லது இது பயனுள்ள இறையியல் என்றோ சொல்லவில்லை! மாறாக இதில் பல விடயங்கள் புனையப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது”. இதிலிருந்தே பைபிள் என்பது ஒரு சராசரி மனிதனால் எழுதப் பெரும் புத்தகத்தின் அந்தஸ்தை தான் பிடிக்கும் .!! பைபிள் என்பது இறைவனிடமிருந்து பெற்ற புத்தகம் இல்லை.
ஏனெனில் பைபிளில் பல்வேறு ஆசிரியர்கள் தங்களை யார் என்றே காட்டிகொள்ளாமல் பொய்யான பெயர்கள் கொண்டு எழுதியதே இதற்க்கு போதுமான சான்று என்று கூறி முடிக்கிறார் எஹ்ர்மன் !
பைபிளில் மனிதக்கரங்கள் மலிந்து காணப்படுகின்றன. அது இறைவேதமே இல்லை! என்று நாம் பல வருடங்களாக சொல்லி வருகிறோம். அதை கிறிஸ்வதர்களுடனான நேரடி விவாதத்திலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறோம்.
ஆனாலும், அதை பல கிறித்தவ சகோதரர்கள் கிறித்தவத்தின் மீது இருக்கும் காழப்புணர்வினால்தான் இவ்வாறு நாம் பேசி வருகிறோம் என்று நம்மை விமர்சனம் செய்கின்றனர்.
அது உண்மையல்ல! நாம் மட்டுமல்ல, இந்த பைபிளை காய்தல் உவத்தலின்றி யார் எக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அது மனிதக்கரங்கள் விளையாடிய ஒரு புத்தகம்தான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக இந்த கட்டுரை விளக்குவதை மறுக்க முடியாது!!!
-மொழிபெயர்ப்பு உதவி இம்ரான் சரீஃப்
நன்றி :http://www.tntj.net/123728.html

அதிரை ஸலஃபிகள் என்ற காம வெறிபிடித்த கூட்டத்திற்கு எதிராக...


அதிரை ஸலஃபிகள் என்ற காம வெறிபிடித்த கூட்டத்திற்கு எதிராக...

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது!

அதிரை காம ஸலஃபிகள் 21ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த காம சட்டம்!!

சுயஇன்பம் செய்ய மட்டும் தேவைப்படும் அறிவியலும் பகுத்தறிவும்!!!

ஸஹாபாக்களை பெயரால் கயமைத்தனம் செய்யும் அதிரை காம ஸலஃபிகள்!!!!

காமுகர்களின் உண்மை முகத்தை தோலுரிக்கும் ஆக்கம் முழு விபரம்

வாய்திறக்க முடியாத அதிரை காம ஸலஃபி கூட்டம்!

நோன்பில் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்பது சரியானது தான் அதிரை சுயஇன்ப காம வெறி ஸலஃபிகளின் வாக்குமூலம்!!

Monday, December 31, 2012

முத்துபேட்டை காவல்துறையை கண்டித்து போராட்டம்

முத்துபேட்டை காவல்துறையை கண்டித்து போராட்டம் 


















டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன (வீடியோ)?

டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன?

Sunday, December 30, 2012

மாற்று மத சகோதரருக்கு தாவாஹ்


தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை சார்பாக கடந்த 24.12.2012 அன்று மாற்றுமத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூல் கொடுத்து அவருக்கு தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்




மாலேகான் குண்டுவெடிப்பு- ஆர்எஸ்எஸ் தீவிரவாதி கைது


டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவரான மனோகர் சிங், 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மாலேகான் நகரில் உள்ள ஹமீதா மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அங்கு சைக்கிள் வெடிகுண்டை வைத்த நான்கு பேரில் இவரும் ஒருவர். இந்தக் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வைத்த நால்வரில் மனோகர் சிங் போக, மற்ற மூவராக ராஜேந்திர் செளத்ரி, ராம்ஜி கல்சங்க்ரா, தான் சிங் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கல்சங்க்ரா தலைமறைவாக உள்ளார். தான் சிங், செளத்ரி ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் முஸ்லீ்ம்களைத்தான் விசாரணை அமைப்புகள் சந்தேகப்பட்டு வந்தன. ஆனால் 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக இதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. முதலில் சுவாமி அசீமானந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைதானார்கள். தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது.

நன்றி : http://tamil.oneindia.in/news/2012/12/30/india-rss-member-nia-net-2006-malegaon-blast-167088.html

முத்துப்பேட்டையில் மனித உரிமை மீறல் – காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்:


முத்துப்பேட்டையில் ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலி முஸ்லிம்களைக் கண்டித்தும், தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும், TNTJ வினர் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் 31.12.12 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற இருக்கின்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூது கைசர் அவர்கள் கண்டன உரையாற்றுகின்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நமது இணையதளத்தில் நேரடியாக காணலாம்.

Saturday, December 29, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.12.12(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.12.12

உரை :சகோதரர் அஷ்ரஃ ப்தீன்  ஃபிர்தவ்ஸி


இஸ்லாமிய குற்றவியல் சட்டம் கொடுமையானாதா ?
இஸ்லாத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா ?
ஸ்டவ் வெடித்து பெண்கள் இறப்பது எதனால் ?
வரதச்சனை கொடுமைகள் நடப்பது எதனால் ?
கற்பழிப்புகள் நடப்பது எதனால் ?
இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் என்ன ?
அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.12.12 from Jahir on Vimeo.

Friday, December 28, 2012

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை 28.12.12(வீடியோ)

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை 28.12.12

தலைப்பு :அடக்குமுறை
உரை :சகோதரர் யூசுஃப்



தலைமை ஜும்மா உரை 28.12.12 from Jahir on Vimeo.

Thursday, December 27, 2012

மலாக்கா கிளை பயான்


மலாக்கா கிளை பயான் 


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் மலாக்கா கிளையில் 25.12.2012 அன்று காலை அதிரை  தாஜ் ரெஸ்டோரென்டில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மலாக்கா கிளை செயலாளர் தம்ரின் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மண்டல பேச்சாளர் சகோ.யாசர் அரபாத் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பிறகு tntj பொது செயலாளர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


தொழுகை from Adiraitntj on Vimeo.

அழைப்பு பணி from Adiraitntj on Vimeo.

Tuesday, December 25, 2012

ஹாஜா ஒலி அப்பா அவ்லியாவுக்கு ஆப்பு!



ஹாஜா ஒலி அப்பா அவ்லியா வைச்ச ஆப்பு! - இணைவைத்த நிலையில் மரணத்தைத் தழுவினார் அதிரை அலாவுதீன்.

ஹாஜா ஒலி அப்பா(?)வால் காப்பாற்ற முடியவில்லை ? அதிரையின் அவுலியா நேசர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

23/12/2012 அன்று அதிரை ஹாஜா ஒலி தர்ஹாவில் ஹத்தத்து இரவு அன்று மண்டகப்படி எடுத்து வந்து அவுலியா(?)வின் கபுரில் சந்தனம் பூசுவதற்காக கபுருக்கருகில் சென்றதும் கதவை மூடி விட்டனர் தர்ஹா நிர்வாகிகள்.

ஏற்கனவே சாம்பிரானி, ஊதுவத்தி எறிந்து கபுர் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் புகை மண்டலமாகி இருந்துள்ளது.

கதவைப் பூட்டியதும் லோ ப்ரஷர் நோயாளியான அலாவுதீன் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுத் திணறி இறந்து விட்டார்.

அதிக நேரமாகியும் கதவு திறக்காதது கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் கதவைத் திறக்க தர்ஹா நிர்வாகிகளிடம் கோரியதும் கதவு திறக்கப்பட்டது மரக் கட்டையாக கிடந்த அலாவுதீனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் குடும்பத்தினர்.

ஏக இறைவனுக்கு இணைவைத்த நிலையில் மரணித்த இவருடைய மறுமை வாழ்வை நினைக்கும் போது நெஞ்சு கணக்கிறது.

மன்னிப்பு கிடையாது அல்லாஹ் எச்சரிக்கிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48.

இன்னும் எத்தனைப் பேரை நரகிற்கு அனுப்பும் பணியை இந்த தர்ஹா நிர்வாகிகள் செய்வார்களோ தெரியாது ?

மறுமையில் மனிதர்களின் கால்களில் மிதிபடும் தர்ஹா நிர்வாகிகள்.

இவர்களால் நரகிற்கு அனுப்பப்படுபவர்கள் மறுமையில் அவர்களால் காலில் இட்டு மிதிக்கப்படுவார்கள் என்பதை அறிய வில்லை? அல்லது அறிந்தும் மறுக்கின்றனர்.

எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 41:29

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்' (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன் 2:186)

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 'அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:191 195)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:106)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)


அல்லாஹ்வை தவிர எவரும் யாரையும் அழிக்கவோ காக்கவோ முடியாது என்று உறுதியாக நம்புவோம்.

எந்த அவ்லியாவிற்கும் எந்த சக்தியும் கிடையாது என்று சவால் விடுகிறோம். உண்மையில் அவ்லியாவிற்கு சக்தியிருந்தால், தவ்ஹீத் கொள்கையை ஏற்றுள்ள மக்களின் மீது கை வைத்து பார்க்கட்டும்.

நன்றி அதிரை பாருக் (சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது)

Monday, December 24, 2012

தவ்ஹீத் பள்ளியில் ஆழ்குழாய் (போர் ) போடப்பட்டது

தவ்ஹீத் பள்ளிக்கு ஆழ்குழாய்  (போர்) போடவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் ஒரு மாதத்திறகு முன்பு ஜீம்மாவில் அறிவிப்பு செய்து அல்லாஹ்வின் அருளாள் போர் போடுவதற்கு தேவையான பணம் முழுமையாக வந்து சேர்ந்தது அல்ஹம்துலில்லாஹ் போர் வேலை நல்லபடியாக முடிந்தது அதற்கு உதவிகள் செய்த சகோதர, சகோதரிகளுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி தருவானாக








இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)  நூல்:புகாரி1410

2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.


காவல் துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)


காவல்துறை மிருகங்களைக் கண்டித்து விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும் நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Sunday, December 23, 2012

நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது! காவல்துறை அராஜகம்!! – டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!


நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது! காவல்துறை அராஜகம்!! – டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!

டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் அழியப்போவதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட புரளி குறித்து தெளிவுபடுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை சார்பாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

கடந்த உணர்வு 17 : 17 இதழில் 18ஆம் பக்கத்தில் வெளியியான, “டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? – கலவர பீதி கிளப்பி காசு பார்க்கும் ஊடகங்கள்! அறியாமையில் மக்கள்!!” என்ற செய்தியை துண்டுபிரசுரமாக அந்தக் கிளையினர் விநியோகம் செய்துள்ளனர்.

இந்த துண்டுபிரசுரம் விநியோகித்தற்காகத்தான் தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை தலைவர் யாகூப் அவர்களை நள்ளிரவு 2.30 மணிக்கு திருவல்லிக்கேணி பகுதி ஏ.சி.செந்தில் குமரன் என்பவரது தலைமையில் சென்ற காவல்துறையினர் கைது செய்து நள்ளிரவு வேட்டையாடியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தென்சென்னை மாவட்டத் தலைவர் அப்துர்ரஹீம், மாவட்ட துணைச் செயலாளர் நூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் வீடுகளிலும் அத்துமீறி புகுந்த காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் அங்கிருந்த பெண்களை ஏசி உள்ளனர்.

நமது நிர்வாகிகளின் வீடுகளில் இருந்த பெண்கள், “எங்களது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத சமயத்தில், அதுவும் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி எப்படி நீங்கள் நுழையலாம்? அப்படி ஆண் போலீஸ் மட்டும் தனியாக நுழையலாமா? மீறி நுழைவதாக இருந்தால் பெண் போலீஸை அழைத்து வாருங்கள் என்று சொல்ல, அதையும் உதாசீனப்படுத்திய காவிக்கரை படிந்த காவல்துறையினர் நமது சகோதரிகள் இருந்த வீடுகளில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுகளைக் காலில் போட்டு மிதித்து முஸ்லிம்கள் வீட்டில் நள்ளிரவு சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கிருந்த முஸ்லிம் பெண்களை கேவலமான அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் நமது சகோதரர்கள் வீடுகளுக்குள் நள்ளிரவில் படுக்கையறை வரை புகுந்து சோதனை செய்கின்றோம் என்ற பெயரில் இந்தக் கேவலச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அன்றைய தினமே அதிகாலை 4.30 மணிக்கு டி-1 காவல்நிலையத்திற்கு மாநிலச் செயலாளர் யூசுப் தலைமையில் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் கமர்தீன், அப்துல்லாஹ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்றனர். இந்த சம்பவத்திற்கு சூத்திரதாரியாக இருந்த ஏ.சி.செந்தில் குமரனைச் சந்தித்து, “இப்படி நள்ளிரவில் புகுந்து கைது செய்துள்ளீர்களே! இது சரியா? எனக்கேட்டதற்கு, நாங்கள் கைது செய்தது சரிதான். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். இவர்கள் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இந்தச் சதி வேலையைச் செய்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வந்தது.

முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு:

உடனடியாக தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். முஸ்லிம்கள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து அராஜகம் செய்த காவல்துறையின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், இதற்கு சூத்திரதாரியாக செயல்பட்ட திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன் என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டி-1 காவல்நிலையத்தை சம்பவம் நடந்த அதே தினமான சனிக்கிழமை மாலை 4மணிக்கு முற்றுகையிடுவதாக காலை 11மணிக்கு, டிஎன்டிஜே தென்சென்னை மாவட்டம் சார்பாக அறிவிப்புச் செய்யப்பட்டது.
குறித்த நேரத்திற்கு முன்னரே மக்கள் காவல்நிலையத்திற்கு அருகில் குவியத் தொடங்கினர்.

மிகப்பெரிய மக்கள் திரள் திரள உள்ளதாக உளவுத்துறை மூலம் அறிந்த காவல்துறை, போராட்டக் களத்தில் போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே வலுக்கட்டாயமாக கைதுப் படலத்தைத் துவக்கினர்.
நீங்கள் கைது செய்வதற்கு நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். எங்களது உணர்வுகளை மக்கள் மத்தியில் வெளிக்காட்ட விடுங்கள். பிறகு நாங்களே கைதாகின்றோம் என்று நமது மாநில நிர்வாகிகள் கூற அதையும் கேட்காத காவல்துறை நமது சகோதரர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனங்களில் ஏற்ற முயற்சிக்க அங்கு நடந்த தள்ளுமுள்ளின் காரணமாக தடியடி நடத்தி நமது சகோதரர்களுக்கு இரத்தக்களறியை ஏற்படுத்தினர்.

மற்ற கூட்டங்களிலெல்லாம் யார் மீதும் தடியடி நடத்தப்பட்டால் அவர்கள் அனைவரும் ஓடிவிடுவார்கள். ஓட்டமெடுத்ததன் விளைவாக அந்த இடத்தில் போராட்டம் நடந்ததற்குண்டான எந்த அறிகுறிகளும் தெரியாத வண்ணம் அந்த இடம் மாறிவிடும்.

ஆனால் நமது சகோதரர்களோ எதற்கும் அஞ்சாமல் உறுதியோடு நின்றதைக் காணும்போது நமது சகோதரர்கள் எப்படி வார்த்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்தது. தடியடி நடத்துவதே கூட்டம் கூடவிடாமல் கலைப்பதற்குத்தான். ஆனால் தடியடி நடத்தப்பட்ட பிறகுதான் மக்கள் சாரை சாரையாக அணிவகுத்து அதே இடத்தில் குழுமத் தொடங்கினர்.
சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆக்ரோஷத்துடன் காவல்நிலயத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் அராஜகம் ஒழிக என்ற கோசங்கள் விண்ணைப் பிளந்தன.

பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் முற்றுகையிட்டனர். ஆயிரத்திற்கும் நெருக்கமான சகோதர, சகோதரிகள் கைது செய்யப்பட்டு பல மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆக்ரோசத்துடன் கோசமிட்டுக் கொண்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.

இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கொந்தளித்த கொதிப்பின் வெளிப்பாடு மக்களது முகங்களில் தெரிந்தது. உணர்ச்சிப் பிளம்பில் வெகுண்டெழுந்த மக்கள் அனைவரும் கைது செய்து வாகனங்களில் ஏற்றும் வரை அவர்களை ஆசுவாசப்படுத்தி போராட்டக்களத்தில் நிற்க வைப்பது கடினமான காரியமாக தென்பட்டது.

அனைவரையும் கைது செய்து ஏற்றிச் செல்லும் அளவிற்கு காவல்துறையில் வாகன வசதியும் இல்லை. அவர்கள் கொண்டு வந்த வாகனங்களும் போதவில்லை. எனவே உடனடியாக மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் ஒரு அறிவிப்பைச் செய்தார்.

கட்டுப்பட்டு நடந்த கட்டுப்பாடு மிக்க கூட்டம்:

மக்கள் குறைவாக இருந்தபோது, சொற்பமான மக்களை போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே கைது செய்ய நிர்பந்தப்படுத்தி தடியடி நடத்தினீர்கள். ஆனால் இப்போது எங்களைக் கைது செய்ய உங்களுக்கு வாகனங்கள் போதவில்லை.

நீங்கள் எங்களைக் கைது செய்ய பலவந்தப்படுத்தி தடியடி நடத்தியுள்ளீர்கள். இந்த தடியடிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டோம். அப்படிப்பட்ட கொள்கை உறுதி மிக்க கூட்டம்தான் இந்தக்கூட்டம்.

இதுபோன்ற பல தடியடிகளையும், இன்னல்களையும் சந்தித்துத்தான் நாங்கள் இங்கு நின்று கொண்டிருக்கின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அனைவரும் எந்தவிதமான சப்தமுமில்லாமல் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் எனவும் மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் கட்டளையிட்டதும் அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைத்த காவல்துறை:

அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றதும் காவல்துறையினர் நமது மாநில நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஜாயிண்ட் கமிஷனர் ரவிக்குமார் மற்றும் டி.சி.கிரி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இரவு 7மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை 1மணி நேரம் நீடித்தது. அதில் நள்ளிரவுக் கைதுக்கு வருத்தம் தெரிவித்த காவல்துறை உயர் அதிகாரிகள், தடியடி நடத்தியதற்கும் வருத்தம் தெரிவித்தனர்.

ஏற்கனவே 23 முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்துவதாகச் சொல்லி அதில் பலவிதமான அசம்பாவிதங்களை அரங்கேற்றி, முஸ்லிம் அமைப்புகள் என்றாலே அவர்கள் இப்படித்தான் என்ற அவப்பெயரை ஏற்படுத்திவிட்டனர். அதுதான் இந்த தடியடியை கீழ்மட்ட போலீசார் நிகழ்த்துவதற்குக் காரணம் என்றும், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதாகவும், இனியொருகாலம் இதுபோல நடக்காது என்றும் கூறி, மண்டபத்தில் கைது செய்து வைத்துள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிடுவதாகவும் அவர்கள் கூறினர். ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது குறித்தும் பேசப்பட்டது.
கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நமது சகோதர, சகோதரிகள் இரவு 8.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன் துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் மீது போடப்பட்ட வழக்கை திங்கட் கிழமை நீதிமன்றத்தில் திரும்பப்பெறுவதாகவும் உறுதியளித்தனர்
.
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் தி.மு.க.வின் வாக்கு வங்கிகளாக இருந்தனர். கருணாநிதி ஆட்சியில் டிசம்பர் ஆறு வரும்போதெல்லாம் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து காவல் துறையினர் நடத்திய வெறியாட்டம் காரணமாக தி.மு.க.வை முஸ்லிம்கள் நஞ்சென வெறுத்தனர். முஸ்லிம்கள் தக்க பாடம் கற்பித்தவுடன் இந்த அராஜகம் முடிவுக்கு வந்தது.

அதே அராஜகத்தைத்தான் செந்தில் குமரன் என்ற காவி அதிகாரி மூலம் அ.தி.மு.க. அரசு ஆரம்பித்து வைத்துள்ளது.

வினியோகிக்கப்பட்ட பிரசுரம் வழக்குப் பதிவு செய்யத் தக்கதல்ல என்றாலும் ஒரு வேளை வழக்குப் போடுவதாக இருந்தால் தவ்ஹீத் ஜமாத்துக்கு தெரிவித்தால் வழக்கு போடப்பட்டவர்களை போலீஸில் அல்லது நீதி மன்றத்தில் ஒப்படைக்க தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்காகவே காவிச் சிந்தனையுடன் இந்த அராஜகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொலை கொள்ளை போன்ற பாதகச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதைக் தடுக்க வக்கில்லாத காவல் துறையினர் நோட்டீஸ் கொடுத்ததற்காக இப்படி நடந்து கொண்டது முஸ்லிம்களை அச்சுறுத்தவும் அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெறப்பட்டால் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்ற போதும் எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருக்க செந்தில் குமரன் உள்ளிட்ட காவி அதிகாரிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தவும் அதை வென்றெடுக்கவும் எத்தகைய வழிமுறையைக் கையாள்வது என்பது குறித்தும் நிர்வாகக் குழு கூடி தக்க முடிவை அறிவிக்கும். இன்ஷா அல்லாஹ்

அதிமுக அரசு இனிமேல் காவிச் சிந்தனையுடன் தான் நடக்கும் என்ற அறிகுறிகள் அதிகமாகி வருகின்றன. முஸ்லிம்களின் எதிர்காலம் கவலைக்குரியதாக இருக்கக் கூடாது என்பதற்கு ஏற்ற நடவடிக்கையை தவ்ஹீத் ஜமாஅத் செய்யும். எந்த அடக்குமுறைக்கும் இந்த ஜமாஅத் அடங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
துண்டுபிரசுரத்தில் இருந்தது என்ன? :

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விநியோகம் செய்யப்பட்ட துண்டுபிரசுரத்தில் “உலகம் அழியப்போகின்றது என்று பரப்பப்படும் பீதிக்குள்ளான மக்களை ஆசுவாசப்படுத்தும் வகையிலும், எப்போது உலகம் அழியும் என்பது குறித்த செய்திகளை அல்லாஹ்வும், அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் எப்படி தெளிவுபடுத்தியுள்ளார்கள் என்ற செய்திகளையும் கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.

அதில் கடலூரில் உள்ள வடலூரில் வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்துவிட்டதாகவும், வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்த காரணத்தால்தான் உலகம் அழியப்போகின்றது என்று பரப்பப்படும் பீதியை போக்கும் வகையிலும் விழிப்புணர்வு வரிகள் இடம்பெற்றிருந்தன.
வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்த காரணத்தால் உலகம் அழியப்போகின்றது என்று சிலர் வந்தந்தி பரப்பி வருகின்றனர். அவர் ஏற்றி வைத்த தீபம் அணைவது இருக்கட்டும், அதை ஏற்றிவைத்த வள்ளலாரே இறந்துவிட்டாரே! இந்த செய்தியை மக்கள் சிந்திக்கமாட்டார்களா? என்று கேட்கப்பட்ட கேள்விதான் இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இன்னபிற சங்பரிவார கும்பல்களின் மனதை புண்படுத்திவிட்டதாம்.
காரணம் நம்முடைய துண்டு பிரசுரத்தில் வள்ளலார் இறந்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கின்றோம். ஆனால் வள்ளலார் இறக்கவில்லை. இன்றுவரை அவர் உயிரோடு இருக்கின்றார். உயிரோடு உள்ளவரை இறந்துவிட்டார் என்று சொல்லி எங்களது மனதை புண்படுத்திவிட்டார்கள் முஸ்லிம்கள். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதுதான் சங்பரிவாரக் கும்பலின் குற்றச்சாட்டு.

இந்த துண்டுபிரசுர விநியோகத்தைக் கண்டித்து அனைத்து சங்பரிவார அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கடந்த 20.12.12 வியாழக்கிழமை அன்று சாலை மறியல் செய்தனர். அதில் 25க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களது தூண்டுதலின் பேரில் காவி கயவர்களுக்கு ஆதாரவாகத்தான் இந்த நள்ளிரவு கைது படலத்தை காவல்துறை அரங்கேற்றியுள்ளது.
தீபம் அணைந்து விட்டதால் உலகம் அழியும் என்று சொன்னால் அழியப் போகும் உலகத்தில் இந்து அல்லாத மக்களும் உள்ளனர். அவர்கள் அழியப்போகிறார்கள் என்று சொல்வது எங்களை பாதிக்கிறது என்று நாம் புகார் கொடுத்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?


Saturday, December 22, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 14.12.12(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா
உரை :சகோ அப்துல் ரஹ்மான் ஃ பிர்தவ்ஸி



அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 14.12.12 from Adiraitntj on Vimeo.

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.12.12(வீடியோ)


உரை சகோ அஷ்ராப்தீன் ஃபிர்தவ்சி

நரகம் எவ்வாறு இருக்கும் ?
குலம்,ஜாதி பார்க்கலாமா?
படைப்பினங்களை வணங்கலாமா ?
கொலைசெய்வது கூடுமா ?
தற்கொலை செய்வது கூடுமா ?
வட்டி வாங்கலாமா ?

21.12.12.உலகம் அழியாது








Thursday, December 20, 2012

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது! - மாற்றுமத சகோதரர்களுக்கு விழிப்புணர்வு நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 20-12-2012 அன்று டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது ! என்ற தலைப்பில் மாற்றுமத சகோதரர்களுக்கு விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்தது அல்ஹம்துலில்லாஹ்.